கதிர் விஜயம்

சிஸ்டம் ரொம்பவே தான் கெட்டு போயிருக்கு!

சிஸ்டம் ரொம்பவே தான் கெட்டு  போயிருக்கு. சிஸ்டம் எந்த அளவு கெட்டு போயிருக்கு என்று கேட்டால் சரியான சிஸ்டம் எப்படி இருக்கும் என்று அநேகம் பேருக்கு தெரியவிடாமல் பார்த்துக்கொள்ளும் அளவிற்கு சிஸ்டம் கெட்டுப்போயிருக்கு.நம் மீது குற்றம் சொல்லுபவர்கள் மீது பதிலுக்கு குற்றம் சுமத்துவது ஒரு வகையான சிறுபிள்ளைத்தனம் அந்த சிறுபிள்ளைத்தனத்தை தவிர்க்க முடியாத அளவிற்கு சிஸ்டம் கெட்டு  போயிருக்கு. நாம் யாரையும் குற்றம் சொல்லுவதற்கு முன்பு, “நம் பக்கம் எல்லாம் சரியாக உள்ளதா?” என்னும் சுயபரிசோதனை செய்து கொள்ளும் மாண்பை மறந்துவிட்ட சமூகத்தில் நம்மை நோக்கி வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நாம் கேட்கும் எதிர்கேள்விகளே  நாம் பதிலுக்கு அவர்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டு போல் ஆகிவிடும் அளவிற்கு சிஸ்டம் கெட்டு போயிருக்கு.

ரஜினி மண்டப சொத்து வரி வழக்கு விவரம்:

செப்டம்பர் 10ம் தேதி விலைவிவர பட்டியல் (invoice) மாநகராட்சியிடம் இருந்து ரஜினி தரப்புக்கு அனுப்பப்பட்டதாக செய்திகளின் மூலம் தெரிகிறது.

மாநகராட்சி அனுப்பிய நோட்டீஸில் அக்டோபர் 15ம் தேதிக்குள் வரி கட்ட தவறினால் 2 சதவீதம் வட்டி அபராதமாக வசூலிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டதாக தெரிகிறது.

இந்நிலையில் மாநகராட்சியின் நோட்டிஸிற்கு செப்டம்பர் 23ம் ரஜினி தரப்பில் இருந்து மாநகராட்சிக்கு பதில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பின்னர் செப்டம்பர் 29 தேதி ரஜினி தரப்பில் நீதிமன்றத்தை நாடியதாக தெரிகிறது.

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையானது அக்டோபர் -14ம் தேதியான இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இருக்கின்றது.

விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது வரை மாநகராட்சியிடம் இருந்து எந்த வித பதிலும் வந்ததாக தெரியவில்லை.

இந்த நிலையில் தான் மதிப்பிற்குரிய நீதிமன்றம் அதனின் பொன்னான நேரத்தை வீணடிப்பதாக ரஜினி தரப்பை எச்சரித்து வழக்கை திரும்ப பெற  செய்திருக்கிறது.

இந்த செய்தி வந்த வேகம் அதனை பயன்படுத்தி ரஜினி மீது அவதூறு பரப்பியதில் இருந்த வேகம் ஆக்கபூர்வமான விஷயங்களில் நம்மால் காட்ட முடிவதில்லை அதே போல் அநேகமான பத்திரிகைகள் இந்த விஷயத்தில் செய்தியை செய்தியாக தருவதை விடுத்து இதில் இருக்கும் பிரச்சனைகளை சுட்டிக்காட்டுவதை விடுத்து ரஜினிக்கு ஏதோ பெரிய அவமானம் நேர்ந்துவிட்டது போலவும் அவர் ஏதோ வரி கட்ட மறுப்பது போலவும் ஒரு பிம்பத்தை ஏற்படுத்த பார்ப்பது போலவே தெரிகிறது.

பத்திரிகைகள் சுட்டிக்காட்டியிருக்க வேண்டிய உண்மைகள் என்ன?

நான், ரஜினி இல்லை. சாதாரணமான நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த வியாபாரி. நானும் ஒரு மண்டபம் நடத்தி வருகிறேன். பொது முடக்கத்தால் என் வருமானம் பாதிக்கப்பட்டு இருக்கின்றது,நான் வியாபாரம் சம்மந்தமாக வாங்கிய கடன்களுக்கு தவணை கட்ட வேண்டிய சூழல். நல்லவிதமாக 6 மாத காலத்திற்கு கடன் தவணைகளை செலுத்த வேண்டியதில்லை என்று மத்திய அரசு ஒரளவு  சாதகத்தை செய்திருந்தாலும் கூட செலுத்தாத தவணைக்கும்  சேர்த்து வட்டி கட்ட வேண்டும். இந்த கடன் தவணை பற்றிய அறிவிப்பை எதிர்த்து யாரும் வங்கிகளுக்கு கடிதங்கள் எழுதிக்கொண்டிருக்கவில்லை ஒருவர் மட்டுமே  நீதிமன்றத்தை நாடுகிறார், நீதிமன்றம் பொது முடக்க காலத்தில் செலுத்தப்படாத தவணைக்கு வரி விதிக்க கூடாது என்று மத்திய அரசிற்கு அறிவுறுத்துகிறது,இன்னும் அது சார் பயனை கடனாளிகள் (என்னையும் சேர்த்து) அடையவில்லை. ஆறு மாத காலமும் முடிந்து விட்ட நிலையில் கடன் தவணையையும் செலுத்த வேண்டும். ஆனால் வருமானம் இன்னும் மந்த நிலையிலேயே இருக்கிறது. இப்படியான சூழலில் மாநகராட்சிக்கு வரி கட்ட சொல்லி எனக்கு அனுப்பிய நோட்டீஸின் படி வரி கட்ட முடியாத சூழலில்,அக்டோபர் 15ம் தேதிக்கு பின் இரண்டு சதவீத வட்டியோடு வரி கட்ட நிர்பந்திக்கப்படும் போது மாநகராட்சிக்கு நான் அனுப்பிய பதில் நோட்டிஸிற்கு இன்று(அக்டோபர் 14 வரை) வரை பதில் வராத போது,செப்டம்பர் 29ம் தேதி தாக்கல் செய்த மனு அக்டோபர் 14 வரை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாத போது.ரஜினிகாந்த் போன்று செல்வாக்கு இல்லாத, ரசிகர் கூட்டம் இல்லாத ஒரு தனிமனிதனான  என்னை  அச்சுறுத்தும் படியாக, நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்காதீர்கள் என்றும் அவசர கதியில் நீதிமன்றத்தை நாடியது ஏன் என்றும் அபராதம் விதித்து மனு தள்ளுபடி செய்யப்படும் என்றும் சொல்வது எந்த விதத்தில் நீதி என்று கொள்வது.

இப்போது நான் என்ன செய்ய வேண்டும் வரியை கட்டிவிட்டு மாநகராட்சி பதிலளிப்பதற்காக காத்திருக்க வேண்டுமா? இல்லை விசாரணை இன்று(அக்டோபர் 14) தான் முடிவுற்றது. அக்டோபர் 15ம் தேதிக்குள் வரி செலுத்த பணம் ஏற்பாடு செய்ய முடியாமல் சற்று தாமதமாக வட்டியுடன் வரி செலுத்திவிட்டு இன்னும் தாமதமாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து பிரிவு 105ன் சென்னை மாநகராட்சி சட்ட  விதிகளின் படி எனக்கு வரி விலக்கு அளித்திருக்க வேண்டும் என்று வரி கட்டிவிட்டு வழக்கு தொடுத்து காத்திருக்க வேண்டுமா? நீதிமன்றத்தை எந்த கட்டத்தில் அணுக வேண்டும் அது ஏன் நீதித்துறையை சார்ந்த வக்கீலுக்கு தெரியவில்லை இதே வழக்கை வேறு நீதிபதிகளும் இப்படியாக தான் அணுகியிருப்பார்களா? தீர்ப்பு வழங்கும் போது சட்டத்தின் வழிகாட்டுதலின் படி நடக்க நிர்பந்தப்படுத்திருக்கும் நம் நீதி துறை வழக்குக்குகளை தள்ளுபடி செய்வதற்கென்று என்ன மாதிரியான வழிகாட்டுதலை பின்பற்றுகிறது?

எது எப்படி இருந்தாலும் சிஸ்டம் இவ்வளவு மோசமா கெட்டு போயிருக்க கூடாது

நம்மை இப்படியெல்லாம் சிந்திக்க விடாமல் பிப்ரவரி மாதம்  வரை வரி கட்டிக்கொண்டிருந்த ரஜினி வரி கட்ட மாட்டார் வாடகை தர மாட்டார் என்று ஏளனம் பேசும் வகையிலும் விகடன் போன்ற பத்திரிகைகள் வெளியிடும் பொறுப்பற்ற நையாண்டிகளையும் ரசிக்கும் அளவிலும் நமக்கே தெரியாமல்  நம்மை அரசியல்வாதிகள் செலுத்துமளவிற்கு சிஸ்டம் கெட்டு போயிருக்கு .

ஆனாலும் கூட நடந்ததெல்லாம் சரி என்கிற ரீதியில் நாம் காலை வார காத்துக்கொண்டிருந்த ரஜினியின் மீசையில் மண் ஒட்டியதாக நினைத்து மகிழ்ச்சி அடைந்துகொள்வதும்.பொது முடக்கம் ஆரம்பநிலையில் இருந்தபோது ஆட்குறைப்பு செய்த,  ரஜினியை நையாண்டி செய்து மீம் வெளியிடுவதிலும் வழக்கு சார் முழு விவரங்களோடு சாதக பாதகங்களை அலசாமல் மேலோட்டமாக செய்தி வெளியிடுவதிலும் தான் ஆர்வம் காட்டுகின்றன தங்களையும் பத்திரிகையாளர்களாக முன்னிறுத்திக் கொள்ளும் விகடன் போன்ற இன்னும் சில பத்திரிகைகள்.

தமிழ் பத்திரிகைகளின் படி ஒரு பத்திரிகையில் நீதிபதி பி.டீ. ஆஷா முன்பு விசாரணைக்கு வந்தது எனவும் மற்றொன்றில் நீதிபதி அனிதா சுமந்த்  எனவும் குறிப்பிடபடப்பட்டிருக்கின்றது. செய்தி வெளியிடுவதில், விவரங்கள் மீது தமிழ் பத்திரிகைகள் தரும் கவனம் இந்த அளவில் தான் இருக்கின்றது.

ஜனவரி மாத செய்திகளின் படி அனிதா சுமந்த்  என்கிற நீதிபதி, கார்த்தி சிதம்பரம் மீதான வருமான வரி வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது. கார்த்திக் சிதம்பரம் நிறுவனத்தின் வக்கீலாக இருந்துவிட்டு இப்போது அவர் குற்றம் சுமத்தப்பட்டிருக்கும் வழக்கை விசாரிப்பது ஏற்புடையதல்ல என்று வருமான வரி துறை ஆட்சேபம் தெரிவித்த பின் அந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து பின் வாங்கிக்கொண்டார் என்று தெரிகிறது. விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்கு முன்னமே அது பற்றிய கவனம்(Consciousness)  இல்லாமல் நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பது  போல் வருமான வரித்துறை சுட்டிக்காட்டும் வரை காத்திருந்து வழக்கில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்ட அந்த நீதிபதி தான் இந்த நீதிபதியா ?!

எது எப்படி இருந்தாலும் சிஸ்டம் இவ்வளவு மோசமா கெட்டு போயிருக்க கூடாது

Error happened.
Exit mobile version