தமிழக முதல்வர் மு..ஸ்டாலின் அவர்கள், கட்சிகள் பொது அமைப்புகள் இது போன்ற கூட்டங்களை நடத்த வேண்டுமென்றால், அதற்கான விதிகளை வகுக்க வேண்டியது நமது கடமை, நீதிபதியின் (ஒரு நபர் விசாரணை ஆணையம்) அறிக்கை கிடைத்தவுடன் அணைத்து கட்சிகளுடன் கலந்தாலோசித்து இதற்கான விதிகள், நெறிமுறைகள் வகுக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்.

முதலமைச்சரின் இந்த அறிவிப்பை பார்த்ததும், இந்த முடிவும் எண்ணமும் வரவேற்க படவேண்டியது, விமான சாகச நிகழ்ச்சியில் நடந்த விபத்திற்கு பின்னரே இப்படியான விதிகள் வகுக்கப்பட்டிருக்க வேண்டும். இப்பொழுதேனும் பாடம் கற்றுக்கொண்டு நிர்வாகத்தை மேம்படுத்தபார்க்கிறார்களே!  ஒரு அரசு, குற்றம் குறை கூறிக்கொண்டு இல்லாமல், இப்படி சம்பவத்திற்கு பின்னர், நிர்வாக சீர்திருத்தங்களை கொண்ட வர முனைவது  தமிழகத்தில், ஏன் இந்தியாவிலேயே இது தான் முதல் முறை.

.தி.மு. ஆட்சியில் போலீஸ் காவலில் நிகழ்ந்த மரணம் பேசுபொருளானது. தி.மு.க., அப்பொழுது .தி.மு. அரசாங்கத்திற்கு எதிராக நா விரல் மூன்று அம்பு என்று விட்டுக்கொண்டிருந்தது.

ஆனால், 2020-21இல் 63 ஆக  இருந்த காவலில் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை, 2021-22 இல் 109 ஆக ஆனது. பென்னிக்ஸ் ஜெயராஜ் வழக்கின் பொழுதே நீதிமன்றம் இனி இது போன்று நிகழாமல் இருக்க அரசு சில விதிகளை மேம்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தது. ஆனால், சமீபத்தில் நம் எல்லோருக்கும் தெரிந்த அஜித்குமார் மரணம் வரை எந்த சீர்திருத்தமும் செய்யப்பட்டதாக தெரியவில்லை.அஜித்குமார் மரணம் அல்லாமல், இது போன்ற மரணங்கள் நிறைய நிகழ்ந்திருக்கிறது.

இப்பொழுது மட்டும் இந்த சிஸ்டத்திற்கு எப்படி ஞானம் வந்தது என்றால், கரூர் சம்பவத்திற்கு முன்னதாக, “எங்கள் கூட்டத்திற்கு அனுமதி கொடுப்பதற்கு மட்டும் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகிறது. பாகுபாடு காட்டப்படுகிறது” என்று .வெ.. தரப்பில் வழக்கு தொடர்ந்திருந்தார்கள். அதற்கு நீதிமன்றம் இப்படியான கூட்டங்களுக்கு அனுமதி கொடுப்பதற்கு என்று பொதுவானபிரத்தேயேக நெறிமுறைகளை வகுக்க சொல்லி,இப்படி கூட்டங்களில் பொழுது பொதுச்சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டால் அபராதம் விதிக்க வேண்டும் என்றும்;  முன்மொழியப்படும் வழிகாட்டுதல்கள்  அல்லது நெறிமுறைகளை செப்டெம்பர் 24ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தது.ஆனால், காவல் துறையோ அப்படி பொதுவான வழிகாட்டுதல்கள் ஒன்றையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை. மாறாக அவர்கள், தற்போது இருக்கும் சட்டத்தில் அப்படி அபாரதங்கள் விதிக்க இடமில்லை என்று பதிலளித்து இருந்தார்கள். அதனைத் தொடர்ந்து  நீதிமன்றம் தன்னுடைய அதிருப்தியை பதிவு செய்து,இந்த விஷயத்தில் உயர் மட்ட, கொள்கை முடிவை அக்டோபர் 16ம் தேதிக்குள்  பெறுவதற்காக  தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மற்றும் உள்துறைச் செயலாளரை இந்த வழக்கில் நீதிமன்றம் தானாக முன்வந்து சேர்த்தது. 

27ம் தேதி கரூர் சம்பவம் நடக்காமல் இருந்திருந்தாலும் அரசு இப்படியான கூட்டங்களுக்கு அனுமதி தருவதற்கான பொதுவான வழிகாட்டுதல்களை முன்மொழிந்து அக்டோபர் 16ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பித்து இருக்க வேண்டும்.

நம்முடைய இந்த சமூகம் எப்போதும், நீதிமன்றம் சில விஷயங்களை அறிவுறுத்தினாலும் கூட, கடந்த கால தவறுகளில் இருந்து தன்னை திருத்திக்கொள்ளாமல் மீண்டும் மீண்டும் அதே தவறுகள் நடக்க இடமளித்து வந்துதான் இருக்கிறது.

மக்களால் ஆன ஜனநாகயத்தில்,அரசியல்வாதிகள், ஊடங்கங்கள் என்று எல்லா நிலைகளிலும் இருக்கும் மக்கள் கடந்த காலத்தில் செய்த தவறுகளை மீண்டும் மீண்டும் செய்கிறார்கள். நாம் நம்மை மாற்றிக்கொள்வதற்கு, ஏதோ ஒன்று ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி ஒரு நம்மை நிர்பந்தத்திற்கு தள்ளும் வரை நாம் காத்திருக்கிறோம்.

பென்னிக்ஸ் கொலை வழக்கின் பொழுது மக்களாகிய நாம் நம் உணர்ச்சிகளால் கண் கட்டப்பட்டு இருந்தோம். போலீஸ்கார்களைவசைபாடி, இது அடிமை அரசாங்கம் என்று கோபத்திற்கு தீனிபோட்டு கொண்டோம். அப்போது, மக்களும் சரி ஊடகங்களும் சரி சரியான திசையை நோக்கி அரசை செலுத்தவில்லை. அந்த தவறுகள் மீண்டும் நிகழ்ந்தது.

கரூர் சம்பவத்தில்அம்புலன்ஸ் வேண்டும் என்கிறார்கள், விஜய் வரும் என்கிறார். ஆம்புலன்ஸ்க்கு வழிவிடுங்கள் என்கிறார்.அம்புலன்ஸ் வந்தது.  ஆம்புலன்ஸ் வந்த பின்னரும் அவர் பேசிக்கொண்டிருந்தார் என்றெல்லாம் சொல்லி ஏதோ ஒரு வகையில் விஜயை குற்றவாளியாக்க பார்க்கிறோம்.விஜய் தரப்பில் நூறு குற்றங்கள் இருக்கலாம் அதையும் இந்த கட்டுரையில் பார்க்கலாம். அதற்கு முன்னர், நம் கடந்த கால தவறுகளை கொஞ்சம் புரட்டுவோம்.

கடந்த கால நினைவுகளை புரட்டும் பொழுது, நம்முடைய அரசியல் கோமாளி அண்ணன் விஜயகாந்த் நினைவிற்கு வந்தார்.

இரண்டே இரண்டு டி.வி. சேனல்கள். இரண்டும் திராவிட கட்சிகளுடையது. எப்போது திருப்பினாலும், கூட்டத்திற்கு நடுவில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது பேச்சை நிறுத்தி நாக்கை திருத்தி, கண்ணை பெருசாக்கி கூட்டத்தில் இருக்கும் யாரையேனும் மிரட்டிக்கொண்டிருக்கும் கோமாளி விஜயகாந்தை காட்டுவார்கள். நாமெல்லாம் அப்பொழுது சிரித்துக்கொண்டிருந்தோம். அந்த சமயத்தில் தினமலர் வாசகர் ஒருவர் இந்த கோமாளி பற்றி எழுதியிருந்த சிறு பத்தியை வாசகர் பகுதியில் தினமலர் அப்போது வெளியிட்டிருந்தது. அவர் எழுதியிருந்தது, “விஜயகாந்த் கூட்டத்தில் ஒரு ஒழுங்கை எதிர்பார்க்கிறார் அவர் கண்டிப்பில் தவறு இருப்பதாக நான் பார்க்கவில்லை“. இப்படி எல்லோரையும் அரசியல்வாதிகள் ஒரு பக்கமாக திசை திருப்பும் பொழுது யாரோ ஒருவர் சில உண்மைகளை கவனிப்பவராக இருக்கிறார்.

தீடீரென்று கூட்டத்தில், மற்றவர்களை தள்ளுகிறவரையோ, கம்பங்களில் ஏறுகிறவரையோ அந்த நேரத்திலேயே கண்டித்தவரை, இந்த அரசியல்வாதிகள் ஊடங்கள் கோமாளியாக காட்டியது. அதைப் பார்த்த நாமும் கூட,யார் என்ன பண்ணா என்ன? நீ பாட்டுக்கும் பேச வேண்டியது தானே!” என்றெல்லாம் அவரை கேலிசெய்திருப்போம் என்பதை யாரும் மறுக்க முடியாது. திராவிட கட்சிகளின் எழுச்சிக்கு பின்னால், எதிர்க்கட்சி நிலைக்கு உயர்ந்த ஒரேயொரு ஆள், அவரிடம் இருந்த கண்டிப்பை கோமாளித்தனமாக சித்தரித்த பின், இந்த சமூகத்தில் இருந்து புதிதாக வரும் எவர் ஒருவருக்கும், கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது, நம் கவனம் என்ன பேச வேண்டுமோ அதில் இருக்க வேண்டும் இல்லை என்றால், நம்மையும் கோமாளி என்று விடுவார்கள் என்கிற எண்ணம் இருக்கும் தானே! நூறு சதவீதம் அது தான் நிஜம். கூடுமானவரையில், சில விஷயங்களை பணிவோடு விஜய்யும்  சுட்டினார் தான்.

நாம் எப்போதும், ஒரு தவறு ஏன் நிகழ்கிறது? அதற்கான காரணிகள் என்ன? என்று சிந்திக்காமல்; குற்றவாளிகளை மட்டும் தேடுகிறோம். அந்த நேரத்தில், நமக்கு பிடிக்காத கட்சியையோ கூட்டமோ நபரோ தான் குற்றவாளி. இதில் இளிச்சவாயன் ரஜினிகாந்த் தான். 2017க்கு முன் இருந்தே எல்லா அரசியல் பிரச்சனைகளுக்கும் அவரை நோண்டுவது. 2017க்கும் 2020வரை அவரே அரசியலுக்கு வருவதாக சொன்னதால், அதை விட்டுவிடுவோம். இப்பொழுது இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்ததற்கு கூட அவரை ஒரு கூட்டம் பழித்துக்கொண்டிருக்கிறது.

இது என்ன மாதிரியான மனநிலை என்றால் யாரையாவது நாம் அடிக்க வேண்டும்! வார்த்தைகளால்; கருத்துக்களால்.

சமூக வலைத்தளங்கள் அதற்கு பெரிய வசதியை ஏற்படுத்தி தந்துவிட்டது.ஒரு பண்பட்ட அறிவார்த்த சமூகம், பிரச்சனைகளை இப்படியாக அணுகாது. அது பிரச்சனைகளின் மூலக்காரணங்களை தேடி தன்னை சரி செய்து கொண்டே இருக்கும். ஆன்ட்ராய்ட் போல அது தன்னை அப்டேட் செய்து கொண்டே இருக்கும். நம் சமூகமுமோ செய்த தவறுகளையே மீண்டும் மீண்டும் செய்கிறது.

விஜயகாந்த் கண்டித்ததை குற்றம் சொன்னோம், இப்போது விஜய் கவனிக்காமல் பேசுகிறார் என்று குற்றம் சொல்கிறோம். விஜய் அரசியலுக்கு லாயக்கு இல்லை. நடிகர் பின்னால் சென்ற கூட்டம் என்று கீழ்மைப்படுத்துகிறோம். விஜய்க்கு அரசியல் தெளிவு இல்லை தான். நிறைய அரசியல் கருத்துக்களில் அவர் பொதுமைப்படுத்தப்பட்ட கருத்துக்களோடு (generalized opinion) மாறுபடமால் இருக்க வேண்டும் என்று தான் நினைக்கிறார்.அதற்கு இங்கிருக்கிற அரசியல் நிலைமையும் காரணம்.

பாஜகவை தன்னுடைய கொள்கை எதிரி என்கிறார். பாஜகவுடைய கொள்கை என்ன? செகுலர் என்கிற பதம் மேற்கில் இருந்தது வந்தது,மேற்கில் அரசாட்சியில் மதத்தலைவர்களின் தலையீடுகள் இருந்தது. போப் போன்ற மதத்தலைமைகளின் தலையீடுகள் இல்லாத அரசு உருவாக வேண்டும் என்பதின் விளைவு தான் இந்த செகுலர் ஸ்டேட் என்பது. இந்த கட்சிகளின் நிரந்தர பொதுச்செயலாளர்  நிரந்தர தலைவர் போல கடவுளை நிரந்தர  அரசன் என்று சொல்லி அரசாட்சி நடந்தும் முறை இந்தியாவில் இருந்திருக்கவில்லை. இந்தியா கலாச்சாரத்தை பொறுத்தவரையில் இயல்பாகவே எல்லோரும் சமம் தான் எல்லாம் சமயங்களும் சமம் தான். ஒரு கடவுளை தான் வேறுவேறு பெயர்களில்  வணங்குகிறோம் என்பதை புரிந்து கொண்டு ஏற்றுக்கொண்ட கலாச்சாரம். அதனால் எல்லோரையும் எல்லா நம்பிக்கைகளை மதிக்க வேண்டும் என்பது தான் அவர்கள் கொள்கை (அவர்கள் வலைத்தளத்தில் குறிப்பிட்டு இருப்பதன் படி).அண்ணாவும் திருமந்திரத்தின் ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்பதை தான் மேற்கோள் காட்டி கொள்கையாக அறிவித்தார். அடிப்படையில், தி,மு.க ஆரம்பித்ததும் பா.ஜ.கவின் கொள்கையில் தான்.

விஜய் பாஜகவின் கொள்கை  எதிரி என்றால், எல்லோரையும் சமமாக மதிக்க வேண்டும் என்கிற கொள்கையை அவர் எதிர்கிறாரா? கிடையாது. இங்கே பா.. எதிர்ப்பு மனநிலையை வளர்த்துவிட்டார்கள்.இந்த சூழலில் அவர் இதற்கு எதிராக மாறாக நிற்க துணியவில்லை. நாம் எல்லோரும் அண்ணா ஹாசாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த பொழுது  அவரும் அங்கே சென்று நின்றார். அப்போதும் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்தது.

விஜய் அவருடைய தனிப்பட்ட ஆசைக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ அரசியலுக்கு வந்திருக்கலாம். ஆனால், அவர் பிழைகளோ அரசியல் தெளிவின்மையோ அல்லது அவருக்கு கிடைக்கும் வரவேற்பை செல்வாக்கை பார்த்து கொஞ்சமாய் பூரித்து கொள்கிற மனநிலையோ சாதாரணமாக அநேக மனிதர்களிடம் தென்படும் விஷயங்கள் தான்.

புதிதாக ஒருவர் அரசியலுக்கு வரும் பொழுது இதையெல்லாம் குற்றமாக பார்க்க வேண்டியதில்லை. இப்படி பார்த்துக்கொண்டிருந்தால், புதிதாக எப்போது யாரும் வர முடியாத சூழல் உருவாகலாம். விஜயகாந்தை எப்படியெல்லாம் குறை கூறினோம் என்று நினைத்து பாருங்கள். விஜயகாந்தை விட நேர்மையான திறமையான அரசியல்வாதிகளை கொண்டிருந்தது போல.

விஜய் அங்கே நிற்கவில்லை, கிளம்பிவிட்டார், பயந்துவிட்டார், இப்படியான விமர்சனங்கள் சரியானது கிடையாது. நம்மை அதே இடத்தில் நாம் நிறுத்திப் பார்க்க வேண்டும். நாம் எல்லோரும்,இனி என்ன செய்ய வேண்டும்?’ என்பதை பற்றிய விவாதங்களை தான் முன்னெடுக்க வேண்டுமே தவிர விஜய் அரசியலுக்கு தகுதியானவரா? என்கிற விவாதங்களை இப்போது (எப்போதும்) எடுக்க கூடாது. அது, புதிதாக யாருமே வரக்கூடாது என்று அச்சுறுத்துவதை போன்றது அதை மக்களே செய்வார்கள் எனில் இன்னும் அரை நூற்றாண்டுக்கு திராவிட கட்சிகளோடு பயணப்பட வேண்டியது தான்.

இங்கே தேர்தல் வெற்றி சாத்தியப்படாத பல தலைவர்கள் அரசியல் கட்சிகள் அரசியலில் இருந்துகொண்டு தான் இருக்கிறது.விஜய்யும் ஓட்டை பிரிப்பார் என்கிற அச்சம் தான் அவர் மீதான விமர்சனத்திற்கு காரணம்.ஆனால், ஆளுக்கு ஒரு பக்கமாக நின்று ஓட்டை பிரித்து திராவிட கட்சிகளை ஆட்சியில் அமர்த்துவதை எப்படி தடுப்பது என்பதை தான் இன்னமும் கற்றுக்கொள்ளவில்லை.அந்த இயலாமையில் விஜய்யை விமர்சிக்கிறோம்.

.வெ.. கூட்டத்திற்கு அதாவது விஜய் ரசிகர்களுக்கு நாம் இந்த கட்டுரை மூலம் சொல்லிக்கொள்ள நினைப்பது. கொஞ்ச நாளேனும் சும்மா இருங்கள். 27ம் தேதிக்கு முன்னர் இருந்த நிலைமையின் படியும் கூட உங்கள் அண்ணன் விஜய் ஒரே தேர்தலில் முதலமைச்சராகும் நிலை இருந்திருக்கவில்லை. அதனால், தான் கட்சி ஆரம்பித்த பொழுதே ஆட்சியில் பங்கு என்று அறிவித்தார். ஆனால், அதுவும் பிழையாகி போனது. மற்றவர்கள் தான் அவர் செல்வாக்கை பார்த்து அப்படி அழைத்திருக்க வேண்டும் அவர் அப்படி செய்தததால், அவரோடு இனி சேர்ந்தால் நாம் மரியாதை குன்றி போகும் என்று ஒருவரும் சேராமல் இருக்கிறார்கள். இந்த துயர சம்பவத்திற்கு பின்னர், எல்லா கட்சி தலைவர்களும் ஓரளவு முதிர்ச்சியை காட்டியிருக்கிறார்கள். எல்லோருமாக சேர்ந்து விஜயை விமர்சனம் செய்யாமல் இருக்கிறார்கள். கிட்டத்தட்ட நாற்பது குடும்பங்கள் சோகத்தில் இருக்கிறது. இந்த நிலையில், “தி.மு.கவின் சதி, நிரூபிக்கப் பட்டு அண்ணன் முதலமைச்சர் ஆனதும்” என்று வீடியோ போட்டு உங்கள் அண்ணனின் துதி பாடிக்கொண்டு அவர் மட்டுமே சோகத்தில் இருப்பது போல நீங்கள் செய்யும் செயல்கள் சமூக வலைத்தளங்களில் இடும் பதிவுகள், விஜய் தரப்பு திட்டமிட்டு சில விஷயங்களை செய்கிறது என்கிற பிம்பத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. அது உண்மையா பொய்யா என்பது விஜய் தரப்பிற்கு மட்டும் தான் தெரியும் எப்படியிருந்தாலும். இந்நேரத்தில் அமைதியாக இருப்பதும் துதிபாடல்களை குறைத்துக்கொள்வதும், இரங்கல் தெரிவிப்பவர்களையெல்லாம் சந்தேகபடுவதும். சிறுவனை கீழே இறங்க சொல்கிறவர் வீடியோ காண்பித்து சிறுவனை கீழே தள்ளிவிடுகிறார் என்பதும். மயங்கி கிடந்தவரை தூக்கி சென்றதை காண்பித்து இறந்தவர் எப்படி திரும்பி வந்தார் என்று கேலி செய்வதுமாக இருப்பதெல்லாம் உங்களின் முதிர்ச்சின்மையை எல்லோருக்கும் தம்பட்டம் அடித்து சொல்வதாக அமைகிறது. அது இன்னும் வளராத வளர வேண்டிய உங்கள் கட்சியின் வளர்ச்சியை தான் பெரிதும் பாதிக்கிறது. உங்கள் விஜய் மேல் குற்றமில்லை என்பதை காட்ட நீங்கள் காட்டும் ஆர்வம், எல்லா தரப்பினரிடையிலும் உங்கள் மேல் நீங்களே வெறுப்பை ஏற்படுத்துவதாக அமைகிறது.

எல்லா கட்சி தொண்டர்களும் அரசியல் தெளிவு கொண்டவர்களாக என்றால், இல்லை. மற்ற கட்சி தொண்டர்களிடம் ஒழுக்க குறைவு இல்லையா என்றால், இருக்கிறது.மற்ற கட்சிகள் எத்தனை பொய்களை பரப்பியிருக்கிறார்கள்; சி... சட்டம் இந்தியாவில் இருந்து இசுலாமியர்களை வெளியேற்றும் சட்டம் என்றெல்லாம் சொன்னார்கள் சட்டம் அமலுக்கு வந்து நான்கு வருடம் ஆகிவிட்டது இந்தியர்கள் யாரையும் வெளியேற்றவில்லை. அதெல்லாம் வதந்தி இல்லையா? சரி தான். ஆனால், அவர்கள் செய்வது ஏதும் வெளியில் தெரிந்ததில்லை, போராட்டங்களை தன்னெழுச்சி போராட்டமாக காட்டினார்கள். மேல்மட்டத்தில் இருக்கின்ற தலைவர்கள் சாதாரணமாக எந்த கருத்துக்களை நேரடியாக தெரிவிக்க மாட்டார்கள்.இப்போது வரை தி.மு.க.வின் மூத்த தலைவர்கள் உங்கள் விஜயை நேரடியாக விமர்சனம் செய்யவில்லை. மற்ற கட்சி மாநாடுகளில் கூட்டங்களில் நடக்கும் ஒழுக்க குறைவுகள் பெரிதாக யாரும் கண்டுகொள்ளும் அளவில் இருந்ததில்லை.

சாதாரணமாக மரத்தில் ஏறுவது, கம்பத்தில் ஏறுவது;மின்சார கம்பத்தில் ஏறுகிறார்கள், அதனால் மின்நிறுத்தம் செய்யுங்கள் என்று கடிதம் கொடுப்பது;இப்படியெல்லாம் செய்துவிட்டு ஒரு கடிதமும் கொடுத்துவிட்டு கூட்டம் நடக்கும் இடத்தில், ஆளும் தரப்பினர் வேண்டுமென்றே மின் நிறுத்தம் செய்கிறார்கள் என்றால், ஆளும் தரப்பினர் வேண்டுமென்றே மின் நிறுத்தம் செய்திருந்தாலும்  அதை உங்கள் தலைவர் சுட்டிக்காட்டும் பொழுது அவர் கோமாளியாகி விடுவார் அது தான் நடந்தது . நீங்கள் எல்லா கூட்டங்களிலும் இப்படி மரத்தில் கம்பத்தில் ஏறுவதை வழக்கமாக வைத்திருந்ததால், கரூரில் கூட்டத்தில் இருந்து தப்பும் முயற்சியாக சிலர் சில இடங்களின் மீது ஏறத்  துணிந்ததெல்லாம் இப்போது தவறாக பார்க்கப்படுகிறது. பெரும்பாலானவர்கள் சந்தேகிக்கும்  படி மற்ற கட்சிகளின் சதி வேலையாகவே இருக்கட்டுமே. ஆனால், நடந்த சம்பவத்திற்கு .வெ..வினர் தான் காரணம் என்று சொல்ல முடிகிற அளவில் மறுக்க முடியாத காரணங்களை கொடுத்து இருக்கிறீர்கள். அதனால், இந்நேரத்தில் .வெ. தொண்டர்கள் இதுநாள் வரையில் கட்சிக்குள் இருந்த குறைகள்; தொண்டர்கள் நிர்வாகிகள் செய்த பிழைகள்; இதைப்பற்றியெல்லாம்  பேசி இனி அதே தவறுகளை செய்யாமல் இருக்கும் படி உங்களை மேம்படுத்திக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை தான் முதலில் பார்க்க வேண்டும். நடிகர்களின் ரசிகர்களோடு வலைத்தளங்களில் இடும் சண்டை இது இல்லை. முதலில் அந்த மனநிலை இருந்து வெளியில் வாருங்கள். அரசியலையும் அதே மனநிலையில் தான் நீங்கள் (.வெ..) அணுகுகிறீர்கள்.த.வெ.க. தரப்பில் இருந்த ஒரேயொரு தெளிவான முதிர்ச்சியான ஆள் என்று நான் நினைத்துக்கொண்டிருந்த ஆதவ் அர்ஜுனாவும் தன் மனதில் எழும் உணர்ச்சிகளை ட்வீட் செய்து டெலீட் செய்து இருக்கிறார். தலைமையில் இருப்பவர்கள் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி எதிர்வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டும்.ஏற்கனவே தொண்டர்களை ரசிகர்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்பது தான் குற்றச்சாட்டாக இருக்கிறது. இந்த வேளையில் அவர்களை தூண்டுவது போல ஒரு ட்வீட் செய்திருக்கிறார். இதெல்லாம் உங்களுக்கு ஒரு பாடம். 

மக்கள், யாரை குற்றம் சொல்வது என்று பார்க்காமல், எதில் இந்த நிர்வாகம் மேம்பட வேண்டும் என்று விவாதித்துப் பழக வேண்டும். இவன் ஆக மாட்டான் அவன் ஆக மாட்டான் என்று யார் அரசியலுக்கு புதிதாக வந்தாலும் வெற்று குறைகளை அடுக்குவது, அனுபவம் சான்றிதழ் கேட்பதையெல்லாம் நிறுத்த வேண்டும், நாளைக்கு நீங்கள் ஒரு அரசியல் தலைவராக நினைக்கிறீர்கள் 30 வருட அனுபவம் இருந்தால் தான் உள்ளே வரலாம் என்று சொன்னால் எப்படி இருக்கும். எதிலும் ஈடுபடாமல் அனுபவம் எப்படி கிடைக்கும்.

அரசு நீதிமன்ற உத்தரவுகளுக்கும் அசம்பாவிதங்கள் நிகழ்வதற்கும் காத்திருக்கமால், எப்போதும் தன் குறைகளை தானே மேம்படுத்திக்கொள்கிற மாதிரியான ஒரு நிர்வாகத்தை சிஸ்டத்தை உருவாக்க வேண்டும்.

துதி பாடுவது,  குற்றம் சொல்வது, என்கிறது போன்ற இரைச்சல்களை தவிர்த்துவிட்டு, நாம் எல்லோரும் பழைய பாடங்களை சீக்கிரம் கற்று, ஒவ்வொருவரும் எங்கு எதில் குறைபட்டு கிடக்கிறோம் என்று ஆய்ந்தறிந்து திருத்திக்கொள்ள வேண்டும்.

தி.மு. என்ன பாடம் கற்க வேண்டுமென்றால் சரியாக நடிப்பது எப்படி என்று கற்றுக்கொள்ள வேண்டும். அமைச்சர் நடித்தார் என்கிற அரசியல் தலைவர்களின் விமர்சனத்திற்கு அப்பாவை மதிக்காதவர் என்றெல்லாம் தனிப்பட்ட விஷயங்களை இழுத்து பதிலளித்து இருந்தார் அன்பில் மகேஷ் அவர்கள். மக்கள் எல்லோருக்கும் தி.மு.. மீதான பெரும் சந்தேகம் எழுந்தும் வழுத்ததும் சோகமான முகத்துடன் செந்தில் பாலாஜி கதறி அழுத அன்பில் மகேஷ் என்கிற செய்தியை பார்த்த இடத்தில் தான். இப்படி கூட்டங்களுக்கு அனுமதி அளிக்க பொதுவான விதிமுறைகளை என்று அதை வரையறை செய்ய சொல்லியிருந்தது நீதிமன்றம். கூட்டத்தில் இருந்தவர்களுக்கே அவர்கள் இருந்த திசைக்கு எதிர் திசையில் என்ன நடந்தது என்று சரியாக தெரியாது. சரியாக எதனால் எப்போது  எப்படி தள்ளுமுள்ளு ஏற்பட்டது என்று தீர்க்கமாக தெரியாது அப்படியான நேரத்தில், கண்டிஷன் பாலோவ் பண்ணுங்க கண்டிஷன் பாலோவ் பண்ணுங்க  சொன்னேனே கேட்கலையே யாருக்குமே என்ன நடந்தது என்று தீர்க்கமாக தெரிந்திருக்காத நேரத்தில் அமைச்சர் ஒருவர், உண்மை என்று பெரும்பாலானவர்களால் நம்ப முடியாத அழுகையோடு தீர்க்கமாக விஜய் தரப்பு மீது வைத்த குற்றச்சாட்டு தான் தி.மு. மீது சந்தேகம் வர காரணம்.எப்பேர்ப்பட்ட நாடக பின்னணி கொண்ட பெரும் இயக்கம்.நாடகங்களால் பகுத்தறிவை புகுத்திய இயக்கத்திற்கு இப்படியொரு தடுமாற்றம் வரலாமா? மக்களின் சந்தேக பார்வையில் நிற்கலாமா?

 என்ன கண்டிஷன் மீறப்பட்டது?இதற்கு முன்னர் இப்படி கூட்டங்கள் நடத்த என்ன பொதுவான வழிகாட்டுதல் இருந்தது? அவசரமாக ஒரு நபர் ஆணையம்! அரசு துரித முயற்சிகளை எடுக்கிறது என்று காட்டுவதற்காக கூட இருக்கலாம். இதே இந்த ஒரு நபர் ஆணையம் தான் தூத்துக்குடி போராட்டத்தில் போலீஸ் மீது கற்கள் வீசப்பட்டு இருந்தாலும் அது போலீசாரின் உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கவில்லை என்றும். முன்பிருந்த அரசாங்கம் தெரிவித்தது போல அரசு வாகனங்கள் எரிக்கப்பட்ட பின் அரசு அலுவலங்கள் சேதப்படுத்தப்பட்ட பின் துப்பாக்கி சூடு நடக்கவில்லை என்று சொல்லியிருந்தது. அதாவது தி.மு.. அரசாங்கத்திற்கு சாதகமான ஒரு ரிப்போர்ட் அளித்தது.அனாலும், அந்த அறிக்கையில் போலீசார் வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லை அதனால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தது அது சரி தான் சுட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு இருந்தாலும் இடுப்புக்கு கீழே சுட்டு இருக்க வேண்டும் தான். அறிக்கை பரிந்துரைத்த படி கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்றால் துறை சார்ந்த நடவடிக்கை மட்டுமே தான் எடுக்கப்பட்டதாக தெரிகிறது,மக்களுக்கு என்ன தோன்றும்.அதே டெய்லர் அதே வாடகை அதே ஒரு நபர் ஆணையம் அதே நீதிபதி. இதிலெல்லாம் தற்போதைய தி.மு. தன்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *