இங்கு யாருக்கும் ஒரு கவலை இருப்பதாக தெரியவில்லை; ஒரு அரசியல் மாற்றம் இனிமேல் எப்படி நிகழும்! என்கிற கலக்கம் இருப்பதாகவும் தெரியவில்லை.
“அவர் நல்லவர், அரசியலுக்கு வர வேண்டாம்” என்றவர்களும் அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்று கோஷமிட்டவர்களும் மகிழ்ச்சி அடைவதோடு அவரின் பெயருக்கு அவரே களங்கம் விளைவித்துக்கொண்டார் என்று புதிதாய் அக்கறை காட்டுகிறார்கள்.
பா.ஜ.க வின் அழுத்தம் காரணமாக தான் அரசியலுக்கு வருகிறார் என்றவர்கள், இன்று ரஜினி வெளியிட்ட அறிக்கைக்கும் புது காரணம் கண்டு ரஜினியையும் பா.ஜ.க வையும் கொஞ்சம் வசை பாடி மகிழ்ச்சி கொண்டு திருப்தி அடைகிறார்கள்.
அரசியலுக்கு வரக்கூடாது என்று நின்றவர்கள் ஆசுவாசம் கொள்கிறார்கள்.இன்னும் 3 தேர்தல்கள் ஆனாலும் தமிழ் தமிழ் என்று நிற்கும் தலைவர்களால் ஓட்டை பிரிக்க மட்டுமே முடியும் ஆட்சியில் அமர முடியாது என்னும் நிதர்சனம் யாருக்கும் புரிந்ததாக தெரியவில்லை.
இன்னும் 3 தேர்தல்கள் ஆனாலும் சீமான்(வயது 54)போன்ற தலைவர்களால் ஆட்சியை கைப்பற்ற முடியாது என்பது புரிந்தாலும் புரியாமல் போனாலும் அடுத்த முதல்வர் சீமான் தான் என்பது போல அவர்களும் ஒரு பக்கம் மகிழ்ச்சி கொண்டிருக்கின்றார்கள். ஆனால், இனி அவர்களளெல்லாம் யாரை வசைபாடுவார்கள்!
https://kathirvijayam.com/Cricticsonrajini
இன்னும் எத்தனை தேர்தல்கள் வந்தாலும் சாமானியர்கள்,சாமனிய இளைஞர்கள் சட்டமன்றம் செல்வது கனவாகவே தான் இருக்க போகிறது என்கிற கவலை யாருக்கும் இல்லை.
ஆழமான அறிவார்ந்த ஒரு இளைஞர் படை, சட்டமன்றத்தில் நுழைவதற்கான வாய்ப்பை தருகிறேன் என்றவர், கட்சி தொடங்க போவதில்லை என்று அறிவித்து விட்டார். இனி யார் வந்து அத்தகைய வாய்ப்பை தருவார்கள் என்கிற ஏக்கம் யாருக்குமே இல்லை.
மக்களிடம் எழுச்சி வந்தால் வருகிறேன் என்றவர். தான் வெளியில் வந்தால் தான் மக்களிடம் எழுச்சி ஏற்படுத்த முடியும்.தற்போதைய சூழலில் அது சாத்தியப்படாது என்பதனால் தான் அவர் வரவில்லை என்கிறார் என்பதை யாருமே உணரவில்லை.
மக்களிடம் எழுச்சி ஏற்படுத்த ஊடகங்கள் உதவ வேண்டும் என்று ரஜினி கேட்டு கொண்டதற்கான ஆழமான காரணத்தை உணராத ஊடக நண்பர்கள், தாங்கள் பெரும் ஊதியத்திற்கே விசுவாசம் கொண்டிருந்தார்கள்.மாற்றம் நிகழ வேண்டும் என்கிற அக்கறை அவர்களிடமும் இல்லை. ஆனால், அவர்களின் முதலாளிகள் தலைப்பு செய்திகளுக்கு இனி யாரை தேடப்போகிறார்கள்! விவாதம் என்கிற பெயரில் இட்டு கட்டி விமர்சனங்களை வைக்க விஜயகாந்தும் இல்லை ரஜினிகாந்தும் இல்லை என்ன செய்யப்போகிறார்கள்!
ரசிக விசுவாசிகள் உங்கள்(ரஜினி) உடல்நிலை தான் முக்கியம், என்றும் உங்கள் வழியில் நாங்கள் என்று கோஷமிடுகிறார்கள். அவர்களின் மகிழ்ச்சிக்கு பழைய ரஜினி படங்களும் போஸ்டர்களும் போதுமானது.நாம் ரசித்த ரஜினி இவரா என்கிற கேள்வி அவர்களுக்குள் எழவில்லை காலத்தையும் சூழலையும் ஆய்ந்தறிந்து அதற்கேற்ற முடிவுகளின் மூலம், கமல் அவர்கள் ஒரு பேட்டியில் சொன்னது போல achievable goals ஆக பார்த்து பார்த்து சொல்லி அடித்த ரஜினி இவரா? என்ற கேள்வி அவர்களுக்கு எழவில்லை.அல்லது இது achievable goals வகையில் வாராது என்கிற முடிவிற்கு வந்து விட்டாரா என்று அவர்களுக்கு சந்தேகம் எழவில்லை.
அப்படி சந்தேகம் எழுந்திருந்தால் உரிமையோடு ரசிகர்களை பலிகடா ஆக்க கூடாது என்கிற எண்ணமே இந்த முடிவின் காரணம் என்ற அந்த தலைவனிடம் ” நீங்கள் அப்படி எண்ண தேவை இல்லை பெரிய மாற்றத்திற்கான காரணியாக நாங்கள் இருந்தால் அதுவே ரஜினி ரசிகர் என்கிற முறையில் எங்களுக்கு பெருமை.நீங்கள் வெளியில் வர வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் இருக்கின்றோம்” கர்ஜித்திருப்பார்கள். ஆனால், ஒரு ரசிகர் கூட அப்படி முன்வரவில்லை.
எனக்கு அரசியல் பிடிக்காது, என்று இருப்பவர்களை எப்போதும் போல் இந்த செய்தியும் எந்த விதத்திலும் பாதிக்கவில்லை.ரஜினியின் இந்த முடிவு அவர்களின் வாழ்க்கையில் ஏற்படுத்த போகும் தாக்கத்தை பற்றி அவர்கள் விளங்கிக்கொள்ள போவதில்லை.
PUBG தடை செய்யப்பட்ட போது கொந்தளித்தவர்கள்; ஆபாச வலைத்தளங்களை தடை செய்த போது நியாயம் பேசியவர்கள் ஒருவரையும் காணவில்லை
எதிர்பார்ப்பு இல்லமால் மக்கள் நலனுக்காக தன்னுடன் வரும் காவலர்களையே ரஜினி எதிர்பார்த்தார். உண்மையில் எதிர்பார்ப்பு இல்லாத காவலர்கள் மக்கள் நலனுக்காக மாற்றத்துக்காக ரஜினியை கட்சி தொடங்க வேண்டி நின்று இருப்பார்கள். அப்படி ஒருவரும் இருப்பதாக தெரியவில்லை.
96இல் இருந்து பூச்சாண்டி காட்டுகிறார் என்றது ஒரு கூட்டம் அதில் உண்மை இல்லை.உண்மையில் 2017ல் அரசியலுக்கு வருவேன் என்றார் இப்போது வரப்போவதில்லை என்று சொல்லியிருக்கார் ஏமாத்திவிட்டார் என்று அவரை சொல்ல முடியவில்லை காலம் நம்மை ஏமாற்றி விட்டது .காலம் காலத்திற்கு தேவையானதை எப்போதும் செய்துகொண்டிருந்தது மாற்றத்திற்கு தேவையான ரஜினியை கொண்டு ஒரு மாற்றத்தை நமக்கு தர போகிறது என்று நம்பிக்கொண்டிருத்தவர்களை காலம் ஏமாற்றி இருக்கின்றது அதற்காகவும் கூட யாருமே வருந்தவில்லை.(நான் இன்னும் அந்த காலத்தை நம்புகிறேன் மாற்றத்தை சாத்தியப்படுத்தும் என்று)
1993ல் விகடனுக்கு அளித்த பேட்டியில் ரஜினி சொன்னது, “புரட்சி தான் ஒரே வழி” 2020ல் அவர் சொன்னது, “மக்களின் எழுச்சியே மாற்றத்திற்கான ஒரே வழி” கவலை இல்லாமல் மகிழ்ச்சியோடு இருக்கும் மக்களிடம் புரட்சியும் எழுச்சியும் எங்கிருந்து வரும். வெற்றிவேல்! என்று கிளம்பிய ரஜினியின் பின்னால் வீரவேல்! என்று ரசிகர்கள் அல்லாத மக்கள் சக்தி கிளம்பவில்லை.ஒரு எழுச்சி வந்திருந்தால்; புரட்சி வெடித்திருந்தால்; வீரவேல் என்று மக்கள் அணி திரண்டு இருந்தால் ரசிகர்களை பலிகடா ஆக்கி விடுவோமோ என்கிற அச்சம் ரஜினிக்கு பொய்யாக கூட ஏற்பட்டிருக்க முடியாது என்பதும் இங்கு யாருக்கும் புரியவில்லை.
பொதுநலன் வேண்டாம் சுயநலம் கூட இங்கு யாருக்கும் இல்லை.
நம் மாநிலத்தின் முன்னேற்றத்திற்கும் நம் வாழ்க்கை மாற்றத்திற்கும் தேவை, அரசியல் மாற்றம்; ஆட்சி மாற்றம் அந்த மாற்றத்தை ஏற்படுத்த நமக்கு தான் ரஜினி தேவை என்பதும் இங்கு ஒருத்தருக்கும் புரியவில்லை.
இப்போ இல்லைனா எப்பவும் இல்லை என்பது எப்போதுமே இல்லை என்று ஆகிவிட்டது என்கிற கவலை ஒருத்தருக்கும் இல்லை ஒரு *** க்கும் இல்லை. எல்லோரும் இயல்பாகவும் மகிழ்ச்சியாகவும் தான் இருக்கின்றோம். அதனால், ஆடுவோமே! பள்ளு பாடுவோமே ஆனந்த நாளை அடைந்து விட்டோம் என்று
ஆதி அண்ணாவை அழைத்து ராப் கூட பாடலாம் வாங்க.
“தமிழன் என்று சொல்லடா! பழைய பெருமை பேசுடா!மாற்றம் வேண்டும் மாற்றம் வேண்டும் என்று ஸ்டேட்டஸ் போடடா!
ஸ்டேட்டஸ் மட்டும் போட்டு இங்கிருக்கும் அரசியல் புரியாமல் ஓட்டை பிரிக்கும் கூட்டத்தோடு கூட்டமாய் நாம் தவழ்ந்து கொண்டு இருப்போம்டா!”
ஆடுவோமே!ராப் பாடுவோமே! ரஜினி அரசியலுக்கு வர மாட்டார் என்றதாலே..கோழைகளுடன் போரிட சிங்கம் விரும்பாததாலே..
எல்லோரும் ஒன்றை மறந்துவிட்டோம், “தமிழகத்தின் கடைசி வாய்ப்பு ரஜினி மட்டுமே இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்ல” ஒரு எழுச்சி நம்மிடம் இப்ப வரை வரவே இல்லை அது எப்போதுமே வாராத?புது ஆண்டு பிறக்க போகுது நாம் இன்னும் தூங்கிட்டு இருப்போம் 50 வருஷமா தூங்கினது பத்தாது.
https://kathirvijayam.com/Kadaisivaaippu_FreeBook