கதிர் விஜயம்

பாராளுமன்றத்திற்கு ஒரு கடிதம்-04; சுகாதாரத் துறையில் அவசரமாகக் கொண்டு வரப்படவேண்டிய மாற்றங்கள்!

 

நாம் சில மாதங்களுக்கு முன்னதாகப் பிரதமர் அலுவலகத்திற்கும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கும் சில கோரிக்கைகளை வைத்திருந்தோம். அப்போதே அது தொடர்பாக நம் வலைத்தளத்தில் வெளியிட நினைத்தோம். இருந்தாலும், அவர்களின் பதிலை எதிர்பார்த்துக் காத்து இருந்தோம். ஒரு பொதுநல வழக்காக அதைக்கொண்டு செல்வது பற்றி ஆலோசித்து வந்தோம். வழக்காகக் கொண்டு செல்வதற்கு நாம் அணுகிய இடங்களில் சாதகமான பதில்கள் கிடைக்கவில்லை.

சுகாதாரத்துறைச் செயலர் நம்முடைய கடிதத்தைப் படித்துவிட்டு, எதிர்காலத்தில் இத்தகைய சுகாதாரத்துறையில் நாம் குறிப்பிட்ட சீர்திருத்தங்கள் கொண்டு வருவது பற்றி ஆலோசிக்கப்படும் என்று பதில் அளித்து இருந்தார்கள். அவர்கள் சொன்னது போல் செய்வார்கள் என்று நமக்குக் கொஞ்சம் நம்பிக்கை இருந்தாலும் கூட மனநிறைவு அளிக்கவில்லை. இது உடனே நடக்க வேண்டும்.

நாம் தீர்மானித்து இருந்தது போல், அதை நம் வலைத்தளத்தில் எழுதுவது என்று முடிவு செய்து, இப்போது இதை எழுதுகிறோம். இதனால் என்ன ஆகிவிடும்? “Societal awareness” என்பார்கள், சமூக விழிப்புணர்வு எந்த ஒரு விஷயத்திலும், சமூகத்திற்கு அது தொடர்பான தெளிவான விழிப்புணர்வு இருந்தால், அந்த விழிப்புணர்வே, சமூகம் அந்த விஷயம் தொடர்பான மாற்றங்களைக் கொண்டு வர உந்து சக்தியாக அமையும் என்று நாம் நம்புகிறோம். பொத்தாம்பொதுவாக இது சரியில்லை அது சரியில்லை என்றிருப்பது விழிப்புணர்வு இல்லை. எது சரியில்லை, எப்படிச் சரி செய்ய வேண்டும் என்கிற தெளிவு இருப்பதற்குப் பெயர் தான் விழிப்புணர்வு.

ஒருநாளில் நூறு அல்லது ஆயிரம் ரீல்ஸ் காண நேரம் செலவழிக்கும் நாம், இந்த கட்டுரையை முழுதாய் வாசிக்க நேரம் செலவழிக்கலாம்.இது உங்கள் வாழ்வில் நீங்கள் சந்தித்த பிரச்சனை சம்பந்தமான சில விஷயங்களை நிச்சயம் தொட்டு இருக்கும்

உங்களுக்கு ஒருவரின் வாழ்க்கையில் இருந்து ஒரு உதாரணத்தைத் தருகிறேன். பெண்மணி ஒருவருக்கு 2021-ம் வருடத்தில் ஒரு நாளில், தலைச்சுற்றலும் மயக்கமும் ஏற்படுகிறது. அவரைப் பல்வேறு மருத்துவச் சோதனைகளுக்கு உட்படுத்திய மருத்துவர்கள், இது நிலை மாற்றத்தால் ஏற்படும் தலைச்சுற்றல் (Positional Vertigo) ஆக இருக்க முடியும் என்கிறார்கள். அதாவது படுக்கையில் இருந்து எழும்போதோ, குனியும்போது அல்லது தலையைத் திருப்பும்போது மட்டும் ஏற்படும் திடீர் தலைச்சுற்றலை இது குறிக்கும். அதனைத் தொடர்ந்து அவர் முழு ஓய்வில் இருக்கப் பரிந்துரைக்கப்பட்டார். தொடர்ச்சியான மருத்துவச் சோதனைகளில், அவருடைய எலும்புகள் பலவீனம் அடைந்து கழுத்து மற்றும் இடுப்பு மூட்டுகளில் உள்ள நரம்புகளை அது அழுத்துகிறது என்றார்கள். மருத்துவர்கள் அவரை முழு நேர ஓய்வில் இருக்கச் சொல்கிறார்கள். சமயத்தில், அவர் முழுதும் அசைவற்ற நிலைக்குச் செல்லுகிறார். அதனால், பல்வேறு மருத்துவர்களை அணுகுகிறார். அவ்வப்பொழுது, MRI ஸ்கேன் செய்யப் பரிந்துரைக்கப்பட்டு அவரின் எலும்புத் தேய்மானம் குறித்து மருத்துவர்கள் ஆய்வு செய்கிறார்கள். சில சமயங்களில் இதில் இருந்து மீண்டு வர அவர் ஆயுர்வேத மருந்துகளை எடுத்துக்கொள்கிறார். ஒன்றும் முழுதான ஒரு தீர்வைத் தரவில்லை.

அவருக்குத் திடீரென்று ஒரு நாள் பலத்த தலைவலி ஏற்படுகிறது. மருத்துவரை அணுகிறார். ரத்த அழுத்தம் சரியாக இருக்கிறது. அவர் உங்களுக்கு இருக்கும் இந்த எலும்பு பலவீனம் தான் காரணமாக இருக்கும் என்கிறார். மறுநாள் தலைவலி அதிகமாகவே, அருகில் உள்ள மற்றொரு மருத்துவரை அணுக, அப்போது அந்த பெண்மணிக்கு உயர் ரத்த அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது. உடல் சில மணிநேரங்களில் கூட சில மாறுதல்களை அடையலாம். அந்த மருத்துவர், பெண்மணியின் மருத்துவச் சம்மந்தமான வரலாற்றைக் கருத்தில் கொள்ளாமல், ஒரு ஊசி போட்டு விட்டு, ரத்த அழுத்தத்திற்கான மாத்திரைகள் கொடுக்கிறார்.

அதற்கு மறுநாள், அந்த பெண்மணி கொஞ்சம் சுயநினைவை இழக்கத் தொடங்கிப் பக்கவாதத்திற்கான அறிகுறிகளைக் காண்பிக்கவும், அவரை மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். பக்கவாதம் வராமல் தடுப்பதற்கான மருந்துகள் கொடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அந்த பெண்மணி சுயநினைவை அடைந்து ஒரு நாள் ஆரோக்கியமாக இருக்கிறார். மருத்துவர்கள் கண்காணிப்பில் ஒரு நாள் இருக்கட்டும் என்கிறார்கள். மருத்துவமனையில் இருக்கிறார். மறுநாள் அந்த பெண்மணிக்கு வலிப்பு போன்ற அறிகுறிகளைக் காட்டுகிறார். அதன் பின் அவருக்குச் சில மருந்துகள் கொடுக்கப்படுகிறது. அந்த மருந்துகள் அவரை மயக்க நிலையில் வைத்து இருக்கிறது. தலையில், தண்டுவடத்தில் எந்த பெரிய பாதிப்பும் இல்லை என்று சொல்லி, மருந்துகளாலோ, நோயின் தாக்கத்தாலோ மயக்க நிலையில் இருக்கும் ஒருவரை மனக் கஷ்டம் காரணமாகத் தான் இப்படி இருக்கிறார் என்று மனநல நிபுணரைப் பார்க்கச் சொல்கிறார்கள். அவரோ தூங்கிக்கொண்டிருப்பவரைப் பேச வைக்க மாத்திரை கொடுக்க வேண்டும் என்று மூக்கில் ஓட்டை போட்டு ஒரு மாத்திரை தருகிறார். அது அந்த பெண்மணியைத் தூக்கத்தில் பேச வைக்கிறது. மறுநாள் வந்து பார்த்த அந்த மனநல நிபுணர், இது மனநலப் பிரச்சினை இல்லை என்றதும், மீண்டும் ஸ்கேன் செய்கிறார்கள். ஒரு வேளை மூளைக்காய்ச்சலாக இருக்கலாம் என்கிறார்கள். கண்களைத் திறக்க முடியாமல் இருந்தாலும், அந்த பெண்மணி இடையில் ஒரு நாள் எல்லோரிடமும் தெளிவாகப் பேசும் அளவில் இருக்கிறார்.

அவருக்கு இரவில், திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. செவிலியர்கள் அவரை நேராக அமரச் செய்யுங்கள் என்கிறார்கள். மீண்டும் மூச்சுத்திணறல் வந்தால் சளியைப் பம்ப் செய்து எடுக்க வேண்டும் என்கிறார்கள். மீண்டும் அதிகாலையில் மூச்சுத்திணறல் வருகிறது. பம்ப் செய்து சளியை எடுக்கிறார்கள். கட்டை விரலில் சிறிய ஒரு மெஷினை மாட்டிவிட்டுச் சிவப்பாகக் காண்பித்தால் செவிலியரை அழைக்கச் சொல்லிச் சென்றுவிட்டு, அந்த மெஷின் சரியாக வேலை செய்யவில்லை என்று அந்த செவிலியர் நினைக்கத் தொடங்குகிறார். அங்கே இருந்த அந்த பெண்மணியின் உறவினர் மூச்சு நின்று இருக்கிறது பாருங்கள் என்று சுட்டிக்காட்டும் வரை செவிலியர் அசட்டையாகவே இருக்கிறார். உறவினர் சுட்டிக்காட்டியதும் மருத்துவர்கள் வந்து CPR செய்கிறார்கள். உயிர்ப்பித்து விட்டதாகச் சொல்கிறார்கள். ஒரு நாள் வென்டிலேட்டரில் வைத்து விட்டு, மறுநாள் ஒன்றும் ஆகாது என்று வீட்டிற்குத் கொண்டு போகச் சொல்கிறார்கள். அப்படி மருத்துவர்கள் சொல்லும் பொழுது, மருத்துவர்களின் பரிந்துரைக்கு எதிராக நாம் வீட்டிற்கு அழைத்துச் செல்லுகிறோம் என்பது போன்ற ஒரு படிவத்தில் கையெழுத்து வாங்கிக்கொள்கிறார்கள்.

இங்கே நாம் குறிப்பிட்ட ஒரு மருத்துவமனையையோ, ஒரு மருத்துவரையோ, ஒரு செவிலியரையோ குற்றம் சொல்லிக்கொண்டிருக்க முடியாது அது சரியும் கிடையாது. இங்கே அமைப்பில் இருக்கும் குறைகளை நாம் களைய வேண்டும். மருத்துவத் துறை நவீனமடைந்தாலும், நடைமுறையில் உள்ள சில அடிப்படைத் தவறுகள் விலைமதிப்பற்ற உயிர்களைப் பறிக்கின்றன. அது உயிர்களைப் பற்றியது மட்டும் அல்ல குடும்பத்தைப் பற்றியது. அந்த பெண்மணி அந்த குடும்பத்தின் வாழ்வாதாரத்தை ஈட்டுபவராக, குடும்பத்தின் ஆதாரமானவராக இருக்கலாம்.

இப்போது நாம் இதில் இருக்கும் சிக்கல்கள் மற்றும் சாத்தியப்படக்கூடிய சீர்திருத்த நடவடிக்கைகள் விவாதத்திற்கும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இங்கே எடுத்து வைக்கிறோம்.

சிக்கல்: நோயாளியின் மருத்துவ வரலாறு (Medical History) தெரியாமல் ஊசி போடுவது மற்றும் மருந்துகள் வழங்குவது.

முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள்: ஒவ்வொரு குடிமகனுக்கும் ஒரு ஒருங்கிணைந்த மருத்துவப் பதிவு முறையை (Centralized Medical Record System) உருவாக்க வேண்டும். இதில் விரிவான மருத்துவப் பரிசோதனை முடிவுகள், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் மற்றும் முந்தைய மருத்துவ ஆலோசனைகள் குறித்த தகவல்கள் இடம் பெற வேண்டும். சந்து பொந்துகளில் இருக்கும் எந்த மருத்துவமனையையோ அல்லது மருத்துவரையோ அணுகினாலும், அது சார்ந்த தகவல்கள் அதில் பதிவேற்றப்பட்டிருக்க வேண்டும். இது ஏற்கனவே பல நாடுகளில் இருக்கும் நடைமுறை தான். நம் நாட்டிலும் கூட கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது, ஆனாலும் கட்டாயமாக்கப்படவில்லை; பரவலாக்கப்படவில்லை.

சிக்கல்: நோயாளியின் தீவிரத்தை உணராத செவிலியர்கள், மருத்துவரை அணுகாமல் தீவிரத் தன்மையை உணராமல் செவிலியர்கள் தன்னிச்சையான முடிவுகளை எடுக்க அனுமதிக்கும் நிலை. அதை அனுமதிக்கலாமா எப்போது அனுமதிக்கலாம்?

முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள்:

சிக்கல்: மருத்துவ ஊழியர்களின் தகுதி (Competence) மற்றும் விழிப்புணர்வு குறைபாடு. முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள்:

சிக்கல்: தொடர்ச்சியான கண்காணிப்பு இல்லாமை மற்றும் நோய் கண்டறிதலில் தாமதம். முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள்:

சிக்கல்: மருத்துவப் பிழைகள் கணக்கில் கொள்ளப்படாமை மற்றும் இழப்பீடு இன்மை. முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள்:

சிக்கல்: மருத்துவமனைகள் தங்களின் நற்பெயரைப் பாதுகாக்கமருத்துவ ஆலோசனைக்கு எதிரான வெளியேற்றம்‘ (Against Medical Advice – AMA) என்ற ஒப்புதல் படிவத்தைத் தவறாகப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. இந்த பெண்மணியின் விஷயத்தில், இனிமேல் செய்வதற்கு ஒன்றுமில்லை என்று வாய்மொழியாகத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அவர் CPR மூலம் மீண்டும் உயிர் பெற்றாரா இல்லையா என்பதில் தெளிவில்லை. இத்தகைய சூழல்களை மருத்துவமனைகள் தங்களுக்குச் சாதகமாகத் ஜோடிக்க வாய்ப்புள்ளது. ஒரு நோயாளிக்குச் செயற்கை சுவாசக் கருவி (Ventilator) தேவை என்று மருத்துவர் பரிந்துரைத்த பிறகு, முறையான காரணங்கள் இன்றி அதை அகற்றுவதும் அல்லது டிஸ்சார்ஜ் செய்வதும் ஒரு கடுமையான மருத்துவப் பிழையாகும். இது சில நேரங்களில்மருத்துவ அலட்சியம்அல்லது தீவிரமான சூழல்களில்கொலைக்கு இணையான குற்றமாககருதப்படலாம். இது கொலைக் குற்றமா என்பது அந்தச் சூழல் மற்றும் உள்நோக்கத்தைப் பொறுத்தது.

முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள்:

சிக்கல்: நோயாளியின் சிகிச்சைக்காக உறவினர்களிடம் கையெழுத்து வாங்கப்படும் ஒப்புதல் படிவங்கள் (Consent Forms). மருத்துவமனைகளில் இந்த ஒப்புதல் படிவங்கள், உறவினர்களே முன்வந்து சிகிச்சை கோருவது போல எழுதப்படுவதை நான் கவனித்தேன். முறையான மருத்துவ அறிவு இல்லாத ஒருவர் எவ்வாறு ஒரு சிகிச்சையைக் கோர முடியும்?

முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள்:

சிக்கல்: அனைத்துக் குடிமக்களுக்கும் மருத்துவக் காப்பீடு இல்லாமை. தற்போதைய சூழலில் நாட்டின் அனைத்துக் குடிமக்களுக்கும் மருத்துவக் காப்பீடு இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை. வசதி படைத்தவர்கள் காப்பீட்டை விலைக்கு வாங்க முடிகிறது; ஏழை எளிய மக்கள் அரசு காப்பீட்டுத் திட்டங்களைப் பெற்றுவிடுகின்றனர்; கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரியும் நடுத்தர வர்க்கத்தினருக்கு நிறுவனங்கள் மூலம் காப்பீடு கிடைக்கிறது. ஆனால், இவற்றுக்கு அப்பாற்பட்ட பலருக்கு எவ்விதக் காப்பீட்டுப் பாதுகாப்பும் இல்லை.

முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள்:

சிக்கல்: தனியார் காப்பீடு மற்றும்கிரிட்டிகல் இல்னஸ்‘ (Critical Illness) காப்பீடுகளில் உள்ள வெளிப்படைத்தன்மையற்ற மற்றும் அநீதியான விதிமுறைகள். தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் எவை கவர் ஆகும், எவை ஆகாது என்பதைத் தெளிவாக விளக்குவதில்லை. சில நிறுவனங்கள் சிகிச்சை முடிந்த பிறகே உரிமை கோர (Claim) முடியும் என்று நிபந்தனை விதிக்கின்றன, இது இக்கட்டான நேரத்தில் சிரமத்தை ஏற்படுத்தும். மேலும், அனைத்துகிரிட்டிகல் இல்னஸ்பாதிப்புகளுக்கும் ஒரே மாதிரியான காத்திருப்புக் காலம் (Waiting Period) நிர்ணயிக்கப்படுவது அநீதியானது. குறிப்பாக, 30 நாட்களுக்கும் குறைவான உயிர்ப்புக் காலம் (Incubation Period) கொண்ட நோய்களை, ‘முன்னரே இருக்கும் நோய்‘ (Pre-existing Condition) என்று தானாகக் கருதுவது முற்றிலும் தவறானது.

முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்கள்:

 

Error happened.
Exit mobile version