வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும்.

காலம் எத்தனை வேகமாக மாறி வருகிறது!

இந்தியாவில் 1950களில் மெதுவாய் தலைகாட்ட தொடங்கிய தொலைக்காட்சி(டிவி),1980களில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து, விரிவடைந்து; 90களின் பிற்பாதியில், 2000களின்  ஆரம்பத்தில் பெரிய வளர்ச்சியை கண்டு; வீட்டிற்கு ஒரு டிவி என்கிற நிலை வந்தது.அடுத்த பத்து வருடங்களுக்குள் எல்லோர் கைகளிலும் mobile phone வந்து டிவி மீதிருந்த ஈர்ப்பை வெகு அளவிற்கு தன் பக்கம் ஈர்த்துவிட்டது.

(மாணிக்கவாசகர்: எப்படி ஆரம்பிக்கிறது ன்னு தெரியாம தானே history எல்லாம் பேசிட்டு இருக்க)

சரியாக ஒரு பதினைந்து வருடங்களுக்கு முன்,படிக்கின்ற பிள்ளைகள்  செய்கின்ற மிகப்பெரிய குற்றமாக கருதப்பட்டு வந்த விஷயம்: டிவி பார்ப்பது.

“டி.வி. எப்ப வேணுனாலும் பாக்கலாம்! படிக்கிற புள்ளைக்கு எதுக்கு டி.வி.!”

நிச்சயமாக 90s 80s குழந்தைகளுக்கு, அந்த வாசகங்களை படிக்கும் பொழுதே அவர்களின் பெற்றோர் அல்லது ஆசிரியரின் குரல் ஒலித்து இருக்கும்.

எங்கள் வீட்டில் டிவி என்று ஒன்று இருந்ததே பெரிய விஷயம். அதிலும் அது அடிக்கடி impair ஆகிவிடும். ஒவ்வொரு முறையும் repair செய்ய சில மாதங்கள் எடுத்துக்கொள்வார்கள்.நான் பத்தாம் வகுப்பு முடித்த பின்னர் தான், வீட்டில் புது டிவி வாங்கினார்கள்.

பன்னிரண்டாம் வகுப்பின் தொடக்கம்;பள்ளிநேரம் முடிந்தது; டியூஷன் நேரம் முடிந்தது; இரவு உணவும் முடிந்தது.டிவியில் மாதவன் நடித்த ‘ரெண்டு’  படம் ஓட்டினார்கள்.பருவமெய்திய பதின்மவயது சிறுவன் பார்த்திருக்க வேண்டிய படம்.காரணம்,அதில் ஒரு கதாநாயகன் இரண்டு கதாநாயகி(ஹாஹா).

படுக்கையை விரித்து; தலையணை எல்லாம் சரியாக வைத்து; படுத்து படம் பார்க்க தொடங்கிய நொடி தான் தாமதம்.என்னுடைய ஆசிரியர் வந்துவிட்டார்.

(மாணிக்கவாசகர்: how issss  thisss  possible!)

அவர் ஒன்றும் ஆஸ்திரேலியாவில் இருந்து வரவில்லை. அடுத்தக்கதவு தான்.unexpectedly என்பதற்கு வாய்ப்பு இல்லை என்றாலும்.unexpected  ஆகவே தான் வந்தார். அவர் வாசலை அடைந்த மாத்திரத்திலேயே நான் கண்களை மூடிக்கொண்டேன்.

தூங்கறோம்! கொஞ்ச நேரத்தில எந்திரிக்கிறோம்! படம் பார்க்கிறோம்!

(மாணிக்கவாசகர்: Master plan!)

அப்பா அன்று வீட்டில் இல்லை. தூங்குவது போல் இருப்பது என்பது தூங்கவது போலவே இருக்க வேண்டும்.இல்லையென்றால்,”நான் சொன்னேன் கேட்கவில்லை” என்று அம்மாவே ஆசிரியரிடம் complaint வாசித்துவிடுவார்.அதோடு பொய் பேசக்கூடாது ஆனால்,உண்மைகளை உருவாக்கலாம்.(ஹாஹா)

கொஞ்சம் நேரம் கழித்து, நான் கண்களை திறந்த பொழுது. டிவி அணைக்கப்பட்டு இருந்தது. எல்லோரும் தூங்கிக்கொண்டு  இருந்தார்கள். இவை எல்லாவற்றையும் விட, என் கால்கள் இருந்த இடத்தில் என் தலையும்; என் தலை இருந்த இடத்தில் என் கால்களும் இருந்தது.

(மாணிக்கவாசகர்: position மாறுனது கூட தெரியாம தூங்கிருக்க நீ!)

அதே தான்.position மாறினது கூட தெரியாமல் தூங்கியிருக்கின்றேன்.”கேரக்டராவே வாழ்ந்து இருக்கான் பாருய்யா”  என்று சொல்வார்களே அது போல, கொஞ்சம் நேரம் தூங்கவது போல  இருந்துவிட்டு படம் பார்க்கலாம் என்று நினைத்து தூங்கியேவிட்டேன்.இன்றுவரை அந்த படத்தையும் பார்க்கவில்லை.

“நல்லவனாக நடி நல்லவனாகவே ஆகிவிடலாம்” அது போல தான் நான் தூங்கியதும் (ஹாஹா).விளையாட்டாக இல்லாமல் மற்றும் ஒரு உதாரணமாக ஒரு திரைப்படத்தை சொல்லலாம்.

‘ரங் தே பசந்தி’ , ஹிந்தி தெரியாமல் subtitle கூட இல்லாமல் பார்த்தும் பிடித்துப்போன ஹிந்தி படம்.பகத் சிங், சந்திர சேகர் ஆசாத், ராஜகுரு, போன்றவர்களைப்பற்றி படம் எடுக்க லண்டனில் இருந்து வரும் ஒருவர், இந்தியாவில் உள்ள தன் தோழியுடன்  நடிக்க ஆள் தேடுவார்.அந்த தோழியின் நட்பு வட்டம்,எதை பற்றிய கவலைகளும் பொறுப்புகளும் இல்லாமல் தன் போக்கிற்கு மகிழ்ச்சியாக இருக்கும் இளைஞர்களை கொண்டது. முடிவில் அந்த பொறுப்பில்லாத; கவலைகள் இல்லாத; அந்த இளைஞர்களே பகத் சிங், சந்திர சேகர் ஆசாத், ராஜகுரு, அஷுபஃக்குல்லா  கான், ராம் பிரசாத் பிஸ்மில் போன்றவர்களாக நடிக்க ஆரம்பிப்பார்கள்.

சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட வீரர்களின் கதையில் நடிக்க தொடங்கிய அவர்களின் மனதில், பல மாற்றங்கள் ஏற்படும். அந்த வீரர்களை போலவே நிகழ்கால அரசியலில் நடக்கும் தவறுகளுக்கு எதிராக போராடி உயிர் தியாகம் செய்ததாக படம் முடியும்.

கட்டுரையின் நீளம்கருதி, அந்த திரைப்படத்தின் கதைசுருக்கத்தை சுவாரஸ்யமில்லாமல் சொல்லிமுடித்தேன். மிக அற்புதமான திரைப்படம்.இது வரை பார்க்கவில்லை என்றால் இன்றே பார்த்துவிடுங்கள்.

(மாணிக்கவாசகர்: நீங்க வேறென்ன எல்லாம் சுவாரசியமா எழுதி இருக்கீங்க?)

கருத்து என்னவெனில், நம்மை மாற்றிக்கொள்ள எளிமையான வழி, என்னவாக மாற நினைக்கின்றோமோ அதுவாகவே நடிப்பது.

அதே சமயம் எதற்காக நடிக்கின்றோம் என்பதும் இருக்கின்றது. ஒரு நான்கு வயது குழந்தை ,அதன் தங்கை ஒருத்தியின் ஒரு கால் கட்டிலுக்கும் சுவற்றுக்குமான இடைவெளியில் மாட்டிக்கொள்ள; அதை பார்த்த அந்த குழந்தைகளின் பாட்டி ஒருவர், “ஐயோ! புள்ள கால்” என்று பதறி வந்து தூக்கினார்.
இதை கவனித்த நான்கு வயது குழந்தை, அதே போல பதறி,தன்னையும் அதே அன்போடு வந்து தூக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்து, தன் கால் ஒன்றை அதே இடைவெளியில் விட்டு, மாட்டிக்கொண்டது போல் நடிக்க, நல்லா வசமா மாட்டிக்கொண்டது குழந்தை.
“இதை பாரேன்! அந்த புள்ளைய தூக்கினோம்ன்னு நடிக்கிறதை” என்றார் அந்த பாட்டி.

(மாணிக்கவாசகர்: அசிங்கப்பட்ட அந்த குழந்தை யாரு என்ன ன்னு மட்டும் நான் பேசமாட்டேன்)

அந்த பாட்டியின் அன்பிற்காக நடித்த அந்த குழந்தை போலவே தான், நாம் எல்லோரும் நடித்துக்கொண்டு இருக்கின்றோம். வாழ்க்கையின் பல கட்டங்களில்; சமயங்களில் தெரிந்தும், சில சமயங்களில் நமக்கே தெரியாமலும் கூட, நடித்துக்கொண்டு தான் இருக்கின்றோம்.

மாணிக்கவாசகரின் இந்த பாடலைப்பற்றி பலர், பல முறை பேசியிருப்பார்கள். அதனாலென்ன! இன்னும் அதிகம் கூட பேசலாம்.

  நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து
     நான்நடுவே
 வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும்
     விரைகின்றேன்
 ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா
     அன்புனக்கென்
 ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம்
     உடையானே 
திருவாசகம் சிவபுராணம், பாடல் -11

நேரடியான அர்த்தம்,”நான் உன்னிடத்து அன்பு இல்லாதவனாய் இருந்தும் உன் அன்பர் போல் நடித்து முத்தி உலகத்தில் புகும் பொருட்டு விரைகின்றேன். ஆதலால் இனியாயினும் உன்னிடத்து அன்பு செய்யும்படி எனக்கு அருள் செய்யவேண்டும்.” இவ்வளவு தான். (expressing his utmost desire to attain mukthi)

ஆனால், அந்த முதல் ஒரு வரி, just  like that, கடந்துவிடக்கூடியது அல்ல.

நம் எல்லோரிடமும் ஒரு வழக்கம் இருக்கும். நமக்கு புதிதாக இருக்கும் பழக்கப்படாத விஷயங்களை புதிதாக செய்யும் பொழுது, ஏற்கனவே அதற்கு பழக்கப்பட்ட ஒருவரை பார்த்து, ‘immitate’ செய்வது.

அதைப்போல, சிவனை எப்படி அடைவது என்று தனக்கு தெரியாது. அதனால், சிவனடியார்கள் என்ன செய்வார்கள்? அவர்களை immitate செய்தாவது; அவர்கள் கூட்டத்தோடு ஒருவனாய் நானும் சென்று இறைவனை அடைந்துவிடுவேன் என்று இறைவன் அடைய வேண்டி தனக்குள் இருக்கும் வேட்கையின் அவசரத்தை மாணிக்கவாசகர் வெளிப்படுத்துவதே அந்த பாடல்.

மாணிக்கவாசகர் நினைக்கிறார், எனக்கு உன்னிடம்(இறைவனிடம்) வரும் வழி தெரியாது; அதை தேடி தெரிந்துகொண்டு உன்னை சேரும் அளவிற்கு  பொறுமையும் கிடையாது.இறைவனிடம் சொல்கிறார், உன்னுடைய அடியார்கள் போல நடித்து நான் உன்னை(வீடு பேறு ) அடைந்துவிட பார்க்கின்றேன். இடைவிடாமல் உன் மீது அன்பு இருக்கும் உள்ளத்தை எனக்கு தந்து அருள் என்கிறார் இறைவனிடம்.

எனக்கு ஒரு கவிதை கூட நினைவிற்கு வருகிறது.

அடுத்த தெருவில் அம்மாச்சி வீடு

பெரியவர்கள் அரட்டை முடிந்து கிளம்பும் முன் தூங்கி விட வேண்டும்

அப்ப தான் வீடு வரை தூக்கி செல்வார் அப்பா

“தூங்கி விட்டான் தூக்கி செல்லுங்கள்” எனும்

பரிந்துரைகள் கேட்டும் பிசகாமல் தூங்க வேண்டும்.

கள்ளச் சரிப்புடன் கண் திறந்து மூடிக் கொள்வேன் தூக்கம் தராத சொர்க்கத்தில் சாயந்தாடி

தரையில் கால் படாது தூங்கிக் கொண்டு நடக்கும் போது

இப்பொழுது எல்லாம் தூங்கி விடுவதில்லை வீடு சென்று சேரும் வரை

சில பொழுதுகள் வீடு சென்று சேர்ந்த பின்னும்

 (மாணிக்கவாசகர்: இவருக்கு இவர் எழுதினது தான் நினைவிற்கு வரும்)

மாணிக்கவாசகரின் எண்ணம் அந்த குழந்தையின் எண்ணத்தை போன்றது. தூங்கினால் அப்பா தூக்கி செல்வார். தூக்கம் வரவில்லை என்றால், தூங்குவது போல நடித்தால் அப்போதும் அப்பா தூக்கி செல்வார் தானே! கால் மாட்டிக்கொண்டால் பாட்டி பதறி வந்து தூக்குவார். மாட்டிக்கொண்டது போல நடித்தால் அப்போதும் அதற்கு வாய்ப்பு இருக்கின்றது தானே! தன் அடியார்களை இறைவன் ஆட்கொள்வான்; அவன் அடியார்கள் வீடு பேறு  அடைவார்கள் என்றால், அவர்களை போல நடித்தால் தானும் வீடு பேறு அடைய முடியும் தானே!

இதை பொய் என்று சொல்லிவிட முடியாது. தூங்குவது போல நீங்கள் நடிக்க தொடங்கினால் தூங்கியே விடுவீர்கள். நடிப்பு –easiest way to become as you wish. acting is nothing but imitation.

நாடகம் என்பதே imitation  தானே. நாம், நம் வாழ்க்கையில் எல்லாவற்றையும் imitate  செய்து தானே கற்றுகொள்கிறோம்.

பேசுவதற்கு; எழுதுவதற்கு; நடப்பதற்கு; ஓடுவதற்கு; என்று எல்லாம் நம் DNA க்குள் இருந்தாலும் imitate செய்வதன் மூலமாகவே அதனை நாம் வெளிக்கொணர்கிறோம்.

இறைவனை அடைவதற்கான வழியை இறைவனின் அடியார்கள் போல நடித்தே(imitate  செய்தே) தான் கண்டுவிட எத்தனிப்பதை இறைவனிடமே சொல்கிறார் மாணிக்கவாசகர்.

நம்முடைய சுபாவங்கள் பல, யாரையோ பார்த்து நாம் imitate செய்ய தொடங்கியதாக தான் இருக்கும்.

நாம் அநேகமான விஷயங்களில்,தெரிந்தே நடிக்க பழக வேண்டும். ஆரோக்கியமாக இருப்பது போல நடியுங்கள் ஆரோக்கியமாக ஆகிவிடுவீர்கள். உங்களை ஒருவர் வெறுத்தால், பதிலுக்கு அவரை நேசிப்பது போல நடியுங்கள், அவரும் உங்களை நேசிக்க தொடங்குவார் இறுதியில் நீங்களும் அவரை நேசிக்க ஆரம்பித்துவிடுவீர்கள்.

இவையெல்லாம் நமக்கே தெரியாமல் நாம் பயன்ப்படுத்திக்கொண்டு இருக்கும் விஷயங்கள் தான்.ஆங்கிலத்தில், அதற்கு பெயர் manipulation. இந்த manipulation க்கு நிகரான சரியான தமிழ் வார்த்தையை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

manipulation,imitation இவை இரண்டும் தான் இன்று நாம் யாராக இருக்கின்றோம் என்பதை தீர்மானித்து வைத்து இருக்கின்றது.

manipulation க்கு உதாரணம், அப்பா நம்மை தூக்கி செல்ல வேண்டும் என்றால் நாம் தூங்க வேண்டும் என்று குழந்தை நினைத்து அதனை செயல்படுத்துவது.அப்பா என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கே குழந்தை தீர்மானிக்கிறது.

நம்மை பற்றிய நம்முடைய அநேகமான தீர்மானங்கள், யாரோ ஒருவரின் manipulationக்குள் சிக்கி நாம் நடிக்க தொடங்கியதால் வந்ததாக இருக்கும்.

“நீ எல்லாம் படிக்கிற பையன் தானே வெறும் எழுபது மார்க் எடுத்து இருக்க” என்பது ஒரு மாணவனை manipulate செய்யும் வாசகம். அதற்காகவே அவன் இன்னும் நல்லா படிக்க தொடங்குவான். இப்படி, “அவன் பயந்தவன்; அவனுக்கு இது வராது; அவன் இதை தான் செய்ய முடியும்” என்கிற பல manipulation கள் நமக்கு தெரியாமல் நிகழ்ந்திருக்கும்.நாமும் அதன் படி நடக்க தொடங்கியிருப்போம்.

இந்த manipulation களை awareness உடன் ஒருவர் பயன்படுத்தும் பொழுது, அவரால் அவர் நினைத்தை சாதித்துக்கொள்ள முடியும். எது செய்தால், நமக்கு வேண்டியது நடக்கும். என்ன பேசினால், எதிரில் இருப்பவர்கள் நாம் நினைப்பதை பேசுவார்கள் என்று விழிப்புணர்வோடு ஒருவர் manipulation ஐ பயன்படுத்த தொடங்கினால், அவரால் அவர் வாழ்க்கையை தனக்கு ஏற்ற படி design செய்து கொள்ள முடியும்.

மாணிக்கவாசகர் ஒரு வகையில் இறைவனை மிரட்டுகிறார். உன் (இறைவன்)அடியார் போல நடித்து, உன்னை manipulate செய்து உன்னை அடைய விரைகிறேன். அதனால், உன் மீது இடைவிடா அன்பு என் உள்ளத்துள் இருக்கும்படி எனக்கு அருள் செய் என்கிறார். “எனக்கு உன்னை அடைய எளிமையான வழி தெரியவில்லை; அதனால் உன் அடியார்கள் செய்வதை imitate செய்வேன். அப்பொழுது நீ என்னை உன்னோடு சேர்த்துக் கொண்டு விடுவாய் தானே”என்று மிக அன்பாக என்னால் உன்னை manipulate செய்ய முடியும் என்று மிரட்டுகிறார்.

நாம் இன்று என்னவாக இருக்கின்றோமோ, அதுவாக நாம், சில காலங்களுக்கு முன்நடிக்க தொடங்கியிருப்போம்.அதற்கு நம்மை ஈர்த்த ஒரு விஷயத்தை கண்டு நாம் imitate செய்ய தொடங்கியது ஒரு காரணமாக இருந்திருக்கும். அல்லது யாரேனும் ஒருவரின் manipulation காரணமாக இருந்திருக்கும். நாம் ஒரு அறிவாளியாகவோ, பயந்தவராகவோ, இருப்பதற்கு ஒரு manipulation அல்லது immitation கூட காரணமாக இருந்திருக்கலாம். இப்படி நம்முடைய ஆளுமையில் பெரிய தாக்கத்தை நடிப்பும் manipulation உம் ஏற்படுத்தியிருக்கும். அதனை மாணிக்கவாசகர் நன்கு உணர்ந்து வைத்து இருக்கின்றார்.அடியார்களை போல imitate செய்து இறைவனின் கவனத்தை பெரும் அளவிற்கு, தான் அத்தனை தீவிரமாக இருப்பதாக சொல்வதையே “விரைகின்றேன் ” என்கிற வார்த்தை மூலம் வெளிப்படுத்துகின்றார்.

இப்படி,எதையும் அடைவதற்கு அல்லது மாற்றுவதற்கு நம்முள்ளும் அத்தகைய தீவிரம் தேவைப்படுகிறது.அந்த தீவிரத்தோடும்,விழிப்புணர்வுடனும் நல்ல விஷயங்களுக்காக manipulation ஐ பயன்படுத்தினால் நிறைய வெற்றிகளை அடையலாம். நம்மை பல வகையிலும் மேம்படுத்திக்கொள்ள மேம்பட்டவர்களை பார்த்து நடித்தால் (imitate)நாமும் மேம்பபட்டவர்களாவே ஆகிவிடலாம்.

நான் கூட ஒரு காமராஜர்,ஒரு எம்.ஜி.ஆர். ஒரு கலைஞர், இவங்கள மாதிரி நடிக்கலாம் ன்னு இருக்கேன் (ஹாஹாஹா)

(மாணிக்கவாசகர்:மக்களே! அரசியல் ஆசையை வெளிப்படுத்துகிறாராம். தம்பிக்கு காமெடி பண்றது தான் வேலை. நீங்கள் சென்று அந்த படத்தை பார்த்துவிட்டு தூங்குங்கள். “ரங் தே பசந்தி” அதுக்கு முன்னாடி சொன்ன படம் இல்லை)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *