என்று எழுவீர்கள்!நின்று நிதானமாய் எழுவதற்குள் மீண்டும் நசுக்கப்படுவோம் என்பதை மறவாதீர்கள்.
நாம் நமது வேலையை பார்த்தால் போதும் என்கிற பொதுஜன எண்ணமா?
என்ன மாறிவிடப்போகிறது என்கிற அவநம்பிக்கையா?
இல்லை நம் உடைகள் இன்னும் அவிழ்க்கப்படவில்லை என்ற காத்திருப்பா?
எதுவாகினும் மாற்றிக்கொண்டு இப்போதே எழுச்சிகொள் தமிழகமே!
இங்கு யாருக்கும் ஒரு மாற்றத்திற்கான தேவை இருப்பதை பற்றிய விழிப்புணர்வு இல்லையா? ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருகிறேன் என்று 2017 முன் ஒருமுறை கூட சொன்னதில்லை ஆனாலும் இந்த தமிழகம் 1990களில் இருந்து அவருக்காக காத்திருந்ததை மறுக்க முடியுமா இல்லை மறந்து போனதா?
மாற்றத்தை சாத்தியப்படுத்த அவர் பின்னால் நாம் ஒன்று திரள்வது ஒன்றே வழி.அவர் அரசியலுக்கு வரலைன்னாலும் அவர் மேல இருக்க அன்பு மாறாது. ஆனால், அவர் அரசியலுக்கு வரலைன்னா, இங்க எதுவுமே மாறாது.எழுச்சிகொள் தமிழகமே!எழுச்சி கொள் தமிழகமே!
பைபிளில் ஒரு கதை உண்டு
லூக்கா 1235 “ஆயத்தமாக இருங்கள். எல்லா ஆடைகளையும் அணிந்து தீபங்களை ஏற்றி வையுங்கள். 36 திருமண விருந்திலிருந்து எஜமானர் வீட்டுக்குத் திரும்பி வருவதை எதிர்ப்பார்த்திருக்கும் ஊழியர்களைப் போல் இருங்கள். எஜமானர் வந்து தட்டுகிறார். அதே தருணத்தில் வேலைக்காரர்கள் எஜமானருக்காகக் கதவைத் திறக்கிறார்கள். 37 எஜமானர் வீட்டுக்கு வந்தவுடன் ஊழியர்கள் தயாராக அவருக்குக் காத்திருந்தபடியால் ஆசீர்வதிக்கப்படுவார்கள். நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். எஜமானர் வேலைக்குரிய ஆடைகளைத் தானே அணிந்துகொண்டு ஊழியர்களை மேசையின் அருகே அமரும்படியாகச் சொல்வார். பின்னர், எஜமானரே அவர்களுக்கு உணவைப் பரிமாறுவார். 38 அந்த ஊழியர்கள் நள்ளிரவு வரையிலோ இன்னும் அதிகமாகவோ எஜமானருக்காகக் காத்திருக்க வேண்டியதிருக்கும். ஆனால் எஜமானர் வந்து அந்த ஊழியர்கள் அவருக்காகக் காத்திருப்பதைப் பார்க்கும்போது அவர் அதிக மகிழ்ச்சியடைவார்.39 “இதனை நினைவில் வைத்திருங்கள்: திருடன் வரும் நேரத்தை வீட்டுச் சொந்தக்காரன் அறிந்திருந்தால், வீட்டினுள் திருடன் நுழைய அவன் அனுமதிக்கமாட்டான். 40 எனவே நீங்களும் ஆயத்தமாக இருத்தல் வேண்டும். மனித குமாரன் நீங்கள் எதிர்பாராத நேரத்தில் வருவார்” என்றார்.“யார் ஞானமுள்ள, நம்பிக்கைக்குரிய ஊழியன்? எஜமானர் பிற ஊழியர்களைக் கவனிக்கவும் அவர்களுக்குத் தக்க நேரத்தில் உணவளிக்கும்பொருட்டும் ஒரு ஊழியனை நியமிப்பார். அந்த வேலையைச் செய்யும்படி எஜமானர் நம்புகின்ற ஊழியன் யார்? 43 எஜமானர் வந்து அந்த ஊழியன் கொடுக்கப்பட்ட வேலையைச் சரிவர செய்துவருவதைப் பார்க்கும்போது, அந்த ஊழியன் மிகவும் மகிழ்ச்சியடைவான். 44 நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன். எஜமானருக்குச் சொந்தமான எல்லாவற்றையும் கவனிக்கும் பொறுப்பை ஏற்க அந்த ஊழியனை எஜமானர் ஏற்படுத்துவார்.45 “ஆனால் எஜமானர் விரைவில் திரும்பி வரமாட்டார் என்று எண்ணினால் நடப்பதென்ன? அந்த ஊழியன் மற்ற ஊழியர்களை அவர்கள் ஆண்களானாலும், பெண்களானாலும் அடித்துத் துன்புறுத்த ஆரம்பிப்பான். அவன் உண்டு, பருகி, மிதமிஞ்சிப் போவான். 46 அந்த உழியனுக்குத் தகவலே தெரியாதபோது எஜமானர் வருவார். அந்த ஊழியன் சற்றும் எதிர்பார்த்திராத நேரத்தில் அவர் வருவார். அப்போது அந்த எஜமானர் அந்த ஊழியனைத் தண்டிப்பார். கீழ்ப்படியாத பிற மனிதரோடு இருக்கும்படியாக எஜமானர் அவனையும் அனுப்பிவிடுவார்.47 “எஜமானர் தன்னிடம் எதிர்ப்பார்த்த வேலை என்ன என்பது அந்த ஊழியனுக்குத் தெரியும். ஆனால் அந்த ஊழியன் அவனது எஜமானர் விரும்பியதைச் செய்ய முயல்வதோ, அதற்குத் தன்னை ஆயத்தப்படுத்திக்கொள்வதோ இல்லை. எனவே அந்த ஊழியன் அதிகமாகத் தண்டிக்கப்படுவான். 48 ஆனால் எஜமானர் தன்னிடம் எதிர்ப்பார்ப்பதை அறிந்துகொள்ளாத ஊழியனின் நிலை என்ன? தண்டனைக்குரிய செயல்களை அவன் செய்கிறான். ஆனால் தான் செய்ய வேண்டியதை அறிந்தும் செய்யாத ஊழியனைக் காட்டிலும் அவன் குறைந்த தண்டனையைப் பெறுவான். ஒருவனுக்கு அதிகமாக அளிக்கப்பட்டால் அவனுடைய பொறுப்பும் அதிகரிக்கும். அதிகமாக ஒருவனுக்குக் கொடுக்கப்பட்டால் அவனிடமிருந்து அதிகம் எதிர்ப்பார்க்கப்படும்” என்றார்.”
2017-தான் அரசியலுக்கு வருவது உறுதி என்ற போது அவர் பேச்சின் இடையே அவர் சொன்ன மிக முக்கியமான கருத்து மக்களின் எண்ணங்களை மாற்ற வேண்டும் என்று அதை நாம எல்லாரும் சேர்ந்து தான் செய்யணும் என்றார்.நாம் செய்தோமா?
2020 ல் இளைஞர்களுக்கு பதவி என்ற போது, இளைஞர்களை அரசியலில் இறக்கி அவர்களை பலி கடா ஆக்குவதற்கோ ஓட்டை பிரிப்பதற்க்கோ அரசியலுக்கு வர வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு இல்லை.அதனால், மக்களிடம் சொல்வோம் ஒரு எழுச்சி வரட்டும்.அதன் பின் நான் வருகிறேன் என்றார்.
நம்மிடம் அந்த எழுச்சி வந்ததா?
உண்மையில் நாம் ஆயத்தமாய் இல்லை. தேவ குமாரன் ரஜினி வந்தார். நாம் ஆயுத்தமாக இல்லை. இப்போதும் ஒன்றும் கெட்டு விடவில்லை, நாம் நினையாத நேரத்தில் அவர் வருவார்.ஆயத்தமாய் இருப்போம்! எழுச்சி கொண்டிருப்போம்!