மேதைகளின் கேள்விகளும் முட்டாளின் பதில்களும்#1
மேதாவி:இன்னுமா ரஜினிய நம்புறீங்க?
முட்டாள் ரசிகனின் பதில்:எங்களை வேறு யாரை நம்ப சொல்கீறீர்கள்.
*ஒரு இரு சீட்க்காக இரு திராவிட கட்சிகளுடன் கூட்டணி வைத்து இன்று மனைவியையும் அரசியலுக்கு கொண்டு வந்திருக்கும் நாட்டாமையா?
*அடித்தட்டு ரசிகர்களை புரிந்துகொள்ளாமல் தன் போக்கிற்கு படம் எடுத்துவிட்டு மேதாவிகளுக்கான படமாக மட்டும் அதை கொண்டு சேர்த்து தயாரிப்பாளர்களின் வெற்றியையும் ரசிகர்களின் தேவையும் பற்றி கவலை கொள்ளாத ; அதே போக்கினை தன் கட்சியிலும் கடைபிடித்து அந்த மேதாவித்தனகளிலும் பழைய கட்சிகளின் நிலையை, அநேக இடங்களில் பிரதிபலிக்கும் உலக நாயகனையா?
*எங்கள் கட்சி ஜாதி கட்சி இல்லை என்றுவிட்டு இன்றும் தன் ஜாதிக்கான இட ஒதுக்கீட்டை கேட்டு போராட்டங்களை அறிவிக்கும்;
எங்கள் கட்சியில் வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று விட்டு மகனை பிரதானப்படுத்தும் ஐயாவையா?
* தன்னுடைய கட்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்த போதே அதை பயன்படுத்தி இளைஞர்களையும் மக்களையும் கட்சிக்குள் சேர்த்து அரசியலில் தன் கட்சியை நிலைநிறுத்திக்கொள்ள தவறி இன்று காலசூழலாலும் உடல்நல குறைபாட்டாலும் தன்னையும் தன் கட்சியையும் மொத்தமாய் குடும்பத்தின் கையில் விட்டுவிட்டு இருக்கும் கேப்டனையா?
*மத்தியில் உள்ள தலைவர்களையே எப்போதும் முன்னிறுத்தி மாநில அளவில் பெரிய தாக்கம் ஏற்படுத்தக்கூடிய தலைவர்களை கொண்டிராத தாமரையையா?
வெள்ளத்தனையது மலர் நீட்டம்; மாநில தலைவர்களின் ஆளுமையை பொறுத்தது கட்சியின் மாநில வளர்ச்சி. இங்கு இரண்டும் மிக குறைவாக இருப்பதால்.அதாங்க தாமரை —- மலராது.
*மத்தியில் உள்ள தலைவர்களை கூட முன்னிறுத்த முடியமால் திராவிட கட்சிகளை சார்ந்திருக்கும் பப்புவின் செல்வங்களையா?
*தமிழையும் தமிழ் இனத்தையும் பற்றி இலக்கியங்களை படித்தறியாமல் அவசரம் அவசரமாக எதையேனும் சொல்லி வைத்து பின் தன் நிலையில் இருந்து மாறிக்கொண்டே வந்தாலும் மாற்றத்திற்காக உருவாகும் மூன்றாவது கட்சி அல்லது அணியையே அதிகம் தாக்கி பழகிய ரஜினிக்கு வயசாயிடுச்சு என்று விமர்சிக்கும் 50 வயதை தாண்டிய அண்ணனையா?
*கட்சியையையும் பதவியையும் தக்க வைக்க அல்லது கைப்பற்ற போராடும் வாரிசில்லா அம்மாவின் வாரிசுகளையா?
*சினிமாவில் அரசியலையும் அரசியலில் சினிமாவையும் கலந்துவிட்டு, நம் அரசியல் சார் விமர்சனங்களை நடிகர்கள் மீது திசை திருப்பி விட்டு, முடியாட்சியின் நீட்சியாய் இருந்துகொண்டு நீதி கட்சியின் நீட்சியாக தங்களை காட்டிக்கொள்பவர்களையா?
இன்னுமா ரஜினிய நம்புறீங்க னு கேட்டா, அதுக்கு பதில் இப்படியும் சொல்லலாம் ரஜினி கட்சி ஆரம்பிப்பார் என்று நாங்கள் நம்பவில்லை. ஆனால், அரசியல் மாற்றம்; தி.மு.க. அ.தி.மு.க வை தாண்டிய ஆட்சி மாற்றம் ரஜினி மாதிரி ஒருத்தர் அரசியலுக்கு வந்தால் தான் சாத்தியப்படும் என்று நம்புகிறோம். முக்கியமான விஷயம் இங்க ரஜினி மாதிரி ரஜினி மட்டும் தான் இருக்கார். ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம் என்பதற்கான வழி அவர் மட்டுமே.