ஜனநாயகயகத்தின் அச்சுறுத்தல்!
எது ஜனநாயகயகத்தின் அச்சுறுத்தல்?
லஞ்சம்;ஊழல்; அரசியல்வாதிகள்; என்று நினைப்பீர்கள் என்றால் நிச்யமாக இல்லை.
சமூகத்தில் எப்போதும் எல்லோர் மனதிலும் நிலவும் பாதுகாப்பற்ற உணர்வு தான் ஜனாயகத்திற்கு பெரும் அச்சுறுத்தல்.
இந்த பாதுகாப்பற்ற உணர்வு என்ன செய்யும்?
நாம் எதைப்பற்றிக்கொண்டிருக்கின்றோமோ அதை விடாமல் பற்றிகொள்ளச் சொல்லும். கூடுமான வரையில் அது மற்றவர்கள் கைகளுக்கு செல்லாமல் பார்த்துக்கொள்ளச் சொல்லும்.
ஒரு நாள் நண்பர்களுடன் ரயில்வே ஜங்ஷன் பேருந்து நிறுத்தத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தேன், பேருந்து நிறுத்தத்தின் பின் பக்கம் சிலர் தங்கள் உடமைகளை வைத்துக்கொண்டு தூங்க தயாரானார்கள். தீடீரென்று அவர்கள் பக்கமாக இருந்து கூச்சல் சத்தம். குடும்பமாக சேர்ந்து ஒருவரை தாக்கி கொண்டிருந்தார்கள். கையில் ஒரு கல்லை வைத்துக்கொண்டு முகத்தில் அறைய போனார்கள்.
அந்த குடும்பம் தினமும் படுத்துறங்கும் இடம் அது என்று புரிந்துகொண்டோம். அடி வாங்கிக்கொண்டிருந்தவரும் கூட வீடற்ற உறவற்ற ஒருவராகவே தான் இருந்தார். அந்த இடம் இல்லாவிடில் வேறு இடங்களில் அவர்கள் தூங்கியிருக்க முடியும், வேறு இடங்களில் அவர்கள் என்ன சவால்களை சந்தித்தார்களோ அல்லது என்ன சவால்கள் இருக்கும் என்று நினைத்தார்களோ. அவர்களை பொறுத்தவரையில் அது தான் அவர்களுக்கு பாதுகாப்பான இடம் அது யாரிடமும் பறிபோய்விடக்கூடாது.
இங்கு எல்லாவற்றிக்கும் ஒரு போட்டி இருக்கின்றது. அரசியல் என்று இல்லை இயற்கையாகவே ஒரு போட்டி இருக்கின்றது. அந்த போட்டியை நம் சமூகம் எப்போதும் பாதுகாப்பற்ற உணர்வோடு தான் அணுகுகிறது. இந்த இடம் இல்லை என்றால் என்ன? நாம் வேறு இடத்தில் தூங்கலாம் என்று அந்த குடும்பம் நினைக்கவில்லை. இன்று இந்த வேலையை விட்டுவிட்டால் என்ன என்று நாம் யாரும் நினைப்பதில்லை. (வேலையை விட்டுவிட்டு நீ சோறு போடுவீயா என்று திட்டாதீர்கள்).
நீங்கள் என்னை திட்டினீர்களோ இல்லையோ இந்த இடத்தில், என் நினைவுக்கு ஒரு பைபிள் வசனத்தை மட்டும் எழுதிவிட்டு மேலும் தொடர்கிறேன்.
“ஆகாயத்துப் பறவைகளைப் பாருங்கள்; அவை விதைப்பதோ, அறுவடை செய்வதோ, களஞ்சியங்களில் சேர்த்து வைப்பதோ இல்லை.”
இயற்கையில் ஒரு போட்டி இருந்தாலும் அந்த போட்டியில் வெற்றி தோல்விகள் ஒன்றும் இல்லை.அங்கே இயற்கையே எதையும் தெரிவு செய்கிறது. ஒரு பறவையானது தன் உணவிற்காக விதைக்கிறதோ அறுக்கிறதோ சமைக்கிறதோ இல்லை. அப்படியிருக்க நமக்குள் ஏன் இந்த பாதுகாப்பற்ற உணர்வு.
நம்முடைய எல்லாத் தேவைகளும் அரசியல் என்னும் சிஸ்டம்க்குள் சிக்கியிருக்கிறது. அந்த அரசியலை மேல் நிலையில் இருந்து நடத்துபவர்கள்.சமூகத்திற்குள் இந்த பாதுகாப்பற்ற உணர்வை திணித்துவிட்டார்கள். காரணம் அரசியல் தலைவர்களிடம் அதே அந்த பாதுகாப்பற்ற உணர்வு இருக்கின்றது.
நீங்கள் ஒரு விமானத்தில் பயணம் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள், அங்கே நீங்கள் ஒரு விமானியை நம்புகிறீர்கள், அந்த விமானி அவர் மீதும் அந்த விமானத்தின் மீதும் சக விமானி மீதும் நம்பிக்கை கொண்டிருந்தால் மட்டுமே தான் எல்லா சவால்களையும் கடந்து நீங்கள் பறக்க முடியும். அதே விமானி சிறு சிறு பிரச்சனைகளுக்காக அவ நம்பிக்கை கொள்கிறவராக இருந்தால். அந்த அவநம்பிக்கை எல்லோரையும் பற்றிக்கொள்ளும்.
தோல்வியை நெருங்கிக்கொண்டிருக்கும் ஒரு அணியின் தலைவரிடம் வெற்றி பெற்றுவிடுவோம் என்கிற நம்பிக்கை இருந்தால் தான் வெற்றி சாத்தியம் ஆகும்.வெற்றி பெறக் கூடிய நிலையில் இருந்தாலும் கூட வென்று விடுவோமா என்கிற சந்தேகம் கொள்கிற அணி வெற்றி பெரும் நிலையில் இருந்து கூட தோல்வியை தழுவும்.
சமூகத்தில் இருக்கின்ற பாதுகாப்பற்ற உணர்வு அப்படியானது, எப்போதும் மேல் இருந்து கீழாகவே பரவுகிறது.தலைவர்களானவர்கள் அல்லது மேல் மட்டத்தில் இருப்பவர்கள் எதைப்பற்றிக்கொண்டிருக்கின்றார்களோ விட்டா என்ன ஆகும் என்கிற அச்சத்தோடே தான் இருக்கின்றார்கள்.
இந்த அச்சம் தான் ஜாதியும் ஜாதிய கொடுமைகளுமாக உருமாறியது. எப்போதும் போல் மனித மனம், தன்னுடைய இந்த தவறை உணர்ந்து கொள்ளாமல் பழி சுமத்த தேடிய ஆடு தான் சனா தனம், இந்து மதம்,வேதம் இவைகள் எல்லாம்.
இயற்கையாக என்னவெல்லாம் இருக்கின்றதோ அதையெல்லாம் அப்படியே உணர்ந்து ஏற்றுகொள்ள தான் நம் மரபு சொல்கிறது. அதாவது சனாதனம் சொல்கிறது. கீதையில், ஒருவர் வளரும் சூழலுக்கு ஏற்ப வெவ்வேறு நம்பிக்கைகளை வளர்த்துக்கொள்கிறார்கள் என்கிறது. கடவுளுக்கு எந்த உருவமும் இல்லை என்று சொல்லியிருக்கின்றது . எல்லோரையும் சமமாக நடக்கின்றவனே தான் இறைவனுக்கு பிடித்தவனாக இருக்கிறான் என்கிறது. ஆனால், ஒருவரின் குணங்களுக்கும் செயல்களுக்கும் ஏற்ப அவர்களை வகைப்படுத்தலாம் என்கிறது. குணம் இயற்கையானது உணவு பழக்கங்களை பொறுத்தது என்றெல்லாம் சொல்கிறது.
தொழில் என்பது தொழில் மட்டும் இல்லை ஒருவரின் செயல்களை பொறுத்தே தான் ஒருவர் மற்றொருவரில் இருந்து வேறுபடுகிறார் என்கிறது. வள்ளுவரும் அதையே தான் சொல்லிவைத்து இருக்கின்றது. “செய்தொழில் வேற்றுமை யான்”. actions makes differences.
வேறுபாடு என்பது எங்கே பாகுபாடாக மாற்றம் கொள்கிறது என்றால்? பாதுகாப்பற்ற உணர்வு இருக்கின்ற இடத்தில் இருந்து வேறுபாடு பாகுபாடாக மாறுகிறது.
விளக்கமாக சொல்ல வேண்டுமென்றால்? ஒரு மருத்துவர் இருந்தார், மிகவும் பிரயத்தனப்பட்டு படித்து முன்னேறி மருத்துவராக ஆகி, ஒரு மருத்துவமனையும் கட்டிவிடுகிறார். அவர் இப்போது என்ன செய்கிறார், தன் பிள்ளைகளை எப்படியும் மருத்துவர்களாக்கி விட வேண்டும் என்று பிரயத்தனப்படுகிறார். எல்லோருடைய வீடுகளிலும் இது நடக்கின்றது.எங்கள் நிறுவனத்தில் ஒரு பொறியாளர், மகனை பொறியில் படிக்க வைத்தார். முடித்தவுடன் எங்கள் நிறுவனத்திலேயே வேலையும் வாங்கி கொடுத்து விட்டார்.
ஒரு பெரும் முயற்சிக்கு பின் ஒரு உயர் நிலையை அடையும் மனிதன் அந்த பலன், அந்த நிலை தன்சந்ததியினருக்கு சுலபமாக கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறான். அதை விட்டுவிடக் கூடாது என்கிற முனைப்பும் பரிதவிப்பும் பாதுகாப்பற்ற உணர்வும் அவனுள் இருக்கின்றது.
இது தான் வேறுபாடு பாகுபாடாக மாறும் இடம். அந்த குடும்பம் எப்படி அவர்கள் தினமும் தூங்கும் அந்த இடத்தை அவர்களைப் போன்றே வீடற்ற ஒருவருடன் பகிர்ந்து கொள்ள மறுத்தார்களோ அதையே தான் சமூகத்தில் ஒவ்வொருவரும் செய்து கொண்டிருக்கின்றோம். RO water can வாட்டர் என்றில்லாமல், ஒரு லாரி தண்ணீர் தான் உங்கள் தெருவுக்கு என்றால், நாம் நமக்கு எவ்வளவு தேவை என்கிற தீர்மானம் இல்லாமல், தேவைக்கும் அதிகமாக இரண்டு குடங்களில் தண்ணீர் பிடித்து வைத்துக்கொள்வோம். இது தான் பாதுகாப்பற்ற உணர்வு.
ஒருவர் ஒரு சிலை வடிகின்றவர் என்று வைத்துக்கொள்ளுங்கள், அவர் தன் பிள்ளையும் இந்த கலையை கற்றுக்கொண்டால், பிழைத்துக்கொள்வான் என்று நினைப்பார். இதைக் கற்றுக்கொண்டால், போர் தொழில் போன்ற ஆபத்து நிறைந்த வேலைகளுக்கோ அல்லது சிரமமான வேலைகளுக்கோ அல்லது ஊதியம் குறைவாக வரும் வேலைகளுக்கோ செல்ல வேண்டியதில்லை என்று நினைப்பார். (இது உதாரணமாக சொல்லப்பட்டது தான்).
சமூகத்தின் பாதுகாப்பற்ற உணர்வு தான் தாங்கள் கற்றுக்கொண்ட தொழிலையோ கலையையோ சந்ததிகளுக்கு கடத்த செய்திருக்கும்.இப்போதும் கூட நாம் எது படித்தால் பிள்ளைகள் சிரமப்படப் மாட்டார்கள் என்று சிந்திக்கிறோம் தானே.
மருத்துவரின் பிள்ளைகள் கூடுமான வரையில் மருத்துவர்களாகவே தான் உருவாக்கப்படுகிறார்கள்.சினிமாகாரர்கள் பிள்ளைகள் கூடுமானவரையில் சினிமாவில் தான் இருக்கின்றார்கள்.அரசியலைப் பற்றி கேட்கவேண்டியதே இல்லை.
சமூகத்தின் தொழில் நிலை வகைப்பாட்டினை இன்றைய காலத்திற்கு ஏற்றாற் போல் வகைப்படுத்தினால், அரசியல்வாதிகள், அதிகாரிகள், அதிகாரிகள் அல்லாத white collar job என்கிற பணிகளை செய்கிறவர்கள், சொந்த தொழில் செய்கிறவர்கள், மற்ற பணியாளர்கள் என்று வகைப்படுத்தலாம்.
இங்கே இந்த வகைப்படுத்தலில் மேலே இருப்பது யார்? அரசியல்வாதிகள். அவர்களுக்குள் இருக்கும் பாதுகாப்பற்ற உணர்வு என்ன செய்யும். இந்த நிலையை தனக்கு பின் தன் கிடைக்காமல் போய் விடக்கூடாது என்று நினைக்கச் செய்யும்.
இயற்கையான ஒரு வகைப்பாடு பிறப்பு அடிப்படையிலான ஒரு பாகுபாடாக இங்கே தான் மாறுகிறது. நீங்கள் அரசியல்வாதிகளின் வீடுகளில் பிறந்து விட்டால் அரசியல்வாதி.சினிமாகாரர் வீட்டில் பிறந்தால் சினிமாக்காரர். வியாபாரியின் வீட்டில் பிறந்தால் வியாபாரி ஒரு பெரும் நகைக்கடை முதலாளியின் மகன் என்ன படித்திருந்தால் என்ன அத்தனை பெரும் லாபம் தரும் கடையை வேறு ஒருவருக்கு
கிரையமாக கூட எப்படி கொடுப்பார்கள்.
இந்த பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படுத்தி வைத்திருக்கும் பாகுபாடு தான் ஜனநாயகத்தின் பெரும் அச்சுறுத்தல்.
எல்லோருக்கும் வாய்ப்பு இருக்க வேண்டும் என்பது தான் ஜனநாயகம் ஆனால், இங்கே என்ன நடக்கிறது. ஜாதிய பாகுபடுக்கு எதிரானவர்கள் என்று தங்களை சொல்லிக்கொள்கிறவர்கள் தான், நவீன ஜாதிய பாகுபாட்டு படிநிலையில் மற்றவர்களுக்கு இடம் கொடாமல் ஒடுக்குகிறவர்களாக இருக்கின்றார்கள்.
பாராளுமன்ற உறுப்பினர் பதியேற்பு விழாவில்,மற்ற மாநில உறுப்பினர்கள் எல்லாம் கடவுளின் கோஷங்களை அவர்கள் மாநிலம் ஓங்குக என்கிற கோஷங்களை எழுப்பிக்கொண்டிருந்த பொழுது, தி.மு.க. உறுப்பினர்கள் அங்கே உதயநிதி வாழ்க என்கிற கோஷங்களை எழுப்புகிறார்கள்.
ஒரு கட்சி என்பது, மக்களின் நிதியைக் கொண்டு தான் நடத்தப்படுகிறது. அது கார்ப்பரேட் களிடம் இருந்து வரும் நிதியோ அல்லது ஊழல் செய்து வந்த நிதியோ எதுவாக இருந்தாலும் மக்களிடம் இருந்து வந்ததே தான். அந்த மக்கள் எல்லோருக்கும் அந்த கட்சிகளில் வாய்ப்பு இருப்பதில்லை.
தி.மு.க. உறுப்பினர்களின் உதயநிதி வாழ்க என்கிற கோஷத்தை பாதுகாப்பற்ற உணர்வின் வெளிப்பாடாகவே தான் நான் பார்க்கிறேன். ஏன் அந்த கட்சியில் ஒருவரிடம் கூட தலைமை பொறுப்புக்கு நாம் வர வேண்டும் என்கிற முனைப்பு இல்லாமல் வாரிசுகளை தூக்கிப்பிடிக்க தயாராக இருக்கின்றார்கள்? அது சமூகத்தின் மற்றொரு குறை.
அ.தி.மு.க வில் என்ன நடந்தது? அங்கே சாதரணமான ஒரு தொண்டர்க்கு தலைமை பொறுப்பு கிடைக்கிறது. பண பலமும் ஆள் பலமும் அதை அவரிடம் இருந்து பறிக்கிறது. பின் எடப்பாடி தலைமை பொறுப்புக்கு வருகிறார். சரி! இந்த முறை ஏதோ ஒருவகையில் சாதாரண தொண்டனாக இருந்து வளர்ந்த எடப்பாடிக்கு தலைமை பொறுப்பு கிடைத்து இருக்கின்றது. ஒவ்வொரு இரண்டு ஆண்டுகளுக்கோ ஐந்து ஆண்டுகளுக்கோ ஒரு முறை தலைமை மாற்றிக்கொள்ளலாம் எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கட்டும் என்கிற தீர்மானம் எட்டப்படாமல், அந்த தலைமைப்பதவிக்கு நடந்த சீரற்ற போட்டியில், தினகரன் ஒரு பக்கம்,ஓ.பி.ஸ். ஒரு பக்கம் எடப்பாடியும் அ.தி.மு.க.வும் ஒரு பக்கம் என்று நிற்கிறார்கள். ஒருவர் தலைமை பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கபட்டுவிட்டால் அதை அந்த கட்சியிலோ நிறுவனத்திலோ அமைப்பிலோ இயக்கத்திலோ இருக்கின்ற மற்றவர்கள் ஏற்று பழக வேண்டும். அது எல்லா கட்சிகளிலும் நடக்கிறதில்லை. முக்கியமாக தமிழக கட்சிகளில் நடக்கிறதே இல்லை. ஒரு ஒரு சீட்க்காக தனிக்கட்சி தொடங்கிய தலைகள் தான் இங்கே அதிகம் இருக்கின்றது.
அ.தி.மு.க. வில் ஏற்பட்டிருப்பது போன்ற குழப்பம் என்ன செய்யும் அந்த கட்சியை பலவீனப்படுத்தும்.அது ஏற்படுத்துகின்ற விளைவு பஞ்சாயத்து தேர்தல் வரை பிரதிபலிக்கும். அதனால், இந்த கட்சிகளும் அரசியல் தலைவர்களும் என்ன நினைக்கிறார்கள் என்றால் தலைமை பதவிக்கு எப்போதும் போட்டி இருக்க கூடாது. மற்றவர்களின் வெற்றியை ஏற்றுக்கொள்ளப்பழகாத கட்சியில் தலைமைக்கு நடக்கும் போட்டி நிச்சயம் ஆரோக்கியமானதாக இருக்காது. கோஷ்டி பூசல்கள் எல்லாம் இங்கே தான் ஆரம்பமாகிறது. மாவட்ட அளவில் கட்சிகளுக்குள் நடக்கும் கோஷ்டி பூசல்களை கவனித்தீர்கள் என்றால், இரண்டு பேருக்கு இடையில் நடக்கும் போட்டி இரண்டு குழுக்களுக்கு இடையில் நடக்கும் போராக இருக்கும் காரணம், யார் பதவிக்கு வந்தால் நமக்கு ஆதாயம் என்கிற அளவில் அந்த இரண்டு குழுக்கள் இருக்கும். மாவட்ட அளவிலேயே இப்படி என்றால்? மாநில அளவில் ஒரு கோஷ்டி பூசல்கள் நடந்தால் என்ன நடக்கும் என்பதற்கு அ.தி.மு.க ஒரு உதாரணம், அ.தி.மு.க. பிளவுபட்டு இருப்பது இது முதல் முறை அல்ல.
மாநில அளவில் ஒரு கோஷ்டி பூசல் நடந்து அது பஞ்சாயத்து தேர்தல் வரை பிரதிபலித்து, என் பஞ்சாயத்து தலைவர் பதவிக்கோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கோ மாநில அமைச்சர் பதவிக்கோ சட்டமன்ற உறுப்பினர் பதிவிக்கோ ஆபத்தாக அமைவதற்கு பதில், உதயநிதி என்ன இன்பநிதியை கொண்டு வந்தாலும் வாழ்க என்று கோஷமிடுகிறேன் என்ன கெட்டுவிடப் போகிறது. தங்கள் இருப்பை தக்க வைத்துக்கொள்ள இப்படி நடந்துகொள்ளும் அரசியல்வாதிகள் தான் சுயமரியாதை என்றும் ஜாதி ஒழிப்பு பற்றியும் பேசிக்கொண்டு திரிகிறார்கள்.
கவுன்சிலர் பையன் தான் கவுன்சிலர் ஆகனும். முதலமைச்சர் பையன் தான் முதலமைச்சர் ஆகனும். இது பிறப்பின் அடிப்படியில் உரிமையை பறிப்பதாகாதா? இது தி.மு.க. எனும் ஒரு கட்சியை தொடர்ந்து இந்தியாவின் பல கட்சிகளில் தொடர்கிறது. வாரிசு அரசியலை எதிர்த்து அண்ணா வெளியே வந்தார், அந்த கட்சியில் வாரிசு அரசியல்,தனக்கான வாய்ப்பு மறுக்கப்பட தனிக்கட்சி தொடங்கினார் வைகோ அவருக்காக நின்ற தொண்டர்களின் வாய்ப்பை மகன் எடுத்துக்கொண்டார்.
எனக்கு தெரிந்து கம்யூனிஸ்ட் கட்சியும் பாஜகவுமே தான் இதுவரை கடைசி தொண்டனுக்கும் உயர்பதவி அடைய வாய்ப்பு இருப்பதை உறுதி செய்து வந்தது. அந்த இரண்டு கட்சிகளில் இப்போது பாஜகவிலும் வாரிசு அரசியல் எட்டிப்பார்க்க தொடங்கியிருக்கிறது. கம்யூனிஸ்ட் கட்சிக்கு தேசிய அளவில் மக்கள் எப்போதும் பெரிய வாய்ப்பு கொடுப்பதில்லை.
மக்கள் வாய்ப்பு கொடுக்கும் மாநில கட்சி தொடங்கி தேசிய கட்சி வரை வாரிசு அரசியல் விஸ்தரித்து இருப்பது. அதை ஒன்றும் செய்ய முடியாமல் இந்த சிஸ்டம் பார்த்துக்கொண்டிருப்பதும்.
ஜனநாயகத்தின் மிக பெரிய அச்சுறுத்தல். இதை தனியொருவர் மாற்றிட முடியாது. இது மாறவேண்டுமெனில், நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் பாதுகாப்பற்ற உணர்வை தூக்கி ஏறிய வேண்டும். அரசியல் சார் போட்டிகளில் நமக்கு கிடைக்காத வாய்ப்பு நம்மைப்போன்ற வேறு ஒருவருக்கு கிடைக்கும் பொழுது ஏற்றுக்கொன்று பழக வேண்டும். அதற்கும் நம்மைப்போன்ற ஒருவன் அரசியலுக்கு வர வேண்டும் என்கிற குறைந்தபட்ச ஆசை நமக்குள் இருக்க வேண்டும். அப்படி ஆசைப்படுவதற்கு கூட அரசியல்தலைவர்கள் வீட்டில் பிறந்திருக்க வேண்டும் என்று நினைப்பதை நிறுத்த வேண்டும்.

ஒரு எண்ணத்தில் ஒன்றுபட்டு ஜனநாயகத்தை மீட்டெடுத்து வாழவைப்போம்! change the thoughts first !