எதிர்கட்சித் தலைவர் அவர்களின் அறிக்கை:
“விருதுநகர் அருகே உள்ள எரிச்சநத்தம் பகுதியில் இருக்கும் பட்டாசு ஆலையில் நிகழ்ந்த பயங்கர வெடி விபத்தில் சிக்கி மூன்று பெண்கள் உள்ளிட்ட 5 பேர் உயிரிழந்திருப்பது பேரதிர்ச்சி அளிக்கிறது. உயிரிழந்தோரின் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பட்டாசுத் தொழிற்சாலைகளில் பணி புரிவோரின் பாதுகாப்பு விஷயத்தில் அ.தி.மு.க. அரசு தொடர்ந்து அலட்சியமாக இருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. தீபாவளிப் பண்டிகை நேரத்தில் பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பினை மிகுந்த கவனத்துடன் உறுதி செய்யுமாறு அ.தி.மு.க. அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.
உயிரிழந்த குடும்பங்களுக்கு அதிகமான நிதி உதவியை அளித்திட வேண்டும் என்றும், காயம்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்க வேண்டுமென்றும் வலியுறுத்துகிறேன்.”
பட்டாசு ஆலையில் தீ விபத்து ஏற்படுவது முதல் முறையல்ல
நம் மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவர் அவர்கள், அக்டோபர் மாதம் 23ம் தேதி அவரின் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்ட அறிக்கை .அவர் இந்த அறிக்கை வெளியிட்ட நாளில் இருந்து இன்று வரை எந்த பத்திரிகைகளும் இதற்கு முக்கியவத்துவம் அளித்தது போல் தெரியவில்லை. வருடா வருடம் நடப்பது தானே இது ஒன்றும் புதிதில்லை என்ற மனோபாவமாக இருக்க கூடும்.ஒரு வேலை வருடா வருடம் பத்திரிகைகளும் பேசிப்பேசி சலித்து போயிருக்கலாம்.
சமூக வலைத்தள போராளிகளின் கமெண்ட் செக்க்ஷன் ல் அடித்துக்கொள்ள தமிழ் தேசிய அரசியல் இருக்க இதைப்பற்றி பேசி என்ன ஆகப் போகிறது.
2009 இல் மட்டும் இரண்டு முறைக்கு மேல் விபத்து ஏற்பட்டிருக்கிறது இன்று இன்றைய ஆளுங்கக்கட்சி அன்று எதிர்கட்சியாகவும் அன்றைய ஆளுங்கட்சி இன்றைய எதிர்கட்சியாகவும் மாறியிருப்பதை தவிர்த்து தீ விபத்து நிகழாமல் தடுப்பதில் அரசாங்கமும் சிறு குறு நிறுவனங்ககளும் எந்த வகையிலும் அவர்களை மேம்ப்படுத்திக்கொள்ளவில்லை. ஏற்கனவே இருக்கும் சட்டங்கள் இன்னும் மேம்படுத்தவேண்டிய தேவை இருக்கின்ற போது இருக்கின்ற சட்டங்கள் எந்த அளவு முறையாக பின்பற்றப்படுகிறது என்பதை சரிவர கண்காணிப்பர் இல்லை.
பட்டாசு தடை மீதான பார்வை
விபத்துகள் என்றில்லாமல் பட்டாசு ஆலையில் வேலைப்பார்பவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம் அதில் முதலாவது நிச்சயமாக அவர்களின் வறுமையாக தான் இருக்க முடியும்.
பணியிடத்தில், பணியாளர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டிய சட்டங்களை, நிறுவனங்களையும் முதலாளிகளையும் பணியாளர்களையும் பின்பற்ற செய்வதில் மிகவும் பின்தங்கி இருக்கும் நாட்டில்; காசே கொடுத்தாலும் அநேகமானோர் விரும்பாத; தங்களின் தாய், தந்தை, தங்கை என்று யாரையும் அத்தகைய ஆபத்தான சூழலில் வேலைக்கு அனுப்ப விரும்பாத வேலையை அவர்கள் (பட்டாசு ஆலை தொழிலார்கள்)செய்வதற்கு அவர்களின் வறுமையே முதல் காரணமாக இருக்க முடியும். சட்டங்கள் கடுமையாக இல்லாத; இருக்கின்ற சட்டங்களும் சரியாக பின்பற்ற படாத நிலையில் இறைவன் அருளால் தீ விபத்தே நிகழாமல் போனாலும் கூட பட்டாசு ஆலை பணியாளர்கள் பாதுகாப்பாக இருக்கின்றார்கள் என்று அர்த்தம் இல்லை. இன்னமும் பல ஆலைகளில் வெடி மருந்துகளை, பணியாளர்கள் எந்த வித பாதுகாப்புமின்றி கையாளும் நிலையே இருக்கின்றது.இன்று அறிக்கை மூலம் குரல் கொடுப்பவர்களும் சரி; ஆட்சியில் இருப்பவர்களும் சரி; யாரும், எதிர்காலத்தில் விபத்துக்கள் நிகழாமல் இருப்பதற்கு நிர்வாக ரீதியில் ஏற்படுத்த வேண்டிய சீர்திருத்தங்களை பேசியதாகவோ செய்ய முற்பட்டதாகவோ தெரியவில்லை.
மாறாக இந்த விஷயத்தில் அரசியல்வாதிகள் மற்றும் மக்களின் கவனம் பட்டாசு வெடிப்பதற்கான, விற்பதற்கான தடையை பற்றியும் அத்தகைய தடை கலாச்சாரத்தின் மீதான; மதத்தின் மீதான தாக்குதல் என்பது போன்ற விவாதங்களுமே அதிகம் நடக்கின்றது என்பது கவலைக்குரிய விஷயம்.
ஒவ்வொரு தீபாவளிக்கு முன்பும் வெடி வெடிப்பதற்கான தடை பற்றியும் அதற்கான எதிர்ப்பு குரல்களும் எழுந்தவண்ணமே இருக்க அது சார் வழக்குகள் ஒவ்வொரு முறையும் நீதிமன்றங்களால் வெவ்வேறு விதமாக அணுகப்பட்டிருக்கின்றது. இந்த தடை விவகாரத்தை நாம் கலாச்சாரத்திற்கு எதிரான தாக்குதலாகவோ; மதத்திற்கு எதிரான தாக்குதலாகவோ பார்க்க வேண்டியதில்லை, அது அவ்வாறாகவே இருந்தாலும் கூட. காரணம், நம் பாரத கலாச்சாரத்தில் நெருப்பை வணங்கவே செய்துள்ளோம் . நெருப்பை கொண்டு நம்மையும் நம் இருப்பிடத்தையும் தூய்மைப்படுத்துவதையே பழகிவந்துள்ளோம்.நம் கொண்டாட்டங்களில் இருக்கும் திணிப்புகளும் பரிணாம வளர்ச்சிகளும் நம்மை இந்த இடத்தில் நிறுத்தியிருக்கின்றது. இயற்கையை வணங்கிய கலாச்சாரத்தை கொண்ட மக்கள் இயற்கைக்கு எதிரான ஒன்றின் மீதான தடையை கலாச்சாரத்தின் பெயரால் எதிர்ப்பது முறையுமில்லை.
பட்டாசு தடை மீதான வழக்கு ஒன்றில் நீதிபதி ஒருவர் வேலைவாய்ப்பை ஏற்படுத்துவது சவாலாக இருக்கும் சூழலில் இருக்கின்ற வேலைவாய்ப்பை நாம் ஏன் தட்டி பறிக்கவேண்டும்? தடை செய்வதற்கு பதில் நெறிப்படுத்தலாமே என்கிற சிந்தனையை முன்வைத்துள்ளார்.நம்மில் பெருபாலோனோரின் எண்ணவோட்டமும் அவ்வாறாகவே இருப்பதனால் இதனை அவசியமான ஒன்றாக கருதி கடந்துவிடுகிறோம்.ஆனால், பட்டாசு அவசியமானதும் இல்லை; பட்டாசு ஆலையில் வேலை பார்ப்பவர்களுக்கு மாற்று வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தர முடியாத அரசும் சமூகமும் சரியான அரசாங்கமோ சமூகமோ இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இன்று எதிர்க்கட்சிகளும் ஆளுங்கட்சியும் ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு விற்க விதித்திருக்கும் தடையை திரும்ப பெறக்கோரி வலியுறுத்துகின்றனர்.அதற்கு காரணமாக பாட்டாசு ஆலைகளை நம்பி இருக்கும் தொழிலார்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று வாதிடுகிறார்கள். கால மாற்றத்தில் எத்தனையோ தொழில்கள் அழிந்துவிட்ட நிலையில் சரியான அரசாங்கம் என்பது கால மாற்றத்தினாலோ புதிய சட்டங்களிலானாலோ ஒரு தொழில்த்துறை பாதிக்கப்படுமெனில் அந்த துறை சார்ந்த பணியாளர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தர எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் ஆரோக்யமான நல்ல அரசாங்கத்திற்கு அதுவே அழகு.
தீ விபத்துகளுக்காவும் வெடி மருந்துகளை கையாள்வதற்கு விதிமுறைகள் பின்பற்றப்படாமல் இருப்பதற்காகவும் ஒரு தொழில் துறையையே தடை செய்ய வேண்டும் என்கிற வாதத்தை நியாயப்படுத்தும் சிந்தனை சரியா என்கிற கேள்வி எழலாம். தீப்பெட்டி அவசியமானதாக இருந்து இன்று அதன் அவசியம் குறைந்து வருகிறது தானாக தீப்பெட்டி உற்பத்தித்தொழில் ஒரு நாள் இல்லாமல் போகும் அப்போது அந்த தொழில் சார்ந்தோருக்கும் மாற்று ஏற்பாடு நிச்சயம் தேவைப் படுகிறது . பட்டாசு அனாவசியமானது கூடுமானவரையில் அதன் அவசியத்தை குறைப்பது நல்ல முன்னெடுப்பாக தான் இருக்க முடியும்.
தீ விபத்து சார் மேலாண்மையில் மிகவும் பின் தங்கியிருக்கும் நம் நாட்டில் எந்த அரசியல்வாதிகளும் அது சார்ந்து கொண்டுவரப் பட வேண்டிய சீர்திருத்தங்களை பேசப் போவதும் இல்லை செய்யப்போவதுமில்லை காரணம் 50 ஆண்டுக்கும் மேல் அரசியலில் இருந்தவர்கள் இன்று வரை செய்யாததை இனிமேல் செய்து விடுவார்கள் என்று நம்புவது அறியாமையின் உச்சமாகத் தான் இருக்கும்.
பணியிடத்தில் பணியாளர்களுக்கான பாதுகாப்பு பட்டாசு ஆலைகள் மட்டுமில்லாமல் எல்லாத்துறைகளிலும் மேம்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது. அதனைப் பற்றி விரிவாக நம் வெளியீடான “தமிழகத்தின் கடைசி வாய்ப்பு ரஜினிகாந்த் ” என்னும் நூலில் ஏற்கனவே அலசியிருந்தோம்.
https://kathirvijayam.com/?cat=10
பின்வருவதும் கூட போன மாதம் எதிர்க்கட்சி தலைவர் அவர் சமூக வலைத்தள பக்கத்தில் சுட்டிக்காட்டிய ஒன்று தான்.
“மனித கழிவுகளை மனிதனே அள்ளும் பொழுது நிகழும் உயிரிழப்புகளில் 2013-2018 வரை முதலிடம் பிடித்த தமிழகம், மீண்டும் 2020-ல் முதலிடம் பிடிப்பதற்கான வாய்ப்புள்ளது என்னும் அவலம்!
1993-லேயே தடை விதிக்கப்பட்டும் #ManualScavenging கொடுமையை அதிமுக அரசு தொடர்ந்து அனுமதிக்கிறது; கண்டனங்கள்.
மனிதமற்ற இச்செயலுக்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும்!
மேலே இருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டது போல். அரசு அனுமதிக்கின்றது என்று எடுத்துக்கொள்ளமுடியாது. தடை ஏற்படுத்திய அரசாங்கமே (எந்த கட்சி ஆட்சியில் இருந்தது இருக்கின்றது என்பதை கருத்தில் கொள்ளாமல் அரசாங்கம் என்று மட்டும் கருத்தில் கொள்க) அனுமதிக்க வாய்ப்பில்லை. எல்லாவிஷயங்களையும் போல் கண்காணிப்பில் பின் தங்கி இருப்பதும் சட்டத்தை செயல்படுத்துவதில் இருக்க வேண்டிய கண்டிப்பும் இல்லாமல் இருப்பதுமே இத்தகைய நிகழ்வுகளுக்கு காரணம் என்பதை மறுக்க முடியாது அதோடு இதற்கான மாற்று தொழில்நுட்பத்தை வளர்த்தெடுப்பதிலும் நடைமுறைப்படுத்துவதிலும் பரவல் படுத்துவதிலும் எதிர்கட்சிகளையும் உள்ளடக்கிய அரசாங்கம் பெரிய அளவில் முனைப்பு காட்டவில்லை என்பதும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதே.
ஆட்சியில் இல்லாத போது அறிக்கை விடுவதும் ஆட்சியில் இருப்பவர்கள் ஆட்சியை தக்கவைக்க செய்யும் போராட்டமும் தொடர்கதையாகி, 50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து இருக்கும் பிரச்சனைகளுக்கு எந்த வித நிரந்தர தீர்வும் எட்டப்படாமல் அவைகளை நாம் சாதாரணமாக கடந்துவிடும் மனநிலையில் இருக்கின்றோம். காரணம், இல்லாத பிரச்சனைகளே இங்கு அரசியல் காரணங்களுக்காக மையப்படுத்தப்பட்டு அவைக்களுக்கான தீர்மானம் நிறைவேற்ற அழுத்தம் கொடுக்கும் எதிர்க்கட்சிகளும் நிறைவேற்றிய தீர்மானங்களை சாதனைகளாக கொண்டாடும் ஆளுங்ககட்சிகளுமே ஆகும்.
இவைகளுக்கான நிரந்தர தீர்வு “ஆட்சி மாற்றம் அரசியல் மாற்றம் இப்ப இல்லைன்னா எப்பவும் இல்ல”