விமர்சனம்:இந்த மக்களுக்கு என்ன செய்தார் ரஜினி?ரசிகர்களை நல்வழி படுத்தாதவர் எங்கே நாட்டை நல்வழி படுத்த போகிறார்?

இன்னும் என்ன செய்ய வேண்டும் ரஜினி!ரசிகர்களை நல்வழி படுத்தாதவரா ரஜினி!

  1. நெல்லை,குமரி,வ.உ.சி. மாவட்ட வெள்ள நிவாரணத்திற்கு ரஜினிகாந்த் 5 லட்சம் உதவி

*தற்போதைய தூத்துக்குடி மாவட்டம் 1997க்கு முன்னர் வ.உ.சி. மாவட்டம் என்றே அழைக்கப்பட்டது.

*அருகில் இருக்கும் செய்தியை வைத்து பார்த்தால் இது 1992ல் நடந்திருக்க வேண்டும்.

2. ரசிகர்களுக்கு அறிவுரை

*விளம்பரம் இன்றி ஏழை எளிய மக்களுக்கு உதவிகளை செய்து மன்ற நற்பணிகளை ஆக்கபூர்வமான உங்கள் செயல்களுக்கு என்றும் நான் துணை நிற்பேன் -ரஜினி (1997)

*ரசிகர்களுக்கு அப்போதிலிருந்தே நல்வழியை தான் காட்டியிருக்கின்றார்.இப்பொது புதிதாக முளைத்தவர்களுக்கு அது தெரிந்திருந்தாலும் தெரியாதது போலவே விமர்சிப்பார்கள். காரணம் ரஜினி மீது பொய்யான அவதூறுகளை பரப்ப வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக இருக்கின்றது.

3.ஆதரவற்றோருக்கு தொடர்ந்து உதவி வருவதை காட்டும் செய்திகள்

4.1999ல் 20 ஜோடிகளுக்கு தலா ஒரு லட்சம் செலவு செய்து திருமணம் செய்து வைத்த போது

5.தானும் கண் தானம் செய்து தன் ரசிகர்களையும் கண் தானம் செய்ய வைத்த போது வெளிவந்த செய்திகள்

சங்கர நேத்ராலயா விரிவாக்க விழாவில் ரஜினி கலந்து கொண்ட போது

6.கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி உதவி அளிக்க முன்வந்த போது

*இந்த பேட்டியின் போது ரஜினி சொன்ன ஒரு விஷயத்தை இங்கு கவனிக்க வேண்டும், “நான் எதையும் மெதுவாக செய்வேன் ஆனால் கரெக்ட்டா செய்வேன்” அப்படி தான் இன்று வரை நடந்த கொள்கிறார் எந்த ஒரு பிரச்சனைக்கும் முந்திக் கொண்டு முதல் ஆளாக கருது சொல்லுவது எப்போதும் சரியாக இருக்க முடியாது எது சரி என்பதை புரிந்து கொள்ள இங்க எல்லார்க்கும் ஒரு நேரம் தேவை படுகிறது அந்த நேரத்தை எப்போதும் ரஜினி எடுத்துக்கொள்கிறார். அவரின் வேகத்தில் கூட ஒரு கட்டுப்பாடு இருக்கின்றது கட்டுப்பாடு இல்லாத வேகம் நிச்சயம் இலக்கை அடைவதில்லை ரஜினி இது வரை தன இலக்கை அடையாமல் இருந்ததில்லை.

7.மந்த்ராலயம் மற்றும் திருவண்ணாமலை கோவிலுக்கு அளித்த நன்கொடை

*கீழே இருக்கும் செய்தி இணைப்பில் அவர் திருவண்ணாமலை கோவிலுக்கு செய்த உதவி மற்றும் எய்ட்ஸ் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு நிதி திரட்டும் அமைப்பிற்கு வழங்கிய நிதி பற்றிய செய்தி குறிப்பு உள்ளது.

https://www.news18.com/news/india/superstar-rajinikanth-turns-santa-round-the-year-354339.html

8.படையப்பா படத்தின் லாபம் மூலம் மாணவ மாணவியருக்கு உதவியது

9.சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிய போது

சுனாமியால் பாதிக்கப்பட்ட ஜப்பான் மக்களுக்கு உதவியதை பற்றி வந்த செய்தி கீழே உள்ள இணைப்பில்

https://zeenews.india.com/entertainment/celebrity/rajinikanth-to-raise-funds-for-tsunami-stricken-japan_84235.html

10.நடிகர் லாரன்ஸ் மூலம் மாற்று திறனாளிகளுக்கு உதவியது

11.திரைத்துறையினருக்கு செய்த உதவிகள்

மன்ற நிர்வாகிகளுக்கு வீடு கட்டி தந்ததை பற்றிய செய்தி கீழே உள்ள இணைப்பில்

https://tamil.filmibeat.com/heroes/rajini-gift-houses-32-fans-32.html

சிவாஜி படப்பிடிப்பின்போது கிராமிய கலைஞர்களுக்கு உதவிய பற்றிய செய்தி

திரைத்துறை தொழிலார்களுக்கு கொரோனா நெருக்கடியின் போது உதவியதை பற்றி வந்த செய்தி

https://www.thehindubusinessline.com/news/variety/rajinikanth-donates-rs-50-lakh-for-film-industry-workers/article31154232.ece

12.மக்களுக்காக ராகவேந்திரா மண்டபத்தை உயில் எழுதி கொடுத்த போது வந்த செய்திகள்

13.ஐயா பாலம் கல்யாண சுந்தரம் அவர்களுக்கு உதவியது

14. வெள்ள பாதிப்புகளின் போது செய்த உதவிகள்

15.கலைஞர் சிவராமனுக்கு உதவியது பற்றிய செய்தி

https://www.filmibeat.com/tamil/news/2009/rajinikanth-help-r-sivaraman-211009.html

16.கார்கில் போரின் போது அளித்த நிதி உதவி

17.அவர் செய்த உதவிகள் பற்றி சிலர் அளித்த பேட்டிகள்

18.ஈழத்தமிழர்களுக்காக முதன்முதலாய் குரல் கொடுத்த போது

19.காவேரி பிரச்னைக்காக உண்ணாவிரதம் இருந்த போது வந்த செய்தி

20.தமிழர்கள் மீது நடந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததை பற்றிய செய்தி

21. சமீபத்தில் மாற்று திறனாளி ஒருவருக்கு உதவியதை பற்றிய செய்தி

https://telugu.oneindia.com/?utm_medium=Desktop&utm_source=OI-TA&utm_campaign=menu-header

இன்னும் நிறைய இருக்கின்றது. ரஜினி பற்றி உங்களிடம் இருக்கும் செய்திக்குறிப்புகளை அல்லது கருத்துக்களை editor@kathirvijayam.com என்ற மின்னஞ்சல் முகவரிக்குஅனுப்புங்கள்

அரசியல் நடவடிக்கைகள் பற்றி அவ்வப்போது அவர் தெரிவித்த கருத்துக்கள்; சிவாஜிக்கு செவாலியே விருது வழங்கும் நிகழிச்சியில் ஜெயலலிதா அவர்களின் போக்கை கண்டித்து அவரையும் வைத்துக்கொண்டு அவர் செய்த விமர்சனம் மற்றும் ஜெயலலிதா அவர்கள் சர்ச்சைக்குரிய தீர்ப்பின் காரணமாக விடுதலை ஆன போது நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்காத வகையில் நீதிபதிகள் பங்கு கொண்ட ஒரு நிகழ்ச்சியில்
“ஒரு நாட்டில் எந்த துறை கெட்டு போனாலும் நீதித்துறை கெட்டு போக கூடாது நீதித்துறை கெட்டு போனால் அந்த நாட்டை காப்பாற்ற முடியாது” என்று அவர் பேசியது;
கலைஞருக்கான பாராட்டு விழாவில் அஜித் பேசியதற்கு கலைஞர் அவர்கள் அருகில் இருந்த படியே தன் ஆதரவை தெரிவித்து பின் அஜித்துக்காக கலைஞரிடம் சமரசம் பேசிவிட்டு கலைஞர் வீடு வாசலில் நின்று பேட்டியளிக்கும் போதும் அஜித் உண்மையை பேசினார் என்ற சொன்னது;
கலைஞர் இருந்த மேடையிலேயே இலவசங்களை பற்றி விமர்சித்தது என்று ரஜினி அரசியல் தளத்தில் எப்போதும் நேர்மறையாக நேர்மையாக தனது கருத்துக்களை பதிவு செய்ததோடு மக்களுக்கு உதவவும் செய்திருக்கின்றார்.

இப்படியான உதவிகள் செய்வதற்காக சில கட்சிகள் போல் பணம் திரட்டும் முயற்சியில் அவர் ஈடுபட்டதில்லை. அநேகமான உதவிகள் வெளியில் தெரிவதும் இல்லை.

ரஜினியின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமாக எழுதிய நமன் ராமசந்திரன், ரஜினி தன் வருமானத்தில் 50 சதவீதம் பிறருக்கு உதவுவதற்கு செலவழிகின்றார் என்கிறார். இதெல்லாம் தனிமனிதனாய் இருந்து அவர் செய்து கொண்டிருப்பது.இந்த ரஜினியை தான் கோழை என்றும் மக்களுக்கு எதுவும் செய்யாதவர் என்றும் மீண்டும் மீண்டும் சொல்லி பொய்யான பிம்பத்தை உருவாக்க முயலுகிறார்கள்.
சும்மா ஒன்றும் ஒருவர் மீது இரண்டு தசாப்தங்களுக்கும் மேல் ஒரு பெரிய எதிர்பார்ப்பு ஏற்படுவதில்லை,ரஜினி வந்தால் நல்லது செய்வார் என்று மக்கள் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருப்பதற்கும் காரணம் இல்லாமல் இல்லை. நல்லவர்களை பற்றி எத்தனை பேர் என்ன சொன்னாலும் இந்த பிரபஞ்சம் எப்போதும் அவர்களை உயர்த்தியே வைக்கிறது மற்றவர்களுக்கு ஒளியாக இருக்க வேண்டி, ரஜினியும் அப்படியே. இந்த ஒளி, இந்த நட்சத்திரம், இன்னும் இன்னும் மின்னும். வெற்று வார்த்தைகளும் வெறும் கைகளும் அதனை மறைக்க முடியாது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *