போன வாரத்தின் இடையில் ஒருநாள் என் வீட்டுகாரம்மா கிட்ட one of the machini செல்லமா என்னைப்பற்றி ஒரு பிராது கொடுத்து இருக்கின்றார்கள்.

“என்ன உன் வீட்டுக்காரர் எப்ப பாரு ரஜினி status இப்ப புதுசா திரிஷா status எல்லாம் வைக்கிறார் ன்னு?”

ஒரு காலத்தில் இந்த status வஸ்துக்களை (options) நான் கண்டு கொண்டதே இல்லை

அப்பறம் பிற்காலத்தில் அதாவது தற்காலத்தில் மீண்டும் ஒரு contact கிடைக்கப்பெறுகிறுது.

மீண்டும் சிறுபிள்ளை ஆனோம்.

சந்தோசமா இருக்கிறதை விட சந்தோசம் எது ன்னா? நாம சந்தோசமா இருக்கோம் என்பதை யாருகிட்ட சொன்னா நமக்கு சந்தோசமா இருக்குமோ அவங்கிட்ட சொல்றது.

ஆனா தினம் தினம் நான் இன்னிக்கு இது சாப்பிட்டேன். நானும் மனைவியும் வெளிய போனோம். இப்படி அந்த contact க்கு message எல்லாம் பண்ண முடியாது.

so I started post status with limited audience.

அந்த limited audience அம்மா sister wife அப்பறம் very few people ( நம்ம சந்தோசத்தைப்பார்த்து பொறாமை படாத நெஞ்சங்கள்)
and finally that ஒருத்தர்.

சந்தோசம் மட்டும் இல்லை எதையெல்லாம் சொல்ல நினைக்கிறேனோ அதெல்லாம் .

சிறுபிள்ளைத்தனத்தின் உச்சம்.

இடையிடையில் அரசியல் போன்ற
பலர் பார்க்கக்கூடம் post கள்.
kathirvijayam articles இதெல்லாம் post பண்ணேன்.

ஒரு கட்டத்துல இந்த status post பண்ணறது பழக்கமாகி வழக்கமாகி.
limited audience எண்ணிக்கையை சில நேரங்களில் அதிகரிக்கவும் செய்தேன்.

கவிதை எல்லாம் எல்லாரும் பார்க்கிற மாதிரி post பண்ணது very rare case.

கவிதை எழுத ஆரம்பித்த போது.
எல்லாம் சமூகம் சார்ந்த கவிதை தான்.

அப்ப மனதிற்குள் ஒரு காதல் இருப்பதாக எண்ணிக்கொண்டிருந்த போது.

“love பண்றோம் ஒரு காதல் கவிதை கூட எழுதலையே” இப்படி தோனும்.

இது வந்து மனசுக்குள்ளயே love பண்றதா நினைச்சுகிட்டு love பண்ற பொன்னுக்கு கூட தெரியாம பண்ற love.

காதல் கவிதைன்னு ஒரு கவிதையும் வரலை.

அப்ப ஒரு புக் கடை இருந்தது. பஸ் ல வரும் போதெல்லாம் அந்த கடையை பஸ் நெருங்கும் முன்னரே நான் தயாராகி விடுவேன். Full focus “miss பண்ணாம அந்த கடைய பார்த்து விட வேண்டும்” என்பதில் தான் இருக்கும்.

அந்த book shop உடைய பெயர் தான் அந்த பொன்னு பேரும்.

இப்ப college வந்துட்டேன். ஒரு காதல் கவிதை எழுதிட்டேன் ஆனா எழுதி வைக்கலை.

“எங்க பார்த்தாலும் நிக்கிறேன்
எனக்குள்ள நானே சிரிக்கிறேன்
ஏன் தெரில எனக்கு
உன் பேர்ல என்ன தான் இருக்கு”

இது தான் அந்த கவிதை.

college third year.

praise the Lord! I got her contact after few years

witty God! pity me! என்கிட்ட phone இல்ல கேட்டா முன்னமே கிடைச்சிருக்கும் நம்ம தான் எதுக்கு இருந்துட்டோம்.

அப்ப தான் மாமா அம்மா க்கு ஒரு போன் கொடுத்து நம்பரும் வாங்கி கொடுத்து இருந்தாங்க.

“துள்ளி குதிக்குது நெஞ்சம்
தூக்கம் வரவில்லை கொஞ்சம்”

திருச்சி போய்ட்டா சில விமல் போன் ல இருந்து பேசிக்கிறது. இப்படியே போகும் போது.
அந்த contact அப்படியே மறைஞ்சுருச்சு.

முன்ன orkut ல தேடின மாதிரி fb ல தேட ஆரம்பிச்சேன்.

கிடைக்கலை.

அப்ப தான் அந்த எண்ணங்கள் எல்லாம் கவிதைகளா ஆச்சு.

இந்த தடவை இன்னும் better ஆன கவிதைகளா.

நீ இருக்கியா னு தெரியாமலேயே உன் வீட்டு பக்கம் வந்து போனதை
உன் வீட்டு gate உ உன்கிட்ட சொல்லையா

நா போற கோவிலுக்கு நீ போனதில்லையா
உன்ன தான் கேக்குறேனு சாமி உன்கிட்ட சொல்லையா

நான் தினம் போற பஸ் ல நீ ஒரு நாள் கூட போனதில்லையா
உன் கனவு ல நான் வந்ததே இல்லையா
இல்ல வந்தும் நான் பேசவில்லையா

இப்படியெல்லாம் ஒரு கவிதை. கவிதைக்கு பேரு ஊமை வார்த்தைகள்.

வேலைய தேடினதை விட அந்த contact தேடியது தான் அதிகம்.

finally found.
but no response.

அப்பறம் என்ன ஆச்சு !

அப்பறம் எல்லாம் இல்லை fb ல contact கண்டுபிடிச்சது தான் தாமதம்.

“she got married machan😜”

கொஞ்சம் shock marriage invite பண்ணணும் கூட நினைக்கலையா.
mail
பண்ணி இருக்கலாம்.

அப்ப எழுதினது தான் கண்ணாடியின் காதல்.
வீட்ல ஒரு கண்ணாடி, அந்த வீட்ல இருக்க ஒரு பொன்னை love பண்ணுது தீடீர் ன்னு அந்த வீட்ல அந்த பொன்னை காணோம்!.

என்னன்னு பார்த்தா she got married.

கண்ணாடி love பண்ணா யாருக்கு தெரியும் அது தான் அந்த கவிதையோடு base.
யோசிச்சு எல்லாம் எழுதலை
that moment made me write that.

சரி வேலைய பார்ப்போம்ன்னு கிளம்பி வேலைக்கு போன

அங்க தான் தரணி entry.
நம்ம style பார்த்து she fell in love.

styleஅ?

சத்தியமா அப்படித்தான் சொன்னாய்ங்க.

விரட்டி! விரட்டி காதல்.
நம்ம பொதுவா பொன்னுங்களட்ட பேசி பழகினதே இல்ல இவய்ங்க வந்து பேசி love பண்றேன் வேற சொல்லவும் I just could not resist.

ஆனா அதுக்கு முன்ன first time தரணி பார்த்த போது.

சின்னப்பொட்டு அதுக்கு மேல சந்தனம் .
(அப்ப எல்லாம் கண் அந்த நெற்றியை தேடும்)

that grabbed my attention.

and in that particular moment இருவர் கண்களும் சந்தித்துக்கொண்டது.

இப்படி எதேச்சையாக கண்கள் சந்தித்து கொண்டது விமல்கிட்டையும் நடந்து இருக்கு.
and first standard English missகிட்டையும் நடந்து இருக்கு.

I still remember those moments.

And this time love பண்றதா நினைச்சுகிட்டு எல்லாம் இல்லை loveயே தான்.

that love is அன்பு and this love is காதல்.

தரணி வராமல் இருந்திருந்தால் இந்த வேறுபாடு புரியாம இருந்திருக்கும்.

இந்த இடத்தி்ல வைரமுத்து பாட்டு ஞாபகம் வருது.
“காதல் ஒரு கண்ணில்
காமம் ஒரு கண்ணில்
இது தான் தேன் நிலா”

காதல் மட்டுமே இருந்தால் அந்த loveஅன்பு

காமம் மட்டுமே இருந்தால் அது வேற .இச்சைன்னு சொல்லிக்கலாம்.

இது எல்லாமே எதில் இருக்கிறதோ அது தான் காதல்.

வடிவேலு dialogue ல சொல்லனும்ன்னா அண்ணனுக்கு love mood start ஆகிருச்சு டா.

தரணி பேச ஆரம்பிச்சப்ப தானா நானா இரண்டு கவிதை எழுதினேன்.
அவ்வளவு தான்.

கவிதையா அது எப்படி இருக்கும் அப்படி range க்கு போய்டேன்.

and she comes again.

அவங்க வந்தாங்களா bossன்னு கேட்டகாதீங்க.

again got contact. that moment ல வந்த excitement ல கவிதை தானாக வந்தது. அதுவும் after few years.

இதுக்கு இடையில சில பல வருசங்கள் ஆகிருச்சு.
நான் எதுவும் யோசிக்க வேணாம் கவிதை வரும் .

ஒரு நாள் அந்த contact என்கிட்ட பேசறதுல என்ன இருக்கு கேட்டாய்ங்க

again shock

அதுவும் அந்த “என்ன இருக்கு”

அப்ப உள்ள இருந்து எனக்கு வந்த answer தான் ” குழந்தை கையில பொம்மை கொடுத்தா என்ன பண்ணும் சந்தோசப்படும் ! என்ன இருக்கு ன்னு கேட்டா அதுக்கு என்ன தெரியும்”

அப்பவே இதை கவிதையா எழுதினேன்
அப்பறம் பேசும் போதெல்லாம் கவிதை

அது தான் பொம்மை காதல் ன்னு ஒரு கவிதை தொகுப்பாகவும்

உயிர் நனைக்கும் மழை அவள் என்கிற கவிதை தொகுப்பாகவும் ஆச்சு.

கொஞ்சம் கொஞ்சமா பேசறது ( அதுவும் message la தான்) கம்மியாகி நின்னு போச்சு.

ஆனா இதுக்கு இடையில தரணி கேட்டு தரணி birthday 3 years அ ஒவ்வொரு birthday க்கு எழுதினதே 100 + போய்டுச்சு(மனைவியாய் நான் கண்ட மீதி தொகுப்பு) ஓரே நாள் ல 30 எல்லாம் எழுதினேன் . எனக்கே நம்ப முடியலை எல்லாமே நடந்ததை தான் எழுதினேன்.

கவிதை ன்னு என்ன எழுத வச்சது ல மிக முக்கியமான அந்த contactக்கே தெரியாது நம்ம ஒரு பெரிய கவிஞர்(please bare with this) உருவாக காரணமா இருந்துருக்கோம்ன்னு.

இதுக்கு இடையில் விமல் message பண்றதுக்கும் invitations க்கும் posters க்கும் யாராவது கேட்டா எழுதிக்கொடுப்பேன்.

பொம்மை காதலும் நிறைய பேசலை.

காதல் வாழ்க்கையும் திருமணம் தாண்டி அடுத்த கட்டத்துக்கு வந்துருச்சு.

நான் எழுதாத மாதிரி கவிதையெல்லாம் எழுதனும்னு ஆசை .
likeவாலி வைரமுத்து .

அழகான விசயங்களை அழகாகவே எழுதுவது அப்படி சொல்லலாம் அதை.

“விரல்கள் கொண்டு நீயும் மீட்டினால் விறகும் வீணையாகும் ”

இந்த வரி ல வர மாதிரி.

தலைவி தலைவனை நோக்கி அவர்கள் கூடி மகிழ்ந்ததை பேசி மகிழும் போது சொல்வது மாதிரியாக.

நம்முடைய விரல்கள் எதை தொட்டாலும் மொத்தமாக தான் தொடும்.

ஒரு guitar எடுத்து ஒரு stringல உங்க விரலை வச்சு பாருங்க . பக்கத்து string லையும் விரல் பதியும் . அந்த விரலை அடுத்த string க்கு கொண்டு போகும் போது
பிசிறு இல்லாம கொண்டு போகனும்.

அவன் அவளை அத்தனை minute அ அத்தனை மென்மையா
அத்தனை அழுத்தமா தீண்டுறான்.

இப்ப strings சரியா vibrate ஆகலைன்னா musicவராது.

நீங்க உங்க தப்பான இடத்தில் மிக அழுத்தமாக வச்சு இருக்கீங்கன்னு அர்த்தம்.

but அவன் விறகு touch பண்ணா கூட இசை வருதாம் அப்படி இருக்காம் அவன் touch ன்னு அவ சொல்றா.

செம ல.

இப்படியெல்லாம் எழுத ஆசை.

எழுதினது இல்லை.

பொம்மை காதல் பேசலைன்னா கவிதையே எழுதமாட்டோம் போல ன்னு எண்ணம் வந்தப்ப
ஒரு முயற்சி ல இறங்கினேன்.

so now not limited audience அந்த முயற்சியில் எழுதின கவிதை புரியாம போக கூடாது and same ரொம்ப மோசமா convey agaகூடாது.

graphic representation- எப்பவும் ஒரு படத்தோட ஒரு விசயம் இருந்தா easy அ புரிஞ்சுக்கிறோம்.

so I chose Trisha’s image for those கவிதை.

ரஜினி status க்கு காரணம் superstar பஞ்சாயத்து.
அரசியலுக்கு வர கூடாதவர்கள் சினிமாவில் இருந்து கொண்டு செய்யும் அரசியல் மீதான கோபம்(சரத்குமார சொன்னேன்)

அதெல்லாம் பேசினா new yearவந்துரும்.

Happy new year to all

– Editor
kathirvijayam

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *