உலகம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சியானது இன்னும் அதிகமான வேகத்தை எட்டுவது எப்படி என்பதை இலக்காக கொண்டே தான் முன்னேறுகிறது.

போக்குவரத்து, தகவல் பரிமாற்றம் என்று எல்லாவற்றிலும் ஒரு தசாபத்தங்களுக்குள்ளாகவே பெரும் வளர்ச்சியை நாம் எட்டியிருக்கின்றோம்.நான்கு மணி நேர பயணங்கள் ஒன்றரை மணி நேரமாக குறைந்து இருக்கின்றது. கண் சிமிட்டும் நேரத்திற்குள் புகைப்படங்களை பரிமாறிக்கொள்ள முடிகிறது.

இந்த வேகமானது இன்னும் வளர்ந்து கொண்டே தான் இருக்கும். வேகத்தில் ஒரு அபாயமும் இல்லை. நிதானமில்லாத அவசரத்தில் தான் எல்லாம் அபாயங்களும் இருக்கின்றது.

சில நாட்களுக்கு முன், நானும் திருச்சியில் இருக்கும் என்னுடைய நண்பர் ஒருவரும் அவரின் காரை எடுத்துக்கொண்டு திருச்சியில் இருந்து மதுரை புறப்பட்டோம். சில மாதங்களாகவே, அந்த வழியில் சாலை பணிகள் நடந்துகொண்டிருந்ததால், அந்த நான்கு வழிச்சாலை அநேக தூரத்திற்கு இரண்டு வழி சாலையாக மாற்றப்பட்டிருந்தது. சாலையின் வசதிகளில் எத்தனை குறைகள் இருந்தாலும் toll கட்டணங்களில் மாற்றம் இருந்ததாக தெரியவில்லை.

ஒரு வழியாக மீண்டும் பணிகள் ஓரளவு நிறைவடைந்து அடைக்கப்பட்டிருந்த பாதைகளை(lane களை ) திறந்து இருந்தார்கள். சாலையை நன்றாகவே தான் அமைத்து இருந்தார்கள். ஆனால், அது பயன்பாட்டிற்கு தகுந்த சாலையாக இல்லை. சாலை என்று ஒன்றை அமைத்து விட்டால் அதை பயன்பாட்டிற்கு திறந்து விட்டு விடலாம் என்கிற அணுகுமுறையையே தான் எங்கும் காணப்படுகிறது.

ஏன் பயன்பாட்டிற்கு தகுந்த சாலையாக அது இல்லை. இரவு நேர பயணங்களில், சாலையின் விளிம்புகளில் இருக்கும் வெள்ளை கோடுகள், divider களில் பொருத்தப்பட்டிருக்கும் refelector தான் சாலை எங்கு முடிகிறது எங்கு திரும்புகிறது என்பதையெல்லாம் ஓட்டுனர்கள் அனுமானிக்க உதவுகிறது. அந்த வழியில் அநேக தூரத்திற்கு அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டிருந்த சாலையில் reflector வெள்ளை கோடுகள் போன்ற எந்த வஸ்துவும் இல்லை.

இன்னும் இரண்டு மாதங்களுக்கு அந்த வழிகளை அடைத்தே கூட வைத்திருந்திருக்கலாம் என்ன அவசரமோ? நம் நாட்டில் இதற்கெல்லாம் எந்த விதிமுறைகளும் கிடையாதா? ஒரு சாலை பயன்பாட்டிற்கு என்று திறக்கப்படும் முன் அதில் என்னவெல்லாம் இருக்க வேண்டும் என்பதை யாருமே ஆய்வு செய்ய மாட்டார்களா? விதிமுறைகள் இல்லாமல் இல்லை. ஆனால், இதையெல்லாம் யார் கண்காணிப்பது? இதற்கெல்லாம் யார் பொறுப்பு?

அந்த மதுரையில், 2022இல் பெரிய கடை ஒன்றை திறக்கிறார்கள், வேலைகள் முழுமையாக நிறைவடைவதற்கு முன்னதாகவே திறக்கின்றார்கள். ஒரு பெரிய கூட்டத்தை நிர்வகிக்கும் வசதிகள் முழுமை அடைந்திருக்கவில்லை. பாதுகாப்பு சார் அம்ஸங்களும் முழுமையாக நிறுவப்பட்டிருக்கவில்லை.
அத்தனை அவசரமாய் அவர்கள் அந்த கடையை திறந்த மாதத்தில் இருந்து சில கழித்தே தான் அந்த கடை திறக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அந்த பிரம்மாண்டமான கடை வளாகம் அவசரமாக
திறக்கப்பட்டிருந்தது.அரசு இயந்திரம் தூங்கிக்கொண்டிருந்ததோ என்னவோ? விழித்துக்கொண்டிருந்த அதில் இருக்கும் பாதுகாப்பு குறைகளை சுட்டி ஒருவர் நீதிமன்றத்தை நாடினார்.

 

அத்தனை அவசரமாக திறக்கப்பட்ட அந்த கடையின் மீது வழக்கு தொடர்ந்த சில மாதத்தில் அங்கே ஒரு தீ விபத்து ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் ஏற்படவில்லை.

சமூகத்தில், பெரும் பணக்காரர்களிடமும், அரசாங்க ஒப்பந்தரர்களிடமும், அரசியல்வாதிகளிடம் மட்டுமே தான் இந்த அவசரம் காணப்படுகிறதா என்றால் இல்லை. நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு அவசரம் தொற்றிக்கொண்டு உள்ளது.

சாலைகளில் பயணிக்கும் பொழுதுகளில் எல்லோரும் எல்லோரையும் பழித்துக்கொண்டு இருக்கிறோம். சாலைகள் சரியில்லை. அவன் இப்படி வாரான் அவன் அப்படி போறான். யார் தான் சரியாக இருக்கின்றார்கள் என்ன தான் பிரச்சன்னை?

ஒரு சம்பவத்தைப் பற்றி சொல்லுகிறேன் நீங்களே என்ன தான் பிரச்சனை என்று சொல்லுங்கள்!

 

30 வருடங்களுக்கும் முன்பு இரு பக்கங்களும் வயல் காட்டி இருவழி பாதை கொண்டு நின்ற ஒரு பஞ்சாயத்து சாலை ஒன்று. வயல்வெளிகள் மறைந்து இன்று அதன் இருபுறமும் வீடுகளே தான் இருக்கிறது. அந்த சாலை நெடுக இருந்த கிராமங்கள் நகரங்களாக பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது.

ஆனால், அந்த பஞ்சாயத்து சாலையில் எந்த ஒரு பரிணாம வளர்ச்சியும் இல்லை.அந்த சாலை மாவட்ட சாலையை சந்திக்கும் இணைப்பில் கடைகள் பெருகி போகிறது. போக்குவரத்து அதிகரிக்கிறது. எப்போதும் நெரிசல், பேருந்துகளும் ஷேர் ஆட்டோக்களுக்கும் அதே அந்த இரு பாதை அளவில் இருக்கும் அந்த சாலையில் நின்று தான் மக்களை ஏற்றிச்செல்ல வேண்டும். இருக்கும் கடைகளும் அந்த கடைகளை பயன்படுத்தும் மக்களும் என்ன செய்வார்கள்? அவர்களின் வண்டிகளை நிறுத்திக்கொள்ள பக்கத்து ஊரில் மொட்டை மாடி பார்க்கிங் கட்டியா நிறுத்த முடியும். இரு வழி பாதை கொண்ட அந்த சாலையின் இரு ஓரங்களிலும் எப்போதும் வண்டிகள் நிறுத்தப்பெற்றிக்கும். இப்போது கடைக்கு செல்லுகிறவர்கள் என்ன செய்வார்கள்?நிறுத்தப்பட்டிருக்கும் வண்டிகள் மீது ஏறியா செல்லுவார்கள். வாகனங்கள் செல்ல ஏற்படுத்தப்பட்ட இரு வழி பாதை கொண்ட சாலை இன்னும் சொல்லப்போனால், அந்த கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக ஏற்படுத்துப்பட்ட சாலை. அந்த சாலையின் இரு ஓரங்களில் வரையறுக்கப்படாத பார்க்கிங், அதைத்தாண்டி வரையறுக்கப்படாத நடைபாதை, மிச்சம் இருக்கும் கொஞ்சூண்டு இடத்தில் பெருகி விட்ட வீடுகளின் பெருகி விட்ட வாகனங்கள் எல்லாம் செல்ல வேண்டும்?

எப்படி?

அந்த கடைகளை கடக்கும் வரையிலேனும் நீங்கள் நிதானமாக இருக்க வேண்டும். நாம் என்ன செய்வோம்?

30 வருடங்களுக்கும் முன்பு இரு பக்கங்களும் வயல் காட்டி இருவழி பாதை கொண்டு நின்ற ஒரு பஞ்சாயத்து சாலை ஒன்று. வயல்வெளிகள் மறைந்து இன்று அதன் இருபுறமும் வீடுகளே தான் இருக்கிறது. அந்த சாலை நெடுக இருந்த கிராமங்கள் நகரங்களாக பரிணாம வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கிறது.

ஆனால், அந்த பஞ்சாயத்து சாலையில் எந்த ஒரு பரிணாம வளர்ச்சியும் இல்லை.அந்த சாலை மாவட்ட சாலையை சந்திக்கும் இணைப்பில் கடைகள் பெருகி போகிறது. போக்குவரத்து அதிகரிக்கிறது. எப்போதும் நெரிசல், பேருந்துகளும் ஷேர் ஆட்டோக்களுக்கும் அதே அந்த இரு பாதை அளவில் இருக்கும் அந்த சாலையில் நின்று தான் மக்களை ஏற்றிச்செல்ல வேண்டும். இருக்கும் கடைகளும் அந்த கடைகளை பயன்படுத்தும் மக்களும் என்ன செய்வார்கள்? அவர்களின் வண்டிகளை நிறுத்திக்கொள்ள பக்கத்து ஊரில் மொட்டை மாடி பார்க்கிங் கட்டியா நிறுத்த முடியும். இரு வழி பாதை கொண்ட அந்த சாலையின் இரு ஓரங்களிலும் எப்போதும் வண்டிகள் நிறுத்தப்பெற்றிக்கும். இப்போது கடைக்கு செல்லுகிறவர்கள் என்ன செய்வார்கள்?நிறுத்தப்பட்டிருக்கும் வண்டிகள் மீது ஏறியா செல்லுவார்கள். வாகனங்கள் செல்ல ஏற்படுத்தப்பட்ட இரு வழி பாதை கொண்ட சாலை இன்னும் சொல்லப்போனால், அந்த கிராமங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக ஏற்படுத்துப்பட்ட சாலை. அந்த சாலையின் இரு ஓரங்களில் வரையறுக்கப்படாத பார்க்கிங், அதைத்தாண்டி வரையறுக்கப்படாத நடைபாதை, மிச்சம் இருக்கும் கொஞ்சூண்டு இடத்தில் பெருகி விட்ட வீடுகளின் பெருகி விட்ட வாகனங்கள் எல்லாம் செல்ல வேண்டும்?

எப்படி?

அந்த கடைகளை கடக்கும் வரையிலேனும் நீங்கள் நிதானமாக இருக்க வேண்டும். நாம் என்ன செய்வோம்?

இதில் யார் மீது தவறு? இப்படி ஒரு கேள்வியை முன் வைத்தால், ஒரு பத்து பேர், “கார் காரனுக்கு என்ன அவ்வளவு திமிரு காசு இருக்குன்னு இப்படி பண்ணறாய்ங்க” என்றும்; இன்னொரு பத்து பேர் “இந்த ஆட்டோக்காரய்ங்களே இப்படித்தான் ” என்றும் வாதிட தொடங்குவீர்கள்.

அரசியல் கூட்டங்களில், விஜயகாந்த் தீடீரென்று கூட்டத்தில் யாரையோ அதட்டுவதை அதிகம் கண்டு இருப்பீர்கள். ஒரு பெரும் கூட்டத்தில் யாரோ ஒரு சிலர் ஏதோ சேட்டைகளை செய்துகொண்டு தான் இருப்பார்கள். மற்ற அரசியல்வாதிகள் அதை இயல்பு என்று எடுத்துக்கொண்டு கருத்தில் கொள்ளாமல் இருப்பார்களோ என்னவோ? ஆனால், விஜயகாந்த் ஒரு ஒழுங்கை எதிர்பார்த்தார். அப்படியான விஷயங்களுக்கு உடனடியாக எதிர்வினை ஆற்றுவது அவரின் இயல்பாக இருந்திருக்கலாம். கார்காரரின் எதிர்வினை அப்படியானதே தான். அதோடு கார் வைத்திருப்பவர்கள் எல்லாம் பணம் படைத்தவர்கள் இல்லை.நாட்டில் அநேகமான வாகனங்கள் emi இல் தான் ஓடிக்கொண்டிருக்கிறது.

மோட்டார் வாகனச் சட்ட விதிகள் பிரிவு 194ன் படி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அன்றி அனாவசியமாகவோ தொடர்ச்சியாகவோ ஹார்ன் அடிப்பது தண்டனைக்குரிய குற்றம். அந்த ஆட்டோக்காரர் மட்டும் இல்லை, நம் ஊரில், ஒரு நெரிசலான சாலையில், நின்று நிதானமாக கடக்க வேண்டிய இடங்களில் எல்லாம் நாம் நம் அவசரத்தை ஹார்ன் வழியாக கக்குகிறோம்.

அப்ப அந்த ஆட்டோக்காரர் மேல தான் தப்பு? என்று நீங்கள் முடிவெடுத்து விடக்கூடாது. அவருக்கு section 194F எல்லாம் தெரியாது. வேகமாக சென்றால் இரண்டு பேரை ஏற்றிக்கொல்லாம் அன்றைய அவரின் பிழைப்புக்கு அது தான் வழி. அது தான் அவரிடம் வெளிப்பட்ட அவசரத்தின் காரணம். இரு சக்கரத்தில் அவசரமாக செல்பவர்களில் அநேகர் நிச்சயமாக இடுப்புக்கு கீழ் வெந்நீர் ஊற்றிக்கொண்டவர்களாக தான் இருப்பார்கள்.

இதென்ன பெரிய பேசப்படாத அரசியல்? மேலே எடுத்துரைத்த நிகழ்வில், இன்னும் பல பிரச்சனைகள் இருக்கின்றது. மக்கள் தொகையின் வளர்ச்சியின் வேகம் , வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வேகம் , கிராமங்கள் நகரமாக மாறும் வேகம் இவற்றுக்கெல்லாம் கொஞ்சமும் அசைந்து கொடுக்காமல் மந்தமாகவே தான் வளர்கிறது மாநில நெடுஞ்சாலைகள். மாநில, மாவட்ட,பஞ்சாயத்து சாலைகளில் அநேகமான இடங்களில் இந்த கோடுகள் சமிக்ஞகளை இவற்றுக்கு எல்லாம் இடமே இல்லை.

இதில் இந்த சாலைகளில் இருக்கும் மற்றுமொரு பெரிய சிக்கல் பிரதான சாலையில் எத்தனை சந்துகள் குறுக்கு சந்துகள் வேண்டுமென்றாலும் எப்படி வேண்டுமென்றாலும் இணைக்கப்பட்டிருக்கும். இதில் எல்லாம் ஒரு ஒழுங்குமுறையை கொண்டு வர வேண்டும் என்பது பற்றி, இத்தனை வருடங்களில், நாம் வாக்களித்த திராவிட பிரதிநிதிகளில் ஒருவரேனும் சட்டமியற்றும் மன்றங்களில் எடுத்து பேசியிருப்பார்களா?

“த் %@$#$# எங்க ரோடு போட்டா எவ்வளவு” “அந்நியன் வெளிய வந்துட்டான்”

அதை அவர்கள் பேசவில்லை, மாநில, மாவட்ட சாலைகளில் பெரிய ஒழுங்குகள் இல்லை, புதிதாக வீட்டு மணைகளாகும் இடங்களிலேனும் சாலை எத்தனை அகலமானதாய் இருக்க வேண்டும் பிரதான சாலையோடு எந்த இடத்தில் மட்டும் வந்து சேரலாம் என்கிற எந்த நெறிகளும் இல்லை. ஒரு ஒரு கிலோ மீட்டர் சாலையில் வழி நெடுக சந்துகள் வந்து இணைத்துக்கொண்டே இருந்தால், அங்கே போக்குவரத்து எப்படி இருக்கும்?! இதில் இதுவரை சரியான எந்த விதிமுறைகளும் இல்லை.

அது தான் தெரியுமே டா என்று சலித்துக்கொள்கிறீர்களா?

இந்த ஷேர் ஆட்டோ பற்றி எத்தனை தூரம் சிந்தித்து இருக்கின்றீர்கள். ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் எல்லாம் அமைப்பு சாரா தொழிலாளர்கள், முந்திக்கொண்டு ஓடினால் தான் அவர்கள் பிழைப்பு ஓடும் என்கிற நிலையில் தான் அவர்கள் இருக்கின்றார்கள். ஒரு பேருந்தோ இன்னொரு ஆட்டோவோ, ஆட்களை ஏற்றுக்கொள்ளும் முன் நாம் முந்திக்கொள்ள வேண்டும்! அனுமதிக்கப் பட்டது போல் ஐந்து பேரை மட்டும் ஏற்றிக்கொண்டு சென்றால் எனக்கு எப்படி கட்டுப்படியாகும்? இதெல்லாம் தான் பிரச்சனை, சமூகத்தின் பெரும் பகுதியினர் பிழைப்புக்காக அடித்துக்கொள்ளாத குறையாக ஓடிக்கொண்டு இருக்கின்றார்கள். இந்த அரசியல்வாதிகள் இதைப்பற்றியெல்லாம் சிந்தித்து விதிமுறைகள் ஏற்படுத்தியிருந்தால், பிழைப்புக்காக அடித்துக்கொண்டு ஓட வேண்டிய அவசியம் அவர்களுக்கு இல்லாமல் இருந்தால், அவர்களிடமும் கூட ஒரு நிதானம் வெளிப்படலாம், அவர்களே ஐந்து பேருக்கு மேல் ஏற்றுக்கொள்ள மறுக்கலாம். முந்திக்கொண்டு செல்ல நினைக்காமல் நிதானமாக வண்டிகளை இயக்கலாம்.

ஒரு பிரச்சனையின் எல்லா அம்ஸங்களையும் ஆராய்ந்து சட்டமியற்றவே தான் சட்டமன்றங்கள் உருவாக்கப்பட்டது. ஆனால், அங்கே சம்பிரதாய கூட்டங்களும் சட்டையை கிழித்துக்கொள்ளும் நாடகங்களுமே தான் நடக்கிறது.

எல்லா நடைமுறை பிரச்சனைகளும் சிக்கல்களும் சரியான முறையில் சட்டமியற்றும் மன்றங்களில் ஆலோசிக்கப்பட்டு இருந்தால், அதிவேகமான வாகனங்கள் இயங்கும் தேசிய நெடுஞ்சாலைகளில் நீங்கள் ஷேர் ஆட்டோக்களை காண முடியாது.கிராமங்களுக்கு செல்லும் நகரப்பேருந்துகளுக்கும் ஷேர் ஆட்டோக்களுக்கும் தனியான வழித்தடங்கள் அமைக்கப்பெற்று இருக்கும். அப்படி ஒன்று நடக்காமல் போனதால் எத்தனை விபத்துக்கள் நடக்கிறது, அதில் எத்தனை ஷேர் ஆட்டோக்கள் சிக்குகிறது.

இந்த ஷேர் ஆட்டோக்கள் எந்த வழித்தடங்களில் எந்த எந்த நேரங்களில் இயங்கலாம் என்கிற வழிமுறைகள் கூட இல்லை. என்னைப் பொறுத்தவரையில், அந்த வாகனத்தின் அமைப்பே பாதுகாப்பானது இல்லை. ஒரு வாகனம் அறிமுகப்படுத்த படும் பொழுது. மத்திய மாநில அரசாங்கம் எப்படி ஏற்றுக்கொள்கிறது என்று தெரியவில்லை.(காசு வாங்கிட்டு தான் என்று நினைக்காதீர்கள்).

இதைப் பற்றியெல்லாம் யாருக்கு என்ன கவலை? ஷேர் ஆட்டோவை இயக்குவது அதில் பயணம் செய்பவர்களும் அடித்தட்டு மக்களாகவே தான் இருக்கின்றார்கள். ஒரு ஷேர் ஆட்டோ எங்கேனும் கவிழ்ந்து கிடந்தால், அவய்ங்க அப்படித்தான் வாரய்ங்க என்று நாமும் கடந்து விடுகிறோம்.நடக்கும் எல்லா விபத்துக்களிலும் நாம் யாரையோ பழித்து கடந்து விடுகிறோம். அப்படியில்லாமல்,சாலையில் சம்பளத்திற்கு வேலை செய்யும் யாரோ ஒரு போலீஸ்காரரிடம் ஹெல்மெட் போடாமல் வம்பிழுத்து வீடியோ போடாமல், கொண்டுவரப்பட வேண்டிய ஒழுங்குகளைப்பற்றிய நம்முடைய டிமாண்ட்(demand)கள் ஒரு maas vibe உருவாக வேண்டும்.

சாலை போக்குவரத்தை ஒழுங்குப்படுத்துவது பற்றி ஆலோசிக்க ஆயிரமாயிரம் விஷயங்கள் இருக்கிறது. கூடுமான வரையில் இருக்கின்ற விதிகளையேனும் எல்லோரும் பின்பற்றும் படி அரசாங்கம் விதிகளை enforce செய்ய வேண்டும்.இல்லையேல் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே தான் இருக்கும். விபத்துகளுக்கு வேகங்களே தான் பிரதான காரணங்களாக பொதுவாக நம்பப்படுகிறது. வேகமும் ஒரு காரணமும் என்றாலும்,அதைத்தாண்டிய காரணங்கள் ஆயிரம் இருக்கிறது. வேகமாக செல்ல முடியாத இடங்களில் காட்டும் அவசரம். வேகமாக செல்ல வேண்டிய சாலையில் இயங்கும் மெதுவான வாகனங்கள், தரமான சாலைகளாக இருந்தாலும் அதில் இல்லாத ஒழுங்கு. இப்படி எந்த காரணங்களும் அலசப்பட்டு சரி செய்யப்பட்டதாக தெரியவில்லை.

அரசாங்கம் என்ன செய்யுமோ?  எப்ப செய்யுமோ? நாம் எல்லோரும் ஒரு சிந்தனையில் என்று ஒன்றினைவோமோ? தெரியாது. தற்போதைக்கு நாம் என்ன செய்யலாம்? “யாரோ ஒருத்தர் தப்பு செஞ்சாலும் நான் செய்யமாட்டேன்” என்கிற பிடிவாதத்தோடு இருக்கலாம். சில இடங்களில், சில சாலைகளில் நீங்கள் ஓவர் டேக் செய்ய இடமிருந்தாலும் செய்யாதீர்கள். அது ஒரு நெரிசல் உருவாக காரணமாக இருக்கலாம். விரைவுச்சாலைகளில் முன்னால் செல்லும் வண்டியை முந்திச்செல்லும் பொழுது அந்த வண்டிக்கு அறிவிப்பதற்காக மட்டும் ஹார்ன் பயன்படுத்துங்கள்.நகர்ப்புறங்களில் நெருக்கடியான சாலைகளில், ஹார்ன் அடிப்பதை தவிருங்கள், நகர்ப்புறங்களில், நெரிசலான பகுதியில், யாரேனும் தொடர்ச்சியாக ஹார்ன் அடித்தால் ஒரு complain தட்டி விடுங்கள் (மதிக்கமாட்டார்கள் ஹாஹா). ஆனால், எல்லோரும் மாற்றத்தை அவர் அவர் நிலையில் இருந்து முன்னெடுத்தால் நிச்சயம் மற்றம் சாத்தியமே! உங்களிடம் இரு சக்கர வாகனம் இருந்தால், நெரிசலில் இடுக்குகளில் புகுந்து செல்ல வழியிருந்தாலும் செல்லாதீர்கள். அதுவே உங்களுக்கும் யாரோ ஒருவருக்கும் நன்மையாக இருக்கும். வீம்பு செய்யாமல், இரண்டு பேர் ஒரு இரு சக்கர வாகனத்தில் சென்றால், இரண்டு பேரும் ஹெல்மெட் அணிந்து செல்லுங்கள். உலகில் உள்ள எல்லோரும் தவறு இழைப்பவர்களாக இருந்துவிட்டு போகட்டும். நாம தப்பு செய்ய வேண்ணாம். அது தான் தப்பை தப்புன்னு சொல்ற தைரியத்தை நமக்கு தரும்.

இருக்கும் விதிகளை பின்பற்றி புது விதிகள் செய்வோம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *