கதிர் விஜயம்

களத்தை நாம் ஏன் நா.த.க. த.வெ.க என்று மாற்றக்கூடாது?

 

இப்படியொரு தலைப்பில், இப்பொழுது எழுதும் இந்தக் கட்டுரையை நான் எழுதுவேன் என்று நானே கூட இரண்டு நாட்களுக்கு முன்புவரை நினைத்ததில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு என்ன நடந்தது? ஒன்றும் நடக்கவில்லை.

பள்ளி சென்ற பிள்ளை வீட்டுக்கு வரவில்லை என்ற புகாரையடுத்து ஒன்றும் நடக்கவில்லை. அஜித்குமார் மரணத்திற்குப் பின் காவல் மரணங்கள் நிகழாமல் இருக்க என்ன நடந்திருக்க வேண்டுமோ அது ஒன்றும் நடக்கவில்லை. ஊழல் வழக்குகள்ஒன்றும் நடக்கவில்லை.

இப்படி ஒன்றுமே நடக்காத ஒரு காலையில், எனக்கு இப்படியொரு எண்ணம் தோன்றியது. why not? ஆனால், எனக்கு இப்படித் தோன்றும் என்று நானே கூட நினைத்தது இல்லை.

நாம் தமிழர் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்தே அவர்களின் சில கருத்துக்கள் தவிர்த்து, பல விஷயங்களில் நாம் மாறுபட்டு இருக்கிறோம். நிச்சயமாக எந்தக் காலத்திலும் கரைசேராத ஒன்றை ஒருவர் தூக்கிக்கொண்டு வந்திருப்பதற்கு காரணம், திராவிட கட்சிகளுக்கு எதிரான வாக்குகளை சிதறடிப்பதற்கு மட்டும்தான் என்று நாம் நம் நண்பர்களிடம் சொல்லி வந்தது உண்டு.

மனிதன் பிறந்த காலத்தில் இருந்து அவன் எப்போதும் இடம்பெயர்ந்து கொண்டுதான் இருந்து வந்திருக்கிறான். அதோடு, இங்கே பொதுவில் ஒன்று எல்லோரையும் சென்றடைய அது எல்லோருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும்.இவரோ புலம்பெயர்ந்தவர்களை புண்படுத்தும் படி உணர்ச்சிகளை தூக்கிக்கொண்டு வந்தார். பொதுமை என்பது அங்கேயே அடிபட்டு போனது.

அடிப்படையில், நாம் தமிழர் தொடங்கிய காலத்தில், கடவுள் இல்லை என்றார்கள்;பின்னர் முப்பாட்டன் முருகன் என்றார்கள்; பின்னர் நிலத்திற்கான தெய்வங்கள் எல்லாம் தமிழில் இருக்கிறதே என்றதும், நாங்கள் சைவர்கள், ஆனால், இந்துக்கள் இல்லை என்றார்கள்; அந்தணர்கள் தமிழர்கள் இல்லை என்றார்கள். இப்படி அவர்களின் சில கருத்திலேயே அவர்களால் நிற்க முடியாது இருந்தாலும் சில விஷயங்களில் அவர்களின் கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளும்படியாகவே தான் இருந்தது. புலம்பெயர்தல், உயிர்களின் இயல்பாக இருக்கின்ற பொழுது, தமிழர் என்கிற உணர்ச்சியை ஊட்டி கூட்டம் சேர்க்கும் பொழுதே, அங்கே ஜாதி வாரியாக ஒரு மறைமுக உணர்வு வந்து நின்றது. கடவுள் இல்லை, நாங்கள் இந்துக்கள் இல்லை என்றதும், இந்து வெறுப்பாளர்களும் இந்துக்கள் அல்லாதவர்களும் மத ரீதியான உணர்வோடு அண்ணன் பின்னால் சென்றார்கள். திடீரென்று ஒரு நாள், தமிழர்கள் தாய் மதமான சைவத்திற்குத் திரும்ப வேண்டும் என்றதும் மத உணர்வால் அவர் பின்னால் சென்றவர்கள் அவரைச் சங்கி எனச் சுட்டி அல்லையில் போட்டு மிதிக்க தயாரானார்கள்.

இங்கே அரசியல் கட்சிகளும் தலைவர்களும் எல்லோருக்கும் பொதுவானவர்களாக இருக்க வேண்டும். தெலுங்கர்கள் மலையாளிகள் என்று இருக்கின்ற இந்தப் பெரும் நிலத்தில், ஒரு சாராரை மட்டும் அழைப்பது உணர்ச்சித் தீவிரத்தால் கூட்டத்தை பிளவுபடுத்தும் முயற்சியாகத்தான் நாம் இதுவரை பார்த்து வந்திருக்கிறோம். இப்போதும் அதில் நமக்கு மாற்றுக் கருத்து ஒன்றும் இல்லை.

இந்த நாம் தமிழர் இயக்கம், அதிகமாக மூன்றாவது பெரும் பலம் கொண்ட தேர்வுகளை அல்லது தலைவர்களை அல்லது கட்சிகளைத்தான் பெரிதும் சாடிவந்திருக்கிறது.

இவர்கள் திராவிட கட்சிகளுக்கு எதிராகத் தமிழர்களை மட்டும் இணைத்துக்கூட ஒரு கூட்டணியை உருவாக்கி சரியான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்று இப்போதும் வரை நினைக்கவில்லை.அதற்கு வாய்ப்பு இருந்த காலங்களில் அதை செய்யவும் இல்லை.

விஜயகாந்திற்குக் கிடைக்காத ஊடக வெளிச்சம் இப்படியான ஒரு கட்சிக்கு ஆரம்பம் தொட்டே கிடைத்து வந்தது. ஒப்பீட்டளவில் அதிக வாக்கு சதவீதக் கட்டமைப்பையும் பணபலமும் கொண்டிருந்த  விஜயகாந்தை விட கட்சியை இன்னும் அதே திறனோடு நடத்த இவர்களுக்குப் பணம் வந்து கொண்டே இருக்கிறது. இதெல்லாம் அவர்கள் மேல் இருக்கும் விமர்சனம். நான் மீண்டும் சொல்கிறேன், அவர்கள் கட்சியால் ஓட்டைப் பிரிக்க மட்டும்தான் முடியும் அந்த வேலையைத்தான் எல்லாத் தேர்தலிலும் செய்து திராவிட கட்சிகளுக்கு மறைமுகமாக ஒரு நன்மையை இவர்கள் செய்து கொண்டிருக்கிறார்களோ என்கிற சந்தேகமும் விமர்சனமும் எனக்கு இப்போதும் இருக்கிறது.

ஆனாலும் என்ன? ஏன் களம் தி.மு.. .தி.மு. என்றில்லாமல் நா... .வெ. என்றிருக்கக்கூடாது? அது எப்படி நடக்கும் என்று கேட்காதீர்கள் நீங்களும் நானும் தான் நடத்த வேண்டும்.

நாம் இந்தக் குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக்கொண்டிருப்பதை நிறுத்த வேண்டும். தி.மு. இல்லையென்றால் .தி.மு. தான் வரும் என்று நினைக்காதீர்கள். நீங்களும் நானும் வாக்களிக்காமல் அது எப்படி நடக்கும்.

சரி! சீமான் மீது அத்தனை விமர்சனங்கள் சொல்லி, இருந்தாலும் சீமானை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நீ சொல்வதைக் கூட ஏற்றுக்கொள்ளலாம் விஜய் மீது உனக்கு விமர்சனம் இல்லையா? விஜயைப் போய் எப்படி ஏற்கச் சொல்கிறாய் என்று கேட்பீர்கள்.

நிச்சயமாக எனக்கு விஜய் மீது ஆயிரம் விமர்சனம் இருக்கிறது. இன்றைக்கு மனவலிமை இல்லாத விஜயை ரஜினியோடு ஒப்பிட்டு ரஜினியை விட விஜய் மனவலிமை உடையவர் என்று பேசியதைக் கேட்டு விமர்சனப் பார்வையைத் தாண்டிய கோபம் இருக்கிறது. கலைஞர், ஜெயலலிதா இருவரையும் பற்றி அவர்கள் இருந்த மேடையிலேயே விமர்சனம் வைத்த ரஜினியின் மனவலிமை பற்றி கரூர் பிரச்சனைக்குப் பின்னர் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருந்த இவர்கள் பேசுவதெல்லாம் நகைச்சுவையாகவும்தான் இருக்கிறது.

பேச வேண்டும் என்பதற்காகவே லியோ வெற்றிவிழா கொண்டாடி அதில் ரஜினியைக் கேலி பேசியது இன்னும் நினைவில் இருக்கிறது. மக்கள் தொடர்புக்குழுவை வைத்து இவர்கள் செய்த வேலைகள் கட்டமைத்த பிம்பங்கள் இவை எதையும் நான் மறுக்கவில்லை.

என்னளவில், இவர்கள் மீது தனிச் சீற்றம் இருந்தாலும், தி.மு. .தி.மு. என்றிருப்பது ஏன் .வெ.. நா.. என்று மாறக்கூடாது என்று நாம் நினைக்கப் பல காரணங்கள் இருக்கிறது.

விஜய் வருமானத்தை மறைத்தார் வரி ஏய்ப்பு செய்தார் என்கிறோம். இது இந்திய சமூகத்தின் பழக்கமாக இருக்கிறது தானே! ஒரு சொத்து வாங்கப்போனால், நாம் மதிப்பைக் குறைத்துத்தான் பதிவு செய்யப் பார்க்கிறோம். மாத சம்பளம் வாங்குகிறவர்கள் தவிர்த்து, மற்ற வழிகளில் வருமானம் ஈட்டும் யார்தான் இங்கே சரியான வருமானத்தைக் காட்டியிருக்கிறார்கள். இப்படிச் சமூகத்தில் இருந்து வருகிற ஒருவர் வருமானத்தைக் குறைத்துக் காட்டியதை இந்த சமூகமே குற்றம் சொல்வது நகைப்பாக இல்லை!

திருடர்களில் ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க வேண்டிய கட்டாயத்தில், குறைந்த திருடனைத் தேர்ந்தெடுப்பதுதான் புத்திசாலித்தனம்.விஜய் வரி ஏய்ப்பு செய்ததை நாம் எந்த வகையிலும் நியாயப்படுத்தவோ, ஆதரிக்கவோ இல்லை. ஒரு தலைவருக்கான தகுதியில் அது மிகப்பெரிய குறைபாடுதான். ஆனால், பல ஆயிரம் கோடி மக்கள் பணத்தை அதிகாரத்தைப் பயன்படுத்திக் கொள்ளையடிக்கும் ஊழல் அரசியல்வாதிகளோடு ஒப்பிடுகையில், இது தனிப்பட்ட ஒருவரின் நிதி சார்ந்த குற்றம்

மத்திய அரசாங்கம் சமீப காலங்களாகக் கொண்டு வந்த கட்டுப்பாடுகள், இப்படி வருமானத்தைக் குறைத்துக் காட்டுகிறவர்களுக்கு நிறைய நெருக்கடிகளைக் கொடுக்க ஆரம்பித்து இருக்கிறது. சட்டம் இன்னும் மேம்படும்.இந்த நிலை மாறும்.ஆனால், ஊழலை எப்படி மாற்றுவது?!

விஜய்க்கு எதிராக இருக்கின்ற கட்சிகளில் இந்த வருமானம் சார்ந்த விஷயங்களில் யார் யோக்கியர்? அடுத்தவர் பையிலிருந்து எடுப்பதை விட, நான் குறைவாகத்தான் வைத்திருக்கிறேன் என்று சொல்வது ஒப்பீட்டளவில் சிறிய குற்றம்தான்.

விஜய் மனைவியை வீட்டை விட்டு அனுப்பி விட்டார், த்ரிஷாவுடன் இருக்கிறார் என்கிறீர்கள். இருக்கட்டுமே! எல்லார் வீடுகளிலும் சண்டைகள் இருந்துகொண்டுதான் இருக்கிறது. இங்கே யாரும் ராமனும் இல்லை. இது ஒருவரின் தனியுரிமை சார்ந்த விஷயம். இந்த விஷயத்தை விஜய் தரப்பும் அவரின் ஆதரவாளர்களும் கையாண்ட விதத்தை நாம் இங்கே ஆதரிக்கவில்லை என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லிக்கொள்கிறோம்.

விஜயின் விவாகரத்துச் செய்தியைப் பொறுத்தவரையில், அது தனிப்பட்ட குடும்ப விவகாரமும் விருப்பு வெறுப்பும் சார்ந்த பிரச்சனை, சில வருடங்களுக்கு முன்னர் அமைச்சர் ஒருவரைப் பற்றி ஒரு வீடியோ வெளியானது, அது குடும்பப் பிரச்சனையோ, தனிப்பட்ட விருப்பு வெறுப்போ சார்ந்தது அல்ல அது பாலியல் சுரண்டல் (sexual exploitation of women). ஆனால், அந்த வீடியோ வெளியானதற்குப் பின்னான தேர்தலில் அவர் வெற்றி பெற்றார், இப்போதும் அதிகாரத்திற்கு நெருக்கமாக இருக்கிறார்.

இதை நாம் இங்கே எடுத்துச் சொல்ல காரணம், வாக்காளர்களாக நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?! நாம் எப்படியான வாக்காளர்கள்?! என்கிற சிந்தனை தூண்டுவதற்கு மட்டுமே. மக்கள் இப்படித்தான் என்று பேசாதீர்கள். நீங்களும் நானும் சேர்ந்துதான் மக்கள் என்கிற போர்வைக்குள் இருக்கிறோம்.நாம் தான் சில நேரங்களில் ஒரு கண்ணை மூடிக் கொள்கிறோம்.

நான் எப்போதும் நண்பர்களிடம் பேசும் பொழுது, திராவிட கட்சிகளுக்கு மாற்று வர வேண்டும் என்றால், மூன்றாவது பெரிய சக்தியை நாம் ஆதரிக்க வேண்டும் என்றுதான் பேசி வந்து இருக்கிறேன். இப்பொழுது தோன்றுகிறது, அது ஏன் அப்படி இருக்க வேண்டும். இரண்டு திராவிட கட்சிகளையும் நாம் ஏன் மூன்றாவது நான்காவது இடத்திற்குத் தள்ளக்கூடாது.

விஜய்க்கு அரசியல் தெரியாது, ஆமாம் தெரியாது. விஜய்யோடு இருக்கிற கூட்டத்திற்கு ஒன்றுமே தெரியவில்லை. ஆம் தெரியவில்லை.

நானுமே கூட ஏற்றுக்கொள்கிறேன், நாளை தேர்தல் அறிவித்தால், 234 தொகுதிகளிலும் இண்டு இடுக்குகளிலும் எல்லாம் வேலை செய்யவும், எல்லா வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குச்சாவடிகளை கையாள முடிகிற அளவிற்கு ஆட்களை நியமனம் செய்யும் அளவு கட்டுமானம்கூட .வெ..வில் இல்லைதான்.

ஆனால், நம் முன்னால் இருக்கின்ற வாய்ப்பு இதுதான். தி.மு.. தலைமையில் ஒரு கூட்டணி .தி.மு. தலைமையில் ஒரு கூட்டணி என்று உறுதியாகி ஆகியிருக்க நிலையில், மூன்றாவது நான்காவது வாய்ப்பாக நம்மிடம் இருப்பது .வெ..வும் நா...வும் தான். எதார்த்தத்தில் இவர்கள் இந்தத் தேர்தலில் கரைசேர வாய்ப்பு இதுவரை இல்லைதான். அந்த வாய்ப்பை நாம் ஏன் ஏற்படுத்தக்கூடாது?!

revolution என்றால் புரட்சி என்று மொழிபெயர்த்தவர், ஒன்றை அப்படியே புரட்டிப் போடுவதுதான் revolution என்றால் புரட்சி என்பதுதான் சரியாக இருக்கும் என்று புரட்சி என்று மொழிபெயர்த்தார் என்று கேட்டிருக்கிறோம். நாம் ஏன் களத்தை அப்படிப் புரட்டிப் போடக் கூடாது. இங்கே யார் தான் கடைந்தெடுத்த நல்லவர்கள்?

சிலர் கேட்கலாம், பா.. நல்ல கட்சி தானே? என்று; அண்ணாமலை நல்ல தலைவர் தானே என்று அவர்கள்  நினைக்கலாம். சரி! அண்ணாமலை நல்ல தலைவர்தான். பா.. பல மாற்றங்களை தைரியமாகக் கொண்டு வந்திருக்கிறதுதான். அதே அந்த நல்ல பா...விடம் நாம் கேட்க வேண்டிய சரியான கேள்விகளை இங்கே யாருமே கேட்கவில்லை, புலி வருது புலி வருது என்று ஏமாற்றிய சிறுவன் உண்மையில் புலி வருது என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள். இங்கே எதற்கெடுத்தாலும் பொத்தாம் பொதுவாக பா.. மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் அப்படியானதாகத்தான் இருக்கிறது. 15 லட்சம் போடுகிறேன் என்றார் அதை யாரும் கேட்டீர்களா என்பது கேள்வியாக இருக்கும் பொழுது, கருப்புப் பணத்தை மீட்டால் ஒவ்வொருவர்  கணக்கிலும் 15 லட்சம் போட முடியும் என்றுதான் சொன்னார் என்று பதில் சொல்லி அவர்கள் நழுவிக்கொள்கிறார்கள்.உண்மைக்கு மாறான விஷயங்களை சொல்லி தவறான கேள்விகளை வைத்துக்கொண்டு இருக்கிறோம்.

மோடி, கருப்புப் பணம் வைத்திருப்பவர்களைத் தூங்க விட மாட்டேன் என்றார் நாம் அதைப்பற்றித்தானே கேட்டிருக்க வேண்டும். இங்கிருந்து சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள். இதுவரை கொண்டுவரப்பட்ட மாற்றங்கள் சட்டத்திருத்தங்கள் நடவடிக்கைகளுக்குப் பின்னர், ஊழல் மற்றும் கருப்புப் பணத்தை நாம் எவ்வளவு கட்டுப்படுத்தியிருக்கிறோம் என்கிற கேள்விகளை எழுப்பியதாகத் தெரியவில்லை. நிரூபணம் செய்ய முடியாத ஊழல் செய்கிறவர்கள் எப்படி அப்படிக் கேட்பார்கள்?

ஏர்செல் ஊழல், சன் நெட்வொர்க் ஊழல், 2ஜி ஊழல் என்று இன்னும் பல வழக்குகள் நிலுவையில் தான்  இருக்கிறது, தினகரன் மீது வழக்கு இருக்கிறது. அவரோடுதான் கூட்டணி வைத்திருக்கிறது இந்த நல்ல பா...

அமைச்சர்கள் மீது வழக்கு இருக்கிறது ஆதாரம் இருக்கிறது என்றெல்லாம் அண்ணாமலை பேசினார். ஆனால், ஒன்றும் நடந்தபாடில்லை. .தி.மு. முன்னாள் அமைச்சர்கள் மீது இந்தத் தீவிரத்தை பா... ஆரம்பம் தொட்டே காட்டவில்லை. செந்தில் பாலாஜி நிரபராதி என்று நாம் சொல்லவில்லை. ஆனால், .தி.மு..வில் இருந்திருந்தாலோ அல்லது அண்ணாமலை பற்றிப் பேசாமல் இருந்திருந்தாலோ இந்தத் தீவிரம் அவர் மீது காட்டப்பட்டிருக்குமா என்பது சந்தேகம்.நல்ல கட்சி பா.ஜ.க. ஊழல் கறைபடியாத பா.ஜ.க. தெரிந்தே 10 வருடங்களுக்கு மேலாக இந்த ஊழல் வழக்குகளை உருட்டி கொண்டு இருக்கிறது.சரி!சம்பந்தப்பட்ட துறைகள் பலப்படுபட்டு இருக்கிறதா என்றால் அதுவும் விவாத்திற்குரியதாக இருக்கிறது.

ஒடுக்கப்பட்டவர்களுக்காகக் கட்சி தொடங்கிய திருமா, தேர்தல் செலவுகளுக்கும் வேலைகளுக்கும் கூட திராவிட கட்சிகளைச் சார்ந்து இருக்கிறார் என்பதை நாம் மறுக்க முடியுமா? இப்படிச் சூழலில் அவர் தேர்தலில் இருந்து விலகி ஒரு இயக்கமாக மக்களுக்குப் பணியாற்றி ஒரு பலத்தை வளர்த்துக்கொண்டு தேர்தலைச் சந்திக்கலாம். மாறாக அவரோ தேர்தல் ஆதாயங்களுக்காக மத வெறுப்புகளைப் பேசிக்கொண்டிருக்கிறார். ஏன் ஒடுக்கப்பட்டவர்களுக்குப் பாரம்பரியம் இல்லையா? நம்பிக்கை இல்லையா?அதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் மதம் மாற்றும் போதகர் போல் பேசிக்கொண்டு இருக்கிறார். தம்பி அவனைப் போல் நீ உயரவேண்டும் என்று சொல்ல இயக்கம் ஆரம்பித்தீர்களா மத வெறுப்பு பேசி தேர்தல் ஆதாயங்களுக்காகச் சில கட்சிகள் மீதான விமர்சனத்தைப் பட்டும் படாமல் எடுத்து வைக்க வந்தீர்களா?

கம்யூனிஸ்ட்டும் அதே கதைதான், மன்மோகன் தலைமையிலான அரசு அமைய மக்களுக்கான சில திட்டங்களை முன்மொழிந்து இதையெல்லாம் செய்யுங்கள் ஆதரவு தருகிறோம் என்ற கம்யூனிஸ்ட், தமிழகத்தில் தி.மு..வின் பி டீமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதே மத எதிர்ப்பு; தி.மு. அனுதாபம்; அம்பேத்கர் குப்பையில் போட ஆரிய படையெடுப்புக் கதைகளைப் பேசிக்கொண்டிருக்கிறது. தேர்தல் அரசியலைத் தாண்டி மக்கள் பணி செய்து கொண்டிருந்த கம்யூனிஸ்ட்களில் கடைசித் தலைவரான நல்லகண்ணு அவர்களும் மறைந்து விட்டார். அவர் மறைவுக்கு முன்னமே கம்யூனிசம் என்கிற சித்தாந்தம் தமிழகத்தில் மறைந்து போனது.போக்குவரத்து தொழிலாளிகள், தூய்மை பணியாளர்கள் ஆசிரியர்கள் என்று உழைக்கும் வர்க்கத்தின் உரிமை குரல்கள் ஒலிக்கும் இடங்களை விட தி.மு.கவின் கருத்துரைகள் பரப்பும் இடங்களில் தான் இப்போதெல்லாம் கம்ம்யூனிஸ்ட்களின் குரல் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

நாம் இங்கே, நா...வையும் .வெ..வையும் நிரந்தர முதலமைச்சர்; நிரந்தர எதிர்க்கட்சித் தலைவர் என்று நிரந்தரமாக ஆதரிக்கச் சொல்லவில்லை. இந்த ஒரு தேர்தலில் நாம் அதைச் செய்வதால் என்ன கெட்டு விடப்போகிறது என்றுதான் நாம் கேட்கிறோம். ஆனால், இந்தத் தேர்தலில் நாம் இதைச் செய்யவில்லை என்றால் இனி வரும் தேர்தல்களில் அந்த வாய்ப்பு இல்லாமல்கூடப் போகலாம். சீமான் வயது 59, அடுத்த தேர்தலில் 64 வயதாகி இருக்கும். காலம் மாறிக்கொண்டே இருக்கும். விஜய் ஒரு தேர்தலில் வெற்றி அடையவில்லை என்றால் அடுத்த தேர்தல் வரை அவரால் அரசியல் செய்ய முடியாது அப்படி நிலையில் அவர் இருக்கிறார். இரண்டு கட்சிகளிலும் இரண்டாம் நிலை மூன்றாம் நிலை ஆளுமைகள் இல்லை.

சீமானை நீங்கள் அண்டப் புளுகன் என்று சொல்லுங்கள் விஜய்யை ஒழுக்கமற்றவன் வரி ஏய்ப்புச் செய்தவன் என்று சொல்லுங்கள். சொல்லிவிட்டு அப்படியே திரும்பி நமக்கிருக்கும் மற்ற வாய்ப்புகளைப் பாருங்கள்.

நான் மீண்டும் சொல்கிறேன், இவர்கள் இருவரும் திராவிட கட்சியின் நீட்சியாக பல அர்த்தமற்ற கருத்துக்களையும் தேசிய உணர்வுக்கு எதிரான செயல்பாடுகளையும் கொண்டிருந்தாலும் கூட ஒரு தேர்தலில் நாம் தி.மு..வா .தி.மு..வா என்று இல்லாமல் நா...வா .வெ..வா என்று புரட்டிப் போட வேண்டும். வடக்கில் நம்மைப் போன்று எந்த மாநிலமும் உள்ளே வெளியே விளையாடவில்லை மேற்கு வங்கத்தைத் தவிர்த்து அநேகமான மாநிலங்களை இரண்டுக்கும் மேற்பட்ட கட்சிகள் ஆட்சி செய்திருக்கிறது.

வாக்காளர்கள் கட்சிகளைப் புரட்டிப் போட்டுக் கொண்டே இருந்தால்தான், கட்சிகளை மக்கள் ஆட்டுவிக்க முடியும் இல்லையென்றால் கட்சிகள் எப்போதும் போல் மக்களை ஆட்டுவித்துக் கொண்டிருக்கும்.

இதில் கவனிக்க வேண்டியது, மற்ற கட்சிகளை பின்பற்றுகிறவர்களை விட இந்த கட்சிகளை பின் பற்றுகிறவர்களிடம் அரசியல் ஆதாயம் தேடும் எண்ணம் இல்லை.

ஒரே ஒரு முறை முட்டாள்தனமாகவே இருந்தாலும் மாற்றத்தை நோக்கி ஒரு அடி எடுத்து வைப்போமே!

மாற்றத்தை முன்னெடுக்க நீங்கள் முடிவு செய்திருந்தால், இந்த கட்டுரையை உங்கள் தனிப்பட்ட தேர்தல் பரப்புரையாக பரப்புங்கள். மனதில் வைத்துக்கொண்டும் பரப்பலாம்.

 

Error happened.
Exit mobile version