Author: கவி

பொம்மை காதல்-33; ஷாராவைப் போல் ஒரு ராணி

மை அள்ளி முகமெல்லாம் போல் இருந்த பூமி, அந்த இரவின் இருட்டில் வானத்தோடு  ஒன்றாய் கலந்திருந்தது. அந்த இருட்டை கிழித்துக்கொண்டு கருமையான அந்த சாலையில் வெள்ளையாய் ஒரு நான்குச் சக்கர வாகனம் சாலையின் வெள்ளைக்கோடுகளுக்கு இடையே வெளிச்சத்தை பாய்ச்சி வேகமாக சென்றுகொண்டிருந்தது.…

பொம்மை காதல்-32; உயிர் நனைக்கும் மழை அவள்

காரணங்களை தேடிச்சொல்லும் பொழுதே சொல்லாத காரணங்கள் இருப்பதாக மனம் நம்ப தொடங்கும். வீரா அப்படி நம்பிய நாட்கள் ஏராளம், அவன் மனம் காலத்தில் பின்னோக்கிச்சென்று அப்படி ஒரு நாளில் உட்கார்ந்து கொண்டது. அந்த நாளில், அந்த கம்ப்யூட்டர் சென்டர்க்கு தாமதமாக சென்ற…

பொம்மை காதல்-31; நிகழாத சந்திப்பு!

ஊரைப் பிடிக்காத வீராவிற்கு ஊரை விட்டு நகர பிடிக்கவில்லை. அவன் மனதின் கனமோ என்னவோ அந்த பேருந்தும் கூட வேகமாக நகர முடியாமல் ஊர்ந்தே சென்றது. அந்த நெரிசல் வீராவை அங்கேயே இருக்கச் சொன்னது போல் இருந்தது.

வெள்ளமும் மூடநம்பிக்கையும்!

அந்த ஊரில் மழைபெய்ய தேவையில்லை அழகர்மலையில் மழை பெய்தாலே இந்த தெப்பம் நிரம்பிவிடும். அப்படி ஒரு வழி இருக்கிறது என்றார்கள்; நம்பவில்லை. அப்படி நடந்திருக்கிறது;மூட நம்பிக்கையும் கூட நல்லது தான் முதல்வர் அவர்களே!

பொம்மை காதல் -30; நீளும் இடைவெளி

பல வருடங்கள் கழித்து ஷாராவின் நெற்றியில் அதே அந்த சந்தனம்.இது போதாதா! அவள் பேசவும் வேண்டுமா! ஓடிக்கொண்டிருக்கும் நொடிகளை உட்காருங்கள் கொஞ்சம் என்றது வீராவின் மனம்.காலம் அநேகமான விஷயங்களை மாற்றியிருந்தது. இத்தனை வருடங்களில் ஷாரா சந்தனம் வைப்பதை நிறுத்திக்கொண்டிருந்திருக்கலாம் என்று வீரா…

பொம்மை காதல்-29 பொம்மை மேல் காதல்

அவளுடைய பிறந்தநாளுக்கு அவளை அழைத்து வாழ்த்துச்சொல்ல வேண்டும், அதை சொல்லும் பொழுது அவளிடம் வெளிப்படும் அதிர்வுகளை அவன் அந்த தொலைபேசிவழியாக உணரவேண்டும்; அவளுடைய குரலில் அந்த "Thank You sir" அவன் காதுகளை தொட வேண்டும். இதற்காகவே அவளை அழைத்துவாழ்த்துச் சொல்ல…