gdp india

ஜி.டி.பி என்றால் என்ன?

ஒரு குறிப்பிட்ட கால அளவீட்டில்  ஒரு நாட்டின் மொத்த உற்பத்தி மற்றும் சேவையின் சந்தை மதிப்பையே ஜி.டி.பி. என்கிறோம்.

உதாரணமாக, ஒரு வெற்று இடத்தில் ஒரு சமூகம் புதிதாக குடியேறுகின்றது. அதை ஒரு ஊராக எடுத்துக்கொள்வோம் அவர்கள் மொத்தம் 10 பேர் இருக்கின்றார்கள் என்று கொள்வோம்.அந்த ஊரில் விவசாயம் மட்டுமே தான் செய்ய முடியும் என்று கொள்வோம். இந்த 10 பேர் சேர்ந்து அந்த ஊரில் தரும் உழைப்பின் மூலம் அவர்கள் அங்கு குடியேறிய முதல் ஆண்டில் விவசாயம் மூலம் விளைவித்த பொருள்களின்  சந்தை மதிப்பு 100 ரூபாய் என்றால் அதுவே அந்த ஊரின் அந்த வருட ஜி.டி.பி. இந்த 10 பேர், 20 பேர் ஆகும் போதும் விவாயசத்தையும் சேர்த்து அங்கே விவசாயம் சார்ந்த வேறு உற்பத்திகளும் தொடங்கப்படும் போது நிச்சயம் அந்த ஊரின் உற்பத்தி மற்றும் சேவையின் சந்தை மதிப்பு உயரும்.காரணம் உழைப்பும் அதிகரிக்கின்றது தொழில்களும் விரிவடைகிறது. இப்போது, தொழில்கள் விரிவடைந்த அந்த ஊரில்  20 பேர் வேலை செய்ய வேண்டிய இடத்தில் 10 பேர் மட்டுமே வேலை செய்ய முடிந்த சூழல் உருவாகும் போது. அந்த 10 பேர் வேலை செய்யும் நேரம் குறையும் போதும் அந்த ஊரின் உற்பத்தி மட்டும் சேவையின் சந்தை மதிப்பு இயல்பாகவே குறைய தொடங்கும். இப்போது ஜி.டி.பி என்றால் என்ன என்றும். அது எதனால் ஏற்றம் இறக்கம் காண்கிறது என்பதை பற்றிய மேலோட்டமான புரிதல் ஏற்ப்பட்டிருக்கும்.

இந்தியாவின் ஜி.டி.பி.

இந்தியாவை பொறுத்தவரையில் அதன் உற்பத்தி மற்றும் சேவை திறன் 2020ம் ஆண்டிற்கு முன்பு வரை அதிகரித்து கொண்டே தான் இருந்திருக்கின்றது. அது எப்போதும் சரிந்ததில்லை.2020இல் ஏற்பட்ட பெருந்தொற்றும் அதன் தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்ட கட்டுப்பாடுகளாலும் 2019இல் இந்தியாவின்  உற்பத்தி மற்றும் சேவையின் சந்தை மதிப்பை விட 2020இல் குறைந்தது. 2020ல் பெருந்தொற்றை கட்டுபடுத்த விதித்த கட்டுபாடுகளால் ஒரு நாட்டின் ஜி.டி.பி. குறைவது இயல்பான ஒன்றே ஆகும். காரணம் பெருந்தொற்று காலத்தில் வேலை செய்பவர்களின் நேரமும் எண்ணிக்கையும் கட்டுப்பாடுகளின் காரணமாக குறைந்ததே ஆகும்.

 உற்பத்தி மற்றும் சேவையின் சந்தை மதிப்பு அளவீடுகளில் இந்தியா தற்போது 6 ஆவது இடத்தில் இருக்கின்றது. 2004இல் 12 வது இடத்திலும் 2014இல் 10வது இடத்திலும் இருந்தது குறிப்பிடதக்கது. IMF அமைப்பின் சமீபத்திய ஆய்வின் படி வேகமாக வளரும் நாடுகளில் இந்தியா முதலிடத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.பெருந்தொற்று காலத்தில் சீனாவை தவிர்த்து அநேகமான வளர்ந்த நாடுகளின்  உற்பத்தி மற்றும் சேவையின் சந்தை மதிப்பு குறையவே செய்து இருக்கின்றது.இந்த பெற்றுந்தொற்றில் இருந்து மீண்டு நிலைமை சீராக தொடங்கியவுடன் இந்த வளர்ச்சி வேகமெடுப்பதற்கான இயல்பான சாத்தியக்கூறுகள் இருக்கின்ற போதும் இந்தியாவையும் சேர்த்து உலக நாடுகள் தங்கள் பொருளாதாரத்தை மீட்டு எடுக்கும் திட்டங்களை தீட்டாமல் இல்லை.

வருடவாரியாக இந்தியாவின் உற்பத்தி மற்றும் சேவையின் சந்தை மதிப்பு(GDP PPP)

ஜி.டி.பி.வளர்ச்சி விகிதம் (GDP growth rate in percentage)

ஜி.டி.பி வளர்ச்சி விகிதம் என்பது முந்தைய காலாண்டை விட நடப்பு காலாண்டில் ஜி.டி.பி எவ்வளவு வளர்ந்திருக்கிறது என்பதை சதவீத அளவில் எடுத்துக்காட்டுவது.

இந்த ஜி.டி.பி. வளர்ச்சி விகிதம் எல்லா ஆண்டுகளிலும் ஒரே மாதிரியானதாகவோ சீரானதாகவோ  இருப்பதில்லை . இயல்பில் அவ்வாறு இருக்கவும் முடியாது.

இந்தியாவின் ஜி.டி.பி. வளர்ச்சி விகிதம்(GDP growth rate in percentage) வருடவாரியாக

மீண்டும் நம்முடைய அந்த கற்பனை ஊரை உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம்.காலாண்டை நாம் ஒரு வருடமாக எடுத்துக்கொள்வோம்

 தொடக்கம்வருடம்  1வருடம் 2வருடம்  3வருடம்  4வருடம்  5வருடம்  6
ஊரின் ஜி.டி.பி 100120140160180200180
மாற்றம் 20.0016.6714.2912.5011.11-10.00
%வளர்ச்சி விகிதம் 2016.714.312.511.111.1

மேலே காட்டியுள்ள அட்டவணையின் படி முதல் வருடத்தில் 100 இல் இருந்து 20 கூடி சந்தை மதிப்பு 120 ஆக உயரும் போது வளர்ச்சி விகிதம் 20 சதவீதமாக இருக்கும் அதுவே 180இல் இருந்து 20 கூடும் போது வளர்ச்சி விகிதம் 11.11 சதவீதம் தான் இருக்கும். வளர்ச்சி விகிதத்தை அடிப்படையாக கொண்டு இந்தியாவின் ஜி.டி.பி. சரிகிறது என்ற முடிவுகளை எட்ட முடியாது.

ஜி.டி.பியின் வளர்ச்சி மற்றும் ஜி.டி.பி வளர்ச்சி விகிதத்தில் தாக்கம் ஏற்படுத்தும் காரணிகள் சில

உற்பத்தி மற்றும் சேவையின் சந்தை மதிப்பு  பல்வேறு காரணிகளின் தாக்கத்தால் மாற்றம் அடைவது. ஒரு வருடத்தில் குறிப்பிட்ட நிறுவனத்தில் அநேகமான பேர் ஒய்வு பெறுவது. வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு ஏற்படும் தட்டுப்பாடு மற்றும்  விலைஉயர்வு என்று பல்வேறு காரணிகள் சந்தை மதிப்பில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஒரு நாட்டில் குறிப்பிட்ட வருடத்தில் முதலீடுகள் அதிகம் ஆகும் போது அங்கே அநேகமான திட்டங்கள்(projects) செயல்பாட்டில் இருக்கும் போது வளர்ச்சி விகிதம் அந்த வருடத்தில் அதிகமாக இருக்கும் அதற்கு அடுத்த அடுத்த  வருடங்களில்  அதே அளவிலான அல்லது அதை விட அதிகமான வளர்ச்சி விகிதத்தை எட்ட வாய்ப்பிருப்பதில்லை.உதாரணமாக ஒரு வருடத்தில் 1000கி.மீ. சாலை இடும் பணிகள் நடைபெறுகிறதென்றால் அங்கே அதிகமான வேலை நடக்கின்றது என்று பொருள். அது போன்று முதல் வருடத்தில் எந்த நிறுவனமும் இல்லாத ஊரில் 2வது வருடம் ஒரு கார் தொழிற்சாலை தொடங்கப்படுகிறது என்றால் அந்த வருடம் அந்த ஊரின்   ஜி.டி.பி.யின் வளர்ச்சி விகிதம் அதிகமாக இருக்கும். 3வது வருடம், 2 வருடத்தை விட அதிகமான கார் உற்பத்தி செய்தாலும்  வளர்ச்சி விகிதம் குறைவாகவே இருக்கும் காரணம்,0 இல் இருந்து 2வது வருடம் 10 கார் உற்பத்தி செய்கிறார்கள் என்றால் அது பெரிய வளர்ச்சி அதுவே இரண்டாவது வருடம் 10இல் இருந்து 12 என உற்பத்தி பெருகும் போது வளர்ச்சி விகிதம் சிறியதாகவே தோன்றும் வருடந்தோறும் பெரிய வளர்ச்சியை எட்டுவது என்பது எந்த நாட்டிற்கும் சாத்தியப்படாதது அதற்கான தேவையும் இருப்பதில்லை.தேவைகளே வளர்ச்சிக்கான அடிப்படையாக இருக்கின்றது.

இதற்கு மற்ற சில காரணங்களும் இருக்கின்றது. ஒரு ஊரின், ஒரு நாட்டின் உற்பத்தி மற்றும் சேவையின்சந்தை மதிப்பு என்பது அந்த ஊரின் உழைப்பை மற்றும் சார்ந்து இருப்பதில்லை. உதாரணமாக நம் ஊரில் நூல் தயாரிக்கின்றோம் என்று எடுத்துக்கொண்டால் முதல் ஆண்டில் 100 ரூபாய்க்கு பருத்தி வாங்கி 150 ரூபாய் க்கு நூல் விற்பனை செய்யப்படுகிறது என்றால் உற்பத்தியின்(நூலாக மாற்ற கொடுத்த உழைப்பின் மதிப்பு) சந்தை மதிப்பு 50  ஆக இருக்கும் அதுவே பருத்தியின் விலை 120 ஆக விலை உயரும் போது நூலின் விலை 175 என்றும் எடுத்து கொண்டால் உற்பத்தியின் சந்தை மதிப்பு 55இருக்கின்றது என்று கொள்ள முடியும் இங்கே பருத்தியின் மதிப்பு இருபது சதவீதம் உயர்ந்து இருக்கின்றது.உழைப்பின் மதிப்பு 10 சதவீதம் மட்டுமே உயர்ந்து இருக்கின்றது இப்போது நூலின் உற்பத்தி இருமடங்கு(175 +175) ஆனாலும் கூட உழைப்பின் மதிப்பு பருத்தியின் மதிப்பு உயர்ந்த அதே சதவீதத்தை எட்ட வாய்ப்பிருப்பதில்லை.இன்னும் புரியும் படி சொல்ல வேண்டுமாயின் பெட்ரோல் விலை தினமும் ஏற்றம் கண்டாலும் கூட ஓட்டுனரின் சம்பளம்(ஓட்டுனரின் மதிப்பு) தினமும் ஏற்றம் காண்பதில்லை.

மக்கள் தெரிந்து கொள்ள வேண்டியது

பெருந்தொற்று பேரிடர் அல்லாத இயல்பான சூழலில் ஜி.டி.பி. எப்போதும் வளர கூடியதாகவே இருந்திருக்கின்றது. ஆனால் அதன் வளர்ச்சி விகிதம் என்பது முந்தைய காலாண்டின் மதிப்போடு ஒப்பீட்டு கணக்கீடு செய்யப்படுவது.அது ஒரே சீராக வளர்ந்து கொண்டே இருப்பதில்லை இதுவே யதார்த்தம்.அதோடு இயல்பாக வளரும் தன்மை கொண்ட இந்த ஜி.டி.பி. யின் வளர்ச்சி விகிதம் மாறுபடுவதற்கு அந்த நாடோ அல்லது ஊரோ மட்டும் காரணமாக இருக்க முடியாது. மூலப்பொருட்களை வேறு ஒரு நாட்டிடம் இருந்து பெற்று, நம் நாட்டின் மனிதவளம் கொண்டு அதை வாகனங்களாக மாற்றும் போது,ஒரு வருடத்தில் மூலப்பொருள்களின் மதிப்பு கூடும் வேளையில் நம் உற்பத்தி கூடியிருந்தாலும் உற்பத்தி பெருக்கத்தின் அதே விகிதத்தில் நம் நாடு அதற்கு தந்த உழைப்பின் மதிப்பு உயர்ந்திருக்க வேண்டியதில்லை.இவ்வாறாக சந்தையில் ஒரு நாட்டின் உற்பத்தி மற்றும் சேவையின் ச

மதிப்பில் பல்வேறு காரணிகள் தாக்கம் ஏற்படுத்துவதுண்டு. ஒரு நாட்டின் ஜி.டி.பி. மதிப்பு என்பது ஒரு சிக்கலான வலைப்பின்னல்களுக்கு நடுவே இருப்பது. இதில்,  நாம் புரிந்து கொள்ள வேண்டியது ஜி.டி.பி. மதிப்பு இயல்பில் உயர்ந்து கொண்டே இருப்பது ஆனால் ஜி.டி.பி மதிப்பு உயரும் விகிதம்(GDP growth rate percentage) உயர்ந்து கொண்டே இருக்க வாய்ப்பில்லை.

மக்களாகிய நாம் இது போன்ற விஷயங்களையும் நிர்வாக நடைமுறைகளையும் சிக்கல்களையும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது.இது போன்ற விஷயங்களில் முழுமையான புரிதல் இல்லாமல் கட்சிகளின் செயல் திறனை நாம் மதிப்பீடு செய்வோமேயானால் அது தவறானதாக இருக்கவே அதிகம் வாய்ப்பு இருக்கின்றது. பொருளாதாரம் சார்ந்த நம்முடைய அடுத்த கட்டுரையில் பொருளாதார வீக்கத்தை(inflation) பற்றி பார்க்கலாம்.உங்களின் கருத்துக்களையும் கேள்விகளையும் நீங்கள் கீழே கமெண்ட் இல் பதிவிடலாம் அல்லது எங்களின் editor@kathirvijayam.com மின்னஞ்சல் முகவரிக்கு எழுதி அனுப்பலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *