இறைவன் தான் எல்லாத்துக்கும் ultimate. அந்த இறைவனைப் பற்றி சொல்லும் போது, மனித சிந்தனைக்கு எட்டிய எல்லாவற்றையும் சொல்லிவிட்டு, “இனி என் சொல்லி வாழ்த்துவனே” என்று சொல்லி முடித்தார், மாணிக்கவாசகர்.

படையப்பா, படத்திற்கு பின்னர், “இதைவிட இன்னும் பெருசா என்ன செய்வது!” என்று தடுமாறினார் ரஜினி; இறுதியா சங்கர் கூட்டணியில், அதை விட பெரிதாய், கொஞ்சம் வித்தியாசமாய் பிரமாண்டமாய் 3 படம்.அதன் பின் கபாலி, பேட்ட தவிர்த்து. ரஜினி செய்த ultimate சம்பவங்களை, எந்த படமும் கொஞ்சம் கூட நெருங்கவில்லை.

இது ஒரு சிக்கல்.🤷🏻‍♂️

என்னுடைய மனைவி மாசமா இருந்த பொழுது  என்னை  ஒரு கவிதை எழுத சொல்லி என்னை கேட்டாங்க.

“வான் சுமந்த

வான் சுமந்த

வெண்ணிலவை! வெண்ணிலவை!

தான் சுமந்த

தான் சுமந்த

பெண்ணிலவே!”

இந்த வரிகள் மனசுக்குள் இருக்கின்ற யாருக்கும் இதைத் தாண்டி ஒரு சிந்தனை வருவது இல்லை.

ரஜினி,விஜய், அஜித் போன்ற பெரிய விஸ்தாரமான நாயக பிம்பத்தை கொண்டிருக்கும் நடிகர்களுக்கான ஒரு சரியான கதை அமைவது என்பதும் கூட ரொம்ப சிரமமான; சிக்கலான விஷயம். அதிலும் அவர்கள் career இல், அவர்களுக்கு ultimate ஆக அமைந்து விட்ட பாத்திரங்களை தாண்டி ஒன்றை சாத்தியப்படுத்துவது இன்னும் சிரமமானது.

 

ultimate star என்று அறியப்படும் நடிகர் அஜித் அவர்களுக்கு, சில படங்கள் ரொம்ப ultimate ஆக அமைந்துவிட்டது. அதைத்
தாண்டி எதை யோசிப்பது என்கிற மாதிரியான படங்கள்:பில்லா, மங்காத்தா,ஆரம்பம்,வீரம். இந்த படங்கள் எல்லாம்  அஜித் உடைய நாயகத்தன்மைக்கு மிக சரியா அமைந்த கதைகள்.

 

இதில், ‘ஆரம்பம்’ திரைப்படம்  முழுக்க முழுக்க அன்றைய அரசியல் நிகழ்வுகளை தழுவி எடுக்கப்பட்டு; எந்த அரசியல் சிக்கலும் இல்லாமல்  வெளியாகி வெற்றிப் பெற்ற படம்.

 

இயக்குனர் விஷ்ணுவர்த்தன் அளவிற்கு யாரும், நடிகர்  அஜித்தின் நாயகத்தன்மையை சரியாக கையாளவில்லை என்கிற எண்ணம் எனக்கு நிறையவே உண்டு.

 

அதற்காக விஷ்ணுவர்தனுடன் மட்டுமே, ‘ஆரம்பம்’ போன்ற கதைகளில் மட்டும் நடிக்க முடியாது. அதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால் , அஜித் இந்த மாதிரியான கதைகளுக்கு மட்டுமே உரியவர் என்கிற பிம்பம் பிம்பத்தை அது ஏற்படுத்திவிடும்.கிட்டத்தட்ட நடிகர் அஜித்தின் திரைப்பயணம் அப்படித்தான் தற்போது போய்க்கொண்டு இருக்கின்றது.

 

‘துணிவு”,முழுக்க  முழுக்க நாயகனை மையப்படுத்தியே நகரும் கதை. Dream story for any mass hero.கதை என்று எழுதி முடிக்கும் முன்னரே அந்த கதை முடிந்துவிடும், அத்தனை வேகமாக நகருகிறது கதையும் கேமராவும் .

 

அஜித் ரசிகர்களை தாண்டி மற்றவர்களும் ரசிக்கும் வண்ணம் அஜித்தின் நாயகத்தனமையை கையாண்டதில் விஷ்ணுவர்தனை கொஞ்சம் நெருங்கியிருக்கின்றார், இயக்குனர் H.வினோத்.

 

படம் வெளிவந்து மிக்கதாமதமாகவே படம் பார்க்க முடிவு செய்து, show time க்கும் பத்து நிமிடம் தாமதாகவே சென்றோம்.

 

“எந்த screen”

 

“screen-4” என்று சொல்லிக்கொண்டே கதவை திறந்த மாத்திரத்தில் ஒரு bullet சத்தம் (sister பயந்துட்டாங்க). it ‘s a warm welcome.

 

ஆங்கிலயேர்களுக்கும் ஐரோப்பியர்களும் குளிர் ஒரு வில்லன் மாதிரி. அதன் காரணமாக அவர்கள் பண்பாட்டில், welcome கள் போன்ற நல்ல வஸ்துகளுக்கு அவர்கள் warm  தான் பிரயோகிப்பார்கள்.

நாம் தான் மனம் குளிர வாழ்த்துவோம். மனம் எரிய வாழ்த்துவதில்லை.

warm welcome தந்த bullet சத்தம் மட்டுமில்லை, கதையில் action காட்சிகளை அதிகம், மெனக்கெட்டு காட்சிப்படுத்தியிருக்கின்றார்கள். ஒரு வெடிகுண்டு வெடித்து ஒரு மனிதன் சிதறுவதை கூட பதிவு செய்ய வேண்டும் என்கிற மெனக்கெடல்,kids don ‘t watch this movie ரகத்தில் இந்த படத்தை சேர்ந்துவிடுகிறது. முரண் என்னவெனில், இந்த துப்பாக்கி சத்தங்களை நிச்சயம் குழந்தைகள் ரசிப்பார்கள்.

ஒருத்தன் வெடித்து சிதறும் காட்சியை திரையில் பார்த்த மாத்திரத்தில், அந்த graphics காட்சியை படைத்தவரை
பார்த்து, “உன் கலை தாகத்தை இப்படியெல்லாமா தீர்த்துக்கொள்ள வேண்டும்” என்று கேட்க தோன்றுகிறது.

 

வேகமாக நகரும் சின்ன கதையில் நீளமான சண்டைக்காட்சிகள். action movies வகையறாக்களில் சேரும் படங்களில் ,சண்டைகள் வெறுமனே சண்டையாகவும் நீளமான சண்டையாகவும் இருந்தால்; அது எல்லா இரசிகர்களையும் ஈர்க்காது. சண்டைக்குள் ஒரு கதை இருக்கவேண்டும்.ஜாக்கி சான் படங்களில், வருகின்ற சண்டை மாதிரி.

ஜாக்கி சான் உடன் ஒருவர் வருவார்; இவர்கள் ஒரு திட்டத்தோடு செல்வார்கள்; அங்கே வேறொன்று நடக்கும்;இடையிடையில் ஒருத்தர் மாற்றி ஒருத்தர் வில்லன்களிடம் மாட்டிக்கொள்வார்கள்.இப்படி ஏதேனும் ஒன்று இருக்கவேண்டும்.

 

அப்படி இந்த கதையில், ஒரு சண்டை. மனதில் நிற்காமல், படுவேகமாக ஓடிக்கொண்டு இருந்த கதையில் மனதில் நின்ற சண்டை.

 

சண்டை ஆரம்பிப்பதற்கு முன்னமே, நாயகன் பக்கம் இரண்டு பேர் காலி.மஞ்சு warrior உம், அஜித் மட்டும் தான். எத்தனை பேர் சேர்ந்து சுற்றிவளைத்து இருக்கின்றார்கள் என்று தெரியாது.

சண்டை ஆரம்பிப்பதற்கு முன்னமே warrior மஞ்சுவிற்கு அடிபட்டு, அவர் கையில் துப்பாக்கியை கொடுக்கும் போது, அவர் மனம் தளர்ந்து முடியாது என்பது போல் சொல்லும் போது,

“who we are?”என்கிறார் AK .

உடனே, “வாங்கடா butters”  என்பது போல் கிளம்புப்புகிறார் warrior மஞ்சு.

 

எல்லாருக்குள்ளும், அநேகமான தருணங்களில், துணிவை தருகின்ற வாசகம் அது தான்,“who we are” -subconscious ego.

 

நம்மிடம் ஒன்றும் இருக்காது, பெரிய சிக்கலில் இருப்போம், இந்த subconscious ஈகோவை யாரோ ஒருவர் தூண்டிவிட்டால் போதும்,சமயங்களில் நம் மனமே அதை செய்யும்,

“நாமா யாரு! எப்பேற்ட்பட்ட ஆளு! நம்ம போய் இவன்கிட்ட தோற்கலாமா!”

அந்த ego  தரும் துணிவு அசாத்தியமானது,குருட்டுத்தனமானது. போரில் வெற்றியடைவோமோ! தோல்வியடைவோமோ! என்கிற தடுமாற்றங்களை தரும் சந்தேகங்களை அது எழுப்பவதில்லை.

“இரண்டாவது bullet உம் வாங்கிட்டேன்” என்ற குரல் கேட்ட மாத்திரத்தில்,கண்மணியை  நோக்கி ஓடி, கண்மணியை AK கையில் ஏந்தும் போது, “குளிருது partner” என்று கண்மணி சொல்லும் பொழுது, அந்த குளிரை உணர்ந்தவர்கள் கண்கள் நிச்சயம் கலங்கியிருக்கும்.

நீண்ட நெடிய வசனங்களை விட, இத்தைகைய வசனங்களே அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் கனத்த வசனங்களாகிறது. எல்லாருக்குள்ளும் கொதித்துக்கொண்டு இருக்கும் இரத்தம்; ஒருவருக்குள் அடங்கிக்கொண்டு இருக்கும் பொழுது; நீங்கள் அவரை தாங்கி கொண்டு இருந்தால் நிச்சயமாக அந்த குளிரை உணர்ந்து இருப்பீர்கள். ஆங்கிலேயர்களுக்கும் ஐரோப்பியர்களுக்கும் மட்டும் இல்லை. எல்லாருக்கும் குளிர் ஒருவகையில் எதிரி தான்.

 

கதையில், உலகத்தில் எதையும் சாதித்துக்கொள்ள முடிந்த ஒருவன், பிள்ளையை படிக்கவைத்ததையே சாதனையாக நினைக்கும் ஒரு சாதாரணமான குடியானர்வர்களிடம் பாவம் போல் சென்று அடைக்கலம் பெறுகிறான்.

 

இதே கதை, அந்த சாதாரணமான குடும்பத்தின் கோணத்தில் இருந்து சொல்லப்படும் பொழுது, நாம் ஏற்கனவே கதையில் பார்த்த ஒரு காட்சி மீண்டும் வருகிறது. பார்த்த காட்சியே மீண்டும் பார்க்கும் பொழுது, அந்த காட்சி மீது பார்வையாளர்களுக்கு இருக்கும் மொத்த பிம்பத்தை மாற்றும் வண்ணத்தில் இருக்கின்றது.பாவம் போல் அடைக்கலம் பெற்றவன் அங்கே கடவுளாக மாறுகிறான்.

 

நம்மை மீறி நம்மிடம் இருக்கும் ஒன்றை நாம் இழந்து, “கடவுளிடம் முறையிடுவதைத் தவிர,நம்மால் என்ன செய்யும் முடியும்!” என்று புலம்பிக்கொண்டு இருக்கும் பொழுது; உங்களை விட சிரமமான சூழலில் சிக்கி ஒருவர் உங்களிடம் உதவிகேட்டு உங்கள் கதவுகளை தட்டினால், நீங்கள் என்ன செய்வீர்கள்?

” போயா நானே நொந்து போய் இருக்கேன்” இது தான் நம் பதிலாக இருக்கும்.ஆனால், அந்த நொடியில் உங்கள் கதவுகளை பாவம் போல் வந்து தட்டுவது கடவுளாக கூட இருக்கும்.

 

அப்படி உங்கள் கதவுகளை  கடவுள் வந்து தட்டினால் எப்படி இருக்கும்!

 

பிள்ளையை இழந்து; ஒன்றும் செய்ய முடியாமல்; கடவுளை நொந்துகொண்டு , அந்த கடவுள் கதவை தட்டமாட்டானா! என்று ஏங்கும் பொழுது , கண்மணியுடன் AK கதவை தட்டுகிறார்.பாவம் போல,அடைக்கலம் பெற வந்து, AK கதவை தட்டிய அதே காட்சி.இந்த முறை வேறு கோணத்தில் .

புலம்பிக்கொண்டு இருந்தவர்கள்,கதவை திறந்த மாத்திரத்தில் முகம் முழுக்க இரத்தோடு திரைமுழுக்க கதையின் கடவுள் அங்கே காட்சியளிக்கிறார், அழுத்தமாக நகர்ந்துகொண்டு இருக்கும் அந்த தருணத்தில், அளவாக அழுத்தமாக ஒரு இசை ஒலிக்கின்றது.

 

கதை ஓட்டத்தில்,”yes  he is  the  god” என்று நம் மனதில் ஒரு குரல் ஒலிக்கின்றது.கடவுள் தனியாக எந்தவொரு physical form உம் எடுத்து வந்து நம்மை காப்பதில்லை. இருக்கும் அத்தனை physical form உம் அவரே தான்! யாருக்கு எங்கு தேவை இருக்கின்றதோ அவரை அங்கே அனுப்பிவைப்பார்.

 

Those are the moments of that story.இரத்தம் படிந்த அந்த முகத்தை பார்த்த மாத்திரத்தில், ஏசுவும், ஒரு பாதிரியார் எழுதிய கதையாக தென்கச்சி சாமிநாதன் அவர்கள் கடவுள் பற்றி சொன்ன கதை ஒன்றும் நினைவிற்கு வந்தது.

 

நீளமான சண்டைகளும், அதிகமான maas காட்சிகளும் நிறைந்த படத்திற்கு பின்னணி இசைமைப்பதை விட சவாலானது எதுவும் இல்லை. கதை ஆரம்பித்த கொஞ்ச நேரத்தில், AK ஒருவனை அறைய கை ஓங்கும், அந்த அளவிற்கு மட்டும் ஒரு இசையை ஒலித்து இருப்பார் ஜிப்ரான். “ஆகா! மனுஷன் பயங்கரமா வேலை பார்த்திருக்கான்” என்று நம்மை நினைக்க செய்யும் அளவில் பின்னணி இசை இருந்தாலும்,எல்லா இடங்களிலும் இசை ஒலித்துகொண்டே இருந்தது ஒரு சலிப்பை தராமல் இல்லை. அது ஜிப்ரானின் தவறு இல்லை.கதை அந்த மாதிரி.

 

பல காட்சிகளை, இசை கொண்டு elevate பண்ண வேண்டிய தேவையும் இருந்ததால் அது சில இடங்களில் வெறும் ஒலியாக ஒலித்தது. நீளமான சண்டைக்காட்சிகளில் ஜிப்ரான் கையைக்கட்டிக்கொண்டும் இருந்திருக்க முடியாது.

 

கதை,(இப்ப script என்றால் தான் புரியும்)எங்கும் வழுவல் இல்லாமல், நம்மை யோசிக்கவும் விடாமல் நகர்ந்து கொண்டு இருந்தாலும், கதையில் இருக்கும் சில விஷயங்கள்,”இது ஏன் இப்ப” ரக கேள்விகளை மனதில் எழுப்பிவிடுகிறது.

 

வேகமாக நகர்ந்துகொண்டு இருக்கும் கதையோடு  பார்வையாளர்கள் ஒன்றிய பிறகு, இடையில் ஒரு பாடல் வரும் பொழுது,  அந்த பாடல் பார்வையாளர்களை கதையில் இருந்து வெளியில் கொண்டு வரும் விதமாக  அமைந்துவிடுகிறது.அது பார்வையாளர்கள் யோசிப்பதற்கான நேரத்தை கொடுக்கின்றது.

 

அவன் ஏன் இதை செய்தான்? இது ஏன் இப்படி நடந்தது? என்று 90 சதவீதம் கதையில் எல்லாவற்றிக்கும் ஒரு justification  இருந்தது. சாதாரணமாக அமைக்கப்படும் கதைகளில் 90 சதவீதம் justification இல்லை என்றாலும் நாம் அதை  கேள்விக்குக்குட்படுத்துவதில்லை. ஆனால், சிறந்த கதைகளை நமக்கு திரையில் தந்த வினோத் போன்ற இயக்குனர்களிடம் அந்த 10 சதவீதம் justify செய்ய முடியாத விஷயங்கள் நமக்கு பெரிய குறையாகத் தான் தெரிகிறது.

 

அரசியல்வாதிகள், காவல்துறையையும், இராணுவத்தையும் தங்கள் சுயலாபத்திற்காக பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்பதை ஓரளவில் மறுக்கமுடியாது என்றாலும்.எல்லா heist கதைகளையும் போல், தேசபாதுகாப்பு என்கிற factor இயல்பாகவோ அல்லது அரசியல்வாதி வில்லன்களாலாலோ புகுத்தப்படும் பொழுது ராணுவம், விஷயத்தை கையில் எடுத்துக்கொள்ளும். அந்த இடத்தில், காவல்துறை ராணுவத்தைப் பார்த்து, “இது தமிழ்நாடு ரவீந்தர் இங்க உங்க ஆட்டம் நடக்காது” என்கிற வசனம் எந்த வகையிலும் justify  செய்ய முடியாத வசனமாகவும் கதைக்கு தொடர்பில்லாத வசனமாகவும் இருக்கின்றது.

 

தமிழகத்திற்கும் சேர்த்து,பாதுகாப்பை தர, தமிழக வீரர்களையும் உள்ளடக்கியது தானே ராணுவம்!  நிர்வாக ரீதியிலாக காவல்துறைக்கும் ராணுவத்திற்கும் இடையில் அங்கே என்ன மாதிரியான உரையாடல் இருந்திருக்க வேண்டும் என்பது தானே அங்கே வசனமாக இருந்திருக்க வேண்டும்.அல்லது money heist போன்று ராணுவத்திற்கும் காவல்துறைக்கும் இருக்கும் ego clash ஐ வெளிப்படுத்தும் விதமான வசனமாக அது இருந்திருக்க வேண்டும். திணிக்கப்பட்டதில்லை என்று சொன்னாலும், அது சார்புநிலையை வெளிப்படுத்தும்; கதையை வழுவ செய்யும் வசனமாகவே நிற்கிறது.

 

ஒரு கதையை பார்வையாளர்கள் தங்களோடு தொடர்புபடுத்திக்கொள்ளும் பொழுது தான் அது பெறும் வெற்றியை அடைகிறது. அந்த connect ஐ ஏற்படுத்துவதில் ‘set’ மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த திரைப்படத்தில், your bank ஐ திரையில் பார்க்கும் பொழுது, அது எங்கோ ஐரோப்பா பக்கமோ, அமெரிக்கா பக்கமோ இருக்கும் போல என்று தோன்றுகிறது.  personally for me, “என்ன டா இது! money heist bank மாதிரி” என்று என்னை நினைக்க வைத்துவிட்டது.

 

இப்படி மேலே சொல்லிய, இன்னும் சொல்லாத 10 சதவீத குறைகளை தவிர்த்து, கதை 👍💪🏻.

 

இரண்டரை மணி நேரம் கடந்தது தெரியாதது போல், நல்ல entertaining movie. it was like roller coaster ride . இந்த ride ஐ  இன்னும் 30 நிமிடம் சுருக்கி, hollywood படங்கள் போல், ஒன்றரை மணி நேரம், ஒண்ணே முக்கால்மணிநேரத்திற்கு ஓடுவது போல் அமைத்து இருந்தால், இந்த roller coaster இல் இன்னும் ஒரு ride  போக தோன்றியிருக்கமோ என்னவோ!

படையப்பவை கடந்து சிவாஜி;சிவாஜியை கடந்து எந்திரன்; எந்திரனை கடந்து 2.0 என்று ரஜினி நிற்பது போல்.

ஹீரோயிசத்தை மையப்படுத்தி, ஹீரோவை மையப்படுத்தி நகரும் வகை கதைகளில் விஜய் போக்கிரியையும் ,அஜித் ஆரம்பத்தையும் கடப்பார்களா? என்பதை இவர்களின் அடுத்தப்படத்தில் தான் பார்க்க வேண்டும். What I mean is வெறித்தனமான hero movie with 100%solid script வகை கதைகள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *