தற்பொழுது, நம் மாநிலத்தில், ஒரு கொடூரமான அரசியல் அடுக்குமுறை நிகழ்ந்துகொண்டிருக்கிறது. கீழே விழுந்தவனையே எல்லோரும் மிதித்துக்கொண்டு இருக்கிறார்கள். இதில் மக்களில் ஒரு சாராரும் அரசியல்வாதிகள் ஆட்டுவிக்கும் பொம்மைகள் போல் இருந்து  விழுந்தவனையே மிதித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால், மக்களின் கவனம் கீழே மிதிபட்டு கொண்டிருப்பவனை பற்றியதாக இல்லை. அது பல வகையிலும் மடைமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது.

 கரூர் சம்பவம் நடந்தது முதல், நம் குழு எடுத்து வைத்த நியாமான கேள்விகளையும் கருத்துக்களையும் தான் பா..கவின் அண்ணாமலையும் எடுத்து வைத்து இருந்தார்.  ஒருவர் சில கருத்துக்களை கேள்விகளை எடுத்துவைக்கும் பொழுது, அவர் சொல்வதில், எதெல்லாம் சரி! என்று நாம் சிந்திக்காமல், அரசியல் கட்சிகளால், அரசியல் காரணங்களுக்காக கட்டமைக்கப்படும் கட்டுக்கதைகளின் பின்னே செல்லுகிறோம்.

பா... இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள பார்க்கிறது. விஜயுடன் கூட்டணி வைக்கப் பார்க்கிறது என்று ஊர்ஜிதப்படுத்தப்  படாத செய்திகளை நாம் நம்பத் தொடங்குகிறோம். அந்த செய்திகள்  உண்மையாகவே கூட இருக்கட்டும். இன்று தமிழகத்தில், பா...வை எதிர்க்கின்ற கட்சிகள் எல்லாம் பா.. வுடன் கூட்டணி வைத்திருந்த கட்சிகள் தான். விஜய் பா.. வுடன் கூட்டணி அமைப்பதை மக்களாகிய நாம் விரும்பவில்லை என்றால் அந்த கூட்டணிக்கு  வாக்களிக்காமல் இருந்துவிட்டு போகிறோம் என்ன கெட்டு விடப்போகிறது. அதற்காக இப்பொழுது நடக்கின்ற அடக்குமுறைகளைப் பற்றி சரியான கேள்விகளை முன் வைக்க கூடாது என்பது இல்லை.

தி.மு.. பெரியாராக கொண்டாடும் பெரியாரே, எவனொருவன் ஒடுக்கப்படுகிறானோ அவன் பக்கம் நான் நிற்பேன் என்று சொன்னதாக தானே சொல்கிறார்கள்.

இங்கே விஜய் ஒடுக்கப்படுகிறார் என்பது தான் எல்லோர் கண்களுக்கும் தெரிய வேண்டும். விஜய் ரசிகர்களிடம் அந்த எண்ணம் இருப்பது இயல்பானது. மற்றவர்கள் இதை சார்பு நிலை இல்லாமல் அணுகி இதில் நடக்கும் தவறுகளுக்கு எதிரான மனநிலையில் இருக்க வேண்டும். இங்கு யாரும் எதற்காகவும் போராட வேண்டியது இல்லை.ஆனால், வாக்களிக்கின்ற ஒவ்வொருவரிடமும் ஒரு அரசியல் தெளிவு இருக்க வேண்டிய தேவை நிச்சயமாக இருக்கிறது.

 95 சதவீதம்  நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளால் நடந்த துயர சம்பவம். ஆனால், இங்கே நூறு சதவீத குற்றச்சாட்டும் விஜய் பக்கம் திருப்பபடுகிறது.

இது தான் ஒடுக்குமுறை இதில் மதியழகன் போன்றவர்கள் பலியாகிறார்கள் என்பதை நாம் சிந்திக்கவேண்டும். ஒரு கட்சி அமைப்பு அல்லது அரசு அமைப்பை ஒப்பீடும் பொழுது மதியழகன் ஒரு கடுகு மாதிரி. நிர்வாக குறைபாடுகள் இருக்கின்ற இடங்களில் எல்லாம் கடுகு தான் நசுக்கப்படுகிறது, படிகளில் நிற்கவேண்டாம் என்று ஒரு நடத்துனர் வற்புத்துகிறார் அது வாக்குவாதம் ஆகிறது. மாணவர்கள் ஒன்று கூடுகிறார்கள். அரசு நடத்துனர் மீது நடவடிக்கை எடுத்து. படிகளில் பயணம் செய்தவர் கீழே விழுந்து இருந்தாலும் நடத்துனர் ஓட்டுநர் மீது தான் நடவடிக்கை எடுக்கும்.படிகளில் யாரும் நிற்க வேண்டிய அவசியம் இல்லாத படிக்கு அதிக பேருந்துகள் இயக்க வேண்டியதை, கதவுகள் கொண்ட பாதுகாப்பான பேருந்துகள் வாங்க வேண்டிய நிர்வாக குறைகளை மறந்துவிட்டு ஓட்டுநர் நடத்துனர் மீது நடவடிக்கை எடுக்கபடுவதை துரித நடவடிக்கையாக பார்த்து பழகிய நாம் விஜய் கட்சிக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைளை ஆதரிக்கிறோம்.

நீதிமன்றத்தின் எந்த கருத்துக்களையும் அவமதிக்கும் நோக்கம் நமக்கு இல்லை. ஆனால், நம்மை சில கேள்விகள் உருத்திக்கொண்டு இருக்கிறது. விஜய்யின் பிரச்சார வாகனம் மீது ஒரு இருசக்கர வாகனம்  பொறுப்பற்ற முறையில் வந்து மோதியதற்கு, அந்த பிரச்சார வாகன ஓட்டுநர் மீது ஏன் வழக்கு பதிவு செய்யவில்லை என்று நீதிமன்றம் கேட்டிருந்தது. விஜய்க்காக யாரும் பேச வேண்டாம். அந்த ஓட்டுநர் நம்மை போன்ற சாமானியர், அவர் ஒன்றும் இங்கு அநேகம் பேர் வெறுக்கும் நூறு கோடிகளில் சம்பளம் பெறுகிற நடிகர் இல்லை. Y –பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட ஒருவர் பயணம் செய்யும்  வாகனத்தை துரத்தி வருவதையோ அந்த வாகனத்திற்கு அருகில் அங்கீகரிக்கப்படாத வாகனங்கள் வருவதையோ தடுப்பது, காவலர்களின் பணி இல்லையா? எந்த கட்சி கூட்டமாக இருந்தாலும் எந்த குரு பூஜை போன்ற நிகழ்ச்சிகள் என்றாலும், தொண்டர்கள் என்கிற பெயரில் வாகனங்களை பொறுப்பற்ற முறையில் இயக்குபவர்கள் மீது ஏன் காவல் துறை உடனடி நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது. மற்ற y பிரிவு அல்லது அதற்கு நிகரான பாதுகாப்பு பெற்ற ஆளும்கட்சி வி..பிக்களின் வாகனங்களை ஒட்டி இப்படி வாகனங்கள் வருவதற்கு பாதுகாப்பு குழு அனுமதிக்குமா அப்படி வந்தால், வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்குமா?  நீதிமன்றம் இப்படியான கேள்விகளைத் தான் கேட்டிருக்க வேண்டுமென்று நாம் எதிர்பார்த்தோம்.

 வசதிகள் ஏற்படுத்தி தராததைப் பற்றியும் கேள்விகள் எழுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. எந்த அரசியல் கட்சி தலைவர்கள் நடத்திய சாலை கூட்டங்களில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டிருந்தது

.எனக்கு தெரிந்தளவில் கமல் அவர்கள் நடத்திய மாநாட்டில் கழிப்பறை வசதிகள் இருந்தது.அதன் பின்னர்,  அதிக எண்ணிக்கையிலான, நவீன நடமாடும் கழிப்பறை வசதிகளை ஒரு பிரதான அம்சமாகச் செய்து, அந்தச் செயல்பாடு பரவலாகப் பேசப்பட்டு, அதுவே ஒரு புதுமையாக ஊடகங்களால் சுட்டிக்காட்டப்பட்டது .வெ.. வின் முதல் மாநாட்டில் செய்திருந்த ஏற்பாடு  பற்றி  தான். அவர்களின் இரண்டாவது மாநாட்டில் கைக்குழந்தைகளோடு வரும் தாய்மார்கள் பாலூட்ட தனி அறை அமைக்கப்பட்டு இருந்தது. 

மாநாடு என்று நடத்துகிற பொழுது, குறிப்பிட்ட மைதானத்திற்குள் அல்லது பந்தலுக்குள் நடக்கும் கூட்டத்திற்கும் ஏற்படுத்தப்படும் வசதிகளுக்கும் நாங்கள் பொறுப்பேற்க முடியும், அதை கடந்த காலங்களில் சிறப்பாகவே செய்து இருக்கிறோம் என்றும்; பொது இடங்களில், சாலைகளில் அனுமதியும் பாதுகாப்பு கேட்டு நடத்தப்படும் கூட்டங்களில், பாதுகாப்பையும் கூட்டத்தையும் ஒழுங்குபடுத்துவது காவல்துறையின் பொறுப்பு என்றும்  .வெ.. தரப்பு இதையெல்லாம் வாதமாக வைத்திருக்கலாம்.தாமதகமாக வந்தது குற்றச்சாட்டாக சொல்லப்படுகிறது. அரசியல் கட்சிகள் சாலை கூட்டங்கள் நடத்துவது மக்களை சந்திக்க; திட்டமிட்டு கூட்டத்தை சாலையில் அடைத்துக்கொண்டு பலத்தை காட்டுவதற்கு அல்ல. விஜய் அனுமதி பெறப்பட்ட நேரத்திற்குள்ளாக தான் வந்தார், அவர் வருவதற்கு முன்னர் அந்த இடத்தில்  கூட்டம் கூடினால் அதை கலைக்கின்ற அதிகாரம் காவல் துறையிடம் இருந்தது. y-பிரிவு பாதுகாப்பு பெற்ற ஒருவர் வரும் சாலைக்கூட்டத்தில், அவர் வருவதற்கு முன்னமே வழிகளை மறைத்து இத்தனை பெரிய கூட்டம் கூடாமல் இருக்கும் படி காவல் துறை கவனமாக பார்த்துக்கொண்டிருந்திருக்க வேண்டும் தானே! விஜய் இடத்தில் பிரதமரோ முதல்வரோ நடத்தும் ரோட் ஷோ நிகழ்ச்சியை பொருத்தி பாருங்கள். அங்கே செருப்புகள் வீசுவதோ கற்கள் வீசுவதோ  வழிகளை அடைத்து முன்னமே கூட்டம் கூடுவதோ நிகழாமல் காவல் துறை மிக கவனமாக இருந்திருக்கும் தானே!அங்கெல்லாம் வாகனம் செல்லும் வழியை மறைத்துக்கொண்டு கூட்டம் கூடுகிற அளவிற்கு அனுமதிக்க மாட்டார்கள். சில ஏற்பாடுகளை த.வெ.க. செய்திருக்க வேண்டுமென்றால் அதையெல்லாம் செய்ய சொல்லி காவல்துறை அதை ஆய்வு செய்திருக்க வேண்டும். ஆனால், அனுமதியே ஒருநாள் முன்னர் தான் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அரசு, எந்த இடத்திலும் நாம் சொன்ன விஷயங்களையோ, அன்புமணி  அண்ணாமலை  போன்றோர் சுட்டிக்காட்டிய பாதுகாப்பு குறைபாடுகளை பற்றியோ, இதெல்லாம்  காவல்துறையின் பொறுப்பன்று என்று எங்கும் மறுக்கவில்லை. அவர்களால் அப்படி மறுக்கவும் முடியாது. .தி.மு. ஆட்சி காலத்தில்,இதே போன்றதொரு சம்பவம் தொடர்பாக ஸ்டாலின் அவர்கள், “ஊர்வலம் நடக்கும் என்பது முன்னமே தெரிந்திருந்தும் சரியான முன்னெச்சிரிக்கை நடவடிக்கைளை பாதுகாப்பு நடவடிக்கைளை எடுக்காத கையாலாகாத அரசு” என்று விமர்சித்து இருக்கிறார். அதனால், எனக்கு புரிந்த வரையில் அவருக்கும் தெரியும் இது நிர்வாக குறைப்பாட்டினால் நிகழ்ந்த விபத்து என்று.

 அதன் காரணமாகவே ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விளக்கங்களோடு அரசு அதிகாரிகள் வருகிறார்கள். செய்திகளின் படி ஒரு நாள் அதிகாரிகள் 500 காவலர்கள் பணியில் இருந்தார்கள் என்கிறார்கள். ஒரு செய்தியில், அதிகாரிகள் கூற்று படி 20 பேருக்கு ஒரு காவலர் என்று 1000 காவலர்கள் அனுப்பப்பட்டதாக சொல்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. நீதிமன்றத்தில் 600 காவலர்கள் பணியில் இருந்ததாக குறிப்பிட்டதாக ஒரு செய்தியில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கூட்ட நெரிசலில் தங்களை தற்காத்துக்கொள்ளவே எல்லோரும் உயரமான இடங்களில் ஏறியிருக்கின்றார்கள். ஆனால், அதற்கும் முன்னமே ஏற்பட்ட மின்வெட்டிற்கு மரத்தின் மீதும் டிரான்ஸ்பார்மர் மீதும் ஏறியது தான் காரணம், இறங்கியதும் இணைப்பை கொடுத்திவிட்ட்டோம்  என்கிறார்கள். இந்த கூற்றை நம்புவதற்கு கடினமாக இருக்கிறது. எந்த காவல் துறை அதிகாரியிடம் இருந்து எத்தனை மணிக்கு மின்வாரியத்திற்கு மின்தடை ஏற்படுத்தச் சொல்லிக்கேட்டு அழைப்பு வந்தது. மீண்டும் இணைப்பை கொடுக்கலாமா என்பதை காவல்துறையிடம் உறுதிப்படுத்திக்கொண்டோம் என்றார் தலைமைபொறியாளர். யாரிடம் எத்தனை மணிக்கு உறுதி செய்துகொண்டார்கள்?எத்தனை நிமிடங்கள் மின்தடை ஏற்பட்டது?

 இப்படி அரசாங்கத்தில் இருக்கும் குறைகள் மீது நம்முடைய கவனம் இருந்தால், தான் நிர்வாகம் மேம்படும். அதோடு புதிதாக அரசியலுக்கு வருகிறார்கவர்களை  அடுக்கும் பேச்சுக்கள், மக்களுக்கு எதிரானது. அதை மக்களே செய்கிறார்கள். விஜய் போன்றவர்கள் கட்சி ஆரம்பிக்கும் பொழுது தான் சாமானியர்கள் கட்சியில் சேர்ந்து அரசியல் பணி செய்ய நினைக்கிறார்கள்.அதற்கு ஒரு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது.

விஜய் பேருந்து ஓட்டுநர் மீது ஏன் வழக்கு பதியவில்லை என்று கேள்வியெழுப்பவதும். .வெ..வின் மாவட்ட நிர்வாகியை பொறுப்பாக்கி கைது செய்து இருப்பதும். சாமானியர்கள் அரசியல் சார்ந்து எந்தவொரு செயலிலும் ஈடுபடக்கூடாது என்கிற மிரட்டல் அல்லாமல் வேறென்ன?!

சம்பவ இடத்தில் இருந்து விஜயை கிளம்ப சொன்ன பின் கிளம்புகிறார். கரூர் சென்று பாதிக்கப்பட்டவர்களை சந்திக்க வேண்டும்  அனுமதி கேட்டு இருக்கிறார். இப்படியிருக்க.வெ.. நிர்வாகிகள் யாருமே அங்கு ஏன் இல்லை என்று கேள்வி எழுப்பப்படுவது அபத்தம் இல்லையா?  இப்படி வைத்துகொள்வோமே கூட்டம் நடக்கும் பொழுது எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை. விஜயும் நிர்வாகிகளும் புறப்பட்டு விட்டார்கள். கூட்டம் கலைந்து செல்லும் பொழுது இது நடந்திருந்தால் யாரை பொறுப்பாக்கியிருப்பார்கள்.

 இதில் வாதி பிரதிவாதிகளாக இருப்பது காவல்துறையும் .வெ.கவும். காவல்துறை தங்கள் பக்கம் எந்த பிழையும் இல்லை என்று நிறுவ முயற்சிப்பதோடு முழுகுற்றசாட்டையும் .வெ. மீது வைத்திருக்கிற சூழலில் இந்த வழக்கை காவல் துறை விசாரிப்பது எப்படி சரியாக இருக்கும் என்று நீதிமன்றம் ஏன் கருதவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. எதிரணி வீரரை அம்பையராக வைத்துக்கொண்டு ஆடும் தெரு கிரிக்கெட்டா இது?

 முக்கியமாக மக்கள் கவனிக்க வேண்டிய பிரச்சனைகளை விட்டுவிட்டு பா..விஜய் கூட்டணி என்று மக்களை பேச வைத்தது அல்லாமல்.போகிற போக்கில் தி.மு.கவிற்கு ரஜினி ஆதரவாக இருக்கிறார் விஜய்க்கு எதிராக இருக்கிறார் என்று. .வெ..வினரின் கோபத்தை தி.மு.. ஆதரவாளர்களே ரஜினியின் பக்கம் திசை திருப்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

 நடந்த சம்பவத்தில், அவர் யாரையும் குறை சொல்லவில்லை, ஒரு இரங்கல் தெரிவித்து இருக்கிறார் அவ்வளவு தான். ரஜினி ஸ்டாலினை புகழ்ந்தார் என்று பேச்சு இருக்கிறது. ஆம்! புகழ்ந்தார் என்ன சொல்லி புகழ்ந்தார் தேசிய அளவில் ஒரு அரசியல் நட்சித்திரமாக ஜொலிக்கிறார் என்று பேசியிருக்கிறார்.

 ரஜினியை சரியாக புரிந்துகொண்டிருக்கிற அரசியல் தொண்டர்களையும் தலைவர்களையும் கொண்ட கட்சி மட்டுமே தான் மாற்றத்திற்கான அரசியலை முன்னெடுக்கும். மற்ற கட்சிகள் அதிகாரத்தை எப்படி அடைவது என்பதில் மட்டும் தான் கருத்தாக இருக்கும்.

 ரஜினி யார் ஒருவரை பாராட்டும் பொழுதும் அவர்களைப் பற்றிய மறுக்க முடியாத உண்மைகள் குறிப்பிட்டு பாராட்டுகிறார். ஸ்டாலினை விஜய் விமர்சிக்காத நாள் இல்லை; இன்று வரை ஸ்டாலின் ஒரு இடத்திலும் விஜயையோ விஜய் கட்சி பெயரையோ குறிப்பிட்டு எந்த விமர்சனமும் வைக்கவில்லை.பொதுப்படையான  ஊழல் குற்றச்சாட்டு,  நிர்வாகம் சரியில்லை என்கிற குற்றசாட்டுகளை ஒதுக்கிவிட்டு ஸ்டாலினை அணுகுங்கள். தி.மு.கவிற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்துக்கொண்டிருந்த வைகோ அவர்களுக்கு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி கொடுத்து தன் பக்கம் வைத்துக்கொண்டார். பாஜக தான் நமக்கு எதிரி என்கிற பிம்பத்தை உருவாக்கி .தி.மு.கவை பலவீனப்படுத்தினார். தேசிய கட்சியான காங்கிரஸைநாங்கள் உங்களுக்கு கொடுப்பது தான் சீட்’ என்று வைத்து இருக்கிறார். ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார் என்பது தெரிந்ததும் (ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்று சொன்னதற்கு முன்பு) தி.மு. கமல்ஹாசனை முன்னிலைப்படுத்தியது, அவர்களே தான் கமல்ஹாசனை கட்சி தொடங்க செய்து இருப்பார்கள் என்பது  என்னுடைய தனிப்பட்ட சந்தேகமும் கூட.

ரஜினி அரசியலுக்கு வந்துவிடுவார் என்கிற தோற்றம் இருந்த(2017க்கு முன்) நாட்களிலேயே தி.மு.கவின் ஆதரவாளர்களைக் கொண்டு  ரஜினி மீது வெறுப்புகளை பரப்பினார்கள். ஆனால், நேரடியாக ஒரு முறை கூட தி.மு.கவின் மூத்த தலைவர்கள் விமர்சித்தது இல்லை. அவர் எதிர்க்கட்சியாக இருந்த பொழுது, நிர்வாகத்தில் நடந்த தவறுகளெல்லாம் இப்போதும் நடக்கிறது அது எதுவும் தன்னையும் கட்சியையும் பாதிக்காதபடி பார்த்துக்கொள்கிறார்.  தேசிய அளவில் எல்லா கட்சிகளும் பா. .விற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்கிற கருத்தை அவர் தான் முன்வைத்தார்.கடைசியாக நடந்த தேர்தலில் பா.. வெற்றி அடைந்திருந்தாலும் பெரும் பின்னடைவை சந்தித்து இருந்தது.

இப்படியொரு கட்சித் தலைவரை சில காரணங்களுக்காகவும் வெறுப்பின் காரணமாகவும் நம்மில் நான்கு பேர் தத்தி என்று சொல்லிக்கொண்டிருந்தாலும். அவர் அரசியல் நட்சித்திரம் இல்லை என்பதை எப்படி மறுக்க முடியும். 

இப்படியொரு கட்சித்தலைவரை அரசியல் நட்சித்திரம் என்று பாராட்டியது தவறில்லை என்பது நம் கருத்து. அதே மேடையில் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டு இருந்தார்.

 பாசத் தலைவனுக்கு பாராட்டு விழா என்று நடிகர்கள் நடத்தியதாக தி.மு. காட்டிக்கொண்டு தி.மு.. நடத்திய விழாவில், இலவசத்தை பரிகாசம் செய்வது போல் கதை சொல்லிவிட்டு, முதல்வரின் நேரத்தை நாம் வீணடிக்க கூடாது, அவருக்கு நிறைய வேலைகள் இருக்கும் என்று ஏதோ சினிமாத்துறைக்கு அறிவுரை செய்ததை போல பேசிய அவர் விமர்சித்தது கலைஞரை. அது கலைஞருக்கும் தெரியும். கட்டாயப்படுத்தி கூட்டி வருகிறார்கள் என்று அஜித் பேசியதற்கு ஆதரவு தெரிவித்து, அதனால், தி.மு. ஆதரவாளர்களால் அஜித்திற்கு தொந்தரவு ஏற்பட்டதும் அது தொடர்பாக கலைஞரிடம் பேசிவிட்டு வெளியில் வந்தவர். அஜித் உண்மையை தான் பேசினார்  இல்லாட்டி நான் சப்போர்ட் பண்ண மாட்டேன் என்றார்.

 தி.மு.கவிற்கு வாக்களிக்கவில்லை வேறுகட்சிக்கு வாக்களித்தேன் என்பதை தெரியாத்தனமாக சொல்லிவிட்டேன், அப்போது கலைஞர் அழைத்தார். நான் தயங்கி காய்ச்சல் என்றேன். கண்டிப்பாக வர வேண்டும் உங்களோடு படம் பார்க்க அவர் காத்துக்கொண்டிருக்கிறார் என்றதும் சென்றேன். சூரியன் பக்கத்தில் இருங்கள் காய்ச்சல் சரியாகி விடும் என்று கலைஞர் சொன்னார் என்கிற நிகழ்வை அதாவது தான்  தி.மு..விற்கு வாக்களிக்கவில்லை என்பதை தி.மு.கவினர் நிறைந்திருந்த அரங்கில் பேசினார். வயதான ஸ்டுடென்ட்ஸ் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்று பேசிய பொழுது, நான் அங்கு பார்த்து பேசுகிறேன் என்று குறிப்பிட்டு சொன்னார்.(ஸ்டாலின் மேடையில் இருந்தார் அவரை குறிப்பிடவில்லை என்கிற அர்த்தத்தில்இதுவும் விமர்சனம் தான்).

 ஒரு சொத்து வாங்குகிறோம், நாம் என்ன செய்வோம்? குறைவாக வரி கட்ட என்ன வழிகள் இருக்கிறது என்று பார்ப்போம். அப்படி மறைப்பது தான் கருப்பு பணம்.

 ரஜினியும் ஆரம்பத்தில் அப்படி தான் இருந்திருக்கிறார். “சினிமாவில் கருப்பு பணம் இல்லையா? ரஜினிகிட்ட இல்லையா?” என்று ஜெயலலிதா விமர்சனம் வைத்த பொழுது.ஊடகங்களை அழைத்து, 90 சதவீத வரி விதிக்கப்பட்டு கொண்டிருந்த காலங்களில் நான் அப்பிடியிருந்தது உண்மை தான். கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக்கொண்டேன்.இப்பொழுது காங்கிரஸ் வரிகளை குறைத்தபிறகு முழுதும் வரி செலுத்துகிறேன். வருமான வரித்துறையிடம் இருக்கும் தரவுகளை எடுத்து பாருங்கள் அதிகமாக வரி செலுத்தும் நடிகர் நான் தான் என்று 90களில் பேசியிருந்தார்.அந்த இடத்தில், அவர் தன்னைப்பற்றிய தவறை ஒப்புக்கொள்கிறார். காங்கிரஸ் அரசு அரசு கொண்டு வந்த வரி மாற்றங்களை சரி என்று நிறுவுகிறார்.ஜெயலலிதாவின் அதிகார போக்கை கண்டிக்கிறார்.

ஜெயலலிதா அவர்களின் சர்வாதிகார போக்கை அநேகமான இடங்களில் கண்டித்த ரஜினி பின்னாட்களில் அரசியல் ரீதியாக அவர் மீது பெரிய விமர்சனங்கள் வைத்தது இல்லை. ஜெயலலிதாவை பாராட்டுகிற பொழுதிலும் குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்காக செயலுகளுக்க்காக பாராட்டியிருக்கிறார். அதையெல்லாம் ரஜினியின் .தி.மு. ஆதரவு நிலைப்பாடு என்று எடுத்துக்கொள்ள முடியாது. கலைஞர் இருக்கின்ற மேடையில் அரசியல் செய்ய வருகிறவர்கள் நல்லது செய்ய வருகிறார்கள் ஆனால், செய்ய முடியாத அளவில் அரசியல்(சிஸ்டம்) கெட்டு இருக்கிறது என்று அவர்  குறிப்பிட்டு இருந்தது கலைஞரை பற்றிய விமர்சனம். அதையே சமீபத்தில் நல்லது செய்யத் தான் நினைக்கிறோம் என்று கலைஞர் பெரு மூச்சு விட்டார் அதில் ஆயிரம் அர்த்தம் இருந்தது என்று தி.மு. வினர் இருந்த அரங்கில் பேசினார்.

 ஜெயலலிதா விடுதலைக்கு வாழ்த்து தெரிவித்தவர், நீதிபதி ஒருவரின் ஓய்வு நிகழ்ச்சியில் பங்குகொண்டு நீதித்துறை கெட்டப்போனால் நாட்டை காப்பாற்ற முடியாது என்று பேசியிருந்தார்.

 புதிதாக அரசியலில் ஈடுபடுகின்ற அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் எல்லோரும் படிக்க வேண்டிய பாடம் ரஜினிகாந்த். அவரின் பேச்சுகளும் நடவடிக்கைகளும் உங்களுக்கு புரியவில்லை என்றால், அவரின் கருத்துக்களுக்காக நீங்கள் அவரை வெறுக்கிறீர்கள் என்றால் உங்களால் அரசியல் பழக முடியாது. அரசியலைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளும் முன்னமே அரசியல் உங்களை விழுங்கிவிடும்.

 அரசியல்ரீதியிலான விமர்சனங்களை கணைகளை  ரஜினி எய்த பொழுதெல்லாம்,எந்த  கணைகளும் தன்  பக்கம் திரும்பி தன்னை தாக்க முடியாதபடிக்கு கவனமாக இருந்தார். மேலும் அவர் பக்கம் இருக்கும் உண்மைத்தன்மை அர்ஜுனனை கிருஷ்னர் நாகாஸ்திரத்திடம் இருந்தது காததுபோல அரசியல் விஷப்பாம்புகளிடம் இருந்து காத்துக்கொண்டிருக்கிறது.இதெல்லாம் புதிதாக அரசியல் களத்திற்குள் வருகிறர்வர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.விஷப்பாம்புகள் இருக்கும் களத்தில் விஷப்பாம்பாக இருக்க வேண்டும் அல்லது உண்மையும் விவேகமும் இருக்க வேண்டும்.

தற்காப்பை பலவீனமாக வைத்துக்கொண்டு போர்க்களத்தில் நீங்கள் எதிரியை தாக்கினால் அவன் உங்கள் ஒரு அடியில் வீழும் படி தாக்க வேண்டும்; அப்படி ஒரு அடியில் வீழ்கிறவர்கள் யாரும் போர்க்களத்தில் இருக்க மாட்டார்கள். நீங்களும் அடித்ததும் அவர்கள் உங்களை எல்லா பக்கமும் இருந்து தாக்க கூடும் என்பதை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

 ரஜினியை புரிந்து கொள்ளாமல் வெறுப்பதை விட்டுவிட்டு ரஜினியிடம் இருந்து கற்றுக்கொள்ள பார்க்கவேண்டும்.கட்சியை முழுதாய் அறிவிக்கும் முன்னரே கட்சி விதிகளை அவர்  அறிவித்தார். பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்க கூடாது;குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்க கூடாது; பிளாஸ்டிக் கொடிகள் கூடாது; பெண்களை மதிக்க வேண்டும்குடும்பத்தில் ஒருவற்கு தான் கட்சி பதவி; தேர்தல் நேரத்தில் தேவையான வேலைகள் செய்ய மட்டும் தான் கட்சியில் சிறு சிறு அமைப்புகள் இருக்கும் மற்ற நேரங்களில் கலைக்கப்படும்; தலைமை தவிர்த்து ஊடங்கங்களில் கட்சி பெயர் பயன்படுத்தி யாரும் கருத்து தெரிவிக்க கூடாதுநிர்வாகிகளுக்கு சால்வை போர்த்துவது பூங்குக்கொத்து கொடுப்பது போன்ற செயல்களை பொதுகூட்டங்களில் மாநாடுகளில் செய்யக்கூடாது.; ஒழுக்கமாக இருக்க வேண்டும்; பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துகின்ற செயல்களில் ஈடுபட கூடாது; சாதி மற்றும் மத அமைப்புகளில் இருக்கிறவர்களுக்கு கட்சி பதவி கிடைடயாது; சமூக ஊடங்களில், கட்சி பெயர்களை பயன்படுத்தி சொந்த கருத்துக்களை வெளியிடக்கூடாது. கட்சியின் அதிகாரபூர்வ தகல்வல்களை மட்டும் தான் வெளியிட வேண்டும்.என்று இத்தனை விதிகளை கட்சியை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் முன்னரே அறிவித்தார்.

இது எல்லாவற்றையும் விட உங்கள் நண்பர் கமலஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் உங்கள் மீது விமர்சனம் வைத்திருக்கிறாரே என்று கேள்வியெழுப்பட்ட பொழுது, அரசியலில் யாரையும் நான் எதிரிகளாக பார்க்கவில்லை. மக்கள் பிரச்சனைகளை  தான் நான் என்னுடைய அரசியல் எதிரியாக பார்க்கிறேன் என்று பேசியிருக்கிறார்.இது தான் விவேகம் இது தான் முதிர்ச்சி. அரசியலில் அவரின் பார்வை நட்சித்திர தூரத்திற்கு இருந்தது. நம்முடைய பார்வையோ அரசியல்வாதிகள் கட்டிவைத்திருக்கும் பிம்பங்கள் இருக்கும் தூரத்திற்கு தான் இருக்கிறது.

ரஜினி,சஞ்சய் காந்தி மாதிரி ஒரு தலைவர் வேண்டும் என்று பேசியிருக்கிறார். 90களிலேயே  மக்களிடம் எழுச்சி வராமல் அரசியல் மாற்றம் சாத்தியமில்லை என்று பேசியிருக்கிறார். 2017க்கு முன் பல சந்தர்ப்பங்களில் அரசியல் வர விருப்பமில்லை என்று சொல்லி ராஜாதிராஜா படத்தில் பாட்டாகவே படித்து இருக்கிறார். சர்வாதிகார போக்கை கொண்ட காலத்தில் ஜெயலலிதாவுடன் பா.. கூட்டணி வைத்தது தவறு என்று பேசியிருக்கிறார். பா...அவர்கள் மீது வெளிச்சம் வர நடிகர்களை எதிர்த்துக்கொண்டிருந்த நேரத்தில் முதலில் அவர்கள் மோதியது ரஜினியுடன் தான். அந்த சமயத்தில் பா.. வின் அந்த செயல்களை மட்டும் கண்டித்து இருக்கிறார். பின்னாளில் அன்புமணியின் அரசியல் நிர்வாக திறனை பொதுவில் ஏற்றுக்கொண்டிருக்கிறார்.சிவாஜிக்கு சிலை திறக்கும் விழாவை ஆளும் தி.மு.. நடத்திய காலத்தில், ரஜினி மேடையில் இருந்தார், முன்னாள் நடிகர் சங்க தலைவராக இருந்த  பதவிகள் வகித்தசட்டமன்ற உறுப்பினர் தே.மு.தி.. விஜயகாந்த் கீழே இருந்தார். அந்த நிகழ்வில் விஜயகாந்த்தை காட்டி அவரின்  தேர்தல் வெற்றியை பாராட்டுகிறேன். ஒரு நடிகர் அரசியலில் ஈடுபட்டு வெற்றி பெறுவது சாதாரணமில்லை. விஜயகாந்த் ஜெயித்து இருக்கிறார் நான் பாராட்டுகிறேன் என்றார்.. நடிகர் சிவாஜியால் தேர்தல் அரசியலில் ஜெயிக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.

 கூட்டம் கூடினால், மக்களுக்கு ஆபத்து என்கிற நிலையில் ஒரு அரசியல் கட்சியும் தேர்தல் கூட்டங்களை தவிர்க்கவில்லை. ரஜினி அதிலும் மாறுபட்டு இருந்தார். கூட்டம் கூட்டி தான் செல்வாக்கை காட்ட வேண்டும் என்பதில்லை என்பதையும் ஒரு இடத்தில் பேசியிருக்கிறார். உண்மையில் மாற்றத்திற்கான அரசியலை முன்வைத்தது இதுவரையில் அவர் ஒருவர் மட்டும் தான். மாற்றத்தை விரும்புகிறவர்கள் அவரை புரிந்து கொண்டு அவர் வழியில் நடப்பது நல்லது என்கிற எண்ணத்தில் தான் இந்த நேரத்தில் இதையெல்லாம் நாம் குறிப்பிட்டோம்.

எல்லோருக்கும் ரஜினி தேவைப்பட்டார் அவருக்கும் யாரும் தேவைப்படவில்லை அதன் பொருட்டே அவர் எப்போதும் அவர் மனதில் பட்ட உண்மைகளை பேச முடிந்தது. அவருடைய பாராட்டுகளில் மிகைப்படுத்தல் இருந்தது இல்லை. கலாநிதி மாறனை பாராட்டும் பொழுது, அவருக்கு ஏன் கலாநிதி மாறன் என்று பேர் வைத்தார்கள் என்று ஆராயாமல், சாதுர்யமான தொழிலதிபர் என்கிறார். மாறன் சாதுர்யமான தொழிலதிபர் இல்லை என்று யாரும் மறுக்க முடியுமா?!

ஒவ்வொரு காலங்களிலும் ரஜினி பேசுகிறதை வைத்து அவர் இந்த கட்சிக்கு ஆதரவாக பேசுகிறார் என்று மற்றவர்கள் தான் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவரோ எப்போதும் நடைமுறையை  பேசிக்கொண்டிருக்கிறார். பத்து பேர் சேர்ந்து யாரை எதிர்கிறார்களோ அவன் தானே வீரன் என்று நாடாளுமன்ற தேர்தலை குறிப்பிட்டு சொன்னார். அப்போது அவரை சங்கி என்றார்கள். இப்போது, சட்டமன்ற தேர்தலில் புதிய பழைய எதிர்கட்சிகளையெல்லாம் வாங்க 2026இல் பார்த்துக்கலாம் என்று ஸ்டாலின் இருக்கிறார் என்று பேசியிருக்கிறார். கள எதார்த்தம் அதுவாக தான் இருக்கிறது. தி.மு.கவிற்கு எதிரான வாக்குகள் பத்து திசையில் சிதறிக்கிடக்கிறது. .தி.மு. விற்கு எதிராக முன்னாள் .தி.மு.கவினரே வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்.தற்போதைக்கு ஸ்டாலின் தான் சட்டமன்ற தேர்தல் களத்தில் பலமானவராக இருக்கிறார்

 தீவிர அரசியலில் ஈடுபட்டிருக்கும் அரசியல்வாதிகள் கூட ரஜினி அளவிற்கு அரசியலை புரிந்து அரசியலை அணுக தெரிந்தவர்களாக இல்லை. அதனால், ரஜினி இவருக்கு ஆதரவாக இருக்கிறார் அவருக்கு எதிராக இருக்கிறார் ஆளும் தரப்பை தாஜா செய்கிறார் என்கிற இரைச்சல்கள் எப்போதும் இருந்துகொண்டு தான் இருக்கும். உண்மையில் அரசியல் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று நினைக்கிறவர்கள், ரஜினியிடம் இருந்து நிறைய கற்றுக்கொண்டு அவர் முன்வைத்த விதிகளை திட்டங்களை பயன்படுத்தி அரசியல் செய்யலாம். ரஜினி ஒரு அரசியல் பாடம், புரியாதவர்கள் பழித்துக்கொண்டு தான் இருப்பார்கள்.அதையெல்லாம் செய்யாமல் இருந்தாலும் கூட எங்கு எப்படி பேச வேண்டும், ஒரு விமர்சனத்தை எப்படி வைக்க வேண்டும், என்பதை மட்டுமேனும் கற்றுக்கொள்ள வேண்டும்.சென்சிட்டிவான விஷயங்களைப் பற்றி பேசும் பொழுது கவனமாக இருக்க வேண்டும் என்று அவரே இவருக்கு ஊடகங்கள் வாயிலாக சொல்லியிருக்கிறார்

மாற்றத்திற்கான அரசியலை முன்னெடுக்கின்ற கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்-ரஜினிகாந்த்!

யார் மறுத்தாலும் வெறுத்தாலும் அது தான் நிஜம். அதையும் காலம் எல்லோருக்கும் உணர்த்தும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *