கதிர் விஜயம்

மாத்தி யோசி-3: மூனுக்கு போவோம்!

நாம், இயல்பாகவே எப்போதும் செய்யும் தவறுகளும் அநீதிகளும் நமக்கே சிலர் செய்யும் பொழுது தான், அது தவறு என்றே நமக்கு உரைக்கும்.அப்போதும் கூட வெகு சிலருக்கே அவர்களும் அதே தவற்றை செய்திருக்கிறார்கள் என்பது உரைக்கும்.ஒரு சாதரணமான உதாரணம், நாம் எடுத்ததெற்கெல்லாம் மற்றவர்களை dominate செய்யும் இயல்பை உடையவராக இருந்தால் நம்மையே ஒருவர் dominate செய்யும் பொழுது தான், அது தவறு என்று தெரியும். அப்போதும் கூட, பலர், இயல்பில் நாமும் அப்படித்தானே இருந்தோம் என சிந்திப்பதில்லை.
“வலியார் முன்  தன்னை நினைக்க தான்தன்னின் 

மெலியார் மேல் செல்லுமிடத்து “

சமீபத்தில் நடந்த இரு வேறு சம்பவங்கள்ப் பற்றி உங்களிடம் பேச வேண்டும்..

சம்பவம்-1
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவர்கள்,சட்டசபை தற்போது ஜால்ரா மற்றும் துதி பாடும் சபையாக மாறி வருகிறது என்னும் விமர்சனத்தை முன் வைத்திருக்கிறார்.
அவர் சொன்னது 90% உண்மை சட்டசபை ஜால்ரா மற்றும் துதி பாடும் சபையாகவே இப்போதும் இருக்கின்றது.அது புதிதாக அப்படி மாறிவிடவில்லை.அதிமுக ஆட்சி காலத்திலும் அப்படியாகவே தான் இருந்தது. இந்த இரு கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்றத்திலும் இதையே செய்த நாட்களும் இருக்கின்றது.

சம்பவம்-2
கள்ள ஓட்டு போட வந்தவரை பிடித்து கொடுத்துவரை இந்த அரசு கைது செய்து இருக்கின்றது என்கிற குற்றச்சாட்டுக்கு பதிலளித்த முதல்வர், மெயின் ரோட்டில் அராஜகத்தில் ஈடுபட்டால் சட்டம் கைகட்டி வேடிக்கை பார்க்காது என்று சொல்லியிருக்கின்றார்.
Flashback சென்றால், அதிமுக ஆட்சியின் பொழுது, எதிர்கட்சியினர்கள் கைது செய்யபட்ட பொழுது அராஜகம் என்று விமர்சித்த அதே தளபதி தான் அதே அந்த தோசையை சட்டமன்றத்தில் திருப்பி போட்டு இருக்கின்றார்.காரணங்களும் சூழல்களும் வேறு வேறு என்று சிலர் கருப்பு அங்கி அணியாமலேயே கிளம்பி வரலாம்.


எல்லோரும் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். சட்டத்திற்குத்தான் எல்லோரும் கட்டுப்பட வேண்டுமே தவிர சட்டத்தை   கட்டுப்படுத்த கூடாது.சட்டப்படி எதையும் எதிர்கொள்ள வேண்டும்; சட்டப்படி எதையும் எதிர்க்க வேண்டுமே தவிர சட்டத்தையே எதிர்க்க கூடாது.துரதிர்ஷ்ட வசமாக அரசியல்வாதிகள் இதையே வழக்கமாக்கி நமக்கும் அதையே பழக்கப் படுத்தியிருக்கின்றார்கள்.


உங்கள் மீது கைது வாரண்ட் இருக்கின்றது. நாங்கள் உங்களை கைது செய்ய வேண்டும் என்று கூறினால், சட்டத்திற்கு கட்டுப்பட்ட அரசியல் தலைவர்கள்,கைது நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு தந்து சட்டப்படி அதனை எதிர்கொள்வார்கள்.ஆனால்! ஆனால்,ஒன்றுமில்லை.


ஐயோ! கொலை பண்றாங்க! கொலை பண்றாங்க! என்று யாரோ கத்தும் காட்சி உங்கள் மனக்கண்ணில் ஓடியிருந்தால் அதற்கு நான் எந்த வகையிலும் பொறுப்பேற்க மாட்டேன்..!!

சமீபத்தில்,அரசியல் தலைவர்கள் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகள். புதிய அரசு அமைந்தவுடன் இரத்து செய்யப்பட்டது.ஆனால் அதே அரசு, கட்சி தலைவர்களாய் அல்லாதவர்கள் சிலர் மீது அவதூறு பரப்பியதாக வழக்கு போட்டது. யார் அவதூறு பரப்பினாலும் சட்டம் அவர்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆனால், இங்கே நாம் சட்டங்களை செயல்படவிடுவதில்லை. புதிய சட்டங்களை சட்டத்தின் படி எதிர்ப்பதில்லை.
 அதன் காரணமாகவே சமூகத்தை கட்டுபடுத்த வேண்டிய சட்டங்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள், சமூக போராளிகள் என்று சமூத்தின் பல்வேறு முகங்களால் கட்டுப்படுத்தப்பட்டு கொண்டு இருக்கின்றது.

அதனால என்ன? இங்கே ஒன்றும் மாறாது என்கிற மனநிலையில் தானே நம்மில் பலரும் இருக்கின்றோம்.

ஏன் மாறாது?

நம்ம எல்லோரும் சேர்ந்து தான் மாத்தனும் என்கிற எண்ணம் வந்துவிட்டாலே எல்லாம் மாறிவிடும். ரஜினிகாந்த சொன்ன அந்த எழுச்சி! அது வந்தால், ரஜினிகாந்த் உதவி இல்லாமலும் கூட அரசியல் மாற்றம் நிகழும்.
நமக்கு தான் ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது. பாஜக உள்ள வரக்கூடாது.
எதுவுமே இல்லாமல், எப்படியாவது ஒரு மாற்றம் நிகழவேண்டும் என்றால் எதுவும் மாறாது என்கிற எண்ணம் முதலில் மாற வேண்டும்.

Whatever it is திராவிட கட்சிகளை எதிர்த்தால், பாஜக உள்ள வந்துடும். அதனால் இன்னும் கொஞ்சம் வருசம் பொறுமையா இருக்கலாம்.
ஏன்னா?! பாஜக வந்தா மதக்கலவரம் வரும்; அது ஏன்னா?! நமக்கு சிந்திக்கிற புத்தி இல்ல. பாஜக தூண்டி விட்டா அடிச்சுக்குவோம் என்கிற அளவில் தான் நாம் நம் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளோம்.

இந்த தூண்டுதல் எப்படி எல்லாம் இருக்கும் என்றால்?மேலே நீங்கள் பார்த்த பாதி படம் போல தான் இருக்கும்(half cooked news/statements). நாட்டின், சமூகத்தின், எல்லா நலன்களையும் அனுபவித்துக்கொண்டு, அதே அந்த நாட்டையும் சமூகத்தையும் மோசமான சூழலில் ஒரு விமர்சனத்திற்காக கூட எப்படி நினைக்க முடியும் என்று நாம் நினைக்க மாட்டோம். மாறாக இதை சரி என்று ஒரு சாராரும், தவறு என்று மற்றொரு சாராரும் வாதிட்டு கொண்டு இருப்போம்.

இத்தனை வருடம் அப்படித்தானே இருந்தோம் திராவிட கட்சிகள் ஆட்டுவித்த படி ஆடிக்கொண்டு.அவர்களின் ஊடகங்கள் பரப்பியதை நம்பிக்கொண்டு.கொலை பண்றாங்க என்கிற குரலை கேட்டதற்க்கே மாறாமல் ஓட்டை மாற்றி போட்டவர்கள் தானே நாம்.

நமக்கு மாற்றம் முக்கியமில்லை.ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது. பாஜக உள்ள வரக்கூடாது.சரி நம்மால் வேறு என்ன செய்ய முடியும்? தெருவுக்கு பத்து பேர் அரசியலில் இறங்க முடியுமா? அப்படி இறங்கின நமக்கு பத்து பேர் தேர்தல் வேலை செய்ய வருவாங்களா? No!No! No! அதெல்லாம் நம்ம யோசிக்க கூடாது. No rajini! No BJP!


அதான் முக்கியம்.அப்பறம்! நமக்கு அரசியலை விட முக்கியமான பிரச்சினை அவ்வளோ இருக்கு! அரசியலை பேசி என்ன ஆக போகுது.
ஆனால், முரண் என்னவெனில்? நம்முடைய அத்தனை முக்கியமான பிரச்சனைகளுக்கு பின்னனியிலும் நாம் சபித்து வெறுத்து ஒதுக்கும் பாழாய் போன அரசியலே தான் இருக்கின்றது.
ரஜினி சொன்ன விசயத்தை இங்கே endorse (endorse-ஆமோதித்துக் வழிமொழிதல் என்று வைத்துக்கொள்ளுங்கள்) செய்ய விரும்பிகிறேன்.மக்களோட எண்ணங்கள் மாறனும்.அதை எல்லோரும் சேர்ந்து செய்யனும்.
மாறுமா? மாத்துவோமா?
வேகமா வாய்ப்பில்ல ராஜா சொல்ல மட்டும் வாய் எடுக்காதீங்க ப்ளீஸ்ச்! மாற்றத்தின் ஆரம்பம் நம்மில் இருந்து; நம் எண்ணத்தில் இருந்து; நம் பார்வையில் இருந்து இருக்க வேண்டும்.இரண்டு பேர் தான் மாறவே மாறாது என்கிற எண்ணத்தை முதலில் தூக்கி எறிவோம்.மூனுக்கு போவோம்! பலமிக்க மூன்றாவது தேர்வை நோக்கி ஒன்றாக நகர்வோம்.

Error happened.
Exit mobile version