கதிர் விஜயம்

ரஜினியின் அரசியலுக்கு எதிரான விமர்சனம், மக்களுக்கு எதிரான அரசியல் #1

விமர்சனம்#1:70 வயதில் ரஜினிக்கா பதவி ஆசை?

களத்தில் இருக்கும் மற்றவர்களை பற்றி ஒரு பார்வை

1) மு.க. ஸ்டாலின் அவர்கள்  – வயது 67 (பிறப்பு 01/03/53)

2) எடப்பாடி பழனிசாமி அவர்கள் – வயது 66 (பிறப்பு 12/05/54)

3) கமலஹாசன் அவர்கள் – வயது 66 (பிறப்பு 07/11/1954)

4) வைகோ அவர்கள் -வயது 76 (பிறப்பு 22/05/44)

5) ராமதாஸ் அவர்கள்- வயது 81 (பிறப்பு 25/07/39)

6) அன்புமணி அவர்கள் – வயது 52 (பிறப்பு 09/10/68)

7) சீமான் அவர்கள் – வயது 54 (பிறப்பு 08/11/66)

8) பச்சமுத்து அவர்கள் – வயது 79 (பிறப்பு 24/08/41)

இவர்கள் யாரும் தாங்கள் வகித்துக்கொண்டிருக்கும் பொறுப்பை இளைஞர்களுக்கோ அடுத்த தலைமுறைக்கோ கொடுப்பதற்கு இன்று வரை தயாராக இல்லை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இவர்கள் முன்பிருந்தே அரசியல் களமாடுகிறார்கள் என்று கொண்டாலும் தங்களுக்கு பின்னால் ஒரு தகுதியான அடுத்த தலைமுறை தலைவனை உருவாக்க முற்பட்டதும் இல்லை அதோடு புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் பொருட்டு அவர்களுக்கு பதவி கொடுத்து நாங்கள் மேற்பார்வையாளராய்  செயல்படுவோம் என்று சொல்லப்போவதும் இல்லை என்பதும் நாம் அனைவரும் அறிந்ததே. இவர்கள் யாரும்   இதுவரை கொடுக்காத ஒரு வாய்ப்பை ரஜினிகாந்த் ஏற்படுத்தி தருகிறேன் என்று சொன்ன பின்பும்  எனக்கு பதவி மீது ஆசை இல்லை இளைஞர்களை பதவியில் அமர்த்துவேன் என்று சொன்ன பின்பும் கூட,இங்கு ஒரு கூட்டம், நம் கவனத்தை ரஜினியின் வயதின் மீது மட்டும் செலுத்துகிறது நம்மில் சிலரும் அந்த கூட்டத்தின் உணர்ச்சி பொங்கும் பேச்சுக்களில் மயங்கி எதார்த்தத்தை சிந்திக்காமல் அல்லது நாமாக ஒரு முன் முடிவை வைத்துக்கொண்டு ரஜினியை எதிர்த்துக்கொண்டிருக்கின்றோம். மாற்றம்  வேண்டுமெனில் இவர்கள் எல்லாரையும் விட மக்கள் செல்வாக்கு அதிகம் கொண்ட ரஜினியின் பின்னால் அணி திரள வேண்டும் என்பதையே காலம் நமக்கு உணர்த்துகிறது. அது நடக்க கூடாது என்று நினைப்பவர்கள் எதார்த்தததை மீறிய பிம்பங்களுக்குள் உங்களை அடைத்துக்கொண்டு 5% ஓட்டை பிரிக்கும் வாக்காளர்களில் ஒருவராய் இருந்துவிட்டு போங்கள்.

Error happened.
Exit mobile version