கதிர் விஜயம்

கர்ணனை வீழ்த்திய விஜயன் போல் வென்ற விஜய்!

கர்ணன் படத்தில் கர்ணனை விழ்த்திவிட்ட பின், “என் சகோதரனை நானே வீழ்த்தி விட்டேனாஎன்று அர்ஜூனன் புலம்புவார். உடனே கண்ணன் குறுக்கிட்டு, “நிறுத்துடா என்னமோ நீயே கொன்ன மாதிரி பேசுற; போருக்கு முன்ன உங்க அம்மா போய் உனக்காக வரம் கேட்டா, உன் மேல விட்ட நாகஸ்திரம் உன் மேல படாம நான் காப்பாத்தினேன், சல்லியன் பள்ளத்துல மாட்டின தேரை அம்போன்னு விட்டுட்டு போனான் இவ்வளவு நடந்து தான் நீ கர்ணனை வீழ்த்திருக்கன்னுசொல்வார்.

இன்று வீழ்த்தப் பட்டவர்கள் யாரும் கர்ணன்கள் இல்லை. ஆனால், அரசியல் பலம் வாய்ந்தவர்கள். அன்று அந்த விஜயன் ஜெயிக்க திட்டமிட்டு சில சூழல் உருவாக்கப்பட்டது. இன்று இந்த  விஜய் ஜெயிக்க தானாக சில சூழல் உருவானது.

திமுகவை திட்டிக்கொண்டிருந்த தேமுதிகவிற்கு பத்து சீட் கொடுத்து திமுக சேர்த்துக்கொண்டது; தே.மு.தி.கவின் பிரச்சாரம் தி.மு.கவிற்கு பலவீனத்தை ஏற்படுத்தியது; பாமக பிரிந்தது; போன தேர்ததலில் .தி.மு..வின்  வாக்குகளை பிரித்த தினகரன் இந்த தேர்தலில் டெல்லியில் ஒருவருக்கு வாக்கு கொடுத்து விட்டதால் இந்த கூட்டணியில் சேர்ந்தேன் என்கிற பொருளில் பேட்டி கொடுத்து முழுதாக எடப்பாடியை ஏற்காதது போல் காட்டிக்கொண்டது; போதக்குறைக்கு பிரிந்திருந்த பாமகவோடு சின்னம்மா சேர்ந்தது; அதிமுக பாஜக அடிமை என்கிற திமுகவின் கோஷம் மக்கள் மனதில் வேறூன்றியது; தேசிய கட்சிகளை தீண்டத்தகாத கட்சியாக பார்க்க செய்த திராவிட அரசியல்; தினகரன், செங்கோட்டையன், எடப்பாடி, சசிகலா, ஓபிஎஸ் என்று அதிகார சண்டையில் நவக்கிரகம் போல் ஆளுக்கு ஒரு திசையில் சென்று அதிமுகவினரே  அதிமுகவை பலவீனப்படுத்தியது. 2016, 2021 தேர்தல் போல் இல்லாமல் திமுக அதிமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிய வாய்ப்பில்லாமல் இருந்தது என்று பல காரணிகள் சேர்ந்து தான் பெரிய உழைப்பில்லாமல் இந்த வெற்றியை விஜய்க்கு கொடுத்திருக்கிறது.

தேடும் முன்னே கண்ட பொருள் நிலைப்பதில்லை தேடித்தேடி கண்ட பொருள் எளிதில் தொலைவதில்லை. இந்த வெற்றி,.வெ.கவிற்கு தேடாமல் சாத்தியப்பட்டு இருக்கிறது. இதை  .வெ. எப்படி கையாளும் இதை .வெ.. தக்கவைத்துக்கொள்ளுமா? என்பதை எல்லோரும் கவனிப்பார்கள்.

திராவிட கட்சிகளில் அதிமுக பலவீனமடைந்து திமுக சரிவை சந்தித்து ஒரு மாற்றம் ஏற்பட்டிருக்கிறது என்கிற பார்வையில் இது ஒரு நல்ல முன்னேற்றம்.

ஆனால், உண்மையில் நாம் காணும் இந்த மாற்றம் ஒரு பிம்பம் தான். அநேகமான தேர்தலில்  மற்ற கட்சிகளின் பலம் பலவீனம் தான் தி.மு. வின் வெற்றியை தீர்மானித்து இருக்கிறது. தி.மு..வின் வாக்கு சதவீதத்திற்கு பெரிய பங்கம் ஒன்றும் நேர்ந்ததாக தெரியவில்லை. இந்த வாக்கு வங்கியானது திராவிட கூட்டத்தால் மூளைச்சலவை செய்யப்பட்டதும் தி.மு.கவின் அதிகாரத்தால் பலனடைந்ததுமாக இருக்கும். அது ஒன்றும் பெரிதாக மாறவில்லை.

இந்த தேர்தலில் பிரிந்து கிடந்த திராவிட கட்சி எதிர்ப்பு வாக்குகள் ஒன்று சேர்ந்து இருக்கிறது. அவ்வளவே! பலவீனமடைந்திருக்கும் .தி.மு..வின்  வாக்கு வங்கியிலும் கூட ஆகப்பெரிய மாற்றம் ஒன்றும் நிகழவில்லை.

அதோடு விஜய்யின் ஒரு பகுதி வேட்பாளர்களும் முன்னாள் தி.மு.க. அதிமுக காரர்கள் தான். விஜய்யின் அணுகுமுறையும் திமுகவை போன்றதாகவே தான் இதுவரை இருந்திருக்கிறது என்கிற பொழுது நாம் விஜய் கட்சி தொடங்கிய முதல் நாளில் நாம் குறிப்பிட்டது போல் அரசியல் மாற்றம் ஒன்றும் நிகழவில்லை ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது.

 

த்ரேதாயுகத்தில் பிறந்திருக்க வேண்டிய ரஜினிகாந்துகள் கற்க வேண்டிய பாடம் தான் விஜய்யின் இந்த வெற்றிஇந்த ஆட்சி மாற்றம்.

 

கூட வருகிறவர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டும். மக்கள் எண்ணம் மாற வேண்டும். அரசியல் சார்ந்த சமூகத்தின் பார்வை மாற வேண்டும். கட்சியென்றால் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். காசு சம்பாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் என் கட்சியில் சேரக்கூடாது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். என்னைப் பற்றி அவதூறாக பேசி பொய் வெறுப்புரைகளை பேசுகிறவர் பற்றியும் கூட நான் மரியாதையாகத்
தான் பேசுவேன்.நான் முதலமைச்சர் ஆக மாட்டேன், நல்லவர்களுக்கும் திறமையானவர்களுக்கும் வாய்ப்பளிப்பேன் என்றார். பாவம்! நல்லவர்களுக்கு கலியுகம் எங்கே போகும்நல்ல நாள் பார்க்க வேண்டுமென்றாலும் கூட அதில் நான்கு குறைகள் இருக்கத்  தான் செய்யும்.

இப்படி கலியுகத்திற்கு ஒவ்வாத விஷயங்களை கையில் வைத்துக்கொண்டிருந்ததால் கொரோனவை கொண்டு வந்து காலம் அவரை ஒதுக்கி விட்டது.

அரசியல் நல்லவர்களுக்கான களமாக இருந்து எல்லோரும் நல்ல அரசியல்வாதிகளாகவே இருந்திருந்திருந்தால், தமிழகம் ஏன் மூன்று தசாப்தங்களாக ரஜினியை தேடிக்கொண்டு இருந்திருக்கப் போகிறது.

விஜய் வந்தார். தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்தினார். தன்னை தானே முதலமைச்சர் வேட்பாளராக முன்மொழிந்து கொண்டார். ஊழல் ஒழிப்பேன் என்று ஊழல் செய்த அரசியல் கட்சி பிரமுகர்களையே தன் பக்கம் சேர்த்துக்கொண்டார். கூட இருக்கிறவர்கள் நல்லவர்களாக கெட்டவர்களாக என்கிற அக்கறை எல்லாம் அவர் கொண்டிருக்கவில்லை. 234 தொகுதிகளுக்கு வேட்பாளர்கள் போதாமல்,திராவிட கட்சிகளில் சீட் கிடைக்காதவர்களுக்கு சீட் கொடுத்தார். குறையான சமூகத்தில் நிறைகளை விஜய் தேடிக்கொண்டிருக்கவில்லை.இங்கு இந்த அரசியல் இப்படியான மாற்றத்திற்கு தான் உட்படும். அதை நொட்டை சொல்லிக்கொண்டிருக்க முடியாது. இதன் அடுத்த கட்டத்திற்கு நாம் இந்த மாற்றத்தை எடுத்துச் செல்ல வேண்டும். அதையும் காலம் பல்வேறு காரணிகள் மூலம் தான் நிகழ்த்தும் அங்கும் தானே எல்லாம் நிகழ்த்தியது போல ஒரு விஜயன் இருப்பார். வரலாறு மீண்டும் அந்த வெற்றியைப்பற்றி மட்டுமே பேசும். எப்படி வென்றார்கள் என்பது வரலாற்றில் இருந்தாலும் யாரும் எப்போதும் பேச மாட்டார்கள்.கலியுக மாற்றங்கள் இப்படி நிறைகுறைகளோடு தான் அமையும்.இந்த மாற்றத்தால் நல்லது நடக்குமா என்றால் தெரியாது. ஆனால், கெட்டது குறையும்.

இந்த மாற்றத்தின் அடுத்தக்கட்டத்திற்கு காலம் நம்மை இட்டுச் செல்லும் வரை, த.வெ. மற்றுமொரு திமுக இல்லை என்கிற நம்பிக்கையை மூடத்தனமாக கொண்டிருக்க வேண்டிய சூழலில் நாம் இருக்கிறோம். பார்க்கலாம் எப்படி கூட்டணி அமைந்து எப்படி ஆட்சி அமைக்கிறார்கள் என்று

 

Error happened.
Exit mobile version