கதிர் விஜயம்

இந்தமுறை தப்பித்த த.வெ.க- வைத்த வாதமும்! வைக்காத வாதமும்!

திமுக, விஜய் கரூர் செல்லத்தடை உத்தரவு பிறப்பிக்கோரி விடுத்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதுகுறித்து நமக்கு சில கேள்விகள் எழுந்தது. அந்த கேள்விகளையும் பதில்களையும் உரையாடல் வடிவிலேயே இங்கு நாம் பதிவு செய்துள்ளோம்

கவி: இந்த கரூர் கூட்டநெரிசல் விபத்துல பாதிக்கப்பட்டவங்களை முதலமைச்சர் விஜய் நேர்ல போய் பார்க்கக்கூடாதுன்னு திமுக போட்ட வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி பண்ணிடுச்சு பாத்தீயா?

 

விஜி: ம்ம்!  “ஒரு முதலமைச்சர் எங்கு போகலாம், என்ன பேசலாம், பேசக்கூடாதுன்னு நீதிமன்றம் உத்தரவு போட முடியாது; முதலமைச்சரின் பயணத் திட்டத்தை நாங்க முடிவு பண்ண முடியாது” அப்படின்னு சொல்லிட்டாங்க. அதும் இல்லாம, எப்.ஐ.ஆரில் (FIR) முதலமைச்சர் பெயர் இல்லைங்கிறதையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கு.

 

கவி: நீதிமன்றம் சொன்னது ஒருபக்கம் இருக்கட்டும். ஆனா என்ட்ட சில கேள்வி  இருக்கு. ‘தவெக கட்சியின் மீது வழக்கு இருக்கும் பொழுது, அந்த கட்சியின் தலைவர் முதல்வராக இருந்து கொண்டு, இந்த வழக்கின் முக்கிய சாட்சிகளான 41 பேரின் குடும்பங்களுக்கு ‘அரசு வேலை’ என்று அறிவித்துவிட்டு அவர்களைப் பார்க்கச் செல்வது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் இல்லையா? சாட்சிகளை அரசு அதிகாரம் மூலம் கலைக்கிற முயற்சி (Witness Tampering) தான்னு திமுக தரப்பு வழக்கறிஞர்கள் கேட்டிருக்க முடியாதா?

 

விஜி:  நீ கேட்கிறது நூற்றுக்கு நூறு சரியான கேள்வி. இதை ‘நலன்களின்  முரண்பாடு’ (Conflict of Interest) அப்படின்னு சொல்லுவாங்க. ஆனா, கோர்ட்ல இதை திமுக வச்சிருந்தாலும், நீதிமன்றம் இதை அரசின் ‘கொள்கை முடிவு’ (Policy Decision) அப்படின்னு பார்த்திருக்க வாய்ப்பு இருக்கு. அதுமட்டுமில்லாம, முதலமைச்சர் நேர்ல போனா சாட்சிகள் கலைந்துவிடுவார்கள் என்பது சட்டத்தின் பார்வையில் வெறும் ‘அனுமானம்’ (Presumption) மட்டுமே. அதை மட்டும் வெச்சு பயணத்தை ரத்து செய்ய கோர்ட் தயங்கும்.

 

கவி: அது எப்படி ? எப்.ஐ.ஆர்-ல அவர் பெயர் இப்போதைக்கு இல்லை, சரி. ஆனால் அவர் கட்சியின் பொறுப்பாளர்கள் பெயர் இருக்கே! ஆதவ் விசாரணையில் இருக்கிற வழக்கு பற்றி தீர்மானமான கருத்தை பேசுறார். அது தப்பு இல்லையா?! ஒருவேளை விசாரணை முதல்வருக்கு எதிரா கூட திரும்ப வாய்ப்பிருக்கு இப்படி சந்தர்பத்துல, இந்த அரசு வேலை அறிவிப்பும், சந்திப்பும் சாட்சியங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று திமுக வாதிட்டு இருக்கலாமே? பொறுப்பாளர்கள் செஞ்ச தவறுக்கு தலைவருக்கு ‘பதிலாள் பொறுப்பு’ (Vicarious Liability) இருக்கே?

 

விஜி: கண்டிப்பா வாதிட்டிருக்கலாம். ஆனா செஞ்ச மாதிரி தெரியல! அதோட இதுல  குற்றவாளிப் பட்டியலில் (Accused list) இன்னும் முதல்வர் பெயர் வரல அது தான் இங்க பாயிண்ட்! நீதிமன்றமும் வழக்கு ஒருவேளை இப்படி திரும்பும் அப்படி திரும்பும்ன்னு எப்பவோ நடக்குபோறதை நடக்குமானு தெரியாததை வச்சு   இப்பவே ஒரு முதல்வரின் நடவடிக்கையை முடக்க விரும்பல.

 

கவி: அப்பறம் இதை அரசின் கொள்கை முடிவுன்னு நீதிமன்றம் தலையிட முடியாதுன்னு சொன்ன; ஒருவேளை நீதிமன்றம் இதை அரசின் கொள்கை முடிவுன்னு (Policy Decision)  சொன்னா,  இப்படியோரு வாதத்தை முன்வச்சுருக்க முடியாதா?!

தமிழ்நாட்டுல எத்தனையோ திருவிழாக்களில், கூட்ட நெரிசல்ல (Stampede) சிக்கி மக்கள் இறந்திருக்காங்க. இப்படி பதிவு செய்யப்பட்ட எந்த ஒரு கூட்டநெரிசல் சம்பவத்திலாவது பாதிக்கப்பட்டவர்களுக்கு ‘அரசு வேலை’ கொடுத்திருக்காங்களா? கிடையாது!

 

அதே மாதிரி இப்ப கொஞ்ச நாள் முன்ன, எண்ணூர்ல நடந்த அம்மோனியா வாயுக்கசிவு விபத்து… ரசாயனங்களைக் கையாளுவதில் பாதுகாப்பு நடவடிக்கைகள் பின்பற்றபடுதான்னு கவனிக்க தவறிய அரசின் முழுமையான அலட்சியத்தால் (Negligence of State) நடந்த விபத்து அது. அங்க பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அரசு வேலை கொடுத்தாங்களா, கொடுப்பாங்களா கிடையாது. இப்படியே கொடுத்துட்டு இருந்தா எவ்வளவு பேருக்கு இப்படியே அரசு வேலை கொடுக்கிறது?!

முதலமைச்சரின் சொந்தக் கட்சி நடத்தின அரசியல் கூட்டம். அதுல ஏற்பட்ட நெரிசலுக்கு, முதலமைச்சரே அரசு அதிகாரத்தைப் பயன்படுத்தி, மக்கள் வரிப்பணத்துல தன் கட்சிக்கு ஏற்பட்ட களங்கத்தை மறைக்க அரசு வேலை கொடுக்கிறார். இது அப்பட்டமான ‘நலன்களின் முரண்பாடு’ (Conflict of Interest) இல்லையா? உண்மையான அலட்சியத்தால் நடந்த விபத்துகளுக்கு இல்லாத சலுகை, ஆளுங்கட்சி விபத்திற்கு மட்டும் எப்படி வந்ததுன்னு  ஒரு வாதத்தை வச்சுருக்க முடியுமா இல்லையா?

 

 

விஜி: செம டா! இது வலுவான பாயிண்டு நீ சொல்றது இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 14 (சட்டத்தின் முன் அனைவரும் சமம்). ஒரு அரசாங்கத்தின் கொள்கை முடிவு தன்னிச்சையாகவோ (Arbitrary), பாரபட்சமாகவோ (Discriminatory) இருக்கக்கூடாது.

 

நீ சொன்ன இந்த அம்மோனியா வாயுக்கசிவு மற்றும் மற்ற கூட்ட நெரிசல் சம்பவங்களை முன்வைத்து, “அரசின் மெத்தனத்தால் (Negligence) நடந்த சம்பவங்களுக்கு ஒரு நீதி, ஆளுங்கட்சியின் அரசியல் கூட்டத்திற்கு ஒரு நீதியா? இது கொள்கை முடிவு என்ற போர்வையில் பொது நிதியை (Public Exchequer) தங்களின் அரசியல் லாபத்திற்காகத் தவறாகப் பயன்படுத்தும் செயல்” என்று திமுக வழக்கறிஞர்கள் இந்த ஒப்பீட்டை நீதிமன்றத்தில் வலுவாக வைத்திருந்தால், நிச்சயம் வழக்கின் போக்கு மாறியிருக்கும். நீதிமன்றம் இந்த அரசாணை எவ்வளவு தன்னிச்சையானதுன்னு உணர்ந்து தலையிட்டிருக்க அதிக வாய்ப்புகள் இருக்கு.

 

யார் குற்றவாளி என்பது இன்னும் நீதிமன்றத்தால் தீர்மானிக்கப்படாத போது, அரசு வேலை வழங்கும் இந்த அறிவிப்பு நிச்சயமாக அதிகார துஷ்பிரயோகம் தான்

Error happened.
Exit mobile version