கதிர் விஜயம்

பகுத்தறிவாளர்கள் புகுத்தும் மூடநம்பிக்கை!

தமிழகத்தில் ‘பேய் வருதுஎன்று திராவிட அரசியல் கூட்டம் விதைத்து பரப்பும் கதைகளை அப்படியே ஆமோதித்து கையிலெடுப்பது தான் மற்ற அரசியல் கட்சிகளின் போக்காக இருக்கிறது. மக்களில் பெரும் பகுதியினரும் கூட திராவிட கூட்டத்தின்பேய் வருதுகதையை அப்படியே நம்பிவிடுகிறார்கள்.

அப்படித் திராவிட கூட்டம் பரப்பிய ஒருபேய் வருதுகதையைத் தான் தற்பொழுது .வெ.. அரசாங்கம் கையிலெடுத்திருக்கிறது.

தொகுதி மறுவரையறை தான் திராவிட கூட்டத்தின் தற்போதையபேய் வருதுகதை.

நீட் எதிர்ப்பு ஒருபேய் வருதுகதை. குடியுரிமை சட்ட திருத்த மசோதா ஒருபேய் வருதுகதை. இப்படி இவர்களின் பேய் வருது கதைகள் நீண்டு கொண்டே இருக்கிறது..

 

நீங்கள் சிந்தியுங்கள், குடியுரிமை சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட்ட பொழுது அது இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்கிற கருத்தைப் பரவலாகக் கொண்டு சேர்த்தார்கள். இந்திய இஸ்லாமியர்களை வெளியேற்றும் திட்டம் என்று பதற்றத்தை ஏற்படுத்தினார்கள்.இன்று அந்த சட்டம் அமலில் இருக்கிறது. எந்த இந்திய இஸ்லாமியர் வெளியேற்றப்பட்டார்?

 

நாம் தமிழகத்தில் இருந்து சட்டவிரோதமாக தங்கிவந்த பங்களாதேஷிகளை கண்டறிந்து அவர்களின் நாடுகளுக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த செய்திகள் நமக்கு உணர்த்துவது தேசிய பதிவேடு சீக்கிரம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதைத் தான். ஆனால், அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இல்லையென்றால் ஐயோ உங்களை எல்லாம் இந்த சட்டமியற்றி கொல்லப் பார்க்கிறார்கள் என்று கதையளப்பார்கள். ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் நாங்கள் தான் இதை கொண்டுவந்தோம் என்று மார்தட்டிக்கொள்வார்கள்.

 

நான் அடித்துச் சொல்கிறேன், மத்தியில் காங்கிரஸ் திமுக கூட்டணி தொடர்ந்திருந்தால் அவர்களால் முன்மொழியப்பட்ட நீட் தேர்வை கல்வித்துறையின் பெரும் புரட்சி என்று மக்களிடம் கொண்டு சேர்த்திருப்பார்கள். இதை வெற்று அனுமானமாக நாம் சொல்லவில்லை.

அவர்கள் ஆட்சி அதிகாரத்தில் இல்லாமல் போன நேரத்தில், நீட் கொண்டுவரப்பட்டதால், 7.5 சதவீதம் அரசு பள்ளி மாணவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு கிடைத்திருக்கிறது.

 

நீட் என்ற ஒன்று வராமல் இருந்திருந்தால், அதிக மதிப்பெண்களை குவிக்கும் வசதிபடைத்த மெட்ரிகுலேஷன் மாணவர்களுடன் போட்டியிட்டுத் தோற்கும் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களைப் பற்றி யாரும் பேசியிருக்கவே மாட்டார்கள். நீட் தேர்வினால் ஏற்பட்ட அதிர்வலையே, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத தனி இட ஒதுக்கீட்டைப் பெற்றுத் தந்தது.

2008 இல் தோராயமாக இரண்டு லட்சம் பேர் உயிரியல் படித்து வெளியானார்கள் என்றால் அவர்களுக்கு 1400 இடங்கள் தான் மருத்துவ படிப்பில் இருந்தது. இப்பொழுது கிட்டத்தட்ட 2.7 லட்சம் பேருக்கு 8000 இடங்கள் இருக்கிறது. மெட்ரிகுலேஷன் மாணவர்களோடு போட்டி போட்டுக் கொண்டிருந்த அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்திருக்கிறது. ஒன்றுக்கு மூன்று முறை மருத்துவப் படிப்பில் சேர விண்ணப்பிக்க முடிகிறது. வாய்ப்புகள் அதிகரித்திருக்கும் பொழுது எப்படி அது மாணவர்களை பாதிக்கும்?

 

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை தமிழகத்தில் கொண்டு வரக்கூடாது என்று பிடிவாதமாக இருந்த திமுகவின் கொள்கையை பிடித்துக் கொண்டிருக்கும் .வெ.. அரசு, நீதிமன்றத்தில், தமிழக அரசு பள்ளி மாணவர்கள் கணிசமான எண்ணிக்கையில் ஐஐடி போன்ற இடங்களில் சேர்ந்து படிக்குமளவிற்கு இருக்கிறார்கள் கேந்திரிய வித்யாலயா தமிழகத்திற்கு தேவையில்லை என்பது போன்ற வாதத்தை வைத்திருக்கிறது.

 

அரசு சார்ந்த பள்ளிகளா வெறும் அரசு பள்ளிகளா என்கிற தெளிவு அந்த வாதத்தில்  இல்லை. கிராமப்புற அரசு பள்ளியிலிருந்து எத்தனை பேர் அப்படி சேர்ந்திருக்கிறார்கள் என்கிற கேள்வி நீதிமன்றத்தில் எழுப்பப்பட்டதாகத் தெரியவில்லை. நகர்ப்புறங்களில் ஓரளவு வசதி கொண்ட சிலர் அரசு சார் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்த்து மேற்கொண்டு டியூஷன் சேர்த்து விடுவார்கள். இதையெல்லாம் அவர்களின் வாதத்தின் பொழுது அவர்கள் ஒதுக்கி விட்டார்கள்.

கேந்திரிய வித்யாலயா வேண்டாம் என்று சொல்லும் பொழுது தமிழக அரசு பள்ளி மாணவர்கள் ஐஐடி போன்ற இடங்களில் சேர்ந்து படிக்குமளவிற்கு இருக்கிறார்கள் என்று பேசுகிற .வெ.கவும் திமுகவும் மற்ற திராவிட கூடாரங்களும், நீட் என்று வந்துவிட்டால் எங்கள் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்கிறார்கள்.

அதாவது,நுழைவுத்தேர்வு எழுதி IIT-க்குள் நுழையும் திறன் எங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இருக்கிறது என்று கூறி கேந்திரிய வித்யாலயா பள்ளிகளை எதிர்க்கிறார்கள். ஆனால் நீட் நுழைவுத்தேர்வு மட்டும் சாத்தியமில்லை என்கிறார்கள்.இது எத்தனை பெரியபேய் வருதுகதை. அரசு பணத்தில் நம் மீது படையெடுத்து வந்த ஐரோப்பியர்களின் மதத்தை போதிக்கும் பள்ளிகள் நடக்கலாம் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் வந்தால் தான் தமிழகம் மோசம் போய்விடும். இதற்கு பெயர் தான் இங்கு மதச்சார்பின்மை; மாநில உரிமை.

இப்படியான பேய் வருது கதைகளின் தொடர்ச்சியாக நீட்டிற்கு எதிராகவும் தொகுதி மறுவரையறைக்கு எதிராகவும் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் இயற்றி இருக்கிறார்கள். நாம் முதல் பத்தியில் சொன்னது போல் எல்லா கட்சிகளும் அதை அப்படியே ஆமோதித்துக் கொண்டது. காலச்சூழலோ கூட்டணி தர்மமோ தெரியவில்லை, பா...வும் அதிமுகவும் தொகுதி மறுவரையறைக்கு ஆதரவாக இருக்கிறார்கள்.

எல்லாக் கட்சிகளுக்கும் கண்டனமாகவே நான் இங்கே ஒன்றைப் பதிவு செய்ய விரும்புகிறேன். ஆட்சி அதிகாரத்தில் இல்லாத சமயங்களில் எதை கொண்டு வந்தாலும் கண்ணை மூடிக்கொண்டு எதிர்க்கின்ற போக்கை கைவிடுங்கள். மக்களும் அரசியல் கட்சிகளை அப்படியான நிலைக்கு தள்ள வேண்டும்.

நீங்கள் சிந்தியுங்கள், மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் கூட்டணியில் இருந்த பொழுது, திருமாவளவன் உள்ளிட்ட திராவிட அரசியல் கூடார தலைவர்கள் எல்லாம் வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தை   (FCRA -Foreign Contribution (Regulation) Act) ஆதரித்து பேசியிருக்கிறார்கள்.

இன்று அதே திராவிட கூடார தலைவர்களும் அவர்களின் நீட்சியான .வெ..வும் அந்த சட்டத்தை எதிர்க்கிறது. இந்து மதத்திற்கு எதிராக பேசி வந்து தற்பொழுது அமைச்சராக இருந்து கொண்டு விவிலியத்தில் சொல்லியிருப்பதை சட்டப்பேரவையில் சுட்டிக்காட்டும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த வன்னியரசு போன்றவர்கள் அதை கிறிஸ்துவத்திற்கு எதிரான சட்டம் என்கிறார்கள்.

நீங்கள் சிந்தியுங்கள் மக்களே! நிச்சயமாக இதை படிக்கிற அநேகம் பேர் மாத சம்பளம் வாங்குகிறவர்களாகத்தான் இருப்பீர்கள். நீங்கள் எப்படியும் உங்களின் வருமானத்தை கணக்கில் காட்ட வேண்டும். ஒரு மாதத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துவிட்டால் தடுமாறுகிற அளவில் இருக்கும் மாத சம்பளம் பெறுகிற ஒரு சாமானியர், பான் அட்டை வைத்துக்கொள்ள வேண்டும் அதை வங்கிக்கணக்கோடு இணைக்க வேண்டும். நாம் எங்கே யாரிடம் எவ்வளவு கடன் வாங்கியிருக்கிறோம் என்கிற பதிவுகள் இருக்கும். நாம் நம்முடைய வருமானத்தை கணக்கில் காட்ட வேண்டும். சாமானியருக்கு இந்த நிலை இருக்கிற பொழுது, வெளிநாடுகளில் இருந்து பணம் பெறும் யாராக இருந்தாலும், இவ்வளவு பணம் எனக்கு வருகிறது என்பதை கணக்கு காட்ட சொல்லி கேட்பதும் அதற்கான பதிவுகளை சரியாக புதுப்பிக்க சொல்லி கேட்பதும் எப்படி ஒரு மதத்திற்கு எதிரான சட்டமாக இருக்க முடியும்?!சாமானியர்களுக்கு இல்லாத ஒரு ஆடம்பரமும் சுதந்திரமும் கோடிகளில் வெளிநாட்டு நன்கொடை பெறும் அமைப்புகளுக்கு இருக்க வேண்டும் என்று வாதிடுவது எப்படி மக்களுக்கான வாதமாகும் .

மாத சம்பளம் வாங்கும் நாம் பான் அட்டை வைத்து, வங்கி கணக்கோடு இணைத்து வரவு செலவு காட்டும்போது, கோடிக்கணக்கில் பணம் பெறும் அவர்கள் ஏன் கணக்கு காட்டக் கூடாது?

நாம் எப்பொழுதும் சுட்டி வந்துள்ளோம். விஜய் எப்பொழுதும் வெள்ளம் இழுத்துச் செல்லுகிற பக்கம் செல்கிறவராக தான் இருக்கிறார் என்று. இதில் அவரின் கட்சியை பற்றி தனித்து சொல்ல வேண்டியதில்லை. சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை கொண்டு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருள் போல திராவிட கூடாரத்தில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் உறுப்பினர்களின் பந்தங்களை கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கும் கட்சி. அப்படியான கட்சி இந்த பேய் வருது கதைகளை தொடர்வதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. இதெல்லாம் மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் அதில் சக்கரை பொங்கல் வைக்க முற்படுவதன் விளைவு.

அதற்காக அதை கண்டும் காணாமல் இருந்துவிட முடியாது. சட்டப்பேரவையில் விவாதங்கள் எப்படியிருக்க வேண்டுமோ அப்படியில்லாமல் டீக்கடையில் உட்கார்ந்து பேசும் சாமானியர்களின் விவாதம் போலிருக்கிறதுபோலிருக்கும் பொழுது அதை கண்டித்தாக வேண்டும்.

இன்னும் தொகுதி மறுவரையறைக்கான வரைவு மட்டுமே தான் இருக்கிறது. அதிலும் என்ன மாற்றங்கள் செய்யலாம் என்பது குறித்து விவாதிக்க தயார் என்று மத்திய அரசாங்கம் சொல்லியிருக்கிறது. இப்படியிருக்க அமித்சாவை எப்படி நம்புவது என்று அமைச்சர் கேட்கிறார்.

தொகுதி மறுவரையறை ஏன் முக்கியம்? தேர்தல் முடிவுகளை அவதானித்து வருபவர்களுக்கு தெரியும் அநேகமான சமயங்களில் ஆளுகின்ற கட்சிக்கு எதிராக 50% பேர் வாக்களித்திருப்பார்கள் ஆனால், பெரும்பான்மை என்கிற தர்க்கத்தின் அடிப்படையில் ஆட்சி அமைத்துவிடுவார்கள். 34 சதவீதம் பேர் மட்டுமே தான் .வெ..விற்கு வாக்களித்திருக்கிறார்கள். 100 பேரில் 66 பேர் எதிராக வாக்களித்திருக்கிறார்கள். 200 பேருக்கு 132. இந்த எண்ணிக்கை கூடக் கூட எதிர்த்து வாக்களித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருக்கும். 1000 பேருக்கு 660 பேர். இதில் என்ன நடக்கிறது சதவீதத்தை விட எத்தனை தொகுதிகள் ஜெயித்தார்கள் என்பது தான் முக்கியமாக இருக்கிறது. மக்கள் தொகை அதிகரிக்கும் பொழுது தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கப்படாமல் இருக்கிற பொழுது, அநேகமான வாக்காளர்களின் தேர்வுக்கு (choice) மதிப்பில்லாமல் போகிறது.

3.36 கோடி பேர் இருந்த பொழுது 234 தொகுதிகள் என்றிருந்தது இன்று 7.76 கோடி பேருக்கும் அதே 234 உறுப்பினர்கள் என்பது எப்படி நியாயமாக இருக்க முடியும்? தொகுதி மறுவரையறை அதை அதிகப்படுத்தும். இது கட்டாய தேவை.

தொகுதி மறுவரையறையை ஆதரிக்கிறான் இவன் பாஜக என்று வராதீர்கள். அம்பேத்கர் எழுதி வைத்த அரசியலமைப்பின் படி (82)தொகுதி மறுவரையறை என்பது நிர்வாக வசதிக்கு அவசியமானது. ஒரு பக்கம் அம்பேத்கர் படத்தை மட்டும் மாட்டிக்கொண்டு அதிகாரத்தில் இல்லாத பொழுது அரசியலமைப்பையே எதிர்ப்பது தான் அரசியல் என்றாகி விட்டது அரசியல்.

இந்த கட்டாய தேவையை குருட்டுத்தனமாக நிறுத்தி வைக்க சொல்லி தீர்மானம் நிறைவேற்றுவதற்கு எதற்கு சட்டப்பேரவை.

ஒரு சட்டப்பேரவையில், ஒரு சட்டம் குறித்தான விவாதம் என்பது, சட்டத்தின் இன்னின்ன சரத்துக்கள் இந்த பாதிப்புகளை செய்கிறது, அதை இப்படியாக மாற்றிக்கொள்ள வேண்டும் என்று தானே இருக்க வேண்டும். எதை கொண்டு வந்தாலும் வேண்டாம் என்று சொல்வதற்கு எதற்கு நாம், நம் சார்பாக  பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்திற்கும் சட்டமன்றத்திற்கும் அனுப்ப வேண்டும். எதுவும் செய்யாமல்  சும்மா இருந்துவிடலாம்.

இது ஏதோ அமித் ஷாவின் மண்டையில் நேற்று உதித்து இன்று கொண்டு வர முயற்சிப்பது போல அதற்கு எதிராக இவர்கள்  தீர்மானம் கொண்டு வந்து அதற்கு திராவிட கூடாரங்கள் ஆதரவு தெரிவித்ததற்கு பெருமை பீற்றிக்கொள்கிறார்கள்.

அமித்ஷா அமைச்சராவதற்கு முன்னம் இருந்தே வல்லுநர்கள் இதை எப்படி கொண்டுவர வேண்டும் என்பது குறித்தெல்லாம் ஆய்வு செய்து இருக்கிறார்கள். பல்வேறு கட்டங்களில் பல்வேறு முன்மொழிவுகள் அளிக்கப்பட்டு இருக்கிறது.

இதை கொண்டு வந்தால் வடமாநிலத்தவர்களின் ஆதிக்கம் அதிகம் ஆகி விடும் என்கிறார்கள். இப்பொழுதும் அதே நிலை தான் இருக்கிறது. இப்பொழுது என்ன சதவீதத்தில் நாம் உறுப்பினர்களை பெற்று உள்ளோமோ அது குறையாது என்கிற உறுதி பாராளுமன்றத்தில் அளிக்கப்பட்டு இருக்கிறது. மேற்கொண்டு அதுகுறித்து விவாதம் செய்ய வேண்டியது பாராளுமன்றத்தில். மாறாக இங்கே கோமாளித்தனம் செய்துகொண்டிருப்பது நிர்வாக அரசியலுக்கு தூரமான செயல்.

தமிழகத்தை எடுத்துக்கொள்வோம், டெல்டா பகுதியில் நான்கு மாவட்டங்களில் .வெ.. ஜெயிக்கவே இல்லை; ஆட்சியில் இருக்கிறது. என்ன செய்யலாம்? அந்த நான்கு மாவட்டக்காரர்கள் சேர்ந்து போர்க்கொடி தூக்கலாமா? சில மாநிலங்களை கைப்பற்றினாலே மத்தியில் ஆட்சியை பிடித்துவிடலாம் என்றால் அதை பலகாலம் அதிகாரத்தில் இருந்த காங்கிரசால் ஏன்  செய்ய முடியவில்லை.

இன்றைய பா..கவின் பலத்தை வைத்துக்கொண்டு எதிர்காலத்தை அனுமானிப்பதும் பேய் வருது கதைதான். குறிப்பிட்ட மாநிலங்களில் உள்ள தொகுதிகளில் வெற்றி பெற்றாலே ஆட்சியமைக்கும் நிலை இருக்கிறது என்றால், சுழற்சி முறையில் பிரதமர்களை வேறு வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடுக்க வேண்டும் என்று முன்மொழியுங்கள். அதற்கான சாத்தியங்களை ஆராயுங்கள். ஆளுகின்ற கட்சிக்கு எல்லா மாநிலங்களிலிருந்தும் குறிப்பிட்ட சதவீத வாக்கு கிடைத்திருக்க வேண்டும் என்று கொண்டு வரலாமா என்பதை பற்றி விவாதியுங்கள்.

அதையெல்லாம் விட்டுவிட்டு அதிகாரத்தில் பங்கு கொள்ளாத பொழுது அரசு எதை கொண்டுவந்தாலும் வேண்டாம் என்பதற்கு எதற்கு மக்கள் பிரதிநிதிகள்?

குடியுரிமை சட்டம் இசுலாமியர்களை வெளியேற்றும் சட்டம்; நீட் வந்த பிறகு எங்கள் பிள்ளைகள் மருத்துவராக முடியவில்லை; வெளிநாட்டுப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் கிறிஸ்துவிற்கு எதிரானது; தொகுதி மறுவரையறை வந்தால் அவ்வளவு தான் என்று பகுத்தறிவாளர்கள் புகுத்தும் மூடநம்பிக்கைகளையும் பேய் கதைகளையும் கைவிட்டுவிட்டு தமிழகம் தன் அறிவை பயன்படுத்தி இது போன்ற விஷயங்களில் ஆக்கபூர்வமான சிந்தனைகளை பேச வேண்டும். மக்கள் அரசியல்வாதிகளை அதை நோக்கி நகர்த்த வேண்டும்.

சிந்திக்கிறவர்கள் சிந்திப்பார்கள். பேய் கதைகளை இனி நம்ப மறுப்பார்கள்என்று நம்புகிறோம். விடியட்டும் அரசியல் ஒளி .

 

Error happened.
Exit mobile version