கதிர் விஜயம்

பின்னோக்கித் தவழும் த.வெ.க.! கனவாகும் மூன்றாவது தேர்வு!

 

வலைத்தளங்களில் .வெ. மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருவதை நிச்சயமாக கவனித்து இருப்பீர்கள். நாம் கூட நம்முடைய முந்தைய கட்டுரையில், ஒரு மாநிலத்தின் ஒரு கூட்டம் அரசியல் தெளிவில்லாமல் இருக்கிறது என்றால், அது இத்தனை ஆண்டுகள் ஆட்சி செய்த திராவிட கட்சிகளின் தோல்வி என்று குறிப்பிட்டு இருந்தோம். அந்த கருத்தில் இருந்து நாம் எப்போதும் வேறுபடப் போவதில்லை.

.வெ.கவினர் மீது வைக்கப்படும் பல பொதுவான விமர்சனங்களுக்கு அவர்களும் கனகச்சிதமாகத் தங்களைப் பொருத்திக்கொள்கிறார்கள். அதில் சிலவற்றை .வெ.கவினர் சிந்திக்க அவர்களுக்குச் சுட்டிக்காட்ட வேண்டுமென்று நாம் எண்ணுகிறோம். “இதில் உனக்கு என்ன அக்கறை?” – வெகுகாலமாகத் தமிழகத் தேர்தலில் மூன்றாவது தேர்வு என்பது மக்களின் பெருங்கனவாக இருக்கிறது. இங்கு நடக்கும் அரசியல் சூழ்ச்சிகள் எல்லாம் அந்த மூன்றாம் இடத்தைக் குறிவைப்பதாகவே உள்ளன. குளோனிங் செய்வது போலப் பல்வேறு கட்சிகளை உருவாக்கி, மூன்றாம் இடத்திற்கான போட்டியைப் பல்முனைப் போட்டியாக்கி வைத்திருக்கிறார்கள்.

.வெ.. வும்கூட அப்படியொரு குழப்பத்தை ஏற்படுத்த திராவிட கட்சிகளின் பின்னணியோடு தொடங்கப்பட்ட கட்சியாக இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம். .வெ.. அப்படியானதொரு கட்சியாக இருக்காது என்கிற ஒரு நம்பிக்கையை ஏற்படுத்திக்கொண்டுதான் நாம் இந்த கட்டுரையை எழுதுகிறோம்.

இங்கே  சினிமா தரும் செல்வாக்கு இல்லாமல், தேசிய கட்சிகளையும் ஒதுக்கி விட்டு ஒரு மூன்றாவது கட்சி மக்களின் தேர்வாக அமைவது சாத்தியமே இல்லை. இனிவரும் காலங்களில், இத்தனை பெரிய செல்வாக்கோடு சினிமாவில் இருந்தும் கூட யாரும் அரசியலுக்கு வர முடியாது என்றே தான் எண்ணுகிறேன். காலம் மாறிக்கொண்டு இருக்கிறது. அடுத்த ஐந்தாண்டுகளில் சினிமா என்ன மாதிரியான மாற்றங்களுக்கு உள்ளாகியிருக்கும் என்பதை நம்மால் ஓரளவு ஊகிக்க முடிகிறது. ஓடிடி வருகை, 30 வினாடி ஓடும் காணொளியையும் ஓட்டி விட்டுப் பார்க்கும் மனநிலை என அனைத்தும் சினிமாவை ஒரு கட்டாய மாற்றத்திற்குள் தள்ளிக்கொண்டிருக்கிறது.

அதனால், விஜயே கூட சினிமாவில் தொடர்ந்தால், காலம் அவரை நாயகக் கொண்டாட்டங்களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஓரங்கட்ட ஆரம்பித்திருக்கும். இதையெல்லாம் புரிந்துகொண்டு கூட அஜித்தும் விஜய்யும் புதுப் பாதையைத் தேர்ந்தெடுத்து இருக்கலாம்.

அதனால், இன்றைய தேதியில் விஜய் போன்ற ஒருவரின் கட்சியும், விஜய் போன்ற ஒருவரும் ஒரு கடுகளவு மாற்றத்தையேனும் கொண்டு வரத் தேவைப்படுகிறார்கள் தான். தி.மு., .தி.மு. அல்லாத ஒரு கூட்டணி அமைந்து அல்லது தனியாக ஒரு கட்சி சட்டமன்றத்துக்குள் செல்வதற்கான வாய்ப்பு அமைந்துவிட்டால் அதுவே மாற்றத்தின் ஒரு கூறு தான்.

ஆனால், இங்கே பெரிய செல்வாக்கைக் கொண்டு மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்து, முதல் இரண்டு இடங்களுக்குப் போட்டி போட வேண்டிய .வெ.கவோ பின்னோக்கித் தவழ்ந்து கொண்டிருக்கிறது. வலைத்தளங்களில் ஒரு பகடியான விமர்சனம் படித்தேன்: “தேர்தல் அன்று மற்ற நடிகர்களின் படம் வெளியானால் .வெ..வினர் தேர்தலை மறந்துவிட்டு அந்த நடிகர்களின் ரசிகர்களோடு சண்டை பிடிக்கக் கிளம்பி விடுவார்கள்என்று. அதை இவர்கள் நிஜமாக்குவார்கள் போலத்தான் தெரிகிறது.

 சமீபத்தில், மறுவெளியீடானபடையப்பாதிரைப்படத்திற்கு எதிராகவும் ரஜினிக்கு எதிராகவும் மோசமான கருத்துக்களைப் பரப்பிக்கொண்டிருந்தார்கள். ஒரு குறிப்பிட்ட கட்சியின் ஆதரவாளராக இருந்து கொண்டு இதையெல்லாம் செய்வது அந்த கட்சியைப் பாதிக்கும் என்பதைப் புரிந்து கொள்ள அரசியல் அறிவு தேவை இல்லை; அடிப்படை அறிவு இருந்தால் போதும்.

ரஜினியின் மீதான விஜய் ரசிகர்களின் புரிதலற்ற சிறுபிள்ளைத்தனமான விமர்சனங்கள், குழந்தையின் அழுகை போன்றது தான். வாயில் வைத்துக்கொள்ள ஏதேனும் கொடுத்தால் அமைதியாகி விடும். சில நேரங்களில் இந்த அழுகை அருவருக்கத்தக்கதாக இருக்கிறது.

தி.மு. தீயசக்திஎன்று விஜய் பேசியதைப் பெரிய தைரியமாகப் பாராட்டி, அதை ரஜினி தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டு, “நமக்கு இவ்வளவு தைரியம் வராது, நாம் கடைசி வரை ஸ்டாலின் காலை நக்கும் நாய்க்குட்டியாக இருந்து விடலாம்என்று ரஜினி தனக்குத் தானே சொல்லிக்கொள்வது போல ஒரு கேலிச்சித்திரத்தை உலவவிட்டுப் புணர்ச்சிப் பரவசமடைந்து கொண்டிருந்தார்கள்.

முதலில், அரசியலில் எது தைரியம் என்பதை நாம் எல்லோருமே புரிந்து கொள்ள வேண்டும். இங்கே பரப்பப்பட்ட ஒரு பொய், ஒரு பிரளயத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் பொழுது, யார் என்ன சொல்வார்கள், என்ன மாதிரியான எதிர்வினைகளைச் சந்திக்க நேரிடும் என்பதைப் பற்றிய கவலை இல்லாமல் உண்மையைப் பேசுவது தான் தைரியம்.

தூத்துக்குடி விவகாரத்தைச் எடுத்துக்கொள்ளுங்கள். துப்பாக்கிச் சூட்டுக்கு முன்னும் சரி, பின்னும் சரி நாம் எல்லோரும் நரம்புகள் புடைக்கக் கொதித்துக்கொண்டிருந்தோம். அந்த சந்தர்ப்பத்தில், மிகத் தெளிவாகஎன்ன நடந்திருந்தாலும் துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கக் கூடாதுஎன்பதைப் பதிவு செய்து, “சமூக விரோதிகள் ஊடுருவல்தான் கலவரம் ஏற்படக் காரணம்என்று சொன்னார் ரஜினி. அந்த வார்த்தைகள் திரிக்கப்பட்டு, அவர் சென்னை வருவதற்குள் தமிழகத்தையே அவருக்கு எதிராக அரசியல்வாதிகள் திருப்பிய பொழுதும், “எதற்கெடுத்தாலும் போராடினால் விவசாயம் குறைந்த மாநிலத்தில் முதலீடுகள் எப்படி வரும்?” என்று கேட்க முடிகிற துணிவுதான் தைரியம்.

CAA போராட்டத்தில், ஒட்டுமொத்த சமூகத்தையும்ஐயோ உங்களையெல்லாம் நாடுகடத்தப் போகிறார்கள்என்று கிளப்பிப் போராட வைத்துக்கொண்டிருந்த பொழுது, மக்களின் அப்போதைய மனநிலைக்கு எதிராக ஒரு வார்த்தை சொன்னாலும் நம்மைத் தொலைத்துவிடுவார்கள் என்று நினைக்காமல், “CAA சட்டத்தில் அரசியல்வாதிகள் குழப்பம் செய்வது போல எந்தப் பாதகமும் இல்லை. அதனால் போராட்டம் செய்வதற்கு முன்பு மக்கள், மாணவர்கள் எல்லாம் சிந்திக்க வேண்டும். இந்தியாபாகிஸ்தான் பிரிவினையின் பொழுது இது என்னுடைய நாடு என்று இங்கிருக்கும் இஸ்லாமியர்களை வெளியில் அனுப்பும் சூழல் ஏற்பட்டால், “நான்ரஜினிகாந்த் முதல் ஆளாகப் போராட்டத்தில் இறங்குவேன்என்று மனதில் பட்ட உண்மையை பேசமுடிகிற துணிவிற்குப் பெயர்தான் தைரியம்.

பாலச்சந்தர் ரஜினியைப் பேட்டி கண்ட பொழுதுஉனக்குப் பிடித்த ஒரு பிரபலத்தின் பெயர் சொல்லுஎன்றதும் சிங்கப்பூரின் முன்னாள் பிரதமரின் பெயரை அவர் சொன்னார். அந்த முன்னாள் சிங்கப்பூர் பிரதமர் சொன்ன வார்த்தைகள்: “ஒரு தலைவன் ஊடகங்களும் மக்களும் இழுக்கும் போக்கிற்குச் செல்லக் கூடாது, அப்படிச் செல்பவன் தலைவன் இல்லை“. அந்த வார்த்தைகளின் படி, நூறு கோடி மக்களையும் பொய் வதந்திகளால் அரசியல்வாதிகள் ஒரு பக்கம் நிறுத்தினால், ரஜினி மறுபக்கம் இருக்கும் உண்மையின் பின் தான் நின்று இருக்கிறார்.

நெய்வேலிக்குச் சென்றுகர்நாடகாவிற்குச் செல்லும் மின்சாரத்தை நிறுத்தப் போகிறோம்என்று சினிமா உலகம் கிளம்பியது. ரஜினிகாந்த் அப்போது நெய்வேலிப் போராட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. அது தவறு, நெய்வேலியில் மின்சாரத்தை நிறுத்தினால், அங்குள்ள தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், கர்நாடகாவில் வாழும் அப்பாவித் தமிழர்களுக்கு அது ஆபத்தாக முடியும் என்றும் கூறி அந்தப் போராட்டத்தைத் தவிர்த்தார் மொத்த சினிமா உலகத்திற்கு எதிராக நின்று தனியாக உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டார். இது தைரியம்.

கட்சிகளுக்கு எதிராகப் பேசினால் கொலை செய்யப்படுவார்கள் என்கிற காலத்திலேயே ஜெயலலிதாவை நேருக்கு நேர் கை காட்டிதப்பு பண்றீங்க நீங்கஎன்று பேசியது, கலைஞரையும் திமுகவையும் திமுக மேடைகளிலேயே நாசுக்காக விமர்சித்தது, சமீபத்தில் நடந்த திமுகவின் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்றுதான் தி.மு..விற்கு வாக்களிக்கவில்லைஎன்பதைச் சொன்னது, “நல்லது செய்யணும்னு தான் நினைக்கிறோம் என்று சொல்லி கலைஞர் பெருமூச்சு விட்டார்” (அப்படியென்றால் அவர் செய்யவில்லை என்றுதானே அர்த்தம்) என்று சொன்னதுகலைஞரின் வீட்டு வாசல் முன் நின்றுகொண்டு தி.மு.கவினர் செய்ததது தவறு தான் அஜித் உண்மையை தான் பேசினார் அதனால் தான் அவரை ஆதரிக்கிறேன் என்று பேசியது-இதெல்லாம் தான் தைரியம்.

  

மறுபக்கம் இந்த தைரியமான விஜய் என்ன செய்கிறார்? கட்சி ஆரம்பிப்பதும் அரசியலுக்கு வருவதும் தைரியம் என்று நினைத்தால், .வெ..வினர் அந்த நினைப்பை மாற்றிக்கொள்ள வேண்டும். பல நடிகர்கள், தனிநபர்கள் கட்சி ஆரம்பித்து இருக்கிறார்கள். சினிமாவில் பல பேர் தேர்தல் பிரச்சாரங்களின் பொழுது இரண்டு திராவிட கட்சிகளின் மீதும் பலமான விமர்சனங்களை வைத்து இருக்கிறார்கள். ‘பயணம்படத்தில் ஒரு சினிமா நாயக கதாபாத்திரம் வரும், அவரிடம் சாம்ஸ் சொல்வார்: “என்னைய அடிச்சுப் பெரிய ஆள் ஆகலாம்னு பார்க்குறீங்களா? சின்ன பையன் அடிப்பான் என்னைய, என் பொண்டாட்டி அடிப்பா என்னைய“. அது போல, “தி.மு. ஒரு தீய சக்திஎன்பதைச் சொல்வதற்குத் தனி ஒரு தைரியம் தேவை இல்லை. ஓரளவு அரசியலைப் புரிந்து வைத்திருக்கின்ற பால்ய வயதுப் பிள்ளைகள் கூடச் சொல்லும்.

இங்கு விஜய் என்ன செய்கிறார்? அரசியல் வெள்ளம் அடித்துக்கொண்டு போகிற பக்கம் தான் தன் கட்சியை இழுத்துச் செல்கிறார். தமிழகத்தில் பரவலாக இருக்கும் பா.. எதிர்ப்பைக் கையில் எடுத்து இருக்கிறார். காங்கிரஸோடு கூட்டணி பேச்சுவார்த்தைகள் நடப்பதாகச் செய்திகள் வருகிறது. இதே காங்கிரஸிற்கு எதிராக ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில் தன் தலையைக் காண்பித்துவிட்டு வந்தார்.ஜெயலலிதா விஜய்க்கு எதிராக இருந்த பொழுதும், அவரை சந்திக்க நினைத்து முடியாமல், அவர் ஒன்றும் தவறு செய்யவில்லை, அவரை சூழ்ந்து இருக்கிறவர்களால் அவர் தவறாக வழிநடத்தப்படுகிறார் என்று பேசிவிட்டு இன்று தினகரன் ஆதரவர்களாக பொதுவில் அறியப்பட்ட செங்கோட்டையனை சேர்த்துக்கொண்டு மேலும் தினகரனுடன் கூட்டணி வைக்க காத்துகொண்டு இருக்கிறீர்கள். இந்த செயல்பாடுகளும், பொதுவான எதிர்ப்புகளை தானும் கையில் வைத்திருப்பதும் விஜய்க்கு  ஒரு பின்னடைவைத் தந்து கொண்டிருக்கிறது.

அதே சமயம், இவர்கள் விமர்சிக்கும் ரஜினி, “எனக்குத் தனி ஒரு கட்சியையோ நபரோ எதிரி இல்லை, மக்களின் பிரச்சனை தான் என் ஒரே அரசியல்என்று பேசியிருக்கிறார். காங்கிரஸின் நல்ல செயல்பாடுகளை ஆதரித்து இருக்கிறார், பா..கவின் பல்வேறு நிலைப்பாடுகளை எதிர்த்து இருக்கிறார். ஜெயலலிதாவை விமர்சிக்கும் பொழுது அவரின் செயல்பாடுகளுக்காக விமர்சித்து விட்டு அவரிடம் நட்பு பாராட்டியிருக்கிறார். கலைஞரோடு இருந்த நட்பின் காரணமாய், எப்போதுமே நாசுக்காக கலைஞர் இருக்கின்ற மேடையிலேயே அவரை விமர்சித்து வந்து இருக்கிறார்.

என்னைக் கேட்டால், விஜய் எப்படி சினிமாவில் ரஜினியைப் பின்பற்றினாரோ அதே போல் அரசியலிலும் ரஜினியைப் பின்பற்றலாம். அணில்களுக்கும் புரியும்படி சொல்ல வேண்டுமென்றால், எப்படி சினிமாவில் நுழைந்த ஆரம்பத்தில் ரஜினியின் தீவிர ரசிகராக (ரஜினியின் காலை நக்கும் நாய்க்குட்டியாக நாய்க்குட்டியாக என அணில் பாஷையில் சொல்வது போல) விஜய் இருந்தாரோ, அரசியலிலும் அந்த முதிர்வைப் பின்பற்றலாம். இதை ரசிகர்கள் மறுக்க முடியாது, அவரே பல இடங்களில் ஒப்புக்கொண்டு இருக்கிறார்.

நாம் நிச்சயமாக இதை ஒரு சீற்றத்தோடு குறிப்பிட்டாலும், நல்ல எண்ணத்தில் தான் குறிப்பிடுகிறோம். ரஜினி யாரையும் வெறுக்கவில்லை. ஆனால், எல்லோருடைய குறைகளையும் நேரடியாகச் சுட்டியிருக்கிறார். பாராட்டினாலும் பொய்யான பகட்டுரைகளாக இல்லாமல், நேர்மறையான கருத்தைச் சொல்லித் தான் பாராட்டி இருக்கிறார். “பாலையா செய்வதையெல்லாம் நாம் செய்தால் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்என்று பாலையாவைப் பாராட்டுகிற அதே இடத்தில், நியாயமற்ற காட்சிகளில்(illogical scenes) அவர் நடிப்பதை ரஜினியும் ஏற்கவில்லை. “தி.மு..வில் வயதான தலைவர்கள் தான் அதிகம் இருக்கிறார்கள்என்று குறிப்பிடும் பொழுது, அங்க பார்த்து சொல்லுறேன் என்று முதல்வர் ஒன்றும் இளைஞர் இல்லை என்பதையும் மறைமுகமாக பதிவு செய்து அவர்களை நிர்வகிப்பது பாராட்டுக்குரியது என்கிறார். இந்த விவேகத்தை விஜய் கற்றுக்கொள்ள வேண்டும்.

கள எதார்த்தைப் புரிந்துகொண்ட ரஜினி, தான் சில கூட்டணிகளைத் தீர்மானித்து வைத்திருந்ததாகக் குறிப்பிடுகிறார். ஆனால், அதை அவர் முதல் கூட்டத்திலேயே வெளிப்படுத்தவில்லை. தான் ஒருவன் வந்தால் அதிகபட்சம் 10 முதல் 20 சதவீத வாக்குகள் பெறலாம், அதை மீறி ஒரு மாற்றம் வர மக்கள் மாற வேண்டும் என்கிற எதார்த்தைப் புரிந்திருந்தார். ஆனால் விஜய்யும் விஜய் ரசிகர்களும் கள எதார்த்தைக் கொஞ்சமும் புரிந்துகொண்டவர்களாகத் தெரியவில்லை. அப்படித் தெரிந்திருந்தால், “ஆட்சியில் பங்கு, கூட்டணி ஆட்சிஎன்பதை அவசரமாகப் பகிரங்கமாக வெளிப்படுத்தியிருக்க மாட்டார். நிச்சயமாக ஆட்சி அமைக்கக்கூடிய அளவில் இருக்கும் அதிமுகவும் திமுகவும் ஆட்சியில் பங்கு தருவார்கள் என்று விஜய்யோடு இணையப்போவதில்லை.

கொள்கை எதிரி பா..என்று சொல்லித் தமிழகத்தில் அவர்களுக்கு இருக்கும் 3-4 சதவீத வாக்குகளையும் அவருக்கு எதிராகத் திருப்பிக்கொண்டார். பா..கவின் கொள்கை என்ன என்று கேட்டால் தெரியாது, “எல்லா மதங்களையும் மதிக்க வேண்டும்என்பது தான் அவர்கள் கொள்கை (பிரச்சாரம்), அந்த கொள்கைக்கு நீங்கள் எதிரானவரா?

.தி.மு.கவும் தி.மு.கவும் 60 முதல் 70 சதவீத வாக்குகளை வைத்திருக்கிறார்கள். நாம் தமிழர் கட்சி சிறுகச் சிறுக வளர்ந்து 6 சதவீதத்தில் வந்து நிற்கிறார்கள். இவர்கள் தவிர்த்துப் பா.. ஒரு 4-6 சதவீதம் வைத்திருக்கிறது. இந்த கட்சிகள் தவிர்த்துத் தமிழகத்தில் தேர்தலைச் சந்திக்கின்ற அளவு பணபலம், படைபலம் கொண்ட கட்சி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. இவர்கள் யாருடனும் சேராமல் யாரோடு கூட்டணி அமைத்து ஆட்சிக்கு வந்து நாம் அவர்களுக்கு ஆட்சியில் பங்கு தருவது?

வேலைக்குச் செல்லும் வயதில் வேலைக்குச் செல்லாமல், வீட்டில் இருக்கும் பெரியவர்களின் உழைப்பில் ஆடியோ லான்ச்க்குச் சென்றுவிட்டு, 70 வயதில் தன் உழைப்பைச் சார்ந்து வாழ்ந்து கொண்டிருக்கும் ரசிகர்கள் அறிவு இருந்தால் அதை வளர்த்துக்கொண்டு சிந்திக்க வேண்டும். இங்கே களத்தில் 50 முதல் 60 சதவீத ஓட்டு உங்களுக்கு எதிராக இருக்கிறது. நீங்கள் அரசியல் களத்தில் இருக்கிறீர்கள். அங்கே எதிரியை விட்டுவிட்டு அம்பயரை அடிக்கும் நகைச்சுவை போல, நீங்களோ பார்வையாளர்களையும் வாக்காளர்களையும் அடித்துக் கொண்டிருக்கிறீர்கள். கொள்கைப் போர் செய்ய வேண்டிய இடத்தில் தனிநபர் தாக்குதல் செய்வது கட்சிக்கு வலு சேர்க்காது.

பாண்டிச்சேரி கூட்டத்தில், கொள்கை எதிரி பா..கவுடன் கூட்டணி வைத்திருக்கும் முதல்வர் ரங்கசாமி அவர்களின் அரசாங்கத்தைப் பற்றி விமர்சிக்காமல் அங்கும் தி.மு.கவை விமர்சிக்கிறோமே, நம் நிலைப்பாடு தான் என்ன என்று உங்கள் கட்சி ஆலோசனைக் கூட்டங்களில் நீங்கள் கேட்டதுண்டா? அப்படி கூட்டங்கள் நடக்கிறதா?

நான் குறிப்பிட்டது போல், நீங்களோ உங்கள் தலைவரோ அரசியலிலும் ரஜினியைப் பின்பற்றலாம். அவர் கட்சித் தொண்டர்களுக்கு என்று சில விதிகளை அறிமுகப்படுத்தினார். அதெல்லாம் நல்ல விஷயங்கள் தான், அதை நீங்கள் அப்படியே பின்பற்றலாம்.

.வெ.க. என்ன செய்யும் என்பதைப் பற்றி நீங்கள் இன்னமும் பேசத் தொடங்கவில்லை. அதைத்தான் உங்கள் பிரதான எதிரியான ஸ்டாலின் அரசு ஆதரவாளர்கள் கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். “ஆட்டத்தில் இல்லாதவர்களை விமர்சிக்கத் தேவை இல்லைஎன்கிறார் உங்கள் தலைவர்.

 தனியாக நின்றால் உங்கள் கட்சி எத்தனை இடங்களில் மூன்றாவது இடத்தைப் பிடிக்கும் என்று ஒரு சின்ன சர்வே எடுத்து இருக்கிறீர்களா? ஆட்டத்தில் நீங்கள்தான் லீக் ஆட்டங்கள் ஆடித் தகுதி பெற்று வர வேண்டும், மற்றவர்கள் நேரடியாக உங்களை ஃபைனலில் சந்திக்கும் அளவில் தான் இருக்கிறார்கள்.

நீங்கள் உங்கள் சினிமா சண்டைகளைத் தவிர்ப்பது பற்றியும், கட்சி அளவில் இருக்க வேண்டிய அறிவார்ந்த ஆலோசனையின்மை பற்றியும், இன்னமும் ஒரு முறையான அடிமட்ட வலையமைப்புகள் இல்லாதது பற்றியும் சிந்திக்க வேண்டும். உங்கள் தலைவரிடம் இருக்கும் சில முரண்பாடுகளைப் பற்றிய கேள்விகளையும் நீங்கள் எழுப்ப வேண்டும்.

2016-ம் ஆண்டு தேர்தலில், தி.மு..வுடன் தே.மு.தி. கூட்டணி பேச்சுவார்த்தை என்கிற செய்தி வெளியான பொழுது, தே.மு.தி..வினரிடம் ஒரு அதிருப்தி வெளிப்பட்டது. “அவர்களை எதிர்த்துத் தானே கட்சி தொடங்கினோம், நம் மண்டபத்தை இடித்தவர்கள், வடிவேலுவை வைத்து நம்மை விமர்சித்தவர்கள்என்று தலைமை பற்றி வந்த செய்திக்கு எதிராக அடிமட்ட அளவில் ஒரு அதிருப்தி உணரப்பட்டது. அப்படி உங்கள் தலைமையிடம் வெளிப்படும் குறைகளைச் சுட்டிக்காட்டும் அளவிற்கு உங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்.

இதையெல்லாம் செய்யாமல் இன்னமும் மோசமான தனிநபர் தாக்குதல் செய்வதில் பூரிப்பு அடைந்து கொண்டிருந்தீர்கள் என்றால், மூன்றாவது இடமும் கூடச் சாத்தியமில்லாமல் போகலாம். உங்கள் தலைவரின் செல்வாக்கை வீணடித்து விடாதீர்கள்.அது கடுகளவேனும் தமிழகத்தின் நலனுக்கு பயன்படட்டும்.என்னுடைய முந்தைய ஒரு பதிவை படித்த என் நண்பர் ஒருமுறை சொன்னார், “நீ அவர்களுக்கு இத்தனை விளக்கம் கொடுத்து கொண்டு இருக்கிறாய், அவர்கள் படிக்கவும் மாட்டார்கள், படித்தால் புரிந்து கொள்கிற அறிவும் அவர்களுக்கு ( .வெ..விற்கு) கிடையாது என்று. நூற்றில் ஒருவர் படிப்பார் புரிந்து கொள்வார் என்கிற குருட்டு நம்பிக்கையில் தான் இதை எழுதினேன். இது எப்படி புரிந்துகொள்ளப்பட்டது என்பதற்கு காலம் பதில் சொல்லும்.

 

Error happened.
Exit mobile version