வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும்!

 

‘காதலும் கவிதையும்’ -இந்த தலைப்பில்,   நம் தளத்தில் முதல் கட்டுரை வெளியிட்ட பொழுது; இதே  இந்த தலைப்பில் தொடர் கட்டுரைகள் எழுத வேண்டும் என்கிற எந்த எண்ணமும் இல்லை.

 

செய்தி ஆய்வுகள் எழுத அதிக நேரம் தேவைப்படுகிறது. என்ன எழுதலாம் என்கிற கேள்வி எழுந்த பொழுது, நமக்கு வேண்டப்பட்ட தம்பி ஒருத்தர் கேட்ட இன்னொரு கேள்வி நினைவிற்கு வந்தது.

 

“எப்படி இப்படி கவிதை எழுதுறீங்க?” இது தான் அந்த கேள்வி.

அந்த தம்பிய நம் தளத்தில் உள்ள திருவாசகம் தொடரை படிக்க அறிவுறுத்தினேன். திருவாசகம் தொடரை வாசிப்பவர்கள் வெகு சிலராகத்தான் இருக்கின்றார்கள்.சரி! கவிதை எழுதிய தருணங்களையெல்லாமே ஒரு கட்டுரையா எழுதலாமே! என்று தோன்றியது. இதையும் யாரும் படிக்கமாட்டார்கள் என்கிற தைரியம் கூட காரணமாக இருக்கலாம்.

 

நம் வாழ்வின் அழகான தருணங்களை உருவாக்குவது, நம் தயக்கங்களை உடைக்கும் இந்த தைரியம் தான்.

 

வேலையில் இருந்து ஒரு பத்து இருபது நாள் சேர்ந்தாற் போல் விடுப்பு எடுத்துக்கொள்ளக்கூட நம் தயக்கங்களை, உடைத்தாக வேண்டியதாக இருக்கின்றது.

 

(😬கவிதை எப்படி எழுதணும்? அதை சொல்லு முதல் ல)

 

சரி! ‘இந்த பிரபஞ்சத்தின் மிக அற்புதமான எழுத்தாளர் யார்?’ இப்படி ஒரு கேள்வியை உங்கள் முன் வைத்தால் என்ன சொல்வீர்கள்?

 

வாசிப்பு பழக்கம் உள்ளவர்கள், ‘கவிதை எழுதுவதிலா? கதை எழுதுவதிலா?’ என்று பதில் கேள்வி கேட்டாலும் கேட்பார்கள். எல்லோருக்கும் திரைப்படம் பார்க்கும் பழக்கம் இருந்தாலும் கூட, வாசிப்பு பழக்கம் இல்லாதவர்கள், ‘எழுத்தாளர்கள் பற்றி எந்த பரீட்சயமும் இல்லை’ என்பார்கள்.

 

என்னிடம் இந்த கேள்வியை கேட்டால், யோசிக்காமல் சொல்வேன், இறைவன் தான் அந்த மிக அற்புதமான எழுத்தாளர். காலம், இயற்கை என்று எப்படி வேண்டுமென்றாலும் அழைத்துக்கொள்ளுங்கள்.

 

இந்த இறைவனை phenomenon  என்று சொல்லலாம், phenomenon  எனும் பொழுது  அது  ஒரு நபராக இருக்க வேண்டியதில்லை, வெறும் தத்துவமாக, ஒரு system செயல்படுவதாக கூட வைத்துக்கொள்ளலாம்.

 

இந்த இறைவனானவர், தான் எழுதும் அத்தனை கதைகளையும் கவிதை வடிவிலேயே தான் எழுதுகிறார். ஒவ்வொரு வரியையும் ஒரு கவிதையாக எழுதுகிறார். நம் கதையில் அவர் எழுதும் அந்த கவிதைகளை copy செய்ய தெரிந்து இருந்தால் போதும்.எப்படி copy செய்வது?

 

எதையுமே புரியும்படியாய் விளக்குவதற்கு ஒரு example தேவைப்படுகிறது.அதற்கு, இந்த இறைவன் எழுதிய ஒரு கதையும் அந்த கதையில் இருந்து copy செய்யப்பட்ட ஒரு கவிதையும் உங்களுக்கு எடுத்துக்காட்டாக சொன்னால் விளங்கிக்கொள்வீர்கள்.

 

(எங்களுக்கு புரிஞ்சுருச்சு உனக்கு கதை சொல்லணும்ன்னா சொல்லிட்டு போ 🥱)

 

ஆயிரம் வருடம் பழமையான, ‘ஒரு ஊரு ஒரு ராஜா’ template இல்லாம கதையை தொடங்கவேண்டும் என்கிற ஆசை. ஆனால், கதையை சுருக்கமாக சொல்வதற்கு அது தான் வழி.

 

அறியாத வயசுல ஒரு பையன், கொஞ்சம் அதே வயசுல ஒரு பொண்ணு.அந்த வயதில், அந்த பையனுக்கு அந்த பொண்ணு மேல அறியாத ஒரு நேசம்; ஒரு பாசம்; இன்று வரை இது தான் அது என்று வரையறுத்து சொல்ல முடியாத அறியாத நேசமாகவே அது  இருக்கின்றது.

 

இருவரும் ஒரே இடத்தில் படிக்கின்றார்கள். ஒரு சந்தர்ப்பத்திற்கு பின், அந்த பெண்ணை இனி காண முடியாதோ என்கிற ஒரு சந்தேகம் அவன் மனதில் எழுந்த அன்றே, அவன் இருந்த அந்த இடத்தின் அமைதியை குழைக்கும் வண்ணம் ஒரு சத்தம் கேட்கிறது, அது யாருடைய குரலும் இல்லை, அந்த சத்தம் கேட்ட மாத்திரத்தில் அவளே தான் வருகிறாள் என்று அவன் குதூகலம் அடைகிறான்.தலையை திருப்பாமல், கண் அசைக்காமல் ஒரு மாத்திரை கால அளவிற்குள் பார்வையை திருப்பி அவள் தான் என்று உறுதிப்படுத்திக்கொண்டு மீண்டும் அவன் வேலையை பார்க்க தொடங்கிவிட்டான்.

 

இவனுக்கு இது தான் வேலை, இவன் அந்த நேசத்தை வெளிப்படுத்திக்கொள்ளவே இல்லை.தினமும் பார்க்க வேண்டும் பேச வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலும்; அவன் பாட்டுக்கு அவன் வேலையை பார்த்துக்கொண்டு இருப்பான். ஒரு நாள், அந்த பொண்ணு, படிக்க வீட்டிற்கு வர சொல்கிறது, ரஜினி படம் பார்த்து கெட்டு போன அவன், “இல்லை நான் வரலை” என்று சொன்னாலும் அந்த பொண்ணு “ஏன் வரலாம்! படிக்கலாம்!” என்று சொல்லும் என்று நினைத்துக்கொண்டு; “இல்லை நான் வரலை” என்று சொல்ல, “சரிப்பா! நீ போய்ட்டு வா !” என்று சொல்லாத குறையாய்  அந்த பொண்ணும் வாசலோடு வழியனுப்பி வைத்தது.

 

இந்த சந்திப்பிற்கு பின், இருவரும் பார்த்துக்கொள்ளவோ பேசிக்கொள்வோ முடியாது என்பதை அவன் யோசிக்கவே இல்லை.

 

libraryக்கு போறான், மார்கெட் க்கு போறான், சாமியே கும்பிடாத நம்ம பையன் திருவிழாவுக்கெல்லாம் போறான்.

 

No  use.

 

ஒரு மிதமான இடைவேளை விட்டு மீண்டும் பேசவதற்கான வாய்ப்பை இறைவன் கொடுக்கின்றார்.

 

மித மிஞ்சிய சந்தோஷமும் மித மிஞ்சிய சோகமும் நம்மை மனம் திறந்து பேச விடாது. சமயங்களில் பேசவே விடாது.மீண்டும் பேச கிடைத்த வாய்ப்பிலும் அவன் மனம் திறந்து எதையும் பேசிவிடவில்லை.

 

தம்பி! நீங்க அந்த பொண்ணு “Halo” ன்னு message பண்ணாலே 10 வருஷத்துக்கு சேர்த்து சந்தோசப்பட்டுகிறீங்க என்று , இறைவன் அவர் கொடுத்த வாய்ப்பை அவரே பறித்துக்கொள்கிறார்.

 

அவனுக்கு அந்த பொண்ணு பேசினா மட்டும் போதும்! அதுவே பெரிய சந்தோசம்.அந்த சந்தோசத்திற்கு மீண்டும் ஒரு பெரிய இடைவெளி ஏற்படுகிறது.

 

பேச வேண்டும் என்கிற எண்ணமும் தீவிரமும் அவனுக்கு இருந்த அளவில் அந்த பெண்ணிடம் இருந்திருக்கவில்லை. அந்த தீவிரத்தோடு இருந்த அவனும் பேச கிடைத்த வாய்ப்புகளில் எதுவும் பேசிவிடவில்லை.

 

இப்படியாக காலம் நகர,பேச நினைத்த எல்லாவற்றையும் ஒரு நாளில் பேசிவிட வேண்டும் என்று அவன் நினைத்துக்கொண்டு இருக்கும் போது.எதேச்சையாக ஒரு ஊருக்கு பயணப்படுகிறான். தற்போது அதே ஊரில் வசிக்கும் அந்த பெண் எதேச்சையாக தன்  வீட்டிற்கு அழைத்து ஒரு message அனுப்புகிறாள்,கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்து ஊர் திரும்பும் நேரம் பார்த்து அந்த message ஐ பார்த்த அவனுக்குள் ஒரு தயக்கம், இப்படியே ஊர் திரும்புவதா இல்லை அவளை சந்தித்துவிட்டு ஊர் திரும்புவதா?

 

நீண்ட காலம், நம் மனதிற்குள் நாம் கொண்டு இருக்கும் எண்ணங்கள் ஈடேறும் தருணத்தில் நாம் இப்படி குழம்பிப்போவதும் நடக்கவே செய்யும்.

 

நின்று நிதானமாக இது தான் வழி என்றெல்லாம் அவன் கிளம்பவில்லை, எந்த திட்டமும் இல்லாமல் இது தான் திசை என்று வண்டியை செலுத்துகிறான், பின் வழிமாறியதாக எண்ணி திரும்புகிறான், தான் சென்ற பாதையிலேயே மீண்டும் சென்று ஒரு வழியாக அந்த இடத்தை அடைகிறான்.

 

புதிதாக ஒரு interview க்கு செல்லும் போது, சிறியதாக ஒரு நம்பிக்கை இருக்கும், புதுசா ஒரு வேலை கிடைக்கப்போகிறது என்று ஓரமாய் ஒரு சந்தோசம் இருக்கும், அங்கு யாரை சந்திக்க போகிறோம் என்ன பேச போகிறோம் என்கிற கேள்வி இருக்கும் இது போன்ற how it would be ?ரக meeting கள் எப்போது ஒரு excitement ஐ தரும்.

 

அப்படியான excitement க்கு கொஞ்சமும் குறைவில்லாத excitement உடன் இருந்த அவன், அந்த பொண்ணு ஆரத்தி தட்டு எடுத்துக்கொண்டு வாசலுக்கு வரும் என்று நினைத்தானோ தெரியவில்லை. வாசலில் நின்று கொண்டு வந்துவிட்டேன் என்று சொல்ல,அட வாப்பா என்றவுடன் தான் உள்ளே செல்கிறான்.

 

அவனுக்கு அவனை சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியவில்லை, அவன் பார்க்கும் எதுவும் அவன் மனதில் பதியவில்லை.இதற்கு பெயர் தான் தலை கால் புரியாமல் இருப்பது.

 

ஒரு தருணத்தில் , இருவரும் எதிர் எதிர் இருக்கையில் அமர்ந்த பின், அவன் ஏதோ கேட்க , எப்போதும் போல் அவள் ஒரு வார்த்தையில் பதிலளிக்கிறாள், அந்த ஒரு நொடி மட்டுமே அவன் நினைவில் இருக்கின்றது.அந்த நொடியில் அவன் பார்த்த அந்த நெற்றியில், அந்த சின்ன பொட்டுக்கு மேல் இருக்கும் சந்தனத்தை தேடுகிறான். வீட்டில் இருந்ததால் அந்த சந்தனம் அங்கு இல்லை.

 

இந்த கதையில் வரும் இந்த தருணமே ஒரு கவிதை தான்.அவன் அதை copy செய்து எழுதுகிறான்,

 

எதிரில் வானம்

நானும் இருந்த அறையில்

என் கால்கள் படாத தரையில்!

 

He was flying. எத்தனை உயரம் பறந்தாலும் நம்மை விட்டு தூரமாக இருப்பது தானே வானம்!அந்த தூரம் தான் அதில் அழகே!

 

சரி வரேன்! என்று கிளம்பியவன். கொஞ்சம் over excitement  உடன், நக்கலாக சொல்வதாக நினைத்துக்கொண்டு, வீட்டிற்கெல்லாம் அழைத்ததை சுட்டி, இன்னிக்கு சூரியன் எதுவும் வடக்கு பக்கமா உதித்ததா? என்று விட்டு, அவன் உயரம் மட்டுமே இருந்த அந்த சின்ன லிப்ட் க்குள் அவன் சென்று, அந்த லிப்ட் கதவுகள் மூடியது தான் தாமதம்; அவன் கட்டிவைத்திருந்த புன்னைகைகளை அவிழ்த்து விட்டு அந்த லிப்ட் மொத்தத்தையும் அவன் புன்னகைகளால் நிரப்புகிறான்.லிப்ட் கதவு திறந்தது, இப்போது தான் அவன் கால்கள் தரையை தொட்டது. என்ன நடந்தது என்று யோசித்த வண்ணம் மேலே இருந்த ஜன்னல் பக்கம் ஒரு மாத்திரைக்கும் குறைவான கால அளவில் பார்வையை செலுத்தியவன் அங்கு ஜன்னல் மட்டுமே தெரிய வண்டியில் ஏறி கிளம்புகிறான்.

 

அவன் அவளிடமே கேட்டது போலவே! எந்த சகுனமும் எந்த ராசி பலனும் அவனுக்கு சொல்லவில்லை, இப்படி ஒரு சந்திப்பு நிகழும் என்று.இன்றும் கிழக்கில் தான் சூரியன் உதித்தது; இன்றும் வெயில் கொளுத்த தான் செய்கிறது; எல்லாமே சாதாரணமாக தான் இருக்கின்றது; இப்படி ஒரு நாளில் இந்த சந்திப்பு எப்படி நிகழ்ந்தது! அவனுடைய இந்த வியப்பு கவிதையாக மாறுகிறது.இறைவன் எழுதிய கவிதையை, அந்த அழகான தருணத்தை அவன் copy செய்கிறான்.

 

 

கிழக்கே தான் வெளுத்தது இன்றும்

கொளுத்தும் வெயிலில் கருத்தது சாலைகள் இன்னும்

ஆனால் என்ன மாயம்!

குளிரும் புன்னகை மனதில் ஊற

வெளுத்தது மேற்கோ என்றே திரிந்தேன்!

தலை எது கால் எது அது புரியாமல்

பேசி பழகிய மொழியும் வராமல்

போகும் திசை அது தெரியாமல்

உன் திசை அது தேடி நான் திரிந்த பொழுதில்

எல்லாம் சரி! ஆனால் ஏனோ

இன்னும் தெரியவில்லை

இது ஏன் என்று புரியவில்லை

உனக்கேனும் தெரிந்ததா ஏதும்

பூரித்திரிந்த என் முகத்தில் இன்று..

 

“கொளுத்தும் வெயிலில் கருத்தது சாலைகள் இன்னும்

ஆனால் என்ன மாயம்!

குளிரும் புன்னகை மனதில் ஊற”

வெளியில் வெயில் கொளுத்துகிறது; அவனை மட்டும் அந்த வெயில் ஒன்றும் செய்யவில்லை.

 

அவன் முகத்தில் இருந்த அந்த பூரிப்பை அவள் ஏதும் கவனித்தாளா? என்று அவளை கேட்பது போல் அந்த கவிதை முடிகிறது. அவளை கேட்காமல் விட்டதால் அது கவிதையாய் முடிகிறது.

 

lift நிறைய புன்னைகைத்தும், தீராத அவன் புன்னகையை, அவன் ஊர் திரும்பும் வழி நெடுகிலும் சிந்திச் செல்கிறான்.அதையும் கவிதையாக எழுதுகிறான்.

 

விடைபெறும் சூரியன் பார்த்து சிரிக்கிறேன்-எனை

விட்டுத்தொடரும் சாலை பார்த்தும் சிரிக்கிறேன்.

நகரா மரங்கள் எனை விட்டு நகர

நகரும் நொடிகள் இன்னும் வேகமாய் கடக்க

உன்னை கண்டு கடந்த நொடி அது என்னை

கடந்துபோ காமல் காக்க

கண்ணுக்குள் வைத்து

நகரு கிறேன்நான்

நகரும் நொடியொடு நகரும் சாலையில்

காணும் காட்சி எதிலும்

கண்ணில் வைத்துக்கொண்ட காட்சி அதனை பார்த்துக்கொண்டு

 

அவன் மனதை இன்னும் கொஞ்சம் நேரத்திற்காவது வேறு எந்த விஷயமும் ஆக்கிரமிக்க கூடாது என்று அந்த தருணத்தை மட்டுமே மனதில் நிறுத்தி வந்ததை தான் இப்படி எழுதிவைக்கின்றான்.

 

இப்படியான, திட்டமிடாத அழகான தருணங்களை கொண்டே இறைவன் நம் கதைகளை கவிதைகளாய் எழுதி வைக்கின்றார். அந்த தருணங்களை அனுபவித்து, அதனை அப்படியே எழுதினால் யார்  வேண்டுமென்றாலும் கவிதை எழுதி விடுலாம்.

 

இது உன் கதை தானே என்று கேட்பீர்களானால், இறைவன் ஒரே template  கதையை தான் திரைக்கதையை மாற்றி பல கதைகள் ஆக்குகிறான். இது நிச்சயம் உங்கள் கதையாகவும் இருக்கலாம்!😜

 

நம் வாழ்வின் ஒவ்வொரு தருணமும் கவிதை தருணங்களே. ஒவ்வொரு கவிதை தருணங்களும் அடுத்த வரும் கவிதை தருணத்திற்கான build-up காட்சிகள் போன்றதே. நேசமும், ரசனையும் கொண்டு வாழ்வின் எல்லா தருணங்களையும் அனுபவித்தால், கவிதைகளாய் எழுதித்தீர்க்கலாம்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *