தமிழக முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக்குழு நம் எல்லோர் கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது. நிச்சயமாக சர்வதேச நிபுணர்கள் அடங்கிய குழுவை அரசுக்கு ஆலோசனை வழங்க நியமிப்பது தொடர்பான தகவல் ஆளுநர் உரையில் இருந்தது போற்றி வணங்கி பாராட்டத்தக்கதே.

முன்னதாக, தி.மு.க.அவர்களின் 2021 தேர்தல் வாக்குறுதியில் 25வைத்து மற்றும் 26வது வாக்குறுதியில், “அ.தி.மு.க. அரசின் இயலாமையினால் மாநிலத்தின் கடன் சுமை அதிகரித்து இருக்கின்றது அதை சீர்திருத்தவும்.பொதுத்துறை நிறுவனங்களை சீரமைக்க அரசுக்கு ஆலோசனை வழங்க நிபுணர் குழு அமைக்கப்படும்” என்று தெரிவித்து இருந்தார்கள். அதன் தொடர்ச்சியாக சர்வதேச நிபுணர்கள் அடங்கிய குழுவை அரசுக்கு ஆலோசனை வழங்க நியமிப்பதிருப்பதும் அதனைத் தொடர்ந்து பல தரப்புகளின் பாராட்டடை பெற்றதும் குறிப்பிடத்தத்தக்கது.

197வது வாக்குறுதியின் படி சிறு குறு நிறுவனங்களை புதுப்பிக்க பொருளாதாரத்தை மேம்படுத்த தொழிலதிபர், வங்கி நிபுணர், நிதி நிறுவனங்கள் மற்றும் அரசுத் துறை அடங்கிய குழு அமைக்கப்படும் என்று தெரிவித்தன் படி அதுவும் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆளுநர் உரையில் குறிப்பிட்டு இருப்பதன் படி குழுவில் உள்ளவர்கள் விவரம் :

1) பேராசிரியர் பேராசிரியர் ரகு ராம் ராஜன்- முன்னாள் RBI கவர்னர்

2) பேராசிரியர் எஸ்தர் டாப்பலோ – அமெரிக்காவின் மாசூசெட்ஸ் தொழில்நுட்ப கழகத்தின் பேராசிரியர் (நோபல் பரிசு பெற்றவர்)

3) டாக்டர் அரவிந்த் சுப்ரமணியன் – இந்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர்

4) பேராசிரியர் ஜான் ட்ரீஸ்

5) டாக்டர் எஸ் நாராயணன்- இந்திய அரசின் முன்னாள் நிதி செயலாளர்.

ஆலோசனை குழு நிபுணர்கள்

டாக்டர் எஸ் நாராயணன்

2000மாவது ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை இந்திய அரசின் நிதி அமைச்சகத்தில் இவர் ஆற்றிய பங்கு முக்கியமானது. முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் பட்ஜெட் திட்டங்களை தீட்டியதில் இவரின் பங்கு அளப்பரியது. அது மட்டுமல்லாமல் அரசின் வரிவிதிப்பு தொடர்பான கொள்கைகளை உருவாக்கியது தொடங்கி மூலதன சந்தையை நவீனப்படுத்த முன்னெடுப்புகள் எடுத்தது வரையில் இந்திய பொருளாதார துறையில் இவர் ஆற்றிய பணிகள் ஏராளம்.ஓய்வுபெறுவதற்கு முன்னர் 2003-2004 கால கட்டத்தில் அப்போதைய பிரதமரின் ஆலோசகராக இவர் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.

டாபர் நிறுவனத்தின் தற்போதைய இயக்குநர்கள் குழுவில் இவரின் பெயரும் இருப்பதை அவர்களின்  வலைத்தளத்தில் நீங்கள் காண முடியும்

டாக்டர் அரவிந்த் சுப்ரமணியன்

(IMF assistant director)சர்வதேச நாணய நிதியத்தின் ஆராய்ச்சி துறையில் துணை இயக்குனராக பணிபுரிந்தவர்.

2014ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை தமிழகத்தில் பலரும் விரும்பாத மோடியின் தலைமையிலான ஒன்றிய அரசாங்கத்தின் முதன்மை பொருளாதார ஆலோசகராக செயல்பட்டவர்.

சொந்த காரணங்களுக்காக அவரின் பதவிக்காலம் முடிவதற்கு முன்னமே பதவியில் இருந்து விடைபெற்றுக்கொண்டார்.

இரட்டை இருப்புநிலைக் குறிப்பை (twin balance sheet) பற்றிய சுப்பிரமணியன் அவர்களின் ஆரம்பகால ஆய்வு, அதிக பொது முதலீட்டைத் கருத்தில் கொண்டு 2015–16 இந்திய அரசின் பட்ஜெட்டை வடிவமைக்க அரசாங்கத்திற்கு அது உதவியது என்று முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜெட்லி பாராட்டியிருக்கிறார். மானியங்கள் சரியான மக்களை சென்றடைய உதவும் வகையில் குடிமக்களின் தரவு தளமாக ஜன் தன்-ஆதார்-மொபைல் அல்லது JAM கருத்தியலை முன் வைத்ததை சுட்டிக்காட்டியும் அவர் சுப்ரமணியன் அவர்களை பாராட்டியிருந்தார்

அரவிந்த் சுப்ரமணியன் பரிந்துரைத்த சீர்திருத்த திட்டங்கள்

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட சுணக்கத்திற்காண காரணங்களை ஆய்வு செய்து சுப்பிரமணியன் அவர்களு வெளியிட்ட அறிக்கையில் கீழ்வரும் சீர்திருத்தங்களை அரசுக்கு பரிந்துரை செய்து இருந்தார்.

எகனாமிக் டைம்ஸ் இல் வெளிவந்த அந்த பரிந்துரைகளின் தமிழாக்கம் 

1. வங்கிகள் மற்றும் NBFC (வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள்)களை (அங்கீகாரம்) காக்க  புதிய சொத்து தர மதிப்பாய்வைத் தொடங்கவும்

2. சலுகைகளை சிறப்பாக சீரமைக்க ஐபிசியில் மாற்றங்களைச் செய்யுங்கள் (தீர்மானம்)

3.  ரியல் எஸ்டேட் துறைக்கு ஒன்றும்  மற்றும் மின் துறைக்கு மற்றொன்றும் என இரண்டு நிர்வாகத் தலைமையிலான பொதுத்துறை சொத்து மறுசீரமைப்பு நிறுவனங்களை (“மோசமான வங்கிகள்”) உருவாக்குங்கள்,  (தீர்மானம்)

4.  குறிப்பாக NBFC கள் மீதான மேற்பார்வையை வலுப்படுத்துதல். (ஒழுங்குமுறை)

5.  மறு மூலதனமயமாக்கலை வங்கிமறுசீரமைப்புடன் இணைப்பது (மறு மூலதனமாக்கல்- மறு மூலதனமயமாக்கல் என்பது அடிப்படையில் ஒரு வகை நிதியுதவியை மற்றொன்றுக்கு பரிமாறிக்கொள்வதை உள்ளடக்குகிறது))

6. பொதுத்துறை வங்கியை சுருக்கவும் (சீர்திருத்தம்)

Twin balance sheet problem முதல் four balance sheet problem வரை

Twin balance sheet problem என்பதுஇந்தியாவின் அதிகப்படியான கடன்களை கொண்ட நிறுவனங்கள் மற்றும் மோசமான கடன்-சுமையில் பாதிக்கப்பட்ட   பொதுத்துறை வங்கிகளினால் ஆன விளைவாகும். 2000 களின் நடுப்பகுதியில்  அரசு நடத்தும் வங்கிகள் தொடர்ச்சியாக  கடன் கொடுத்து வந்தன, குறிப்பாக உள்கட்டமைப்பு நிறுவனங்களுக்கு(infrastructure companies), கொடுத்து வந்தது.எளிதில் கிடைக்கக்கூடிய கடன்களால் தூண்டப்பட்ட வலுவான வளர்ச்சி இதனால் ஏற்பட்டது.அதன் விளைவாய் 2004-05 இல் இருந்து 2008-09ம் ஆண்டுக்கு  இடைப்பட்ட காலத்தில் மட்டும் உணவு உற்பத்தி அல்லாத துறைகளின் கடன்கள் இருமடங்கு ஆனது.

எளிதாக கிடைக்கக்கூடிய கடன்களால் தொழித்துறை நிறுவனங்கள் துணிந்து கடன்களை வாங்கி முதலீடு செய்யத்தொடங்கியது. ஆனால், நிலம் கையகப்படுத்துதல் சுற்றுச்சூழல் துறை அனுமதி பெறுவதில் தாமதம் போன்ற விஷயங்களால் ஏற்பட்ட தொய்வின் காரணமாக முதலீடு அதிகமாக, நிறுவனங்கள் பெற்ற கடன்களும்  அதிகமானது.இதன் தொடர்ச்சியாக 2013 வாக்கில் நிறுவனங்களின் வட்டி பாதுகாப்பு விகிதம்(interest coverage ratio) 1 சதவீதத்திற்கும் குறைவாக ஆனது. அதன் தொடர்ச்சியாக வங்கிகளின் வராக் கடன் அதிகரித்து நிறுவனங்கள் வங்கிகள் அல்லாத நிதிநிறுவனங்களை அணுக ஆரம்பித்தனர்.  அதனைத் தொடர்ந்து வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களும் பாதிக்கப்பட்டு இருக்கின்றது. அதனையே triple balance sheet என்கிறார்கள். இது தொடர்ந்து real estate துறையையும் பாதிக்கிறது. இதையே four balance sheet problem என்று அரவிந்த் சுப்ரமணியன் அவர்கள் குறிப்பிட்டு அதற்கான தீர்வுகளை அவர் பரிந்துரை செய்து இருந்தார். அவரின் பரிந்துரைகளையே இந்திய அரசு செயல்படுத்திவந்தது அதன் ஒரு பகுதியாகவே பொதுத்துறை வங்கிகள் இணைக்கப்பட்டு வருகிறது.

மேற்சொன்னவைகள் தொடர்பாக எகனாமிக் டைம்ஸ் இல் வெளிவந்த முழு செய்தியை படிக்க

பேராசிரியர் ரகுராம் ராஜன்

ரகுராம் ராஜன் அவர்கள் RBI கவர்னராக இருந்ததைப்பற்றி அறிந்திருப்போம். அவரை பற்றி அதிகம் தெரியாத சில செய்திகளை அலசலாம்.அவர் RBI கவர்னராகஇருந்த காலத்தில் பணவீக்கத்தை குறைப்பதில் முனைப்பு காட்டினார்.குறைக்கவும் செய்தார்.

அரசாங்கத்தை மானியங்களையும் செலவுகளையும் குறைக்க சொன்னார்.அதன் தொடர்ச்சியாக புதிய அரசு அமைந்த பின் 2014 மானியங்கள் நெறிப்படுத்தப்பட்டதும் குறைக்கப்பட்டதும்  நடந்தேறியது.அவர் RBI கவர்னர் ஆன முதல் நாளில் ரூபாயின் மதிப்பு அதிகரித்தது குறிப்பிடத்தத்தக்கது.அதற்கு முன்னதாக 2008ம் ஆண்டு கௌரவ பொருளாதார ஆலோசகராக அப்போதைய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களால் நியமிக்கப்பட்டார். நாம் 2000 களின் மத்தியில் தொடங்கிய twin balance sheet problem  காரணமாக ஏற்பட தொடங்கிய பொருளாதார சரிவுகளை சீர்செய்ய கொள்கை குறிப்புகளை உருவாக்க அப்போதைய பிரதமரால் கேட்டுக்கொள்ளப்பட்டார் .இவர் காலத்தில் தான் வங்கிகளின்  ATMகளில் குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணம் பரிமாற்றம் செய்தால் கட்டணம் செலுத்த வங்கிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

2012இல் முதன்மை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார். இவருக்கு முன் அந்த பதவியில் இருந்தவர் கௌஷிக் பாசு என்பவர்.

கௌஷிக் பாசு அவர்களின் ட்வீட்ம் தி.மு.க.ஆதரவாளர்களின் முரணும்

UPA ஆட்சிக்காலத்தில் இந்திய அரசின் ஆலோசகராக இருந்த கௌஷிக் பாசு அவர்களின் ட்வீட்

சமீபத்தில் கௌஷிக் பாசு அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக அரசு அமைக்கவிருக்கும் பொருளாதார குழுவை வெகுவாக பாராட்டியிருந்தார். அவருடைய பாராட்டில்  இவர்கள் இந்திய அரசின் ஆலோசனை குழுவில் இருந்தால் இந்தியாவின் நிலை இன்னும் முன்னேற்றம் அடைந்திருக்கும் என்றார்.

இதை, தி.மு.க.வின் வெகு தீவிர ஆதரவாளர்கள் வெகுவாக பகிர்ந்து கொண்டாடி வந்தனர்.முரண் என்னவெனில் இந்த குழுவில் உள்ளவர்களில் நாம் மேலே விவரித்து கூறிய 3 பேர் இந்திய பிரதமர்களின் முதன்மை  பொருளாதார ஆலோசகராக இருந்தவர்கள். இந்த மூவரும் பா.ஜ .க.வின் தலைமையிலான அரசின் கீழ் பணிபுரிந்தவர்கள். இதில் ரகுராம் ராஜன் அவர்கள் அரசாங்கத்திற்கு சேவையாற்றிய காலத்தில் காங்கிரஸ் தலைமையிலான அரசின் கீழ் பணிபுரிந்தது அதிகம்.இவர்கள் முன்னெடுத்த அல்லது பரிந்துரைத்த கொள்கைகளில் சில நடைமுறையில் இருக்கின்றது. சில கொள்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு கொண்டு இருக்கின்றது.எதிர்க்கட்சியினர் சில நடைமுறைகளை எப்போதும் போல மக்கள் மத்தியில்  தவறாக கொண்டுசேர்த்து மக்களின் வெறுப்பை பெற்று தந்தார்கள். பா.ஜ.க.வை விரும்பாத மற்றும் தீவிர தி.மு.க ஆதரவாளர்கள் விமர்சனம் செய்து வரும் இந்திய பொருளாதார வளர்ச்சியில் ஏற்பட்ட சுணக்கத்தின் தொடக்க காரணி 2004-2008 இல்(தி,மு.க. எங்கள் வகித்த காங்கிரஸ் தலைமையிலான அரசின் காலத்தில் ) எடுக்கப்பட்ட தவறான கொள்கைமுடிவுகளாலும் வங்கிகள் கடன் கொடுப்பதில் காட்டி வந்த தாராளமும் என்பது அரவிந்த் சுப்ரமணியன் அவர்களின் ஆய்வின் படியும் சில பொருளாதார ஆய்வுகளின் படியும் அறிய முடிகிறது.

2008க்கும் 2018க்கும் இடைப்பட்ட காலத்தில் எடுக்கப்பட்ட, இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கும் இந்திய அரசின்  பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைளில் ரகுராம் ராஜன் மற்றும்   அரவிந்த் சுப்ரமணியன்(2014-2018) அவர்களின் தாக்கம் இருக்கின்றது என்பதை மறுக்க முடியாது.

அதில் எதிர்க்கட்சிகள் மக்கள் மனதில் விதைத்த தவறான கருத்துக்களால் மக்களால் எதிர்க்கப்படும் அவர்களின் பரிந்துரைகளில் அல்லது நடவடிக்கைள் அல்லது ஆலோசனை விளைவாய் எடுக்கப்பட்ட முடிவுகள் சில

1) மானியம் நெறிப்படுத்தப்பட்டது மற்றும் குறைக்கப்பட்டது .

2) பொதுத்துறை வங்கிகளை ஒன்றிணைப்பது, மறுசீரமைப்பது.

3) ATM கட்டணங்கள்

மக்கள் என்ன புரிந்து கொள்ள வேண்டும்

1)விளைவுகள் எதிர்மறையாகும் போதே கொள்கைகளும் திட்டங்களும் தவறானதாகிவிடுகிறது. 2004க்கும் 2008கும் இடைப்பட்ட காலத்தில் அரசு வங்கிகள் கடன் கொடுத்து வந்ததில் சில கட்டுப்பாடுகள் இருந்திருக்க வேண்டும் என்றாலும் கூட அதுவும் வளர்ச்சியை கருத்தில் கொண்டே கொடுக்கப்பட்டது.

2) உலகத்தின் எல்லா நாடுகளில் உள்ள அரசுகளும் நிபுணர் குழு மற்றும் அதிகாரிகளை சார்ந்தே இயங்குகிறது.

3) கட்சிகளின் வேலை,அவர்களின் இயக்கத்திற்கு சாட்சியாக இருந்து அவர்களின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவது.

 4) எல்லா பரிந்துரைகளிலும் சில பாதகமான விளைவுகள் இருக்க கூடும். வாக்கு வங்கி பற்றிய கவலை இல்லாமல் தங்களின் சொந்த ரிஸ்கில் முடிவுகளை எட்டுவதிலும் ஊழலை கட்டுப்படுத்துவதில் இருக்கும் முனைப்பிலுமே நாம் கட்சிகளை  மதிப்பீடு செய்ய வேண்டும்.

5) அமைச்சர்களை பொறுத்தவரையில் நிபுணர் குழு சொல்வதை புரிந்து கொள்ள முடிந்த அளவில் அமைச்சர்களின் திறன் இருக்க வேண்டியது அவசியமாகிறது. அதன் காரணமாகவே ஒவ்வொரு கட்சியும்  அந்த  அந்த கட்சியின் சிறந்த ஆளுமைகளை அமைச்சரவையில் இடம் பிடிக்க நேரடி தேர்தல் அல்லாத வழிகளை கூட தேடுகிறது.பா.சிதம்பரம் அவர்களின் சர்ச்சைக்குரிய தேர்தல் வெற்றி, அமைச்சரவையில் அவருக்கு இருக்கும் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தியது . மன்மோகன் சிங்  அவர்களை மாநிலங்ககளவை உறுப்பினராக தேர்ந்தெடுத்தது காங்கிரஸ் கட்சி. 2004இல் காங்கிரஸ் வெற்றி பெறுவதற்கு முன்பு வரை அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படவில்லை. ஆனாலும்,அமைச்சரவையில் அவரின் முக்கியத்துவம் கருதியே காங்கிரஸ் அவரை மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்து வைத்திருந்தது. இன்று அதே முறையில் தான் நிர்மலா சீதா ராமன் பா.ஜ .க.வால் மாநிலங்களவை உறுப்பினராக்கப்பட்டு அமைச்சராக்கப்பட்டு இருக்கின்றார்.

மாநிலங்களை பொறுத்தவரையில் அமைச்சரவையில் இத்தகைய ஆளுமையை பொறுத்து இடம் வழங்குவது என்பது அங்கு ஒன்றும் இங்கு ஒன்றுமாகவே இருந்து வருகிறது.அதில், பி.டி.ஆர். விஜயபாஸ்கர் போன்றவர்கள் கவனம் பெறுகிறார்கள். ஆனால் இவர்களை போன்றவர்கள் கட்சி அரசியலை பேசாமல் நிர்வாக அரசியலை; எதார்த்தை பேசினால்,எதார்த்தை மக்களுக்கு எடுத்துரைத்தால் நல்லது. ஆனால் ,அதை செய்தால் மக்கள் விழித்துக்கொள்வார்களே என்ன செய்ய!

நாட்டின் பொருளாதார சுணக்கத்தின் தொடக்கம் புரியாமல், நிபுணர் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்தும் போது விமர்சனம் செய்து வந்த நம்மை தான் இந்த அரசியல்வாதிகள் இயல்பான ஒரு நியமனத்தை கொண்டாட செய்து இருக்கின்றார்கள்.

“நல்லது நடந்தா சரி!”என்று இருப்பதை விடுத்து எதிர்கட்சியாகவும் ஆளுங்கட்சியாகவும் அரசியல்வாதிகள் காட்டும் முகங்களையும் நிர்வாகத்தையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்(அந்த முகங்களை மக்களுக்கு புரிய செய்யவே வாக்குறுதிகளும் செயல்பாடுகளும் எனும் பகுதியை நாம் எழுதி வருகிறோம்).இவைகளை புரிந்து கொள்ளாமல் அரசியல் சீர்திருத்தம் நிகழ வாய்ப்பே இல்லை.

இத்தனை நேரம் இந்த கட்டுரையை படித்து, அரசியல் என்றால் அப்படி தான் என்று சலித்து இருப்பீர்கள். அந்த சலிப்போடு இந்த ஒரு திருக்குறளையும் படித்து விட்டு நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

“அச்சமே கீழ்களது ஆசாரம் எச்சம்
அவாவுண்டேல் உண்டாம் சிறிது”

இதற்கு சாலமன் பாப்பையா அவர்கள் ஒரு விளக்கம் எழுதியிருக்கின்றார், தேடி படிச்சுட்டு கமெண்ட் பண்ணுங்களேன் ப்ளீஸ் . அந்த குறளில் இருக்கும் ஆசாரம்(ஆச்சாரம்- சமஸ்கிருதம் மற்றும் தமிழில் பொதுவாக இருக்கும் வார்த்தைகளில் ஒன்று) என்கிற வார்த்தையை பற்றியும் கொஞ்சம் திராவிட ஆதாரவாளர்களுக்கு எடுத்து சொல்லுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *