வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும்!

 

புகழ் -என்னுடைய முதல் கணினி ஆசிரியை. சரியாக நினைவில்லை, நான் ஒன்றாம் வகுப்பிலோ அல்லது மூன்றாம் வகுப்பிலோ இருந்தேன். நான் படித்த அந்த பள்ளியில் அன்றைய கால கட்டத்தில் அந்த ஒரு கணினி தான் இருந்திருக்கும்.

 

மூன்றாம் வகுப்பு என்றே வைத்துக்கொள்வோம். தோராயமாக எட்டு வயசு குழந்தைகளுக்கு என்ன பயிற்றுவிக்க முடியும். புகழ் மிஸ், எங்கள் எல்லோரையும் வரிசையாக நிற்க வைத்து, அந்த வரிசை பிறழாதப்படிக்கு computer  lab க்கு அழைத்து சென்றார்கள். அந்த வரிசை மாறாமல் எங்களை கீழே அமர செய்து விட்டு அவருடைய இருக்கையில் அமர்ந்தார்கள். அவருடைய இருக்கையை விடவும் இன்னும் சற்று உயரமான மேசையில் அந்த பள்ளியின் ஒரே ஒரு கம்ப்யூட்டர் அமர்ந்து இருந்திருந்தது.

 

கம்ப்யூட்டரை பார்த்தபடி புகழ் மிஸ். எங்களை பார்த்தப்படி கம்ப்யூட்டர்.

 

புகழ் மிஸ் அப்போது தான், அதை ‘ON’ செய்கிறார்.

 

அதுக்கு அப்பறம் என்ன நடந்தது?

 

அதை சொல்வதற்கு முன், ஒரு குட்டி flashback.

பாட்சா படம் வந்த புதிதில், தியேட்டர்க்கு சென்று படம் பார்த்துவிட்டு வந்த பின், பக்கத்து வீட்டுகாரர்கள் என்னை கேட்டார்கள், “என்ன படத்துக்கு போன? உனக்கு என்ன புரிஞ்சுச்சு?”

 

அவர்களுக்கு நான் கதை சொன்னேன், “ரஜினி வருவார்; அப்புறம் கெட்டவன் எல்லாம் அடிச்சு சண்டை போடுவார் அப்பறம் படம் முடிஞ்சுருச்சு”

 

3மணி நேர கதையில் இவ்வளவு தான் அந்த வயதில் புரியும்.குழந்தைகளுக்கு அதை தாண்டி வேறு ஒன்றும் தேவை இல்லை.

 

இப்பொழுது, கம்ப்யூட்டர் தான் ரஜினி, புகழ் மிஸ் ஏதோ செய்தார்கள், “sky road” என்கிற game  open  ஆனது.

 

எப்படி open பண்ணாங்க? அது windows எத்தனாவது வருஷம் இதெல்லாம் கேட்க கூடாது.

 

புகழ் மிஸ் விளையாடிக்கொண்டு இருந்தபொழுது. அங்கு இருந்த எல்லார் மனதிலும் ஒரு சிந்தனை, இரண்டு extreme களை தொட்டு கொண்டு இருந்து இருக்கும். miss அவுட் ஆகிட கூடாது.இன்னும் அவுட் ஆக மாட்டேன்றாங்களே!

 

ஒரு வழியாக அவராக விளையாட்டை முடித்துக்கொண்டார்.

 

அதன் பின், ஒவ்வொருவராய்  அவர் விளையாட வைத்தார்.

 

curiosity ஐ தூண்டுவது தான் கற்பிப்பதில் முதல் நிலை.

 

வகுப்பை விட்டு வெளியே வந்து வரிசையில் நிற்கும் போதே எல்லோரையும் ஒரு ஆர்வம் பற்றிக்கொண்டது.காரணம்,அந்த வரிசையில் இருந்த பெரிய வீட்டு குழந்தைகளின் வீடுகளில் கூட அப்போது computer இருந்திருக்கவில்லை.

 

புத்தகத்தில் படமாக பார்த்த கம்ப்யூட்டரை நேரில் பார்க்கப் போகிறோம் என்கிற ஆர்வம்.

 

இந்த ஆர்வம், lab க்குள் சென்றவுடன், புகழ் மிஸ் கரும்பலகையில் ஏதேதோ எழுத ஆரம்பித்து, கதைக்க ஆரம்பித்து இருந்தால், அந்த ஆர்வம் தண்ணி ஊற்றி அணைக்கப்பட்டு இருக்கும்.

 

விளையாடுவதும் கூட கற்றலின் ஒரு பகுதியே. எந்த ஒரு விஷயத்தையும் கற்று கொள்ள அதன் மீது ஒரு ஆர்வம் வர வேண்டும்; ஆசை வர வேண்டும்; “இதை கொண்டு விளையாட முடியுமா?” இன்னும் வேற என்னவெல்லாம் செய்யலாம் என்கிற கேள்வி வர வேண்டும்; அந்த கேள்வி தான் நாம் இதைப்பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று நம்மை உந்தித்தள்ளும்.

 

உந்தித்தள்ளி என்ன செய்ய! கம்ப்யூட்டரும்  sky  ரோடும் நினைவில் இருந்த அளவிற்கு கூட புகழ் மிஸ் முகம் நினைவில் இல்லை. காரணம், அந்த வருடத்திற்கு பின் புகழ் மிஸ், பள்ளியை விட்டு விலகிவிட்டார். அதன் பின் ஒரு மிஸ்சும் கம்ப்யூட்டர் ஐ கண்ணில் காட்டவில்லை.

 

 

cut பண்ணி, ஆறாம் வகுப்பு வந்தால்.புது பள்ளி, ரொம்ப புது கம்ப்யூட்டர் miss, 300 ரூபாய் கட்டினால் கம்ப்யூட்டர் கற்கலாம்.

 

புகழ் மிஸ்சும் sky  road game உம்  இல்லாமல் இருந்து இருந்தால், “300 ரூபா தனியா வேற கட்டி இதுக்கு தனியா நோட்டு போட்டு இதை வேற படிக்கணுமா அப்படி ஒன்னும் அவசியம் இல்லை” என்று கடந்து இருப்பேன்.

 

unfortunately, புகழ் மிஸ் உம்  sky road  game  உம்  ஏற்படுத்திய ஆர்வம், “நான் computer  கிளாஸ் போறேன் 300 ரூபாயை நூறு நூறாக 3 தவணையில் கட்டலாமாம்” வீட்டில் விவரமாக பவ்யமாக கேட்டுக்கொண்டு இருக்கின்றேன்.

“சரி கட்டுவோம்  போ ” expectedly unexpected  answer.

 

அம்மா, காசு இல்லை என்பதை சொல்ல மாட்டார். அதே வேளையில், படிப்பதற்கென்றால் எப்படியும் காசு கொடுத்துவிடுவார். ஐந்தாம் வகுப்பின் போது, இதே போல், கராத்தே கற்க வேண்டும் என்று கேட்டதற்கு, காசு இல்லை என்று சொல்லாமல், உங்க மிஸ் என்ன சொன்னாங்க? அவங்க சரி ன்னு சொன்னா  நான் அனுப்புறேன் ன்னு என்றார், நானும் வெள்ளந்தியாக சென்று என் வகுப்பு ஆசிரியையிடம் சென்று அம்மா சொன்னதை சொன்னேன்.

 

கண்ணில் பேசிக்கொள்வார்கள் என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள், என்னுடைய ஆசிரியைகளிடம் காற்றிலேயே பேசிக்கொள்வார் என்னுடை mummy.

 

நான் அம்மா இப்படி சொன்னார்கள் என்று சொன்னது தான் தாமதம், மிஸ் புரிந்துகொண்டார்கள்,(scene  ல நான் தானே சின்ன பையன்). முதலில் கையெழுத்தை திருத்து அப்புறம் கராத்தே பழகலாம்  என்று விட்டார். கதை முடிந்தது, கையெழுத்தும் திருந்தவில்லை கராத்தேயும் பழகவில்லை.

 

இப்படியான நாடகங்களில் இருந்து தப்பி பிழைத்த கம்ப்யூட்டர் படிக்க சென்றால், புது பள்ளியில் பழைய கம்ப்யூட்டர் . மஞ்சுளா வெள்ளையா என்று சொல்ல முடியாத நிறத்தில் ஒரு computer. பள்ளி நேரத்திற்கும் முன்பாகவே பள்ளிக்கு செல்ல வேண்டும். புகழ் மிஸ் கட்டியெழுப்பிய ஆர்வத்தை கொஞ்சம் கொஞ்சமாக இடித்து கொண்டு வந்தார்கள்.கம்ப்யூட்டரை கண்ணில் காட்டி கரும்பலகையில் பாடம். ( எப்படா on பண்ணுவீங்க!)

ஒரு நல்ல நாளில், அந்த மஞ்சள் கம்ப்யூட்டர் “on” செய்யப்பட்டு நாங்கள் அதை நெருங்கியும் விட்டோம். அந்த கம்ப்யூட்டருக்கு படம் என்றால் என்னவென்றே தெரியாது. இன்று இருக்கும் ஒரு கம்ப்யூட்டர் இல் நீங்கள் மணி பார்க்க வேண்டும் என்றால் வலது புறத்தின் கீழ் ஓரத்தில் பார்த்தீர்கள் என்றால் தெரிந்து விடும். நீங்கள் பிறந்த வருடத்தில் நீங்கள் பிறந்த தேதி என்ன கிழமை என்று பார்க்க வேண்டும் என்றால் காலண்டரில் அதிக பட்சம் 4 கிளிக் பண்ணினால்  போதும். ஆனால், அந்த மஞ்சள் வெள்ளை கம்ப்யூட்டர் அப்படி இல்லை, அதை வேலை வாங்க    நீங்கள் சிறந்த நினைவாற்றல் கொண்டவராக இருக்க வேண்டும். ஒவ்வொன்றுக்கும் ஒரு கமாண்ட் (command ) type  செய்ய வேண்டும்.

 

கம்ப்யூட்டர் இப்படியாக தான் இருந்தது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றல்  MS -DOS  இல் linux போன்றவற்றில் வேலை செய்வது போல எல்லாத்துக்கும்  ஒரு command கொடுக்க வேண்டும்.

time  பார்க்க நீங்கள் time  என்று type  செய்ய வேண்டும். இதை எளிமைப் படுத்த வந்தது தான் graphic  user  interface.

command களுக்கு பதிலாக படங்கள்(icon கள்), இந்த GRAphic  user interface  வந்த பின் தான் கம்ப்யூட்டர் பயன்பாடு சுலபமானது. smart phone கள்  கூட computer  தான். யார் வேண்டுமென்றாலும் இன்று கம்ப்யூட்டர் ஐ புரிந்து கொள்ள முடிகிறது என்றால் அதற்கு graphic  user  interface  தான் காரணம்.

 

ஒரு file  அல்லது folder ஐ திறக்க; மணி பார்க்க எதற்கும் command  தேவை இல்லை அந்த icon களை தட்டினால் போதும்.

 

இந்த graphic  user  interface  நமக்கும் computer க்கும் இடையில் இருக்கும் ஒரு ஊடகம். command களும் அப்படியானதே ஆனால், பயன்படுத்த அத்தனை எளிதானது அல்ல. அல்லது , command கள்  எல்லார்க்குமானது அல்ல.

computer ஐ பொறுத்தவரையில் நாம் பார்க்கும் எதுவும் அதற்கு தெரியாது அதை பொறுத்த வரையில் எல்லாமே பூஜ்ஜியமும்  ஒன்றும் தான் (zeroes  and  ones ). அதன் உலகில் ஒளி ஒலி  எதுவும் கிடையாது வெறும் zeroes  and  ones.

 

நாம் காணுகிற உலகம் வேறு  கம்ப்யூட்டர் அது புரிந்து கொண்டு இருக்கும் உலகம் வேறு.

 

நமக்கு எழுத்துருக்களாக தெரிவது, நிறங்களாக தெரிவது, படங்களாக தெரிவது என்று இது எல்லாமே computer ஐ பொறுத்தவரையில் zeroes  and ones .

 

இந்த computer மனிதனுக்கு பயன்படுவதற்கு; அல்லது சாமானிய மனிதர்களும் புரிந்து கொண்டு பயன்படுத்துவதற்கு, command களும்  graphic  user  interface  தேவைப் படுகிறது. அப்போ கடவுள்!?

 

கடவுளை புரிந்து கொள்ளவும்  ஒரு curiosity  தேவைப்படுகிறது.கடவுளைப்பற்றிய அத்தனை முதல்நிலை அறிமுகங்களும் கடவுளை நோக்கி உங்களை இழுப்பதற்கான,கடவுள் பற்றிய உங்கள் curiosity ஐ வளர்ப்பதற்கான ஏற்பாடுகளே!

 

படிப்பில் ஒண்ணாம் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என்று ஒவ்வொரு வகுப்பாக கடப்பது போல், கடவுள் பற்றிய தேடலிலும் நாம் ஒவ்வொரு வகுப்பாக கடக்க வேண்டும். அப்படி கடக்காமல் நம்மில் பலர் அப்படியே நின்றுவிடுகிறோம் இன்னும் பலர் அறிவாளித்தனமாக பேசுவதாக நினைத்துக்கொண்டு முட்டாள்தனமான கேள்விகளை எழுப்பிக்கொண்டு இருக்கின்றோம்.(I did  not mean dravidian  stocks -)

 

சமீப காலமாக  இந்தியர்கள் ஹிந்து இல்லை, தமிழர்கள் ஹிந்து இல்லை, சைவம் வைணவம் இரு வேறு மதங்களாக இருந்தது. சிவனுக்கு தான் தமிழ் மன்னர்கள் கோவில் எழுப்பியுள்ளார்கள் என்று பல்வேறு விதண்டா வாதங்களும் அதை சுற்றும் சர்ச்சைகளும் எழுந்த வண்ணமாக இருக்கின்றது.

 

சைவமும் சித்தாந்தமும் சரி, வைணவ கடவுளாக அறியப்படுகிற கிருஷ்ணரின் பகவத் கீதையும் சரி. இரண்டும் ஒரே மாதிரியான கருத்துக்களையே முன்வைக்கின்றது.

 

இறைவன் ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை, அலியும் இல்லை. அவனுக்கு உருவவும் இல்லை.

 

சரி, அப்படியென்றால் நாம் வழிபடும் தெய்வங்கள் அந்த உருவங்களை என்ன சொல்வது?

 

graphic  user  interface -கடவுளை புரிந்து கொள்ள கடவுளிடம் தொடர்ப்பை ஏற்படுத்திக்கொள்ள கடவுளே ஏற்படுத்தி வைத்த ஏற்பாடு தான் இந்த தெய்வங்களும் உருவங்களும்.

 

ஆணும் இல்லை, பெண்ணும் இல்லை, அலியும் இல்லை. அவனுக்கு உருவவும் இல்லை என்பதின் graphical user  interface  தான் linga வடிவம்.

 

ஒவ்வொரு தெய்வங்களும் ஒரு ஆற்றல் நிலையின், ஒரு தத்துவத்தின் graphical  representation.

 

இறைவனின் படைத்தல் தத்துவத்தை குறிக்கின்ற graphical representation தான் ப்ரம்மா -the emptiness (எதுவமே இல்லாததில் இருந்து தான் எல்லாமே தோன்றி இருக்கின்றது).

 

நிலைத்தல் அல்லது காத்தல் என்கிற நிலையை அல்லது தத்துவத்தை குறிக்கும் Graphical  representation  தான் விஷ்ணு.

 

இந்த தோற்றமும் நிலைத்தலும் நிலைத்து இருக்க செய்யும் நிலை எதுவோ அதுவே தான் சிவன்.  எளிமையாக அதை அழித்தல் என்று புரிந்து வைத்து இருக்கின்றோம். அழிவு தான் தோற்றத்தின் தொடக்கம். நிலைத்தலை நிலைக்க செய்வதும் அழிவு தான்.

 

நம்முடைய பழைய ரத்த அணுக்கள்  கல்லீரலை அடைந்து அழிந்தால் தான் புதிய ரத்த அணு பிறக்கும் அது நிகழாமல் போனால் புதிய ரத்த அணுக்கள் பிறக்காது அப்படியென்றால் அங்கே ரத்த அணுக்கள் நிலைக்காது.

 

ஒருவர் ஏதோ காயம் காரணமாக உடம்பில் உள்ள ரத்தத்தை இழந்து விட்டார் என்று கொள்ளுங்கள்; அவருக்கு வேறு ஒருவர்  உடம்பில் இருந்து செலுத்தும் ரத்தம் அப்படியே அவரது உடம்பில் ஓடிக்கொண்டிருக்க போவதில்லை. அது கல்லீரலை அடைந்து அங்கே அழிய வேண்டும் அப்போது தான் புதிய ரத்த அணுக்கள் பிறக்கும்.

 

இப்படியாக நிலைத்தலும் தோற்றமும் நிகழ்வதற்கு காரணமாய் இருக்கும் தத்துவத்தை சிவம் என்றார்கள்.இந்த ஆக்கல் தான் “ஆ” நிலைத்தல் “உ” அழித்தல் “ம்” என்று தான் ஆம் என்கிற சப்தம் என்கிறார்கள். phonographic representation

 

siva-the ultimate level of god – within  the  limit of  our  knowledge or imagination.

நமக்கு புரியாத நிலையிலும் கூட கடவுள் இருக்கின்றார்.தோன்றாத நிலை-தோற்றம் இல்லாத நிலை.கீதையில் பக்தி யோகத்தில் அதைப்பற்றி சொல்லும் பொழுது உடம்பை கொண்ட மனிதர்களும் தோன்றாத நிலை குழப்பத்தை ஏற்படுத்தலாம் என்கிறார் கிருஷ்ணர்.

 

நமக்கு புரிந்த நிலையில் புரிந்த மாதிரியெல்லாம் இறைவனை வழிபடும் வண்ணம் நாம் ஆலயங்களை எழுப்பி வைத்து இருக்கின்றோம். சைவம் வைவனம் என்று அதை தாண்டி எந்த சமயமாக இருந்தாலும் எந்தவித நம்பிகையையோ குழப்பமோ எல்லாம் இறைவனால் ஏற்படுத்தப்பட்டதே.

நம்முடைய convenience காக இறைவனால்  ஏற்படுத்தப்பட்ட விஷயங்களை வைத்துக்கொண்டு நீ வேற நான் வேற என்று அடித்துக்கொண்டு இருக்கின்றோம். அது போதாது என்று தமிழர்கள் இந்துக்கள் இல்லை சைவம் வைணவம் தான் இருந்தது என்று இதை மேலும் பிரிக்கப்பார்ககிறார்கள்.

 

ஞானம் அடைந்த எல்லோரையும் புத்தர் என்று சொல்லும் வழக்கம் இருந்தது. அது போல, யோகத்தில் மூச்சை கட்டுப்படுத்தி தன்னுளே இறைவனை காண வல்லவர்களானவர்களை சிவன் என்றே சொல்கிறார் திருமூலர். இந்த சித்தம்(ஆத்மா) மீண்டும் இறைவனையே அடையும் பொழுது அதை இறைவனிடம் இருந்து எப்படி வேறுபடுத்தி கூற முடியும். அதனால், பூமியில் வாழ்ந்தவர்களுடைய பெயர்களோடு சைவ வைணவ ஆலயங்கள் நிறுவப்பட்டு இருக்கலாம். ஆனாலும் ,நம் பாரத சமூகத்தில் வெவ்வேறு பெயர்களை தாங்கிய சைவ வைணவ ஆலயங்கள் எல்லாம் தத்துவ நிலைகளின் graphical  representation யே தான்.

 

கடவுள் ஒரே ஒருவர் தான்  தான்.ஓவ்வொருடைய புரிதலுக்கு ஏற்பவே அவர் வேறுபடுகிறார். இந்த கட்டுரையில் நான் எதையும் “quote” செய்யவில்லை கொஞ்சம் சோம்பேறித்தனம், என்னுடைய இந்த சோம்பேறித்தனம் உங்கள் curiosity ஐ தூண்டும் என்று நம்புகிறேன் நீங்களாக கீதையையோ சைவ சித்தாந்தங்களையோ வாசிக்க தொடங்குவீர்கள் என்றும் நம்புகிறேன்.

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *