“வீரா சார் எங்க?” குண்டு கண்களின் கருவிழிகள் விரிய; கன்னத்தின் குழிகள் நிறைய புன்னைகையோடு வீராவை தேடி வந்த கபினி கவிதாவிடம் கேட்டாள்.

“சார் அங்க என் ஃபர்ஸ் இருக்கு எடுங்களேன்” கபினியை சட்டையை செய்யாமல் ராஜ்ஜிடம் கேட்ட கவிதா, கவனமாய் ஃபர்ஸை வாங்கிக்கொண்டு, அதை திறந்து பார்த்துவிட்டு “இல்ல புள்ள!” என்று நக்கலாக கபினிக்கு பதில் அளித்தாள்.

“செருப்பு! அப்பறம் சிரிக்கிறேன்! எங்கன்னு சொல்லு?” என்று மீண்டும் ஆர்வம் குறையாமல் கேட்ட்டாள் கபினி.

“அவருக்கு இப்ப என்ன கிளாஸ்?” என்று கேட்டுக்கொண்டே அட்டவணையை பார்த்து”ப்ரீ தான் லேப் ல இருப்பார்” என்று சொன்ன கவிதாவை இழுத்துக்கொண்டு “அப்ப வா நம்ம லேப் க்கு போவோம் ” என்று இயந்திரவியல் கூடத்திற்கு வேகமாக விரைந்தாள் கபினி.

காற்றில் மூடியிருந்த கதவுகளை கபினி திறந்ததும் அவளுக்கு முன்னே அங்கே உள்ளே நுழைந்த ஒளிக்கீற்றை வீரா கவனிக்க அந்த ஒளியின் பின்னணியில் முன்னே விரைந்து உள்ளே வந்தாள் கபினி,  கூடவே கவிதாவும் வர, “என்ன இந்த பக்கம்?” என்று வீரா கேட்டான்.

“நீங்க சொல்லமாட்டேன் ன்னு சொல்லி பெரிய புதிர் எல்லாம் போட்டீங்கள? அந்த பேரை நான் கண்டுபிடிச்சுட்டேனே!” குழந்தைகளிடம் தென்படும் பரவசத்தோடும் உற்சாகத்தோடும் இதைச் சொன்ன கபினி வீராவை தேடியது இதற்காக தான்.

“ஆனா பேரு கூட சொல்லமாட்டேன் சொன்னீங்க பாருங்க! எனக்கு யாருன்னே தெரியாது பொண்ணு! mutual friendsக்கு கூட வழி இல்ல! என்கிட்ட பேரு சொன்னாஎன்ன ஆகப் போகுது! இப்ப நான் கண்டுபிடிச்சுட்டேன் என்ன பண்ணுவீங்க!” கபினிக்கு அந்த பெயரை கண்டுபிடித்ததாய் நினைத்து அத்தனை சந்தோசம்.

“நான் ஆமான்னும் சொல்ல போறதில்ல இல்லைன்னும் சொல்ல போறதில்லை ” என்றுவிட்டு கபினி எழுதி காட்டிய அந்த பெயரை பார்த்துவிட்டு சிரித்தான் வீரா.

“உங்க மூஞ்சிலேயே தெரியுது! இது தான் அந்த புள்ள பேரு ன்னு ” என்று கபினி சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுதே “எனக்கும் காட்டு புள்ள” என்று கவிதா அந்த காகிதத்தை மேசையில் இருந்த எடுக்க முற்பட்ட பொழுது வீராவின் இடது கை முந்திக்கொண்டது.

“அப்ப அது தான் பேரு! அவ்வளவு லவ் பண்ணீங்களா சார்” இதை கேட்கும் பொழுது கபினியின் அந்த கண்கள் இன்னும் விரிந்து கற்பனைக்குள் போனது.

“லவ் பண்ணேன்னான்னு தெரியல அது லவ் ன்னு சொல்ல முடியுமான்னு தெரில” மாணவர்களுடைய மதிப்பெண்களை உள்ளீடு செய்யும் வேலையை பார்த்துக்கொண்டே பதிலளித்த வீராவின் மனம் காலத்தில் பின்னோக்கிச் சென்றது.

“அப்பறம் இது என்ன சார்! நான் சும்மா என்னை பத்தி ஒரு கவிதை எழுதி கொடுங்கன்னு கேட்டதுக்கு அப்படி யோசிச்சு எல்லாம் எழுதினது இல்லன்னு சொல்றீங்க! அவ்வளவு பீல் பண்ணி, ‘கண்ணாடியின் காதல்’ கவிதை எழுதிருக்கீங்க! அதெல்லாம் என்ன?” கபினி நிதானமான ஒரு ஆச்சரியத்தில் இந்த கேள்வியை கேட்டாள்.

“நான் நிறைய யோசிருக்கேன் மேம்!

பசங்க எல்லாம் சைட் அடிக்கிறாங்க ல; அப்படி ஒரு நாளும் அவங்கள பாத்தது இல்ல!

ஆனா! பேசும் போது அவ்வளவு சந்தோசமா இருக்கும்!

அவங்களையுமே வர்ணிச்சு ஒரு கவிதை கூட எழுதினது இல்லை.

என்னை நானே கேட்டுருக்கேன். “லவ் பண்றோம் ஒரு கவிதை கூட அவங்கள் பத்தி எழுதலையேன்னு” அப்ப கூட இப்படி அழகு அப்படி அழகுன்னு நினைப்பு வரலை! நான் நோட்டீஸ் பண்ணதெல்லாம் ஒரு வர்ணனை எழுதலாம் ன்னு பார்த்தா அது முழுசா இல்ல; அப்பறம் நானா கொஞ்ச extra சேர்த்துக்கிட்டேன்” என்று அந்த கவிதையை சொல்லிக்கொண்டே வீரா கபினிக்கு எழுதிக் காண்பித்தான்.

பார்ப்பவரை ஈர்க்கும் கண்கள்
கிள்ள தூண்டும் கன்னங்கள்
பார்ப்பதை அறியா சிறு குழந்தை போல் பார்வை
வளர்ச்சி அடையாத நடை
தூக்கம் கலைந்து எழுந்த சிறுபிள்ளை போல் பேச்சு
மொத்தத்தில் பருவம் தாண்டிய குழுந்தை அவள்!

என்று அவன் முடித்த பொழுதே, “அந்த முதல் ரெண்டு வரி தான் எக்ஸ்ட்ரா பிட்டிங் ஆ?” என்று கபினி கேட்க புன்னகைத்தபடி தலையசைத்தான் வீரா.

“அவங்க பண்ற எல்லாத்துலயும் எனக்கு ஒரு குழந்தைத்தனம் தெரிஞ்சது. Exact அ நதியே!அடி நைல் நதியே பாட்டு.. அந்த பாட்டுக்கு முன்னாடி கௌசல்யா நடந்து வரது… அந்த mannerism.. பாருங்க! same ” என்றான் வீரா.

“அது எப்படி வீரா! நூறு தடவை அந்த புள்ளைய பத்தி பேசினாலும், நூறு தடவையும் உன் முகத்துல ஒரு பல்பு எரியுது?” என்று கவிதா இடைமறிக்க, கொஞ்சம் வெட்கத்தை மறைத்த படி எதார்த்தமாக போனை எடுப்பது போல் எடுத்து கவிதா சொன்ன அந்த பல்பு, எத்தனை பிரகாசமாய் இருக்கிறது என்று பார்த்து இன்னும் புன்னகைத்தான் வீரா.

கபினி, “சார்! போதும் கதையை சொல்லுங்க புளோ ல போய்ட்டு இருக்க அப்ப கட் பண்ணாதீங்க” என்றாள்.

“உங்களுக்கு என்ன entertainment ஆ நானு!” என்று வீரா சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுதே மாணவர்களுடன் அங்கே வந்து சேர்த்தார் ராஜ்.

“வா யா! நீயும் வந்து கதை கேளு!” வந்தவரை பார்த்து கவிதா சொன்னாள்.

“இவைங்களுக்கு எதாவது வேலை கொடுத்து வரேன் நீங்களும் வாங்க அவைங்கள லேப்-ல control பண்ண முடியாது” என்றதும் கவிதாவும் எழுந்து சென்று விட்டாள்.

அத்தனை பெரிய கூடத்தின் ஒரு பக்கம் மாணவர்களை பிரித்து கவிதாவும் ராஜ்ஜூம் ஒவ்வொரு குழுவிற்கும் பாடம் எடுத்துக்கொண்டிருக்க; அந்த கூடத்தின் மற்றொரு பக்கம் இருந்த வீராவின் மேசையில் எதிர் எதிர் பக்கம் போடப்பட்டிருந்த நாற்காலியில் கபினியும் வீராவும் அமர்ந்திருந்தார்கள்.

“உங்களுக்கு கிளாஸ் இல்லையா மேம்!” என்று வீரா கேட்டான் .

“போகனும் டைம் இருக்கு நீங்க கதையை சொல்லுங்க” கபினி கேட்காமல் எழுந்திருக்க போவதில்லை.

ஷாரா மீது வெளிப்புற தோற்றங்களால் ஏற்படும் எந்த ஈர்ப்பும் தனக்கு இருந்ததில்லை; “அவள் அழகாக இருக்கிறாளா? நமக்கு ஏன் அவளை அத்தனை பிடித்திருக்கிறது! இது காதல் என்றால் அவள் இல்லாமல் என்னால் இருக்க முடியாது என்கிற தீவிரமான எண்ணம் எல்லாம் எனக்குள் ஏன் எழவில்லை?” இப்படி எத்தனையோ கேள்விகள் தனக்குள் இருந்தது என்று ஆரம்பம் தொடங்கி கதையைச் சொல்ல ஆரம்பித்தான் வீரா.

“இனி தினமும் பார்க்க முடியாது-ன்ற நாள் வந்தப்ப தான் தேட ஆரம்பிச்சேன் ;

ஆனா, மறுபடி அப்படி வாய்ப்பு அமைஞ்சா நல்லா இருக்கும் நான் நினைச்சுட்டு இருந்த அன்னிக்கே எனக்கு ஒரு சத்தம் கேட்டுச்சு;

மாடிப்படியில யாரோ ஏறி வர சத்தம்;

கால் ல கொலுசு கூட கிடையாது; குரல் கூட கேட்கல! நான் யார் வராங்க ன்னு பார்க்கலை! ஆனா, அவங்க தான் வராங்க ன்னு எனக்கு உள்ள ஏதோ சொல்ல;  படியில ஏறிக்கிட்டு இருந்த அந்த ஒருத்தர் மேல வந்துட்டாங்க;

நான் சட்டுன்னு திரும்பி பார்க்கல! சொல்ல போனா பார்க்கவேயில்ல, நீங்க இப்ப எதிரில் பார்த்துட்டு இருக்கீங்க உங்களுக்கு இடது பக்கம் என்ன இருக்கு தெரிஞ்சுக்க நீங்க திரும்ப வேண்டியதில்ல, அன்னிக்கு நானும் திரும்பல! என் கண்ணும் கூட! ஆனா தெரிஞ்சுருச்சு. அவங்களே தான்ன்னு!

அந்த மொமெண்ட் ல ஒரு சந்தோசம் வந்துச்சு பாருங்க!” வீரா கன்னங்களை குவித்து மூச்சைப் பிடித்து பெரிதாய் விட்டு பெரிதாய் புன்னகைத்தான்.

“நெஞ்சுக்குழின்னு சொல்றோமே அங்க நம்ம சிரிச்சு அந்த சிரிப்பு நமக்கே பீல் ஆனா எப்படி இருக்கும் அப்படி எப்படியோ இருந்துச்சு! என்னான்னா not going miss her this year அது தான் அந்த சந்தோஷத்துக்கு காரணமா இருந்து இருக்கும்”அன்று ஷாராவை கண்டு அடைந்த அதே சந்தோஷத்தோடு சொன்னான் வீரா. அதை சொல்லிக்கொண்டிருக்கும் பொழுது அவன் அந்த பழைய நினைவுகளில் வாழ்ந்து கொண்டு இருந்தான்.

“அது ஏன்! எனக்கு தெரில!.. அப்பறம்….. college போன பிறகு….. ஒரு 3 வருஷம் கழிச்சு…… எப்படியோ நம்பர் கிடைச்சு….. பேசிட்டு இருந்தா……. தீடீர்னு ஏன் எதுக்கு ன்னு சொல்லாமயே பேச்சு வார்த்தை இல்லாம ஆகி….”வீரா வார்த்தைகளோடு கொஞ்சம் பாரத்தையும் முழுங்கினான்.

“நீங்க ஏன் சொல்லவேயில்லை” நினைவுகளுக்குள் வாழ்ந்துகொண்டிருந்த வீராவின் கண்களை பார்த்து தன் கண்களுக்குள் இருந்த ஆர்வத்தை காட்டி கபினி கேட்டாள்.

“அவங்க நமக்கு சீனியர்! பேசுறதில்ல ஒரு சந்தோசம் இருக்கு ல… என்னன்னு தெரில உங்கள் எனக்கு பிடிச்சுருக்குன்னு சொல்லி தப்பாகி; தப்பா நினைச்சு ;பேசாம இருந்துட்டா?! இந்த இது என் மனசுல ஆரம்பிச்ச அப்பவே தெரியும், it’s never going to end up in marriage, so இந்த difference யே ஒரு ….. ரொம்ப careful அ தான் பேசவே செய்வேன். ஆனா,என் excitement காமிச்சுக்காம இருக்க முடிஞ்சதில்ல.அதோட எனக்கு அவங்கள பிடிச்ச மாதிரி அவங்களுக்கு என்னை பிடிக்கணும்னு நினைச்சேன்;இது இப்படியே இருந்தா கூட போதும் நினச்சேன்; ஆனா, ஒரு நாள் பேசும் பொழுது ரொம்ப உரிமையா நாங்க பேசிக்கிட்ட அப்ப something inside me asked that, “எவ்வளவு நாள்?”.. that moment , I miss u ன்னு மெசேஜ் பண்ணேன். And that message was from my heart. அவங்க reply பண்ணாங்க. ‘miss u too’ but her message was from phone. சும்மா ஒரு courtesy க்கு சொல்லுவாங்கல? அந்த மாதிரி.அப்புறம் போன் நம்பரும் என்ன ஆச்சு ன்னு தெரில…நான் மட்டும் மெசேஜ் பண்ணிட்டு இருந்ததும் பண்ண முடியல….. காலேஜ் வெப்சைட், வேலை பார்க்கிற இடத்தோடு வெப்சைட் பேஸ்புக் ன்னு எல்லாத்துலையும் அவங்கள தேடுறது தான் வேலை “வீரா தொடர்ந்தான்.

வீராவின் அந்த தேடல் ஒன்றரை வருடங்கள் தொடர்ந்தது. அவள் கல்லூரி வலைத்தளத்தில் கிடைத்த தபால் தலை அளவிலான அவளின் புகைப்படம் தொடங்கி அவள் நண்பர்கள் யாருடைய தொடர்பேனும் கிடைக்குமா என்கிறது வரையில் வீராவின் தேடல் தொடர்ந்தது. தேடிக்கொண்டே இருந்தவன் அவளைத் தேடி அவளைப் பார்த்துவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் மட்டும் அவளின் நிறுவனத்திற்கு நேர்காணலுக்கு சென்றது என்று நமக்கு தெரிந்த கதையெல்லாம் புதிதாக சொல்வது போலவே கபினியிடம் சொல்லிக்கொண்டிருந்தான்.

“அப்ப ஒரு வழியா பேஸ்புக் ல கண்டுபிடிச்சு friend request கொடுத்தா கொஞ்ச மாசம் வரை accept பண்ணவே இல்ல. மெசேஜ், மெயில், எதுக்கும் ரிப்ளை பண்ணவும் இல்ல.. friend accept பண்ண பிறகும் பேசவே இல்லை. நான்… நேரம் கிடைக்கும் போதெல்லாம், சொல்ல போனா எல்லா நேரமும்… நான் தான் வேலைக்கே போகலையே! எல்லா நேரமும் friend list ல இருக்க ஒவ்வொரு profile அ அலசுறது தான் வேலை.. வேறு யாரும்… அப்படி எல்லாம் தோனுது… ஒரு போஸ்ட் எனக்கு அப்படி யோசிக்க வச்சுச்சு….  எதாவது ஒரு ப்ரொபைல்-ல பத்து பேர் நிக்கிற மாதிரி போட்டோ-ல அந்த பத்து பேருக்கு வெளியே எங்கையோ ஒரு மூலையில நின்னுகிட்டு இருந்தா கூட எனக்கு தனியா தெரியும்.. எடுத்து வச்சுக்குவேன்.. and இது சரியா ன்னு என்ன நானே கேட்பேன்; ஆனா, இதை வச்சு நம்ம அவங்கள என்ன பண்ண போறோம்ன்னு சமாதானம் சொல்லிக்குவேன்.சும்மா மறுபடி பேசினா பேசுறப்ப இப்படி எல்லாம் செஞ்சது சொல்ல நல்லா இருக்கும். she may feel good ன்னு… எனக்கு ஒரு கட்டத்துல அதான் பேசவே இல்லை சொல்லிடலாம் பேசாம இருக்க கூடாது ன்னு தான சொல்லலை ன்னு ஒரு முடிவு பண்ணேன்”

அந்த முடிவை வீரா எடுத்த அந்த நாள், வீராவிற்காக இறைவன் காத்துகொண்டு இருந்தார்.

வீரா எப்போதும் போல் அவளின் முகநூல் நண்பர்களின் பக்கத்தை அலச தொடங்கினான். அதில் ஒருவரின் பக்கத்திற்குள் அவன் நுழைந்ததும் அவன் கண்ணில் ஷாரா இருக்கும் ஒரு புகைப்படம் தென்பட்டது, அவன் தேடும் அந்த நெற்றியில் எப்போதும் இருக்கும் சந்தனம் இருக்கவில்லை. முகம் நிறைய புன்னகையோடும் அந்த மெல்லிய சந்தனம் இருக்கும் இடத்தை குங்குமத்திற்கு கொடுத்தும் அவள் உட்கார்ந்திருந்தாள். அருகே ஒருவர் உட்கார்ந்திருந்தார். வீராவின் உலகமே நின்று விட்டது போல இருந்தது. உண்மையில் வீராவின் அத்தனை நாடிகளும் ஒரு நொடி அடங்கியும் போனது.அந்த நொடியை வீராவால் கடக்க முடியவே இல்லை. வீட்டில் எல்லோரும் தூங்கி விட்டார்கள். வீராவிற்கு தூக்கமும் வரவில்லை. இருள் சூழ்ந்த அறையில் மெல்லிய ஒளி வீசிக்கொண்டிருந்த அந்த இரவு விளக்கு மட்டுமே தான் வீராவுடன் விழித்து இருந்தது.”கல்யாணத்துக்கு சொல்லணும்ற அளவுல கூட நம்ம இல்ல. ஏன் சொல்லணும் கூட தோணலை? நாம மட்டும் தேடிட்டு இருந்திருக்கோம்” வீராவின் மண்டைக்குள் ஆயிரம் எண்ணங்கள்; ஆயிரம் கேள்விகள்.

அவன் மேலும் தேடியதில் அவளின் திருமணம் முடிந்து இரண்டு மாதங்கள் ஆகியிருந்ததை தெரிந்துகொண்டான்.

அத்தனை நாள் இல்லாமல் சரியாக வீரா சொல்ல வேண்டுமென்று தீர்மானித்த அன்று இறைவன் வீராவிடம் நானே நினைத்தாலும் நீ கேட்கும் வரத்தை நீ கேட்டபடி தர முடியாது என்று சொல்ல காத்திருந்தது போல் இறைவன் அந்த புகைப்படத்தை வீராவின் கண்களில் படச்செய்கிறார்.அவன் நண்பர்களாகவேனும் இருக்கவேண்டும் என்றுவீரா வரம் கேட்டிருந்தான், முகநூலில் பேசிக்கொள்ளாத தொடரிப்பில் இல்லாத நண்பர்களாக மட்டும் இருக்கச்செய்தான் இறைவன்.இறைவனிடம் வரம் கேட்கும் பொழுது கூட ஏன் கஞ்சத்தனம் என்று விதி அதிலும் விளையாடி இருப்பதை உணர்ந்த வீராவின் வெளியெல்லாம் கூட பாரமாக இருந்தது.

“அன்னிக்கு அப்ப என் mind ல எதுவுமே ஓடலை மேம்! அப்ப நான் இருந்த மன நிலையில எனக்கு என்ன தோனுச்சோ, அது தான் நீங்க படிச்ச ‘கண்ணாடியின் காதல்’ ஒரு கண்ணாடி ஒரு பொண்ண காதலிச்சா; அது யாருக்கு தெரியும்? அந்த பொண்ணுக்குமே தெரியாதே!

எதிரில் அவள்

அவள் விழிகளில் நான்

நான் மெச்சிக்கொண்டேன்

என் அழகை!

ரொம்ப வருஷத்துக்கு முன்ன எழுதினது.அந்த வரியை முதல் வரிகளா வச்சு, அன்னிக்கு அடுத்த வரிகள் எல்லாம் கொஞ்சம் ஒரு கல்யாணம் நடந்த வீட்ல இருக்க கண்ணாடி அந்த பொண்ணை எப்படி தேடும் ன்னு சேர்த்து எழுதினது” என்று சொல்லி முடித்த வீராவின் நாடிதுடிப்புகள் இப்போதும் கொஞ்சம் அடங்கியே இருந்தது. அத்தனை நேரம் ஷாராவைப் பற்றி பேசும் பொழுது இருந்த பரவசம்  இப்போது கொஞ்சமும் இல்லை.

“நீங்க தான் பேசினாலே போதும்! friends அளவு ல.. அப்படி எல்லாம் சொன்னீங்க.. உங்களுக்கே தெரியும் கல்யாணம் பண்ண வாய்ப்பே இல்ல. அவங்க சீனியர்; சொன்னாலும் அவங்களே முதல ஏத்துக்க மாட்டாங்க ன்னு; அப்பறம் ஏன் உங்களுக்கு அவ்வளவு பெரிய ஷாக்” வீராவின் கதைக்குள் மூழ்கியிருந்த கபினி கேட்டாள்.

“அந்த moment நான் கடந்து வந்துட்டேன் மேம்! அது ஒரு நாள் வரும்ன்னு தெரியும். ஆனா, எனக்கும் தெரிஞ்சே வரும்ன்னு நினைச்சேன். and நீங்க யோசிங்க உங்களுக்கு நாளைக்கு கல்யாணம் ஆகும். அப்ப வீட்ல எல்லோரும் இனிமே பார்த்துக்க பேசிக்க வாய்ப்பில்லாத மாதிரி பீல் பண்ணுவாங்க. நான் பண்ணிருக்கேன்.. சிஸ்டர் marriage ல! எப்படியும் பார்த்துக்க பேசிக்க வாய்ப்பு இருக்க கூட பிறந்த சிஸ்டரே அப்படி. marriage ஒரு gap கொண்டு வந்திரும் மேம்! before and after marriage ன்னு. அந்த gap பசங்களுக்கும் நடக்கும். friends ஓட contact கம்மியாகும். பசங்களுக்கே நடக்கும் பொழுது. எப்பவும் கூட இருக்க போற சிஸ்டர் கிட்டயே ஒரு கேப் வரும் ன்ற போது. that marriage, மறுபடி பேச முடியும்ன்ற என்னோட ஹோப்க்கு ஒரு full stop.அது, அந்த moment ல கஷ்டமா தானே இருக்கும்!

நான் அவங்கள சிஸ்டரா யோசிச்சேன்ன்னு எல்லாம் சொல்ல மாட்டேன். நிறைய சிஸ்டர் இருகாங்க.. எனக்கு சித்தி பொண்ணு பெரியம்மா பொண்ணு எல்லாம் சேர்த்து. And wife ஆவும் யோசிக்கல; அது அப்படி ஒரு attraction இல்லை. ஆனா marriage பண்ணா தான் எனக்கு அந்த சந்தோசம் எப்பவும் கிடைக்கும் ன்னு நினச்சுருக்கேன்; இப்ப அவங்கள பத்தி பேசும் போது இருந்துச்சு ல அந்த சந்தோசம். ஆனா, தெரியும் நடக்காது ன்னு.. அன்னிக்கு இன்னொன்னு யோசிச்சேன் அன்னிக்கு வரை நான் ஒரு வேலைக்கும் போகலை அவர் வேலைக்கு போய் பல வருஷம் ஆகியிருந்தது.பிறக்கும் போதே not eligible ன்னு late அ பொறந்திருக்கோம்; வேலைக்கு போறதை பத்தி சிந்தனை இல்லாம ஏன் பேசலை என்ன ஆச்சு ன்னு தேடிட்டு இருந்திருக்கோம். அப்ப தான் ஏதாவது வேலைக்கு போக நினைச்சேன். அப்ப தான் ஒருத்தர் இங்க interview ன்னு சொன்னார்; வந்தேன், செலக்ட் ஆனேன். இப்ப இன்னிக்கு உங்கள்ட்ட இதெல்லாம் சொல்லிக்கிட்டு இருக்கேன்”

“அவங்க மறுபடி உங்க லைப் ல வந்தா என்ன பண்ணுவீங்க!” கபினி இன்னும் கதையில் இருந்து வெளியில் வரவில்லை.

“சினிமா நிறைய பாப்பீங்களா? கல்யாணம் ஆகுறதுக்கு சில பல வருஷம் முன்னாடியே என்கிட்ட பேசுறதை நிப்பாட்டிட்டாங்க. இனி வாய்ப்பே இல்லை!

அதோடு எனக்கு அவங்கள எப்படி பிடிக்கும்ன்னா? அவங்க என்ன செஞ்சாலும் பிடிக்கும்!

நீங்க கேட்ட ஷாக் க்கு அடுத்த நாளே, இப்ப எல்லாம் எந்த பொண்ணு வீட்ல சொல்ற மாப்பிள்ளைய, படிச்சு முடிச்சு இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ண ஒத்துக்கிது. செம ல அவங்க! அப்படி நினைச்சு சந்தோசப்பட்டிருக்கேன். ஒரு நாள் அவங்க husbandஅ எவ்வளவு லவ் பண்றாங்க சொல்ற மாதிரி FB ல ஒன்னு பாத்தேன். . arranged marriage…கொஞ்சம் மாசம் தான் ஆகுது. யாரு இப்படியெல்லாம் இருப்பா! அப்படி நினைச்சு சந்தோசப்பட்டிருக்கேன். ஒரு நாள் எங்க அம்மாட்ட சகஜமா பேசுற வயசு வந்த பிறகு இப்படி இப்படி ன்னு சொல்லி , இந்த மாதிரி அந்த பொண்ணை ரொம்ப பிடிச்சுருக்கு சொன்னப்ப, அவங்க முகம் கொஞ்சம் யோசிக்கிற மாதிரி மாறி, அந்த பொண்ணு ரொம்ப நல்ல பொண்ணு! அப்படியெல்லாம் பண்ணாது. வீட்ல சொல்றவங்க ல தான் கல்யாணம் பண்ணும் சொன்னாங்க. அவ்வளவு நம்பிக்கை.. அம்மாவுக்கு அவங்க மேல! இதெல்லாம் நினைச்சு நினைச்சு சந்தோசப்பட்டு இருக்கேன்!

she need not to talk with me always . அவங்கள பத்தி யாராவது என்கிட்ட நல்லா பேசினா;அவங்கள பத்தி ஏதாவது ஒன்னு தெரிஞ்சா? ஏன்! just her name is enough to make me happy .அப்படியெல்லாம் சந்தோச பட என்னால மட்டும் தான் முடியும். அதை யாரும் என்கிட்ட இருந்து எடுத்துக்க முடியாது.

ஆனா, இதுக்கெல்லாம் கூட எனக்கு அவ்வளவு சந்தோசமா இருக்கும்ன்னு அவங்களுக்கு தெரியவே இல்லாம போச்சேன்னு நினச்சுருக்கேன் . வாழ்க்கையில் ஒரு நாளாவது பார்த்து பேசணும்; பேசுற அன்னைக்கு, ஏன் பேசலை நான் ஒன்னும் தப்பா நடந்துக்கவோ பேசவோ செய்யலையே என்ன ஆச்சு! ஏன் பேசலை ன்னு கேக்கணும்! கல்யாணத்துக்கு சொல்யிருக்கலாமேன்னு கேக்கணும்! எனக்கு இப்படியெல்லாம் பிடிச்சிருந்துச்சுன்னு சொல்லணும். அது எப்படியும் நடக்கனும்ன்னு மனசுல ஓடிட்டே தான் இருக்கு. ஆனா, தற்போதைக்கு ஒரு மெசேஜ் கூட பண்ண முடியாது. அந்த மெசேஜ் பண்ண எனக்கு இருக்க ஒரே ஒரு காரணமும் அவங்க பிறந்தநாள். ஒரு மெசேஜ் தான். அதை அனுப்பிட்டு அடுத்து ஒரு வருஷம் வெயிட் பண்ணுவேன்.அதுக்கும் ரிப்ளை வராது. என் ஒரு பிறந்தநாளுக்காவது அவங்கள்ட இருந்து ஒரு மெசேஜ் வராதா ன்னு எல்லாம் எதிர்பார்த்துக்கிட்டு தான் இருக்கேன்!கடைசி பிறந்தநாளுக்கு முன்ன ஒரு தடவையாவது அவங்க மெசேஜ் அனுப்பனும் சாமிகிட்ட கேட்டு இருக்கேன். And எனக்கு கல்யாணம் நடக்கும்; எப்படியும் ஒரு பொண்ணை.. ஒரு நாள்… அந்த கல்யாணத்துக்கு நிச்சயமா கூப்பிடனும் அதுல அவங்க இருக்கனும் இந்த எண்ணம் எல்லாம் இருக்கு”  என்று முடித்து வீரா எழுந்தான்.

“சரி சார்! நான் எழுதிட்டு வந்த பேர் தானே அந்த பொண்ணு பேர்” தெரிந்தே ஆக வேண்டும் என்கிற வேட்கையோடு கபினி சத்தமாக கேட்டாள்.

வீரா சின்னதாய் புன்னகைத்து நகர்ந்தான்.

அப்ப அவ்வளவு தானா? ஒரு தலை காதல் தான் பொம்மை காதலா? அதான் இல்லை. இந்த கதை இங்கே முடியவும் இல்லை. வீரா ஷாராவை மறுபடி பார்த்தானா வீரா யாரை திருமணம் செய்துகொண்டான். வீரா நினைத்தது மாதிரி வீராவின் திருமணத்திற்கு ஷாரா வந்தாளா? வீரா மனசுல இருந்ததை ஷாரா தெரிந்து கொண்டாளா?

 

பொம்மை காதல் கதை இப்பொழுது தான் தொடங்கியிருக்கின்றது.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *