அமிதாப்பை விட பெரிய ஆளா ரஜினிகாந்த்?

நிச்சயம் இல்லை. அதே வேளையில்,ரஜினி, இங்கு இருக்கும் யாரை விடவும்   சளைத்தவர் இல்லை .அரசியலில் இருக்கும் பெரிய தலைகளில் இருந்து அரசியலில் இருக்கும் குழந்தைகளை வரை யாருக்கும்-ஸ்டாலின் தொடங்கி சீமான் வரை யாருக்கும், ரஜினி சளைத்தவர் இல்லை.

பண்பில், நிச்சயமாக மிகப்பெரிய ஆள் தான் ரஜினி.

அவர் படத்தில் வந்த வசனம் தான் ஞாபகம் வருது “இந்த உலகத்தில் உன்ன விட பெரியவன் யாரும் இல்லை அதனால நீ யாருக்கும் பயப்படாத அதே மாதிரி உலகத்தில் உன்ன விட சின்னவன் யாரும் இல்லை அதனால உன்ன விட யாரையும் தாழ்வா நினைக்காதே” விசு அவர்கள் எழுதி தலைவர் படத்தில் வரும் வசனம்.எழுதிக்கொடுத்து பேசிய வசனம் தான் ஆனாலும், ரஜினி இன்று வரை அதன் படி நடப்பதாலேயே அந்த அவர் படத்தில் வரும் வசனங்களும் பாடல் வரிகளும் ஒரு பலம் பெறுகின்றது. ரஜினி மேற்சொன்ன வசனத்தின் படி வாழ்ந்து வருவதாலேயே அவர் படத்தில் வரும் வசனங்களும் பாடல் வரிகளும் தனித்துவம் பெறுகிறது தனி பலம் பெறுகிறது. ரஜினி, அத்தகைய பண்பாளராக இருப்பதாலேயே, ரஜினி ரசிகர்களால், பொதுவெளியில் ரஜினி மீது,வைக்கப்படும் பண்பில்லாத விமர்சனங்களுக்கு,

“அமிதாப்பை விட ரஜினி பெரிய ஆளா னு தெரியாது, தக்காளி உன்ன விட எங்க தலைவர் பெரிய ஆள் தான்”என்று  பதில் தர முடிவதில்லை.

ரஜினியின் ரசிகர்களும் காவலர்களும் பொறுமையாக இருப்பதற்கு காரணம்,அவர்கள் ரஜினியை போன்றே இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள்.ஒரு தலைவன் மாற்றத்தை சாத்தியப்படுத்துவது இப்படியாக தான் இருக்க வேண்டும்.

“Be the change you wish to see in this world”-Gandhi

ரஜினி, தான் அரசியலில் தான் கொண்டு வர விரும்பும் மாற்றமாகவே இருக்கின்றார். ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து அரசியல் செய்து வந்ததை நிறுத்தி மாற்றத்தை தன்னில் இருந்து தொடங்கிறார். அவரை பின்பற்றி அவரின் கோடிக்கணக்கான காவலர்களும் அவர் வழியில் நிற்கின்றார்கள்.வேலையின்மை,வறுமை இவையெல்லாம் தான் அரசியலில் என் எதிரி என்கிறார். தான் ஒரு வழியை பின்பற்றி அல்லது உருவாக்கி அந்த வழியில் தன் பின்னால் வரும் பெருங்கூட்டத்திற்கு ஒளியாய் நிற்பவர் எவரோ அவரே தலைவர்.இவர்(ரஜினி) தலைவர்.

மக்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இன்று இருக்கும் இரு பெரும் இயக்கங்களை எதிர்த்து ஒரு மாற்றத்தை தமிழகத்தில் சாத்தியப்படுத்தும் வல்லமை நிச்சயமாக அமிதாப் அவர்களுக்கு இல்லை. ரஜினியை விமர்சனம் செய்ய  தமிழக அரசியல் களத்திலும் சினிமா களத்திலும்  இல்லாத அமிதாப்பை துணைக்கு அழைத்த விதத்தில் சீமான் அமிதாப்பை விட தான் பெரிய ஆள் இல்லை என்பதை ஒப்புக்கொண்டுவிட்டார். ஆக, மாற்றத்தை  சாத்தியப்படுத்தக்கூடிய வல்லமை ரஜினி ஒருவருக்கு மட்டுமே இப்போது இருக்கின்றது.மாற்றம்  தான் வேண்டுமெனில், மக்கள் ரஜினி மீதான சிறுபிள்ளைத்தனமான விமர்சனங்களை கருத்தில் கொள்ளாமல் ரஜினியின் பின் அணி சேர்ந்து எழுச்சி கொள்ள வேண்டிய தேவை இருக்கின்றது. ஏனெனில், இப்ப இல்லன்னா எப்பவும் இல்ல.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *