அநேகமான நேரங்களில் நாம் தொடுகிற தலைப்புகள் எங்கு தொடங்குவது, எப்படித் தொடங்குவது என்று நம்மைச் சில நிமிடம் சிந்திக்க வைக்கும் இடியாப்பச் சிக்கல்களாகவே தான் இருக்கிறது.
சில வீடுகளில் தம்பிகளுக்கு எல்லா முன்னுரிமைகளும் வசதிகளும் செய்து கொடுத்தாலும், அந்தத் தம்பிகள் எல்லாவற்றுக்கும் குறைப்பட்டுக் கொள்வார்கள். அது ஒரு விதமான முதிர்ச்சியின்மை. அதிகமான முன்னுரிமைகளையும் வசதிகளையும் அனுபவித்து வளர்ந்ததால் அவர்களோடு வளர்ந்திருக்கும் மனப்பாங்கு.
இந்தியாவில் வாக்கு சேர்க்க வேண்டுமென்பதற்காகச் சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்த வேண்டும் என்று செய்யப்படுகிற அரசியலை, வீடுகளில் எல்லா முன்னுரிமைகள், வசதிகளையும் செய்து கொடுத்து வளர்க்கப்படும் தம்பிகளோடு நாம் ஒப்பிட்டுச் சொல்லலாம்.
வீடுதான் நாடு; நாடு தான் வீடு’ என்கிறதை ஒட்டி நமக்கு வரும் எண்ணங்கள் அண்ணாவைத் தான் நினைவுகூர்கிறது. எத்தனை பெரிய கருத்தை மிக எளிமையாகக் கடத்திவிட்டார். வீட்டைச் சரியாக நிர்வகிப்பதற்கும் நாட்டைச் சரியாக நிர்வகிப்பதற்கும் பெரிய வேறுபாடுகள் ஒன்றும் இல்லை.
சமீபத்தில், துபாய் விமானம் ஒன்றில் தலைமை விமானி சக விமானியால் தாக்கப்பட்டது குறித்த செய்தியை எல்லோரும் கடந்திருப்பீர்கள். தலைமை விமானி கத்தியால் குத்தப்பட்டு இருக்கிறார். தாக்குதலை எதிர்கொண்ட அவர் காக்பிட் கதவைத் திறந்ததும் மற்றவர்கள் உள்ளே புகுந்து நிலைமையைச் சமாளித்து இருக்கிறார்கள். தலைமை விமானி சரிந்து விழுவதற்கு முன் காக்பிட் கதவைத் திறந்திருக்கிறார். அவர் திறந்ததும் முதல் ஆளாக உள்ளே நுழைந்து தாக்கிய விமானியைக் கட்டுக்குள் கொண்டு வந்தவர், இஸ்ரேல் பிரதமரை சந்தித்து நிலைமையை விவரிக்கும் காணொளி ஒன்று உலா வந்து கொண்டிருந்தது.
மிகத் தெளிவாக அவர் தாக்கப்பட்ட விமானி அல்ல, நிலைமையைச் சமாளிக்க உதவியவர் என்பது அந்தக் காணொளி பார்ப்பவர்களுக்குப் புரியும். ஆனால், அந்தப் பதிவில் நம் ஊர் இஸ்லாமிய சகோதரர் ஒருவர், “கத்திக்குத்து வாங்கி மருத்துவமனை செல்லாமல் இங்கு வந்து நெதன்யாகுவைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கிறாய். எப்படி நடிப்பது என்று மோடியிடம் கற்றுக்கொள்” என்று எழுதியிருந்தார்
இந்தத் தம்பிகள் இப்படித் தங்கள் மதத்தின் மீது கொண்ட அதீத பற்றால், பல நேரங்களில் கண்களை மூடிக்கொண்டு முன்முடிவுகளோடு சில விஷயங்களை அணுகுகிறார்கள். இதில் அவர்களைக் குறை சொல்ல ஒன்றும் இல்லை. அப்படியான சூழலில் தம்பிகளுக்கு வீட்டில் உள்ள பெரியவர்கள் நல்லதை எடுத்துச் சொல்ல வேண்டும். ஆனால், பெரியவர்கள் என்ன செய்கிறார்கள்? தம்பிகள் எது பேசினாலும் ‘சரி சரி’ என்று கடந்து விடுவதோடு, தம்பிகளை அந்த நிலையிலேயே வைத்துக் கொள்கிறார்கள். இது வீடு, நாடு இரண்டிற்கும் நல்லது இல்லை.
யாரோ ஒருவர் இணையத்தில் பேசுவதை எடுத்துக்கொண்டு பொதுமைப்படுத்தலாமா என்கிற கேள்வி இங்கே எழலாம். யாரோ ஒரு இல்லை யாரோ நிறைய பேர் இதே போன்ற மனநிலையில் தான் இருக்கிறார்கள் சமயங்களில், தேசத்தை விட சமயப்பற்றே மேலோங்கி வெளிப்படுகிறது அது குறித்தான கவலை தான் இந்த கட்டுரை.
பல சமயங்களில் இணையத்தில் நடக்கும் ஒற்றைச் சம்பவங்கள் தனிமனிதக் கருத்துகள் என்று நாம் கடந்துவிட முடியாது ; அவை ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தின் கூட்டு மனநிலையை (Collective mindset) வெளிப்படுத்துபவை.அது நம்மில் பலருக்கு தெரிந்தே தான் இருக்கிறது.
இந்தக் கட்டுரையை வாசிக்கிற நீங்கள் நினைத்துப் பாருங்கள், மிகத் தீவிரமான சிந்தனை கொண்ட சிறுபான்மையினர் ஒருவரிடம் தயக்கமில்லாமல், தைரியமாக “இல்லையப்பா நீ இப்படிச் செய்வது தவறு” என்று எப்போதேனும் உங்களால் சொல்ல முடிந்திருக்கிறதா? அது முடியவில்லை என்றால் இங்கே சமத்துவம் எங்கே இருக்கிறது என்கிற கேள்வி எழ வேண்டும்; ஆனால், அதையும் நம்மால் எழுப்ப முடிவதில்லை. இஸ்ரேல் விமான விஷயத்தில், திராவிடக் கூட்டம், இடதுசாரிகள், இலங்கை இஸ்லாமியர்கள் என்று இன்னும் நிறையப் பேர் இது நடிப்பு, நாடகம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருப்பதைப் பார்க்க முடிகிறது.
இன்றைய சூழலில் எல்லா விமானங்களின் போக்குவரத்தையும் யார் வேண்டுமென்றாலும் போனில் இருந்தபடியே கண்காணிக்கலாம். 170 பேரின் உயிரைப் பணயம் வைத்து எல்லோரும் கண்காணிக்க முடிகிற விமான போக்குவரத்தை வைத்து ஒரு நாடகம் நடத்த வேண்டிய அவசியம் இல்லை. அதோடு இந்திய விமானியின் மனைவியின் பேட்டியை நாம் பார்க்கிறோம். அந்த பெண்ணின் வலியை இஸ்லாமியத் தம்பிகள், திராவிட அண்ணன்கள், இடதுசாரி தாத்தாக்கள் உணர்ந்திருக்க வேண்டாமா?உணர்ந்திருந்தால் அதை நாடகம் என்று பேசிக்கொண்டிருக்க மாட்டார்கள்.அவர்களுக்கு அந்த வலியை எடுத்துச் சொல்லவே தான் இந்த கட்டுரை.
இஸ்லாம் என்றாலே தீவிரவாதம் என்கிற பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது என்கிற சீற்றம் நியாயமானது. ஆனால், இந்த இஸ்ரேல் விமான நிகழ்வு, பஹல்காம் தாக்குதல் போன்ற விஷயங்களில் இந்தியராகச் சிந்தித்து நாடகம், நடிப்பு என்றெல்லாம் நொட்டை சொல்லிக் கொண்டிருக்காமல், உள்ளதை உள்ளபடியே அணுகி இந்தியராக அந்தத் தாக்குதல்களைக் கண்டிக்கிறவர்கள், இந்தியராக இந்திய விமானியைப் பாராட்டுகிறவர்களிடம் அந்தச் சீற்றம் இருப்பதில் நியாயம் இருக்கிறது.
ஓமன் விமானி இஸ்ரேல் மீதுள்ள வெறுப்பால் செய்த செயலை, பாகிஸ்தான் தீவிரவாதி நம் தேசம் மீது கொண்ட வெறுப்பால் செய்யும் செயல்களைப் பூசி மெழுகக் கிளம்புவது என்பது மதத்தின் பெயராலும் மதப்பற்றாலும் தானே நடக்கிறது. மனிதாபிமான அடிப்படையிலா குழந்தைகள் இருந்த விமானத்தைக் கவிழ்க்க நினைத்த சம்பவத்தையும், பகல்காமில் நடந்த தாக்குதல்களையும் சுற்றி வளைத்து நியாயப்படுத்தவோ அல்லது நாடகம் என்று கீழ்மைப்படுத்தவோ செய்கிறீர்கள்.அப்படி செய்கிற அரசியல் கூட்டத்தை நோக்கி தான் நாம் இந்த கட்டுரையை வைக்கிறோம்.பஹல்காம் தாக்குதல் போன்ற நிகழ்வுகளை இந்தியராக கண்டித்த ஒவைசி போன்றவர்கள் மீது நமக்கு எந்த வருத்தமும் இல்லை.
இந்த அரசியல் கூட்டம் அரசியல் தேவைகளுக்கேற்ப மனிதநேயம் பேசுவதை கண்டு நமக்கு எழுகிற கேள்வி தான் இந்த கட்டுரை.காசாவிற்காகக் கண்ணீர் சிந்திய நடிகர்களும், இடதுசாரி தாத்தாக்களும் இலங்கைத் தமிழனின் மரண தண்டனைக்கு மௌனம் காப்பதன் போலித்தனத்தை எடுத்துரைக்கவே தான் இந்த கட்டுரை.
இலங்கையைச் சேர்ந்த ஒரு இளைஞர், தன்னுடைய மத நம்பிக்கையை இழிவுபடுத்திய ஒரு இலங்கை இஸ்லாமியரின் பதிவுக்கு எதிர்வினையாற்றும் பொழுது இஸ்லாத்தைப் பற்றி விமர்சனம் வைத்திருக்கிறார். அதை உடனே நீக்கி மன்னிப்பும் கேட்டு இருக்கிறார். ஆனாலும், அவர் சொன்ன கருத்தை மொழிபெயர்த்து சவூதி அரசாங்கத்திடம் பிராது கொடுத்திருக்கிறார்கள். இதைச் செய்தது சக இலங்கை வாசி.
இது வீட்டில் நடக்கும் அண்ணன் தம்பி சண்டை போன்றது தான், தம்பி ஏதேனும் வம்பு செய்துவிட்டு அண்ணன் அதற்கு எதிர்வினையாற்றும் பொழுது ஊரைக் கூட்டுவார். உடனே அண்ணன் தான் கத்துகிறான் என்று விடுவார்கள். இது இலங்கையில் மட்டும் இல்லை, இந்தியாவிலும் நடக்கிறது, நடந்திருக்கிறது. எப்போதோ ஒரு தொலைக்காட்சி விவாதத்தில், சிவனைக் குறித்து ஒரு இஸ்லாமியர் தவறாகப் பேசியதற்கு எதிர்வினையாற்றிய பெண்மணி நபிகள் வரலாற்றை எடுத்துச் சொல்ல, அதைப் பல நாள்கள் கழித்து தேசிய அளவில் பேசுபொருளாக்கி, எதிர்வினை ஆற்றியவரை மட்டும் குற்றம் சொல்லி, அது தொடர்பான பதிவைப் பகிர்ந்த ஒருவரைக் கர்நாடகாவில் கொலை செய்து… என்று இதெல்லாம் நடப்பதற்கு மதம் சார்ந்த தீவிரத்தன்மை தானே காரணமாக இருக்கிறது.
‘அமரன்’ படம் வெளியான பொழுது தீவிரவாதிகளைக் குழந்தைகள் என்று பேசிய இயக்குநர்கள், காசாவிற்காகக் குரல் கொடுத்த நடிகர்கள், அரசியல் தலைவர்கள், எதிர்வினையாற்றியதற்காக மரண தண்டனை பெற்றிருக்கும் ஒரு இலங்கைத் தமிழனுக்காக வாய் திறக்கவில்லை.மனித நேயம் சகிப்புத்தன்மை இலங்கை தமிழருக்கு குரல் கொடுப்பது எல்லாம் விடுப்பில் சென்று விட்டதோ என்னவோ
இந்த இலங்கைத் தமிழர் விஷயத்தில், நாம் இன்னொரு விஷயத்தைச் சிந்திக்க வேண்டியதாக இருக்கிறது. இணையத்தளம் எல்லோருக்குமானதாக இருக்கிறது. நான் வெளிநாட்டில் இருந்து என் நாட்டு நண்பர்களுடன் அல்லது என் நாட்டினருடன் செய்யும் விவாதத்தின் மையப்பொருளாக எது வேண்டுமென்றாலும் இருக்க முடியும்; அதற்கெல்லாம் நாம் எந்த நாட்டில் இருக்கிறோமோ அந்தந்த நாடுகளின் சட்டத்தின்படி தண்டிக்க முடியும் என்பது வேடிக்கையாகவும், இணையப் பயன்பாட்டைக் கேள்விக்குட்படுத்துவதாகவும் இருக்கிறது.
என் நாடு அரசியலில் மாட்டுக்கறி பற்றி விவாதம் போய்க்கொண்டிருக்கிறது, அதில் எப்படி இஸ்லாமியர்களின் உணர்வை புரிந்து கொண்டு பன்றி இறைச்சியை விலக்கி வைத்திருக்கிறோமோ ? அப்படி மாட்டிறைச்சியையும் இந்துக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து பொது இடங்களில் இருந்து மட்டும் விலகி வைப்பதால் என்ன நடந்துவிடும் என்று என் நண்பரோடு காரசாரமாக விவாதிக்கிறேன் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு மற்ற ஒரு நாடு என் மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்பது நியாயமாக இருக்க முடியும். தூரமாக இருக்கின்ற தன் நாட்டு உறவுகளோடும் நட்புகளோடும் பேசுவதிலும் கூட சென்சார் செய்து பேச முடியுமா?
அநேகமான மதசார்பற்ற நாடுகளை ஒப்பிடும் பொழுது இந்தியாவில் சிறுபான்மையினருக்கு இருக்கின்ற அளவு சுதந்திரமும் சலுகைகளும் எங்கு கிடையாது.
நிலைமை இப்படியிருக்க, இந்தியாவில் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது என்பது போன்ற கோஷங்கள் வரும் பொழுது அதை ஆதரிக்கவும் செய்கிறீர்கள். இலங்கை அனோஜன் வழக்கு நுபுர் சர்மா விவகாரம் என்று எல்லாவற்றிலும் எதிர்வினை ஆற்றும் அண்ணன்களே தான் இங்கே குற்றவாளிகள் ஆக்கப்படுகிறார்கள். அண்ணன்கள் அதைப் பற்றிப் பேசவும் முடியாத ஒரு சூழலே தான் இங்கு நிலவுகிறது.அந்த சூழலை அப்படி வைத்துக்கொண்டு வாக்கு வங்கியை கட்டிகாத்துக்கொண்டிருக்கிறது ஒரு அரசியல் கூட்டம்.
திராவிடக் கூட்டம், இடதுசாரிகள் எல்லாம் ஹிந்து மதம் ஒழிந்தால் தான் சாதி ஒழியும் என்று பேசிவிட்டு, மதம் மாறினாலும் சாதி ரீதியிலான ஒதுக்கீடு செல்லும் என்று தீர்மானம் போடுவதும், அது குறித்தான முன்னெடுப்புகளையும் செய்து கொண்டு இருப்பதும் சமத்துவமா ஏமாற்று வேலையா?
இந்து மதத்தைக் கடுமையாக விமர்சிப்பவர்கள், அதையே தங்களின் அரசியல் மற்றும் இடஒதுக்கீடு லாபங்களுக்காகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்பதை யாராலும் மறுக்க முடியாது.நிஜத்தில் கிறிஸ்துவராக இருந்து கொண்டு அரசியல் இடஒதுக்கீட்டில் மேயர் பதவி, சட்டமன்ற உறுப்பினர் பதவி, அமைச்சர் பதவி பெறுவதற்கு காகிதத்தில் மட்டும் ஹிந்துக்களாக இருக்க முடிகிற சுதந்திரத்தை இந்தியாவும் ஹிந்து மதமும் தான் கொடுத்திருக்கிறது என்பதை உணராமல் சமத்துவம் எப்படி வரும்?
பெரும்பான்மைக் கடவுள்களைப் பற்றி அவதூறாகப் பேசிய ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், திருமாவளவன், வன்னியரசு எல்லோரும் இன்னும் உயிருடன் தான் இருக்கிறார்கள். ஆனால், இங்கே சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் என்கிற போலி பிம்பம் கட்டமைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது.சகிப்புத்தன்மை எங்கே இல்லை என்பதை நாம் முதலில் உணராமல் அதை எப்படி சரி செய்ய முடியும்?
தமிழகத்தில் அதிமுகவின் வீழ்ச்சிக்குப் பின் எதிர்க்க சரியான ஆளில்லாமல் திமுக, பாஜகவை எதிர்க்கத் தொடங்குவதற்கு முன்பு வரை யாரும் தமிழகத்தில் மாட்டுக்கறிக்கு விளம்பரம் செய்து கொண்டிருக்கவில்லை. சமத்துவம் சமாதானம் என்றெல்லாம் பேசுகிறவர்கள், ஹிந்துக்கள் புனிதமாகக் கருதுகிற மாட்டை நான் கோவில் முன்பு விநியோகிப்பேன்; எல்லோருக்கும் பொதுவாக இருக்கும் இடத்தில் எனக்கு மாட்டுக்கறி வேண்டும் என்று நிற்பேன் என்பதெல்லாம் என்ன மாதிரியான சமத்துவம்?
எனக்குத் தெரிந்து என்னுடைய நண்பர்கள் பலருக்கு மாட்டை கறியாக்கி உண்பார்கள் என்பதே பல காலம் வரை தெரியாது. காரணம் அது நம் உணவு கலாச்சாரத்தில் அத்தனை பரவலாக இல்லை. இந்த விஷயத்தில் கண்ணைக் கட்டிக்கொண்டு உலகம் இருட்டு என்று சொல்லவில்லை. மாட்டுக் கறிக் கடை என் கண்ணில் பட்ட பொழுது நான் பதின்ம வயதைத் தாண்டியிருந்தேன். அந்த அளவிற்கு குறைவாக இருந்த ஒன்றைத் தான் அரசியல் காரணங்களுக்காக இன்று விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
இத்தனை சுதந்திரம் இருக்கின்ற நாட்டை சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தலாக இருக்கிற நாடு என்று யாரேனும் சொன்னால், இங்கே நாங்கள் நன்றாக தான் இருக்கிறோம் என்று யாரும் சொல்வதை பார்க்க முடிவதில்லை என்பது தான் வருத்தம்.
விவிலியத்தை போற்றி ஹிந்து மதத்தை இழிவுபடுத்திய, மாட்டிறைச்சி மேளா நடத்திய வன்னியரசு அவர்கள் அமைச்சராவதற்கு முன்பு வரை, அரசு விடுதிகளில் மாணவர்கள் மாட்டிறைச்சி கேட்கவில்லை.இதில் அரசியல் உள்நோக்கங்கள் இருக்காதா என்கிற சந்தேகம் எப்படி எழாமல் இருக்கும்.அந்த மாணவர்கள் அப்படிக் கேட்டிருந்தாலும் கூட எனக்கு அது விசித்திரமாகப் படுகிறது.
தனியார் கல்லூரியில், காசு கொடுத்து விடுதியில் தங்கிப் படிக்கிற மாணவர்கள் எல்லாம்கூட எங்களுக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று கேட்க முடிகிற நிலை இல்லை. கேட்கவே கூடாது என்பது நம் நிலைப்பாடு அல்ல. நீங்கள் ஒரு நிறுவனத்தில் பணியில் இருக்கிறீர்கள், நீங்கள் வேலை செய்ய ஒரு மேசை வேண்டும் என்று கேட்கலாம் , உங்கள் நாற்காலி சரியில்லை என்று மாற்றிக் கொடுக்கச் சொல்லிக் கேட்கலாம். பச்சைக்கிளிக்குப் புல்லெட் வேண்டும், தொப்பி வேண்டும் என்றெல்லாம் எப்படி கேட்க முடியும்?!
கல்வியும் விடுதிகளின் தரமும் மேம்படுத்த வேண்டிய சூழலில், மாட்டுக்கறி வேண்டும் என்று எத்தனை மாணவர்கள் கேட்டார்கள்? எத்தனை விடுதிகளுக்கு நீங்கள் சென்றீர்கள்? இறைச்சி வழங்குவது என்கிற திட்டத்தில் எல்லோரும் உண்ணும் கோழியும் ஆடும் போட்டால் போதும்தானே! மாட்டுக்கறி உண்பது அவரவர் விருப்பம் என்றால், அவரவர் கடைகளில் வாங்கி உண்ணட்டும். கடைகள் இருக்கக் கூடாது என்கிற தடை இருக்கிறதா? வீடுகளில் யாரொருவரேனும் மாட்டுக்கறி உண்டால் அவர்களின் தட்டை யாரும் பிடுங்கப் போகிறார்களா? கல்வி குறித்தும் அடிப்படை வசதிகள் குறித்து வரும் கோரிக்கைகளை யாரும் கேள்வி எழுப்ப போவதில்லை. மாட்டு கறி எப்போது அடிப்படை தேவைகளில் ஒன்றானது இந்த வண்ணத்தொலைக்காட்சி பெட்டி போன்று அதையும் அடிப்படை தேவைகளோடு சேர்த்துவிட்டார்களா?
விடுதிகள் வேலை பார்க்கும் இடங்கள், இங்கெல்லாம் யாரேனும் பன்றிக் கறி கேட்டால் அப்போது நாம் அதற்கும் விளம்பரம் செய்து கொண்டிருப்போம், மத உணர்வுகளைப் புண்படுத்தக் கூடாது என்று இருப்போமோ?
பொது இடங்கள் மற்றும் பகிரப்படும் வெளிகளில் (Workplace/Hostels) அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொதுவான உணவை (கோழி/ஆடு) வைப்பதுதான் உண்மையான சமத்துவம்; மாட்டிறைச்சி, பன்றிக்கறி என மத உணர்வுகளைப் புண்படுத்தும் விஷயங்களைத் தனிப்பட்ட உரிமையாக வீட்டோடு வைத்துக்கொள்வதே பரஸ்பர மரியாதை ஆகும்.
இங்கு சமத்துவம் பேசுகிறவர்களிடம் இருக்கும் போலித்தன்மை சமத்துவத்தில் இருந்து நம்மைத் தூரமாகத் தள்ளிவைக்கிறது. சமத்துவம் பேசப்படுகின்ற இடங்களில் அண்ணன்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்துப் பழக வேண்டும்; அதுவேதான் சமத்துவம்.
என் உணவு என் உரிமை என்று பேசுகிறவர்கள், அந்த உணவை விரும்பாதவர்களின் உணர்வை மதித்துப் பொதுவான இடங்களில் அதைத் தவிர்ப்பது தானே சமத்துவம். எல்லா சுதந்திரமும் இருக்கும் பொழுது சகிப்புத்தன்மையின்றி நடந்து கொண்டு, எதிர்வினையாற்றுகிறவர்களிடம் சகிப்புத்தன்மை இல்லை என்று பேசுவதெல்லாம் எப்படி சமத்துவமாகும்?
மாட்டுக்கறிக்குச் செய்யப்படும் அதீத அரசியல் விளம்பரம் நிறுத்தப்படவில்லையென்றால், அது ஏற்கனவே சமனற்று இருக்கும் இந்தப் போலி சமத்துவத்தை மேலும் சிதைக்கவே தான் செய்யும் என்பதைச் சிறுபான்மையினரைக் கொண்டு வாக்கு அரசியல் செய்கிறவர்களும் சிறுபான்மையினரும் உணர வேண்டும்.
இங்கே சமத்துவம் பேசுகிறவர்களிடம் பல போலித்தனம் உள்ளது அதில் இந்த நாடகம் மற்றும் உணவிற்கு அடுத்ததாக இருப்பது பொது சிவில் சட்டம்.மதச்சார்பற்ற ஒரு நாடு இயற்றும் சட்டம் மதத்திற்கு அப்பாற்பட்டு பொதுவானதாகத் தானே இருக்க வேண்டும் என்று நினைப்பது தானே சமத்துவம். பொது சிவில் சட்டத்தை மதத்திற்கு எதிரான சட்டமாக உருவகப்படுத்தி அரசியல் செய்வது என்ன வகையான சமத்துவம்?
சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்த வேண்டும் என்கிற அரசியலில் அத்தனை போலித்தனம் இருக்கிறது. அது பற்றிப் பேச யாருக்கும் தைரியம் இல்லை. காரணம், அதைப் பேசுகிறவர்களுக்கு மதச் சாயம் பூசுகிற போக்கு நிலவுகிறது.
தீவிரவாதத்தை மதத்தோடு தொடர்புபடுத்தக் கூடாது என்கிற நியாயம், மதப் பற்றால் அதை நியாயப்படுத்தவோ நாடகம் என்று சொல்லவோ கூடாது என்பதிலும் இருக்க வேண்டும் என்பதைப் பொறுப்பான அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்.
இந்தச் சமனற்ற சமன்பாடு என்றைக்குச் சமமான சமன்பாடாக ஆகிறதோ அது தான் உண்மையான சமத்துவம்; அதை நோக்கி நகராமல் நம்மைப் பார்த்துக் கொள்வது தான் திராவிட, இடதுசாரி அரசியல் கட்சிகள் செய்து கொண்டிருக்கிறது.
இந்தக் கட்டுரையின் நோக்கம் யார் மீதும் வெறுப்பை விதைக்க வேண்டும் என்பதில்லை. தம்பிகளின் மனசாட்சியைத் தட்டியெழுப்பும் ஒரு முயற்சி.
தம்பிகளின் குறைகளை சுட்டிக்காட்டும் பொழுது தான் நாம் இத்தனை கவனமாக இருக்க வேண்டியது இருக்கிறதே. அண்ணன்களின் குறைகளை சுட்டிக்காட்டும் கட்டுரைகளில் நாம் இத்தனை கவனம் செலுத்தியிருக்க வேண்டியதில்லை, இதுவும் சமன்பாடற்ற சமத்துவத்தின் விளைவு தான்.
இந்த கட்டுரையில் அண்ணன் தம்பி என்கிற உவமை புரிதலுக்காக சுட்டிக்காட்டப்பட்டதே அன்றி யார் பெரியவர் என்கிற வாதத்தை கிளம்புவதற்கு அல்ல. குடும்பத்தில், அண்ணன் தம்பி அப்பா அம்மா தந்தை எல்லோரும் முக்கியத்துவம் பெறுவது போல தான் நாடும். அவரவர் அவரவர் பொறுப்புணர்ந்து மற்றவர்களுக்கு மதிப்பளித்து ஒரே இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்.