கற்பழிப்பு குற்றங்களுக்கான தண்டனைகள் பற்றியும் கற்பழிப்பு குற்றங்கள், எந்த ஊரில், எந்த மாநிலத்தில் நடக்கிறது? யார் ஆட்சியில் நடக்கின்றது? என்பதை பற்றி தீவிரமாய் ஆராய்ந்துகொண்டும் பேசிக்கொண்டும் திரியும் நாம் கவனிக்க வேண்டிய; மாற்றிக்கொள்ள வேண்டிய; பேச வேண்டிய விஷயங்களும் இருக்கின்றது.
சமீபத்தில் படித்த இரண்டு செய்திகளே இதை பற்றி எழுத தூண்டியது.
1) 7 வயது சிறுவனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 5 வயது சிறுமி
2) பணக்குடியில் வீட்டின் ஓட்டை பிரித்து இறங்கி மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்.
கற்பழிப்பு குற்றங்கள் தொடர்பான விவாதங்கள் எழும் போதெல்லாம் பேசுபொருளாக இருப்பது அத்தகைய குற்றங்களுக்கான தண்டனை கடுமையாக்கப் பட வேண்டும் என்பதும் பெண்கள் அணியும் ஆடைகளைப் பற்றிய விவாதமும் தான்.
கண்காணிப்பை தீவரப்படுத்துதல்
நமது வெளியீடான “தமிழகத்தின் கடைசி வாய்ப்பு ரஜினிகாந்த்” எனும் புத்தகத்தில் தண்டனைகள் கடுமையாக்கப்படுவதை விட கண்காணிப்பை தீவரப்படுத்துவதே குற்றங்களை குறைக்கும் என்பதை பற்றி பேசியிருந்தோம்.
பாலியல் வன்கொடுமைகளை நிர்வாக ரீதியிலாக அணுகும் போது கடுமையையான தண்டனைகள் சட்டமாக்கப்படுவதன் தேவை இல்லாமல் இல்லை. அதே வேளையில் தண்டனைகள் மட்டும் கடுமையாக்கப்பட்டு. நாட்டில் பாதுகாப்பு சார் கண்காணிப்பில் தீவிரம் இல்லாமல் இருக்குமானால் நடக்கும் குற்றங்களுக்கு யாரை வேண்டுமானாலும் குற்றவாளிகளாக ஆக்கிவிட முடியும் என்பதை முற்றிலும் மறுத்துவிட முடியாது. கூடுமானவரையில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.கூடுமான வரையில் பொது வெளிகளில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட வேண்டும். நாம் நமது வெளியீட்டில் (“தமிழகத்தின் கடைசி வாய்ப்பு ரஜினிகாந்த்”) சொல்லியிருப்பது போல் கண்காணிப்பை தீவரப்படுத்தல் என்பது கண்காணிப்பு கேமிராக்களை பொருத்துவது என்பது மட்டுமில்லை. வனாந்திரங்கள் ,பொட்டல் காடுகள் இன்னும் இது போன்ற சமூக விரோத செயல்களுக்கு சாதகமாக இருக்க கூடிய நிலங்களை யாரும் செல்லும் முடியாத படி வேலிகள் அமைக்கவோ அல்லது அப்படியான நிலங்களை கடக்கும் சாலைகளில் செல்லும் வாகனங்கள் அந்த சாலைகளை கடக்க எடுத்துக்கொள்ளும் நேரமும் கண்காணிக்கப் பட வேண்டும்.
கண்காணிப்பை எல்லா வகையிலும் தீவரப்படுத்துவது என்பது குற்றச்செயல்கள் நடப்பதற்கான வாய்ப்புக்களை குறைப்பதோடு குற்றச்செயல்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் தென்படும் போதே அதனை தடுப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. குற்றச்செயல்களை தடுப்பதில் காவல் துறையினரோடு அரசால் அங்கீரிக்கப்பட்ட தன்னார்வலர்களும் ஈடுபடுத்தப்பட வேண்டும். அப்படி ஈடுபடுத்தப்படும் தன்னார்வலர்கள் குற்றச்செயல்களை தடுப்பதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்பதையும் அவர்களுக்கான வரையறைகளையும் தெளிவப்படுத்தும் விதமாக சட்டங்கள் இயற்றப்படவும் மேம்படுத்தப்படவும் செய்யவேண்டும். அப்படியான சட்ட வரைவுகளை சாமானியர்கள் வரை கொண்டுசேர்ப்பதற்கான திட்டங்கள் நடைமுறையில் இருக்க வேண்டும். கொலை, கற்பழிப்பு போன்ற அச்சுறுத்தல்களில் மாறிக்கொண்டிருக்கும் ஒரு நபர் உதவி தேடும் போது. கூடிய விரைவில் அவர்களுக்கான உதவி கிடைக்கும் அளவில் தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட வேண்டும்.
மது பயன்பாட்டை கட்டுப்படுத்தல்
நாம் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டு செய்திகளில் ஒன்று முதியவரை இளைஞர் பாலியல் வன்கொடுமை செய்த செய்தி.பெண்களின் ஆடை அணியும் விதங்களை சாடுவதற்கு முன் இது போன்ற முதியவர்களுக்கு எதிரான குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் நடப்பதற்கான காரணிகளையும் நாம் அலச வேண்டியது இருக்கிறது. இது போன்ற சம்பவங்கள் இதற்கு முன்னரும் நிகழ்ந்திருக்கிறது முன்னதாக 2018இல் விஜயவாடாவில் இது போன்ற சம்பவம் நிகழ்ந்த போது அங்கு குற்றச்சம்பவத்திற்கு காரணமாக மதுவும் இருந்திருக்கிறது. பூரண மது ஒழிப்பு என்பது நிர்வாக ரீதியில் ஒரே இரவில் சாத்தியப்படுத்த முடியாது என்கிற வாதத்தை நாம் ஏற்றுக்கொண்டு தான் ஆக வேண்டும் அதே வேளையில் மது பயன்பாட்டை கட்டுப்படுத்த இயலும். சாதாரணமாக மது விற்பனை நேரத்தை மட்டும் குறைப்பது எந்த விதத்திலும் மது பயன்பாட்டை குறைத்துவிடாது. மாறாக மது அருந்தபவர்களுக்கான வரையறைகளையும் ஒருவர் எந்த அளவிற்கு மது வாங்கிக் கொள்ள முடியும் என்பதிலும் வரையறைகளை ஏற்படுத்த வேண்டும். மது ஒழிப்பை சாத்தியப்படுத்த எதிர்கால சந்ததியினருக்கு மது மீது வெறுப்பு ஏற்படும் வகையிலான பிரச்சாரங்கள் மேற்கொள்வதோடு புதிதாக யாரும் மது பழக்கத்திற்கு ஆளாகாத வகையில் மது விற்பனையை நெறி படுத்த வேண்டும். மது பழக்கம் உள்ள மது நுகர்வோர் அனைவரும் அடையாளப்படுத்த பட வேண்டும். மது அருந்தியவர்கள் பொது வெளிகளில் நடமாடுவதை கட்டுப்படுத்தும் வகைகளில் சட்டம் இயற்றப்படவேண்டும். இவ்வாறாக மது பயன்பாட்டை கட்டுப்படுத்துவன் மூலம் ஓரளவு பாலியல் வன்கொடுமைகளை தவிர்க்க முடியும்.
சூழல்- ஆடை -சமூக மாற்றம்
பாலியல் வன்கொடுமை பற்றி கேள்வியுறும் பொழுதெல்லாம், அனேகமாக குற்றம்சாட்டப்பட்டவரை சபித்துவிட்டு அல்லது குற்றவாளிகளாக ஒருவரை மட்டும் தேடி;தண்டனைகள் கடுமையாக்க பட வேண்டும் என்று நம் ஆத்திரங்களையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்திவிட்டு; நிர்வாக ரீதியிலான குறைகளை சுட்டிக்காட்டி, அவைகளை மட்டும் குற்றவாளிகள் ஆக்கிவிட்டு; ஆசுவாசம் கொண்டு அடுத்து பணியை நோக்கி நகர்ந்து விடுகிறோம்.
தரவுகளின் படி பதிவு செய்யப்பட்ட பாலியல் வன்கொடுமைகளில் 90 க்கும் அதிகமான சதவீத குற்றங்களில், குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரிந்தவர்களாகவே இருக்கின்றார்கள். தேசிய குற்றப்பதிவு ஆணையத்தின் தரவுகளின் படி 2019 இல் பதிவு செய்யப்பட்ட பாலியல் குற்றங்களில் 30.9 சதவீத குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவரின் கணவராகவோ அல்லது உறவனினர்களாகவோ இருக்கின்றார்கள்.17.9 சதவீதம் கடத்தல் தொடர்புடையதாகவும் இருக்கின்றது.
இத்தகைய தரவுகளை கொண்டு பாலியல் குற்றங்களையும் அதனை கட்டுப்படுத்தவும் நடக்காமல் தடுக்கவும் ஏற்படுத்த வேண்டிய சீர்திருத்தங்களை ஆராய்ந்தால் தண்டனைகளை கடுமையாக்குவதும் கண்காணிப்பை தீவிரப்படுத்துவதும் மட்டும் போதாது என்பதையும், திருத்தப்படவேண்டியதும் தண்டிக்கப்படவேண்டியதும் யாரோ ஒன்று இரண்டு குற்றவாளிகள் அல்ல சமூகம் மொத்தமும் இந்த குற்றங்களுக்கான காரணியாக இருக்கிறது என்பதையும் உணர்ந்து சமூக மாற்றத்தை அடிப்படையாக கொண்ட சீர்திருத்தங்கள் மேற்கொள்ள பட வேண்டியுள்ளது என்பதும் புரிய வரும்.
என்ன மாதிரியான சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்?
நாம் இயற்கைக்கு எதிரே பயணிக்க ஆரம்பித்த நாளில் இருந்தே இயற்கை, அதனுடைய சமநிலை குலையாமல் பார்த்துக்கொள்ள நமக்கு எதிராக சில பலவந்தங்களை பிரயோகிக்க ஆரம்பித்தது. அப்படியான பலவந்தங்களில் ஒன்றாக தான் சில பாலியல் குற்றங்களை நாம் பார்க்கவேண்டும். மனிதனும் இயற்கையோட ஒரு அங்கம் தான். பசிக்கும் போது சாப்பிடாமல் இருப்பதும் பசிக்காத பொழுது சாப்பிடுவதும் கூட இயற்கைக்கு எதிரானதே.
இதை எடுத்துக்கூறுவதன் காரணம்,திருமண தாமதங்கள் தவிர்க்க பட வேண்டும் என்பதற்காக.ஒரு விஷயத்தை நாம் சிந்தித்தால் புரிய வருவது குழந்தை திருமணம் என்கிற சொல்லாடலே தவறு. நம் கலாச்சாரத்தில் பதின்ம வயதில் நடந்துக்கொண்டிருந்த திருமணங்கள் சீர்திருத்தம் என்கிற பெயரில் தாமதப்படத்தப்பட்டு இன்று நாமாக உருவாக்கிக்கொண்டிருக்கும் தேவையற்ற தேவைகளால் திருமண வயது என்பது சாதாரணமாக 27 வயதில் இருந்து 30 வயதிற்குள் என்றாகிவிட்டது. நம் சமூகத்தில் திருமண வயது என்பது தள்ளி போன பிறகே குழந்தை பேறு முதலான இயற்கையான சாதாரணமாக நடக்க கூடிய விஷயங்களுக்கு செயற்கை முறைகளை நாட வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கின்றது என்பதை மறுக்க முடியாது. மிருங்களில் மனிதன் உட்பட சூழல்களால் ஏற்படும் உணர்ச்சிகளை கொண்டு அவைகளின் மூளையே ஒரு உடல், புணர்ச்சிக்கும் குழந்தை பேறு அடைவதற்கும் எப்போது தயாராக வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது.மூளையின் தீர்மானத்திற்கு பிறகான காத்திருப்பு தான் காதல் நிமித்தமான ஏமாற்றங்களுக்கு காரணமாகிறது என்பதை நாம் ஒத்துக்கொண்டு தான் ஆக வேண்டும்.
இந்தியாவில் திருமணம் செய்துகொள்வதாக கூறி உறவு வைத்துக்கொண்டு ஏமாற்றுவதும் கற்பழிப்பு குற்றமாகவே கருதப்படுகிறது. அதோடு,காதலின் பெயரில் ஏமாற்றப்படுவதும், காதலனே கடத்தல் மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமைகளுக்கு துணைபோவதும் நடக்காமல் இல்லை. இவை அல்லாமல் காதலர்கள் தனியாக இருக்கும் சூழலை வேறு சிலர் தவறாக பயன்படுத்தி கொள்வதும் கூட இதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் காரணிகளாக இருந்து இருக்கின்றது.ஒரு ஆண் அல்லது பெண் பதின்ம வயதிலேயே அவர்களுக்கான காதலை தேட ஆரம்பிக்கிற போது அங்கே அதற்கான தேவை இருக்கின்றது என்றே புரிந்து கொள்ள வேண்டியுள்ளது அப்படியிருக்கும் போது சட்டபூர்வமான திருமண வயதை குறைத்துக்கொள்வது பற்றியும் குடும்பங்கள் தங்கள் பிள்ளைகளின் திருமணத்தை கூடுமான வரையில் 23 வயதை தாண்டாமல் பார்த்துக்கொள்வது என்பதை நோக்கியும் நம் நகர்வு இருக்க வேண்டும்.
கூடியவரையில் மிக இளம் வயதிலேயே திருமணம் நடக்கும் பட்சத்தில் காதல் என்னும் பெயரால் நடக்கும் பாலியல் குற்றங்கள் குறைவதற்கான வாய்ப்பு இருப்பதோடு குழந்தை பேறுக்காக செயற்கை கருத்தரிப்பு மையங்களை அணுகுவது குறைவதற்கான வாய்ப்பிருக்கின்றது என்பதை முற்றிலும் மறுத்துவிட முடியாது.
அதோடு சிறார்கள் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவது தவிர்க்கப்படலாம்.
சிறுவர்கள் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுவதற்கு பல்வேறு காரணிகளை சுட்டிக்காட்ட முடியும் அதில் ஒன்று பசிக்காத போது சாப்பிடுவது போன்றதான ஒன்று. இயற்கையாக அல்லது ஏதேனும் சூழல்களால் உண்டாக வேண்டிய உணர்வுகள் மாறி வரும் சமூக சூழல்களால் உண்டாக்கப்படுவதனாலேயே.இந்த பிரச்னையை சரி செய்ய இது சார் உண்மைகளை நாம் ஒத்துக்கொள்ள வேண்டும்.ஒரு முறை “நீயா நானா” நிகழ்ச்சியில் கோபிநாத் அவர்கள் பெற்றோர்களை நோக்கி சொன்ன வாக்கியம் நினைவிற்கு வருகிறது. “என் புள்ள அப்படி இல்ல னு எல்லாரும் சொல்றீங்க அந்த வயதில் ஏற்படுகின்ற உணர்வு தான் இது அவன் பாப்பான் அப்படி விஷயங்களை இணையத்தில் தேடுவான் என்பது என்கிற எதார்த்தத்தை யாரும் ஏன் ஒத்துக்க மறுக்கிறீங்க” என்று கேட்டிருப்பார்.
நாம் இதை புரிந்து கொள்ள வேண்டும், புரிந்து கொண்டு பிள்ளைகளை அதற்கேற்றவாறு அணுக வேண்டும். பிள்ளைகள் எந்த வயது ஆட்களுடன் பழகுகிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். அதோடு கல்வியை தொடர முடியாத பெற்றவர்கள் கண்காணிப்பில் இல்லாத சிறுவர்களே ஒப்பீட்டளவில் அதிகமாக இப்படி குற்றங்களில் ஈடுபட வாய்ப்பிருக்கின்றது அவர்களை அவர்களின் கல்வியை தொடர்வதற்கும் சரியாக கவனித்துக்கொள்ளப்படுவதற்கும் நிர்வாக ரீதியாலான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் .
இணையம் என்பதை தாண்டி செயற்கையாக அனாவசியமாக உணர்வுகளை தூண்டும் சூழலுக்குள் புகுத்தப்பட்டுவிட்ட நாம் பதின்ம வயதினரை சுதந்திரத்துடன் கூடிய ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியமாகிறது.அப்படியான கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க, மனிதனின் மற்ற உணர்வுகள் போலவே தான் பாலியல் உணர்வுகள் என்கிற உண்மையை நாம் ஏற்றுக்கொண்டாக வேண்டும்.
நம் தேசத்தில் நம் கலாச்சாரத்தில் நம் முன்னோர்கள் இதனை அருவருப்பாக பார்த்ததில்லை பதின்ம வயது தொடங்கியவுடன் திருமணம் செய்யவேண்டியதை தேவையாக அவசியமாக நினைத்துக்கொண்டிருந்த சமூகம் 20 வயதில் திருமணம் செய்வதை ஆச்சரியமாக பார்க்கும் நிலையில் வந்து நிற்கிறது. பதின்ம வயது திருமணங்களை குழந்தை திருமணம் என்பது போன்ற எண்ணங்களை விதைத்து அவர்களின் பண்பாட்டை நமக்குள் விதைத்துவிட்ட மேலை நாட்டவர்கள் கலாச்சாரத்தில் திருமணம் ஒரு பொருட்டாகவே இருப்பதில்லை அதோடு பதின்ம வயதிலேயே ஏற்படும் காதல், திருமணத்தில் முடியாத காதல் இவற்றினில் ஆண் பெண் கொள்ளும் உறவு இவை ஏதும் கற்பழிப்பு குற்றமாக மேலை நாடுகளில் புகார் செய்யப்படுவதில்லை. நம்முடைய பண்பாட்டிற்கும் கலாச்சாரத்திற்கும் ஏற்ற வகையிலேயே நம்முடைய வாழ்க்கை முறையை நாம் அமைத்துவைத்திருந்தோம் மேலை நாட்டவர் நம் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு முன்பு வரை.
மிக கவனமாக இங்கே பதிவு செய்ய விரும்புவது திருமண வயது குறைக்க பட வேண்டும் என்பதே அன்றி காதல் திருமணங்கள் கூடாது என்பதோ அல்லது பெண்ணின் சம்மதம் இல்லாமல் செய்யப்படும் திருமணங்களை ஆதரிப்பதோ நம் நோக்கம் இல்லை என்பதே.
குற்றங்கள் நடந்தேறிய விதங்களை ஆராயும் போது பெண்களின் ஆடைகளை பாலியல் குற்றங்களுக்கான காரணிகளாக சொல்வது ஒரு மேம்போக்கான பார்வையாகவே படுகிறது. நம் சமூகம் தற்போது ஒரு நிலைமாற்ற காலத்தில் (transition period) உள்ளது. ஆடை அணியும் விதத்தில் தொன்று தொட்டு ஒரு மாற்றம் இருந்து கொண்டே தான் இருக்கின்றது அத்தகைய ஒரு மாற்றத்தின் ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு மாறும் காலத்தில் இருக்கும் போது பெண்களின் ஆடை அணியும் விதம் உணர்ச்சிகளை தூண்டும் என்கிற வாதத்தை ஏற்றுக்கொண்டாலும் அதனை பாலியல் குற்றங்களுக்கான நியாங்களாக ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது.
மது,காதல் இவைகளுக்கு அடுத்ததாக அதிகாரமும் பண பலமும், இத்தகைய குற்றங்களில் முக்கிய பங்கு வைக்கிறது.இவை அல்லாமல் சூழல். பொதுவெளிகளில் பாலியல் குற்றங்கள் என்றில்லாமல் எந்த விதமான குற்ற சம்பவங்களும் நடக்க சாதகமான சூழலை குறைக்க தீவிரமான கண்காணிப்பும் கடுமையான சட்டங்களுமே தேவைப்படுகிறது.
அடுத்ததாக கணவன் மீது மனைவி அளிக்கும் பாலியல் புகார்கள். இவை கற்பழிப்பு குற்றமாக அல்லது பாலியல் வன்கொடுமை என்றில்லாமல் வேறு மாதிரியாக கையாளப்பட வேண்டும். இத்தகைய குற்றங்களை கையாள்வதற்கு என்று சிறப்பு சட்டங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். அதோடு திருமண பந்தத்தின் ஒரு வகையான தோல்வியே இத்தகைய புகார்களுக்கு காரணமாக பார்க்கப்பட வேண்டும். நம் கலாச்சாரத்தில் தனக்கான கணவனை தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களிடம் இருந்ததாகவே தெரிகிறது. ஆனால், இன்று நிலைமை முழுதும் ஒரு பக்கமாக இல்லாமல் இருந்தாலும் ஒரு பெண், அவளின் திருமணம் சார்ந்து எடுக்க கூடிய முடிவை தன்னிச்சையாக இல்லாமல் அவளின் சூழல்களும் அவளை சுற்றி உள்ளவர்களும் அவளின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அளவியிலேயே நம் சமூகம் இன்றிருக்கின்றது.இதை சரி செய்வதற்கான தீர்வை நோக்கி நம் சமூகம் நகர வேண்டும்.
குழந்தைகளுக்கு அவர்கள் வயதில் என்ன தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை அவர்கள் தெரிந்து கொண்டாலே போதுமானது அவர்கள் பாதுகாப்புக்காக என்று சொல்லி அவர்கள் வயதிற்கு மீறிய விஷயங்களை கற்று தருவது சிறு வயதிலேயே அவர்களுக்குள் எதிர்மறையான எண்ணங்கள் ஏற்பட வாய்ப்பை தரும் அதோடு வயதிற்கு மிஞ்சிய அறிவு குழந்தைகளாய் அவர்கள் ரசிக்க வேண்டியதை குழந்தைகளாய் இருந்து ரசிக்க முடியாமல் போக செய்யும். மாறாக அவர்களை நாம் தவறு நடப்பதற்கு ஏதுவான சூழலுக்குள் விட்டுவிடாமல் பார்த்துக்கொள்வது தான் சரியாக இருக்கும். மிகவும் மாறிவிட்ட நம் சமூக பழக்கவழக்கங்களில் குழந்தைகள் உளவியல் ரீதியிலாக தனித்து விடப்படுவது அதிகரித்து கொண்டே வருகிறது இதை தான் மிக முக்கியமாக நாம் சரி செய்ய வேண்டும்.
அதிகாரம், பணம்,இவற்றோடு தொடர்புடைய பாலியல் குற்றங்களுக்கும் சூழல்கள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.நிர்வாகம், சட்டம், சமூகம், தீவிர கண்காணிப்பு இப்படி எல்லா நிலைகளில் ஏற்படும் மாற்றங்களும் ஒருங்கிணைந்து பாலியல் குற்றங்கள் நடப்பதற்கு ஏதுவான சூழல்களை இல்லாமல் செய்தால் குற்றங்கள் நாம் நினைத்தாலும் நடக்காது.
நாம் மேலே அலசியிருக்கும் விஷயங்கள் அல்லாமல் இன்னும் நிறைய விஷயங்கள் அலச வேண்டியுள்ளது.சரியான விஷயங்களை அலசுவது;ஆழமான பார்வை;உள்ளதை உள்ளபடியே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் இவைகள் தான் நம்மை சரியான முன்னெடுப்பை நோக்கி செலுத்தும்.
அதை விடுத்து யார் ஆட்சியில் நடந்தது எந்த மாநிலத்தில் நடந்தது பாதிக்கப்பட்டவர் எந்த சாதியை சேர்ந்தவர் என்பதை பேசுவதிலும் குறிப்பிட்ட வழக்குகளில் சிக்கிக்கொண்ட குற்றவாளிகளை மட்டும் பழிப்பதிலும் எந்த வித லாபமும் இல்லை.
குற்றங்கள் என்றில்லாமல் எந்தவொரு பிரச்னையும் ஆராயும் போது அது ஏன் நடந்தது ? நம் தொன்மையான வரலாற்றில் முன்பு இப்படி நடக்காமல் அல்லது மிக குறைவாக நடந்ததற்கும் தற்போது அதிகம் நடப்பதற்கும் காரணம் என்ன? எதை சரி செய்ய வேண்டும்? எதை மாற்றிக்கொள்ள வேண்டும்? எதை நாம் மாற்றிக்கொண்டதால் இந்த பிரச்சனை வந்தது என்கிற கேள்விகளுக்கான பதில்களை தேடினால் பிரச்சனை தானாக சரியாகும் .
Ggzlek https://newfasttadalafil.com/ – Cialis These findings focused researchers attention on the islets themselves. Cialis achat levitra quebec Fujita K Fujita HM Fujii K et al. https://newfasttadalafil.com/ – cheap cialis and then six and so on. Dkcqed