வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும்.

உங்களுக்கு வங்காளம் எங்க இருக்கு என்று தெரியுமா? சரி, பெங்கால் எங்க இருக்கு? வெஸ்ட் பெங்கால்?
இப்பொழுது சொல்லுங்கள் பெங்கால் என்றவுடன் உங்களுக்கு நினைவுக்கு வந்தது எது?

கொல்கத்தா?

ஜெகதீஸ் சந்திர போஸ் ?

தாகூர்?

சரி,

சுபாஷ் சந்திர போஸ்?

அல்லது

வங்காளப் புலி (bengal tiger )

நீங்கள் உங்கள் வாழ்க்கையில் கிரிக்கெட் பார்த்ததுண்டா?

மேலே இருக்கும் பெயர்களை வரிசைப்படுத்தினால், என் போன்றவர்களுக்கு, கிரிக்கெட் அதிகம் பார்த்து பழகியவர்களுக்கு, முதலில் நினைவுக்கு வருவது, கங்குலியின் பெயராக தான் இருக்கும்.

நீங்கள் கூகிளில் “prince of kolkatta” என்று தட்டுங்கள் கூகிள் உங்களுக்கு கங்குலியை தான் முதலில் காட்டும்.

2012 இல், ரவி சாஸ்திரியும் கங்குலியும் வர்ணனையாளர்களாக இருந்த பொழுது, சிறந்த கிரிக்கெட் வீரர்களின் பெயரை அவர்கள் மாநிலத்தைச் சேர்ந்த மைதானங்களில் உள்ள stand களுக்கு வைப்பதுண்டு. அதனைச் சுட்டி ரவி சாஸ்திரி கொல்கத்தாவில் கங்குலி பெயரில் stand அல்லது pavilion இருக்கிறதா ? என்பது போல நக்கலாக கேட்கிறார்.
கங்குலியின் பதில், “The ground belongs to Ganguly!” விக்ரம் trailer இல் கமல் சொன்னது போல சொல்ல வேண்டுமென்றால்.
“****தா ground ஏ என்னது தான் டா என்பது தான் அந்த பதில்”

அவர், திமிரில் அப்படி பதில் அளிக்கவில்லை. அவர் அப்படி சொன்னதற்கு ஒரு காரணம் இருக்கின்றது.

நீங்கள் கூகிளில் “prince of kolkatta” என்று தட்டுங்கள் கூகிள் உங்களுக்கு கங்குலியை தான் முதலில் காட்டும்.

2012, கங்குலியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுக்கவில்லை, புனே அணிக்காக ஐபில் போட்டியில் பங்கேற்ற கங்குலி,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தாவில் விளையாடும் போட்டி, கொல்கத்தாவில் அவர் விளையாடிய கடைசிப் போட்டி,புனே அணி தோல்வியை நோக்கி சென்று கொண்டு இருக்கின்றது. அன்றைய தினத்தில், அந்த கூட்டம் எந்த ஒரு அணியின் வெற்றி தோல்வியையும் பற்றி கவலை கொள்ளவில்லை.6 விக்கெட் விழுந்த பின்னால் இறங்கிய கங்குலியை மட்டுமே எதிர் நோக்கியிருந்தது.
முதல் விக்கெட் விழுந்தவுடன் இறங்கும் கங்குலியை ஒவ்வொரு விக்கெட் இழப்பிற்கு பின்னரும் கூட்டம் எதிர் நோக்கியிருந்தது.கங்குலி இறங்க வேண்டுமென்பதற்காக அவர்கள் விக்கெட் விழ வேண்டும் என்றும் கூட வேண்டியிருப்பார்கள்.

6 ஆவது விக்கெட் விழுகிறது. தோல்வியை நோக்கி சென்று கொண்டிருக்கும் அணியில் ஏழாவது பேட்ஸ்மேனாக அவர் ட்ரெஸ்ஸிங் ரூமை விட்டு வெளியில் வந்தது தான் தாமதம். அங்கிருந்த ஒவ்வொருவருள்ளும் ஏதோ புத்துணர்ச்சி பாய்ந்து, இனி அவர்கள் வாழ்நாளில் பேசவே முடியாத அளவிற்கு ஆர்பரிக்கின்றார்கள்.

கொல்கத்தாவில் நடத்தப்பட்ட போட்டியில் மொத்த ஆதரவும் கொல்கத்தாவிற்கு எதிராக இருந்தால் எப்படியிருக்கும். உணர்ச்சிகரமான அந்த தருணத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. கொல்கத்தா மட்டும் இல்லை, 90ஸ் கிட்ஸ் பலரின் ஆதர்ச நாயகன்.

அரசனாகவோ இளவரசனாகவோ இருப்பதற்கு அரண்மனை தேவை இல்லை. கீரிடம் தேவை இல்லை. மக்களின் ஆதரவும் அன்பும் போதுமானது.

இன்றும் 90ஸ் கிட்ஸ்களின் மனதில் கேப்டனாகவே சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் கங்குலி, ரவி சாஸ்திரிக்கு அப்படி பதிலளித்தில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

வங்காளத்தில் இருந்து வந்த கிரிக்கெட் வீரர்களில் இதுவரை இந்தியாவிற்காக நெடுங்காலம் விளையாடிய; இந்திய அணியையே கட்டமைத்த ஒரு ஆளுமை. பேர் வச்சாலும் வைக்காமல் போனாலும் இந்திய கிரிக்கெட் உலகம் அவர் பெயரை உச்சரித்துக்கொண்டு தான் இருக்கும். இன்று கொல்கத்தா மைதானத்தில் அவர் பெயரில் ஒரு stand ம் இருக்கின்றது.

அப்படியே கொல்கத்தாவில் இருந்து,சிங்கப்பூர் செல்வோம்.

லீ குவான் யூ. சிங்கப்பூரை தெரிந்தவர்கள் எல்லோருக்கும் தெரிந்த பெயர்.

அவர் இன்று இல்லை. ஆனால், இன்று நீங்கள் சிங்கப்பூர் சென்றீர்கள் என்றால்? விரிவான சாலைகள், அவசர ஊர்திகள் நிறுத்துவதற்கு பிரத்தேயகமாக இடம் ஒதுக்கப்பட்டு இருக்கும் கட்டிடங்கள்.நாட்டில் பொழியும் மழையை ஒரு துளி விடாமல் சேகரிக்கும் வண்ணம் இருக்கும் நீர் மேலாண்மை என்று சிங்கப்பூர் எனும் குட்டி தீவின் பிரம்மாண்டத்தை கண்டு வியந்து கேட்பீர்கள். எப்படி! சிங்கப்பூர் இப்படி இருக்கு! என்று அப்போது காற்றில் ஒரு பெயர் ஒலிக்கும்.
ஆம். திரும்பும் திசையெல்லாம் தன் பெயர் சொல்லுமளவிற்கு தன் நாட்டை செதுக்கி வைத்து இருக்கின்றார்.

பக்கத்துக்கு வீட்ல ஒரு சோபா இருந்தா? அதே மாதிரி ஒரு சோபா நம்ம வீட்லயும் வாங்கணும் நினைப்போம். நீங்கள் லீ குவான் யூ பற்றி தெரிந்துகொண்டால் அவரைப் போன்ற ஒரு தலைவர் வேண்டுமென்று விரும்புவீர்கள்.

அங்குலம் அங்குலமாய் சிங்கப்பூரை செதுக்க தன் வாழ்நாளின் ஒவ்வொரு நொடியையும் அர்ப்பணித்தவர்.

ஒரு நாடே அவர் பெயரை சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுது. நாட்டில் இருக்கும் பஸ் ஸ்டான்ட் க்கும் விமான நிலையத்திற்கும் அவர் பெயரை சூட்டும் அவசியம் அவருக்கு ஏற்படவேயில்லை.

அவர் காலத்திற்கு பின்னர், அப்படியான பரிந்துரைகள் மேல் நடந்த விவாதத்தில், பதிலளித்த அந்நாட்டு பிரதமர். இதில் நாம் அவசரம் காட்ட தேவை இல்லை. சிங்கப்பூரை எந்த பாதையில் இட்டுச் சென்றாரோ அதிலிருந்து சிங்கப்பூர் வழுவாமல் இருப்பதே அவருக்கு நாம் செய்யும் மரியாதையாக இருக்கும் என்றார்.

சரி, இப்ப அப்படியே நம்ம ஊருக்கு வாங்க.

ஆம்புலன்ஸ் செல்ல இடம் இல்லாத தெருக்களும் நெருக்கமான வீடுகளும். சாக்கடை செல்லும் வழியிலும் செல்வதற்கும் வழி இல்லாமல் தவிக்கும் மழை நீர்.காற்றை நெருக்கி சாலைகளை அளந்து கொண்டு இருக்கும் வானகங்கள் இப்படி நெருக்கப்பட்டு கொண்டு இருக்கும் காற்று பெரு மூச்சு விடுமே தவிர யார் பெயரையும் சொல்லாது.
அதனால்,சில பெயர்களை சொல்வதற்காக சில வேலைகளை செய்ய வேண்டிய நிர்பந்தம் இங்கே இருக்கின்றது.

அப்படி செய்யப்பட்ட வேலைகளின் பலனாக நீங்கள் பார்த்துக்கொண்டு இருப்பது தான் ஊருக்கு ஒரு கே.கே. நகர், ஒரு அண்ணா நகர். அப்பறம்,அண்ணா நிலையம், அண்ணா விமான நிலையம், அண்ணா யூனிவர்சிட்டி ,அண்ணா சாலை,எம்.ஜி.ஆர். சாலை, கலைஞர் சாலை, அண்ணா சமாதி,எம்.ஜி.ஆர். சமாதி, கலைஞர் சமாதி.

இவையல்லாமல் நட்ட நாடு ரோட்டிலே லாரி வரும் பாதையிலே லாரி ஓட்டுனர்களுக்கு எடுத்துச் சொல்ல, தாடி வச்சு ஒரு சிலை, கண்ணாடி போட்டு ஒரு சிலை, குல்லா வச்சு ஒரு சிலை.

கங்குலிக்கும் லீ குவான் யூ விற்கும் இல்லாத ஒரு அவசியம் இங்கே நிச்சயமாய் இருக்கின்றது. இங்கே சொன்னால் தான் தெரியும் அதனால், 1.17 கோடி செலவில் 16 அடி உயரத்தில் துணை ஜனாதிபதி திறந்து வைக்க போகும் கலைஞர் சிலைக்கு இங்கே இல்லாமல் இல்லை.

சுற்றுலா போன்ற விஷயங்களையும் காரணமாக சேர்த்துக்கொண்டு 3000 கோடியில் ஒரு சிலை அமைக்கும் பொழுது மட்டும் தான் நாம் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும். வீதிக்கு ஒன்று என்று சிலை அமைக்கும் பொழுது அதன் தேவையை நாம் புரிந்து கொள்ள வேண்டும் .

அதை விடுத்து, சமீபத்தில் திருவாரூர் நகராட்சி கூட்டத்தில் தெற்கு ரத்த வீதிக்கு கலைஞர் பெயர் சூட்ட சொல்லி தீர்மானம். போட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வாய் மொழியாக அதை நிறுத்த சொல்லி உத்தரவிடும் சங்கடமான நிலைக்கு முதல்வரை தள்ளியது போல செய்யக்கூடாது.எப்போதும் மாத்தி யோசிப்போம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *