மக்களவைக்கு ஒரு கடிதம்-12; காக்காத காப்பீடுகள் காக்கட்டும் இனிமேல்!
இங்கே அநேகமான ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்கள் பல மருத்துவப் பிரச்சனைகளுக்கு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை எடுத்துக்கொள்வதில்லை. பல சமயங்களில் அதற்கு அவசியம் இருப்பதும் இல்லை. என்ன பிரச்சனை என்று கண்டுபிடிக்கச் செய்யும் பரிசோதனைகளே ஆயிரங்களிலும் லட்சங்களிலும் முடிந்துவிடுகிறது.