கல்பனா மிஸ்.

அவங்களை உங்களுக்கு எப்படி அறிமுகம் செய்வது?

“கல்பனா மிஸ்” அது தான் அவங்களுக்கான அறிமுகம்.வெறும் பேர் எப்படி ஒரு அறிமுகம் ஆகும்! சரி தான். வெறும் பேர் அறிமுகம் ஆகாது தான். அந்த பேருக்கே நம்முடைய செயல்கள் தான் அறிமுகத்தை கொடுக்கும்.

 

‘கல்பனா மிஸ்’ இந்த பேர் இன்னிக்கும் நிறைய பேர் மனசுல இருக்கலாம்.

 

அவங்க தான் அங்க தலைமை ஆசிரியை- The  principal. அவங்க அங்க தலைமை ஆசிரியரா இருந்தபோது தான் நான் அங்க முதல் வகுப்பில் சேர்ந்தேன்.

 

Simple  and humblest principal I  have ever seen .

 

எல்லா இடங்களிலுமே நம்முடைய தோற்றம் ரொம்ப முக்கியமா இருக்குசேர்ந்தேன் . தோற்றம் தான் நாம் மற்றவர்களுக்கு அளிக்கும் மரியாதையை கூட தீர்மானிக்க வைக்கிறது.

 

இதன் காரணமாகவே பல நேரங்களில் நம்முடைய தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்களில் நமக்கு அவ நம்பிக்கை ஏற்படுகிறது.கொஞ்சம் சதை போட்டுட்டா;கொஞ்சம் முடி நரைச்சு போய்ட்டா; எல்லாத்துக்கும் மேல முடி கொட்டினா என்று நம் தன்னம்பிக்கை நம் தோற்றத்தை சார்ந்தே இருக்கின்றது.

 

கல்பனா மிஸ் க்கு இரொம்ப கம்பீரமான தோற்றமோ இல்ல வசீகரமான தோற்றமோ எதுவும் கிடையாது. ஆனாலும், அது கல்பனா மிஸ் ஐ சந்திக்கும் யாருக்கும் ஒரு குறையாக தெரிந்து இருக்காது.அதைவிட மாணவர்கள் எல்லாம் பார்த்து அஞ்சுகின்ற ஆசிரியர்களும் கூட கல்பனா மிஸ் ஐ ஒரு பயம் கலந்த மரியாதையோடு தான் பார்த்தார்கள்.

 

அவர்கள் ஒரு பள்ளியின் தலைமை ஆசிரியர் என்று தெரியாதவர்கள் கூட அவரை மரியாதையாக தான் நடத்தியிருப்பார்கள்.

 

அத்தனை  எளிமை, தன்னை உயர்வாக எண்ணிக்கொள்ளாத தன்னம்பிக்கை.தன்னம்பிக்கை செயல்களில் வெளிப்படணும் வார்த்தைகளில் வெற்று பெருமைகளாக வெளிப்பட கூடாது.

 

ரஜினி நடிச்ச முத்து திரைப்படத்தின் ஆரம்ப காட்சியில் “முத்து” பேர் சொன்னவுடன் எல்லா வேலைகளும் சுறுசுறுப்பாக நடப்பது போல காட்டியிருப்பார்கள்.அதே மாதிரி தான் அந்த பள்ளியில், அப்போது கல்பனா மிஸ் உடைய பேருக்கும் அந்த ஆற்றல் இருந்தது.

 

அத்தகைய ஆற்றல் நிறைந்த பேர் உடைய பெண்மணி தான் கல்பனா மிஸ் .

 

அப்படி ஒரு  பெண்மணியிடம் சென்று என்னுடைய அம்மாஎன்னைப்பற்றி ஒரு பிராது கொடுக்கிறார்.

“இவன் எந்த காயும் சாப்பிட மாட்றான்”

“நீங்க டிபன் box ல வச்சு கொடுத்து விடுங்க நான் பாத்துக்கிறேன்” என்கிறார் கல்பனா மிஸ்.

அந்த பள்ளியில் எல்லா விஷயங்களிலும்  ஒரு ஒழுங்கு இருந்தது. அந்த அத்தனை ஒழுங்குக்கு பின்னணியிலும் இருந்த பெயர் ‘கல்பனா மிஸ்’.

 

இப்ப என்னுடைய டிபன் box இல் தினம் ஒரு காய்கறி இருக்கும்; அதை சாப்பிடணும் இல்லை என்னை சாப்பிட வைக்கணும்.

 

எல்லா நாளும் நான் சாப்பிட்டு முடித்த பின், சாப்பிட்டுவிட்டேன் என்பதை அன்று எந்த ஆசிரியர் கண்காணிப்பில் இருக்கின்றாரோ அவரிடம் காண்பிக்காமல் எழுந்திருக்க முடியாது.

 

தினமும் இது ஒரு வழக்கமானது. ஒரு நாள் எங்கள் ஆசிரியயை “நீங்க போய் சாப்பிட்டு அந்த வேலைய பாருங்க நான் பாத்துக்கிறேன்” என்று வருகிறார் கல்பனா மிஸ்.

 

அன்னிக்குனு பார்த்து புடலங்காய்!😬😬😬

 

நமக்கு ஒரு எடுபுடி இருந்தாலே நாம் இயல்பாக செய்கிற வேலையை கூட நாம் அந்த எடுபுடியை கொண்டே செய்வோம்.

 

ஒரு school principal!  Lunch time ! ஒன்னாம் கிளாஸ் புள்ளைங்க ல சாப்பிடறதா கண்காணிக்க வந்து உட்கார்ந்து!

“உங்க அம்மா தானே நீ ஒழுங்கா காய் சாப்பிட மாட்றா ன்னு complain  பண்ணாங்க.”என்னை நோக்கி கேள்வி வேறு!

 

எல்லாரும் சாப்பிட்டு முடித்து விளையாட சென்றுவிட்டார்கள். நான் மட்டும்  புடலங்காயுடன் போராடிக்கொண்டு இருக்கின்றேன்.

அங்கே ஒரு bench இருந்தது, அதில் உட்கார்ந்த கல்பனா மிஸ் நான் சாப்பிட்டு முடிக்கும் வரை நகரவில்லை.

 

நம்முடைய செயல்கள் தான், மற்றவர்களின் பார்வைக்கு நாம் எப்படி தெரிகிறோம் என்பதை தீர்மானிக்கின்றது.  ஆற்றல் கொண்ட பேர் உடைய பெண்மணி என்று சொல்லியிருந்தேன். செயல்கள் தான் அந்த ஆற்றலை தீர்மானிக்கின்றது.

உண்மையில் அவருடைய பெயரில் ஒரு ஆற்றலும் இல்லை அவருடைய செயல்களே அவருடைய பெயருக்கான ஆற்றலையும் பெருமையையும் சேர்த்தது. வேலை வாங்குவது மட்டும் தலைமையில் இருப்பவர்கள் வேலை இல்லை. இந்த வேலை எல்லாம் நான் பார்க்கிறது என்று இல்லாமல் நான் இப்ப free தான் நான் பாத்துக்கிறேன் என்கிற அந்த humblness தான் அந்த பெயருக்கான பெருமையையும் ஆற்றலையும் சேர்க்கிறது.

 

God opposes the proud, but gives grace to the humble-James 4:6

அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.

கொஞ்சம் வருஷம் கழிச்சு,அப்பாவுடைய நண்பர் வீட்டிற்கு சென்றபோது. அவருடைய பிள்ளைகள் எல்லாம் வேலம்மாள் என்கிற பள்ளியில் படிப்பதாக சொன்னார்.

எனக்கு அந்த பெயரை கேட்ட மாத்திரத்தில், என்ன இது! “வேலம்மாள் ன்னு” 😖அதுவும் matriculation school க்கு போய்  ஏதோ ஒரு பழைய பட்டிக்காட்டு பெயரை வைத்து இருக்கின்றார்கள் என்றே நினைத்தேன்.

 

அதுவரை matriculation school  என்றாலே , DON bosco, seventh day, இப்படியான பெயர்களையே அதிகம் கேள்விப்பட்டதின் தாக்கம் தான் என்னுடைய எண்ணம்.

 

“என்ன பெரிய இந்த பள்ளியாக இருக்க போகிறது!” என்கிற எண்ணம் எனக்குள். “ஒரு கட்டத்தில் என்னையே  அங்கு சேர்ப்பதற்காக என்னை அங்கே அழைத்து சென்றார் அப்பா. அப்பப்பா (unexpected twist)

 

சும்மா போய்  பார்த்துவிட்டு வரலாம் என்றவர். என்னை அங்கே சேர்த்துவிட்டு வந்தார்.

 

நான் வாயை மட்டும் தான் திறக்கவில்லை,அத்தனை ஆச்சரியம்.அங்கு இருந்த ஜன்னல்களையும் கழிவறையையும் கூட ரசிக்க ஆரம்பித்து விட்டேன்.

 

எல்லாமே எனக்கு புதுசா இருக்கு. I  started to love that school. அன்றைய தேதியில் மொத்தமாக ஒரு மூன்று இடங்களில் இருந்து இருக்கும்,”வேலம்மாள் matriculation பள்ளி”. இன்று அதே பெயரில் international school, multispeciality hospiptal.

 

வேலம்மாள் என்கிற பெயர் ஒரு brand ஆக மாறியிருக்கின்றது.ஒரு bench mark  ஆக ஆகியிருக்கிறது.

 

அன்றைய தேதியில் நான் ஒரு matriculation பள்ளி ஆரம்பிக்க நினைத்து இருந்தால் நிச்சயமாக இப்படி பெயரை தேர்வு செய்ய தயங்கி இருப்பேன். ஒருவேளை, initial களை கொண்டு பள்ளிக்கு பெயர் சூட்டி இருப்பேன்.சாதாரணமானவர்கள் என்னை போன்று தான் யோசிப்பார்கள்.

 

அப்படியே சினிமாவிற்கு வருவோம். ரஜினிகாந்த் கதையின் நாயகனாக அறிமுகப்படுத்தப்பட்ட திரைப்படத்தை போனி செய்ய “சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்” நடிக்கும் திரைப்படம் என்று விளம்பரம் செய்கிறார்கள்.

 

‘அதிரடி offer’

‘super  sales’

‘mega offer’

போன்று வியாபார யுக்திக்காக பயன்படுத்தப்படும் கவர்ச்சிகரமான ஒரு வெற்று வார்த்தை தான் சூப்பர் ஸ்டார் என்பதும்.

 

கவர்ச்சிகரமான வார்த்தைகள் ஒவ்வொரு நடிகர்களுக்கும் பயன்படுத்தப்படுகின்ற ஒன்று தான்.

 

ultimate  star

supreme star

உலக நாயகன்

 

ultimate , supreme  என்கிற இரண்டு வார்த்தையும் ஒரே அர்த்தத்தை தர கூடியது தான். வியாபார பயன்பாட்டிற்கு கொஞ்சம் வேறுபாடு இருக்க வேண்டும் என்பதால் அர்த்தத்தில் வேறுபாடு இல்லை என்றாலும் வார்த்தையில் வேறுபாடு காட்டலாம் என்று இப்படி வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பார்கள்.

 

நமக்கு வைக்கப்படுகின்ற பேர்களும் சரி! கொடுக்கப்படுகின்ற பட்டங்களும் சரி! எல்லாம் வெற்று வார்த்தைகள் தான். நம்முடைய செயல்கள் தான் அதன் மதிப்பை தீர்மானிக்கின்றது.

 

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். | குறள் எண் – 972

 

பிறப்பின் அடிப்படையில் எல்லாரும் சமம் தான் செயல்கள் தான் ஒருவரின் நன்மதிப்பை தீர்மானிக்கின்றது என்கிறார் வள்ளுவர், தொழில் என்றால் Job என்கிற அர்த்தத்திலேயே தான் நாம் இந்த குறளை அணுகியிருப்போம். தொழில் என்றால் verb (actions).

 

குணங்களின் அடிப்படையில் செயல்களும் செயல்களின் அடிப்படையில் தான் வேறுபாடுகளும் அமைகிறது என்கிறது பகவத் கீதை.

 

பெயர் பட்டம் எல்லாம் ஒரு லேபிள் என்றால், அந்த லேபிள் களுக்கான சிறப்புகளை சேர்ப்பது செயல்களே.

 

 

கல்பனா மிஸ் க்கு பின்னர் எத்தனையோ principal அந்த பள்ளிக்கு கிடைத்து இருக்கலாம். எத்தனையோ ஆசிரியர்களுக்கு கல்பனா என்கிற பெயர் இருக்கலாம்.ஆனால், அந்த ஒரு பள்ளியின் ஒழுங்குகளை கட்டமைத்ததில் அவர் தான் முன்னோடி (The pioneer).

 

கல்பனா மிஸ் ஐ சந்தித்த கடைசி மாணவர்கள் இருக்கும் வரை அந்த பெயர் நிலைத்து இருக்கும்.நம்மை கடக்கும் அத்தனை மனிதர்களின் பெயர்களும் நம்மில் இப்படி நிலைத்து விடுவதில்லை.சில மனிதர்களின் செயல்கள் மற்றும் அணுகுமுறைகளின் தாக்கமே அவர்கள் பெயரை நம் மனதில் நிலைபெற செய்கிறது.

 

தன்னுடைய செயல்பாட்டின் மீதும் கொள்ககையின் மீதும் நம்பிக்கை இல்லாமல், கவர்ச்சிகரமான ஒரு பெயரில் matriculation பள்ளி தொடங்கினால் தான் மக்கள் ஆதரவு இருக்கும் என்று நினைத்து இருந்தால், வேலம்மாள் என்கிற brand  உருவாகியிருக்க முடியாது.ஒரு தனிமனிதரின் செயல்பாடும் முன்னெடுப்பும் தான் அந்த பெயருக்கு அத்தனை பெருமை சேர்த்து இருக்கின்றது.

spelling ஐ மாற்றிக்கொண்டோ, prefix suffix  போன்ற வஸ்துக்களை சேர்த்துக்கொண்டோ, ‘ஸ்ரீ வேலம்மாள்’ என்று ஒரு கல்வி நிறுவனத்தை ஆரம்பித்துவிட்டால், அதே அந்த பெருமை வந்து சேர்ந்து விடாது.

வியாபாரத்திற்காக பயன்படுத்தப்பட்ட வெற்று பட்டத்துக்காக, தனக்கு பின்னான இரண்டு தலைமுறைகளை அடித்துக்கொள்ள செய்யும் அளவிற்கு பெருமை சேர்த்தது, தனி ஒருவரின் செயல்பாடுகள் மட்டுமே! முன்னர் சொன்னது போல ஒரு மனிதரின் செயல்பாடுகளும் அணுகுமுறைகளுமே அவர்கள் பெயரை நம் மனதில் நிலைபெற செய்யும் அப்படி மக்கள் மனங்களில் சூப்பர்ஸ்டார் என்று ஒருவர் நிலைபெற்று விட்டபின் அந்த பட்டத்தை சூட்டிக்கொள்வதால் யாரும் அந்த பெருமையை அடைந்துவிட போவதில்லை.

எண்ணங்களும் கூட செயல்பாடுகள் தான்.

But if you have bitter jealousy and selfish ambition in your hearts, do not boast and be false to the truth. This is not the wisdom that comes down from above, but is earthly, unspiritual, demonic.

James 3:14-15

பெருமை அடைவதற்கு எண்ணங்களிலும் கூட சிறுமை இல்லாதிருத்தல் அவசியமாகிறது.

 

ஒரு பேர் அல்லது பட்டம் நிலைக்க வேண்டுமெனில் அது மற்றவர்கள் மனதில் நிலைக்க வேண்டும், மற்றவர்கள் மனதில் நம்முடைய பெயர் நிலைக்க நம்மிடம் முதன்மையாக இருக்க வேண்டிய குணம்பணிவு, தாழ்மை humbleness.

பணியுமாம் என்றும் பெருமை சிறுமை அணியுமாம் தன்னை வியந்து. | குறள் எண் – 978

இந்த குறளுக்கு மொத்த எடுத்துக்காட்டாக இருப்பவர் தான் சூப்பர்ஸ்டார் என்றார் சாலமன் பாப்பையா

 

இவருக்கு மட்டும் தான் இந்த பட்டம் இருக்க வேண்டும், இவருக்கு மட்டும் தான் இந்த பெயர் இருக்க வேண்டும் என்பதற்கு,பெயர்களும் பட்டங்களும் யார் ஒருவருக்கும் பட்டயம் போட்டு கொடுக்கப்பட்டதல்ல என்னும் வாதம் சரியானதே !ஆனால், மீனாட்சி என்கிற பெயரை யாருக்கு சூட்டினாலும் அது , மலையத்துவசன் மகளைத் தான் நினைக்கச்செய்கிறது.  Because she is the Pioneer who  earned the fame for that name!கல்பனா மிஸ், வேலம்மாள் கல்வி குழுமம், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இவர்கள் எல்லாம் ஒருவகையில் முன்னோடிகள்(pioneer).  இவர்களுடைய பெயர்களையும் பட்டங்களையும் யார் வேண்டுமென்றாலும் சூட்டிக்கொள்ளலாம், அப்படி சூட்டிக்கொள்வதால் மட்டும் அவர்களின் பெருமை வந்து சேர்த்துவிடாது.

மனதில் கொள்ளுங்கள் தாழ்மையுள்ளவர்களுக்கோ அவன் கிருபை அளிக்கின்றான்.God opposes the proud, but gives grace to the humble. And that humbleness is power.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *