சார்வரி ஆனி -19(ஜூலை 03,2020):
அன்புள்ள தமிழ் சொந்தங்களுக்கு,
ஓர் விண்ணப்பம்.
திருநெல்வேலி ஏர்வாடியைச் சேர்ந்த, நல்ல வசதி படைத்த வீட்டில் பிறந்தவர் தான் முத்துராமன் ராகுல் (திரு. பொன்னையா அவர்களின் மகன்). இளவயதிலேயே சிறு நீரகப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு பல வருட மருத்துவ சிகிச்சை பலனின்றி இரு சிறு நீரகங்களும் செயலிழந்து தற்போது மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கும் சூழ் நிலையில் இருக்கிறார்.
அவருடைய மருத்துவ செலவுக்காக அவருடைய குடும்பம் தங்களது சொத்துக்களை எல்லாம் இழந்து மிகவும் வறுமை நிலைக்கு வந்து விட்டது. மேலும் அவரது தந்தையும் நீரழிவு நோய் காரணமாக இரு கண்களும் பார்வை இழந்து துன்பப்படுகிறார்.
சிறுநீரக மாற்று சிகிச்சைக்கான நீண்ட காத்திருப்பு பட்டியலில் இருக்கும் இவருக்கு சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யும் வரை தேவையான மருத்துவ செலவுகளுக்கு நாம் செய்யும் சிறு உதவி , ஒரு குடும்பத்தின் நம்பிக்கையை காப்பாற்ற; ஒரு குடும்பம் இந்த கடினமான சூழலில் இருந்து மீண்டு வர ஒரு பேருதவியாக அமையும். சிகிச்சை பெற்று குணம் அடையும் வரை மாத வருமானத்தில் சிறு தொகையை ஒவ்வொரு மாதமும் கொடுத்து கூட நாம் உதவ முடியும்.
சக மனிதனுக்கு உதவ தமிழர் ஆளும் வரை காத்திருக்க வேண்டியதில்லை நாம் வசதி படைத்தவராய் ஆகும் வரை காத்திருக்க வேண்டியதில்லை.
‘சிறு துளி பெரு வெள்ளம்’ என்பார்கள்.இந்த செய்தியை மற்றவர்களுக்கு பகிரும் முன் நாம் ஒரு துளியாய் நிற்போம் ராகுலுக்கு உதவுவதில் .எனவே, நம்மால் இயன்ற உதவியைச் செய்வோம்.
தமிழராய் ஒளவை சொன்னது போல் (இயல்வது கரவேல்) நடப்போம் -கொடுக்க முடிந்த கொடுக்க கூடிய பொருள்களை ஒளிக்காமல் கொடுத்து பழகுவோம் .
பெருமக்களை பழிப்பதில் நாம் காட்டும் ஒற்றுமையை இது போன்ற நல்ல விஷயங்கள் செய்வதிலும் காட்டுவோம்.
ஏற்கனவே உதவி செய்தவர்களுக்கு மனமார்ந்த நன்றி. இனிமேல் செய்ய நினைப்பவர்களுக்காக அவரது வங்கி விபரங்களை கீழே இணைத்துள்ளோம்.
பொ .முத்துராமன் ராகுல்
56, வடக்கு தெரு வீதி,
கோவில் வாசல்,
ஏர்வாடி-627103
திருநெல்வேலி மாவட்டம்
தொடர்ப்பு எண் -962903300
வங்கிக்கணக்கு எண் :919010032935194 (சேமிப்பு கணக்கு)
Axis bank
IFSC எண்:UTIB 0000891
வங்கி கிளை: திருக்குறுங்குடி
1830 total views , 1 views today