கதிர் விஜயம்

மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம் (பகுதி-11) -விதி செய்யும் மதி.

வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும்.

பகுதி-9இல் நம்முடைய எண்ணமும் முயற்சியும் தான் நம் நிலையை தீர்மானிக்கிறது என்று பார்த்தோம். அப்படியென்றால் விதிப்படி தான் எல்லாம் நடக்கும் என்று சொல்கிறார்களே அந்த விதி என்றால் என்ன? அது எப்படி இயங்குகிறது? என்று பகுதி-10இல் பார்த்தோம். அதோடு,  பகுதி-10இல் நம்முடைய விதியை (destinyஐ) நாமே உருவாக்க முடியும் என்று சொல்லியிருந்தோம்.

இதையெல்லாம் படித்த நம் வாசகர்கள், என்னுடடைய விதியை நானே எப்படி தீர்மானித்துக்கொள்வது என்று கேட்கிறார்கள்.

நம்முடைய லட்சோபலட்சம் வாசகர்களில் ஒரு ஆயிரம் வாசகர்களிடம் இருந்து வந்த மின்னஞ்சல் மூலமாக வந்த கேள்விகளில் அதிகம் பேர் இதே கேள்வியை கேட்டு இருந்தார்கள்.

இப்படி எல்லாம் எழுத வேண்டும் என்று ஒரு ஆசை.

நம் விதியை(destiny) நாமே எப்படி உருவாக்கிக்கொள்ள முடியும்?

நம்முடைய விதியை (Destiny ) நாமே உருவாக்கிக்கொள்ள நீங்கள் விதியை (rules of nature)புரிந்து கொள்ள வேண்டும். விதியை புரிந்து கொள்ள நீங்கள் இந்த தொடரின் முந்தைய பகுதியை படித்திருக்க வேண்டும்.

இயற்கையின் விதிகளை மீறி நாம் எந்த விதியையும் உருவாக்கிட முடியாது.

இரணியன், இராவணன்,வாலி போன்றவர்கள் இயற்கை விதிகளை மீறிட பார்த்தார்கள். ஆனால், அவர்களின் முயற்சிக்கேற்ப பலன் அவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பது இயற்கையின் விதி.

விதிகளை மீறிடப் பார்த்த அவர்களுக்கு இயற்கையின் விதிகளுக்கு உட்ப்பட்டு முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்கின்றது.

இராவணன்,இரணியன்,வாலி இவர்கள் என்ன செய்தார்கள் இவர்களுக்கு என்ன கிடைத்தது?அதற்கு முன்னர் வேறு ஒரு கதையைப் பார்க்கலாம்.

ஒரு பெரிய மகான்,  தன்னுடைய சீடர்களுடன் கடல் போன்ற பிரமாண்டமான ஒரு ஏரியின் மறுகரையை அடைவதற்கு படகில் ஏறுகிறார்.

எல்லோரும் ஏறிவிட்ட பின் அந்த படகு புறப்படுகிறது, படகு புறப்படுவதற்கு வெகு காலம் முன்னதாகவே அந்த மகானுடனான அந்த சீடர்களின் பயணம் தொடங்கியிருந்தது. அந்த மகானின் ஆன்மீக போதனைகளை அருகில் இருந்து கேட்டு பழகிய சீடர்கள் அவர்கள்.

அவர்களின் மொத்த பயண தூரத்தில் இந்த படகு பயணம் மிகவும் சிறியது.

இந்த படகு பயணத்தின் பொழுது, மகான் உறங்கி விடுகிறார்.அவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பொழுது, பலத்த காற்று வீசுகிறது, அவர்களின் படகு நிலை தடுமாறுகிறது.  சீடர்களை பதற்றம் தொற்றிக்கொள்கிறது.செய்வதறியாது இருந்த அந்த மகானை எழுப்புகிறார்கள்.

“ஆசானே! நாங்கள் மூழ்கிவிடுவோம் என்கிற அக்கறை கூட உங்களுக்கு இல்லையா” என்று கத்துகிறார்கள்.

உறக்கத்தில் இருந்து எழுந்த அவரிடம் எந்த பதற்றமும் இல்லை,

அவர், அதட்டல் தொனியில் சில வார்த்தைகளை மட்டுமே உச்சரிக்கின்றார்.

சத்தமிடாதே! அமைதியாய் இரு!

அவர் இந்த வார்த்தைகளை உச்சரித்தற்கும், காற்று அமைதியானதற்கும் சரியாக இருந்தது. அவர் அதே அதட்டல் தொனியில் இன்னும் சில வார்த்தைகளை உச்சரிக்கின்றார்.

ஏன் இத்தனை பயம் கொண்டீர்கள்? உங்களுக்கு ஏன் நம்பிக்கை இல்லாமல் போனது?

ஆச்சரியத்தில் இருந்த  சீடர்கள்,  இவர் சொன்ன மாத்திரத்தில் காற்றும் அலையும் அமைதியாகி போனதே என்று தங்களுக்குள் பேசிக்கொள்கிறார்கள்.காட்சி இதோடு முடிகிறது.

“சத்தமிடாதே! அமைதியாய் இரு! ஏன் இத்தனை பயம் கொண்டீர்கள்? உங்களுக்கு ஏன் நம்பிக்கை இல்லாமல் போனது?”

 இது மட்டும் தான் அவர் பேசிய வார்த்தைகள்.

உயிர் பயத்தில் எல்லோரும் பதற்றம் அடையத்தானே செய்வார்கள்.இந்த மகான், “ஏன் பயம் கொண்டீர்கள்?” என்கிறார். நாம் எப்பொழுதெல்லாம் பயம் கொள்கிறோம், வெற்றியின் மீது இருக்கும் ஆசை தான் தோல்வியைபற்றிய பயத்தை தருகிறது. நம்முடைய ஆன்மா இந்த உடலை விட்டுவிடக்கூடாது என்கிற ஆசை தான் இறப்பின் மீதான பயத்தை உண்டாக்குகிறது.

ஏன் பயம் கொண்டீர்கள்? என்கிற கேள்வியின் அர்த்தம், இத்தனை தூரம் என்னுடன் பயணம் செய்தபின்னும் கூட நீங்கள் இந்த உலக பற்றை விடவில்லையா? என்பதே.

இங்கு எல்லாமே நிலையற்றது. எதுவும் நீடித்து இருக்க போவதில்லை  . புயல் மழை என்று எதுவாகினும் சில நேரம் தான் என்பதை நீங்கள் நம்பவில்லையா? என்பதே “உங்களுக்கு ஏன் நம்பிக்கை இல்லாமல் போனது?” என்கிற கேள்வியின் அர்த்தம்.

இந்த சின்ன கதையில், அந்த மகான் உதிர்த்த வார்த்தைகளில் இருந்து நாம் புரிந்து கொள்ள இன்னும் நிறைய இருக்கின்றது.

அந்த மகான் தான் இயேசு. இது பைபிளில் சொல்லப்பட்டு இருக்கும் ஒரு காட்சி.

இந்த கதையை படித்த பொழுது எனக்கு ஒரு எண்ணம் தோன்றியது, “கடவுளே இறங்கி வந்து நமக்கு ஞானத்தை போதித்தாலும் அவர் magic செய்ய வேண்டும் என்று தானே நாம் எதிர்பார்க்கின்றோம்.”

நாம் இப்பொழுது படிக்கும் கீதை, பைபிள் இரண்டிலும் கவனிக்க வேண்டிய விஷயம், ஒன்று சமஸ்கிருதத்தில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது மற்றொன்று ஹீப்ரு மொழியில் இருந்து மொழிபெயர்க்கப்பட்டது.

நேரடியான தமிழ் நூல்களையே  கூட இன்னும் நாம் சரியான அர்த்தத்தில் புரிந்து கொள்ள முயற்சி தான் செய்து கொண்டு இருக்கின்றோம். அப்படியிருக்க மொழிபெயர்க்கப்பட்ட ஞான நூல்களை நாம் எப்படி முழுவதும்  புரிந்து கொண்டு  இருப்போம்.

நாம் படித்த பைபிளில் வரும் காட்சியின் படி, ‘இயேசு போதித்த ஞானத்தை விட்டுவிட்டு, புயலை இயேசு நிறுத்தி மேஜிக் செய்ய வேண்டும் என்றே அவர்களது சீடர்கள் எதிர்பார்த்தது போல் உள்ளது.’

நாமும் பல சந்தர்ப்பங்களில்,கடவுளிடம் அப்படியான மாஜிக்களையே எதிர்பார்க்கிறோம்.

ஒன்றுமே படிக்காமல், தேர்வெழுதிவிட்டு எப்படியாவது என்னை பாஸாக்கி விடு என்று வேண்டுகிறோம்.கடவுளைடைய rule book இன் படி அவர் இப்படியான வேண்டுதல்களை எந்த magic கொண்டும் சாத்தியப்படுத்த போவதில்லை.

கிருஷ்ணரையும் கீதையும் புரிந்து கொண்டவர்களுக்கு தெரியும், இறைவன் எந்த விதிகளுக்கு கட்டுப்படாதவன். இந்த பிரபஞ்சம் அவன் ஏற்படுத்திய விதிகளுக்கு உட்டப்பட்டு  இயங்குவதை சாட்சியாக இருந்து கவனித்து கொண்டு இருப்பவன்.அவனே இந்த பிரபஞ்சத்தின் நியதிகளுக்கு உட்டபட்டு தோற்றமெடுக்கும் பொழுது விதிகளுக்கு உட்பட்டே இயங்குகின்றான்.God himself abide by the physical laws created by him when he takes the physical form.

இயற்கை விதிகளுக்கு உட்பட்டு உங்கள் விதியை நீங்களே எப்படி உருவாக்குவது?

1. ஆன்மா, உடல், உயிர், உயிரற்ற ஜடம் என்று இந்த பிரபஞ்சத்தில் நீங்கள் என்னவாக இருந்து பயணித்தாலும் உங்களுடன் இறைவனும் பயணிக்கிறார் என்பதை முதலில் நம்புங்கள். (When you know, someone is watching your back you will have the courage to face anything).

2. நம்முடைய அறிவு, புயல் போன்ற வெளிப்புறச் சூழலால் உண்டாகும் கோபம், பயம், ஆசை இவைகளின் எடுக்கும் முடிவுகளும் நம்முடைய விதியை தீர்மானிக்க வல்லது.  ஒரு வகையில் நம்முடைய வினைப்பயன் படியே தான்  நம்முடைய அறிவு செல்லும் அந்த அறிவு செய்யும் செயல் தான் நம்முடைய அடுத்த நாளின் விதியை(destiny ) தீர்மானிக்கின்றது. இது நம்முடைய விழிப்புணர்வு இல்லாமல் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றது. இதை ஒரு இடத்தில் நீங்கள் உணர்ந்து அதிலிருந்து வெளியில் வர வேண்டும்.

3. உங்கள் விதியை தீர்மானிப்பதில் நீங்களோ கடவுளோ எந்த magicஉம் செய்ய முடியாது. அதனால் நீங்கள் நடக்க வேண்டும் காரியங்களுக்கான அவகாசத்தை கொடுங்கள்.அதற்கான அவகாசம் இல்லை என்றால், வினைப்பயனின் படி நடக்கப்போவதை ஏற்றுக்கொள்ளுங்கள்.

4. கீதையில் சொன்னதை போல் முடிவுகளை பற்றி எண்ணாமல் கடமையை ஆற்றுங்கள்.இறந்துவிடுமோ பிழைப்புமோ என்று முடிவுகளை பற்றிய கவலையோடு இருக்கும் யார் ஒருவராலும் புயலில் படகை செலுத்த முடியாது.

5. உங்களால் புயலை(external factors) கட்டுப்படடுத்த முடியாது.உங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் படகை கட்டுப்படுத்த நீங்கள் உங்கள் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அட்டல் பிஹாரி வாஜ்பாய் ஒரு முறை இப்படி சொன்னார்,”நீங்கள் உங்கள் நண்பர்களை மாற்றலாம். ஆனால், உங்கள் அண்டை வீட்டாரை(நாட்டாரை) மாற்ற முடியாது. அது போலவே நம்மை சுற்றியிருக்கும் அநேகமான விஷயங்களை நம்மால் மாற்ற முடியாது.நம் சுற்றத்திற்கும் ஏற்ப எப்படி இருக்க வேண்டும் என்பதை நம்மால் தீர்மானிக்க முடியும்.

6.முந்தைய பகுதியில் சொன்னது போல நீங்கள் பிறப்பதற்கு முன்னரே பெற்றோரின் வினைப்பயனின் படி  சில விஷயங்கள் தீர்மானிக்கப்பட்டு விடுகிறது.உங்கள் வாழ்க்கை ஒரு நதியில் ஒரு படகோடு தொடங்குகிறது என்றால் என்னிடம் கார் இல்லை என்று வருந்தாதீர்கள்.நதியின் ஆழத்தை உணர்ந்து படகை செலுத்த கற்றுக்கொள்ளுங்கள்.

இப்ப நான் என்ன பண்றேன்? இந்த மாதிரி கட்டுரை எல்லாம் இன்னும் சுருக்கமா எப்படி எழுதறது னு கத்துகிறேன்.ஹா! ஹா!

இந்த கட்டுரையை முடிப்பதற்கு, இராவணன்,இரணியன்,வாலி பற்றி பார்த்துவிடலாம். இறைவன், இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் ஒவ்வொரு உயிருக்கும் தேவையானது தேவையான நேரத்தில் கிடைக்கும்படியான ஒரு சிஸ்டம் ஐ உருவாக்கி வைத்து இருக்கின்றார். இங்கே நம் வினைகளுக்கேற்ற பலன்களே நமக்கும் படி செய்து இருக்கின்றார். இப்படியிருக்க இந்த மூவரும் இறைவன் மீதும் இறைவனின் சிஸ்டம் மீதும் நம்பிக்கையற்று (விசுவாசிக்காமல்),ஒவ்வொருவரும் இறைவனை வேண்டி extra fitting வரங்களை பெறுகிறார்கள்.

இராவணன், இறைவன் படைப்பில் மனிதனைத்தவிர யாராலும் எதனாலும் தனக்கு மரணம் நிகழக்கூடாது என வேண்டுகிறான். இங்கே ஆற்றல் பொருந்திய நம்மை சாதாரண மனிதனால் என்ன செய்து விட முடியும் என்று உதாசீனப் படுத்துகிறான்.இறைவன் படைப்பில் பலம் பொருந்தியவர் பலம் குன்றியவர் என்று எதுவும் இல்லை. மிக பெரிய கோலியாத்தை சிறுவன் தாவீது(david) வீழ்த்துகிறான்).இப்படியான அறிவாளித்தனமான வரத்தை பெற்றுவிட்ட படியால் நம்மை யாரும் அழிக்க முடியாது என்று செருக்கு அடைகிறான். இங்கே இராவணன்,இயற்கை விதிகளை  மறந்து போகிறான். சாதாரண மனிதனின் வாழ்க்கைக்கு குந்தகம் விளைவித்து அரச பதவி கூட இல்லாத ஒரு சாதாரண மனிதனால் போரில் கொல்லப்படுகிறான். அவன் கேட்டு பெற்ற வரம், அவனுடைய சாபமாக மாறுகிறது.

இரணியன், சகோதரனை கொன்றவனை பழி வாங்க (இயற்கை விதிகளுக்கு புறம்பாக)அழிவில்லாத வாழ்வை பெற வேண்டும் என்று அது கிடைக்காமல், மனிதன் மிருகம், தேவர்கள் என்று யாராலும் மரணம் நிகழக்கூடாது என்றும்,தரையிலோ வானத்திலோ மரணம் நிகழக்கூடாது என்றும் எந்த ஆயுதத்தாலும் மரணம் நிகழக்கூடாது என்று வரம் பெறுகிறான்.அவனுடைய நல்ல வினைகளுக்கான பலன்களை அனுபவித்து முடித்த பின், அவனுடைய வரம் சாபமாக மாறுகிறது. சகோதர பாசத்தால் ஏற்பட்ட பழி  உணர்வு, அதன் பின்னர் அவன் பெற்ற ஆற்றல், பிள்ளை பாசத்தால் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழக்கின்றது.தன்னுடைய பிள்ளையாக இல்லாமல் பிராகாதலன் போல் யார் நடந்து கொண்டு இருந்தாலும் ஒரே முயற்சியில் இரணியனால் அவர்களை கொன்றிருக்க முடியும்.பாசத்தால் ஏற்பட்ட பழி உணர்வில் அவன் செய்த வினைகளின் பயனாய் பாசத்தாலேயே அவன் கேட்டு பெற்ற வரத்தின் படி அவன் மரணம் சம்பவிக்கிறது.இந்த கதையை இன்னும் விவரிக்க வேண்டும் என்று ஆசை. ஆனால், போதும்.வாலி கதைக்கு வருவோம்.

இயற்கையோ கடவுளோ நம் எல்லோரையும் அவர் அவர் முயற்சியின் படியும் எண்ணங்களின் படியும் வினைகளின் படியுமே நடத்துகிறது.கடவுளின் முன்னால் அனைவரும் சமமே.இதில் கடவுளின் system மீது நம்பிக்கையற்ற வாலி யாரை எதிர்த்து போரிட்டாலும் அவர்களின் பாதி ஆற்றல் எனக்கு வேண்டும் என்று கேட்டு பெற்றது எத்தனை அநியாயம்.ஒரு வகையில் கோழைத்தனம், தன்னையும் கடவுளையும் நம்பாமல் ஒரு வரத்தின் மீது மட்டும் கொண்ட நம்பிக்கை நம்மை எதிர்த்து யாரும் எதுவும் செய்ய முடியாது என்கிற ஆணவம். இயற்கை வாலியின் எதிரியின் பின்னால் நிறுத்துகிறது. கண்ணுக்கு எட்டிய தூரத்தில் எதிரிகளே இல்லை என்று சொன்ன அரசியல் தலைவர்களின் எதிரிகள் அவர்கள் அருகிலேயே இருந்தது போல், வாழ்க்கையில் யாரையும் எதையும் நாம் outsmart செய்துவிட முடியாது.

ஆனால், அத்தனை கஷ்டப்பட்டு இந்த மூவரும் செய்த தவத்தின் பலனாகவே இன்று பேசப்பட்டு கொண்டு இருக்கின்றார்கள்.(this is how karma works).”நன்மையை செய்கிறவன் தீமையை அடைவதேயில்லை” -கீதை

கடவுள் ஏற்படுத்திவைத்திருக்கும் சிஸ்டத்தின் processor ஐ (அண்டத்தின் பேரறிவை) நாம் outsmart செய்துவிட முடியாது.இந்த design இல் நாம் நினைப்பது நடக்கும், கேட்பது கிடைக்கும். ஆனால், நாம் நம் வினைப்பயனின் படியே கேட்கவும் நடக்கவும் செய்கிறோம். so surrender yourself to god. Realize what you did. Accept the consequence of your past deeds. observe what you are doing. Control the things that are under your control. And do not try to control the things that are out of your control.

இன்னும் இந்த கட்டுரையை முடிக்க எனக்கு மனசே வரலை!பாத்து நடத்துக்கோங்க மக்கா! எதாவது கேள்வி இருந்தா editor@kathirvijayam.com க்கு அனுப்புங்க

Error happened.
Exit mobile version