சதவீத அடிப்படையில்,  குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட உறுப்பினர்களை குறைவாக கொண்ட மாநிலங்களின் வரிசையில் கேரளா கடைசி இடத்தை பிடித்துள்ளது.சிக்கிம் முதலிடத்தை பெற்றுள்ளது.

S. no.STATEMLA WITH PENDING CRIMINAL CASETOTAL MLALAST ELECTIONPercentage of MLA with pending Criminal caseRANK
1SIKKIM03220190.00%1
2MEGAHALAYA16020181.67%2
3MANIPUR26020173.33%3
4NAGALAND26020183.33%3
5MIZORAM24020185.00%5
6Harayana1290201913.33%6
7PUNJAB16117201713.68%7
8ARUNACHAL PRADESH1060201916.67%8
9TRIPURA1259201820.34%9
10GOA940201722.50%10
11RAJASTHAN46200201823.00%11
12Gujarat47182201725.82%12
13Chatisgarh2490201826.67%13
14ASSAM34126202126.98%14
15Andhra pradesh55175202031.43%15
16UTTARAKHAND2270201731.43%15
17HIMACHAL PRADESH2268201732.35%17
18KARNATAKA77224201834.38%18
19UTTARPRADESH143403201735.48%19
20MP94230201840.87%20
21PUDHUCHERRY1330202143.33%21
22ODISHA67147201945.58%22
23WEST BENGAL142292202148.63%23
24JHARKHAND4181201950.62%24
25TAMIL NADU134234202157.26%25
26Maharastra176288201961.11%26
27TELANGANA73119201861.34%27
28Delhi4370202061.43%28
29BIHAR163243202067.08%29
30kerala96140202168.57%30
மாநில வாரியாக குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட உறுப்பினர்கள் சதவீதம் குறைவாக கொண்ட மாநிலங்களின் வரிசை

ADR அறிக்கையை அடிப்படையாக கொண்டு,15க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கட்சிகளில்,சதவீத அடிப்படையில் குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட உறுப்பினர்களை அதிகம் கொண்ட கட்சிகளின் வரிசையில் தி.மு.க. முதலிடத்தை பிடித்துள்ளது.பா .ஜ .க. மற்றும் காங்கிரஸ் முறையே 14 மற்றும் 15 ஆவது இடங்களில் இருக்கின்றது.

S. No.STATEMLA WITH PENDING CRIMINAL CASETOTAL MLAPERCENTAGE OF MLA WITH PENDING CRIMINAL CASERANK
1DMK9913971.22%1
2RJD547671.05%2
3AIUDF101662.50%3
4CPI-M528859.09%4
5TRS508856.82%5
6JMM173056.67%6
7NCP346056.67%6
8SHIV SENA315655.36%8
9CPI112152.38%9
10INDEPENDENT367746.75%10
11JD204346.51%11
12TMC9121342.72%12
13AAP328239.02%13
14BJP487137635.39%14
15CONGRESS (INC)29083834.61%15
16BSP102934.48%16
17SP175034.00%17
18YSRC5015033.33%18
19BJD3611331.86%19
20JD(S)113928.21%20
21TDP62524.00%21
22ADMK156622.73%22
23NPP42913.79%23
24MNF2267.69%24
25NDP1214.76%25
26NPF0290.00%26
27SKM0190.00%26
கட்சி வாரியாக குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட உறுப்பினர்கள் சதவீதம் அதிகம் கொண்ட கட்சிகளின் பட்டியல் (15க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட கட்சிகள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டது)

இந்த ஆய்வு காட்டுவது என்னவெனில்,

*இந்த விவரங்களை பொறுத்தவரையில் ADR குழு அவர்கள் வலைத்தளத்தில் வெளியிட்டாலும். பிரமாண பத்திர விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டாலும் அது எல்லா வாக்காளர்களையும் சென்றடைவதில்லை.

*ஊடங்கள் வெளியிடும் செய்திகளில் பொதுப்படையாக இத்தனை வழக்குகள் என்று மட்டும் வெளியிடுவதால் அந்த வழக்குகளை பற்றிய மேலதிக விவரம் மக்களிடம் கொண்டு சேர்க்கப்படாமல்,இந்த தரவுகளை கவனிக்கும் மக்களும் கூட எண்ணிக்கை அளவியிலேயே இதனை கடந்து விடுகிறார்கள் என்று எடுத்துக்கொள்ள முடியும்.

*மேற்சொன்னவைகள் அல்லாமல், மக்கள் இது போன்ற தரவுகளை தேர்தலில் பொருட்படுத்துவதில்லை. காரணம் ,சகித்துக்கொண்டு விட்டார்கள் என்று சொல்வதை விட இதெல்லாம் அரசியலில் சாதாரணம் என்கிற மனநிலைக்கு தள்ளப்பட்டுவிட்டார்கள். அதோடு, ஒருவர் மீது வழக்கு இருக்கிறது என்பதற்காக அவர் குற்றவாளி என்றாகி விட மாட்டார் என்னும் வாதமும் வைக்கப்படுகிறது, அது உண்மை என்றாலும் கூட நிலுவையில் உள்ள இந்த வழக்குகள் அதிகார தலையீடு இல்லாமல் முடித்துவைக்கப்படுமானால் பலர் அல்லது சிலர் தண்டனைக்கு உட்படலாம் என்பதனை மறுக்க முடியாது.நம் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மீதான வழக்கு முடிக்கப்பட்ட போது அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார் என்பதையும் மறுக்க முடியாது.


*கட்சி சார்ந்த ஒரு பட்டியலை மேலே காட்டியிருந்தாலும், கட்சி பாகுபாடின்றி சிக்கிம் மாநிலத்தில் எந்த உறுப்பினர்களும் குற்றவழக்குக்களில் சம்மந்தப்படாதவராக இருக்க முடிந்த போது.மற்ற மாநிலங்களில் அது சாத்தியப்படாமல் போனதற்கு காரணம்,அந்த அந்த மாநிலங்களில் அந்த அந்த தொகுதிகளில் உள்ள மோசமான அரசியல் சூழல் என்றே எடுத்துக்கொள்ள முடிகிறது.காரணம்,காங்கிரஸ் சார்பாக குஜராத்தில் சட்டமன்ற உறுப்பினராக இருந்து பின் பா.ஜ.க.வில் இணைந்து மீண்டும் பா.ஜ.க.சார்பாக குஜராத்தில் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்துஎடுக்கப்பட்ட ஒருவரின் மீது இருந்த வழக்கு முடிக்கப் பட்டபோது குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இரண்டு கட்சிகளிலும் ஒரே தொகுதியில் நின்று அவர் வெற்றிபெற்றார்.


https://www.newindianexpress.com/nation/2020/oct/14/gujarat-bjp-mla-convicted-in-rioting-case-gets-6-month-sentence-2210148.html

*உச்ச நீதிமன்றம் உயர்நீதிமன்றங்களை சிறப்பு அமர்வுகள் கொண்டு மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை முடிக்க சொல்லி கேட்டிருக்கின்றது.நாடுமுழுதும் சில மாநிலங்களில் இதற்காக சிறப்பு நீதிமன்றங்களும் அமைக்கப்பட்டு இருக்கின்றது.ஆனாலும்,அநேகமான வழக்குகள் அரசியல் தலையீடுகளால் தள்ளிவைக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றது.

*தமிழகத்தை பொறுத்தவரையில், போன முறை 29இல் 8 அமைச்சர்கள் மீது குற்றவழக்குகள் நிலுவையில் இருந்ததது.தற்போது,32இல் 28 பேர் மீது நிலுவையில் உள்ள குற்றவழக்குகள் உள்ளது.அதில்,16 பேர் மீது தீவிர குற்ற வழக்குகள் உள்ளது.தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க அமைச்சர்கள் மீதான புகார்கள் விரைந்து விசாரிக்கப்படும் என்று சொல்லப்பட்டு இருக்கின்றது.தலைவர் ஸ்டாலின் அவர்கள் கட்சிப்பாகுபாடின்றி மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை அரசியல் தலையீடு இன்றி விரைந்து விசாரித்து நேர்மையான முறையில் நீதி நிலைநாட்டப்பட முயற்சிகள் எடுப்பார் என்று நம்புவோம்.*தமிழகத்தை பொறுத்தவரையில், போன முறை 29இல் 8 அமைச்சர்கள் மீது குற்றவழக்குகள் நிலுவையில் இருந்ததது.தற்போது,32இல் 28 பேர் மீது நிலுவையில் உள்ள குற்றவழக்குகள் உள்ளது.அதில்,16 பேர் மீது தீவிர குற்ற வழக்குகள் உள்ளது.தி.மு.கவின் தேர்தல் அறிக்கையில் அ.தி.மு.க அமைச்சர்கள் மீதான புகார்கள் விரைந்து விசாரிக்கப்படும் என்று சொல்லப்பட்டு இருக்கின்றது.தலைவர் ஸ்டாலின் அவர்கள் கட்சிப்பாகுபாடின்றி மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்குகளை அரசியல் தலையீடு இன்றி விரைந்து விசாரித்து நேர்மையான முறையில் நீதி நிலைநாட்டப்பட முயற்சிகள் எடுப்பார் என்று நம்புவோம்.

இதெல்லாம் அரசியலில் சாதாரணம் என்பவரா நீங்கள், உங்களுக்கு ஒன்றை நினைவுகூறுகிறேன், நான் அரசியலுக்கு வருவது உறுதி என்று 2017 ரஜினிகாந்த் சொன்ன போது. அவர் சொன்னது, “மக்களோட எண்ணத்தை மாற்றனும் அதை நம்ம எல்லாரும் சேர்ந்து தான் செய்யணும்”என்றார்.சாதாரணமானவர்கள் அரசியலுக்கு வர முடியாது சூழல் இருக்கின்றது அப்படியானவர்களுக்கு வாய்ப்பு தருவேன் என்றும் கூட சொன்னார் அவர். ADR அறிக்கை நமக்கு காட்டுவது சாதாரணமாவார்கள் அரசியலில் இறங்கவோ வெற்றி பெறவோ வாய்ப்பில்லை என்பதையே.
“மக்களோட எண்ணத்தை மாற்றனும் அதை நம்ம எல்லாரும் சேர்ந்து தான் செய்யணும்”இந்த வாசகத்தில் ஒரு ஆழம் இருக்கின்றது;அர்த்தம் இருக்கின்றது. அரசியல்வாதிகள் நம் சிந்தனையின் போக்கை மாற்றிவிட்டார்கள் என்பதே அதன் அர்த்தம். அந்த சிந்தனை சரியான பாதையில் மாறாமல் மாற்றம் சாத்தியமில்லை. காரணம்,அந்த சிந்தனை மேலே இருக்கும் தரவுகளை நீங்கள் சாதாரணமாக கடந்துவிட உதவிக்கொண்டு இருக்கின்றது; அந்த சிந்தனை மாற்றத்துக்கான தேவை இருப்பதை நம்மை உணரவிடாமல் பார்த்துக்கொள்கிறது;அந்த சிந்தனை தான் விஜயகாந்த்,கமல்ஹாசன் போன்றவர்கள் தங்களை மாற்று சக்தியாக முன்னிறுத்திய போது அவர்கள் கட்சிகளின் வேட்பாளர்களின் யோக்கியதையை மட்டும் கேள்விக்குட்படுத்தியது;செல்வாக்குள்ள புதியவர் அரசியலுக்கு வந்தாலும் மக்களிடம் எழுச்சி வராமல் மாற்றம் சாத்தியம் இல்லை என்பவரை கேலி செய்ய சொல்கிறது.அந்த சிந்தனை மாறாமல் இந்த கட்டுரையை நீங்கள் படித்திருப்பீர்களானால் இதில் இருக்கும் வார்த்தைகளின் உண்மையை விடுத்து நீங்கள் எதிர்க்கும் கட்சிகளின் பாதக அம்ஸங்களை தேடிக்கொண்டு இருந்து இருப்பீர்கள்.ரஜினி பெரிய யோக்யனா என்னும் கேள்வி உங்களுக்குள் எழுந்து இருக்கும்.
நீங்கள் ஒருவர் மாறிவிட்டாலும்,மாற்றத்தை தனி ஒருவனாய் யாரும் சாத்தியப்படுத்தி விட முடியாது.அதை உணர நம் சிந்தனை மாற வேண்டும்.அரசியல்வாதிகள் நம்மை அறியாமல் நமக்குள் புகுத்தும் சிந்தனைகளில் இருந்து வெளிவர வேண்டும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *