காலை எழுந்தது முதல் பரபரப்பாக ஓடிக்கொண்டிருந்த ஷாராவிற்காக அவளுடைய அலுவலக இருக்கை காத்துக்கொண்டிருந்தது. உள்ளே நுழைந்தவள், அந்த இருக்கையை இழுத்து அமர்ந்து கொஞ்சமாய் மூச்சு விட்டுக்கொண்டு, அவள் முன் இருந்த அந்த LED திரை கண்விழித்ததும், விரல்களால் வேகமாக பாஸ்வோர்டை தட்டி, மின்னஞ்சல்களை எல்லாம் பார்த்துவிட்டு, போனை கையில் எடுத்தாள். வீரா whatsapp இல் ரயில் விட்டு இருந்தான்.

The Day is Yours;

But I Feel Happy!

I realised that I am Happy as the day is yours.

Let All the Day be yours and keep you Happy!

 

My Thoughts for you are unbounded and limitless. It would not be fair to bound in few words to Express How I Feel to wish you on this special Day; Yet I have to Bind my thoughts and wishes in Just two Words that is my only choice, Happy Birthday!!! 

Millions would find Million ways to Greet you; There I got Stuck in the crowd, just dropped my Greetings, at the point where I am; Like a Child Talking to the Moon with a hope that Moon would Hear!

Everyone here are Irreplaceable and special in the way we are. Fact is, We would not know, How Special We Are? Flower may not know What it could do to million minds just by it’s presence, such is Yours! Thanks to time for adding me to that million.

There would be Million in Your Circle to Wish You Happiness, Success, & Wants you to live long! Sometimes Million is not complete and so time put me juts outside your circle adding one to that million.

Perhaps, You are Matured Enough to say enough for celebrations, Busy Enough to keep away the disturbances. But There are people who still find ways to disturb you to Celebrate the special Moments of your life to feel themselves Happy; Attempt to intrude through your maturity to make you smile and Sing a Boring Birthday song for you!

Not Sure Whether my  Greetings find that smile on your face, But could not resist my self on bombarding you with my Greetings! 

Let you be Happy All day and successful Years with your Family! Long Live!!

வீராவின் whatsapp status இல் இத்தனையையும் படித்துக்கொண்டு வந்த ஷாரா, கடைசியாக இருந்த அந்த எளிமையான வாழ்த்து செய்திக்கு மட்டும், “Thank You” என்று பதிலனுப்பினாள்.அன்று விடிந்தது முதல் வீரா, இப்படி  எழுதிக்கொண்டே தான் இருந்தான். மற்ற வேலைகள் இல்லாமல் இருந்திருந்தால் இன்னமும் கூட எழுதிக்கொண்டே இருந்திருப்பான்.அன்று ஷாராவின் பிறந்தநாள்.

அவள் ஒரு வார்த்தை பேச ஒரு ஒரு முறையும் காத்திருந்தது போலவே தான் அந்த “Thank You” காகவும் காத்துக்கொண்டிருந்த வீரா, “Miracle again” என்று பதிலனுப்பினான். அவனை பொறுத்தவரையில் ஷாரா அவனிடம் பேசுவதே அதியசம் தான். வீரா நின்றுகொண்டிருந்த தீர்க்கரேகைக்கும் ஷாரா உட்கார்ந்துகொண்டிருந்த தீர்க்கரேகைக்கும் இடையில் இரண்டரை மணி நேர வித்தியாசம் இருந்தது.அதிசயமாக அவர்கள் பேசிக்கொள்ள வாய்க்கும் நேரங்களையும் இந்த நேர வித்தியாசம் விழுங்கிக்கொண்டிருந்தது. அவள் 11 மணிக்கு அனுப்பியிருந்த ‘Thank You’ ஒரு நிமிடத்தில் வீராவை ஒன்றரை மணிக்கு அடைந்தது .

வீரா: Miracle Again

வீரா : நிறைய நீங்க பதில் அனுப்பல! இப்ப தான் site ல இருந்து வந்தேன் மறுபடி போகனும்

ஷாரா : ஆஹான்
வீரா : என்ன modulation ?
ஷாரா : அதே modulation
வீரா : அது தான் என்ன ன்னு தெரில. எப்பவுமே! கோவமா? கிண்டல் பண்றீங்களா?ஜாலியா சாதாரணமா பேசுறீங்களா ?இப்படி எப்பவும் என்ன ன்னு தெரில
ஷாரா : நீ எனக்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிற

தெரியுதா என்று மனதில் கேட்டுக்கொண்ட வீரா,உண்மையும் சொல்லாமல் பொய்யும் சொல்லாமல் அவளுக்கு மழுப்பலாக ஒரு பதில் அனுப்பினான்

வீரா: அப்படி எல்லாம் இல்ல! ரஜினி தெரியுமா! ரொம்ப பிடிக்கும்! அப்படித்தான்
ஷாரா: கபினிக்கு இது பிடிக்காம போகலாம். எனக்கு நீ முக்கியத்துவம் கொடுக்கிறது. ரஜினி வேற! அவ உன்கிட்ட காண்பிச்சுக்காம இருக்கலாம். ஆனா!கண்டிப்பா இருக்கும்
வீரா: உங்களுக்கு அனுப்பின வாழ்த்து ல ஒரு படம், அவ தான் பண்ணிக்கொடுத்தா. நான் கொஞ்சம் சோம்பேறி! எங்க ரெண்டு பேருக்கும் ஒருத்தரை ஒருத்தர் நல்லாவே தெரியும். நீங்க மனசுல எதுவும் நினைச்சுக்காதீங்க.Happy to see your replies as always.
ஷாரா : எல்லா பொண்ணும் ஒரு கட்டத்துல எரிச்சல் ஆவாங்க
வீரா: அம்மாகிட்டா கபினிகிட்ட எல்லாம் எப்பவுமே பேசிகிட்டு தான் இருக்கேன். யார்கிட்டையும் பேசாம நான் அப்படி இருந்தா சொல்லலாம்.
ஷாரா : சரி! சரி!
வீரா: Call பண்ணலாமா ன்னு கேட்டு இருந்தேன்
ஷாரா: 5ல இருந்து 6க்குள்ள

அவளுடைய பிறந்தநாளுக்கு அவளை அழைத்து வாழ்த்துச்சொல்ல வேண்டும், அதை சொல்லும் பொழுது அவளிடம் வெளிப்படும் அதிர்வுகளை அவன் அந்த தொலைபேசிவழியாக உணரவேண்டும்; அவளுடைய குரலில் அந்த “Thank You sir” அவன் காதுகளை தொட வேண்டும். இதற்காகவே அவளை அழைத்துவாழ்த்துச் சொல்ல வேண்டும் என்று காத்துக்கொண்டிருந்தான் வீரா.இத்தனை வருடங்கள் இல்லாமல் இத்தனையும் இன்று நடக்கப்போகிறது என்றே தான் வீரா நினைத்துக்கொண்டிருந்தான்.காரணம்,ஷாராவின் கடிகாரம் 5 மணியை தொடும் பொழுது வீராவின் பணிகள் முடிந்திருக்கும். அவனுடைய போனில் மணி, எட்டை நெருங்கிக்கொண்டிருக்கும்.

வீராவின் போன் ஐந்து மணி ஆனதை காட்டியது. ஐந்து மணிக்குள் முடிய வேண்டிய வீராவின் பணிகளோ ஷாராவின் ஐந்து மணி வரை தொடங்கவேயில்லை.

“Testing schedule delayed” என்று ஷாராவிற்கு வீரா மெசேஜ் அனுப்பிய பொழுது இந்தியாவில் சூரியன் தாழ்ந்து கொண்டிருந்தான். இந்தியாவில் மணி ஐந்தை நெருங்கிக்கொண்டிருந்தது. சரியாக அந்த நேரத்தில் போனை அலுவலகத்தில் விட்டுவிட்டு வீரா உள்ளே செல்ல வேண்டிய நிர்பந்தம். அவன் வெளியில் வந்த பொழுது ஷாராவிற்கு மணி ஏழு ஆகியிருந்தது. வீரா ஷாராவை அழைத்தான்.அவள் வீராவின் அழைப்பை ஏற்கவில்லை. சில நிமிடங்கள் கழித்து,”meeting இல் இருந்தேன்” என்று பதிலனுப்பினாள். “வீட்டுக்கு வந்து இருப்பீங்க ன்னு நினச்சேன்” என்று ஏமாற்றத்துடன் பதிலனுப்பினான் வீரா. இன்னும் ஏமாற்றத்துடன், “Happy Birthday again” என்று வீரா அனுப்ப, நாளைக்கு பேசுறேன் என்று பதிலனுப்பினாள் ஷாரா.

மறுநாள், 7 மணிக்கு மேல் வீரா எந்த வேலையும் வைத்துக்கொள்ளவில்லை. சரியாக நேரம் 07:30 ஆனவுடன், ஷாராவை அழைத்தான்.அவள் அந்த அழைப்பையும் ஏற்கவில்லை.

வீரா: இன்னிக்கு 5-6 பேசலாம் நினைச்சேன்
ஷாரா: busy! In Meeting!

மீண்டும் அதே ஏமாற்றம்.

அன்று அந்த ஐந்து மணிக்கு அவளிடம் பேச முடியாமல் போனதை நினைத்து தன்னையே நொந்துகொண்டான் வீரா. அதற்கடுத்த சில நாட்கள் அவள் வீராவின் சில மெசேஜ் களுக்கும்  சரியாக பதிலனுபவில்லை.

“இன்னிக்கு call பண்ணலாமா?”

ஷாராவின் பிறந்தநாள் முடிந்த மூன்று நாட்களுக்கு பின் வீரா அனுப்பிய மெசேஜ் அது. ஆறு மணிக்கு மேல் அழைக்கச் சொல்லி அவள் பதிலனுப்பியிருந்தாள். ஏழு மணிக்கெல்லாம் வேலையை முடித்துக்கொண்டு பணியிடத்தில் இருந்து கிளம்பி 8 மணிக்கு தன் இருப்பிடத்தை அடைந்தான் வீரா. இன்னும் 30 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். வீரா தன் அறைக்குச் செல்லவில்லை. அவன் குடியிருந்த அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்திற்கு கீழே இருந்த பூங்கா ஒன்றில் இருந்த பெரிய மரத்தின் கீழ் மூன்று பேர் உட்காரும் அளவில் ஒரு இருக்கை இருந்தது;தன்னுடைய பையை அதில் வைத்துவிட்டு, ஷாராவின் கடிகாரத்தில் மணி ஆறு ஆவதற்கு காத்துக்கொண்டிருந்தான். மழை நனைத்த அந்த பூங்காவில் அந்த நேரத்தில் ஒருவரும் இருந்திருக்கவில்லை. அந்த இருக்கையும் கூட ஈரமாகவே தான் இருந்தது.

“இன்னொரு hidden pic அனுப்பட்டா?” என்று கேட்டு அவளின் பதிலுக்கு காத்திருக்காமல், கூட்டத்தில் ஒரு மூலையில் அவள் இருக்கும் மற்றுமொரு புகைப்படத்தை அனுப்பிவைத்தான். “ஹா ஹா ” என்று பதிலனுப்பினாள் அவள். அந்த புகைப்படத்தை சுட்டி, “அந்த பையன் உங்களுக்கு propose பண்ற மாதிரி இருக்கு” என்றான் வீரா. இந்த போட்டோவை முதல்  தடவை பார்த்தப்ப கோபம் கூட வந்துச்சு என்றான் வீரா.

அவன் யாருன்னே தெரியலையே சார்! என்ற ஷாரா “call now” என்று மெசேஜ் அனுப்பினாள்.

வீரா அந்த இருக்கையில் உட்கார்ந்துகொண்டான். வேகமாக அவள் எண்ணிற்கு அழைத்து போனை இடது பக்க காதில் வைத்துக்கொண்டான். “ட்ரிங் ட்ரிங்” முடிந்து, “சொல்லுங்க ஸ்ஸ் சா ர்” என்று ஷாராவின் குரல் கேட்டது. அந்த குரல் இயல்பாக இல்லை. அந்த சார் சொல்வதற்கும் கூட ஷாரா தயங்கியதை உணர்ந்தான் வீரா. அவளும் கூட ஏதோ பதற்றத்தில் இருந்ததை போல் வீரா உணர்ந்தான்.

அவர்களின் அந்த உரையாடல் சில நிமிடங்கள் மட்டுமே தான் நடந்தது.

அந்த உரையாடல் தொடங்கியதுமே வீரா உடைந்து போனான். அந்த உரையாடலில்  என்ன நடந்தது? அது எப்படி முடிந்தது? எதுவும் வீராவின் நினைவில் இல்லை.மெதுவாக போனை கீழே வைத்தான். அவன் இமைகள் துளியும் அசையவில்லை, அவன் கருவிழிகள் கொஞ்சமும் அசையவில்லை. அவன் கண்கள் திறந்திருந்தும் கூட அவன் எதையும் காணவில்லை.அவன் அமர்ந்திருந்த அந்த இருக்கையில் அப்படியே உறைந்த போனான். அவன் இதயம் துடித்துக்கொண்டிருந்த சத்தம் அவனுக்கு கேட்டுக்கொண்டிருந்தது. அவனைச் சுற்றியும் அவனுக்குள்ளும் அத்தனை அமைதி. திறந்திருந்த அந்த கண்களுக்குள் காட்சிகளை காணாத அந்த கருவிழிகளை தாண்டி வீராவின் மண்டைக்குள் எல்லா மூலைகளிலும் இருந்தும் ஷாரா பேசிய அந்த வார்த்தைகள் கேட்டுக்கொண்டே இருந்தது.

“என்கிட்ட பேசுறது ல என்ன இருக்கு?”

“என்கிட்ட பேசுறது ல என்ன இருக்கு?”

அவள் கேட்ட அந்த கேள்விக்கு அவனுக்கும் கூட பதில் தெரியவில்லை.
“என்கிட்ட பேசுறது ல என்ன இருக்கு?”
வெளிப்படுத்த முடியாத கோபம் இயலாமை எல்லாம் சேர்த்து வீராவை உறையச்செய்திருந்தது.

“பேசினது எதுவும் ஞாபகம் இல்ல சரி! கடைசியா பார்த்தது எப்படி மறந்து போகும்!” அவன் மனம் அவனிடம் பேசிக்கொண்டே இருந்தது.அவன் கண்கள் கலங்கியிருக்கவில்லை,அவன் குரல் உடைந்திருக்கவில்லை. ஆனால், அந்த நொடியில் அந்த நேரத்தில் அவனை யாரேனும் பேச செய்திருந்தால், நிச்சயம் இரண்டும் நடந்திருக்கும்.

“என்கிட்ட பேசுறது ல என்ன இருக்கு?” வீராவிற்கும் கூட தெரியாது தான். அந்த மொத்த உரையாடலிலும் வீராவின் மனதில் நின்றது அந்த கேள்வி மட்டும் தான்.
“என்கிட்ட பேசுறது ல என்ன இருக்கு?”

சட்டென்று அவன் மனதிற்குள் இருந்து ஒருவன் கத்தினான், “என்ன இருக்குன்னா! ஒரு குழந்தை கையில் பொம்மை கொடுத்துட்டு ஏன் சந்தோசமா இருக்கன்னு கேட்டா அதுக்கு என்ன தெரியும்?!”

வீரா பேசவில்லை அவன் மனம் கோபத்தில் குமுறியது. “ஆமா! குழந்தைகிட்ட என்னன்னு இருக்கு கேட்டா என்ன சொல்லும்?” அவன் மனங்கள் இத்தனை வருடமும் தேடிக்கொண்டிருந்த பதில் இது தான்.இந்த குமுறல் தான் அந்த பதில்.

ஆனால், அந்த குமுறல் ஷாராவிற்கு கேட்காதே.

இது என்ன! அவள் மீது எந்த ஆசைகளும் இல்லை. எப்போதும் அவள் மீது அப்படியான பார்வை இருந்ததும் இல்லை. இது ஏதும் இல்லாமல் எந்த காரணமும் இல்லாமல் அவளை ஏன் பிடித்திருக்கிறது?எப்படி இப்படி பிடித்திருக்கிறது! இது தான் இது என்று ஷாரா மீதிருந்த காதலை வகைப்படுத்த முடியாமல் இருந்த வீராவிற்கு அவனுடைய கோபமே அன்று பதில் சொன்னது.

இன்னும் அழுத்தமாய் அதே கோபத்துடன் அவன் மனம் சொன்னதையெல்லாம் ஷாரா பார்க்கும் படி எழுதிவைத்தான் வீரா,

என்ன்ன இருக்கிறது என்றார்கள்,
சொல்லத் தெரியவில்லை.
ஏனிந்த ஆர்ப்பரிப்பு என்றார்கள்,
காரணம் புரியவில்லை.

கேட்பவர்களிடம் எல்லாம் கதைகளை அளந்தது
அது பொம்மையுடன் கொண்டாடிய தருணங்களை.

எல்லாம் இருந்தும்;எல்லோரும் இருந்தும்
எல்லாவற்றோடும் சேர்த்து பொம்மையும் வேண்டும் என்றது,
பொம்மை விளையாட்டுகளை கடந்துவிட்ட போதிலும்
ஏதும் அறியாததாய் இருக்கின்ற பொம்மையை பிடித்துக் கொண்டு பிடிவாதமாய் இருந்த மனம்.

குழந்தையின் கொண்டாட்டம் அறியாத பொம்மையாய் நீ இருக்கின்ற போதிலும்
எல்லாம் கடந்து நான் வளர்ந்து விட்ட போதிலும்
உன் இருப்பை உணர்கின்ற தருணங்களில் நான் வெளிப்படுகிறேன்
எனக்குள் இருக்கும் குழந்தையாய்
உன்னுள் இல்லாத நினைவுகளைச் சேர்த்து!

 

அந்த பொம்மையும் கூட தன் மீது ஒரு இனம் காண விருப்பம் கொண்டு இருந்திருக்கும் என்கிற அவன் கற்பனைகளை எல்லாம் அன்று ஷாரா உடைத்து நொறுக்கினாள். அவர்கள் சந்தித்து கொண்டதும் அவள் நினைவில் இல்லை என்றதும். நம் நினைவில் கொண்டாடும் நிகழ்வு ஒன்று கூட அவள் நினைவில் இல்லையே என்பது வீராவை உலுக்கியது. அவள் பேசினாலே அத்தனை பரவசம் அடைகிறோம் என்பது அவளுக்கு புரியாமல் தான் இருந்ததா? எப்படி அந்த கேள்வியை கேட்டாள், “என்கிட்ட பேசுறதுல என்ன இருக்கு?” யாரும் தவறாக நினைப்பார்களோ என்கிற அச்சம் அவளுக்கு இருந்திருக்கலாம். அதை புரிந்துகொண்ட வீரா அந்த உரையாடலின் பொழுதே அதற்கு பதிலளித்துவிட்டான், “எனக்கு பேசுறது ஒன்னும் தப்பு இல்லை! தப்பா எதுவும் மனசுல இருந்தா எப்படி தைரியமா இதெல்லாம் என் மனைவிகிட்ட என்னால சொல்ல முடியுது “.

 

“எனக்கு நிறைய முக்கியத்துவம் கொடுக்கிற” “என்னட்ட பேசுறதுல என்ன இருக்கு?” ஷாராவின் இந்த கேள்விகளுக்கெல்லாம் வீரா எழுதிய பதில் தான் அந்த கவிதை. ஒரு பொம்மை, குழந்தையுடனான எந்த தருணங்களையும் நினைவில் சேர்த்துக்கொள்வதில்லை. ஆனால், பொம்மையுடன் கொண்டாடிய எந்த நினைவுகளையும் குழந்தை மறப்பதில்லை.என்னுடன் எல்லோரும் இருக்கின்றார்கள் தான். நானும் வளர்ந்துவிட்டேன் தான். ஆனால், நீயென்றதும் நான் குழந்தை போல் ஆகிவிடுகிறேன்.

என்ன்ன இருக்கிறது என்றார்கள்,
சொல்லத் தெரியவில்லை.
ஏனிந்த ஆர்ப்பரிப்பு என்றார்கள்,
காரணம் புரியவில்லை.

கேட்பவர்களிடம் எல்லாம் கதைகளை அளந்தது
அது பொம்மையுடன் கொண்டாடிய தருணங்களை.

எல்லாம் இருந்தும்;எல்லோரும் இருந்தும்
எல்லாவற்றோடும் சேர்த்து பொம்மையும் வேண்டும் என்றது,
பொம்மை விளையாட்டுகளை கடந்துவிட்ட போதிலும்
ஏதும் அறியாததாய் இருக்கின்ற பொம்மையை பிடித்துக் கொண்டு பிடிவாதமாய் இருந்த மனம்.

குழந்தையின் கொண்டாட்டம் அறியாத பொம்மையாய் நீ இருக்கின்ற போதிலும்
எல்லாம் கடந்து நான் வளர்ந்து விட்ட போதிலும்
உன் இருப்பை உணர்கின்ற தருணங்களில் நான் வெளிப்படுகிறேன்
எனக்குள் இருக்கும் குழந்தையாய்
உன்னுள் இல்லாத நினைவுகளைச் சேர்த்து!

ஒரு பக்கம் ஷாரா கவிதையை முழுதும் வாசித்து முடித்தாள், மறுபக்கம் கபினி வாசித்துக் கொண்டிருந்தாள். அவன் எழுதிய கவிதையை அவன் எழுதிய அர்த்தத்திலேயே அந்த இருவர் மட்டுமே தான் புரிந்துகொண்டார்கள். ஷாரா எப்போதும் போல் அதையும் அப்படியே கடந்து சென்றாள். அவர்களுக்கு இடையில் இருந்த காதலை அத்தனை தெளிவாக சொன்னது அந்த கவிதையாகத் தான் இருக்க முடியும்.இது பொம்மை காதல், இதில் எத்தனை அழகான அர்த்தங்கள் இருக்கிறதோ அத்தனையும் அந்த கேள்விக்கான பதில்.

ஷாரா மனதில் வீரா மீது எந்த எண்ணமும் இருந்திருக்க வேண்டியதில்லை.அவன் மீது விருப்போ வெறுப்போ ஏதும் அவளுக்கு இருந்திருக்க வேண்டியதில்லை. எல்லாம் இருந்ததாக வீரா  நம்பிக்கொண்டிருந்தான். பொம்மையுடன் விளையாடும் குழந்தைகள் பொம்மைகளுக்கும் சேர்த்து தாங்கள் பேசுவது போல், அவளின் செயல்களுக்கும் பேச்சுகளுக்கும் வீராவே அர்த்தம் கற்பித்து அவனுக்கு எப்படி ஷாராவை பிடித்திருந்ததோ அதே போன்று அவளுக்கு பிடித்திருக்கும் என்று நம்பிக்கொண்டிருந்தான். கபினியிடம் இருந்து வீராவிற்கு அழைப்பு வந்தது. வீரா அந்த அழைப்பை ஏற்கவில்லை.கபினி தாமதிக்காமல், தயங்காமல், ஷாராவை அழைத்தாள்.

கபினி: sorry க்கா! disturb பண்ணிட்டேனா ?
ஷாரா: இல்லை டா!
கபினி: வீரா பேசுறது எதுவும் problem அ? அவனுக்கு என்னமோ நீங்க அவன் கூட contact ல இருக்கனும். அவ்வளவு தான். தப்பா எந்த எதுவும் இல்லை.
ஷாரா: எனக்கு தெரியும் டா! small issue
கபினி: நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்கலை ல?
ஷாரா: அவன் மேல ஒன்னும் தப்பு இல்ல. அவன் எதுவும் தப்பா பேசவும் இல்லை. And I know
கபினி: புரிஞ்சிகிட்டத்துக்கு thanks க்கா!
ஷாரா: no issues டா! அவன்கிட்ட சொல்லிடு இனி அவன்கிட்ட நான் பேசவோ மெசேஜ் பண்ணவோ முடியாதுன்னு.situations அந்த மாதிரி
கபினி: சரி க்கா! உங்களுக்கு ஒன்னும் பிரச்சன்னை இல்லை ல
ஷாரா : அது நான் பாத்துக்குவேன் டா. குட் நைட்!
கபினி: குட் நைட் க்கா!

இன்னொரு பக்கம் விமலும் வீராவும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

விமல்: ரொம்ப disturb பண்ணதா டா!
வீரா: அப்படி இல்லை விமல்! நான் நிறைய disturb பண்ணவும் இல்லை. நல்ல பேசிட்டு இருந்தவங்க தீடீர்னு பேசாம இருந்தது ஏன் தெரியல; நிறைய விஷயத்துக்கு காரணம் தெரியல; மறுபடி பேசும் போது, பேசினா நிறைய கேட்கனும் நினைச்சேன். நிறைய கேள்வி இன்னும் அப்படியே தான் இருக்கு. ஆனா, மறுபடி மறுபடி, மறுபடி பேசாம இருந்திருவாங்களோங்கிற பயம் தான் வருது. இன்னிக்கு பேச ஆரம்பிச்சப்பவே ஏதோ சரியில்லை. நம்ம நிறைய பேசனும் நினைக்கிறவங்க நம்மகிட்ட ஏனோ ன்னு பேசினா ….
விமல்: ஒரு long conversation அது நடந்தா நீ சரியாகிடுவ
வீரா: இருக்கலாம். ஆனா அது நடக்குமான்னு தான் தெரியலை.

ஒரு பக்கம் ஷாரா இனி மெசேஜ் கூட வீராவிற்கு பண்ண முடியாது என்று சொல்ல, இன்னொரு பக்கம் ஒரு long conversation காக வீரா காத்துக்கொண்டிருக்கின்றான். என்ன நடந்தது? இது எப்படி முடிந்தது இந்த பொம்மை காதல். தொடர்ந்து படியுங்கள்.

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *