இந்தியாவில், இந்திய கலாச்சாரத்தைப் பின்பற்றுவது என்பது இந்திய சாலைகளில் தினமும் வேலைக்குச் சென்று திரும்புவது போன்று மிகவும் சவாலானதாக இருக்கிறது. மதச்சார்பின்மை என்கிற பெயரில் அரசியல்வாதிகள் ஏற்படுத்தி வைத்திருக்கும் சிக்கல்கள் இது.

இந்திய கலாச்சாரமும் தமிழ் கலாச்சாரமும் வேறுபட்டது அல்ல. ஆனால், இங்கே ஒரு பெருங்கூட்டம், தமிழர்கள் இந்துக்கள் அல்ல; இது தமிழ் புத்தாண்டு அல்ல; முருகன் முப்பாட்டன்; விநாயகர் திணிப்புக் கடவுள் என்று அத்தனை களை செய்து கொண்டிருக்கிறது.

ஜெருசலத்தில் இருந்து வந்த இறைநம்பிக்கைகளை அந்த ஊர் கலாச்சாரத்தின்படியே அப்படியே ஏற்றுக்கொள்வதில் இங்கே ஒரு சிக்கலும் இல்லை. அரபியையும் உருதுவையும் ஏற்றுக்கொள்வதில் இங்கே ஒரு சிக்கலும் இல்லை. மசூதிகள் முகலாய கட்டிட மாதிரிகளைப் போன்று இருப்பதில் இங்கே ஒரு சிக்கலும் இல்லை. இதையெல்லாம் பாரதம் ஏற்றுக்கொள்ளலாம். தமிழர்கள் ஏற்றுக்கொள்ளலாம்; அதில் எந்த சந்தேகமும் சிக்கலும் சலசலப்பும் இல்லை.

 

ஒருவன் இங்கே விநாயகர் சதுர்த்தி கொண்டாடினால், ‘ஐயோ, விநாயகரா? அவர் திணிக்கப்பட்ட கடவுள் ஆச்சே? அவர் தமிழ் கடவுளே இல்லையேஎன்று சலசலக்கிறார்கள்.

ஔவையார் விநாயகரைப் பற்றி பாடியிருக்கிறாரே? என்று கேட்டால், அவர் சங்ககால அவ்வையார் இல்லை, பிற்கால ஔவையார் என்கிறார்கள். கவுண்டமணி கேட்பது போல், பிற்காலம் என்றால், நேத்து தான் பிறந்தார்களா? சரி! எப்படி பிற்காலம் என்கிறீர்கள் என்றால், அந்த விநாயகர் அகவலில் யோகம் பற்றிய குறிப்பு இருக்கிறது, யோகம் திருமூலர் காலத்திற்குப் பிந்தையது என்கிறார்கள்.

இவர்களுக்குத் திருமூலர் வாழ்ந்த காலம் பற்றி தெரியாததால், இவர்களாக சில பாடல்களுக்குத் தவறான அர்த்தம் கற்பித்துக் கொண்டு அவரை கி.பி. 5-ம் அல்லது 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்தவராக வைக்கிறார்கள். கேட்டால், திருமந்திரம்தமிழ் மண்டலம் ஐந்துஎன்கிறது; தமிழ் மண்டலம் சேர சோழ பாண்டியர்கள் என்று மூன்று மண்டலங்களாகத் தான் இருந்தது, கி.பி. 3-ம் நூற்றாண்டுக்குப் பிறகு தான் ஐந்து மண்டலமானது என்கிறார்கள். இவர்கள் குறிப்பிடும் அந்தப் பாடலில் வரும்மண்டலம்என்கிற வார்த்தை நில எல்லைகளைக் குறிப்பது அன்று. வேதங்களிலும் பழைய நூல்களிலும் மண்டலம் என்பது ஒரு பகுதி (பிரிவு).

சிதம்பரத்தில், பொன் தகடுகள் வேயப்பட்டது பற்றி திருமூலர் பாடுகிறார். சிதம்பரத்தில் உள்ளபொன்னம்பலம்” (தங்கத்தால் வேயப்பட்ட கூரை) பற்றிப் பாடுகிறார். வரலாற்றுச் சான்றுகளின்படி, சிதம்பரக் கோயிலின் கூரைக்கு முதன்முதலில் தங்கம் வேய்ந்தவர் 5-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவ மன்னனான முதலாம் சிம்மவர்மன் என்கிறார்கள். நான் பிறந்த சமயத்தில், மதுரை வெள்ளியம்பலம் முழுவதும் வெள்ளித் தகடுகள் பதிக்கப்பட்டு இருக்கவில்லை. இப்போது முழுவதும் வெள்ளித் தகடுகள் பதிக்கப்பட்டு இருக்கிறது. அதற்கு முன்பு வெள்ளித் தகடுகள் பதிக்கப்பட்டு இருந்திருக்கலாம் இல்லாமலும் இருந்திருக்கலாம். ஆனாலும் அதற்குப் பெயர் வெள்ளியம்பலம் தான்.

நம்மைப் பற்றி அறியாதவர்கள், நம்மைப் பற்றிச் செய்யும் ஆய்வுகளைத் தொட்டு நாம் நம்மை ஆராய்ந்தால், முடிவுகள் இப்படியானதாகத் தான் இருக்கும்.

திருமூலரை கி.பி. ஐந்தாம் நூற்றாண்டில் வைக்கிறார்கள். ஆனாலும், திருமந்திரத்தில் இருக்கும் விநாயகர் வணக்கப் பாடலை இடைச்செருகல் என்று நீக்கப் பார்க்கிறார்கள். இந்தக் கடவுள் இல்லை என்கிற கூட்டம், சில பதிப்புகளில் அந்த விநாயகர் வணக்கப் பாடலை நீக்கியும் விட்டது.

பாரதம் முழுதும் வணங்கப்பட்டு வந்த விநாயகரை, இது நம் கடவுள் இல்லை என்று சொல்லிப் பிரித்தார்கள். ஆச்சா?! தீபாவளி கொண்டாடலாம் என்று நினைத்தால், நரகாசுரன் தமிழன்; அவன் இறந்த நாளைக் கொண்டாட மாட்டோம், கொண்டாடக் கூடாது என்கிற எண்ணத்தை மக்களிடம் திணித்தார்கள்.

சந்திரன் மற்றும் சூரியனின் சுழற்சியை வைத்துத் திருநாட்களை அனுசரித்து வந்த நாம், குளிர்காலத் தொடக்கத்தில் வரும் அமாவாசைக்கு முதல் நாளைத் தீபாவளியாக அனுசரிக்கிறோம். இந்த நரகாசுரன் பற்றிய கதைகள் எல்லாம் அசாம் வரை இருக்கிறது. ஆனால், சங்க இலக்கியப் பாடல்கள் ஒன்றிலும் நரகாசுரன் பற்றி இல்லை. சங்க இலக்கியப் பாடல்களில் குறிப்பிடப்பட்டு இருக்கும்கருநிற ராமன்இவர்களுக்கு ஆரியன். ஆனால், எந்தக் குறிப்புகளும் இல்லாமல் இருந்தாலும் பாரதம் வணங்கும், தமிழ் கடவுள் திருமாலின் அவதாரத்திற்கு எதிரானவன் என்பதால் நரகாசுரன் தமிழன். நம்மை எப்படி முட்டாளாக்குகிறார்கள் பாருங்கள். சங்க இலக்கியங்களில் தீபாவளி பற்றிய நேரடி குறிப்புகள் இல்லையென்றாலும், ‘கார்த்திகை தீபம்போன்ற விழாக்கள் இருந்தன. வட இந்தியா முதல் தெற்கு வரை நரகாசுரன் கதை மாறுபட்டாலும், தீபாவளி ஒரு ஒருங்கிணைந்த பண்டிகையாகவே இருந்துள்ளது.

பாரதம் முழுதும், எல்லா மாதங்களின் பௌர்ணமியும் அமாவாசையும் முக்கியத்துவம் வாய்ந்த நாட்களாகவே தான் அனுசரிக்கப்பட்டு இருக்கிறது. தைப்பூசம் என்று முப்பாட்டன் முருகனுக்குத் திருவிழா எடுக்கும் நாள், தை மாதத்தில் பௌர்ணமியை ஒட்டி வரும் நாள்.

சரி! விநாயகர் சதுர்த்தி தமிழர்கள் பண்டிகை இல்லை என்றார்கள். தீபாவளியை விடுமுறை நாள் என்றார்கள்.  அவர்கள் எதையோ சொல்லிக்கொண்டிருக்கட்டும் என்று விட்டுவிட்டு நாம் அதையெல்லாம் கொண்டாடிக் கொண்டிருந்தோம்.

கடைசியாகப் புத்தாண்டிற்கு வந்துவிட்டார்கள். தமிழர்கள் இந்துக்கள் இல்லை, தமிழ் புத்தாண்டு தமிழர்கள் புத்தாண்டு இல்லை என்று சொல்லும் இவர்களுக்கு ஒன்று புரியவில்லை. பாரதம் மட்டும் என்று இல்லை, உலகில் எல்லா மூலைகளிலும் பரவலாக இருந்த சடங்கு முறைகள், நம்பிக்கைகள், காலண்டர்கள் எல்லாம் சேர்த்து அதற்கு ஒரு பெயர் வைக்கலாம் என்றால், இன்றைய தேதியில் அதை இந்து மதம் எனலாம்.

இந்து என்பது மதம் அல்ல, அது மனித குலத்தின் சடங்குகள் மற்றும் ஞானத்தின் ஒரு தொகுப்பு

உலகம் முழுதும், வசந்த காலத் தொடக்கமான மார்ச் தான் புத்தாண்டு தொடக்கமாக இருந்தது. அக்டோபர், நவம்பர், டிசம்பர் என்கிற மாதங்கள் முறையே 8, 9, 10-வது மாதமாக இருந்தது. பாரத தேசத்தில், தமிழ் உட்பட எல்லா மொழிகளிலும் அஷ்டம்(அட்டம்), நவம், தசமம் என்று அந்த எண்களைக் குறிக்கும் சொற்களின் ஒலிப்பு முறை ஏறத்தாழ ஒரே மாதிரியாகத் தான் இருந்தது.

பாரத தேசத்தில், இறைவன் ஒருவன் தான்; அவனை நாம் எப்படி வணங்குகிறோமோ, அவன் அந்த அந்த வடிவில் இருந்து நமக்கு அருள் செய்வான் என்கிறது. அதோடு, இறைவன் உருவற்றவன் என்கிறது. நாம் தான் இறைவனுக்கு உருவம் கொடுத்து வணங்குகிறோம் என்கிறது. நாம் முன்னோர்களை வழிபடுகிறோம். உடலை விட்டு மீண்டும் இந்தப் பிரபஞ்சத்தோடு கலந்தவர்களை இறைவனிடம் சேர்ந்ததாகச் சொல்லி அவர்களையும் வணங்குகிறோம். முன்னோர் வழிபாடு, சிறுதெய்வ வழிபாடு, இயற்கை வழிபாடு, யோகம், உருவமற்ற இறைவன் பற்றி உணர்ந்து கொள்கிற ஞானம் பற்றியெல்லாம்தில் இருக்கிறது என்று பார்த்தால், பிற்காலத்தில்இந்துஎனப் பெயரிடப்பட்ட நம்முடைய கலாச்சாரத்தில் இருக்கிறது.

ஸ்தாபிக்கப்பட்ட மதங்கள் பரவலாவதற்கு முன், மனிதகுலம் பின்பற்றிய வழக்கங்கள், சொல்லி வைத்த ஞானங்கள் எல்லாவற்றையும் உள்ளடக்கி இருப்பது இந்து மதம். சமணம், இறைவன் என்று யாரும் இல்லை, பிரபஞ்சம் மட்டும் தான் இருக்கிறது என்கிறது; இந்து மதம் பிரபஞ்சம் தான் இறைவன் என்கிறது. இஸ்லாம், இறைவன் உருவமற்றவர் என்கிறது; இறைவன் உருவமற்றவர், இறைவன் ஒருவர் தான் என்பதைத் தான் இந்து மதத்தில் உள்ள வேதமும் கீதையும் சைவ தத்துவங்களும் சொல்கிறது.

நம் கலாச்சாரத்தில், நாம் சில காலண்டர்களைப் பின்பற்றி வந்தோம். முற்காலப் பாண்டியர்கள் காலத்தில் வானியல் ஆய்வு மையங்கள் வைத்திருந்தோம். வானியல் ஆய்வும் சோதிட ஆய்வும் வெவ்வேறாக இருக்கவில்லை. கோள்களுக்கு நாம் காரணப் பெயர்களை வைத்துக்கொண்டிருந்தோம்.

நிறத்தின் அடிப்படையில் வீனஸைவெள்ளிஎன்றோம், மார்ஸைசெவ்வாய்என்றோம். சூரியனைச் சுற்றி வர அதிக காலம் எடுத்துக்கொண்டதால், மெதுவாகச் சுற்றும் கிரகம் என்கிற அர்த்தத்தில், ‘சனிஎன்கிற சமஸ்கிருத சொல்லிலும்மந்தன்என்றும் சுட்டினோம்.

திராவிட மொழிகள் என்று மேற்கத்திய ஆய்வாளர்களால் பிரித்து வைக்கப்பட்ட மொழிகளில், சமஸ்கிருதத்தை நீக்கிவிட்டால், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் இருக்கும் அநேகமான வார்த்தைகளுக்கு நாம் வேறு வார்த்தைகள் தேடிக்கொண்டிருக்க வேண்டும்.

தர்க்க ரீதியில் இதை அணுகினால், நம் கலாச்சாரத்தில் இருக்கும் இரு பெரும் பழமையான மொழிகளான சமஸ்கிருதம் மற்றும் தமிழ் இரண்டிற்கும் பொதுவான மூலம் இருந்திருக்க வேண்டும். இந்த இரண்டும் கலந்து பிரிந்து திரிந்து தான் பாரதத்தின் மற்ற மொழிகள் உருவாகியிருக்க வேண்டும். பாரத தேசத்தில் இருக்கின்ற மொழிகளில் இருக்கும் பல ஒற்றுமைகள் நமக்கு அதை நிறுவுகிறது.

இன்று மதம் என்று அடையாளப்படுத்தப்பட்டிருக்கும் இந்து என்பது, இந்த மண்ணின் கலாச்சாரம் பற்றியது. ஸ்தாபிக்கப்பட்ட மதங்களைப் போன்ற மதம் கிடையாது அது. அந்த கலாச்சார வளையத்திற்குள் இருந்து நீங்கள் இயேசுவின் போதனைகளை ஏற்கலாம், ஒரு சிக்கலும் இல்லை. இறைவன் ஒருவன் தான் உருவற்றவன் தான் என்கிற பொழுது, ‘ஆம், அதைத் தான் எங்கள் வேதமும் கீதையும் சொல்கிறதுஎன்று உங்களால் அந்தத் தத்துவத்தைப் புரிந்துகொள்ள முடியும். ஆளூர் ஷா நவாஸ் போன்று, பொங்கல் வைப்பதில் சிக்கல் இல்லை, சூரியனை வணங்குவது தான் இஸ்லாமிற்குச் சிக்கல் என்று உங்களை நீங்கள் சுருக்கிக்கொள்ளத் தேவையில்லை.

இறைவன் ஒருவன் தான் அவன் உருவற்றவன் தான் என்றாலும், எல்லாவற்றிலும் இறைவன் இருக்கிறான் என்று எல்லாவற்றையும் ஏற்கும் மனப்பக்குவத்தை உங்களுக்கு இந்தக் கலாச்சாரம் கொடுத்து இருக்கிறது.

நோன்புக் கஞ்சி குடித்துவிட்டு, கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்கு மட்டும் தயக்கமின்றி வாழ்த்துச் சொல்லிக்கொண்டு மதச்சார்பின்மை பேசிவிட்டு, ‘தமிழர்கள் இந்துக்கள் இல்லைஎன்று பேசுகிற கூட்டத்திடம் நாம் முன்வைக்கும் சில கேள்விகள்:

தமிழ்க் கடவுளரான இந்திரன், சோமன், ருத்திரன், மால், முருகன் இவர்களையெல்லாம் தேவாலயங்களிலோ மசூதிகளிலோ வழிபடுகிறார்களா? சைவம், வைணவம், சிறுதெய்வ வழிபாடு, முன்னோர் வழிபாடு எல்லாம் எங்கே ஜெருசலத்தில் இருக்கிறதா? இல்லை பாரத சமூகத்தின் வேர்களில் இருந்து வந்த ‘இந்து மதம்என்று வகைப்படுத்தப்பட்ட மதத்தில் இருக்கிறதா?

பாரத கலாச்சார வழிபாடுகளைப் பற்றி, அதாவது இந்து சமய வழிபாடுகள் தெய்வங்கள் பற்றி நேரடியாகக் குறிப்பிட்டு இருக்கும் இளங்கோவடிகள், திருவள்ளுவரை எல்லாம் சமணர்கள் ஆக்கி, விநாயகர் தமிழ்த் தெய்வம் இல்லை, புறநானூற்றுப் பாடல்களில் வரும் ராமன் தமிழன் இல்லை என்கிறீர்களே; உங்கள் பார்வையில் நபிகளும் இயேசுவும் தமிழர்களின் இரண்டாம் மூன்றாம் பங்காளிகளா?

மேற்கத்திய காலண்டரில் இருந்த குறைகளால், ஒவ்வொரு வருடங்களிலும் வெவ்வேறு மாதங்களில் பருவகாலம் வந்து கொண்டிருந்தது. அதோடு ஈஸ்டர் பண்டிகை ஒவ்வொரு வருடமும் வேறு வேறு பருவகாலங்களில் வந்தது. மேற்கத்தியர் வேறு வேறு நாட்களைப் புத்தாண்டாக அனுசரித்து வந்தார்கள். இந்த குழப்பங்களைச் சரி செய்து, மதரீதியாக ஒரு இணைப்பைக் கொண்டுவரவும், கத்தோலிக்கத் திருச்சபை மற்றும் நிர்வாக வசதிக்காகவும் தான் ஜனவரி மாதம் புத்தாண்டாக மாற்றப்பட்டது. இது ஒப்பீட்டளவில் மிகவும் பிற்காலத்திய நடவடிக்கை. இதில் உங்களுக்கு எந்தக் குழப்பமும் ஏற்படுவதில்லையே, ஏன்?

வானியல் ஆய்வு மையங்கள் கொண்டிருந்த நம் கலாச்சாரம், மிக நுணுக்கமாகச் சந்திர நாட்காட்டி(lunar calendar), சூரிய நாட்காட்டி(solar calendar) இரண்டையும் இணைத்த நாட்காட்டி(lunisolar calendar) என்று வைத்து இருந்தார்கள். அதில் வசந்த காலத் தொடக்கத்தில் வளர்பிறையில் வரும் முதல் திதியானபிரதமைதிதி அன்று வரும் முதல் சூரிய உதயம், சந்திரசூரிய நாட்காட்டியின் (lunisolar calendar)அடிப்படையில் புத்தாண்டாக அனுசரிக்கப்பட்டது. சந்திரன் பூமியைச் சுற்றி வர எடுத்துக்கொள்ளும் 29.5 நாள் ஒரு மாதம் என்கிற கணக்கில், பன்னிரண்டு மாதங்களுக்கு 354 நாட்களைக் கொண்டது இந்த முறை. இந்த நாள் வசந்த கால சமபகல் இரவு நாள் (Equinox) அன்று வரும். இது தான் நம் கலாச்சாரத்தில் உகாதி, குடி பாடவா, நவ்ரே, சேதி சந்த், சஜிபு நெங்மா பன்பா, சைத்ர சுக்லாதி என இந்தியா முழுதும் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்த மக்களால் வேறு வேறு பெயர்களில் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது.

சூரிய நாட்காட்டியின் படி, சூரியன் தன் ஒரு சுற்றை முடித்து மீண்டும் நேர் கிழக்கில் இருந்து அடுத்த சுற்றைத் தொடங்கும்சித்திரை ஒன்றுபுத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. அதென்ன நேர் கிழக்கு? கீழே உள்ள படத்தைப் பாருங்கள்.

அந்த வட்டத்தில் நிற்கும் மனிதர் கிழக்கு நோக்கிப் பார்க்கிறார்.அவர் பார்க்கும் திசையில், மெல்லிய ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் அந்த அரைவட்டத்தின் 0 முதல் 180 பாகையும் கிழக்கு தான். அதில் 90 பாகையில் இருப்பது தான் நேர் கிழக்கு.

இதில் சூரியன் தெற்கு பக்கமாக இருக்கும் கிழக்கில் உதிக்கும் காலத்தை நாம்தட்சிணாயனம்என்று வகைப்படுத்தியிருக்கிறோம். வடக்கு பக்கமாக இருக்கும் கிழக்கில் உதிக்கும் காலத்தைஉத்தராயணம்என்று வகைப்படுத்தியிருக்கிறோம்.

 

இந்த உத்தராயண காலத்தின் தொடக்கம் தான் தை மாதம். இது அறுவடை காலமானதால், நாம் இதை நம் கணக்கு வழக்குகளை நேர் செய்கிற காலமாக கொண்டிருந்திருக்கலாம். ஆனால், சூரிய நாட்காட்டிப்படியும்(solar calendar) சரி, சூரியசந்திர நாட்காட்டிப்படியும்(lunisolar calendar) சரி, குளிர்காலம் முடிந்து வசந்த காலம் தொடங்கும் காலம் தான் புத்தாண்டாக அனுசரிக்கப்பட்டு இருக்கிறது. சந்திர நாட்காட்டியைப் பின்பற்றும் சீனர்களின் புத்தாண்டு கூட குளிர்காலம் முடிந்து தான் வருகிறது. அவர்கள் யுகாதிக்கு முந்தைய பிரதமை திதிக்கு முந்தைய அமாவாசையைக் கணக்கில் கொள்கிறார்கள்.

நேர் கிழக்கில் சூரியன் தொடங்கும் நாளான சித்திரை ஒன்று, சங்க்ராந்தி, விஷு, புத்தாண்டு, திங்யான், பொய்லா பைசாக் என்கிற பெயர்களில் இந்தியாவில் கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய இடங்களில் ஆண்டுத் தொடக்கமாகக் கொண்டாடப்படுவது போல, மியான்மர், தாய்லாந்து போன்ற நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.

சூரியசந்திர நாட்காட்டி, சூரிய நாட்காட்டி, மேற்கத்தியர்களின் பழைய நாட்காட்டி எல்லாவற்றிலும் மார்ச் 14-லிருந்து ஏப்ரல் 14-க்குள் தான் புத்தாண்டு அனுசரிக்கப்பட்டு இருக்கிறது. கத்தோலிக்கத் திருச்சபை மாற்றியமைத்த புத்தாண்டைத் தவிர்த்து எங்கும் ஜனவரி மாதம் புத்தாண்டாக அனுசரிக்கப்பட்டதில்லை.

வானியல் ஆய்வுகள் செய்து, வசந்த கால சமபகல் இரவு நாளை (Equinox) ஒட்டி ஒரு புத்தாண்டையும், நட்சத்திர மண்டலத்தில் பூமி சுற்றி வரும் கணக்கை (பூமியை மையமாக வைத்துச் சூரியன் சுற்றுவதாக எடுத்துக்கொண்டு) சூரியன் நட்சத்திர மண்டலத்தில் நேர்கிழக்கில் உதிக்கும் நாளை ஒரு புத்தாண்டாகவும் அனுசரித்து வருகிறோம். இது நம்மிடம் இருந்த ஞானத்திற்கும் ஆய்வறிவிற்குமான சான்றுகள். இதில் கொண்டு வந்து உங்கள் மத வெறுப்பைத் திணித்து, அதற்குப் பொய்யான இன அடையாளம் சூட்டி, ஒரு குழப்பத்தை ஏற்படுத்துவதை தான் ஏற்க முடியவில்லை.

சாமானியர் அரசியலுக்கு வந்தால் ஒன்றும் நடக்காது, சாமானியர் அரசியலுக்கு வர வாய்ப்பும் இல்லை என்கிற சூழலில், விஜய் போன்ற செல்வாக்கு உள்ள ஒருவர் தான் கொஞ்சமேனும் மாற்றம் கொண்டு வர முடியும் என்று நாம் நினைத்துக்கொண்டிருந்தால், அவரோ இதே இந்த திராவிட சித்தாந்தப் பார்வைக்குப் புதுச் சாயம் பூசிக்கொண்டு வந்து நம்மை அயர்ச்சி அடையச் செய்கிறார்.(வடிவேல் பாணியில் சொல்ல வேண்டுமென்றால்எங்களை டயர்டு ஆக்காதீங்க டா)

விஜய்யையும் சேர்த்து இந்த திராவிட அரசியல்வாதிகளுக்கு நாம் விடுக்கும் வேண்டுகோள் இது தான். எங்கள் பண்டிகைகளை நிம்மதியாகக் கொண்டாட விடுங்கள். கிறிஸ்துமஸிற்கு வாழ்த்துச் சொல்லும் நீங்கள் தீபாவளிக்கு ஏன் வாழ்த்துச் சொல்லவில்லை என்று கேட்டதற்கு தி.மு.. அமைச்சர் சொன்னார், “இயேசு பிறந்தது என்பது வரலாற்றுப் பதிவுஎன்று.

 வானியல் ஓட்டங்களைக் கணக்கில் கொள்ளாமல் ஆங்கில புத்தாண்டுத் தொடக்கம் மாற்றியமைக்கப்பட்டபடி பார்த்தால், இயேசு பிறந்த டிசம்பர் 25-ம் தற்போது கொண்டாடப்படும் டிசம்பர் 25-ம் வேறு வேறு நாட்கள். பழைய ஜூலியன் நாட்காட்டியையே பின்பற்றும் ரஷ்யா மற்றும் கிரேக்க மரபுவழி தேவாலயங்கள் (Orthodox Churches). ஜனவரி 7-ம் தேதியை கிறிஸ்துமஸாகக் கொண்டாடுவதை அந்த வேறுபாட்டிற்கு சான்றாக சொல்லலாம்.இந்த டிசம்பர் 25 என்பதும் கூட ரோமானியர்களின் ‘Sol Invictus’ (வெல்ல முடியாத சூரியன்) என்ற திருவிழாவை ஒட்டித் தீர்மானிக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது. அதையெல்லாம் குழப்பமில்லாமல் ஏற்றுக்கொண்டு நாம் அமைதியாக இருக்கும் பொழுது, இதில் வம்படியாக ஏன் இல்லாத குழப்பங்களை ஏற்படுத்துகிறீர்கள்.

ஈஸ்டருக்கும் தான் வாழ்த்துச் சொல்கிறீர்கள்; மூன்று நாள் கழித்து ஒருவர் உயிரோடு வந்ததை மட்டும் உங்கள் பகுத்தறிவு சந்தேகத்திற்கு இடமின்றி நம்புகிறதா?

பாரதம் முழுதும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படும் பல்வேறு பண்டிகைகளில் நீங்கள் ஒரு குழப்பத்தை உண்டு செய்து பிரிவினை உண்டாக்குகிறீர்கள். மதச்சார்பின்மை என்கிற பெயரில் மதம் சார்ந்து தான் செயல்படுகிறீர்கள்.ஒரு தேசிய சமூகத்தின் ஒரு பகுதியை அதன் அடையாளத்தில் இருந்தும் உணர்விலும் இருந்தும் நீங்கள் பிரிக்கப் பார்க்கிறீர்கள்.இதெல்லாம் உங்களுக்கு எதிராகவே ஒருநாள் திரும்பலாம். அதனால், உண்மையாக இருங்கள், போலியான விஷயங்கள் மற்றும் தத்துவங்களின் மீது உங்கள் அரசியல் கோட்டையை கட்டாதீர்கள்.

உண்மையில் இறைவனுக்கு அஞ்சுகின்ற ஒரு இஸ்லாமியரும், இயேசுவின் போதனைகளைப் புரிந்துகொண்டு வாழ்கின்ற ஒரு கிறிஸ்தவரும், இந்த அரசியல்வாதிகள் ஏற்படுத்துகின்ற குழப்பங்களுக்குத் துணை நிற்க மாட்டார்கள்.அந்த அரசியல்வாதிகளின் போலி மதச்சார்பின்மைக்குத் துணையாக நின்றுகொண்டிருக்க மாட்டார்கள். துரதிர்ஷ்டவசமாக இங்கே அநேகமானவர்கள் அதைத் தான் செய்கிறீர்கள். மதம் என்கிற குடையின் கீழ் ஒன்றுபட்டு, தி.மு.. போன்ற கட்சிகளுக்கு ஆதரவு அளித்துக்கொண்டு, அவர்கள் நம் தேசத்தின் கலாச்சாரம் பற்றிப் பொய்களைப் பரப்பி, ஒரு மதத்தின் மீது மட்டும் வெறுப்பைப் பரப்புகின்ற பொழுது நீங்கள் அமைதியாக இருக்கிறீர்கள். அது சமூகத்திற்கும் சமூக ஒற்றுமைக்கும் நல்லதா என்று உங்கள் மனசாட்சியிடம் நீங்களே கேளுங்கள்.

 

குழப்பமின்றி நாம் எல்லோரும் கடவுளாக எதை கருதினாலும் புத்தாண்டாக யுகாதியையோ தமிழ் புத்தாண்டையோ தான் கொண்டாட வேண்டும்.

நம் கலாச்சாரம் நமக்குத் தந்த ஞானத்தின் படி, நீங்கள் ஒரு மதத்தின் போர்வைக்குள் இருந்துகொண்டு தான் குறிப்பிட்ட வழிபாடு முறையை ஏற்க வேண்டும் என்பதில்லை. நீங்கள் சிவஞானியாக இருந்துகொண்டு இயேசுவிற்கு நெய்விளக்கு ஏற்றலாம். உருவமற்ற இறைவனை எண்ணித் தியானம் செய்யலாம். அதை எப்படிச் செய்ய வேண்டும் என்பது பற்றியெல்லாம் கீதையில் இருக்கிறது. நம்பிக்கைகளுக்காக நம்மை நாமே இழிவு செய்யும் அரசியலுக்குள் சிக்கிவிடாதீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *