இன்று பணி நிமித்தமாக நாங்கள் ஒரு மென்பொருள் நிறுவனத்திற்கு சென்றிருந்தோம், எங்கள் நிறுவனத்திற்கும் அவர்களுக்கும் வியாபார ரீதியான உறவை வலுப்படுத்த, அந்த நிறுவனத்தின் விற்பனைப் பிரிவை சேர்ந்த சரவணன் என்கிறவர் எங்களை ஒரு மேற்கத்திய உணவகத்திற்கு மதிய உணவு உண்ண ஏற்பாடு செய்திருந்தார், நேரத்தை மிச்சப்படுத்த, முன்னமே மெனுவை அனுப்பி தேர்ந்தெடுக்கச் சொல்லியிருந்தார், அதிலிருந்த உணவு வகைகளில் பிரெஞ்சு பிரைஸ் மற்றும் பொறித்த மீனையும் நான் தேர்வு செய்து இருந்தேன், பொறித்த மீன் என்றதும், நம் ஊர் வறுத்த மீன் என்று நினைத்து விடாதீர்கள்.இன்று நான் சாப்பிட்ட அந்த மீனில் உப்பு இருந்ததா என்றும் கூட தெரியவில்லை. ஆனால் எண்ணெய் ஏகத்துக்கும் இருந்த்தது, அதற்கு வெள்ளையாக இனிப்பாக ஒரு சாஸ் கொடுத்தார்கள் கூடவே மிளகாய் சாஸ்ம் கொடுத்தார்கள்.

இன்று மதியம் மேற்சொன்ன உணவை எடுத்துக்கொண்டிருந்த பொழுது , நீண்ட நாள் எழுத நினைத்த உணவு பற்றிய விஷயங்களை இன்றே எழுதிவிடுவது என்று தீர்மானித்தேன். நேற்றும் கூட இந்த சமையல் முறைகளைப் பற்றி மனைவியிடம் பேசிக்கொண்டிருந்தேன்.

வருடம்-2018 அப்போது தான் முதன் முதலில் நானாக சமைக்க தொடங்கினேன், அன்றைக்கு புளிக்குழம்பு வைக்கலாம் என்று தீர்மானம் ஆகியிருந்தது. அம்மாவை போனில் அழைத்து என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டு ஆரம்பித்தேன், வெந்தயத்தை வறுக்க சொன்னார்கள். அப்போது ஆரம்பித்தது நம் சமையல்முறை பற்றிய பிரம்மிப்பு.அம்மாவிடம் கேட்டறிந்ததற்கு முன்பு வரை புளி குழம்பில் வெந்தயமும் இருந்தது தெரியாது.

ஏன் பிரம்மிப்பு? அப்படியென்ன இருக்கிறது நம் சமையல் முறைகளில். அம்மாவிடம் புளிக்குழம்பு  எப்படி வைப்பது என்று கேட்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் உடலை பேணுவது பற்றி அக்கறை வந்து, சித்த மருத்துவம் உணவு முறைகளைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறது என்று வாசித்து இருந்தேன்.

சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதத்தின்படி, இனிப்பு, புளிப்பு, உப்பு, கார்ப்பு, கசப்பு, துவர்ப்பு ஆகிய ஆறு சுவைகளும் சமச்சீரான உடல் ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானவை. ஒவ்வொரு சுவையும் உடம்பின் நீர் வாயு ஆகாயம் (Space) நெருப்பு (heat) மண் (particles) ஆகிய  பஞ்ச பூத வஸ்துக்கள் எது எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. இந்த சுவைகளை நாம் எந்தெந்த அளவுகளில் எடுத்துக்கொள்கிறோம் என்பதை பொறுத்தே   நம் உடலின் சமன்பாடு எப்படி இருக்க வேண்டும் என்பது அமைகிறது.உடலில் இந்த சமன்பாடு மாறும் பொழுது தான் உடலில் குறைகள் ஏற்பட தொடங்குகிறது.

புளிகுழம்பில் வெந்தயம் பயன்படுத்துவதில், என்ன பெரிய பிரம்மிப்பு,அம்மா சமைத்து,நான் சாப்பிட்ட நாட்களில், புளிகுழம்பிற்கு தேங்காய் துவையல் தான் சைடு டிஷ். நாம் சாப்பிடும் உணவில் புளி அதிகமானால், அமிலம் அதிகமாகும். புளி அதிகமாக எடுத்துக்கொள்ளும் பொழுது அது உடம்பில் உஷ்னத்தை அதிகரிக்க கூடும், இதை சமன் செய்ய வெந்தயத்தை சேர்க்கிறார்கள்.

இப்பொழுது இந்த புளிகுழம்பில் புளிப்பு இருக்கிறது, வெந்தயத்தை போட்டதால் கசப்பு இருக்கிறது, உப்பு எப்படியும் எல்லா உணவுகளிலும் போல் புளிகுழம்பிலும் இருக்கிறது; மிளகாய் பொடி வத்தல் எல்லாம் சேர்ப்பதால் காரமும் கிடைத்துவிடுகிறது,சமையலில் துவர்ப்பு சுவை கொண்ட மஞ்சள் சிறிதளவு  எப்போதும் போல் இங்கையேயும் சேர்க்கப்படுகிறது, இப்போது இனிப்பு எங்கே செல்வது, அங்கு தான் தேங்காய் துவையல் வருகிறது. ஒரு வேளை உணவில், ஒரு குழம்பில் ஆறு சுவைகளும் என்ன விகிதத்தில் உடம்பில் சேர வேண்டுமோ அது அது அந்த விகிதத்தில் உடம்பில் சேர்க்க ஏதுவாக ஒரு குழம்பை சமைக்கும் முறையை ஏற்படுத்தி வைத்திருக்கிறார்களே என்று நினைக்கும் பொழுது.பிரம்மிப்பு இருக்கத்தானே செய்யும்.இது எந்த மேற்கத்திய சமையல் முறைகளிலும் இல்லாதஅற்புதம்.மிளகு இல்லாமல் நாம் அசைவ உணவு சமைக்கமாட்டோம். 

சரி! இதற்கும் ஆன்மீகத்திற்கு என்ன சம்மந்தம். ஒரு முறை அசைவ உணவுகளை உண்பது பற்றிய விவாதத்தில், ஒருவர் நாம் எதை சாப்பிடுகிறோமோ அந்த குணம் தான் வரும் என்றார், உடனே எல்லோரும் மயில் சாப்பிட்டால் மயிலாக ஆகிவிடுவோமா என்றெல்லாம் கேலி செய்தார்கள். இப்போது இந்த அசைவ உணவில் மிக முக்கியமாக மாட்டுக்கறி சாப்பிடுவதை ஆதரிப்பதற்காக இப்படியான விவாதங்கள் அதை சுற்றி அதை ஆதரிக்கும் அரசியல்வாதிகள், குறுந்திரை பிரபலங்கள், விடுதலை வெற்றிமாறன் வரை, அவர்களுக்கே தெரியாமல் மாட்டு கறி  விற்பனையை விருத்தி செய்துகொண்டிருக்கிறார்கள்.

இந்த மாட்டு கறி பஞ்சாயத்துக்கு அப்புறம் வருவோம். எதை சாப்பிடுகிறோமோ அதன் குணமே வந்துவிடுமா? ஆம்! வந்துவிடும் தான். மாடு சாப்பிட்டால் மாட்டின் குணம் வரும் ஆடு சாப்பிட்டால் ஆட்டின் குணம் வரும் என்பதில்லை.

உணவுகளின் சுவைகள் அடிப்படையில் அவைகளுக்கு என்று சில குணங்கள் இருக்கிறது. இதைப் பற்றி பகவத் கீதையின் பதினேழாவது  அத்தியாயத்தில் க்ரிஷ்னர் பேசுகிறார்.

உணவுகளையும், சாத்வீக குணம் ரஜோ குணம் தாமச குணம் கொண்ட உணவு வகைகளாக அவர் பிரித்து சொல்கிறார். நாம் சமைக்கும் அல்லது உண்ணும் உணவில், எந்த எந்த சுவை என்னென்ன அளவில் இருக்க வேண்டுமோ அந்த அளவில் இருந்து உடம்பின் சம நிலையை கெடுக்காமல். நல்ல சுவையுள்ள நல்ல கொழுப்புச்சத்தும் ஊட்டச்சத்தும் மிக்க உணவுகள் சாத்வீக உணவுகள் என்று கூறுகிறார். இந்த வகை உணவுகள் இதயத்திற்கு இதமளிப்பது நீண்ட ஆயுளை தரவல்லது என்கிறார்.

ஆயு: சத்வா: பலாரோக் யாயு: ஶுகாமி ரதி: ப்ரியாயா: ருசயா: ஷ்ரத்தாந் த்ரபாயா: த்ரய: ஸ்நிக்தா: ஸுசயோ . -> ஆயு, சத்வா (தூய்மை), பலம், ஆரோக்கியம், மகிழ்ச்சி, சுவை (இனிப்பு) மற்றும் திருப்தி ஆகியவற்றைத் தரும் உணவுகள், சாத்வீக உணவுகள்

நம் நாட்டில், நம் சமையல்முறையின் படி, சமைத்துவந்தது வரை எல்லா உணவுகளும்  சாத்வீக குணம் கொண்ட உணவுகளாகவே தான் இருந்தது சைவமோ அசைவமோ அந்தணர்களும் கூட அசைவ உணவு உண்ட காலம் இருக்கிறது, அகத்தியர் தான் அதை மாற்றினார் என்கிறார்கள். அசைவமா சைவமா என்பதைத்தாண்டி என்ன சுவை என்ன அளவில் எடுத்துக்கொள்ளப்படுகிறது என்பது தான் முக்கியம்.

மேற்கத்திய உணவுகள் எப்படியிருக்கிறது,இரண்டு நிமிடங்களில் சமைக்கலாம் என்கிற கவர்ச்சியோடு  நம் மீது திணிக்கப்பட்ட நூடுல்ஸ் சாதாரணமாக செரிமானம் ஆகாத அதிகம் உப்பு நிறைந்த உணவாக இருக்கிறது. அசைவ உணவுகளின் சமையல் முறையில், வெற்று காரம் மட்டும் அதிகம் ஆகியிருக்கிறது. காரம் உப்பு போன்ற சுவைகள் அதிகமாக இருக்கும் இப்படியான உணவுகள் ரஜோ குணத்தில் வருகிறது, அது கோபம் ஆசை அகங்காரம் போன்ற ரஜோ குணங்களை வளர்ப்பதோடு அதிகமான இந்த சுவைகள் மீது அதிகமான ஈர்ப்பை ஏற்படுத்துகிறது.

 

1ட்1வம்லலவணாத்1யுஷ்ணதீ1க்ஷ்ணரூக்ஷவிதா3ஹின: |

ஆஹாரா ராஜஸஸ்யேஷ்டா1 து3:க2ஶோகா1மயப்1ரதா3

மிகவும் கசப்பான, அதிக புளிப்பு, உப்பு, மிகவும் சூடான, காரமான, உலர்ந்த மற்றும் காரமான உணவுகள், ஆர்வமுள்ள நபர்களுக்கு(ரஜோ குணம் உள்ளவர்களுக்கு ) மிகவும் பிடித்தமானவை. இத்தகைய உணவுகள் வலி, துக்கம் மற்றும் நோய்களை உருவாக்குகின்றன

சமைத்து மூன்று மணி நேரத்திற்கு மேலான உணவை சாப்பிடுவது நல்லது அல்ல என்கிறது கீதை. கொஞ்சம் சிந்தித்து பாருங்கள், நீங்கள் ஒரு பழத்தை சாப்பிடுவதற்கு வைத்து இருக்கிறீர்கள், சில நாட்கள் ஆகிறது சாப்பிடாமலையே வைத்து இருக்கிறீர்கள்.என்ன ஆகும் அது கெட்டுப்போக தொடங்கும் அதாவது அது அதன் உயிர் தன்மையை இழக்க தொடங்கியிருக்கும் அந்த நிலையில் அதை எப்படி உட்கொள்வது?! நம் உடம்பிற்கு உயிர் கடிகாரம் இருப்பது போலவே தான் உணவிற்கும் இருக்கிறது. சுவையற்ற பழைய உணவுகளை உண்பது அறியாமை போன்ற தாமஸ குணத்தை வளர்க்கும் என்கிறார் கிருஷ்னர்.நாம் ஒரு காலத்தில், மசாலாக்களை கூட குழம்பு சமைப்பதற்கு முன்னர் தான் அரைத்துக்கொண்டு இருந்தோம், பொடி அரைத்து வைக்கும் வழக்கம் கூட நம்மிடம் இருந்ததில்லை.

அப்ப பழைய சோறு நல்லதா இல்லையா? நிச்சயமாக நாம் உணவை தேடி சமைத்து வருபவர்களுக்கும் கொடுத்து உண்ட காலங்களில் பழைய சோறுக்கு வேலை இருந்திருக்காது. அதே வேளையில்,இந்த பழைய சோறு நுனியிர்களை கொண்டிருப்பதாக எடுத்துக்கொண்டால், அது ஓரளவில் நல்லது. வயிறு புண்ணாக இருக்கும் பொழுது சில சமயங்கள் எடுத்துக்கொள்ளலாம் இதுவும் கீதையில் சொல்லியிருக்கா என்று கேட்காதீர்கள். மாட்டு கறிக்கு பத்து பேர் விளம்பரம் செய்யும் பொழுது, நான் பழைய சோறுக்கு விளம்பரம் செய்துவிட்டு போகிறேனே! எப்படி மாட்டுக்கறிக்கு விளம்பரம் செய்கிறரவர்கள் ஹெல்த்தி டயட் க்ரீன் டயட் என்று தங்களை காத்துக்கொள்கிறார்களோ அவர்களை போல நானும் பழைய சோறு அதிகம் எடுத்துக்கொண்டதில்லை, உடம்பில் அமில தன்மை அதிகரித்தால்  பழைய சோறு எடுத்துக்கொள்வது சிறிது நன்மை பயக்கலாம் ஆனால் தாமஸ குணத்தில் ஒன்றான சோம்பலை அது நிச்சயம் தரும். பழைய சோறு தரும் தூக்கத்தை தூக்க மாத்திரைகளும் கூட தராது. (how fresh our food is that fresh we are).

வேறென்ன முக்கியமாக உணவைப்பற்றி சொல்யிருக்கிறார்கள் கீதையில்? எந்த உணவையும் எந்த சுவையையும் அதிகம் எடுத்துக்கொள்ள கூடாது.இப்ப வருவோம் மாட்டுக்கறி பஞ்சாயத்துக்கு!.

இயக்குனர் பாரதிராஜாவின் உடல் ஆரோக்கியம் பற்றி பேசும் பொழுது ரஜினி, பாரதிராஜா வளர்ந்த சூழல் அவர் சாப்பிட்ட கூழ் போன்ற உணவுகள் தான் காரணம் என்று சுட்டினார். நீங்கள் சிந்தித்து பாருங்கள் நம்முடைய(பெருமான்மையவர்களின்) தாத்தாக்கள் எல்லோரும் பாரதிராஜா போல் ரஜினி போல் எழுபது  என்பது வயது வரை நல்ல நடமாட்டத்துடன் ஆரோக்கியமாக தான் இருந்தார்கள். ஆனால், நமக்கு இப்பொழுது பாரதிராஜா ரஜினி சிவகுமார் போன்றவர்களை பார்க்கும் பொழுது ஆச்சரியமாக இருக்கிறது.

இங்கே என்ன மாறியிருக்கிறது என்று சிந்திக்க வேண்டும். நம்முடைய அப்பாக்களின் சிறு பிராயத்தில் கூட ஞாயிற்றுக்கிழமையா கட்டாயம் கறி சமைத்து விட வேண்டும் என்கிற போக்கு இருந்திருக்கவில்லை. ஒரு விஷேஷம் கோவில் திருவிழா இவைகளுக்கே தான் ஆடு வெட்டுவது கோழி அடிப்பது என்று இருந்த நிலை நாம் ஆங்கிலேயர்களின் இந்த ஞாயிற்றுக்கிழமைபி விடுமுறை என்கிற வழக்கத்தில் மாட்டிக்கொண்டதும் வருடத்திற்கு சில முறை மட்டுமே என்று இருந்த கனமான செரிமான ஆக அதிக ஆற்றல் தேவைப்படுகிற அசைவ உணவை வருடத்தில் 52 நாட்களுக்கு மேல் எடுத்துக்கொள்ள தொடங்கினோம்.

கீதையில் சொன்னது படி எதையும் அதிகம் உண்ணக்கூடாது என்கிற வழக்கத்தை தாண்டி மேற்கத்தியர்களின் பிரேக்பாஸ்ட், லஞ்ச், ஸ்னாக்ஸ், டின்னர் வழக்கத்திற்குள் தள்ளப்பட்டோம். கீதையை சொல்லி மாட்டுக்கறியை சொன்னால் சங்கி என்று பட்டம் கட்டி சண்டைக்கு வருவார்கள். மருந்து என்கிற அதிகாரத்தில்,திருவள்ளுவர் சாப்பிட்டு முடித்து சாப்பிட் உணவு செரிமானம் ஆகும் வரை மீண்டும் சாப்பிட கூடாது என்கிறார். moderate eating இல் இருந்து,  பசித்தால் பசித்ததும் போதும் என்கிறதுக்கு கொஞ்சம் கம்மியாக சாப்பிட்டதில் இருந்து மாறி, நாம் நேரம் வந்தால் சாப்பிட வேண்டும் என்று சாப்பிடுவதை ஒரு வேலையாக மாற்றிக்கொண்டோம். From eating moderate we started to eat when the clock rings

ஆரோக்கியமான நம் உணவுகள் பிராண்ட் ஆக்க படவில்லை, வியாபாரம் ஆக்கப்படவில்லை, ஆனால் KFC முறை சிக்கனும் பிராய்லரும் பிஸ்சாவும் நூடுல்ஸும் பாஸ்தாவும் உலகளாவிய அளவில் வியாபாரம் ஆக்கப் பட்டு இருக்கிறது. இந்த வியாபாரத்தில், என்ன இவய்ங்க (இந்தியர்கள்), வெறும் கோழியும் ஆடும் தான் சாப்பிடுவேன் என்று இருக்கிறார்கள் என்று மெது மெதுவாக மாட்டு கறியை நமக்குள் திணித்தார்கள்  இந்தியா ஆங்கிலேர்களுக்கு முன்  முகலாயர்கள் ஆட்சியில் இருந்ததால் மாட்டுக்கறியை வியாபாரத்தை பரவல் படுத்துவது சுலபமாகி விட்டது, பன்றி கறியை விளம்பரப்படுத்த முடியாது, காரணம் இது செகுலர் நாடு.ஏற்கனவே ஆங்கொன்றும், ஈங்கொன்றுமாக இருந்த இந்த மாட்டு கறி விற்பனையை  இப்பொழுது போராளி சினிமா காரர்களும், உ.பி. பட்டறை சனாதன எதிர்ப்பாளர்களும் விருத்தி செய்துகொண்டு இருக்கீறார்கள்.(இந்த கட்டுரையில் அரசியல் பேச வேண்டுமா என்றால் பேச வேண்டும் தான் எனக்கு பிடிச்சதை நான் சாப்பிடுறேன் என்று இவர்கள் ஒரு நான்கு பேர் ஒரு கட்சியை எதிர்க்கிறேன் என்கிறேன் பெயரில் நமக்கு அதிகம் பழக்கப்படாத உணவு முறைகளை நமக்கு பிடித்தமான உணவு என்று சொல்லி நம் மீது திணித்துக்கொண்டு இருக்கீறார்கள், அதனால், இந்த ஆன்மீக கட்டுரையில் அரசியலை கலந்து எழுத வேண்டும் தான்)

ஒரு புள்ளி அளவு மட்டுமே இருக்கும் கருவாக உருவான  நம் உடல், நாம் எதையெல்லாம் உட்கொள்கிறோமோ அதையெல்லாம் எடுத்துக்கொண்டு தான் வளர்கிறது. நம் உணவு தான் உடல், நம் ஆற்றல், நம் எண்ணம். இதை பகவத் கீதை திருக்குறள் போன்ற நம்முடைய பாரம்பரிய நூல்கள் தெளிவாக எடுத்துரைக்கிறது. எதை உட்கொள்கிறோம் எப்படி உட்கொள்கிறோம் அது நாம். அதில் நமக்கு தெளிவு வேண்டும். 

நாம் வேறென்ன செய்ய வேண்டும்! வயிற்றுக்குள் ஜீரண நெருப்பாக இருந்து உணவை செரிமானம் செய்வதும் நான்(கடவுள்) தான், என்கிறார் கிருஷ்ணர். அதனால், எப்போதும், என்ன சாப்பிட்டாலும் இறைவனுக்கு அர்ப்பணித்து உண்ணச்  சொல்கிறார். இது ஒரு வகையில் conscious eating.. கடவுளுக்கு படைத்து விட்டு உண்பது என்பது,என்ன அவர் சாப்பிடவா போகிறார்” என்பது பற்றியது  இல்லை. கடவுள் சாப்பிட வேண்டும் என்று நாம் உணவை அவருக்கு படைத்து சாப்பிட வேண்டும் என்பது இல்லை. அவருக்கு அறிவிக்கிறோம் அர்பணிக்கிறோம், அப்படி செய்யும் பொழுது மனமும் உடலும் உண்பதில் லயித்து இருக்கிறது அது செரிமானத்திற்கு உதவுகிறது,. நல்ல செரிமானம் இருக்கும் பொழுது தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும், உடலில் செரிமான பிரச்சனைகள் தொடங்க ஆரம்பித்தால், அது ஒவ்வொருவரிலும் ஒவ்வொரு மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்த தொடங்கும்.

பிரம்மார்பணம் பிரம்ம ஹவிர் ப்ரஹ்மாக்னௌ ப்ரஹ்மணா ஹுதம்- பகவத் கீதை-4-24

எந்த ஒரு செயலையும் பிரம்மத்தின் வடிவமாகப் பார்த்து, தன்னையும் பிரம்மத்தில் நிலைநிறுத்தி, அந்த செயலைச் செய்பவர் பிரம்மத்தை அடைகிறார் என்று இந்த சுலோகம் கூறுகிறது

Eat Consciously! Eat Moderately! And more importantly ensure your diet is balanced with all the taste.

நல்ல உடலுக்கு வள்ளுவர் சொன்னது போல், கூடுமானவரையிலேனும் புலால் மறுத்து, கிருஷ்னரும் வள்ளுவரும் சொன்னது போல் உணவுகளை சுவைகளை அளவாக எடுத்துக்கொண்டு.பழைய உணவுகளை உண்ணாமல், இறைவனுக்கு அர்ப்பணித்து உண்பதில் லயித்து உணவை உண்டு உணவால் ஆன உடம்பை ஆரோக்கியமாக கட்டமைப்போம்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *