வாசகர்களுக்கு அன்பும் வணக்கமும்.
உலக நாடுகளையெல்லாம் ஆட்டிவைத்த கொரோனா, நம் எல்லோரையும் கொஞ்ச காலம் வீட்டுக்குள் பூட்டியும் வைத்துவிட்டது. அடைப்பட்டு கிடக்கும் பொழுதுகளில் நாம் மகிழ்ச்சியாகவே இருந்தாலும் ஒரு சலிப்பு வந்துவிடும்.காரணம், உங்கள் மனமும் அந்த எல்லைக்குள் அடைபட்டு கிடக்கும்.
அதுவே நீங்கள் ஒரு வெட்டவெளியில் சிறிது நேரம் இருந்து பாருங்கள், உங்கள் மனம் விரிவடைவதை உணர்வீர்கள். அப்படி ஒரு வெட்டவெளியில் கடைசியாக எப்போது இருந்தீர்கள் என்று உங்களால் நினைவு கூற முடிகிறதா?அதற்கான வாய்ப்புகள் இன்றைய சூழலில் கிடைப்பதே இல்லை.
காரணம், கோவில்களுக்கு செல்லும் வழக்கம் குறைந்து விட்டது. அதுமட்டுமில்லாமல், இப்பொழுதெல்லாம், 4 x 4க்கு அறையில் ஒரு சிலையை வைத்துவிட்டு கோவில் என்று விடுகிறார்கள். அப்படியான கோவில்கள் தான் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும், அதனால், நாமும் அநேகமான நேரங்களில் அங்கு தான் செல்கிறோம்.
நம் ஊர் கோவில்களில் வெளி பிரகாரம் என்று ஒன்று இருக்கும்,அந்த இடத்தில் என்ன நடக்கிறது என்பதை நாம் அதிகம் உணருவதில்லை.ஒரு குளத்தில் மூழ்கினால் நாம் நீரால் நனைக்கப்படுவது போல, அந்த இடத்தில் நாம் space ஆல் நனைக்கப்படுவோம். வெளியில் மூழ்குவோம்.
அடிக்கடி இது நிகழும் பொழுது மனமும் சிந்தனையும் விரிவடையும். முன்பெல்லாம் இது நிகழ்வதற்கு கோவில்களுக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை.
சின்னதா வீடு கட்டி,அந்த வீட்டிற்கு வெளியில் தான் தூங்கவே செய்வார்கள். ஊருக்கு போய் வீட்டுக்குள்ள தாத்தா வ தேடினா! அவர் வெளியில் படுத்து இருப்பார்.
காலம் கொஞ்சம் மாற, வீடுகள் பெரிதானது. ஆனால், அப்போதும் கூட அதற்கான வாய்ப்பு இருந்தது.
நாங்கள் வாடகைக்கு குடியிருந்த வீடு; ஒரு ஏழெட்டு வீடுகள் வரிசையாக இருக்கும் ஒரு compound இல் இருந்த வீடு. 90கள் வரை அந்த வகை compound வீடு தான் அப்பார்ட்மெண்ட் (அதாவது gated community). அந்த ஏழெட்டு வீட்டிற்கும் சேர்த்தாற் போல் நீளமாய் பெரியதாய் ஒரே ஒரு நிலா முற்றம் (மொட்டை மாடி).
அந்த வீட்டில் குடியிருந்த காலங்களில் அநேகமான நேரத்தை அந்த முற்றத்தில் தான் செலவிட்டு இருக்கின்றேன்.
ஒரு நாள் இரவு, வானத்தில் வண்ணமாய் மின்னிக்கொண்டு ஒரு புள்ளி நகர்ந்து கொண்டு இருந்தது.அது ஒரு விமானத்தில் இருந்த வந்த வெளிச்சம். அன்று அங்கு இருந்தவர்களின் பேச்சை தன் பக்கம் இழுத்துக்கொண்டது அந்த விமானம்.அப்போது, பக்கத்து வீட்டு பெண்மணி, என் அம்மாவிடம் இதை சொன்னார், “நீங்க கவலை படாதீங்க சுகன்யாம்மா! உங்க மகன் உங்களை flight ல கூட்டிட்டு போவான்!” அந்த தீர்க்கதரிசி அதே வார்த்தைகளை என் அப்பாவை பார்த்தும் சொல்லியிருக்கலாம்.
கொஞ்சம் காலம் கழித்து, அந்த பெண்மணி சொன்னது போலவே நடக்கவும் செய்தது. அம்மாவுடன் விமானத்தில் பயணம் செய்த பொழுது எனக்கும் விமானப் பயணம் ரொம்ப புது அனுபவம் தான். அதற்கு முன் ஓரிரு முறை மட்டுமே விமானத்தில் பயணித்து இருந்தேன்.விமானப் பயணம் சாதாரணமாகி விட்ட பின்னரும் கூட கண்டிப்பா ஜன்னல் ஓரமாகத் தான் உட்கார வேண்டும் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டதே இல்லை.
ஆனால், என் மனைவிக்கோ எப்போதும் ஜன்னல் சீட் தான் வேண்டும்.என் மனைவியுடனான முதல் பயணத்தில் தான் ஆயிரம் அடி உயரத்தில் இருந்து பார்க்கும் பொழுது இந்தியா எத்தனை அழகாக இருக்கிறதென்று பார்த்தேன்.
விமானத்தில் ஜன்னலுக்கு வெளியில் பார்க்க (கவனிக்க) ஆரம்பித்ததே அந்த பயணத்திற்கு பின்னர் தான்.என் மனைவியுடனான அந்த பயணத்தில் நடுவானில் பறந்து கொண்டு இருந்தபொழுது என் மனைவி சொன்னார் , “எனக்கு போர் அடிக்குது உன் புள்ள என்ன தூங்கவும் விடல வெளிய வேடிக்கை பார்க்கிறதுக்கும் ஒன்றும் இல்லை”.
அந்த நொடியில் நானும் அந்த ஜன்னலுக்கு வெளியில் பார்த்தேன், ஒன்றும் இல்லை தான்; ஆனால், அத்தனை பிரம்மாண்டமாய் ஒரு வானம். ஒரே வானம்! ஒரே வானம்!
நான் வானத்தை ரசிக்க தொடங்கிவிட்டேன். அந்த பயணம் முடிவதற்குள் வானம் எனக்கு தந்த கவிதைகளையெல்லாம் எழுதிவைத்தேன். அந்த பயணம் இனிதே முடிந்தது.
மீண்டும் விமானத்தில் ஒரு பயணம். இந்தமுறை அம்மாவும் மனைவியும் வீட்டில் இருக்கின்றார்கள். அவர்களை பார்ப்பதற்காக தான் இந்த பயணம்.நான் கேட்கவில்லை. ஆனாலும், ஜன்னல் சீட்டே கிடைத்தது.பயணிகளும் குறைவாகவே இருந்தார்கள். என் அருகில் யாரும் அமர்ந்திருக்கவில்லை.
நட்ட நடு வானில்! இல்லை! இல்லை! வானத்தில் எங்கு போய் நட்ட நடு புள்ளியினை தேடுவது!
வானில் பறந்து கொண்டிருந்த அந்த விமானத்தின் உள் இருந்த நான், ஜன்னல் வழியே என் பார்வையை செலுத்தினேன். அதே அந்த ஜன்னல் வழியே அந்த பிரமாண்டமான வானத்திற்குள் மூழ்கிய என் மனம்,time travel செய்து என்னை பன்னிரெண்டு வயதுக்கு அழைத்துபோனது.
விடுமுறைக்கு திருமயம் சென்று இருந்தேன். அப்பொழுது , ப்ரியா அக்கா, எங்களை அங்கு இருந்த ஒரு சிவன் கோவிலுக்கு அழைத்து சென்றார். கூட்டமில்லாத பழைய கோவில்களுக்குள் சென்று வருவதே ஒரு மன மாற்றத்தை நம்முள் ஏற்படுத்தும்.நாங்கள் சென்ற அந்த பொழுதில், அந்த கோவிலில் எங்களைத் தவிர யாருமே இல்லை. மலையை குடைந்து கட்டப்பட்ட கோவில் அது. சிவன் கோவிலின் சுற்று சுவர்களில் சில சிலைகள் இருக்கும்;அந்த கோவிலின் சந்நிதியே ஒரு மலையை குடைந்து கட்டப்பட்டது, அங்கே ஒரு பக்க சுவர் என்பது குடைந்த மலையின் வெளிப்புறம், அந்த மலை குடையப் பட்ட உயரத்தின் மொத்தத்திற்கும் சந்நிதியின் வெளிப்புற சுவரில் இருந்த அந்த சிலையை வியப்போடு நான் பார்த்துக்கொண்டு இருக்க, “நாங்க சின்ன புள்ளையா இருக்கும் பொழுது உங்க அப்பா இந்த சாமிகிட்ட நின்னு ஏதோ பாட்டெல்லாம் பாடி பூஜையெல்லாம் செய்வார்” என்று சொல்லிக்கொண்டு இருந்தார் ப்ரியா அக்கா.காதில் இந்த வார்த்தைகள் விழுந்து கொண்டு இருந்தாலும் சிலையின் பிரம்மாண்டத்தில் மனம் லயித்து இருந்தது.
சரி, விமானத்தில் பறந்து கொண்டிருக்கும் பொழுது இந்த நினைவு ஏன் வந்தது?
ஜன்னலுக்கு வெளியில் இருந்த வானம் தந்த எண்ணங்கள் தான் அதற்கு காரணம்.
இந்த வானம்,
எங்கு ஆரம்பிக்கின்றது!
எங்கு முடிகிறது!
எத்தனை தூரம் பறந்து வந்தாலும் இன்னும் தூரமாக தானே இருக்கின்றது! என்று
இத்தனை எண்ணங்களை தந்தது இந்த வானம்.
அதற்கும் திருமயம் சிவன் கோவிலுக்கும் என்ன சம்மந்தம்? அன்று அந்த பன்னிரண்டு வயதில் நான் பார்த்து வியந்த அந்த சிலைக்கு பெயர்-லிங்கோத்பவர்.
எல்லா சிவன் கோவில்களிலின் சுற்று சுவரிலும் பெரிதாக கவனத்தை ஈர்க்காத வண்ணம் இந்த சிலை இருக்கவே செய்கிறது. வேலை இல்லாத வேலையாக மலையை குடைந்து பன்னிரெண்டு வயது சிறுவனை விட பெரிதாய் ஒரு சிலை; அவன் வியந்து பார்க்கும் வண்ணம் ஏன் வச்சாங்க? என்கிற கேள்விக்கு தீர்மானமான எந்த பதிலும் இல்லை.
அந்த சிலையை வைத்து ஒரு கதை சொல்வார்கள், ‘சிவனுடைய அடியையும்(foot) முடியையும்(head) தேடி பிரம்மாவும் விஷ்ணுவும் போனார்கள். பிரம்மா, ஒரு அன்னப் பறவையாக மாறி உயர உயர பறந்தும் சிவனின் முடியை காண முடியவில்லை.விஷ்ணு ஒரு பன்றியாக உருக்கொண்டு மண்ணைத் தோண்டி எத்தனை தூரம் கீழே சென்றாலும் சிவனின் அடியை காண முடியவில்லை. அதில் பிரம்மா மட்டும் முடியை கண்டுவிட்டதாக பொய் சொல்வார்’.இது தான் அந்த கதை.
ஒரு சிலை! அதற்கு ஒரு கதை! இந்த கதை விமானத்தில் போகும் பொழுது, வானத்தின் பிரம்மாண்டம் கண்டு ஏன் நினைவிற்கு வர வேண்டும்!அந்த கதையில் பிரம்மா பறந்தது போல தான் நானும் அத்தனை உயரம் பறந்து வந்து விட்டேன் இன்னும் வானம் தூரமாக தான் இருக்கின்றது. இந்த வானத்தின் முடி எங்கே இருக்கின்றது! அடி எங்கே இருக்கின்றது! where it starts where it ends என்கிற வியப்பு, இதே இந்த நிலையை நான் ஏற்கனவே கடந்து இருக்கிறேனே என்று நினைக்கும் பொழுதில் இந்த கதை நினைவிற்கு வருகிறது.
இந்த கதையும் அந்த வியப்பும்! ஒத்துபோனதை நினைத்தால்! really mind blowing.
விஞ்ஞானம், இன்றும் பிரம்மாவையும் விஷ்ணுவையும் போல், இந்த பேரண்டத்தின் அடியையும் முடியையும் தேடிக்கொண்டு தான் இருக்கின்றது.
இந்த பூமியின், உட்புற பகுதி(inner most crust ) ஒரு metal ball போன்று இருக்கலாம் என்று நம்பிக்கொண்டு மட்டும் தான் இருக்கின்றது விஞ்ஞானம்.முட்டை வடிவிலான இந்த அண்டம் விரிவடைந்து கொண்டே இருக்கின்றது விஞ்ஞானம் ஏற்றுக்கொள்ளவும் செய்கிறது.இந்த லிங்கோத்பவர் சிலையின் மையத்திலும் நீங்கள் ஒரு முட்டை வடிவை காண முடியும், அதன் அடி முடியை தேடுவதாக தான் கதை.
ஆற்றலின் வெவ்வேறு படிநிலைகள் தான் இந்த பிரம்மா விஷ்ணு. creation க்கு (படைத்தல் அல்லது ஆக்கத்திற்கு ) காரணமாக இருக்கின்ற ஆற்றல் நிலை தான் பிரம்மா என்கிறார்கள், அல்லது பிரம்மம் என்கிறார்கள். இந்த creation நாம் அறிந்து வைத்து இருக்கும் நான்கு திசைகளிலும் நடக்கிறது, நிலைத்தலுக்கு (existence) காரணமான ஆற்றலை தான் விஷ்ணு என்கிறார்கள். இந்த இரண்டு ஆற்றலும் முட்டை வடிவிலான இந்த அண்டத்தின் துருவங்களில்(not at the extreme ends) இருப்பதில்லை.
விரிவடைந்து கொண்டே இருக்கும் இந்த அண்டத்தில் இந்த இரண்டு ஆற்றல்களும் அண்டத்தின் extreme end களை அடையவும் முடியாது.
உதாரணமாக நீங்கள் ஒரு முட்டைவடிவ பாயின் நடுவில் இருந்து ஒரு முனையை நோக்கி நடக்க ஆரம்பிப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள், அந்த பாய் விரிவடைந்து கொண்டே இருக்கின்றது என்று கற்பனை செய்துகொள்ளுங்கள். நீங்கள் எத்தனை வேகமாக நடந்தாலும் பாயின் முனையை நீங்கள் எட்டவே முடியாது.
அந்த பாய் தான் இந்த அண்டம் (universe -one form of god ), தோற்றத்திற்கும் நிலைத்தலுக்கும் காரணமான ஆற்றல் படி நிலைகளான இந்த பிரம்மாவும் விஷ்ணுவும், இந்த அண்டமான சிவன் விரிவடைவதை விட பல மடங்கு வேகமாக நகர்ந்தால் மட்டுமே அடியை முடியையும் காண முடியும், அத்தனை வேகமாக அது நகர்ந்தால் அது அண்டத்தை விட்டு வெளியில் சென்று விடும், அது சாத்தியமே இல்லை காரணம் இந்த இரண்டு ஆற்றலும், அண்டத்தின் ஒரு பகுதியே.
சமீபத்தில்,black holes எதிலிருந்து உருவாகிறது என்கிற ஆய்வில், அது இந்த அண்டத்தில் 75 சதவீதம் இருக்கும் dark energy இல் இருந்து உருவாகலாம் என்று அனுமானித்து இருக்கின்றார்கள். இதற்கு ஏன் dark energy என்று பெயர் என்று கேட்டால் அது என்ன என்றே விஞ்ஞானத்திற்கும் தெரியாது அதனால் அது dark energy.
நம்முடைய புரிதலுக்காகவே கடவுளை சிலைகளாக உருவகப்படுத்திவைத்து இருக்கின்றோம். முடிவிலியாய் இருப்பது எதுவோ அதுவே கடவுள், எங்கும் விஸ்தரித்து இருப்பது எதுவோ அதுவே கடவுள், சிற்றறிவிற்கு எட்டாத பேரறிவே கடவுள்.(infinity is the definition of undefined, so is god).
பிரம்மா சொன்ன பொய் போன்றது தான் அறிவியல், அது உண்மையின் படிநிலைகளை தேடி, அடுத்த நிலையை அடையும் வரை பொய்யை உண்மை என்று நம்பிக்கொண்டு இருக்கும் சிற்றறிவு .ultimate truth is always secret, அது இந்த அண்டத்தோடு தன்னை இணைத்துக்குக்கொள்ளும் மனங்களுக்கு மட்டுமே வெளிப்படுகிறது.மறைபொருளானது எல்லோருக்கும் தன்னை வெளிப்படுத்திக்கொள்வதில்லை. இந்த கட்டுரையும் கூட எல்லோரையும் சென்றடைந்துவிடாது. This article will choose the destined readers.
வானம் கூட மறைபொருள் தான் ஆனால், வானம் ஒரு material இல்லை. It is space, and ultimately space is god. space is nothing but nothing, so GOD is NOTHING! GOD IS NO THING. தோன்றாதது எதுவோ அதுவே அழியாதது அழியாதது எதுவோ அதுவே கடவுள்.
இந்த கட்டுரை படித்த கையோடு இந்த எண்ணங்களை உங்கள் மனதில் சுமந்துக்கொண்டு ஒரு சிவன் கோவிலுக்கு செல்லுங்கள் அங்கே சிவன் சந்நிதியின் வெளிச்சுவரில் இருக்கும் இந்த லிங்கோத்பவரை காணுங்கள், நிச்சயமாய் சில நொடி உங்கள் மனம் இந்த பேரண்டத்தில் கரைந்து தொலைந்து போகும்.