‘கலைஞர் எனும் தாய்‘ நூல் வெளியீட்டு விழாவில் ரஜினி பேசியது, எப்போதும் போல் இப்போதும் தலைப்பு செய்தி ஆனது.
பற்ற வைத்த ரஜினி பற்றி எரியும் தி.மு.க என்று செய்தி ஊடகங்கள் அதைப் பற்றியே ஒரு வாரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
நம்முடைய ஆசிரியர் குழுவிலும் ஒரு கலந்துரையாடல் நிகழ்ந்தது. ஆசிரியர் குழுவின் கலந்துரையாடலுக்கு முன்னதாக ஒரு விஜய் ரசிகர், நம்மிடம் ஒரு கேள்வியை கேட்டு இருந்தார், “இப்ப ரஜினியை தி.மு.க கூப்பிட்டு இந்த விழாவை நடத்தணும். வாக்குகளை தங்கள் பக்கம் ஈர்க்க பார்க்கிறார்களா? ரஜினி தி.மு.க. விற்கு ஆதரவாக இருக்கிறாரா?” என்றெல்லாம் கேட்டார்.
இது நிச்சயம் வாக்குகளை ஈர்ப்பதற்கோ சேர்ப்பதற்கோ எடுத்த முயற்சி கிடையாது. 1996 தேர்தல் பாபா படத்திற்கு பிந்தைய தேர்தல் தவிர்த்து எப்போதும் அவர் எந்த அரசியல் கட்சிகளுக்கும் ஆதரவோ எதிர்ப்போ தெரிவித்ததில்லை. அவரை ஓரளவு புரிந்து வைத்திருக்கும் அரசியல் கட்சிகளும் அவரிடம் ஆதரவு கேட்பதில்லை. ஆனால், காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக, என்று அரசியல் களத்தில் எதிர் எதிர் துருவங்களாக இருக்கும் எல்லா கட்சி தலைவர்களும் எப்போதும் ரஜினியை இப்படி விழாக்களுக்கு அழைத்து அவரை பக்கத்தில் வைத்துக் கொள்வதை வழக்ககமாகவே வைத்து இருக்கிறார்கள். அப்படி அவர்கள் பக்கமாக வைத்துக் கொண்டாலும், ரஜினி கவனமாகவும் ஒட்டியும் ஒட்டாமலுமே தான் அவர்களிடம் நட்பு பாராட்டி வந்து இருக்கின்றார்.
திருட்டு வி.சி.டியை (அந்த கால தமிழ் ராக்கர்ஸ்) ஒழித்ததற்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிற்கு பாராட்டு விழா. ரஜினியும் பாராட்டு விழாவில் கலந்து கொண்டிருந்தார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் யாருக்கும் இல்லாமல் இருந்த கால கட்டத்திலேயே, ஜெயலலிதாவை எதிர்த்து பல விமர்சனங்களை பொது வெளியில் வைத்தவர், ஒரு தருணத்தில் ஜெயலலிதாவும் கலந்து கொண்ட சிவாஜிக்கு செவாலியே விருது வழங்கியது தொடர்பாக தமிழகத்தில் நடந்த விழாவில், நேருக்கு நேர் ஜெயலலிதாவை நோக்கி கைநீட்டி “தப்பு பண்ணுறீங்க” என்று பேசியவர். அப்படியான ரஜினி ஜெயலலிதாவை பாராட்டும் விழாவில் கலந்து கொண்டு என்ன பேசப் போகிறார் என்று இருந்தார்கள்.
“திருட்டு விசிடிகளை ஒழித்ததற்கு அவரை நான் பாராட்டவில்லை என்றால் நான் ஒரு சினிமாக்காரனே அல்ல” என்பது போல் பேசியிருந்தார். மறுநாள் டீக்கடைகளில் தொங்கிக்கொண்டிருந்த செய்தித்தாள் விளம்பரங்களில் நடுநாயகமா இருந்தது இந்த வரிகள், “நான் சினிமாகாரனே அல்ல“. எங்கு எப்படி பேச வேண்டும் என்பதை ரஜினியிடம் இருந்து நாம் எல்லோருமே கற்றுக் கொள்ள வேண்டும்.
சரி! “பற்ற வைத்த ரஜினி பற்றி எரியும் திமுக” என்று ஊடகங்கள் பேசியது பற்றி நம்முடைய ஆசிரியர் குழுவில் என்ன கலந்துரையாடல் நடந்தது.
நாங்கள் இது பற்றி வந்த செய்திகள் மீம்கள் என்று எல்லாவற்றையும் மேலோட்டமாக பார்த்துக்கொண்டு வந்தோம். ஒருவர் சமூக facebook இல், ரஜினி ஒருவரால் மட்டும் தான் யார் ஒருவரின் குறைகளையும் பரிகாசமாக எடுத்துச் சொல்லிவிட்டு அவர்களின் எதிர்ப்பை சம்பாரிக்காமல் கடந்து போக முடியும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
அதைப் பார்த்ததும், “சரி தான்! ஆனால்” என்று குழுவில் ஆசிரியர் விஜி ஆரம்பித்தார், “இதைப்பற்றி உன்னிடம் கேட்க நினைத்தேன் ரஜினி பேசியது பற்றி; ரஜினி மனதில் பட்ட உண்மைகளை பேசுகிறவராக இருந்தாலும் யாரும் புரிந்து கொள்ள முடியாத புரட்சிகரமான அரசியல் பேசுகிறவராக இருந்தாலும் அவரும் கூட ஊடகங்களை கையில் வைத்திருக்கும் சினிமா துறையில் பெரும் ஆதிக்கம் செலுத்தும் திமுகவை சார்ந்திருக்க நேரிடுகிறது தானே!? அவர் பேசியது திமுகவை ஆதரிப்பது போல் தெரிகிறது உதயநிதியை கூட பாராட்டும் படி பேசியிருக்கிறார்“
அந்த கேள்விக்கு பெரிய விளக்கம் வரலாறு எல்லாம் எடுத்து பேசுவதற்கு முன்னர் மற்றொரு ஆசிரியர் கதிர் அளித்த பதில், “மொத்தமாக எடுத்துக்கொண்டோமென்றால் ரஜினியே சொன்னது போல், இது ஒரு சிஸ்டம்; ஒரு சமூக அமைப்பு அதற்குள் தான் ஊடகம் அரசியல் சினிமா எல்லாம் இருக்கிறது. ஒரு வீடு இருக்கிறது; ஒரு குடும்பம் இருக்கிறது, குடும்பத்தின் அங்கமாக நான் இருக்கிறேன், குடும்பத்தில் உள்ள எல்லோரிடமும் குறை இருக்கிறது; எல்லோரும் ஏதோ தவறு செய்கிறார்கள்; அந்த தவறுகளை நான் சுட்டி காட்டுகிறேன், அதைத்தாண்டி அவர்கள் எனக்கு தேவைப்படுகிறார்கள் அவர்களுக்கு நான் தேவைப்படுகிறேன், இதில் யாரையும் ஒதுக்கிவிட முடியாது.வீடும் குடும்பமும் போல தான் நாடும். 1996 தேர்தலுக்கு பின், மூப்பனார் ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்துக்கொண்டார், எனக்கு தெரிந்த வரையில் ஜெயலலிதாவை கடுமையாக எதிர்த்து வந்த ரஜினியை மூப்பனாரின் முடிவு யோசிக்க வைத்திருக்கும் அரசியல் குறித்தான அவரின் பார்வையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும்; குறிப்பாக சொன்னால் பொதுவாக நிர்வாகம் சார்ந்து அரசியலில் ஏற்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து தீர்க்கமான சிந்தனையும் எண்ணமும் கொண்டிருந்த ரஜினி அதற்கு பின் அரசியல்வாதிகளை பற்றியும் தன்னுடைய எண்ணங்களில் ஒரு முதிர்வை பெற்றார். அரசியல்வாதிகளுடனான நட்பு பாராட்டுதலில் அவருடைய அணுகுமுறை மாறியது அதற்கு பின்னர் தான்“.
விஜி, அந்த பேச்சின் லிங்க் கிடைக்குமா என்று கேட்டு முழுமையாக பார்த்தார்.
ஆசிரியர் கதிர் சொன்னது சரி தான் என்று என்னையும் சேர்த்து எல்லா ஆசிரியர்களும் ஏற்றுக்கொண்டார்கள். 1996க்கு ரஜினியின் அரசியல் விமர்சங்கள் நேரிடையாகவும் கடுமையாகவும் இருந்திருக்கிறது. 1996க்கு பின் அவரின் விமர்சனங்கள் எல்லாமே கூடுமான வரையில் diplomatic காகவே தான் இருந்திருக்கின்றது. diplomatic என்றால் ராஜதந்திரம் சாதுரியம் என்றெல்லாம் சொல்கிறார்கள் திமுகவுடனும் ரஜினியுடனும் நெருக்கமாக பழகிய வைரமுத்துவும் கூட ரஜினியை ஒரு ராஜ தந்திரி என்று சுட்டி இருக்கிறார்.
ஜெயலலிதாவுடன் பாஜக கூட்டணி வைத்தது தவறு என்று பேசியிருக்கிறார். பாஜக எதிர்த்த சேது சமுத்திர திட்டம் சீக்கிரம் நிறைவேற்றப் பட வேண்டும் என்று பேசியிருக்கிறார். காங்கிரஸின் சஞ்சய் காந்தி போன்ற வலிமையான தலைவர் நாட்டிற்கு தேவை என்று பேசியிருக்கிறார். கலைஞர் இருந்த மேடையில், எல்லோரும் நல்லது செய்ய வேண்டும் என்று தான் அரசியலுக்கு வருகிறார்கள் ஆனால், நல்லது செய்ய முடியவில்லை சிஸ்டம் கெட்டு போயிருக்கு என்று பேசியிருக்கிறார். கலைஞர் முதல்வராக இருந்த பொழுது அவர்களே அவர்களுக்கு நடத்திக்கொண்டு கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பட்ட நிகழ்ச்சியில், முதல்வருக்கு நிறைய வேலை இருக்கும் அவர் நேரத்தை நாம் வீணடிக்க கூடாது என்று பேசியிருக்கிறார். கலைஞரை வைத்துக்கொண்டே இலவசங்களை பரிகாசம் செய்யும் கதை சொல்லியிருக்கிறார். கருணாநிதியின் வீட்டு வாசலில் நின்று கொண்டு நடிகர் அஜித் நிகழ்ச்சிக்கு வரச் சொல்லி கட்டாயப்படுகிறார்கள் என்று பேசியதில் ஏற்பட்ட சலசலப்பில் அஜித்திற்கு மேற்கொண்டு கட்சி தொண்டர்களால் தொந்தரவு வரக்கூடாது என்பதற்காக கருணாநிதியிடம் பேசிவிட்டு வெளியில் வந்த பொழுது ஊடங்களிடம் அவர் (அஜித்) உண்மையை சொன்னார் இல்லாட்டி நான் சப்போர்ட் பண்ண மாட்டேன்” என்று பேசியிருக்கிறார் என்றெல்லாம் பேச்சு சென்று கொண்டிருந்தது.
அப்போது ஆசிரியர் விஜி ஒரு திருக்குறளை நினைவு கூறினார்.
“அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.”
விளக்கம்: மனம் மாறுபடும் இயல்புடைய ஆட்சியாளரைச் சார்ந்து பழகுவோர், அவரிடம் கிட்ட நெருங்காமலும் விட்டு விலகாமலும் இடைநிலை நின்று பழகுக
ரஜினி இந்த குறளுக்கும் எடுத்துக்காட்டாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றார். ஒருவரை பாராட்டும் பொழுது நிச்சயமாக அவரிடம் இருக்கும் மறுக்க முடியாது நல்ல விஷயங்களை சுட்டி பாராட்டிவிட்டு பாராட்டும் பொழுதே அந்த பாராட்டுக்குள்ளேயே அவர்களிடம் இருக்கும் குறைகளை சுட்டி காட்டுவதை வழக்கமாக கொண்டு இருக்கிறார். குத்தி காட்டுகிறார் என்றும் சொல்லாம்.
இந்த விழாவில் பேசும் பொழுது, “இங்க ஏகப்பட்ட பழைய ஸ்டுடென்ட்ஸ் இருக்காங்க; நான் அங்க பாத்து சொல்றேன் தயவு செய்து” என்று அவர் பேசும் பொழுதே பலமான சிரிப்பொலியும் கரகோஷமும். நான் அங்க பாத்து சொல்றேன் என்ற பொழுது எடிட்டர் முதல்வரை காண்பிக்கவில்லை. இந்த சாமர்த்தியம் முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதாவிடம் கருணாநிதியிடமும் இருந்தது ஆனால், அமைச்சர் துரைமுருகனிடம் இல்லை.
ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் விடுதலையாகி வருகிறார், நட்பு ரீதியாக அவருக்கு ரஜினியிடம் இருந்து வாழ்த்துச்செய்தி சென்றது, ஜெயா டிவியில் செய்தியாக வருகிறது.அதே நேரத்தில், ஒரு நீதிபதியின் ஒய்வு நிகழ்வில், நாட்டில் எந்த துறை கேட்டாலும் நீதித்துறை கேட்டு போய்விடக்கூடாது என்று ரஜினி பேசியது தினமலரில் ஒரு சின்னச் செய்தியாக மட்டும் வந்தது.
கலைஞரும் இருந்த மேடையில் எல்லோரும் நல்லது செய்ய அரசியலுக்கு வந்தாலும் நல்லது செய்ய முடிவதில்லை என்று பேசிய ரஜினிகாந்த் இப்போது கலைஞர் எனும் தாய் நூல் வெளியீட்டு விழாவில், கலைஞருடன் படம் பார்த்த பொழுது, நல்ல செய்ய தான் அரசியல் வரோம் ஆனால், என்று பெரு மூச்சு விட்டார் அதில் ஆயரம் அர்த்தம் இருப்பதாக சொன்னார்.
ரஜினி பேசும் இப்படியான உண்மைகளை சாதுரியமான விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு கடக்கும் பொழுது எந்த நெருப்பும் எரிவதில்லை, அதை எதிர்க்கும் பொழுதே தான் எல்லாம் பற்றிக்கொள்கிறது, சமீபத்தில், ரஜினி பேசியதற்கு ரோஜா எதிர் கருத்து தெரிவித்தது ஆந்திர அரசியல் ஏற்பட்ட மாற்றத்திற்கு ஒரு காரணமாக அமைந்து போனது.
ரஜினியை எதிர்க்கும் பொழுது எப்போது மக்கள் கூட்டம் இயல்பாக ரஜினியின் பக்கம் சாய்ந்துவிடுகிறது அது என்ன மாயம் என்று வியக்க தேவையில்லை. உண்மைகளை எதிர்க்க முடியுமே தவிர தவிர்க்க மறுக்க முடியாது ஜெயிக்க முடியாது, இது தெரிந்து கலைஞரும் ஜெயலலிதாவும் ரஜினியின் கருத்துக்களை எதிர்க்காமல் அமைதியாக கடந்து போனார்கள். பாதுகாப்பற்ற உணர்வை பெற்ற துரைமுருகனோ, ரஜினி போன்ற வயதான நடிகர்களால் இளம் நடிகர்கள் வாய்ப்பு பறிக்கப்படுகிறது என்று பேசினார். அங்கு இருந்து தான் நெருப்பு பற்றியது.
வருடத்திற்கு ஆயிரம் திரைப்படங்கள் வெளியாகிறது, ஆயிரம் திரைப்படங்களிலும் ரஜினி நடிப்பதில்லை, இன்னும் லட்சம் இளைஞர்கள் கூட சினிமாவில் நடிக்கலாம் ஆனால், முதலீடு தயாரிப்பாளர்கள் தான் வாய்ப்பை யாருக்கு தர வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். ஆனால், அரசியல் அப்படி இல்லை,வாய்ப்புக்காக இளைஞர்கள் எல்லா கட்சிகளிலும் காத்துகொண்டு இருக்கின்றார்கள் தான் திமுகவில் அது அதிகம்.
இயல்பாக மக்கள் இதில் ஒருவர் பேசியதை உண்மை என்று ஒருவர் பேசியது வயிற்றெரிச்சலின் வெளிப்பாடு என்று தான் எடுத்துக்கொள்வார்கள்.
துரைமுருகன் பேசியதற்கு அவர் என் நண்பர் அவர் பேசினால் எனக்கு ஒன்று வருத்தம் இல்லை என்ற பின்னர் தான் துரைமுருகன் இது நகைச்சுவை பகைச்சுவை இல்லை என்றார், சந்தானம் சொல்லும் கோபம் வர மாதிரியான காமெடி இது தான்.
அந்த நிகழ்வில், ரஜினி அரசியலில் இளைஞர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுவதை மறைமுகமாக சுட்டியிருந்தார்.கலைஞர் நல்லது செய்ய நினைத்தார். நினைத்தார் அவ்வளவு தான் என்பதை நினைவு கூறினார். உதயநிதி விஜய் போன்று அரசியலுக்கு புது வரவுகளாக இருப்பவர்களை நேரடியாக சுட்டாமல், அரசியல் பேசும் பொழுது கவனமாக பேச வேண்டும் என்று சொன்னார்.
இத்தனையும் அத்தனை பெரிய கூட்டத்திற்கு முன் பேசிவிட்டு, பரிகாசமாக அல்லது சபை நாகரிகம் கருதி ஏதும் தவறாக பேசியிருந்தால் மன்னிச்சுக்கோங்க வேற.
இந்த கடைசியில் சொன்ன சாரி! நான் உங்களை எல்லாம் தான் சொன்னேன் என்பதை ஊர்ஜிதப்படுத்துவது தான்.
விஜி சொன்னார்,”The Man”
கதிர் அவர்கள் முதலில் கண்ட அந்த முக நூல் பதிவை மீண்டும் விஜியிடம் காட்டினார்.
நானும் என்னவென்று எட்டிப்பார்த்தேன், எல்லோரும் ஒரு குரலில் சொன்னோம், தலைவன் வேற ரகம் பார்த்து உஷாரு!
ரஜினி எதையும் பற்ற வைப்பதில்லை, அவர் உண்மை என்னும் வேள்வி தீ பொய்கள் நெருங்கினால் பொசுங்க தான் வேண்டும். ரஜினியை நீ ஏன் இத்தனை போற்றுகிறாய் பாராட்டுகிறாய் என்கிறார்கள், நிகழ்காலத்தில் நம் சமூகத்தில் கூடுமான அளவு நல்ல குணங்களோடு உயர்ந்து இடத்தில் இருக்கின்றவனை நாம் தாழ்த்துக்கூடாது, அப்படி தாழ்த்தினால், இப்படி நல்லவனா இருந்தா நீயும் இத்தனை பெரிய உயரத்தை அடையலாம் நல்லா இருக்கலாம் என்று எவரை நீங்கள் உதாரணமாக காட்டுவீர்கள். உண்மை பேசினால், உங்களை எதிர்த்து யாரும் ஜெயிக்க முடியாது என்றால், அதெல்லாம் இந்த காலத்தில் சாத்தியமில்லை என்று தான் எல்லோரும் சொல்வார்கள், அவர்கள் எல்லோருக்கும் காட்டும் உயரத்தில் ரஜினி தானே இருக்கின்றார்,அவரை போற்றாமல் என்ன செய்ய?!