அந்த பொன்னும் நானும் ஒரே class கிடையாது. அந்த பொன்னும் நானும் ஒரே school கூட கிடையாது.2006அக்டோபர், 19ம் தேதியோ 20 தேதியோ, தீபாவளி விடுமுறை க்கு ஓரிரு நாட்களுக்கு முன்னர், அவளிடம் பேச எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அன்று எங்களைச் சுற்றி இன்னும் சிலர் கூட இருந்தார்கள்; அவர்கள் யாரும் என் கண்களுக்கு தெரியவில்லை. என் கண்கள் அவளையும் கூட காணவில்லை.
எல்லாவற்றையும் மறந்து ஏதேதோ அவளிடம் பேசிக்கொண்டு இருந்தேன். என் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் உச்சத்தில் நான் இருந்த நிமிடங்களின் வரிசையில் அந்த சில நிமிடங்களும் இருக்கும்.
தீபாவளி முடிந்தது. அதன் பின் அவளைப் பார்க்க முடியவில்லை. அந்த விடுமுறைக்கு முன்னதான அந்த சந்திப்பு ஒரு unbid farewell ஆக ஆகும் என்று நினைக்கவே இல்லை.
நான் கேட்காமலையே அவளைப்பற்றிய செய்திகள் என் காதுகளில் வந்து விழும். நானும் அதைப்பற்றி லட்சியம் செய்துகொள்ளாதவன் போல் கடந்துவிடுவேன்.
அப்படி ஒரு நாள், எந்த ஊர் கல்லூரியில் சேர்ந்தாள் என்பது காதில் விழுந்தது. எந்த கல்லூரி என்பது தெரியவில்லை. நானும் கேட்டுக்கொள்ளவில்லை.சில வருஷம் கழித்து தெரிந்தது. முன்னமே தெரிந்திருந்தால் அதே கல்லூரியில் என்ன department இல் வேண்டுமென்றாலும் சேர்ந்து இருப்பேன்.
android ஆதிக்கம் இல்லாத காலம். அவள் செல்லும் பேருந்தைத் தேடி அதற்கு parallel ஆக இருக்கும் சாலையில் அதற்கு எதிர்திசையில் சென்று தேடிக்கொண்டு இருந்தேன்.வைரமுத்து கவிதையில் சொல்வது போல் யாருமே நம்மை கவனிக்காவிட்டாலும் எல்லோரும் நம்மை கவனிப்பது போல எண்ணிக்கொண்டு இருந்துவிட்டேன்.கொஞ்சம் மெனக்கெட்டு இருந்தால் அவள் எந்த பக்கம் பஸ் ஏறுவாள் என்பதை தெரிந்துகொண்டு சரியான பேருந்து நிறுத்தத்திற்கு சென்று காத்து இருந்து இருக்கலாம்.
இப்படியே சில வருடங்கள் போனது, கொஞ்சம் கொஞ்சமாக எல்லோர் கைகளிலும் mobile phone வந்தது.நண்பர்கள் எல்லோரும் mobile phone வைத்துக்கொள்ள ஆரம்பித்தார்கள். நான், “நமக்கு எதுக்கு இப்ப” என்று இருந்து விட்டேன்.
ஆனால், அவள் phone நம்பர் ஆவது வாங்கி விட வேண்டும் என்று, அதற்கு இறைவன் ஏற்படுத்தி தந்த வழியை வைத்து அவள் phone numberஐ வாங்கினேன். அவள் அதற்கு கொஞ்சம் முன்னதாக மொபைல் போன் பயன்படுத்த தொடங்கியிருக்கின்றாள்.
what a coincidence!
எல்லாம் சரி! உன்கிட்ட தான் phone இல்லையே என்று கேட்காதீர்கள்.
வீட்டில் அம்மாவுக்கு என்று எது இருந்தாலும், அது வீட்டில் உள்ள அனைவருக்குமானது.விடுமுறைக்கு வீட்டிற்கு சென்று விட்டால் நான் கிளம்பும் வரை அம்மா phone என்னது!
நானும் அவளும் அதற்கு முன்னர் கூட அவ்வளவாக பேசிக்கொண்டதில்லை; இப்போதும் கூட அதிகமாக பேசிக்கொள்வதில்லை; ஆனால், முன்பை விட கொஞ்சம் அதிகமாகவே பேசிக்கொண்டோம். அதிகமாக SMS வழியாக; கொஞ்சமாக phone வழியாக.Nokia 1100 க்கும் nokia express music க்குமான இந்த உரையாடல் எங்கள் நட்பை கொஞ்சம் வளர்த்தது.
இதற்கு இடைப்பட்ட காலத்தில் என் மனதில் இருந்த கேள்வி, “இத்தனை வருடத்தில் யாரேனும் அவளுக்கு propose செய்து இருந்தால்?” .அது ஒரு வித பயம் கூட .
நான் அதை கேட்கவும் செய்துவிட்டேன், “College ல நிறைய fans இருந்திருப்பாங்களே யாரும் உங்களுக்கு propose பண்ணலயா”
அவள் சொன்னாள்,”உன் கண்ணுக்கு நான் தெரிஞ்ச மாதிரி யார் கண்ணுக்கும் தெரியல போல”
இதை படிக்கும் உங்களுக்கு எப்படி இருக்கிறது. எனக்கு கேட்கவா வேணும்!
அங்கு இளையராஜா இல்லை; A .R . ரஹ்மான் இல்லை; யாருமே வாசிக்காமல் அழகான ஒரு இசை எனக்கு மட்டும் கேட்கின்றது.
இந்த உரையாடல் நிகழ்ந்த சில மாதம் கழித்து ஒரு திரைப்படம் வெளியாகிறது.அந்த திரைப்படத்தைப்பற்றி எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள். ஒரு நாள் அந்த திரைப்படத்தின் சில காட்சிகளை நான் பார்க்க நேரிடுகிறது.
அந்த காட்சியில் அவன் கேட்கிறான், “யாரும் உன்னை இது வரைக்கும் விரட்டுனதே இல்லை? ரவுண்டு கட்டி நின்னு இருப்பாங்களே?”
அதற்கு அவள் பதில், “உன் கண்ணு வழியா யாரும் என்ன பாக்கல போல”
இந்த முறை நிஜமாகவே பின்னணியில் AR ரஹ்மான் எனக்கும் சேர்த்து வாசித்து கொண்டு இருக்கின்றார்.
சமீபத்தில் நிகழ்ந்த ஒரு சந்திப்பை விஜயனிடம் சொன்ன பொழுது, ” 96(திரைப்படம்)மாதிரி ஒரு மீட்டிங் டா” என்றேன். அவன் emotional connect என்று ஒரு வார்த்தையை பிரயோகித்தான்.
ஆம்! கலையின் எல்லா வடிவங்களிலும் emotion நிச்சயமாக இருக்கும்; ஒருவகையில் emotion களின் வெளிப்பாடு தான் கலையே.
அந்த கலை யாரை சென்றடைகிறதோ அவர்களோடு ஒரு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அப்பொழுது தான் அது வெற்றியடையும்.
‘விண்ணை தாண்டி வருவாயா’ படமும் கூட அப்படியான ஒன்று என்னைப்போல் இன்னும் பலர் அந்த திரைப்படத்தின் வசனங்களோடும், காட்சிகளோடும், பாடல்களோடும் தங்களை தொடர்புபடுத்திக்கொண்டு ரசித்து இருப்பார்கள். இப்படியான emotional connect ஐ அதிகம் கொண்டு இருக்கும் கதைகளும் திரைப்படங்களும் பாடல்களும் கவிதைகளும் தான் காலத்திற்கும் நிலைத்து இருக்கின்றது.
விண்ணைத்தாண்டி வருவாயா வெளிவந்து இன்றோடு 13 ஆண்டுகள் ஆகிறது. இந்த செய்தியை பார்த்தவுடன், நினைவலைகள் என்னை பின்னோக்கி அழைத்துச் சென்று விட்டது. விண்ணைத் தாண்டி வருவாயா திரைப்படம் மட்டும் இல்லை.
கவுதம் வாசுதேவ் மேனன் எழுத்தில் இயக்கத்தில் வந்த எல்லா திரைப்படங்களின் காதல் காட்சிகளும் அழகான கவிதைகளே!
சமீபத்தில் ஒரு meme பார்த்தேன் உருளைக்கிழங்கு மட்டும் எல்லா main dish க்கும் நல்லா இருக்கு என்று. ஆமா தானே!அதோடு இந்த உருளைக்கிழங்கை வைத்து நம் ஊர் சாம்பார் தொடங்கி பிரெஞ்சு fries வரை செய்ய முடிகிறது.காதலும் இந்த உருளைக்கிழங்கு மாதிரி தான், அதை வைத்து கவுதம் மேனன் தராத variety களே கிடையாது என்று நாம் நினைத்துக்கொண்டு இருக்கும் பொழுதே குட்டி story மாதிரியான கதையில் platonic காதல் என்கிற வார்த்தையை நமக்கு அறிமுகப்படுத்துகிறார். platonic காதல் என்றால் என்ன என்று தேடிவிட்டு நம் மனம் அப்ப அந்த பொன்னு பற்றி நம்ம மனசுல இருந்தது எண்ணத்திற்கு பெயர் platonic காதலா என்று வாயை திறக்கிறது.
situation யே சொல்லாவிட்டாலும், ஒரு கவிதையோ பாடலோ எழுத கேட்டால் கவிதைக்குள் situtation வைத்து எழுதும் திறன் கொண்ட கவிஞர் தாமரைக்கு கவுதம் கொடுத்த situtation எல்லாமே கவிதை தான். அந்த situation களை வார்த்தைகளுக்கு கொண்டு வந்து கவிதை நடைக்கோ அல்லது பாடலின் சந்ததிற்கு ஏற்பவோ வரிசைப்படுத்திவிட்டால் போதும்.
“அஞ்சு நாள் வரை அவள் பொழிந்தது ஆசையின் மழை அதில் நனைத்தது நூறு ஜென்மங்கள் நினைவினில் இருக்கும் அது போல் எந்த நாள் வரும் உயிர் உருகிய அந்த நாள் சுகம் அதை நினைக்கையில் இரத்தநாளங்கள் இராத்திரி வெடிக்கும்”
அந்த அஞ்சு நாள் அவளும் கூட காதல் கொண்டு தான் பழகினாள் ஆனால், பொய் இந்த வரிகள் பல emotional connect ஐ ஏற்படுத்திக்கொண்ட வரிகளாக இருக்கும். அந்த திரைப்படத்தின் கதையில் பாதி இந்த வரிகளில் சொல்லப்பட்டுவிட்டது. இப்படியாகத் தான் கவுதம் தரும் situation களே ஒரு கவிதை தான்.
என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே
மறந்து போ என் மனமே…
இந்த வரி அந்த திரைப்படத்தில் வரும் situation, நாயகனுக்கு தெரியாது அவளுக்க நாயகிக்கு நிச்சயம் ஆனது, தெரியாமல் மனசுல காதல் வளர்த்து அதற்காக பொய் சொல்லி, அந்த பொய் இரண்டு பேரையும் பிரித்து வைத்த பின் நாயகன் அவனுக்கு அவனே சொல்லிக்கொள்ளும் சமாதானம்.
நாயகன் பார்வையில் எழுதப்பட்ட இந்த வரியின் female cover version கள் இன்று பலர் மனதை ஆக்கிரமித்து இருப்பதற்கு காரணம், emotional connect.
வாழும் பொழுது நாம் யாரும் நம்முடைய இந்த emotion களை பெரிதும் கவனிப்பதில்லை. ஆனால் ஒரு படைப்பாளி அதை கவனித்து ஒரு கலை படைப்பாக செய்து, என்னவென்று சொல்ல தெரியாத emotion களை இப்படி தான் சொல்ல வேண்டும் என்று கற்று தருகிறான்.
கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில், குந்தவையும் வந்தியத்தேவேனும் சந்தித்துக்கொள்ளும் இடத்தில், குந்தவையை பார்த்த மாத்திரத்தில், வந்தியத்தேவனும் எழும் உணர்வுகள் அவனை என்னவெல்லாம் செய்கிறது என்று அப்படியே எழுதியிருப்பார்.
அதை படித்துக்கொண்டு இருக்கும் பொழுது, அந்த உணர்வுகளோடு ஒன்றிய நீங்களும் அதையே செய்துகொண்டு இருப்பீர்கள்.
அப்படியான வித்தைகளை திரையில் நிகழ்த்தும் வல்லமை பெற்றவர் தான் இந்த கவுதம்.இங்க என்ன சொல்லுது ஜெஸ்ஸி ஜெஸ்ஸி சொல்லுதா! நாம் விரும்பிய ஒன்று நம்மை விட்டு தூரமாக இருக்கும் பொழுது நம் மனம் அதன் ஆழத்தில் அந்த நேசத்தை ஒலித்து கொண்டே இருக்கும். “இங்க என்ன சொல்லுது!” is an emotion .
சொல்லுங்க, உங்களுக்கு “அங்க என்ன சொல்லுது?”😜☺️
தமிழ் இலக்கணம் வகைப்படுத்திய காதல் வகைகளை தாண்டி இன்னும் பல வகைகளை திரைக்கவிதைகளாய் தந்த கவுதம் வாசுதேவ் மேனின் விண்ணை தாண்டி வருவாயா என்னும் கவிதை இன்னும் 13 வருடம் கழித்து கூட புதுமையாகவே இருக்கும்.
அந்த திரைப்படம் மட்டும் அல்ல, அவர் திரைப்படத்தில் வரும் காதல் காட்சிகள் எல்லாம் எப்போதும் புதுமையாகவே தான் இருக்கும்.
காரணம் நம்முள் இருக்கும் emotion அது எல்லாக்காலங்களிலும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றது. வெளிப்படும் விதம் வேண்டுமென்றால் காலத்திற்கு ஏற்ப மாறியிருக்கின்றது.
அந்த emotion எப்பொழுதும் நம் மனதோடு இருக்கும்.
“என்ன இருந்த போதும் அவள் எனதில்லையே மறந்து போ என் மனமே”
இந்த வரிகள் மனதில் நின்றது போல்.
நன்றிகள் கவுதம் sir ! for giving such beautiful stories.