“பிரிவினை தந்த வலி இன்னும் நம்மோடு இருக்கின்றது. அது இன்று மறு உரு பெற்று இருக்கின்றது.
சுயாட்சி என்கிற போர்வையில் எழும் இந்த குரல்கள், நாட்டை துண்டாட பார்க்கின்றது. கட்சிகள் ஒன்றிணைந்து தேசியத்தை வளர்க்க வேண்டும்”
-1962 இல் திரா விஷ நாடு முழக்கத்தை ராஜ்ய சபாவில் அண்ணா முன்வைத்த பின் பேசிய வாஜ்பாய் உதிர்த்த வார்த்தைகள்.
சில வருடங்களாக, நவீன டிஜிட்டல் யுகத்தில்,ஒவ்வொரு குடியரசு தினத்திற்கும் சுதந்திர தினத்திற்கும் சில நண்பர்கள், தேசியக் கொடியை தங்கள் Display picture ஆக வைக்க கண்டு இருக்கின்றேன்.சாதாரணமாக கடந்தும் இருக்கின்றேன். ஒரு முறை கூட நான் எனது Display picture இல் தேசிய கொடியை வைத்ததில்லை.’வைக்கணும்ன்னு தோனல வைக்கலை’ என்பதை தவிர அதற்கு பெரிய காரணம் ஒன்றும் இருந்ததில்லை.
ஆனால், இன்று இந்த சமூகத்தின் மனதில் ஏற்றப்பட்டு இருக்கும் விஷத்தை நினைக்கும் பொழுது,தேசிய கோடியை Display picture ஆக வைத்தே ஆக வேண்டும் என்று தோன்றுகிறது.
“பிரிவினை தந்த வலி இன்னும் நம்மோடு இருக்கின்றது. அது இன்று மறு உரு பெற்று இருக்கின்றது.’
‘From the heart’ (இதயத்தில் இருந்து )என்பார்களே, அது போன்று வாஜ்பாயின் இதயத்தில் இருந்து எழுந்த வார்த்தைகள் அவை.
நான் பலமுறை நினைத்ததுண்டு, ஏன்! கிரிக்கெட் ரசிகராக நீங்கள் இருப்பீர்கள் என்றால், நீங்களும் கூட நினைத்து இருப்பீர்கள்.
வாசிம் அக்ரமும் சச்சின் டெண்டுல்கரும் ஒரு அணியில் இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்! என்று.
‘சக்தியெல்லாம் ஒன்று சேர்ந்தாலே சொர்க்கம் வரும் இந்த மண் மேலே’ -கவிஞர் வாலி
இந்தியா இரண்டாக பிரிக்கபடாமல் இருந்திருந்தால், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து கொடுத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருக்காது. இந்த இரு நாடுகளின் சண்டையில் வல்லரசு நாடுகள் குளிர்காய்ந்து இருக்காது.
சிலரின் அதிகார வேட்க்கைக்கு, நாம் கொடுத்த விலை தான் இந்தியா பாகிஸ்தான் பிரிவினை.
1962 இல் ‘திராவிஷ நாடு’ முழக்கம், பிரிவினையின் மறுவடிவமே என்றார் வாஜ்பாய். இந்த விஷமான முழக்கத்தை திராவிஷ முழக்கம் என்று குறிப்பிடுவதே சரி.
இந்தியா அடைந்த சுதந்திரம் என்பதும் கூட ஒரு வகை ஆட்சி மாற்றம் தான். ஒரு சாமானியன் அதிகாரம் கேட்டு ஆயுதங்கள் தூக்கி போர் செய்வதில்லை.
ஒரு சாமானியன், நாம் அதிகாரத்திற்கு வந்து விடலாம் என்கிற எண்ணத்தில், மக்களுக்கு label ஒட்டி கூட்டம் சேர்ப்பதில்லை. மனிதன் அவன் தோன்றிய காலத்தில் இருந்து அவனுக்கு எங்கு அவன் வாழ்வதற்கான அமைதியான ஆதாரம் கிடைக்கிறதோ, ‘அது போதும்’ என்று, அந்த இடத்தில் தன் வாழ்வை அமைத்து கொள்வதையே வழக்கமாக வைத்து இருந்தான்.குடியிருக்க வீடு தேடுவதில் இருந்து வேலை தேடுவது வரையில் நம்முடைய எண்ணம் இதை சார்ந்தே இருக்கின்றது.
அவன் எப்போதும் அதிகாரத்திற்காக போர் நடக்காத அமைதியான இடத்தில், அவனுக்கு எங்கு பிழைப்பிற்கு வழி இருக்குமோ அதை தேடியே இடம்பெயர்கிறான். இது காலத்திற்கும் நடந்து கொண்டே தான் இருக்கின்றது. 2021இல் மட்டும் இந்தியாவில் இருந்து 1,63,370 பேர் புலம் பெயர்ந்து வேறு நாட்டின் குடியுரிமை பெற்று இருக்கின்றனர்.
இப்படியிருக்க,கூட்டம் சேர்க்கும் ஒருவன் அதிகார வேட்கையினால் அல்லாமல் வேறு எந்த நல்ல காரணத்திற்காகவும் அதை செய்வதில்லை.
“நம்ம சாதிக்காரன் பத்து பேர நம்ம ஒன்னா சேர்த்து ஒரு அமைப்பு ஆரம்பிச்சுட்டா நாம தான் தலைவர்”
“ஆகா! வெள்ளைக்காரனே சொல்லிட்டான் தென்னிந்திய மொழிகளுக்கும் வட இந்திய மொழிகளுக்கும் சம்மந்தம் இல்லன்னு. இதை சொல்லி மக்கள் உணர்ச்சியை தூண்டினா நம்ம அதிகாரத்திற்கு வந்துவிடலாம்.”
” அடுத்து என்ன பண்ணலாம், நம்ம ஜாதிக்காரன் எல்லாம் தமிழ்நாட்டு ல குறிப்பிட்ட பகுதி ல தான் இருக்கான் தமிழ்நாட்டை மூன்றா பிரிச்சுட்டா அதுல ஒரு தமிழ்நாட்டுல நான் தான் முதலமைச்சர்.”
“தமிழ்நாடு ன்னு சொல்லிட்டு தெலுங்குகாரங்க பாதி பேர் உள்ள இருக்கானுங்க தமிழ் ன்னு சொல்லி ஒரு கூட்டத்தை பிரிச்சுட்டா நம்ம அதிபர் ஆகிடலாம்.”
இப்படியான சிலரின் விஷ கனவுகளுக்கு இடம் கொடுத்து தான் காமராஜரை தோற்க அடித்தோம்;ஜாதி கட்சிகளை வளர்த்துவிட்டோம்.
ஆந்திராவில் இருந்து பிரிந்த தெலங்கானா எந்த பெரிய முன்னேற்றமும் கண்டுவிடவில்லை.
காங்கிரஸில் இருந்து ஓரம் கட்டுப்பட்ட பின்னரே ஜின்னா முஸ்லீம் லீக் தலைவராகி பின்னாளில் தனிநாடு கோரிக்கையை வைத்தார்;
பெரியார் தொடங்கிய திராவிஷ இயக்கத்தின் அடுத்த தலைவர் நாம் தான் என்று அண்ணா எண்ணிக் கொண்டு இருந்த போதே, மணியம்மையை மனம் முடித்து அவரை சொத்துக்கும் இயக்கத்துக்கும் வாரிசாக பெரியார் அறிவிக்க தனி கட்சி தொடங்கினார் அண்ணா;
வாரிசு இல்லாத சமஸ்தானகளையும் பாளையங்களையும் கிழக்கு இந்திய கம்பெனி கைப்பற்றிக்கொள்ளும் என்ற பின்னர் தானே, இந்தியாவை ஆண்டு கொண்டு இருந்த இந்திய மன்னர்களும் முகலாய மன்னர்களும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக பிரிட்டிஷை எதிர்க்க தொடங்கினார்கள்!
இது எல்லாமே அதிகாரத்திற்கான பசியாகவே சாமானியனுக்கு தெரிய வேண்டும்.அப்படி தெரிந்துவிட்டால் அது அரசியல்வாதிகள் பிழைப்பில் மண் அள்ளி போட்டுவிடும் என்பதால் அந்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படாமல் அரசியல்வாதிகள் பார்த்துக்கொள்கிறார்கள்.
மத்திய அரசில் ஆட்சியில் பங்கு கொண்டு அதிகாரம் கையில் இருந்த வரை மத்திய அரசு என்று கூவிக்கொண்டு இருந்தவர்கள் ‘இந்திய அரசு’ என்று கூட சுட்டாமல் ‘ஒன்றியம்’ என்று சுட்டுவதும். அவர்களின் நீட்சியான சீமான் போன்றவர்களை வைத்து இந்தியாவே உருவாக்கப்பட்ட நாடு தானே என்று அவர்களின் ஒன்றிய குன்றிய வாதத்தை நியாயப்படுத்துவதுமாக இருந்து கொண்டு இருக்கின்றார்கள்.
என்னை பொறுத்தவரையில் ‘திராவிஷ மொழி குடும்பம்’ என்பது வெள்ளைக்காரர்கள் சுதந்திரத்திற்கு பிறகும் நம்மை பிரித்து வைத்து கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்ட கட்டுக்கதைகள்.
அகர வரிசை(alphabets) தொடங்கி பல ஒற்றுமைகள் கொண்டு இருக்கும் அனைத்து இந்திய மொழிகளும் இந்திய மொழி குடும்பத்தை சேர்ந்ததாக தான் அறியப்பட வேண்டும்.
திரைப்படங்களும், கதைகளும் அடையும் வெற்றியில், ஒரு சமூகத்தின் உணர்வுகள் பெரும் பங்காற்றி இருக்கின்றது. அந்த வகையில் அம்மா sentiment படங்களுக்கு இன்றும் கூட மதிப்பு இருக்கின்றது. ஆனால், அர்ஜுனின் ஜெய்ஹிந்த் செங்கோட்டை போன்ற தேசப்பற்று உணர்வுகளை காட்சிப்படுத்தும் திரைப்படங்களோ கதைகளோ இனி தமிழகத்தில் போனி ஆகாதோ என்று தோன்றுகிறது. அந்த அளவிற்கு நம் தமிழ் நாட்டு சமூகத்தின் மனதில் அதிகார வேட்கை கொண்ட அரசியல் வர்க்கம் விஷத்தை விதைத்துள்ளது.
Display picture இல் கொடி வைத்தால், நம்மை சங்கி என்று சொல்லிவிடுவார்களோ என்கிற அச்சம் பலர் மனதில் இருப்பது விளங்கிக்கொள்ள முடிகிறது.
சாமானியர்களை பொறுத்தமட்டில் அது அவரவர் விருப்பமாகவே இருந்துவிட்டு போகட்டும்.
ஆனால், அரசியல்வாதிகள்;
நிர்வாகத்தை புரிந்து கொள்ளாமல், கருத்து சொல்ல கிளம்பிவிடும் நடிகர்களையும் உள்ளடக்கிய public figureகள்;
இந்திய அரசியலமைப்பின் படி பதவி பிரமாணம் செய்துகொண்ட மாநில அமைச்சர்கள்;
இந்திய தேர்தல் ஆணையத்தில் தங்கள் கட்சிகளை பதிவு செய்துவைத்து இருக்கும் கட்சி அதிபர்கள்;
மேற்சொன்ன அனைவரும் நிச்சயமாக சுதந்திர தின கொண்டாட்டத்தின் வெளிப்பாடாக தங்கள் display pictureஇல் தேசிய கொடியை வைத்து இருக்க வேண்டும்.
அங்கேயும் அரசியல் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்தியிருக்க வேண்டியதில்லை. கட்சி பாகுபாடுகளை தாண்டி, பிரதமரின் கோரிக்கையை ஏற்று அமைச்சர்களையும் , கூட்டணி கட்சி தலைவர்களையும் வீடுகளில் கொடியேற்ற சொல்லியும் display picture இல் கொடி வைக்க சொல்லியும் ஸ்டாலின் வலியுறுத்தி இருக்கலாம்.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக அப்படி ஒன்றும் நடக்கவில்லை.
யாரையும் ஆதரிப்பதற்காவோ யாரையும் எதிர்பதற்காவோ இதை அவர்கள் செய்ய வேண்டாம். சுதந்திரத்தை கொண்டாட இதை செய்து இருக்க வேண்டும்.
இந்த சுதந்திரம் ஒருவகையான வெறும் ஆட்சி மாற்றம் என்கிற போதிலும், இந்திய சமூகத்தின் மீதான படையெடுப்பகளின் முடிவை சொல்லும் ஒரு தொடக்கம் இது, இந்தியாவின் அடையாளங்கள் மீதான, அதன் தனித்துவங்களின் மீதான தாக்குதல்களின் முடிவு இது, அதனை கொண்டாடியே தான் ஆக வேண்டும்.
“எல்லாம் சரி, கொடி வச்சு தான் கொண்டாடனுமா கொடி வச்சா நாடு முன்னேறிருமா” என்று கேட்பீர்களானால், இன்னமும் பிரியாணி வச்சு தான் பக்ரீத் கொண்டாடுறோம், வெடி வச்சு தான் தீபாவளி கொண்டாடுறோம், பொங்கல் வச்சு தான் பொங்கல் கொண்டாடுறோம், சுதந்திர தினத்தை மட்டும், எப்படி இந்திய தொலைக்காட்சிகளில் முதன்முறையாக வகை படம் பார்த்து கொண்டாடலாமா?
மதுரைமுத்து, அவர் standup காமெடியின் போது சொன்ன விஷயம், ‘இந்தியாவில் இருக்கின்றவர்கள் எல்லாம் இந்தியர்கள் இல்லை.இந்தியா யார் மனதில் இருக்கின்றதோ அவர்கள் தான் இந்தியர்கள்’ என்று. தமிழ்நாட்டு மக்கள் மனதில் இருந்த இந்தியாவை இந்த அரசியல்வாதிகள் இடித்துவிட்டார்களோ என்ற அச்சம் வெகுவாக இருக்கின்றது.
ஒன்னாம் கிளாசில் , விடுமுறை அன்று விடியற்காலையில் எழுந்து கொடியை நெஞ்சில் குத்திக்கொண்டு பூரிப்பு அடைந்தவர்கள் தான் இன்று சில விஷ அரசியல்வாதிகளால், தேசியத்தின் மீது வெறுப்பை பரப்புபவர்களாய் மாறியிருக்கின்றார்கள் என்பது வேதனையிலும் வேதனை.
So,not last time but this time, now I am going to change my DP . கொடி வச்சா நம்மை பிஜேபி ன்னு சொல்லிடுவாங்களோ சங்கின்னு சொல்லிடுவாங்களோ என்று நினைப்பவர்களுக்கு சொல்லிக்கொள்வது ‘கொடி ஒன்றும் சங்கிகளுக்கு மட்டும் உரித்தான சொத்து இல்லை’ .
திராவிஷம் நமக்குள் விதைத்த விஷம் தான் தேசிய கொடி வச்சு இருக்கிறவன் சங்கி என்னும் எண்ணம்.
நம் தேசம்! நம் உரிமை!
And finally, இதை நான் சொல்லியே ஆகனும் வேற வழி தெரில, இந்தியனா இருந்தா இந்த article share பண்ணுங்க.
வாழிய செந்தமிழ்!
வாழிய நற்றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!