கதிர் விஜயம்

வெட்டிப் பேச்சு விஜியும் கவியும்-3 ராஜீவ் முதல் சீமான் வரை

விஜி: ஊரெல்லாம் அண்ணன் பேரறிவாளன் விடுதலைப்பற்றி தான் பேச்சு. சிலர் கொண்டாட கூட செய்றாங்க.

கவி: ஆமா! இன்னிக்கு கொண்டாடிட்டு நாளைக்கு மாறிடுவாங்க.

விஜி: என்ன சொல்ற?

கவி: நம் ஊர்ல மக்கள் எல்லாம், எப்போதும் ஊடகமும் அரசியல்வாதிகளும் எண்ணத்துக்கு  தான் ஆடுறாங்க, சில தலைவர்களும் கூட அந்த அந்த நேரத்துக்கு தகுந்த மாதிரி கருத்து  சொல்றாங்களே தவிர எல்லா விஷயத்துலையும் இருக்க நல்லது கெட்டது பத்தியோ அடுத்து நாம என்ன திருத்திக்கணும் இதெல்லாம் பேச மாட்றாங்க .

விஜி: அரசியல் தலைவர்கள் மட்டுமா? நடிகர்கள் அதுக்கும் மேல, ரஜினியை தவிர.

கவி: சரி தான், அதுனால தான் ரஜினி அரசியலுக்கு வர்ரது யாருக்கும் பிடிக்கல அவரும் வரல. உனக்கு உடுமலை சங்கர் கொலை வழக்கு ஞாபகம் இருக்கா?

விஜி: அதுக்கும் இப்ப நம்ம பேசறதுக்கும் என்ன இருக்கு?

கவி: சங்கர் உடைய காதலியை பெரிய போராளியா கொண்டாடினாங்க, நடிகர் சத்யராஜ், “நாங்கள் எல்லாம் நிழல் போராளிகள், களப்போராளிகள் கையால விருது வாங்க வேண்டும்” என்று விகடன் குழு கிட்ட கேட்டுக்கிட்டதா சொல்லி, சங்கர் உடைய காதலி கௌசல்யா மற்றும் திருமுருகன் காந்தி கையால விருது வாங்கினார்.

விஜி: ஆமா! JFW கூட அவங்களுக்கு (கௌசல்யாவுக்கு) சமூக சேவைக்கு விருது கொடுத்து கௌரவிச்சுச்சு. சரி தான், காதல் கணவர் கொலை செய்தது யாரா இருந்தா என்னன்னு  அப்பா, அம்மா எல்லாருக்கும் எதிரான வழக்குல அவங்களுக்கு தண்டனை வாங்கி கொடுத்தது பாராட்ட தானே வேணும்?

கவி: நானும் அதை தப்பு சொல்லலை. அந்த நேரத்துல, அந்த வழக்கு பரபரப்பா இருந்துச்சு. அதுனால சத்யராஜ், JFW, எல்லாம் இப்படி கொண்டாடினாங்க.அதுக்கு அப்பறம் என்ன ஆச்சு ன்னு தெரியுமா?

விஜி: அவங்க மறுமணம் செய்துகிட்டாங்க அதில தப்பு ஒன்னும் இல்லையே.

கவி : நிச்சயமா! நானும் அதை தப்பு சொல்ல வரலை. சங்கர் கொலை வழக்கு ல தண்டனை பெற்ற கௌசல்யாவின் ல மேல் முறையீடு செஞ்சாங்க. அந்த வழக்குல கௌசல்யாவோட  தந்தை விடுதலை செய்யப்பட்டார். மற்ற குற்றவாளிகளுக்கு தண்டனை குறைக்கப்பட்டுச்சு. அந்த தீர்ப்புப்  பத்தி கேட்ட பொழுது, எங்களுக்கு மேல் முறையீடு நடந்தது பற்றி எதுவும் தெரியல, யாரும் சொல்லலை ன்னு கௌசல்யா சொன்னாங்க.

விஜி: இதுலயும் அவங்கள தப்பு சொல்ல முடியாதே?

கவி: ரொம்பச்  சரி! ஆனா, தன்  குடும்பத்தை சேர்ந்தவங்களுக்கே தண்டனை பெற்று தந்த போராளியா அறியப்பட்டு அதுக்காக தான் கொண்டாட பட்டாங்க. இதுல, சங்கருக்கும் குடும்பம் இருக்கு தானே?  

விஜி: சங்கர் அப்பாவுக்கு அரசு வேலை கொடுத்ததா படிச்சேன்.

கவி: ஆனா, பையன திருப்பி கொடுக்க முடியாது. நீதிமன்ற தீர்ப்பை நம்ம விமர்சிக்கவும் முடியாது. அது சட்டம் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையிலானது. சாட்சிகள் மாறினால் தீர்ப்புகள் மாறும்.

ஆணவ கொலைகள் இன்னமும் தடுக்கப்படலை.

விஜி: பேரறிவாளன் விடுதலையை கொண்டாடுறது தப்பு ன்னு சொல்றியா?

கவி: என்ன அவசியம் ன்னு கேக்குறேன். வேணும்ன்னா அம்பேத்கரும் அரசியலமைப்பை உருவாக்கிய மற்றவர்களையும் நினைத்து பெருமைப் பட்டுக் கொள்ளலாம்.

விஜி: “ராஜிவ் என்ன பெரிய தியாகியா? காங்கிரஸ் என்ன ஒழுங்கா?” ன்னு அண்ணன் சீமான் காட்டாம கேட்டு இருக்காரு. அவருடைய வாதம் சரி ன்னு ஏத்துக்குறவங்களும் இருக்காங்க. தற்போதைய ஆளும் கட்சி கூட அவங்க தேர்தல் வாக்குறுதில, ராஜிவ் கொலை வழக்குல சம்மந்தப்பட்ட 7 பேர் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் சொல்லி, இப்ப ஒருத்தர் விடுதலை ஆகி இருக்கார்.நம்ம முதல்வர் கூட பேரறிவாளனை நேரில் சந்திச்சு இருக்கார்.

கவி: என்னுடைய பார்வையில, இந்திய அரசியலமைப்பு சட்டத்தை தவிர யாரும் எந்த கட்சியும் இந்த விடுதலைக்கு உரிமை கொண்டாட முடியாது.

அதோட இந்த விடுதலையை கொன்டாடும் போது, அண்ணன் சீமான் உட்பட எல்லோரும் சில விஷயங்களை கருத்தில் கொள்ளனும்.

விஜி: என்ன அந்த சில விஷயங்கள்?

கவி: கார்த்திக் சிதம்பரம் கூட ஒரு பேட்டியில் பேசியிருந்தார்.

அவர் பேசினது அப்படியே நினைவு இல்லை.

ஆனா, நானுமே கேட்கிறேன், சிறையில் இருக்கும் ஏழு பேர் தமிழர் ன்னு சொல்லி அவர்கள் விடுதலையை வச்சு அரசியல் செய்யும் பொழுது, ராஜிவ் காந்தியோடு சேர்ந்து இறந்து போன மத்தவங்களைப்  பற்றி, ஏன் யோசிக்க மாட்றாங்க?! அதுல யாருமே தமிழர் இல்லையா? கோகிலவாணி ன்னு ஒரு சின்ன பொண்ணு.ஒரு போலீஸ் கான்ஸ்டபிள்.

சரி அதை எல்லாம் விட்ருவோம். இதே மாதிரியான ஒரு கொண்டாட்டம், 1991 -92 கால கட்டத்துல இருந்திருக்குமா? நிச்சயமா இருந்து இருக்காது.

புலிகள் active அ இருந்த சமயம், தடை செயப்பட்ட இயக்கமா அது இருந்தது. அப்போதைய தி.மு.க. அரசு ஏன் கலைக்கப்பட்டுச்சு?

அதோடு, 21 மே 91 நடந்த ராஜீவ் கொலை, மக்களுடைய அனுதாபத்தையும் ஆதரவையும் காங்கிரஸ்க்கு கொடுத்துச்சு.அதுக்கு அடுத்த நடந்த தேர்தல காங்கிரஸ் வெற்றி பெற்றுச்சு. அந்த சமயத்துல நிச்சயம் எந்த தலைவர்களும் எந்த தனி நபர்களும் இந்த அளவு வெளிப்படையாய், இப்படி ஒரு விடுதலையை கொண்டாடி இருக்க மாட்டாங்க.ஏன் ஏத்துக்கிட்டு இருப்பாங்களா?சந்தேகம் தான்.புலிகளும் கூட வெளிப்படையா இதற்கு பொறுப்பேற்றுக் கொள்ளவில்லை.

விஜி: அரசியலமைப்பை பற்றி ஏதோ சொன்னீயே?

கவி: இந்த வழக்கு சட்டம் படிக்கிறவங்களுக்கு, சட்டம் தெரிஞ்சவங்களுக்கும் சுவாரசியமானது.

1999 ல மரண தண்டனைய  உறுதி செஞ்ச அதே உச்ச நீதிமன்றம் 2014 ல தண்டனைய  குறைச்சு   இப்போ பேரறிவாளனை விடுதலை பண்ணிருக்கு.

விஜி:நீதிமன்றம் தன்னோட முடிவுல தானே முரண்படுதா ?

கவி:நிச்சயமா இல்ல.

1991, இந்த வழக்கு விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்பட்டு,அந்த விசாரணை குழு 41 பேர் மேல குற்றம் சுமத்துச்சு; அதுல 12 பேர் இறந்து போனவங்க, TADA சட்டத்தின் கீழ் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு TADA நீதிமன்றத்துக்கு வழக்கு விசாரணைக்கு போனது.1998 ல நீதிமன்றம் 26 பேருக்கு தண்டனை கொடுத்தது.உச்ச நீதிமன்றம் 1999ல 19 பேரை விடுவிச்சு ஏழு பேர் தண்டனை உறுதி செஞ்சுச்சு. அதுல 4 பேர் மரண தண்டனை விதிக்கப்பட்டவங்க. இந்த வழக்கு ல இருந்த TADA சட்டமும் நீக்கப்பட்டுச்சு.

இந்த ஏழு பேரை வச்சு தான் இன்னமும் அரசியல் பண்ணிட்டு இருக்காங்க.

அதுக்கு அடுத்த வருஷம்(2000) மாநில அரசு பரிந்துரை ல நளினியோட தண்டனை மட்டும் குறைக்கப்பட்டு மரண தண்டனை ல இருந்து விடுவிக்க படுறாங்க

மரண தண்டனை உறுதி செய்யப்பட்ட மற்ற 3 பேரும்,2001 ல, ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பறாங்க, கே.ஆர். நாரயணன், அப்துல் கலாம், ன்னு ரெண்டு ஜனாதிபதி மாறி 2011 ல பிரதீபா பாட்டில் அந்த மனுவை நிராகரிக்கிறாங்க.

விஜி: இப்ப எழுவர் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் சொன்ன அதே கட்சியோட ஆட்சி தானே அப்போ, அவங்க தான நளினியோட மரண தண்டனையை ஆயுள்(வாழ்நாள்) தண்டனையா குறைக்க பரிந்துரை பண்ணாங்க. அப்பவே ஏழு பேரோட தண்டனையும் குறைச்சு இருக்கலாமே?

கவி: என்ன காரணம்ன்னு சட்டம் படிச்சவங்களையும் அரசியல்வாதிகளையும் தான் கேட்கணும். ஒருவேளை இந்த தேர்தல்  ல வாக்குறுதி கொடுத்து விடுதலை பண்ணிக்கலாம்னு அப்ப செய்யலையோ என்னவோ!

விஜி: சரி நீ மேல சொல்லு.

கவி:2011 ல கருணை மனு நிராகரிக்கப்பட்ட பிறகு,தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரும்,கருணை மனு மீதான ஜனாதிபதியின் தாமதத்தை காரணம் காட்டி , இந்த தாமதம், அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21 ஐ மீறுவதாக இருக்கின்றது ன்னு உயர்நீதிமன்றத்தில வழக்கு போட, மரண தண்டனைக்கு இடைக்கால தடைவிதிக்குது உயர் நீதிமன்றம்.அதான் ப்பா stay  order .உயர் நீதிமன்றத்தோட இந்த தீர்ப்பு அன்றைய தேதில சில விமர்சனத்துக்கு உள்ளாச்சு.

இதுக்கு இடையில 2011 ல ஜெயலலிதா அம்மையார், மரண தண்டனையை குறைக்கணும்ன்னு சட்டமன்றத்துல தீர்மானம் போடுறாங்க.இப்ப மறுபடி, வழக்கு உச்ச நீதிமன்றத்துக்கு 2013ல வந்த போது, 23 வருஷம் சிறை வாழ்க்கை அனுபவித்த பிறகு மரண தண்டனை கொடுத்தா அது இரண்டு தண்டனை கொடுத்த மாதிரி ஆகிடும் ன்னு , தண்டனையை குறைக்குது.

2015 ல மறுபடி பேரறிவாளன், கவர்னர் கிட்ட கருணை மனு கொடுத்தார்.இந்த முறையும் தாமதம்.உச்ச நீதிமன்றம், கவர்னர் கருணை மனு மீது முடிவு எடுக்கலாம் ன்னு சொன்னது.2018 ல எடப்பாடி அமைச்சரவை 7 பேரையும் விடுதலை செய்ய சொல்லி கவர்னர் க்கு பரிந்துரை செஞ்சது.

மறுபடி தாமதம். இந்த பரிந்துரைக்கு அப்பறம் வந்த  தி.மு.க. தேர்தல் வாக்குறுதி ல எழுவர் விடுதலைக்கு நடவடிக்கை எடுக்கப்படும் ன்னு சொல்லப்பட்டு இருந்துச்சு.

விஜி: இந்த கவர்னர்  ஏன் இப்படி தாமதப்படுத்தனும்.

கவி: இங்க, ஆட்சி ல இல்லாத போது யாரும் எந்த கட்சியும் எது வேண்டுமென்றாலும் பேசலாம்.

ஆனால், ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருப்பவர்கள், அரசியலமைப்புக்கு சட்டத்திற்கும் உட்பட்டு தான் நடக்க முடியும்.இதே தாமதம்,தி.மு.க.ஆதரவு காங்கிரஸ் ஆட்சியில ஜனாதிபதி க்கு அனுப்பின கருணை மனு மீது முடிவு எடுக்கறதுலையும் நடந்துச்சு அதை இப்ப யாரும் ஞாபகம் வச்சுக்க வாய்ப்பில்லை. இலங்கை தமிழர்களை காட்டி அரசியல் செய்யுற எல்லா அரசியல்வாதிகளுக்கும் , இந்த வழக்குடைய வீரியம் தெரியும்,ஆனாலும்,தண்டைக்குறைப்பு, விடுதலை ன்னு சொல்லி சொல்லி அரசியல் பண்ணதால ஏற்பட்ட குழப்பம் தான் எல்லாம். அதுனால தான்,யாரு யாரை கை காட்டலாம்; என்ன பண்ணலாம் ன்னு;  ஜனாதிபதி அலுவலகம், கவர்னர் அலுவலகம் ன்னு, எல்லாரும்  முடிவு எடுக்கறதில தாமதப்படுத்தினதும், இப்ப  கவர்னர், சட்டப்பிரிவு 72 சுட்டிக்காட்டி, இது ஜனாதிபதி தான் முடிவு செய்ய முடியும் ன்னு பெரிய தாமதத்திற்கு பிறகு ஜனாதிபதிக்கு அனுப்பின கூத்தும்  நடந்து இருக்கு

விஜி: அப்ப கருணை மனு மீதோ,மாநில அமைச்சரவை பரிந்துரை மேலையோ கவர்னர் முடிவு எடுக்க முடியாதா?

கவி: குற்றத்தின் தன்மை, எந்த சட்டப்பிரிவு அடைப்படையில் குற்றம் சாட்ட பட்டு இருக்காங்க ன்னு இருக்கு. இந்த வழக்குல, கவர்னர் ஏ முடிவு செய்ய முடியும் என்பதை தெளிவுப் படுத்தி தான் பேரறிவாளனை விடுதலை செஞ்சு இருக்காங்க. ஆனாலும்,அவர் குற்றவாளி இல்லைன்னு எங்கையும் சொன்ன மாதிரி தெரியல.சட்டத்தின் முன்னால அவர் தண்டனையை அனுபவித்து முடித்த ஒரு குற்றவாளி தான்.

விஜி:இதுல ஒன்னு புரியுது.இந்த  அரசியல்வாதிகள் அரசியல் கட்சிகள் எவ்வளவு தந்திரமானவங்கனு .கவர்னர் அல்லது ஜனாதிபதி கருணை மனு மீது முடிவு எடுத்து இருந்தா? என்ன முடிவு எடுத்து இருந்தாலும் ஒரு அவப்பேர் வந்திருக்கும். அதுக்கு காரணம்,அரசியல்வாதிகள் செஞ்ச குழப்பம். முன்னாள் பிரதமரை கொலை செய்தவர்களை கருணை அடிப்படையில் விடுதலை செய்த நாடு ன்னு நம்ம நாடு ஒரு சங்கடமான பேர் வாங்கி இருக்கும். விடுதலை பண்ணமா இருந்து இருந்தா இலங்கை தமிழர்கள் வச்சு அரசியல்வாதிகள் பண்ற அரசியல் அப்பட்டமா புலப்பட்டு போயிருக்கும்.இப்ப எல்லாமே சட்டப்படி நடந்த மாதிரி ஆகிடுச்சு.

நீ சொன்ன மாதிரி நம்ம அரசியலமைப்போட சிறப்பு, தனிமனித உரிமைக்கு இத்தனை இடம் கொடுத்து இருக்கு, நம்ம நாட்டுல சட்டம் சரியா தான் இருக்கு. பயன்பாடு தான் தவறா இருக்கு.

கவி: சரியா சொன்ன. உடுமலை சங்கர் வழக்குல குற்றம் சாட்டப்பட்டவர்களை சட்டப்படி தான் உயர்நீதிமன்ற விடுவிச்சுச்சு.அவர்கள் மீது இருந்த குற்றச்சாட்டை தள்ளுபடி செஞ்சுச்சு. வெறும் ஒப்புதல் வாக்கு மூலத்தை வச்சு அதே சட்டப்படி தான் நீதிமன்றம்  அண்ணன் பேரறிவாளனை இத்தனை வருடம் சிறையில் வச்சிருக்கு. இரண்டு குற்றங்களும் ஒன்றுக்கு ஒன்றுக்கு சளச்சது இல்ல. சாட்சி, சாட்சியம்,சட்டம், இதை தாண்டி எந்த நீதிமன்றமும் செயல்பட முடியாத மாதிரி சட்டம் இருக்கு.

விஜி:வெறும் ஒப்புதல் வாக்குமூலத்தை வச்சு ஒருத்தரை தண்டிக்க முடியும்ன்னா யாரோ செஞ்ச தப்புக்கு யாரோ தண்டனை அனுபவிக்க வாய்ப்பு இருக்கே?

கவி: சரியா கேட்ட! ஒப்புதல் வாக்கு மூலத்தை உறுதிப்படுத்தும் ஆதாரமா (corroborative piece of evidence)மட்டும் தான் சட்டப்படி எடுத்துக்க முடியும் அடிப்படை ஆதாரமா எடுத்துக்க முடியாது (substantive evidence) அப்ப இந்த வழக்கு TADA  சட்டத்துக்கு கீழ் இருந்தது.முன்னாள் பிரதமர் கொல்லப்பட்டு, குற்றவாளியின் ஒப்புதல் வாக்குமூலம் இருந்தும் அடிப்படை ஆதாரம் இல்லை ன்னு விடுவிக்க முடியாது. கிரிக்கெட் ல umpires  இருக்க pressure மாதிரி pressure இருந்த சமயம். சட்டப்படி விடுவிக்க முடியுமா முடியாதா என்பது விவாதத்திற்குரியது. ஆனா. விடுவிக்கிறது ஒரு அடிப்படை ஆதாரம் தேவைப் பட்டு இருக்கலாம்.  அதுனால தான் இத்தனை விசாரணைக்கு பின்னும், இப்ப விடுதலை செஞ்ச போதும், அவர் மேல உள்ள குற்றசாட்டு நீக்கப்படலை.

ரஜினி சொன்ன மாதிரி அவர்கள் இத்தனை ஆண்டு தண்டனை அனுபவித்து விட்டார்கள்.மனிதாபிமான அடிப்படையில் அவர்களை விடுதலை செய்யலாம் ன்னு. இந்த மனிதாபிமானத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது தான் article 21.

 கொண்டாடணும்ன்னா நம்ம அரசியலமைப்பை தான் கொண்டாடனும்.

Error happened.
Exit mobile version