வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும்!

நேற்று ஒரு செய்தியையும் அது சார் காணொளி ஒன்றையும் காண நேரிட்டது. கர்நாடகாவில் உள்ள ஒரு கோவிலில் கலசம் அமைக்கும் பணிக்காக மனிதர்கள் நிற்கும் அளவிலான ஒரு பெரிய கூடையை கிரனோடு(crane ) இணைத்து, கலசம் அமைக்கும் பணியை செய்பவர்களை அதில் ஏற்றி, கிரேனை உயர்திக்கொண்டிருந்த பொழுது பாதி உயரத்தில் கூடை கிரேனில் இருந்து பிரிந்து கீழே விழுந்து ஒருவர் பலியானது தொடர்பான செய்தி அது.

நாம் பேசப்படாத அரசியல் என்கிற தலைப்பில் சில கட்டுரைகளை எழுதி, தமிழகத்தின் கடைசி வாய்ப்பு ரஜினிகாந்த் என்கிற புத்தகத்தின் மூலம் அதை வெளியிட்டோம், சில கட்டுரைகளை நேரடியாக நம் தளத்தில் பதிவேற்றினோம். மேலே நாம் குறிப்பிட்ட சம்பவமும் கூட பேசப்படாத அரசியல் தான்.

எந்த ஒரு வளர்ந்த நாடுகளிலும், ஒரு பணியை இத்தனை அசட்டையாக செய்ய முற்பட கூட முடியாது. முதலில் அந்த கலசம் அமைக்கும் பணிக்கு கிரனை பயன்படுத்தியதே தவறு தான். வளர்ந்த நாடுகளில், இது சட்டப்படி குற்றமாகும். எந்த ஒரு பணியிடத்திலும் அல்லது பொது இடத்திலும் எல்லோரது பாதுகாப்பையும் உறுதி செய்ய; ஒரு பணியை பாதுகாப்பாக எப்படி செய்ய வேண்டும் என்பதற்கெல்லாம் வளர்ந்த நாடுகள் சட்டம் இயற்றி அதைப் பின்பற்றி வருகிறது. அது சம்பந்தமாக நம் ஆசிரியர் குழுவில் ஒரு உரையாடலை தொடங்க நாம் அந்த காணொளியை நம் ஆசிரியர் குழுவில் பகிர்ந்தோம்.

காணொளியோடு நிறுத்தாமல், ஆசிரியர் விஜி, அந்த காணொளியின் கீழே இருந்த கருத்துக்களை எல்லாம் அலசிவிட்டு, “இங்கையேயும் வந்து ஆன்மீகம் பகுத்தறிவு என்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள்; இவர்களை ஒன்றும் செய்ய முடியாது. கலசம் அமைக்கச் சென்ற பூசாரியையே கடவுள் காப்பாற்றவில்லை என்றெல்லாம் கேலி செய்கிறார்கள்.கடவுள் ஒரு ஒழுங்கின்(rule ) படி தான் யாருக்கும் எதையும் செய்கிறார்.அவர் எல்லோரையும் காப்பாற்றமாட்டார். மாடியில் ஏறி நின்றுகொண்டு குதித்து கடவுள் காப்பாற்ற வேண்டும் என்றால் காப்பாற்ற மாட்டார்” என்றெல்லாம் சொல்லிக்கொண்டே வந்தார்.

அப்போது,ஆசிரியரின் விஜியின் நினைவிற்கு அருணகிரிநாதர் வந்துவிட்டார். கோவில் கோபுரத்தில் இருந்து குதிக்க முற்பட்ட அருணகிரிநாதரை கடவுள் காப்பாற்றியதாக சொல்கிறார்கள் அது எப்படி? என்கிற கேள்வி நமக்கே எழுகிறது.அது எப்படி நடந்தது என்று நமக்கு தெரியவில்லை. ஆனால், இந்த காலத்தில் இது நடக்காது என்று விஜி முடித்தார்.

பணி செய்யும் இடத்தில் பின்பற்ற படவேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் அது சார்ந்து நடைமுறைக்கு கொண்ட வரவேண்டிய சட்ட வரைவுகள் பற்றி நாம் எழுத நினைத்தோம். ஆசிரியர் விஜியின் கருத்து. நம்மை மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம் தொடரின் இருபதாவது கட்டுரையை எழுத வைத்திருக்கிறது.

அவர்(விஜி) சொன்னது சரி தான். பிரபஞ்சம் ஒரு விதியின் படி தான் இயங்கிக்கொண்டிருக்கிறது அதை கடவுளும் கூட மீறுவதில்லை. இந்த விதி பற்றி புரிந்து கொள்ள மதம் சார்ந்ததில்லை ஆன்மீகம் தொடரில் நாம் வெளியிட்ட 11வது கட்டுரையை வாசியுங்கள்.

சரி! விதி(rules) படி தான் கடவுளும் இயங்குவார் என்றால், அருணகிரிநாதர் மட்டும் எப்படி காப்பாற்றப்பட்டார்? யாரால் காப்பாற்றப் பட்டார்?

எல்லா சிவனும் சிவன் அல்ல. ஆனால்,எல்லாமும் சிவன் தான். இந்த வாக்கியத்தை எங்கோ படித்தது போல இருந்தால். நிச்சயமாக நம் தளத்தில் வெளிவரும் எல்லா கட்டுரைகளையும் படிக்க கூடியர்வர்களாக நீங்கள் இருக்கலாம்.

நாம் சிவன் என்று வெவ்வேறு பெயர்களில் வணங்குகின்ற சிவன் எல்லாம் சிவன் இல்லை.யோகம் அல்லது பக்தி மார்க்கத்தில் தங்களை செலுத்தி இறைவனோடு இறைவனாக கலந்து நின்றவர்கள் பெயர்களில் தான் சிவாலயங்கள் இருக்கிறது.சைவ தத்துவங்கள் மற்றும் பகவத் கீதை மூலம் நாம் புரிந்து கொண்டதன் படி இது நம்முடைய கருத்து. மனிதனாக பிறப்பெடுத்து, யோக மார்க்கத்தைப் பற்றி பேரானந்த நிலை எய்தியவர்கள் எல்லோரையும் நாம் சிவனாக பாவித்தது படியே தான், முருகருக்கும் நாம் சில வரையறைகளை வைத்து இருந்தோம்.

கீதை சைவம் எல்லாம் இறைவனுக்கு ஒரு உருவமும் இல்லை என்கிறது. இதை சொல்லும் சமயங்களே தான், முருகன் ஜோதிட கலையில் பல நூல்களை தந்தான் பிரசன்ன கலையை தோற்றுவித்தான்.அசுரனை வீழ்த்தினான் என்றெல்லாம் சொல்கிறது.எப்படி நாம் பேரானந்த நிலை எய்தி இறைவனோடு இறைவனாக ஒன்றியவர்களை சிவன் என்று கொள்ளலாமோ! உடலை ஒரு ஆன்மா உதறிவிட்டாலே நாம் சிவ பதம் அடைந்தார் என்று சொல்லி வைக்கிறோமோ!அது போல் முருகருக்கு சில வரையறைகள் வைத்து இருக்கிறோம், தமிழில் புலமை பெற்று பல நூல்களை தந்த ஒளவையை ஒரு சிறுவன் வார்த்தை ஜாலத்தால் வீழ்த்தும் அறிவு பெற்று இருக்கிறான் என்றால் அவன் முருகன். அதாவது, இளமையில் இருந்து ஞானம் பெற்று இருப்பவர்கள், ஆன்மீகத்தில் ஈடுபட்டு, மருத்துவம், சோதிடம்,சாஸ்திரம் இவற்றில் வல்லமை பெற்றிருப்பவர்கள்.இவர்கள் எல்லோரும் நம் கலாச்சாரத்தில் முருகன் தான்.முருகனையும் கூட நாம் பல பெயர்களில் தான் அழைக்கிறோம், அந்த பல பெயர்களும், பல பேராக இருக்கலாம்.

கடவுளை நாம் மனிதரோடு ஒப்பிடவில்லை, மனிதரில் தெய்வ நிலைக்கு உயர்ந்தவர்களை நாம் வகைப்படுத்தி வைத்திருக்கின்றோம் என்பதே தான் நம் கருத்து.

நீங்கள் சிந்தியுங்கள்,போகர் என்கிற ஒருவர், உடலுக்கு பல நன்மைகளை செய்யக்கூடிய, பல நோய்களை குணப்படுத்த கூடிய நவபாஷாணத்தில் ஒரு சிலை செய்கிறார். அதை நாம் முருகன் என்று வணங்கிக்கொண்டிருக்கின்றோம். ஏன் அவர் ஒரு நந்தி சிலையோ லிங்கமோ செய்யவில்லை? ஏன் அவர் ஒரு அழகான பெண் சிலையை செய்யவில்லை. சோதிடம், மருத்துவம், மந்திரம் எல்லாம் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்பார்கள். எல்லோரும் யோகத்தில் நிலை பெற முடிவதில்லை. உலக வாழ்க்கையில் ஈடுபடும் மனிதர்களுக்கு இதெல்லாம் தேவைப்படுகிறது. இதில் எல்லாம் சிறந்த முன்னோடியாக ஒரு முருகன் இருந்திருப்பார். அவரை தொடர்ந்து இன்னும் பல முருகன்கள் இருந்திருப்பார்கள். அதன் பொருட்டே தான் மருத்துவ குணம் கொண்ட நவபாஷாணத்தில் போகர் முருகன் சிலையை அமைத்திருக்க கூடும்.இப்படி ஒரு முருகன் தான் வந்து அருணகிரிநாதரை காப்பாற்றி அவரை குணப்படுத்தியிருக்க முடியும்.

புத்தரை போன்றே தியானத்தில் நிலைபெற்று பேரானந்தம் அடைபவர்கள் எல்லோரையும், புத்த மதம் பொதுவாக புத்தா என்றே தான் அடையாளப்படுத்துகிறது.

அப்படியென்றால், நாம் வணங்கும்,எதுவமே சாமியே இல்லை என்று சொல்கிறாயா? இல்லவே இல்லை. உருவமே இல்லாத இறைவன் இப்படியெல்லாம் உருவம் கொள்கிறான், உருவமில்லாத அவனை நாம் எப்படி புரிந்து கொள்வது, நாம் புரிந்து கொள்வதற்கெனவே இப்படியான தெய்வங்களாய் வந்து, அவர்களை நாம் வணங்கி நாம் வேண்டும் விஷயங்களை நாம் வேண்டியபடி நடத்துகிறான்.

Indeed God has no physical forms, but he owns all the physical existence and He is the physical existence.

சில வரிகளை என்னால், தமிழ் படுத்த முடியவில்லை.எங்கோ ஏதோ ஒரு சமயத்தில், நாம் தவறவிடுகிற பணப்பையை கொண்டு வந்து தருகிறவரை, நாம் கவனிக்காத சமயத்தில், ஒரு ஆபத்தில் இருந்து குழந்தையை காப்பாற்றுகிறவரை. அவசரமான சமயத்தில், நமக்கு உதவுகிறவரை கடவுள் போல் வந்து காப்பாற்றினீர்கள் என்று சொல்கிறோம் தானே! அவர்கள் எல்லோரும் கடவுள் தான். அவர்களை அந்த மனிதர்களை அந்த சமயத்தில் கடவுளாக செய்து உங்களை காப்பது கடவுளே தான். அதில் சந்தேகம் வேண்டாம்.

ஆயிரம் கண்ணுடையாள் என்கிறார்கள். உருவமற்ற கடவுளுக்கு எங்கிருந்து ஆயிரம் கண்கள் வரும்?இருக்கின்ற எல்லா கண்களும் இறைவனுடைய கண்கள் என்கிற அர்த்தத்தில் இறைவனை ஆயிரம் கண்ணுடையாள் என்றெல்லாம் வணங்குகிறோம். நம் எல்லோருள்ளும் இறைவன் வெளிப்படாமல் இருக்கிறார். யாருக்கு எப்போது தேவையோ அவர்களுக்காக அவ்வப்பொழுது நம்மில் யாரிடமிருந்தேனும் அவர் வெளிப்படுகிறார்.”தெய்வம் மனுஷ்ய ரூபேண”

அது தான், யதா யதா ஹி தர்மஸ்ய க்லானிர்பவதி பாரத அப்யுத்தானமதர்மஸ்ய ததாத்மானம் ஸ்ருஜாம்யகம்பரித்ராணாய ஸாதூநாம் விநாசாய ச துஷ்க்ருதாம் |
தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய ஸம்பவாமி யுகே யுகே

எப்போதெல்லாம் தர்மம் அழிகிறதோ அப்பொழுது நான் தோன்றுவேன். ஒருவருக்கு உதவி தேவை படும் பொழுது ஒருவரை ஆபத்தில் இருந்து காக்க வேண்டிய தேவை வரும் பொழுது, இறைவன் நம்மில் இருந்து தோன்றுகிறார். அந்த சமயங்களிலெல்லாம் அவர் பிறந்து வளர்ந்து வந்து காப்பாற்றுவார் என்றில்லை.

சரி! நம்மில் இருந்து தான் இறைவன் தோன்றவார். நம்மில் யாரோ ஒருவர் மூலம் தான் தேவைப்படுகிற யாருக்கோ இறைவன் உதவுவார்,ஆபத்தில் இருக்கின்ற யாரையோ இறைவன் காப்பாற்றுவார். அருணகிரிநாதரை காப்பாற்றிய இறைவன் ஏன் எல்லோரையும் காப்பதில்லை.

அருணகிரிநாதர், இல்லாத அட்டூழியங்கள் எல்லாம் செய்து இருக்கின்றார் என்று சொல்கிறார்கள். எல்லாவிதமான போதைகளுக்கும் அடிமையாக இருந்திருக்கின்றார் என்று சொல்லலாம். வீட்டில் இருப்பவர்களிடம் தான் அதற்கெல்லாம் பணம் வாங்குவாராம். ஒரு கட்டத்தில், நோய்வாய்படுகிறார்.எல்லோரும் அவரை ஒதுக்குகிறார்கள். அந்த நிலையிலும் தன்னை விற்று கூட சகோதரனை காப்பாற்ற அருணகிரிநாதரின் சகோதரி முன்வந்ததாகவும், அதில் மனம் திருந்தியதாகவும் சொல்லப்படுகிறது.

நிச்சயமான ஒரு உண்மை என்னவென்றால் , அவர் எல்லா போதைக்கும் அடிமையாகி நோய்வாய்ப்பட்டு, எல்லோராலும் ஒதுக்கப்பட்டு,அதன் பின் தன்னிலை உணர்ந்து, செய்த தீவினைகளை உணர்ந்து தனக்கு தானே தண்டனை கொடுத்து கொள்ளும் முடிவில் தான் தற்கொலை செய்ய துணிகிறார். அதற்கு  அவர் தேர்வு செய்த இடம் பாருங்கள், செய்த தவறுகளுக்கு வருந்தி கோவிலுக்குச் சென்று  முட்டிக்கொண்டு கோவில் கோபுரம் ஏறி குதிக்க முற்பட்டு இருக்கிறார்.

தமிழ், கலாச்சாரத்தில் மன்னிப்பு என்பது இல்லை என்பார்கள். தவறு செய்கின்ற ஒருவர் தன் தவறை உணர்ந்து விட்டார் என்றால், அவர் மனம் அந்த தவறு செய்ததற்காக வருந்தும், அதனால், தான் நம் கலாச்சாரத்தில் செய்கிற தவறுகளுக்கு வருத்தம் தெரிவிக்கிறோம். “இப்ப என்ன sorry கேட்கணும்” என்பதும், வருத்தம் தெரிவிப்பதும் சம்பிரதாய செயல்களாக ஆகிவிட்டது. உண்மையில் தவறுகளை உணர்கின்ற ஒருவரால் சம்பிரதாய மன்னிப்புகள் கேட்க முடிவதில்லை அவர் பரிகாரம் தேடுவார். தண்டனை ஏற்றுக்கொள்ளவார்.

உடல் செய்கின்ற எல்லா தீவினைகளுக்கான பலன்களையும் உடலே தான் அனுபவிக்கும். அருணகிரிநாதர் செய்த செயல்களின் பயனாகவே தான் அவர் நோய்வாய்ப்பட்டார், அவரின் உடல் தண்டனை அனுபவித்துக்கொண்டு தான் இருந்தது. ஆனால், தானே தன் தவறை உணர்ந்து அவர் மேலும் தன்னை தண்டித்துக்கொள்ள துணித்து, கோவிலுக்கு சென்று குதிக்க முற்பட்டதால், இறைவன் யாரோ ஒருவராக தோன்றி அவரை காப்பாற்றி குணப்படுத்தி, ஆன்மீகத்தில் ஈடுபட செய்கிறார்.குணப்படுத்த முடியாத நோய்களை குணப்படுத்தும் வல்லமை கொண்ட ஒருவர் அருணகிரிநாதரை காப்பாற்றி இருக்கின்றார்(medical excellence).

நீங்கள் சிந்தியுங்கள், ஒரு சாராயக்கடையில் விழுந்து கிடப்பவரை யாரேனும் சட்டை செய்வார்களா? கடவுளோ அல்லது கடவுள் போன்ற ஒருவரோ சாராய கடைக்கு செல்வார்களா?அங்கும் ஒருவர் மனம் வருந்தினால் அதற்க்கும் கூட வாய்ப்பு இருக்கலாம்.

இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்களில், முதன்மையானது, தன்னிலை உணர்தல், நமக்கு ஏன் இப்படி நடக்குது நாம் செய்த தவறுகள் என்ன? நாம் செய்த வினைகளின் பயனாகவே தான் நாம் இதை அனுபவிக்கிறோம் என்பதை புரிந்து கொள்வது. புரிந்து கொண்டு இறைவனிடம் சரணடைவது.

சரி! தன்னிலை உணர்ந்து. செய்த தவறுகளை புரிந்து கொண்டோம்.அடுத்து என்ன செய்ய வேண்டும்? நாம் நம்மை எந்த வழியில் செலுத்துகிறோம் என்பதில் தெளிவு இருக்க வேண்டும். தாசிகளின் வீடுகளுக்காய் சென்றுகொண்டிருந்த அருணகிரி நாதர் தவறுகளை உணர்ந்து கோவிலுக்கு செல்லுகிறார். அங்கு தான் கடவுளைப் போன்ற நல்லவர்கள் வருவார்கள் என்று அவர் நினைத்து இருக்கலாம். அல்லது இயல்பாகவே அது நடந்திருக்கலாம்.

கர்நாடக கோவில் கலசம் அமைப்பதில் நடந்த விபத்தில், அவர்கள் கோவிலில் முன்பு தானே விழுந்தார்கள் ஏன் காப்பாற்றவில்லை? தன்னிலை உணர்தல் என்பது ஒரு விழிப்புணர்வு நிலை ஒரு concisousness,ஒரு செயலை தொடங்கும் முன், இறைவனை வணங்க சொல்கிறது, நம் கலாச்சாரம். தினமும் ஒரு செயலை செய்கிறீர்கள், தினமும் செய்கின்ற செயல் தானே என்கிற அசட்டையில் அதில் நீங்கள் தவறலாம். எனக்கு கார் ஓட்ட சொல்லி தந்த uncle, ஒரு நாளில் எத்தனை முறை வண்டியை எடுத்தாலும், அத்தனை முறையும் இறைவனை வணங்கிவிட்டு தான் வண்டியை எடுப்பார்.இப்படி செய்வதன் மூலம், அவர் தன்னை அறியாமலே ஒரு அவருக்குள் concisousness ஏற்படுத்துகிறார். எல்லாம் என் கட்டுபாட்டில் இருக்கும் பொழுது எப்படி விபத்து நடக்கும் என்கிற மமதை அவரிடம் இல்லை. வண்டி நான் தான் ஓட்டுறேன். ஆனா, நீ என்னை பார்த்துக்கோ என்கிற வழிபாட்டில், தானாக ஒரு ஈகோ உடைகிறது, மமதை அழிக்கப்படுகிற இடங்களில் கவனம் சிதறுவதில்லை, முட்டாள்தனமான தவறுகள் நிகழ்வதில்லை.

 

அதோடு, இத்தகையவர்கள் எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை, ஏதோ ஒரு வகையில் கவனித்து விட்டு கடைசியாக எல்லாவற்றையும் மீறி வேறு எந்த தவறு நடந்து விடக்கூடாது என்று இறைவனை வேண்டிக்கொள்கிறார்கள்.

 

தர்மனை ஏன் காப்பாற்றவில்லை என்று க்ரிஷனரிடம் கேட்டதற்கு, தர்மம் சூதாடுகிறோம்(தவறு செய்கிறோம்) இது கிருஷ்ணனுக்கு தெரியக்கூடாது என்று நினைத்தாராம்.இப்படியான முட்டாள்தனமான எண்ணங்கள் நம்முள் தோன்றுவதற்கு காரணம், நம்முடைய மமதை அறியாமை. மமதை விட்டொழித்தது எந்த செயலையும் தொடங்கும் முன், “ஆண்டவா! எல்லா சரியா நடக்கணும் எதுவும் தப்பாகிட கூடாது” என்று வழிபடுங்கள். உங்களை அறியாமல் கூட நீங்கள் தவறு செய்ய மாட்டீர்கள், அதையும் மீறி நடக்கும் தவறுகளில் இருந்து கடவுள் போன்ற ஒருவர் உங்களை நிச்சயம் காப்பாற்றுவார்.

எந்த செயலையும் ஆரம்பிக்கும் முன்னர்,மிகவும் குறிப்பாக, பயணங்களின், பொழுது, ஆபத்தான பணிகளை மேற்கொள்ளும் பொழுது, எனக்கு தெரிந்தது தானே என்கிற மமதை இல்லாமல் இரண்டு நொடி இறைவனை பிராத்தனை செய்யுங்கள், that pause will let you know if there is something to be corrected, that pause will save you from dangers. Prayer sub-consciously activates your self consciousness.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *