கடந்த ஆகஸ்டு மாதம் எட்டாம் தேதி, வரலக்ஷ்மி நோன்பு. வரலக்ஷ்மி நோன்பு முடிந்த சில தினங்களில், தனக்குள் தானே தன்னை அறிவாளியாக நினைத்துக்கொண்டு, “தாம் பேசும் கருத்துக்களை போன்ற அறிவாளித் தனமான கருத்துக்களை தற்காலத்தில் எவர் பேசுகிறார்?” என்று மற்றவர்களை முட்டாளாக நினைத்து மட்டம் தட்டும் தொனியில் பேசும் இயக்குனர் கரு.பழனியப்பன் பேசும் ஒரு காணொளி கண்ணில் பட்டது.

வரலக்ஷ்மி நோன்பு பெண்களுக்கான பண்டிகை, அவர்கள் கொண்டாடுவது. ஆனால், அன்றும் வீட்டில் அம்மா தான் சோறு சமைக்கணும் டீ போடணும், எல்லா வேலைகளையும் அம்மா தான் செய்யணும், நியாயமாக அந்த ஒரு நாளில் இதை ஆண்கள் செய்ய வேண்டாமா?” இது போன்ற அர்த்தத்தில் அவர் பேசியிருந்தார்.

ஆகஸ்டு முடிந்து, செப்டம்பர் வந்துவிட்டது, இதற்கிடையில் பலர் அவரின் அந்த கருத்துக்கு எதிர்வினை ஆற்றிவிட்டனர். நாமும் கூட இந்த கட்டுரையை எழுத நினைத்து எழுத நேரம் கூடாமல் போனது, இது நாள் வரை இந்த கட்டுரையை எழுத நேரம் கூடாமல் போனதும் கூட ஒரு வகையில் பிரபஞ்சம் எடுத்த நல்ல முடிவு தான். இந்த நாளில் (17/09) இல் தும்மினால் தான் சரியாக இருக்கும்.

கரு.பழனியப்பன் மட்டும் இல்லை, பெண்களுக்கு விடுதலை தேடி தந்தவர்களாக தங்களைத் தானே அடையாளப்படுத்திக்கொள்ளும் கூட்டம், ஒரு நூற்றாண்டாக, ஒரு பெண் தன்னுடைய குடும்பத்தை பேணுவதை ஆங்கிலத்தில் home making என்று அடையாளப்படுத்தப்படுவதை பெண் அடிமைத்தனம் என்று பேசிக்கொண்டு திரிகிறது. அதிலும், கரு. பழனியப்பன் பேசியதெல்லாம் அவருடைய தனிப்பட்ட அகராதியின் படி அறிவாளித்தனத்தின் உச்சம். 

அதாவது, அவர் ஊரில் ஒரு திருவிழா என்றால், மலம் கழிப்பதற்கும்  கூட அவராக எந்திரிக்க மாட்டார் பக்கத்து ஊரில் இருந்து ஆள் வைத்து தூக்கி கொண்டு போய் உட்கார வைக்க சொல்வார், அவர் திருவிழா கொண்டாட வேண்டுமில்லையா ?

நாம் எழுத ஆரம்பித்த முதல் நாளில், கோபத்தையும் வாயில் வருகிறதையும் ஒதுக்கி விட்டு நேர்மறையாக எழுத வேண்டும் என்கிற முன்முடிவோடு தான் எழுத ஆரம்பித்தோம். இவர் போன்றவர்கள், ஏதேனும் ஒரு நாளில் அந்த தீர்மானத்தை உடைக்க செய்துவிடுவார்களோ என்று ஐயம் எழுகிறது.ஆத்திரங்கள் வருது மக்களே !

ஏன் அவரின் அந்த கருத்தின் மீது அத்தனை பெரிய சீற்றம் நமக்கு வருகிறது?! பல சந்தர்ப்பங்களில், அறிவிலித்தனமான கருத்துக்களை பொய்யான செய்திகளை அவர் மனம் கூசாமல் ஒரு அதிகார தொனியில் பேசுவது (authoritative tone), அது சாமானியர்களிடம் ஒரு பொய் செய்தியையோ தவறான கருத்தையோ சாமானியர்களிடம் கொண்டு சேர்த்து ஆணித்தரமாக பதித்துவிடுகிறது. இத்தகைய செயல் சமூகத்தில் விஷத்தை பரப்புவதற்கு சமமானது.

பெண்கள் வீட்டு வேலை பார்ப்பது அடிமைத்தனமா?

அவர் சொன்னது போல, பெரும்பான்மையினரின் இல்லங்களில் அம்மா தான் எல்லா நாளும் வீட்டு வேலைகளை பார்க்கிறவராக இருக்கிறார். அப்பா என்ன செய்து கொண்டு இருந்தார்? வீட்டிற்கு தேவையான பொருளை ஈட்ட உழைத்துக்கொண்டு இருந்தார். ஒரு மனிதன் தான் மட்டும் இருப்பதற்கு போதுமான ஒரு வீட்டை சொந்தமாகவோ வாடகைக்கோ அமைத்துக் கொள்ள எவ்வளவு செலவு ஆகும்!? ஒரு மனிதன் தனக்கு மட்டும் தேவையான உணவிற்காக மட்டும் வேலை செய்வது என்றால் அவன் எவ்வளவு உழைத்தால் போதும்?! ஆனால், எல்லா வீடுகளிலும் அப்பா, அம்மாவும் பிள்ளைகளும் இருப்பதற்கும் சேர்த்து ஒரு வீட்டை அமைத்துக்கொள்ள உழைக்கிறார்.அவர்களுக்கான உணவு தேவைக்கும் மருத்துவ தேவைக்கும் சேர்த்து உழைக்கிறார்.  அவரின் சம்பாத்தியத்தில் ஒரு 10 சதவீதம் போதும், அவருக்கான தேவைகளை மட்டும் தீர்த்துக்கொள்ள; அம்மாவிற்கு ஒரு நாளில் எட்டு மணி நேரம் ஒன்பது மணி நேரம் தொடர்ந்து வேலை இருப்பதில்லை.அம்மாவின் வேலை பத்து மணி நேரமாக இருந்தாலும், அதில் அவருக்கு இடைவேளைகள் கிடைக்கிறது. மிக மோசமான உடல் நிலை தவிர்த்து, சாதாரணமான உடல் சோர்வுக்கோ அல்லது தலைவலி காய்ச்சல் போன்ற மருத்துவ காரணங்களுக்கோ விடுப்பு எடுப்பதை பற்றி அப்பா பலமுறை யோசித்துவிட்டு பின் அன்றைய நாளுக்கான வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்.

என்னுடைய இந்த வாதங்கள், அம்மாவே தான் வேலை பார்க்கிறார் என்கிற கரு. பழனியப்பனின் வெற்றுக்கருத்துக்கான எதிர்வாதம் இல்லை.

இயற்கையில்  கூட்டமாக வாழும் மிருக இனங்களில் காணப்படும் இயல்பான குணம் இது, பெறுப்புகளை பிரித்துக்கொள்வது. மற்றவர் பொறுப்புகளை உணர்ந்து அதற்கான மரியாதை கொடுத்துத் தான் இந்த சமூகம் வளர்ந்துவந்தது, இவர்கள் மேற்கத்திய மூளையை வாங்கி மாட்டிக்கொண்டு இதையெல்லாம் அடிமைத்தனம் என்று லேபிள் செய்ய ஆரம்பித்தார்கள்.

ஒரு குடும்பத்தில் அப்பா மற்றவர்களுக்காக வேலைக்கு செல்கிறார், அம்மா வீட்டை கவனித்துக்கொள்கிறார், பிள்ளைகள் வீட்டின் எதிர்காலத்திற்காக படிக்கிறார்கள். இப்படி குடும்பத்தில் ஒவ்வொருவரும் எடுத்துக்கொள்ளும் பொறுப்புகளில், அவரவர் ஏற்றுக்கொண்ட பொறுப்பிற்கு ஏற்ப சாதக பாதங்கள் இருக்கவே தான் செய்யும்.அப்பாவிற்கு ஒரு நாள் விடுமுறை கிடைக்கிறது, அம்மா எல்லா நாளும் வேலை செய்கிறார் என்றால், அம்மா பார்க்கும் வேலைக்கு மற்றவர்களிடம் இருந்து அவ்வப்போது கிடைக்கும் உதவி அப்பாவிற்கு கிடைப்பதில்லை.

குடும்பத்தில் ஒவ்வொருவருக்கும் ஒரு பொறுப்பு இருக்கிறது,  இப்போதெல்லாம் பெண்களும் வெளி வேலைக்குச் செல்கிறார்கள்.வெளி வேலைக்குச் செல்கிறார்கள் மீண்டும் அவர்கள் குடும்பத்திற்காக தான் செய்கிறார்கள்.

ஆண்களும் தனியாக வெளியூர் சென்று குடும்பத்திற்காக வேலை செய்து அவர்களுடைய தேவைகளை அவர்களே தான் பார்த்துக்கொள்கிறார்கள்.

ஒரு குடும்பத்தில், ஆண் பெண் என்று இருவரும் வேலைக்கு செல்கிறவர்களாக இருக்கிறார்கள் என்றால்,சில நேரங்களில், அங்கு வயதான அம்மாவோ மாமியாரோ ஏதேனும் வகையில் வீட்டு பொறுப்பில் உதவுகிறவராக அமைகிறார், கொஞ்சம் வசதி இருப்பவர்கள் வேலைக்கு ஆள் வைத்துக்கொள்கிறார்கள்.

விதிவிலக்காக, சில இடங்களில், பெண்கள் வேலைக்கும் சென்று வீட்டு  வேலைகளையும் பார்க்கும் சூழல் இருக்கிறது. கணவரை பிரிந்து வாழும் பெண்கள் விஷயத்தில், வேலைக்கு சென்று வீட்டு வேலையும் பார்க்கும் பெண்கள், அதை தங்களின் பொறுப்புக்காக தாங்களே எடுத்துக்கொண்டு செய்கிறார்கள். இது சுயமாக சிந்தித்து அவர்களாக எடுக்கும் முடிவு(Consciously self made decision), இது அடிமைத்தனம் இல்லை, இது வலிமையின் வெளிப்பாடு. This is Strength not weakness.

இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில், அம்மா மாமியார் என்று ஒருவரின் உதவியும் இல்லாமல், ஒரு பெண்ணே எல்லா வீட்டு வேலைகளை செய்யும் சூழல் இருக்கிறதென்றால் அது கண்டிக்கப்பட வேண்டியது. என்னுடைய அனுபவத்தில்,  நான் சந்தித்த எந்த ஆண்களும் அத்தனை கொடூரமானவர்களாக இருக்கவில்லை.டாஸ்மாற்கிற்கு அடிமையான ஆண்கள் ஒருவேளை அப்படியிருக்க கூடும்.

ஆண்களையே மது சிகிரெட்டு போன்ற பழக்கங்களில் இருந்து வெளிக்கொண்டு வர சமூகம் முயற்சித்துக்கொண்டிருக்கும் பொழுது. அவன் தண்ணி அடிச்சா நானும் அடிப்பேன் ரக மனப்பாங்கை வளர்க்கும் சிந்தனைகளை கருத்துக்களை பித்தலாட்ட சிந்தனைகள் என்று தான் சொல்ல வேண்டும்.

இவர்கள் இப்போது இதற்கு ஒரு பெயர் வைத்திருக்கிறார்கள், எந்த பொறுப்புகளை எடுத்துக்கொள்ளாமல் இன்பத்தை மட்டும் எடுத்துக்கொள்வது (pleasure without commitment), மற்றவர்களால் இன்பம் வேண்டும், மற்றவர் உழைப்பின் பயன் வேண்டும், பதிலாக நான் எந்த பொறுப்பையும் எடுத்துக்கொள்ள மாட்டேன். லிவிங் இன் ரிலேஷன் எல்லாம் அந்த வகையறா தான். உடலால் முடிகிற வரை உடல் வெறுக்கிற வரை காமம் மட்டும் வேண்டும், பதிலுக்கு என்னிடம் எதுவும் கேட்க கூடாது.இப்படியொரு மனநிலையை சமூகத்தில் இவர்கள் வளர்த்துக்கொண்டு வருகிறார்கள். 

கர்ப்பபையை நீக்கி கொள்ளச் சொன்னது, பிள்ளை பெற்றுக்கொள்ளாமல், சட்ட பூர்வமான திருமணம் செய்யாமல் உறவில் மட்டும் இருப்பது என்று சமூகம் அப்போது இருந்தே அதையெல்லாம் பின்பற்றியிருந்தால்  , சிலையை கொண்டாடாதீர்கள் கும்பிடாதீர்கள் என்று சொன்னவரின் சிலைக்கு மாலை அணிவித்து கும்பிட ஒருவரும் இருந்திருக்க மாட்டார்கள்.

இயற்கை இயற்கையாகவே ஆணுக்கென்றும் பெண்ணுக்கென்றும் பிரத்தேயேக பொறுப்புகளை வழங்கியிருக்கிறது, அதிலிருந்து வழுவுவதென்பது இயற்கைக்கு முரணானது. (இதை பெண் அடிமை கருத்தாக புரிந்து கொள்ளாதீர்கள்).

ஒரு பெண், குடும்பத்தில், தனக்கான பொறுப்பை எடுத்துக்கொள்வதை அடிமைத்தனம் என்று பேசும் இந்த பித்தலாட்ட குழுக்கள், அவர்கள் ஆதரவளிக்கும் கட்சி நிறுத்திய பெண்களுக்கான ஒரு திட்டத்தைப் பற்றி பேசுவதில்லை.

கடந்த .தி.மு. ஆட்சியில்,வேலைக்குச் செல்லும்  பெண்களுக்கு இரு சக்கர வாகனம் வாங்குவதற்கு  அளிக்கப்பட்டு வந்த மானியத்தை நிறுத்திவிட்டது.இந்த திட்டம், பெண்கள் வேலைக்கு செல்வதை ஊக்கப்படுத்தியது, இரு சக்கர வாகன விற்பனையை ஊக்கப்படுத்தியது, இரு சக்கர வாகன உற்பத்தியை ஊக்கப்படுத்தியது, அரசு மானியத்தை கொண்டு இரு சக்கர வாகனம் வாங்கலாம் என்று ஒருவர் ஒரு வாகனம் வாங்கும் பொழுது, மானிபத்திற்காக அரசு செலவிடும் தொகை, வண்டி வாங்கும் பொழுது செலுத்தும் சாலை வரியை தொடர்ந்து வண்டி வாங்கிய பின் ஒவ்வொரு முறை பெட்ரோல் நிரப்பும் பொழுது செலுத்தும் வரி வரை  பல வகையில் அரசிடம் பன்மடங்காக பெருகி வந்து சேரும்.

இப்படியொரு திட்டத்தை நிறுத்திவிட்டு, ஓடுகிற நாலு பேருந்தில், இரண்டு பேருந்திற்கு வர்ணம் பூசி, பெண்களுக்கு ஓசி என்று கொச்சைப்படுத்தி,எத்தனை பயணிகள் எத்தனை தூரம் பயணம் செய்கிறார்கள் என்கிற கணக்கு வழக்கு இல்லாமல், பொத்தாம் பொதுவாக 10 ரூபாய் பயணசீட்டோ 20  ரூபாய் பயணசீட்டோ இரண்டிற்கும் இலவசம் என்று ஒரு சீட்டை கொடுத்து, அதனால்  போக்குவரத்து கழகத்திற்கு ஏற்படும் இழப்பைத் தராமல், அதையும் நஷ்டத்திற்கு கொண்டு செலுத்துவதை தான் இவர்கள் பெண் விடுதலை, women empowerment என்கிறார்கள் .

இதையெல்லாம், விட்டுவிடுவோம், ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார் என்றால் அனுபவம் வேண்டும், விஜய் அரசியலுக்கு வந்துவிட்டார் என்றால் என்ன அனுபவம் இருக்கிறது என்று கூச்சலிடம் இந்த திராவிட பித்தலாட்ட கும்பல், உதயநிதியை விட அனுபவம் மிகுந்த கனிமொழிக்கு ஒரேயொரு மாதம் முதல் அமைச்சர் பதவியையோ,அல்லது துணை முதலமைச்சர் பதவியையோ தர சொல்லி கூச்சலிடட்டுமே. எல்லாரும், முன்னாள் தி.மு.. தலைவர் மு.கருணாநிதி அவர்களின் வாரிசு தானே !

நாம் முன்னமே எழுதியிருந்த புத்தகத்திலும் கட்டுரைகளிலும்  குறிப்பிட்டு இருந்தது போல்,  இந்த பாரத சமூகத்திற்கு பெண்களை போற்றவோ கொண்டாடவோ கற்று தர வேண்டியதில்லை, அசையா சொத்துக்கள் ஆண் பிள்ளைக்கு அசையும் சொத்துக்கள் பெண் பிள்ளைக்கு என்கிற முறை தான் வரதட்சணையானது, நம் கலாச்சாரத்தில், குடும்பத்தில் ஒவ்வொருவம் அவரவர் பொறுப்புகளை பிரித்துக்கொண்டு ஒன்று கூடி உழைத்ததால் தான், அரசியல் நிர்வாகத்தில் அத்தனை குறை இருந்தாலும் நாடு இத்தனை தூரம் வளர்ந்து இருக்கிறது.

நான் என் வேலையை பார்க்கிறேன் நீ உன் வேலையை பாரு, என்று இருந்திருந்தால், சமூகம் இன்னும் திணறியிருக்கும்.குடும்ப பொறுப்புகளில் இருந்து ஒவ்வொருவரும் தங்களை விடுவித்து கொள்வது; பிள்ளைகளுக்காக நான் ஏன் வேலை செய்ய வேண்டும், வயதான பெற்றோரை என்னால் எப்படி பார்த்துக்கொள்ள முடியும் என்கிற போக்கு வளர்ந்த நாடுகளில், ஒரு சுமையை; சிக்கலை ஏற்படுத்த தொடங்கியிருக்கிறது. நல்ல நாகரீகம் கொண்ட சமூகத்தை அறிவிலித்தனமான கருத்துக்களால் இவர்கள் குட்டிச்சுவர் ஆக்கப் பார்கிறார்கள்.

women empowerment விஷயத்தில், தன் சமூகத்தின், நாகீரகத்தை புரிந்து கொண்ட தலைவனோ அரசாங்கமோ என்னவெல்லாம் செய்து இருக்கும், அசையும் சொத்துக்களை பெண்களுக்கு பிரித்து தரும் முறையாக இருந்து பின் சற்று வழுவிய வரதட்சணை முறையை பதிவு செய்ய கட்டாயப்படுத்தியிருக்கும், சில வீடுகளில் பெண்களுக்கு 50 பவுன் நகையும் கொடுத்து, மீதம் இருக்கும் 25 பவுன் மதிப்பிலான அசையா சொத்திலும் பங்கு தர வேண்டிய நிலைமை இருக்கிறது. வரதட்சணை எவ்வளவு கொடுக்கப்படுகிறது என்று பதிவு செய்யப்படாத பொழுது, வரதட்சணை வாங்கப்படாத இடங்களில் பொய் குற்றச்சாட்டுக்களை எழுப்ப  இடமளிக்கிறது. ஆயிரம் ரூபாய் இனமாக அளிப்பதற்கு பதில், குடும்பத்தை கவனிக்கும் பெண்களுக்கு அவர்களின் கணவர் ஊதியத்தில், இருந்து ஒரு பகுதியை அவர்களுக்கென்று தனியாக பி.எப். சுகாதார காப்பீடு போன்றவைகளுக்காக நேரடியாக அவர்கள் கணக்கில் செலுத்த ஆவண செய்திருக்க முடியும். அப்பாவிற்காக  குடும்பத்திற்காக வேலை செய்த அம்மா, அப்பா இறந்ததும், அப்பாவிற்கு கிடைக்க வேண்டிய ஓய்வூதிய தொகையில் பாதியை பெற, மறுமணம் செய்யவில்லை, வேலைபார்க்கவில்லை என்று வருடாவருடம் கிராம அதிகாரி போன்றவர்களிடம் கையெழுத்து பெற வேண்டும் என்கிற நிலையை மாற்றியிருக்க முடியும்.

பெண்கள் வீட்டு வேலை பார்ப்பதற்காக பரிதாபப்படுகிறவர்கள் என்ன செய்திருக்கலாம், அது ஏன் கணவரின் ஓய்வூதியத்தில் பாதி மட்டும் மனைவிக்கு என்கிற கேள்வியை ஒரு முறையேனும் எழுப்பியிருக்கலாம். 64 வயது, 70 வயது பெண்கள் கணவரின் ஓய்வூதியம் பெற மறுமணம் செய்யவில்லை என்கிற சான்று தர தேவை இல்லை என்கிற நிலையை கொண்டு வந்திருக்கலாம். லிப்ஸ்டிக் பஸ் இன்னும் நாலு சேர்த்து விட்டிருக்கலாம், எங்கள் வீட்டிற்கு வேலை செய்ய வரும் அக்காவிற்கு இந்த லிப்ஸ்டிக்  போட்ட பேருந்திற்காக காத்திருக்க நேரம் இருப்பதில்லை.

பெண்களே! உங்கள் லிவர்(liver) கெட்டு போகும் என்று தெரிந்தே நீங்களும் குடியுங்கள். உங்கள் மீது வயோதிகத்தில் அன்பு செலுத்த ஒரு உயிர் தேவையில்லை அதனால், பிள்ளை பெற்றுக்கொள்ளாதீர்கள், வீட்டு பொறுப்புகளை ஏன் எடுத்துக்கொள்கிறீர்கள் பிடிச்சுருக்கா வாங்க பழகலாம் 1 மணி நேரத்தில் நீங்கள் உங்கள் வீட்டிற்கு செல்லுங்கள் நான் அடுத்த வீட்டிற்கு செல்லுகிறேன் என்று பேசும் கூட்டத்திற்கு மேடையேறும் தைரியத்தை கொடுக்காதீர்கள்.சந்தர்ப்பம் அமைந்தால் இவர்களை வாயிலையே குத்துங்கள் என்று சொல்லலாம், பெண்கள் வன்முறையை கையில் எடுத்தால் உலகம் தாங்காது என்கிற காரணத்தினால், நாம் அதை பரிந்துரைக்காமல் விடுகிறோம்.

பித்தலாட்டங்கள் ஒழிந்து பித்தர்களுக்கு அறிவு வளரட்டும்!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *