பெருந்தொற்று பரவி வரும் கடிமான சூழலில் மக்கள் வெளியில் வருவதற்கான தேவை இருந்தாலும் இப்படியான காலங்களில் நம் தேவைகளை குறைத்துக்கொள்ள நாம் பழக வேண்டும். மனிதர்களான நாம் எப்போதும் விழிப்புணர்வோடு இருக்க வாய்ப்பில்லை நம்மை அறியாமல் நாம் செய்யும் தவறுகள் பல சந்தர்ப்பங்களில் ஏதேனும் சிறிய பாதிப்புகளையும் சில சந்தர்ப்பங்களில் பெரிய பாதிப்புகளையும் ஏற்படுத்தியிருக்கும். அதோடு, பல சமயங்களில் நம் உதாசீனம், நம்மை விட மற்றவர்களையே அதிகம், பாதித்து இருக்கும். பெருந்தொற்று காலத்தில் அனாவசியமாக நாம் வெளியில் செல்ல பல நியாயங்கள் கற்பித்தாலும்,நான் மாஸ்க் அணிந்திருக்கின்றேன், பாதுகாப்பு நடைமுறைகளை பின் பற்றுகிறேன் என்று, என்ன சொன்னாலும் ஒரு சிறிய உதாசீனம் யாரோ ஒருவருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்; யாரோ ஒருவர்கக்கு பெரிய இழப்புகளை ஏற்படுத்தக்கூடும். அது சட்ட ரீதியாகவும் தண்டனைக்குரியதே.
பெருந்தொற்று காலத்தில் அரசு அநேக கட்டுப்பாடுகள் விதித்து, முதல் அலையின் போது அறிவிக்கப்பட்ட பொதுமுடக்கத்தில், விதிகளை மீறியவர்கள் மீது, பிரிவு 188ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு பின் சில மாநிலங்களில் அது திரும்பபெறப்பட்டது.
அரசு அதிகாரியின் கட்டளையை மீறியதற்காக தண்டிக்கப்படுவதை பற்றியே இந்த பிரிவு பேசுகிறது. ஆனால், நாம் பெருந்ததொற்று காலத்தில் அனாவசியமாக வெளியில் செல்வது கொலை குற்றத்திற்கு ஒப்பானதாகும்.
பிரிவு 304A ன் படி
அசட்டு துணிச்சல், அடங்காத தன்மை, உதாசீனமாக நடந்து கொள்ளுதல் மூலம் யாருக்கும் மரணத்தை விளைவிக்க கூடிய செயலில் ஒருவர் ஈடுபட்டால்
a) அசட்டு துணிச்சல், அடங்காத தன்மை போன்ற செயல்கள் செய்பவர்களுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் அல்லது அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
b) உதாசீனமாக நடந்து கொள்ளுதல் மூலம் யாருக்கும் மரணத்தை விளைவிக்க கூடிய செயலில் ஒருவர் ஈடுபட்டால் 2 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் அல்லது அபராதமும் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
பொதுவாக இந்த சட்டம் பெருந்தொற்று பரவலுக்கு காரணமாக இருந்ததற்காக யார் மீதும் பிரயோகிக்க பட்டதாக தெரியவில்லை
தமிழகத்தின் கடைசி வாய்ப்பு ரஜினிகாந்த் என்னும் புத்தகத்தில் சொல்லப்பட்டிருப்பது போல நம் நாட்டில் இருக்கும் கண்காணிப்பு குறைபாட்டால் யாருடைய உதாசீனம், யாருடைய இழப்பிற்கு காரணமாக அமைந்தது என்று ஆய்ந்து அறிந்து தண்டிக்க முடியாது. நம் நாட்டில் சட்டத்தையும் சேர்த்தே உதாசீனம் செய்யும் வழக்கம் இருக்கின்றது.
யாரையும் தண்டிக்கவில்லை என்றாலும் யாரையும் கண்காணித்து தண்டிக்க முடியாது என்றாலும் கூட உதாசீனமாக,அனாவசியமாக வெளியில் திரிந்து தொற்று பரவலுக்கு காரணமாக அமைவது சட்டப்படி கொலைக்கு சமமான குற்றமேயாகும்.
இந்த உதாசீனம் தவிர்க்கப்படவேண்டியது.சமூகத்தில் இந்த உதாசீனம் முழுதும் தவிர்க்க முடியாது என்றாலும் இந்த கடிமான காலத்தில் தாற்காலிமாகவேனும் நம் உதாசீனத்தை நாம் தவிர்க்க வேண்டும். அதை தவிர்க்க முடிந்த அளவிற்கு நாம் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
நீதி தேவதையின் கண்கள் கட்டப்பட்டிருப்பது எல்லார்க்கும் சமமாக நீதி இருக்க வேண்டும் என்பதை உணர்த்தி. ஆனால், நீதியை; சட்டத்தை பின்பற்றவேண்டிய மக்கள் கண்களை கட்டி கொண்டு இருப்பது எவ்விதத்திலும் நியாயம் ஆகாது.எல்லாவற்றிக்கும் அரசாங்கத்தை மட்டும் குறை சொல்வதை விடுத்து பொறுப்பான குடிமகன்களாக சட்டபடி இல்லையென்றாலும் மனசாட்சி படி நடந்து யாருடைய இழப்பிற்கும் காரணமாகாமல் விழிப்புணர்வோடு இருப்போம்.
சட்டம் அறிவோம் -தொடரும்