வாசகர்களுக்கு அன்பும் வணக்கங்களும்!

ன்று மாலை ஒரு ஏழு மணி இருக்கும்.அந்த இடத்தில் நாங்கள் ஒரு மூன்று பேர் இருந்தோம்.

மற்ற இரண்டு  பேர் பேசும் பொழுதுகளில் அவ்வப்போது என்னையும் சேர்த்துக்கொள்வார்கள். அன்று அவளாக என்னிடம் பேச்சை தொடங்கினாள்.

 

“நீ இந்த தமிழ் second paper  ல பழமொழிக்கு கதை எழுதுவது, இல்லாட்டி தலைப்புக்கு கவிதை  எழுதறது இதுல எப்போவது கவிதை எழுத்திருக்கியா?” என்றாள்.

 

அன்று அவள், தமிழ் இரண்டாம் தாள் மாதாந்திர தேர்வை எழுதியிருந்தாள்.

 

அவள் அன்று கவிதையும் கூட எழுதியிருந்தாள். அதைப்பற்றி சொல்வதற்காகவே தான் பேச்சை ஆரம்பித்து இருக்கின்றாள்.

 

‘வானமே எல்லை’ அது தான் தலைப்பு.  அவள் பத்தடி தூரத்தில் யாரோ ஒருவருடன் ஏதோ பேசிக்கொண்டு இருந்தாலே பரவசத்தில் நமக்கு தலைகால் புரியாது. இரண்டி தூரத்தில் இருந்து என்னிடமே பேசும் பொழுது எனக்கு என்ன கேட்கும்! என்ன புரியும்!

 

‘என்ன எழுதின?’ நான் கேட்கவில்லை. எங்களுடைய பேச்சும் வேறு பக்கம் போய்விட்டது.

 

நினைவுப்பக்கங்களை புரட்டும் பொழுது அந்த நாட்களில் அவளும் கூட என்னிடம் பேச காரணங்களை தேடியிருக்கின்றாளோ என்று தோன்றும்.

 

நமக்கு மகிழ்ச்சியை தரும் எந்த ஒரு விஷயத்தையும்,  அல்லது நம் வாழ்வில் நடக்கும் எந்த ஒரு நிகழ்வையும், நமக்கு தெரிந்தவர்களிடமோ அல்லது மிக பிடித்தமானவர்களிடமோ பகிர்ந்து கொள்வதில் இருக்கின்ற ஆனந்திற்கு அளவே இல்லை.

 

சமயங்களில் நமக்கு பிடித்தமானவர்கள் அவர்கள் சார்ந்த விஷயங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்ளும் பொழுது இருக்கின்ற மகிழ்ச்சிக்கும் அளவே இல்லை.

 

அந்த ஒரு நாள் மட்டும் தான் அவளாக என்னிடம்  அவள் செய்த ஏதோ ஒன்றை பற்றி பேச வந்தாள். “நான் ஒரு கவிதை எழுதி இருக்கேன் கேக்குறியா?” என்று கேட்பது போல். என்ன கவிதை என்று நான் கேட்டால் சொல்லலாம் என்பது போல பேசியிருந்தாள்.

 

அதன் பின், சில பல வருடங்கள் கழித்து நாங்கள் sms இல் பேசிக்கொண்ட காலத்தில் ஒரு நாள், “இன்னிக்கு நான் fish  fry செய்தேன்” என்றாள். அந்த SMS ஐ பார்த்த மாத்திரத்தில் எனக்கு அத்தனை சந்தோசம்.

 

ஆனாலும், “தோசை கல்லு போட்டு எடுத்தா சமைச்ச கணக்கா” என்று கேட்டதற்கு; “எல்லாம் நான் தான் செஞ்சேன்” என்று ஒரு பதில்

அந்த நேரத்தில், “அந்த சமையலை நான் சாப்பிடணும்” என்பது போல் ஒரு message அனுப்பினேன். ஆனால், இதில் சொல்லியிருப்பது போலவே அனுப்பவில்லை.

“அப்புறம் உனக்கு டன் டனக்கா தான் டி” என்ற பதிலை நெருக்கமான கூட்டத்திற்கு நடுவில் பேருந்தில் சென்று கொண்டிருந்த பொழுது நான் பார்த்ததில், என் முகத்தில் இருந்து வழிந்த புன்னைகைகள்  அத்தனை கூட்டத்திற்கும் நெருக்கத்திற்கும் இடை இருந்த வெளியை தேடி நிறைத்து கொண்டு இருந்தது.

 

இப்படி தினமும், ‘நீ என்ன செஞ்ச?’ ‘நான் என்ன செஞ்சேன்?’ என்று பேசிக்கொண்டிருந்த காலம் எல்லாம் கடந்து. அவள் என்னிடம் பேசாமல் இருந்த காலம் வந்து நீண்ட காலம் தங்கி விட்டது.

 

அவள் என்னிடம் பேசாமல் இருந்த அந்த term முடிந்த பிறகு, அவளிடம் நான் சொல்லவேண்டும் என்று நினைத்தையெல்லாம் நான் சொல்லிக்கொண்டு இருந்தேன்.

 

என் தினசரிகளை அவள் தெரிந்துகொள்ள whatsapp status போஸ்ட் செய்ய  ஆரம்பித்தேன்.  ஆனால், அவள் என்னிடம் எதையும் பகிர்ந்து கொள்ள நினைத்தது இல்லை. அதற்கு அவசியமும் கூட இல்லை.

 

நாங்கள் பேசிக்கொண்டு இருந்த காலத்திலேயே எங்களுக்கு இடையில் ஒரு தூரம் இருந்தது. அந்த தூரம் இன்னும் வளர்ந்து இருந்தாலும் அது அழகாகவே இருக்கின்றது.

 

நிலவுக்கும் பூமிக்கும் இடையில் இருக்கின்ற தூரம் மாதிரி.

 

இந்த தூரத்தின் அழகுகளை நான் கவிதைகளாய் வரைய தொடங்கினேன். அவள் அனுப்பும் ‘how  r u ‘களையும் ‘good morning’ களையும் கூட கவிதைகளாக்கி கொண்டு இருந்தேன். ஆனால், மறந்தும் கூட இந்த கவிதைகளை அவள் சட்டை செய்வதில்லை.அதிசயமாய் ஒரு இரண்டு கவிதைகள் அதில் விதிவிலக்கானது.

 

அவள், அன்று எழுதிய கவிதையைப் பற்றி நான் கேட்காததாலோ என்னவோ? நான் எழுதும் கவிதைகளை அவள் பெரிதும் சட்டை செய்யவதில்லை.

 

நிலவில் என்ன நடக்கிறது என்று யாருக்கு தெரியும்! அது மாதிரி தான்.

ஆனாலும், அந்த நிலவில் இல்லாத ஒரு பாட்டி வடை சுட்டுக்கொண்டு இருப்பதாக நம்பிக்கொண்டு இருப்பதில் தானே ஒரு அழகே இருக்கின்றது.

 

அப்படித்தான் எங்களுக்குள் இருக்கும் இந்த தூரம். அவளாக எதையும் என்னிடம் சொல்லிக்கொள்வதில்லை. அவசியமும் இல்லை.

 

அன்று என்ன அதிசயம் நடந்ததோ! “நான் ஊருக்கு போறேன்” என்றாள்.

 

என்னிடமும் வந்து சொல்கிறாள் என்பதிலையே எனக்கு அத்தனை சந்தோசம். “என்ன family  tour?” என்றதற்கு வேலை சம்மந்தமாக என்றாள்.

நானே எதையோ சாதித்துவிட்டது போல், I am little more excited.

 

அடுத்த ஓரிரு நாளில் பௌர்ணமி, அந்த நிலவே என்னிடம் வந்து, இந்த பௌர்ணமி முடிந்தால் மேற்கே சென்று அடுத்த பௌர்ணமிக்கு தான் மீண்டும் வருவேன் என்று என்னிடம் சொன்னது போல் இருந்தது.

 

இது எல்லார்க்கும் தெரியும் தானே! உனக்கு மட்டும் நிலா தனியா வந்து சொல்லுச்சா? அந்த நிலா இன்னும் எத்தனை பேர்களிடம் வேண்டுமென்றாலும் சொல்லி இருக்கட்டும் ஆனால், என்னிடமும் சொன்னதே! அது அப்படியே கவிதையானது.

 

இன்று வந்த நிலா

என்றும் இல்லாமல்

ஒன்று சொன்னது  என்னிடம்,

“இந்த பெளர்ணமி முடிந்து

இன்னும் மேற்கே சென்று

வரும் பெளர்ணமி வருமுன்

வருவேன் கிழக்கே” என்று.

இதில் இரகசியம் ஒன்றுமில்லை

நிலவிற்கு அவசியம் கூட இல்லை

அவசியம் இரகசியமில்லை

அதிசயம் ஆயிரம் உண்டு -அந்த

அதிசயம் எதுவெனக்கேட்டால்

நிலவே அதிசயம் தானே!

அதிசயம் ஆயிரம் என்னெனக்கேட்டால்

அத்தனை பேர்க்கும் சொல்லி

எனக்கும் சொன்னது நிலவு

இதில் அதிசயம் எங்கெனக்கேட்டால்

நிலவுள் தேடுங்கள் கிட்டும்

 

இதில் என்ன அதிசயம்? அந்த நிலவிடம் கேளுங்கள் சொல்லும், நான் அவனிடம் பேசுவதே அதியசம் தான் என்று சொல்லும்.

 

வீட்டிற்கு வந்தபின், பக்கத்து வீட்டு பையன் வந்து, எப்போதும் போல் என்னிடம் விளையாடிக்கொண்டு இருந்தான். நான் மதியம் நடந்த உரையாடலை நினைத்துக்கொண்டு இருந்தேன். அவனோ வீடு கட்டினான், தோசை ஊத்தினான்.

அந்த உரையாடலை நினைத்து மிதந்து கொண்டு இருந்து என்னிடம் வந்து, “மாமா என்ன வேண்டும்” என்றான்.

 

“காற்றில் மாவாட்டி

கையில் தோசை சுட்டு

உனக்கு என்ன வேணும்

என்ற குழந்தையிடம்

எதுவும் கேட்கவில்லை நான்

காலையில் வந்த நிலா

கண்ணிலே பதித்த வார்த்தை

நெஞ்சிலே நிறைந்திருக்க

இன்னும் என்ன கேட்பேன் நான்!”

 

இன்று இதற்கு மேல் என்ன வேண்டும்!

 

அவள் பயணத்திற்கு முன், ‘எப்போ’ ‘என்ன’ என்று கேட்டேன்? பயணசீட்டையே எனக்கு அனுப்பிவைத்தாள் .அதை திறந்து பார்ப்பதற்கு முன்னமே, அந்த ஒரு நொடியில்,  இருந்த இடத்தில் இருந்து கொண்டே கண்டம் தாண்டி பறந்தேன் நான்

கொஞ்சம் அதிகம் பேசினால், அவள் என்னிடம் பேசாமல் இருந்து விடுவாளோ என்கிற தயக்கம் எனக்கு எப்போதும் இருந்திருக்கின்றது.

அவளிடமோ தயக்கம் ஒன்றும் இருந்திருக்காது; “இவன்ட்ட நம்ம என்ன *&*&*^ பேசனும் ”  என்கிற எண்ணம் வேண்டுமென்றால் இருந்திருக்கும்.

 

இப்படி ஒரு சூழலில் அவள் பயணம் பற்றி என்னிடம் சொன்ன பரவசநிலையில் இருந்து நான் மீள்வதற்குள், பயணசீட்டை அனுப்ப. அதை திறந்தேனே தவிர ஒரு விவரமும் பார்க்கவில்லை.

 

‘நீ’ என்றாலே நான் excite ஆகிவிடுகிறேன்! இந்த flight என்ன செய்யும் என்று தோன்றியது.

‘நீ’ என்ற நொடியிலேயே

பறக்கிறேன் நான்

பறக்கும் இந்த விமானங்கள் என்ன செய்யும்!

அது மிதக்குமோ காற்றில்!

“பறக்கும் இந்த விமானங்கள் என்ன செய்யும்!”-என் மனதில் தோன்றிய கவிதை இந்த வரியோடு முடிந்துவிட்டது. ஆனால், கவிதைகள் ஏன் கேள்விக்குறியோடு முடிய வேண்டும். Words have power.I want that these lines to end with positive note .அதன் பின் சேர்த்தது தான்,அது மிதக்குமோ காற்றில்!(The excalamation)

ஒரு காலத்தில் அவள் அலுவலகம் செல்லும் நேரத்திற்கு அதே பேருந்தில் ஏற வேண்டும் என்று, வெளியூரில் இருந்து எங்கள் ஊர் பேருந்து நிலையத்திற்கு வந்த நான் ஒரு மணி நேரம் தாமதித்து வீடு செல்ல பேருந்தை எடுத்தேன்.

அதே போல், அவள் வருகிறாள் என்று இந்த  மேகங்கள் அங்கேயே தங்கிவிட்டால் மழை எப்படி வரும்! இந்த மேகங்களிடம் சொல்லி வைப்போம்.

மேகங்களே!

வானத்தில் தங்கி விடாதீர்கள்

அவள் வரும் அந்த விமானமும்

தரையிறங்கத் தான் போகிறது 

 

அவள் பத்திரமாக சென்று வர வேண்டுமே!

 

வானூரும் தேவதைகளே!

இம்முறை உலா செல்கையில்

அவளைப் பார்த்துக்கொள்ளுங்கள்

அவள் எங்க ஊரு தேவதை

உங்க ஊர்ல நீங்க தேவதை என்றால் எங்கள் ஊரில் அவளும் தேவதை.

‘அவளைப் பார்த்துக்கொள்ளுங்கள்’ என்பது நாங்களும் சீப்பு வச்சிருக்கோம் என்னும் விதமாகவும், Take care of her என்னும் விதமாகவும் அமைந்தது. As I always tell, we are just a tools and god is the writer. நம்மை வைத்து அவரே தான் இதையெல்லாம் எழுதிக்கொண்டு இருக்கின்றார்.

 

இந்த பயணம் பற்றி அவள் என்னிடம் சொல்லாமல், எனக்கு தெரிய வந்து இருந்தாலும் அப்போதும் மகிழ்ச்சியாக தான் இருந்திருப்பேன். Design அப்படி. Always happy for Her .

வானத்தில் அவள்!

தரையில் நான்

தரை தொடாமல்

 

அவள் பறக்கத்தான் வேண்டுமென்பதில்லை, அவள் ஏதோ ஒன்றை செய்து மகிழ்வாக இருக்கிறாள் என்றாலே பறந்து கொண்டு இருப்பேன் நான் மகிழ்ச்சியில். நான் மட்டும் இல்லை கடல் அலைகளும் கூட அவளுக்காய் மகிழ்ந்து தான் கிடக்கும்.

எத்தனை அலைகள் இந்த கடலில்

அவள் பறக்கும் விமானம் கண்டு

அத்தனையும் எத்தனித்தது

எட்டாத விமானம் அதை

எட்டி பிடித்து விட

எட்டாத விமானம் அது

எட்டாமல் பறந்து போக

கடலோடு கடலாய்

துடித்ததந்த அலைகள்

கடலின் அலைகளாய்

 

 

 

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *