என்னது? எதை வாசிக்க கூடாது?

இந்த கட்டுரைய தான். நம்ம முகநூல் பக்கதில் ஏற்கனவே பதிவிட்ட ஒன்று தான் இது.

ஆணோ பெண்ணோ தலைப்பு இப்படி இருக்கவும் தானா வாசிக்க வந்தீங்க😀😀

ரஜினி ஹீரோவா success ஆனதுக்கு பல factors இருக்கு அதுல ஒன்னு manliness-ஆண்மை.💪
ஆணாக இருப்பது மட்டும் ஆண்மை என்றாகிவிடாது.🤫
Manliness என்பது ஆளுமை(personality) சம்பந்தப்பட்டது.😎

அப்பா தான் நம்ம எல்லோரும் கொண்டாடுற ஒரு manly ஆன hero.🙂

Hairstyle மாதிரியான சில விசயங்களில் அப்பாவோட resemblance, திரையில் ரஜினி கிட்ட தெரிந்ததனால கூட ரஜினியை ரசிக்க ஆரம்பிச்சோமான்னு நினைச்சு இருக்கேன்.🤔🤔

இங்கு நம்மில் நிறைய பேர் நம்ம அப்பா அழுது பார்த்து இருக்க மாட்டோம். சில சமயங்களை அந்த கண்ணீர் கண் தாண்டி வெளிய வராது.இதை நான் எங்க அப்பா கிட்ட பார்த்து இருக்கேன்.

சரி என்ன விஷயம்?🧐

எஜமான்-ரஜினி படங்களில், நான் மீண்டும் மீண்டும் பார்க்க விரும்பாத படங்களில் ஒன்று. காரணம், ரஜினி என்றாலே ஒரு பாய்ச்சல், புத்துணர்ச்சி, ஒரு கொண்டாட்டம் இதெல்லாம் தானே! ஆனால், அந்த படத்திலோ, இராக்குமுத்து பாட்டு முடிஞ்ச பிறகு ஓரே சோக மயமா இருக்கும்.😥😥

சமீபத்தில், youtube பரிந்துரையில் எஜமான் திரைப்பட காட்சி ஒன்றை பார்க்க நேரிட்டது. ஒரு ரெண்டு நாளா அதை மீண்டும் மீண்டும் பார்த்து இருப்பேன்.🤩🤩

ரஜினியோட இந்த மாதிரியான, பழைய படங்களில், அவர் ஏற்ற கதாபாத்திரங்களில் அப்பாவோட resemblance இன்னும் நிறைய தெரியுது எனக்கு.🙂
உங்களுக்குமே உங்களுடைய அப்பாவுடைய resemblance தெரிய வாய்ப்பிருக்கு.

அப்பா, அம்மா கிட்ட நிறைய சண்டை போட்டு இருக்கார். சமயங்களில் அடிக்க கூட செஞ்சு இருக்கார். அதை தாண்டி, அவருக்குள்ள ஒரு காதல் இருக்கும்.அது வெளிய தெரியாது.

இப்படி வெளிக்காட்டிக்கொள்ளாத நிறைய உணர்வுகளை மறைச்சு எல்லாத்தையும் கையில் எடுத்துக்கிட்டு சமாளிக்கிறது. 80s 90s கிட்ஸ் உடைய அப்பாக்கள் எல்லார் கிட்டையும் பார்க்க முடியும்.

They are not completely expressive. கண்களை தாண்டாத கண்ணீர் மாதிரி, அழுதுகிட்டே சிரிக்கிற மாதிரி.

தளபதி படத்தில் காதலி வேணாம் என்று சொல்ல வரும் பொழுது, “நானா கேட்டேன்? போ டி” ன்னு சொல்ற இடம்,
Typically ஆண்கள் இப்படி தான் என்பதை காட்டும் காட்சி.💔

எனக்கு வேணும்
ஆனால், அது கிடைக்காது. so ஆண், அவனை அவனே தேற்றிக்கொள்ளும் இடம்,
“இதை யாரு இப்ப வேணும்ன்னு கேட்டாங்க” என்பது தான் அந்த ‘போ டி’

எஜமான் படத்தைப்பற்றி தான பேச வந்த?
வந்துட்டேன்.🤭🤠

எஜமான் படத்தில், தன் மனைவிக்கு குழந்தை பிறக்காது என்று தெரிந்து வைத்து இருந்தும். குழந்தைக்கு பேர் வைக்க வயலில் வேலை செய்பவர்களை பேர் யோசிக்க சொல்ற மனைவியோடு சேர்ந்து கொண்டு; பெண் குழந்தை தான் பிறக்கும் என்ன பேர் வைக்கலாம் என்று கேட்டுவிட்டு ,
பெண் குழந்தை பிறந்தா மனைவி பேர்,
ஆண் குழந்தை பிறந்தா தன்னுடைய பேர் வைக்கனும்; புருசன் பேரை சொல்லக்கூடாது என்று நினைக்கும் மனைவி தன் பெயரை சொல்லி வாடா! போடா! என்றெல்லாம் விழிக்க; அதைக்கேட்டு மகிழ வேண்டும் என்று சொல்லிவிட்டு நகரும் பொழுது; கண் நிரம்ப கண்ணீரோடு ரஜினியை காட்டுவார்கள்.

எஜமான் திரைப்பட காட்சி

காலம் மாறிவிட்டதா? தெரியவில்லை.
நம் அப்பாக்களின் காலத்தில், ஒரு ஆண் தனக்குள் இருக்கும் பாரங்களை பகிர்ந்து கொள்ளும் சூழல் பெரிதாக இருந்ததே இல்லை.அத்தனை பாரங்களுடனும் அவன் தன்னை சார்ந்தவர்களை சந்தோசமாக வைத்துக்கொள்ள வேண்டும் ஆண்களுக்கான எழுதப்படாத இலக்கணம்.

எத்தனை பாரங்கள் இருந்தாலும் எல்லோரையும் அவன் சந்தோசப்படுத்த வேண்டும். எல்லாவற்றையும் balance செய்ய வேண்டும்.

Balance என்கிற பொழுது மிக முக்கியமாக, திருமண வாழ்க்கையில் மனைவி வந்த பின் குடும்ப சூழலில் அவன் சந்திக்கும் மாற்றங்களுக்கு அவன் fresher ஆக இருந்தாலும் கைதேர்ந்தவன் போல் கையாள வேண்டும்.

கண்களை தாண்டாத கண்ணீரோடு அப்பாவை பல சந்தர்ப்பங்களில் பார்த்து இருக்கிறேன். ஆனால், மொத்தமாக உடைந்து; விழுந்து விழுந்து; அப்பா அழுதது; அவருடைய அம்மா இறந்த பொழுது தான்.
அப்பத்தா இறந்த பொழுது அப்பத்தாவிற்கு எண்பது வயது

அவர் அழுத அந்த காட்சி அதன்பின் எனக்குள் பல கேள்விகளை எழுப்பியது. அம்மா மேல எல்லாருக்கும் அன்பு இருக்கும் தான், ஆனாலும் இத்தனை பெரிய அன்புடன் இருந்த அவர் ஒருநாளும் அதை வெளிக்காட்டி கொண்டதில்லை.

அவர் , அவருடைய வாழ்நாளில் பாதிக்கும் மேற்ப்பட்ட நாட்களில் அவருடைய அம்மாவுடன் சேர்ந்து இருக்கவில்லை.
போன் பேசுவதற்கான வாய்ப்பும் மிக குறைவு.ஒரு கட்டத்திற்கு மேல், வாழ்க்கை இப்படியான பிரிவுகளை தந்தாலும் அதையும் ஒரு ஆண் ஏற்றுக்கொண்டு தன் கடைமைகளை செய்ய வேண்டும்.

ஒரு ரிங் இல் அம்மா போன் எடுக்கலைன்னா எனக்கு அவ்வளவு கோபம் வரும்.என்னைப்பற்றி என்ன கவலை என்றெல்லாம் கூட பேசி இருக்கிறேன்.இதெல்லாம் ஆற்றல் குறைபாடு நிலைமை மற்றும் சூழல்களை ஏற்றுக்கொள்ள முடியாததால் வரும் கோபம்.
எங்க அப்பத்தாவிற்கு எட்டு பிள்ளைகளில் ஒருத்தர் தான் அப்பா, என்ன பெரிசா பிள்ளைகளோடு அன்பாய் இருந்திருக்க முடியும்!ஆனாலும் அங்கே ஆதீதமான அதிகம் வெளிப்படாத ஒரு அன்பு இருக்கவே செய்து இருக்கின்றது.

தான் மற்றவர்கள் மீது செலுத்தும் அன்பை ஒரு ஆண் திரும்ப பெற்றுக்கொள்வதற்கான நேரமும் சூழலும் கூட அவனுக்கு இருப்பதில்லை.

அவனை சார்ந்து ஒரு உலகம் தோன்றி வளர வளர அவன் சார்ந்திருக்கும் பிடிகளை அவன் தளர்த்த வேண்டி இருக்கின்றது.

RJ பாலாஜி அண்ணன், cricket commentryஇல் உளறுவதைப்போல சமயங்களில் உளறிவிடுகிறார். மன்னன் போன்ற ரஜினி படங்களில் பெண்களை தவறாக சித்தரித்து உள்ளார்கள் என்று சமீபத்தில் உளறி இருக்கிறார்.
Naturally there are phyiscal differences between men and women and naturally, they have their own responsbilities. இங்கு முக்கியமானது mutual respect.

ரஜினி படத்தில் manliness க்கு குறைபாடு இருந்ததே இல்லை.
Manliness உடைய மிக முக்கிய அங்கம் how a man treats a women? mutual respect.

சிவாஜி திரைப்படத்தில், தன்னை போலீஸில் காட்டிக்கொடுக்கும் மனைவியை திட்டும் அன்னையை தடுப்பது. எஜமான் படத்தில் மனைவியின் சந்தோசத்துக்காக சேற்றில் விழுந்து எழுந்து வரும் காட்சியில் தன்னைப்பற்றிய எந்த கவலையும் இல்லாமல், மனைவி கேட்ட பட்டாமபூச்சியை கொண்டு வந்துவிட்ட மகிழச்சியோடு இருப்பது, என்று 80ஸ் 90ஸ் கிட்ஸகளின் அப்பாக்களை ரஜினி திரையில் பிரதிப்பலிப்பது இப்படியாக தான்.

வளரும் போது நாம், அப்பா அம்மா என்று பெரும் கூட்டத்தையே சார்ந்து வளருகிறோம். திருமணம் தான் நம்மை சார்ந்து இருக்கபோகும் உலகத்தின் தொடக்கம்.

அதில் முக்கியமாக ஒரு ஆண் தன்னை சார்ந்து உருவாகும் அந்த உலகத்தை எப்படி கையாளுகிறான், அதிலும் தன்னை மட்டுமே சார்ந்திருக்கும் மனைவியை எப்படியெல்லாம் நடத்துகிறான் என்பதில். தான் manliness என்பது இருக்கின்றது.

Super hero வாகவே திரையில் வலம் வந்த superstar பல(எல்லா) படங்களிலும் மனைவிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆணாகவே தான் வலம் வருவார்.

நம்ம எல்லாருக்கும் அப்பா தான் ஒரு super hero . அந்த அப்பா வ superhero நிறுத்துற அம்மாக்கு அப்பா எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து எந்த இடத்தில வச்சு இருக்கார்(இருந்தார்) என்று எங்குமே தெரியாது. அதில் தான் அந்த manliness இருக்கின்றது.

அம்மா மேல இருக்கிற அன்புக்காவும,நாம் யாரையெல்லாம் சார்ந்து இருந்தோமோ? அவர்கள் மீது கொண்ட அன்பிற்காகவும் மரியாதைக்காவும், நம்மை சார்ந்து இருக்கும் மனைவியை தாழ்த்த வேண்டியதில்லை. அப்படி தாழ்த்துவதோ மனைவியை தன் குடும்பத்தை கட்டைமப்பதில் இருந்து கொஞ்சம் விலக்கி வைப்பதோ ஒரு ஆண் தன்னை தானே தாழ்த்திக் கொள்வதற்கு சமம்.
அது manliness இல் வராது.

கை கொடுக்கும் கை, எஜமான்,சிவாஜி, படையப்பா, ஆறிலிருந்து அறுபது வரை ன்னு.
நிறைய படங்களில் இருந்து நிறைய காட்சிகளை சொல்ல முடியும்.

இதில் எதிலும் மனைவிற்காக தாயை மதிக்காதது போலவும் காட்டியிருக்க மாட்டார்கள்.

இந்த balance ஐ இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால் பாகுபலி-1 நீதிமன்ற காட்சி. அம்மாவையும் எதிர்த்து மனைவிக்கான நியாத்தைப்பெற்று தந்த நொடியில் சிலிர்த்து போனதற்கு காரணம் அந்த காட்சியில் நிறைந்திருத்த manliness.

எப்பவும் எது சரி என்று சரியாக தீர்மானிப்பது. குடும்பத்தை நடத்துவதில் ஆண்களுக்கு இருக்கும் பெரிய சவால்.

எப்பவும் எது சரி என்று சரியாக தீர்மானிப்பதிலும்
ரஜினி படங்களில் எந்த குறையும் இருந்ததில்லை.

இதெல்லாம் யாரோ எழுதி நடிச்சது தானே நீங்க கேட்கலாம்.

யாரோ எல்லாம் நடித்திருந்தால் நிச்சயமா அந்த கனம் இருந்திருக்காது.

Manliness உடைய incomplete expressivness. எல்லா பாரங்களையும் சுமந்து கொண்டு மற்றவர்களுக்கு மகிழ்ச்சியை தருகின்ற அந்த energy இதெல்லாம் ரஜினியை தவிர யாராலும் திரையில் பிரதிப்பலிக்கமுடியாது.

நான் சொன்ன இந்த manliness இன் பல factorஸ் இன்றயை தலைமுறைகளிடம் குறைவாகவே உள்ளது. அது நிறைய தடுமாற்றங்களை தருது. நான் சொல்லாம விட்ட நிறைய விஷயங்கள் இருக்கு.
நீங்க ஒரு நிமிசம் திரும்பி உங்க அப்பா life அ பாருங்க ; பக்கதுல உங்க lifeயும் ஒடவிட்டு. இல்லாட்டி, simply watch rajini movies and learn manliness.

Incomplete expressiveness ஐ தாண்டி manliness ஐ attain பண்ணும் முயற்சியில் தான் நானும் இருக்கேன்.

One thought on “இதை வாசிக்காதீர்கள் பெண்களே!”
  1. Yes , he is an absolutely real hero , he is a roll model for million peoples.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *